Difference between revisions of "November 09 2014"
Line 6: | Line 6: | ||
==Link to Video: == | ==Link to Video: == | ||
− | ===Genesis Of Identity - completion of self-doubt, self-hatred and self-denial (SDHD)=== | + | ====Genesis Of Identity - completion of self-doubt, self-hatred and self-denial (SDHD)==== |
{{#evu: | {{#evu: | ||
Revision as of 01:41, 5 September 2020
Title
Genesis of Identity session from the Nithya Dhyan Yoga program conducted by Paramahamsa Nithyananda
Description:
Genesis of Identity session from the Nithya Dhyan Yoga program conducted by Paramahamsa Nithyananda. The various components of identity - inner image, outer image, others' image and life image - are presented in this section. As well as the gaps that fall between the images and effects of those gaps: self-doubt, self-hatred and self-denial, also known as SDHD. Together this is the introduction to you, to the genesis of your identity. It gives you the tools to move from an inauthentic identity to an authentic identity.
Link to Video:
Genesis Of Identity - completion of self-doubt, self-hatred and self-denial (SDHD)
Link to Audio
'Description: Genesis Of Identity - Completion Of Self - Doubt, Self - Hatred And Self - Denial by HDH Bhagavan Nithyananda Paramashivam on 09 November 2014'
Title
Description:
Link to Video:
Title
Initiation into the Science of Completion
Description:
This discourse delivered on 9 Nov 2014, Paramahamsa Nithyananda guides the participants into initiating the Science of Completion
Link to Video:
Transcript:
Now, I want you to understand basically few things about you.
00:22
Please listen! I am going to now introduce you to You; that's very important, finding you to You. If you find You, you found God. If you don't find You, you have not found God, you have not found anything. You don't know what is joy, you don't know what is pain, you don't know what is pleasure. If you don't know You, how will you know what is your pain and what is your pleasure, what is good for you, what is bad for you?
1:03
You will only have the rough idea about what is good for you, what is bad for you from others, not from you. I tell you, anything which you don't want to face in your life is because you don't know You, you don't know You.
1:27
I am introducing you to You. I am trying to create a drawing, all of us together. Listen! Whatever you think about you inside You, whatever you believe strongly as You inside you is inner image. Whatever you think as You inside you is inner image.
2:40
If you see sometimes you will feel you will be always successful in everything; if you see sometimes you will feel you will always be failure in everything. Whatever you think as You in you is your inner image.
3:00
How you show You to others, how you show yourself to others, that is outer image; that is outer image. Understand! Whatever you show as You to others; usually, you show through your words, body language, the way you project You, that is outer image. Mostly, this inner image and outer image will be inconsistent. They will not be matching with each other. Inner image will be lower than what you are, outer image will be higher than what you are. There will be a big gap.
4:16
What you think as, what you feel as you and what you speak as you, this gap, the gap between mouth and the heart; that is what I call confusion in life. Anyhow, I can say in a way source of confusion.
4:41
This inner image, outer image, then, what others perceive about you; whatever you may show, people will have their own ideas about you. They will perceive you in their own way, that is called other's image. That is called other's image.
5:20
Inner image, outer image, other's image, how others perceive you.
And, please listen, when you want all the benefits from others and society, you are bound to take responsibility for how others perceive you. You can't say how others perceive me, I am not responsible for that. No! You can't say that, you are responsible for how others perceive you. You are responsible for how others perceive you.
6:39
So understand, how others perceive you, other's image, you are responsible. And, how you perceive the world and life, what you have in your head about life; you may think life is exploiting, all the four-letter words you may have about life and others, that is called life image.
7:26
Understand! If you have a wrong life image, even if you are living in a palace with all the pleasures of life, best things life and others can give you, you will still continue to be in a deeply deprived space and state because able to have a right life image and trust others is one of the luxuries you can have in life. Being careful is different, constantly being frightened is different. Being careful is different, constantly being frightened is different. I'll give you experiential explanation about these 4 words-inner image, outer image, other's image, and life image from my own experience.
8:32
Listen! When I look inside me, my inner image, I see a vast, powerful space of Purnatva, complete Completion or Shūnatva, emptiness, living emptiness. You can call that as a soul, God, energy, Mahadeva, whatever, a complete space. That's the exact inner image I am carrying.
9:20
Outer image. Listen! Outer image, how I project myself. I am projecting myself as a being to transmit that experience to all of you. You can call as an Enlightened Master or a teacher or an Incarnation, whatever way you want. You can give any title. I am a being to transmit that experience. That's my outer image, declared outer image.
10:02
Other's image. Listen! Other's image. I may declare that I am here to transmit this Enlightenment experience to you, but people expect that I should heal their physical pain, mental pain, I should bless them for wealth, I should bless them for a healing relationship, peace, bliss, contentment, completion. See, the other's image, what people perceive from me and expect from me, may be it is different than what I declare, but even then I am responsible because whatever they expect is within the purview of my declaration.
11:02
Please understand! When I say, I am here to transmit that experience to you; to give that experience to you, I have to give you at least 1000 volt spiritual energy, but to clear your cancer or headache, I need to give only 0.5 volt energy. So, if you expect me to heal your physical problem, I am responsible for it because that falls in the purview of my declaration.
11:38
Anything which can be done by the transmission of energy and experience of Enlightenment, the side effect, after effect, byproduct of transmission of energy, you have a right to expect from me because that comes within the purview of my declaration. It is my responsibility to fulfill it. Only if you expect that I should win the World Cup, playing the football match, I am not responsible for it because that doesn't come under my declaration, the purview of my declaration. But, anything you expect in the line of physical health, mental health, complete relationships, wealth, fulfilment, completion, Enlightenment, I am responsible for it. Either, I have to give you that; if you are not ready to receive, I have to prepare you and give you that, but till you achieve it I am responsible. This is what is taking responsibility for other's image.
12:59
And, the life image, the image I have about life and others. The whole world is here to celebrate this joy with me, to celebrate this bliss with me, to celebrate this completion with me, that's all!
13:25
So, understand! Now, you also look in and find out the inner image you have, outer image you project, other's image you created, for which you are responsible, and life image you are having about life and others. Pen down exactly what you have. Then, we will find out the root cause of all the problems you have in your life. Then, we will build the right inner image, outer image, life image, and other's image.
Come on! First, let's spend little time in finding the inner image you are having, outer image you are having, other's image you are having, life image you are having without editing. Please start penning down.
(Please distribute the assignment sheet of Genesis Of Your Identity).
15:36
Now, I wanted to give you some deeper insights based on your introspection, your internalysis, your contemplation. How many of you found in your experience, listen carefully, how many of you found in your experience there is a gap between how you think about you and how you show you? Means, gap between inner image and outer image? Raise your hands! If there is a gap between inner image and outer image, how you think of You and how you project You to others. In this gap, self-doubt starts.
Understand! For example, you go to attend an interview, you know you are not capable of something, but you sell yourself to your boss saying, "Eh! I can do it", and boss is convinced and he gives you the job. When you come back, suddenly you feel you convinced others, but you yourself are not convinced. Then, what is the truth?
17:18
The doubt about yourself starts raising which will start coming up in every level of your life, in your health, in your relationship. Everywhere, this doubt will start raising. That is what I call self-doubt. How many of you think you have this self-doubt, raise your hands. We will have to now find that and complete.
17:55
Second, how you project yourself to others-outer image; how others perceive you-other's image. You may project yourself very humble person, simple person. Others will say, "See, see, see, this fellow acting, acting, acting". You may project as a humble, simple person, others will say, "See, see, this fellow how he is acting". How many of you experienced this? Raise your hand. You may project yourself in one way, others completely perceive in a different way; raise your hand, let me see, the gap between outer image and other's image.
18:53
Listen! When others perceive you in a different way, you naturally start feeling you are not enough unto yourself. You will start feeling I am not enough.That is the source of all the self-hatred. Please understand, self-hatred-when you project yourself in some way, but others perceive in some other way, when you become powerless about it and you start hating yourself, "I am not enough, I am not sufficient, others are not believing how I am projecting me". That is self-hatred.
19:48
Next, listen! Next, how many of you feel that you have this self-hatred? Raise your hand! You feel you are not enough, raise your hand, let me see. Yes! That is self-hatred, we need to find out this, source of this, and complete with it.
20:20
Third, this is the very important thing. Other's image-how others expect you. Life image-how you expect others. See the fun, everyone around you will be telling you should understand people more, you should be more listening, you should have more understanding, but you will strongly believe everyone around me are incomplete, they should understand me more. You will believe everyone around you are incomplete and they don't understand anything, they should understand you and transform themselves, but they will all believe you are incomplete, you should understand them more and transform. How many of you have this tug of war? Raise your hand! This is what I call self-denial. Whatever is denying it, constant denial, the gap between what you think about others and what others think about you. This gap makes you start denying everything.
21:40
See, when you want everyone to understand you and change and everyone around you want you to understand and change, there is a deadlock and you become powerless, you don't do anything. This becomes a lifestyle, time passes, day passes, you don't think, you don't walk that extra mile you need to walk. You constantly live in denial. All breakdown in life happens in denial. Understand! All breakdown happens in self-denial.
22:29
How many of you think you have self-denial? Now, it is time you sit and pen down all the self-doubt you have, self-hatred you have, self-denial you have, SDHD. Like ADHD for kids, SDHD for grownup kids. SDHD pattern.
22:55
I wanted all of you to spend little time now and understand the self-doubts you have and the incidents when it started in you; self-hatred you have and incidents when it started in you; self-denial patterns you have and incidents when it started in you. Start! SDHD. Start penning down.
We intranalised about the inner image we have, outer image we have, life image we have, other's image we have, which is very inauthentic. That is why you have so much of SDHD, self-doubt, self-hatred, self-denial.
23:51
Let us contemplate the inner image you want to have and pen down, the outer image you want to have and pen down, other's image you want to have and pen down, life image you want to have and pen down.
24:09
Please listen, what you have is inauthentic; what you want to have, if you pen down, you will see authenticity there. I'll explain after you write what you want to have, how to have what you want to have.
First, think through and pen down what you want to have:
-The best inner image you want to have
-Best outer image you want to have
-Best other's image you want to have
-Best life image you want to have
24:54
Please pen down! Please pen down!
Now please listen, after all this intranalysis, you will now know very clearly what are the patterns which are stopping you from becoming what you want to be; means, the gap between your inauthentic image and authentic image. For example, your authentic image, you may want to get up everyday early morning 5 o'clock and do yoga, but your inauthentic image, early morning when 5 o'clock alarm bell rings, no, you don't want to get up, tired, feeling sleepy. Then, what is it stopping you from becoming authentic? Your tiredness, boredom. When you started developing this? Your tiredness and boredom is the incompletion, when you started developing it? Find the incidents.
26:10
Same way, in your authentic image, you want to be just fearless, want to go for a beautiful night walk in the moonlight on full moon day in the forest, but the inauthenticity creates fear, fear of animals, ghost, and what not. So, what is it that stops you from living your authenticity, the fear pattern. So, pen down your incompletion and when those fears started in you. How many of you understand what I am saying? Please raise your hand!
26:55
So understand, all the incompletion patterns which stop you living your authentic image. What stops you living your inner image, outer image, other's image, life image? The past thoughts, emotions, patterns, hangovers, residues sitting in the present and suffocating you, not letting you live your future is incompletion. The past thoughts, emotions, patterns, hangovers, residues sitting in the present and suffocating you, not letting you live your future is incompletion.
27:54
So understand! Think and look in, pen down at least 11 incompletions. You must be having 11,000, that's different, at least 11, pen down the 11 incompletions stopping you from becoming authentic, and the incidents when those incompletions started in you, as early as you remember. Pen them down.
28:41
I bless you all let's all radiate with integrity, authenticity, responsibility, enriching and causing eternal bliss. Nithyananda!
Transcript in Tamil
குண்டலினி என்ற தலைப்பில் இணைய இணைப்பு உங்கள் அனைவரையும் வணங்கி வரவேங்கின்றேன்.. இணைய இணைப்பில் குண்டலினி என்கின்ற தலைப்பில் இன்றைய சத்தங்கத்திற்காக இணைய இணைப்பில் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். குண்டலினி எனும் பெயரைக் கேட்கும்பொழுதே ஒரு அதிர்வு. குண்டலினி என்றால் என்ன? அதன் பயன் என்ன? பலன்கள் என்ன? பயன் வேறு. பலனகள் வேறு. அது சார்ந்த பயன்கள் என்ன? அதன் உபயங்கள் என்ன? இந்த எல்லாக் கேள்விகளுக்குமான பதில் தான் குண்டலினி என்ற தலைப்பில் இணைய இணைப்பு (வெப்பினார்க்கான தமிழ் வார்த்தை) நம்ம எல்லாருக்குள்ளும் இருக்கின்ற கடவுளின் விதை அதைத்தான் குண்டலினி சக்தின்னு சொல்றோம். நம்ம எல்லாருக்குள்ளேயும் கடவுள் சக்தியின் விதை இருக்கிறது. இந்த விதையை முறையாக உரம் இட்டு, நீரிட்டு காற்றளித்து வளரவிட்டோமானால் அது கடவுளாக மலரும். அதுதான் குண்டலினி சக்தி. நம்ம எல்லோருக்குள்ளும் இருக்கும் இறைசக்தியை தினசரி வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதற்கு விழிக்கச் செய்கின்ற முறைகள் பல்வேறு முறைகள் இருக்கு. ஓளவைபிராட்டி விநாயகர் அகவலில் குண்டலினி சக்தியை ஒரு பாம்பு மாதிரி உருவகப்படுத்தி காமிக்கிறாங்க. குண்டலினி சக்திக்கு நம்ம சித்தர்கள் போட்ட கார்ட்டூன் பாம்பு. ’’மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து, இடை பிங்கலை எழுத்தறிவித்து கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி, மூன்று மண்டலத்த முட்டிய தூணின் நான்கெழு பாம்பின் நாவில் உணர்த்தி’’ ஔவையார் ஒரு பொிய சித்தர். ’’மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து’’ அப்படின்னா இந்தக் காலால் எட்டி உதைத்து எழுப்ப முடியாது. கால் அப்படின்னா காற்று, வாசியாலே, பிராணாயாமத்தாலே எழுப்புகின்ற கருத்தை அறிவித்து, நமக்குள்ள இருக்கிற கடவுளின் விதையை குண்டலினி சக்தியை பிராணாயாமத்தால எழுப்பலாம். சரியான ஞானக்கருத்துக்களை கேட்டு அதை சரியாக வாழ்வை நடத்துவதன் மூலம் எழுப்பலாம். முறையான மந்திரங்களால் அதை விழிப்பிக்க வைக்கலாம். க்ரியைகளால் விழிப்பிக்க வைக்கலாம். நம்முடைய சக்தி, மனோ சக்தியால கூட விழிப்பிக்க வைக்கலாம். இந்தத் துறையில கைதோ்ந்த சரியான சித்தர்களாயிருந்தால் சாதாரண ஒரு மூலிகையைக் சாப்பிடுவதன் மூலமாக மட்டுமே உங்கள் குண்டலினியை விழிப்பிக்க வைத்துவிட முடியும். உங்களுடைய பயம் ஆசைகள் கூட குண்டலினி சக்தியை எழுப்பும். அதனால்தான் பார்த்தீற்கள் என்றால் ஒரு பொிய பயம் வரும்பொழுதோ உங்களால் சாத்தியமற்ற செயல்களை எல்லாம் செய்வீர்கள். காரணம் அந்தக குண்டலினி சக்தி விழிப்பயறது. எழறது. ஆனால் ஆசையாலோ, அச்சத்தாலோ குண்டலினியை திரும்பத் திரும்ப எழுப்பினீாகளானால அது ஒரு பாறையை எடுத்துப்போட்டு பாம்பை எழுப்புவது மாதிரி. இரண்டு தரம் எழுந்திருக்கும். ஆனால் பத்தாவது தரம் இறந்துவிடும். பாறையைத் தூக்கிப்போட்டு எழுப்புவதுபோல். பிறகு பலவீனப்பட்டுவிடும். குண்டலினி சக்தி நம் எல்லோருக்குள்ளும் இருக்கக்கூடிய மிக அற்புதமான சக்தி. நாம் வாழ்க்கையில் காணும் அனைத்து வேற்றுமைகளுக்கும் இந்த சக்திதான் காரணம். பலபோ் என்னிடம் கேட்பதுண்டு ஏன் சாமி நல்லவர்கள் எல்லாம் கஷ்டப்படறா மாதிரி இருக்கு, கெட்டவங்கல்லாம் நல்லா நிறைய பணத்தோட இருக்கா மாதிரி இருக்கு. நல்லவங்களுக்கெல்லாம் நோய் வந்து கஷ்டப்படறாங்க. கெட்டவங்கல்லாம் வயதானாலும் வீல் சேர்ல உட்காந்துகிட்டு நல்லாவேதான போகமல் இருக்காங்களே. நன்றாகத் தொிந்து கொள்ளுங்கள், மனிதர்களுக்கு இடையிலே இருக்கின்ற எல்லா வேற்றுமைகளுக்கும் உடல் நல ரீதியான வேற்றுமை, மனநல ரீதியான வேற்றுமை பொருளாதார ரீதியான வேற்றுமை எல்லா விதமான வேற்றுமைகளுக்கும் குண்டலினி சக்தி மட்டுமே காரணம். ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படைந்துவிட்டால், எழுந்துவிட்டால் அவர் எவ்வளவு கெட்டவர் என்று சொன்னாலும் பிரபஞ்ச சக்தி ஏற்காது. கேட்காது. நீங்க வேண்டுமானால் கெட்டவர் என்று நினைக்கலாம். ஆனால் அவருக்கு அனைத்து நல்லவைகளும் நடக்கும். குண்டலினி சக்தி விழிப்படையாவிட்டால் நீங்கள் அவரை எவ்வளவோ நல்லவர் என்று சொல்லலாம். ஆனால் அவரால் ஒரு உபயோகமும் இல்லை. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். குண்டலினி சக்தி விழிப்படைந்த மனிதன் கடவுளுக்குச் சமம். ஏனென்றால் குண்டலினி சக்தி கடவுள் தன்மைக்கான விதை. அது மரமாகி மலர்ந்தால் உங்களுக்குள் கடவுள் தன்மை மலர்கின்றது. பலபோ் என்னிடம் கேட்பதுண்டு. அது ஏன் சாமி எப்பொழுதும் தூங்கிக்கொண்டேயிருக்கு? எழுப்பாதவரை தூங்கிகிட்டுதான் இருப்போம். அதைத்தட்டி யாரும் எழுப்பாத வரை அது தூங்கிக்கொண்டு இருக்கும் பாம்பு. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முயற்சி பண்ணி எழுப்பாதவரை அது எழுவதே இல்லை. நீங்கள் ஒரு லாயர் ஆகனும்னு நினைச்சீங்கன்னா, அரசியல்வாதி ஆக நினைச்சீங்கன்னா, ஒரு நீதிபதி ஆக நினைச்சீங்கன்னா, நீங்க என்ன ஆக வேண்டுமென்று நினைத்தாலும் அதற்காகப படித்து தயார் பண்ணி முயற்சித்த பிறகு தான் அடைய முடியும். அதே போல் தான் உங்கள் குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டுமென்றாலும், கடவுள் தன்மையை அடைய வேண்டுமென்றாலும், நீங்கள் முயற்சிக்க வேண்டும். உங்களுடைய முயற்சியினால் மட்டும்தான் அது அடையப்படுகின்றது. யோகம் தியானம் க்ரியை ப்ராணாயாமம் இப்படி நாம் செய்கின்ற அனைத்து ஆன்மீக சாதனைகளுமே இந்தக் குண்டலினி சக்தியை விழிப்பிக்க வைக்கத்தான். விவேகானந்தர் மிக அழகாக சொல்கிறார் : பிரார்த்தனை கூட கடவுள் முன் நின்று செய்கின்ற பிரார்த்தனை கூட கடவுள் விக்ரஹத்திலிருந்து சக்தி வந்து உங்க பிரார்த்தனை நிஜமாகறதில்ல. ஆழமான பிரார்த்தனையினால் உங்கள் குண்டலினி சக்தி பொங்கி எழுந்து உங்களுடைய பிரார்த்தனையை நிஜமாக்குகின்றது. அதுதான் உண்மை. நீங்க என்ன பிராத்தன பண்ணாலும் அந்த எதிர்க்க இருக்கிற விக்ரஹத்துல இருந்து சக்தி வந்து உங்க பிராத்தன நிறைவேறுச்சுன்னு நினைக்காதீங்கள். உங்களுக்குள்ள இருக்கிற குண்டலினி சக்திதான் உங்க பிரார்த்தனையை நிறைவேற்றுகிறது. இந்தக் குண்டலினி சக்தி பொங்குமானால் எதை வேண்டுமானாலும் நீங்கள் சாதிக்கலாம். அஷ்ட நாகங்களை கையில் எடுத்தாண்டுவோம், இட்டபிறை, இன்ன பிறை, சுட்டபிறை எல்லாம் கொண்டு சட்டபிறை நாதனொடு சளைக்காது ஆடுவோம். கெட்ட பிறை வட்டபிறை பட்டப்பிறை என்றிருந்து இழி மன உடலது கழியாது போகும் கழி உடல் தன்னைக் கழியாதும் காப்போம். இதன் அர்த்தத்தை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். உலகத்தையே தாங்குகிற எட்டு நாகங்களைக் கையிலெடுத்து கைப்பிள்ளைப்போல விளையாட்டுப் பிள்ளைப்போல அதை வைத்து நாம் விளையாடுவோம். சந்தரனை முடியில் சுடிய சாம்ப சதாசிவனோடு சோ்ந்து இந்திரக் கூத்தாடுவோம். அதாவது சிவோஹம் என்கிற அனுபுதியை அடைந்து நாமும் அந்த ஆனந்தக்கூத்திடுவோம். அழிந்து போகக்கூடிய இந்த உடலை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அழியாது வைத்திருப்போம். இவையெல்லாம் குண்டலினி சக்தி பொங்கும்போது ஏற்படுகின்ற பலன்கள். குதம்பை சித்தர் பாடுவார். ஆட்டாங்க யோகம் அறிந்த மெய் ஞானிக்கு முட்டாங்கம் எதுக்கடி குதம்பாய் முட்டாங்கம் ஏதுக்கடி. மாங்காய்ப் பாலுண்டு மலைமேலிருந்தார்க்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி? அதாவது ’ஆட்டாங்க யோகம் அறிந்த மெய் ஞானிக்கு’ எட்டு யோகத்திற்கான அங்கங்கள் அறிந்த மெய்ஞனிக்கு குண்டலினியை விழிப்படையச் செய்தவர்களுக்கு முட்டாங்கம் ஒரு உடலை முட்டுவதன் மூலமாக சுகம் பெறுகின்ற அங்கம் தேவையில்லை. அந்த சுகம் தேவையில்லை. அதைத்தாண்டிய பெரும் சுகங்களை குண்டலினியினாலே அனுபவித்துவிடுகிறார்கள். அதாவது குண்டலினி எழும் பொழுது நமக்குள் ஏற்படும் புரணத்துவத்தை, திருப்தியை, கம்ப்ளீஷனை சொல்கிறார். ஆட்டாங்க யோகம் அறிந்த மெய் ஞானிக்கு முட்டாங்கம் எதுக்கடி குதம்பாய் முட்டாங்கம் ஏதுக்கடி. முட்டுவதால் சுகத்தை கொடுக்கின்ற அங்கம் தேவையில்லை. முட்டுவதால் சுகத்தைக் கொடுக்கின்ற சுகம் தேவையில்லை. மாங்காய்ப்பால் என்பது குண்டலினி சக்தி மண்டைக்குள் ஏறி சஹஸ்ராரத்திற்கு போகும்பொழுது சஹஸ்ராரத்திலிருந்து பொங்கற அமிர்தம் அதுதான் மாங்காய்ப்பால். அந்த மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்பவர்க்கு குண்டலினி சக்தி சஹஸ்ராரத்திலிருந்து பொங்குகிற அமிர்தத்தை உண்டு அங்கியே அந்த சமாதிலயே இருப்பவர்க்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி . அதாவது வௌியிலிருந்து ஒரு சுகம் தேவையில்லை. சித்தர்கள் சொல்லுகின்ற பரிபாஷை இது. குண்டலினியை விழிப்படையச் செய்வீர்களானால் பக்தியிலே முழுமை அடைவீர்கள். ஞானத்திலே முழுமை அடைவீர்கள். யோகத்திலே முழுமை அடைவீர்கள். உடல்நலம் பெறுவீர்கள். பலபோ் என்னிடம் கேட்பதுண்டு. எப்படி சாமி இந்த வியாதியை எல்லாம் குணமாக்கறீங்க. ஹீல் பண்றீங்க. எப்போ்ப்பட்ட வியாதியாயிருந்தாலும் தலைமேல் கை வைத்தால் இரண்டு, மூன்று நாளில் சரியாகிவிடுகிறதே. வேற ஒண்ணுமேயில்லை. அவர்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்கின்றேன். அவ்வளவுதான். இந்த குண்டலினி சக்தி விழிப்படைந்தவுடனே தானாகவே உடல் நலம் வந்துவிடுகிறது. தானாகவே மன நலம் வந்துவிடுகிறது. தானாகவே தைரியம் வந்துவிடுகிறது. தானாகவே வாழ்க்கையில நிம்மதி வந்துவிடுகிறது. ஆமைதி வந்துவிடுகிறது. வாழ்க்கையை நல்லபடியாக நடத்துகிற சக்தி வந்துவிடுகிறது. துக்கம் போய்டுது. வாழ்க்கை தானாகவே இனிமையாக மாறுகின்றது. வாழ்க்கையில் நீங்கள் என்ன வேண்டுமென்று நினைத்தாலும் அதைவிட அதிகமாக இந்த குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வதன் மூலம் அடைவீர்கள். சிலபோ் என்னிடம் கேட்பதுண்டு, அந்த குண்டலினியை நாமாகவே எழுப்ப கூடாதா? ஐயா ஒரு சின்ன தலைவலி, காய்ச்சல் அப்படின்னா நீங்களாகவே மருத்துவரிடம் செல்லாமல் ஒரு மருந்து கடைக்குப்போய் மருந்து வாங்கி சாப்பிட்டிடலாம். ஆனா இதய அறுவை சிகிச்சைக்கு நீங்களாகவே பண்ணிக்க முடியுமா? நீங்க மருத்துவராகவே இருந்தால் கூட உங்களுக்கு நீங்களே இதய அறுவை சிகிச்சை பண்ணிக்கொள்ள முடியாது. குண்டலினி சக்தியை விழிப்பிக்க வைப்பது உங்கள் உணார்வையே திற்நது அறுவை சிகிச்சை பண்றா மாதிரி. குரு இருந்துதான் செய்ய வேண்டும். குரு மூலமாக நடந்தால் தான் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் முறையாக நடக்கும். கரையிலா ஏரி பாழ். தண்ணி நிற்காது. கற்பில்லா கன்னி பாழ். வாழ்க்கை நல்லபடியா இருக்காது. முறையில்லா அரசு பாழ். குரு இல்லா குண்டலினி பாழ். கறையில்லைன்னா ஏரி பாழ். கற்பில்லா கன்னி பாழ். வாழ்க்கை நல்லபடியா இருக்காது. அரசு செய்கின்ற முறையில்லாவிட்டால் அரசு பாழ். நடத்த முடியாது. விழிக்கவைக்க முடியாது. ஒரு சின்ன கதை : நடந்த கதை : சென்னை மைலாப்புரில் இருக்கின்ற இராமகிருஷ்ணர் மடத்தில் அப்ப நான் பிரம்மச்சாரியா இருந்தேன். அங்க ஒரு பிரம்மச்சாரி அப்படித்தான். அவருடைய குண்டலினியை விழிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசை. தினம் உட்கார்ந்து ஏதேதோ மந்திரத்தை சொல்லி தியானத்தை செய்து கொண்டிருப்பார். ஒரு நாள அவர் முன்னால் உட்கார்ந்திருந்தார். நான் அவர் பின்னால் உட்கார்ந்திருந்தேன். திடீர்னு கண்ணை முழித்து ஓ என்று கத்தினார். என்ன என்ன என்ன சாமி ஆச்சு? என்று கேட்டேன். சாமி நான் ஜெயித்துவிட்டேன். பல வருஷமா குண்டலினியை விழிப்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். இப்ப தான் என் குண்டலினி மெதுவா மேல் நோக்கி வந்தது. நான் கேட்டேன். முதுகெலும்பு மேல தானே வந்திட்டிருந்தது என்று. ஆமாம் ஆமாம் என்றார். மெதுவா இப்ப வயிற்றைத் தாண்டி வருது இல்லையா என்று கேட்டேன். ஆமாம் சாமி வயித்தை தாண்டி தான் வருது. உங்களுக்கு எப்படித் தொியும்னு கேட்டார்? நான் அந்த இடத்தில் என் விரலை இரண்டே விநாடிகள் தான் வைத்தேன். என்ன சாமி குண்டலினி நேரே வராமல் பக்கவாட்டில் முதுகு பக்கமா வேற எங்கேயோ போகிறா மாதிரி இருக்கே என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் அது குண்டலினி இல்லீங்க. எறும்புங்க. குரு இல்லாம குண்டலினியை எழுப்பினால் சுண்டெலியை எல்லாம் குண்டலினின்னு நினைச்சிட்டிருப்போம். அதுதான் உண்மை. அது கட்டெறும்புங்கய்யா. மேல ஏறி போய்கிட்டிருக்கு. நீங்க சட்டைப் போடாமல் இருப்பதால் அதை நீங்க குண்டலின்னு நினைச்சிட்டிருக்கிீங்க. குரு இல்லாமல் குண்டலினியை விழிப்பிக்கச் குண்டலினிய உயிர்ப்பிக்கச் செய்ய முயற்சிப்பதும் ரொம்ப அபாயகரமானது. குரு இருந்தால்தான், குருவினுடைய சக்தியினால்தான் பக்க விளைவுகள் இல்லாமல் அந்தக் குண்டலினியை முழுமையாக விழிப்பிக்க வைச்சு அதை சரியான பாதையில் செலுத்தி உடல் நலன், மனநலன் வருவதற்கான சாத்தியம் உண்டு. சில போ் கேட்பதுண்டு. சாமி அந்தக் குண்டலினி எந்திருச்சா என் உடம்பே குதிக்குதே. மேலயும், கீழேயும் அப்படி இப்படி போகுதே. இது ஏதாவது தப்பு நடக்குதா? ஒரு தப்பும் இல்லை. கவலை வேண்டாம். குண்டலினி பொங்கும்பொழுது உங்க உடம்பு தாங்குவதை விட பெரும் வேகத்தில் போகும். ’’மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து, இடை பிங்கலை எழுத்தறிவித்து கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி, மூன்று மண்டலத்த முட்டிய தூணின் நான்கெழு பாம்பின் நாவில் உணர்த்தி’’ -ஓளவையார் சொல்றாங்க. பொங்கிப்பெருகும் இந்த குண்டலினி சக்தி. பொங்கிப்பெருகும் பொழுது உடம்பு கொஞ்சம் லேசாக ஆகி மேலும் கீீழும் இயங்குவது சகஜம் அது இயற்கை தான். அதில் ஒன்றும் தப்பேயில்லை. அதுக்காக உங்க உடம்பு அசையவில்லையெனில் உங்க குண்டலினி எந்திரிக்கவில்லையென்று நினைக்காதீங்க. குண்டலினி எழுந்தால் கம்ப்ளீஷன் வரும். மனசில் ஆனந்தம் வரும். நிம்மதி வரும். இனிமை வரும். தைரியம் வரும். இது எல்லாமே குண்டலினி எழுந்திரிக்கும்பொழுது பொங்கும். உடம்பு குதிக்கலன்னா குண்டலினி எந்திரிக்கிலன்னு நினைக்காதீங்க. உலகிலேயே முதன்முறையாக குண்டலினி சக்தியை அறிவியல்புர்வமாக ஆராய்ச்சி செய்து அதனுடைய தாக்கத்தை உலகிற்கு நிரூபித்தவர்கள் நாம்தான். நம்ம இயக்கத்தில் தான் முதல் முறையாக குண்டலினி சக்தி விழிப்படைவதைப் பற்றி அது எப்படி மூளைல நிர்விகல்ப சமாதி நிலையை உருவாக்குகிறது என்பதை பத்தி முதல் முறையாக அறிவியல்புர்வமாக ஆராய்ச்சி பண்ணி நிருபிச்சிரிக்கோம். பலபோ் என்னிடம் கேட்பதுண்டு. குண்டலினி சக்தியை விழிப்பிக்க வைப்பதற்கான பாதுகாப்பான முறை எது சாமி? நேரடியாக குருவிடம் வந்து தீகஷை பெறுவதுதான் மிக உயர்ந்த பாதுகாப்பான முறை. முதலிலேயே சொன்னா மாதிரி சின்ன சின்ன தலைவலி கால்வலி வயித்துவலி எல்லாம் டாக்டரைப் பார்க்காமல் கம்பௌண்டரைப் பார்த்தே கால்வலிக்கு கருப்பு மாத்திரை. வயித்து வலிக்கு வௌ்ளை மாத்திரை. பல்வலிக்கு பச்ச மாத்ரினைனு வாங்கி தின்னுரலாம். ஆனா இதயத்தை திறந்து சர்ஜரி பண்ணணும்னா டாக்டர் தான் பண்ணணும். குண்டலினி உயிரையே திறந்து அறுவை சிகிச்சை செய்வது. குருதான் பண்ண முடியும். குண்டலினி சக்தி விழிப்படைந்தால் சமூகம், உங்களை சுற்றியிருக்கிற நண்பர்கள் உறவினர்கள் இவர்கள் எல்லோரிடமுமே உங்களால் மிகப்பொிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நீங்க நினைக்கலாம் நாம என்ன தான் பேசினாலும் மற்றவர்கள் கேட்க மாட்டேங்கறாங்கன்னு. சில போ் பேசினால் எல்லாரும் கேட்கறாங்களேன்னு. அவர்களின் குண்டலினி சக்தியின் பலத்தைச் சார்ந்துதான் அவர்கள் வார்த்தை எடுபடுகிறது. வார்த்தை வடிவமைப்பினாலோ வசீகரத்தினாலோ ஒருவருடைய வார்த்தையை மக்களாலே கடைப்பிடிக்கப்படுவதில்லை. அவர்கள் வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் குண்டலினி சக்தி வாக் சக்தியினாலேதான் அவர்களுடைய வார்த்தை மக்களாலே வாழப்படுகிறது. காலைல டீவிய தொறந்தீங்கன்னா ---ன்னு ஒரு லூசு. என்னவிட வசீகரமாவே பேசும். ஆனால் 5000 குடுத்தா என்ன சொன்னுதோ அத அப்படியே மாத்தி பேசும். வக்கீல் வண்டுமுருகன் மாதிரி. வார்த்தை வசீகரமாயிருப்பதாலே மக்கள் அதைக்கடைப்பிடிப்பதில்லை. மக்கள் என் வார்த்தைகளை வாழ்வதற்கான ஒரே காரணம் வார்த்தைகளின் வசீகரம் அல்ல. வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும். வாக்குகளுக்குப் பின்னால் இருக்கும் குண்டலினி சக்தி. வாக்சக்தி. அதுதான் மக்களை இந்த வார்த்தைகளை நேரடியாக வாழவைக்கின்றது. குண்டலினி சக்தி நம் எல்லோருக்குள்ளும் இருந்து கொண்டிருக்கும் விதை. ஞான விதை. அகவிதை. சுத்தான ஞானக்கருத்துக்கள் மூலமாகவோ அல்லது ப்ராணாயாமம், யோகம் மூலமாகவோ இல்லை யந்திரங்கள், மூலிகைகள் மூலமாகவோ இந்தக் குண்டலினி சக்தியை விழிப்பிக்க வைக்க முடியும். யந்திரங்கள்னா எல்லா கோவில் வாசல்களிலும் பிளாட்பார கட போட்டு வித்துட்டு இருப்பாங்க.. மலையாள மாந்திரீக வசிய இயந்திரங்கள்னு போட்டு வித்திட்டிருப்பாங்க. அந்த யந்திரங்கள் இல்லை. பொமமம்மா வசியம். கருப்பண்ண சாமி வசியம். ஏவல் பில்லி சுனியம் எடுப்பது எப்படி வைப்பது எப்படி? சகல யந்திர பிரச்சார போதினி. முப்பது ரூபாய். அந்த புக்கில் சொல்லும் இயந்திரங்கள் அல்ல. யந்திரம் என்றால் இந்தக் குண்டலினியை விழிப்பிக்க வைப்பதற்காகவே அமைக்கப்படுகின்ற கட்டிட அமைப்புகள். கம்போடியாவில் சுர்ய வர்ம பல்லவன் கட்டியிருக்கும் கோவில் குண்டலினி விழிப்படைய வைப்பதற்காகத்தான் கட்டியிருக்கிறார்கள். அதாவது இலட்சக்கணக்கான மக்களின் குண்டலினி சக்தியை ஒரே நேரத்தில் விழிப்பிக்க வைப்பதற்காக சுர்ய வர்மன் தொண்டை மண்டல குருமஹா சந்நிதானத்தின் அருளாணைப்படி உருவாக்கி வைக்கப்ட்ட யந்திரம் தான் கம்போடியாவில் இருக்கும் ஆன்கோர்வாட் கோவில். அப்ப இருந்த குருமஹா சந்நிதானம் அவர்கள் நேரடியாக வழிகாட்டி மகாபலிபுரத்திலே செதுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான கப்பல்கள் மூலமாக கம்போடியா கொண்டு செல்லப்பட்டு புட்டப்பட்ட குண்டலினியையே விழிப்பிக்க வைக்கின்ற யந்திரங்கள் தான் கம்போடியாவிலிருக்கின்ற ஆலயங்கள். அதே மாதிரி நம்முடைய சித்தர்கள் தான் முதல் முறையாக மூலிகை மூலமாக ஒருவருடைய குண்டலினியை விழிப்பிக்கச்செய்கின்ற நுட்பத்தை உலகிற்கு தந்தவர்கள். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் அந்த ஞானத்தை டிசம்பர் இன்னர் அவேக்கனிங்கில் உலகத்தோடு பகிர்ந்துக்கொள்ளப்போகிறேன். வெறும் மூலிகைகளாயே குண்டலினி சக்தியை விழிப்பிக்க வைப்பது. இன்னைக்கு காலைல ஒருத்தர் கேள்வி கேட்டாரு.., கம்போடியாக்கு வந்து ரூட்பேட்டன கண்டுபிடிச்சி கம்ப்ளீட் பண்ண நல்லா அயிடுமா சாமி? கம்போடியா இன்னர் அவேக்கனிங்ல ரூட்பேட்டன்-கம்ப்ளீஷன் ன்ற வார்த்தையே கிடையாது. இந்தா வாயத்திற இந்த மூலிகைய வச்சி அடக்கு, நாக்குக்கு கீழ ஒன்ன வை, நாக்குக்கு மேல ஒன்ன வை வாய மூடு மூச்ச இழு அவ்வளவுதான் குண்டலினி. சிவோஹம் பறக்க வேண்டியதுதான். கண்ணாடிய உக்காந்து பாத்துட்டிருக்கவேண்டிது. கம்ப்ளீஷன்ற பேரால தூங்கி தூங்கி வழியறது, எதையாவது உக்காந்து யோசிச்சிட்டிருந்துட்டு, ஆட்டோகிராப் நினைவுகளெல்லாம் ஆழ்ந்துட்டு, அதையெல்லாம் உக்காந்து நினைச்சிபாத்துட்டு இருந்துட்டு, அப்பறமா அத கம்ப்ளீஷன்னு சொல்லிகிட்டு அதையெல்லாம் இங்க எதுவும் சொல்ல முடியாது. நேரடியாக நம்ம சித்தர்கள் அளித்த மூலிகைகள் யந்திரங்கள் தீக்ஷை இதன் மூலமா குண்டலினியை விழிப்படையச் செய்யறததான் இந்த கம்போடியா இன்னர் அவேக்கனிங்ல பண்ணப்போறோம். ’’அட்டாங்க யோகம் அறிந்த மெய் ஞானிக்கு முட்டாங்கம் எதுக்கடி’’ குண்டலினி சக்தி பொங்கினால் நமக்குள்ளேயே ஒரு மிகப்பொிய புரணத்தன்மை மலர்ந்துவிடும். ஆழமான ஐெஉழஅிடநவழைெ இந்தப் பசி, காமம் இது எல்லாம் ஆழமான ஐெஉழஅிடநவழைெ அது எல்லாமே கரைஞ்சு போயிடும். அதனால் தான் சொல்கிறேன். நம் குருகுலத்து குழந்தைகள் ஒரு புதிய மனித இனத்தையே உருவாக்குவார்கள். அவங்க சந்யாசியா போனாலும் சரி. இல்ல கல்யாணம் பண்ணிட்டு போனாலும் சரி. அவர்களை எக்காரணம் கொண்டும் காமம் பலவீனப்படுத்தாது. ஏனெனில் குண்டலினி சக்தி பொங்கினாலே அடிப்பைடை ஐெஉழஅிடநவழைெ ஆன பசி, காமம் எல்லாமே கரைஞ்சுப்போயிடும். கம்ப்ளீட் ஆயிடும். இதைத்தான் சித்தர்கள் சொல்கிறார்கள் அட்டாங்கம் அறிந்தபின் முட்டாங்கம் ஏதுக்கடி குதம்பாய் முட்டாங்கம் ஏதுக்கடினு. சக்தி மொத்தம் மேல போய் வேலை செய்கிறது எ்ன்றால் கீழே எதுவும் வேலை செய்யாது. செய்ய வேண்டிய தேவையும் இல்ல. ஒரு பத்தடுக்கு மாடி. அதுக்கு மேல வாட்டர் டாங்க்கு இருக்கு. ஒன்பதாவது இடத்திலேயே எட்டாவது இடத்திலேயே எல்லா பைப்பையும் திறந்து விட்டாங்கன்னா கீழே இருக்கும் ஒண்ணாவது ப்ளோருக்குத் தண்ணி வராது. புரிஞ்சுக்கறவங்க புரிஞ்சுக்கங்க.. தேவையும் படாது. அதுதான் குண்டலினி சக்தி விழிப்படையும்பொழுது உடலுக்குள்ளும், மனதுக்குள்ளும் நடக்கிற பொிய கம்ப்ளீஷன். ஆண் பெண் தன்மையை கடந்து இருக்க ஆரம்பிச்சிடுவீங்க. திருமணம் பண்ணிக்கனும் நினைக்கிறவங்களுக்கு பண்ண முடியாம போய்டாது. பண்ணிக்கவேண்டான்றது அது கிடையாது. துறந்தே ஆகணும்னு அவசியமில்லை. அது மாதிரி வாழறவங்களும் வாழ முடியும். ஆனா சந்யாசம் எடுக்கிறவங்களுக்கு இந்த சக்தி முழுமையாக மேல் நோக்கிப் மலர்ந்துவிடும். அது புரியாததனால் தான் முட்டாப்பசங்க காமனை வென்றவனுக்கு காமுகப் பட்டம் கொடுக்கிறார்கள். அர்த்தநாரீஸ்வரனுக்கு அலிப்பட்டம் கொடுக்கிறார்கள். மூடர்கள். சுட்ட சட்டி சட்டுவங்கறிச்சுவை அறியுமோ. சட்டியிலே வைத்து மணிக்கணக்காக சமைப்பதனால் உணவின் சுவையை சட்டி அறியாது. சட்டியில் தான் சமைக்கின்றோம் என்றாலும் சட்டி அறியாது. தமிழ்நாட்டிலேயே வெச்சு சமைச்சு ரெடி பண்ணாலும் தமிழ்நாட்டுக்கு ருசி தொியாதுபோல.. சுட்ட சட்டி சட்டுவம் கறி்ச்சுவை அறியுமோ? எந்த சட்டியில் சமைக்கப்பட்டதோ அந்த சட்டிக்கு சுவை தொியாதுபோல. உலகமெல்லாம் சித்தர்களின் பாடல்களும், சித்த வைத்தியமும் மக்கள் உபயோகம் பன்றாங்க. ஆனா தமிழ்நாட்டில் சித்தா மருத்துவர் என்றால் போலி டாக்டர்னு போாலிஸ்ல பிடிச்சு உள்ள வைத்துவிடுகிறார்கள். தமிழனுக்கிருக்கிற பெரும் சாபம் என்னன்னா? அவங்களுக்கு சொந்தமான எல்லாவற்றிற்றின் மேலும் வெறுப்பு இருக்கு. அவங்களுடைய நாட்டியம் பரதம். அதை வெறுப்பாங்க.. அவர்களுடைய இசை கர்நாடக இசை. இவைகளை வெறுப்பார்கள். குண்டலினி சக்தியை விழிப்படைய வைக்கும் அறிவியல் உலகிற்கு முதல் முதலாக தமிழ்நாட்டு சித்தார்களாலே கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தோ பரிதாபம் கொடுக்கப்பட்டதனால் தமிழர்கள் உபயோகப்படுத்த மறந்துவிட்டார்கள். கம்போடியாவிலிருக்கும் கோவில் மட்டுமல்ல, நம்ம நாட்டில் இருக்கக்கூடிய தஞ்சைப் பெருவுடையார் கங்கை கொண்ட சோழபுரம், திருவண்ணாமலை, மதுரை அனைத்துக் கோவில்களுமே அப்படித்தான் ஒரே நேரத்தில் பல லட்சம் மக்களுக்கு குண்டலினி சக்தியை விழிப்பிக்க வைப்பதற்காகக் உருவாக்கப்பட்ட யந்திரங்கள்தான். என் கிட்டே ஒருத்தர் கேட்டாரு அப்ப ஏன் சாமி நீங்க கம்போடியாவில இன்னர் அவேக்கனிங் வைச்சிங்க. இங்கே மதுரை கோவிலிலோ திருவண்ணாமலை கோவிலிலோ வைக்கக்கூடாதா? அப்பா, கம்போடியால அங்கோர்வாட் கோயில்ல நான் உட்காந்து நிம்மதியா க்ளாஸ் எடுத்து, நீங்கல்லா உக்காந்து நிம்மதியா தியானம் பண்ணி குண்டலினி சக்திய விழிப்படைந்து அனுபவிக்க முடியும். திருவண்ணாமலை, தஞ்சாவுர் பிரகதீஸ்வரர் கோவிலிலோ நாம எல்லாம் ஒண்ணா உட்கார்ந்து தியானம் பண்ண முடியுமா? தமிழனுக்கு வந்த நிலை பாரப்பா. அவங்க நாட்டு அறிவியல, அவங்க நாட்ல பொறந்த வளர்ந்த ஒருத்தர் படிச்சிட்டு வௌிநாட்டு பாஷையான இங்கிலீஷ்ல சொன்னா வுசயளெடயவழைெ ளநவ அ மாட்டிகிட்டு அந்த தமிழ் வுசயளெடயவழைனெ கேப்பமோ தவிற... குண்டலினி சக்தி நம்ப உடம்புக்குள்ள இருக்கின்ற எல்லா விதமான வியாதிகளையும் விரட்டிறி, னுந-வுழஒகைைஉயவழைெ ன்னு சொல்லுவோம் வியாதிகள் வருவதற்கான காரணங்களை எல்லாம்கூட அழித்து, நம்முடைய உறங்கிக் கொண்டிருக்கின்ற டி.என்.ஏ லேயரை எல்லாம் விழிக்க வைத்துவிடும். புடம்போட்ட தங்கத்தைப்போலே அசுத்தங்கள் எல்லாம் அழிந்து உடம்பும், மனசும் ஒரு புது உத்சாகத்தோடும், தெய்வீகத்தோடும், தௌிவோடும் இயங்கத் துவங்கும் அதுதான் குண்டலினி சக்தி விழிப்படைந்தால் நடக்கும். அதாவது நம்முடைய அடிப்படை ஆசைகளான உணவு, காமம் போன்ற இந்த ஆசைகளில் நம்மை அதுல நம்மை முழுமை ஆக்குவதிலிருந்து மிகப்பொிய ஆசைகளான அஷ்டமா சித்திகள் நினைச்ச இடத்திற்கு நினைச்ச நேரத்திற்குப் போறது, நினைத்த இடத்தில் நினைத்தபடி நிற்பது, நினைத்ததை நினைத்தபடி செய்வது இப்படி பொிய பொிய சித்திகள் வரை எல்லாவற்றையும் அளிக்கக்கூடிய நுட்பம் இந்த குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்தல். உங்க குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்தீர்களானால் வாழ்க்கையிலே துக்கம் என்பதே இல்லாத ஒரு புதிய சிந்தனைமுறை செயல்முறை வாழ்வுமுறை உங்களுக்குள் மலரும். சிந்தனைமுறை செயல்முறை வாழ்வுமுறை வளரத்துவங்கும். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். குண்டலினி சக்தியை நான் எவ்வளவு நேரம் பேசினேன் என்றாலும் பால் அருந்துவதைப் பற்றி பேசுவதைப்போலத்தான். பால் அருந்துவதைப்பற்றி நீங்க எத்தனை மணி நேரம் கேட்டீங்கன்னாலும் குடிக்கறா மாதிரி சுகம் வராது. குண்டலினி சக்தியும் அப்படித்தான். வெறுமனே பேசும்போது அனுபவிக்க முடியாது. அதுபொங்கும் பொழுது நடக்கின்ற ஆனந்தத்தை அனுபவித்தால்தான் தெரியும். அது பொங்கும் போது உடலுக்குள்ளேயும், மனசுக்குள்ளேயும் நடக்கின்ற ஆனந்தம் அதுமட்டுமல்ல வெறுமனே உடம்பு குதிச்சிட்டு உட்கார்ந்திடறது இல்லை. அந்த நேரத்திலே என்ன நினைக்கிறீர்களோ அதெல்லாம் நிஜமாயிடும். இந்த உடம்பு குண்டலினி சக்தியில் குதிக்கும்பொழுது நீங்க என்ன ளியஉந உசநயவ பண்றீங்களோ, என்ன பிரார்த்தனை வைக்கிறீர்களோ மனசுலே என்ன நினைக்கறீங்களோ அது நிஜமாக மாறத்துவங்கிவிடும். நல்லாத் தொிஞ்சுக்கங்க குண்டலினி சக்தி நம் எல்லோருக்குள்ளும் இருக்கின்ற தெய்வமாக மாறுகின்ற வழி. நம் எல்லோருக்குள்ளும் இருக்கின்ற கைலாயத்திற்கான கதவு தான் குண்டலினி சக்தி. அது திறந்துவிட்டதெனில் ஜீவன் முக்தி அனுபவத்தை அனுபவிக்க ஆரம்பிச்சிடலாம். ஆழ்ந்து புரிஞ்சுக்கங்க உயிருள்ள மனிதர்கள் எல்லார் உடம்பில் மட்டுமல்ல இறந்து போன மனிதர்கள் உடம்பில கூட அந்த குண்டலினி சக்தி விதை அப்படியே தான் இருக்கும். ஒரு இறந்த பாம்பினுடைய விஷம் அழிந்து போய்விடாது. ஆதனால் தான் செத்த பாம்பாக இருந்தா கூட அதன் கால் மேல் தலையை வைக்கக் கூடாது. அது தலை மேலேயும் நம் காலை வைக்கக்கூடாது. சில பாம்புக்கு கால்லையும் விஷம் இருக்கும். செத்த பாம்பாயிருந்தாலும் சரி அதன் மேல் கால் வைக்கக் கூடாது. விஷம் அப்படியேத்தான் இருக்கும். அதுபோல் தான் இறந்துபோன மனித உடல்ல கூட அந்த குண்டலினிசக்தி அப்படியே இருக்கும். அதைத்தான் சிலர் எடுத்து ஏவல் பில்லி சுனியத்திற்கு பயன்படுத்துவார்கள். இதுதான் ப்ளாக் மேஜிக். மாய மந்திரம். பில்லி சுனியம். செத்துப்போனவர்கள் குண்டலினி நமக்குத் தேவையில்லை. நம்முடைய குண்டலினியிலேயே போதுமான அளவு சக்தி உள்ளது. . தன் குண்டலினி சக்தியையே விழிப்பிக்க வைத்து அமானுஷ்ய செயல்களையெல்லாம் செய்வதுதான் வொய்ட் மேஜிக் சித்தி. செத்துபோன உடல்ல இருக்கிற குண்டலினி சக்திய விழிப்பிச்சி நமக்கு தேவையானத செஞ்சிக்கிறதுதான் ப்ளாக் மேஜிக். முாயம் மந்திரம் அப்படீன்னு சொல்றது. அது தேவையில். செத்துப்போனவங் குண்டலினி நமக்குத் தேவையில்ல. நம் குண்டலினி சக்தியே நமக்கு நிறைய இருக்கு. நம் குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்து தினந்தோறும் முறையா கம்ப்ளீஷன் பண்ணாப்போதும். அதாவது இரவு தினந்தோறும் உட்கார்ந்து கம்ப்ளீஷன் பண்ணீங்கன்னா கம்ப்ளீஷன் முடியும்பொழுது குண்டலினி எழுந்து உடம்பு குதிக்க ஆரம்பிச்சிடும். அது நடந்தது என்றால் கம்பளீஷன் நடந்துவிட்டது என்று அர்த்தம். நீங்க படுத்து தூங்கிவிடலாம். குண்டலினி சக்தி கிளம்பி உடம்பு இயங்கும் வரை கம்ப்ளீஷன் பண்ணனும். அது நடக்கற வரைக்கும் அது இன்னும் இன்-கம்ப்ளீஷன்ல இருக்கீங்கன்னு அர்த்தம். குண்டலினி சக்தி வாழ்க்கையில் நாம் அடையப்பட வேண்டிய மிகப்பரிய பொக்கிஷம். அது விழிப்படைந்தால் உடல் நலம் மேம்படும். மன நலம் மேம்படும். பொருளாதாரம், உறவுகள் மேம்படும். சமூகத்தில் வெற்றி அடைவோம். துக்கம் அழியும். ஆனந்தம் பெருகும். ஜீவன்முக்தி மலரும். குண்டலினி சக்தி விழித்த மனிதன் தெய்வமாகிறான். எத்தனையோ தியான முறைகள் இருந்தாலும் குருவுடைய சாந்நித்யத்தில் அமர்ந்து அவருடைய தீட்சையைப் பெறுவதுபோல குண்டலினி சக்தியை விழிப்படைய வைப்பது போன்ற நுட்பம் வேறெதுவும் கிடையாது. அதனால் இதுக்குமே குண்டலினி சக்திய பத்தி பேசிகிட்டே இருக்கிறதவிட நேரடியா அத உங்களுக்கு ஒரு அனுபவமா குடுக்கிறேன். அடுத்த ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி அமருங்கள். அழ்ந்த பிரார்த்தனை உணர்வோடு குருவோடு இணைந்திருங்கள். குருசக்தியோடு இணைந்திருங்கள். தியானம்...! நீங்கள் எல்லோரும் முழுமையான குண்டலினி விழிப்படைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்தி நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றோம். நன்றி ஆனந்தமாக இருங்கள்.!
Photos
Webinar | NDY (Life Bliss Programe) Day 2| Pada Puja| Nithya Kirthan | Satsang | Kalpataru Darshan
Tags:
Paramahamsa Nithyananda, Nithyananda, Genesis of identity, SDHD, Self-doubt, Self-denial, Self-hatred, Introducing you to You, Purnatva, Complete Completion