கைலாஸா'வின்
நித்யானந்தபீடியா

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள்...

 

'மனித- தெய்வத்தை' ...'தெய்வ-மனித' நிலைக்கு உயர்த்தும் அவதார புருஷர். இந்து மதத்தின் உயர் சத்தியங்களை, மேன்மையான அறிவியலை மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் உள்ளார்ந்த தெய்வீக ஆற்றலுடன் ஒன்றினைக்கும் விஞ்ஞானமாக வழங்கி பேரருள் புரிகின்றார். பகவான் அவர்கள் தாம் எத்துனை விதமாக தாக்கப்பட்டாலும்...எதனாலும் அசையாது, வாழ்க்கை ஆனந்தமானது என்று வாழ்ந்து, உலகை வளப்படுத்துவதையே நோக்கமாக கொண்டு ஆன்ம பலத்தின் உறுதியை மக்களுக்கு வாழ்ந்து வெளிப்படுத்தி வழிகாட்டுகிறார். அதீத உயிர்நிலை விழிப்புணர்வு ( Super Conscious Break through) பெற இந்த மனத குலம் தயாராக உள்ளது. மனித குலத்திற்கு ஞான சத்தியங்கள் சொல்லித்தரப்பட வேண்டும், அதை வாழ்வதற்கான ஞான சூழல் உருவாக்கித்தரப்பட வேண்டும். உலகின் கடைசி 'ஞான தீபமாம்' பகவான் ஶீ நித்யானந்த அவர்கள் உலக மக்களின் வாழ்வு உன்னதம் பெற, அதீத உயிர்நிலை விழிப்புணர்வு ( Super Conscious Break through) பெற ஆற்றிய பங்களிப்புகள் அனைத்தும் இந்த இணையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. இந்த சத்தியங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும், அனைவருக்கும் பகிரப்பட வேண்டும். அதற்கான வடிவமைக்கப்பட்ட தளமே ' நித்யானந்தபீடியா'.

புகைப்படங்கள்

Wiki புகைப்படங்கள்

புத்தகங்கள்

கட்டுரைகள்

வீடியோ மற்றும் குறும்படம்

வகுப்புகள் மற்றும் தியான முகாம்கள்

பிரபலமாக உள்ள வீடியோக்கள்

கைலாஸா- நான் பிறந்த போது, இறையனார் எனக்கு அளித்த ஜீவன்முக்த சூழலை உருவாக்கி வைத்து விட்டுத்தான்,ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கடவுள் தன்மையை விழிப்படைய வைத்து விட்டுத்தான் இந்த பூமியை விட்டு செல்வேன். கைலாயம் திரும்புவேன்.
1978

உங்கள் பிரார்த்தனைக்கிறங்கியே நான் அவதரிக்கின்றேன்!. எனது மகிமைகளைச் சொல்வது… அது உங்களுக்கு சாத்தியம் என்பதை உணர்த்துவதற்கே!. ஒவ்வொரு அவதாரத்திலும் பரிணாம வளர்ச்சியில் திருப்புமுனையை ஏற்படுத்தி உலகத்தை வழிநடத்தி செல்கின்றேன். ஒவ்வொருமுறை நான் எடுக்கின்ற வடிவமும், அடுத்த உயர் நிலையை உணர்த்தும்: உடலில் இருந்து மனதிற்கான திருப்புமுனை அளித்தேன். மனதிலிருந்து உணர்விற்கான திருப்புமுனை அளித்தேன், இப்பொழுது உணர்விலிருந்து, இறை உணர்விற்கான திருப்புமுனையை அளிக்கவே அவதரித்துள்ளேன்!. உலகத்தில், முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு மனிதன் துன்பத்தை தனது வாழ்க்கையின் பாகமாக அனுபவிக்கின்றார்கள். மனித சமுதாயத்தின் ஒன்று திரண்ட உணர்வு நிலையின் விளைவாகவே நான் மீண்டும் புமியில் அவதரித்திருக்கின்றேன். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கடவுள் தன்மையை விழிப்படையச் செய்யவே நான் இப்புவியில் அவதரித்துள்ளேன். இனிமேலும் நீங்கள் முழுமையிலிருந்து ஒரு பகுதியை இழந்ததைப்போல் உணரதேவையில்லை. என் வாழ்க்கையை பற்றி நீங்கள் ஆழமாக படிக்கும் பொழுது, உங்கள் வாழ்க்கையை பற்றிய அமரத்துவ உண்மைகளை பற்றி புரிந்துகொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்பது, பரமசிவ நிலையை அடைவதாகும். நான் இருக்கும் அந்த பரமசிவத்துவ நிலையை நீங்களும் அனுபவமாக உணருவதற்கான அழைப்புதான் சாத்தியக்கூறுதான் என் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள். எனது மகிமைகளைச் சொல்வது, அது உங்களின் சாத்தியக்கூறு என்பதை உணர்த்துவதற்கே!

1989
கைலாஸா – இது பரமசிவனின் நோக்கம் இந்துக்களே… உங்களுடைய இதயம்தான் பரமசிவ பரம்பொருளின் இருப்பிடம். உங்களுடைய இதயம்தான் பரமசிவ பரம்பொருளின் ஸ்ரீகைலாஸம். உங்கள் இதயங்களில் எல்லாம் பரமசிவ பரம்பொருளின் திருக்கைலாயத்தை உள்வாங்குங்கள். உங்கள் இதயங்கள்தான் பரமசிவ பரம்பொருளின் இருப்பிடம் என்பதை உணருங்கள். ஒவ்வொரு தனிமனிதரும் தம்முள், பரமசிவ பரம்பொருளின் நிலையில் நிலைப்பெற்று, பரமசிவ உணர்வையும் பரமசிவ சக்திகளையும் பரமசிவ இருப்பையும் பரமசிவ உயர் விழிப்புணர்வையும் பெறுவதுதான் ஸ்ரீகைலாஸாவின் நோக்கம். தயவுசெய்து, வாழும்பொழுதே உங்கள் வாழ்வின் நோக்கமான பரமசிவப் பரம்பொருளின் இருப்புநிலையை உள்வாங்குகள். உங்களுடைய இருப்பு நிலை பரமசிவப் பரம்பொருளின் இருப்பு நிலையாகட்டும். இந்து மதத்தின் சாஸ்திரங்களை வாழ்வதும், சத்தியங்களை உயிரோடு வைப்பதும் இந்த கைலாஸாவின் நோக்கம்.

பரிந்துரை செய்யப்படும் பக்கங்கள்

அவதார நோக்கம் :

மனிதகுலத்தை மனித உணர்வுகளினின்று உயர்த்தி பரமசிவ நிலை, உணர்வு, சக்திகளிகளை வௌீப்படுத்தி வாழவைத்து உலகின் விழிப்புணர்வு சக்தியில் ஒரு மாபெரும் திருப்புமுனையை அளித்தல். ஆகமத்தில் பரமசிவன் அருளியிருக்கும் 460க்கும் மேலான சக்திகளை தீட்சையாக அருள்வதன்மூலம் பல லட்சக்கணக்கான மக்களை சக்திகளை வௌீப்படுத்த வைத்து, அதைச் செயல்முறையாக உலகிற்கு காண்பித்து, பலவித மக்களின் தர்க்கரீதியான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் விஞ்ஞானப்பூர்வமாகவும் நிரூபித்தல். சுத்தாத்வைதம் மற்றும் அதன் அறிவியலை விளக்கும் இந்துமத மூலநூல்காளான வேதாகமங்களை மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவற்கான எளிய கையேடு ஆவணங்களாக அருளி, வேத ஆகமங்கள்சு, சடங்கு முறைகள், வாழ்க்கை முறை அமைப்புகள் மற்றும் யோக அறிவியல் ஆகியவற்றை விஞ்ஞான ரீதியாக முறைப்படுத்தி இதன்மூலம் இந்த சத்தியங்களை நிலைநிறுத்தி, மனிதகுலம் அதன் பரிணாம வளர்ச்சிக்காக நீண்டகாலமாக காத்திருக்கும் அந்த அற்புத உயர்வை அளித்தல். மனிதர்களை உயர்ஞானசத்திங்களை வாழவைத்து, அசாதாதாரண சக்திகளை வௌீப்படுத்தி, உடல், மனம், உள் மற்றும் உள்ளார்ந்த உறுப்புகள் (மூன்றாம் கண் போன்றவை) ஆகியவற்றை அடுத்தநிலை அலைவரிசைக்கு உயர்த்தி ஒவ்வொரு ஜீவனும் இறைநிலை சக்திகளை தனித்தனியாக வௌீபடுத்தி வாழ மனித குலத்தை மேம்படுத்துதல். ஒரு அவதாரபுருஷராக, அவர் ஒரு ஆன்மீகத் தலைவராக, உள் மற்றும் வௌீ உலக விஞ்ஞானியாக அதிநவீன நாகரிகத்தின் மறுமலர்ச்சி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதகுலத்திற்கான ஒரு தொலைநோக்கு என தனது உலகளாவிய பொறுப்புகளில் பிரபஞ்ச நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார். தன் 21 வருட பொது வாழ்வில், அறிவியல், தொழில்நுட்பம், தியானம், அன்மீக தியான சிகிச்சைமுறை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், யோகா, மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் மனிதநேயம் குறித்த தனது பங்களிப்புகளை அவர் அருளியிருக்கின்றார். மேலும் 6 கண்டங்களில், 196 நாடுகளில், 347 நகரங்களில், 20 மில்லினுக்கும் மேற்பட்ட மக்களால் குருவாகவும், இறைவனாகவும் உணரப்பட்டு வழிபடப்படுகின்றார்.

வெளிவராத உண்மைகள் - மதத்தாக்குதல்

நம் மீது தொடுக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மதத்தாக்குதல் நம்மை ஸ்திரமான ஜீவன் முக்த சமுதாயம் உருவாக்க வைத்துள்ளது.இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மதத்தாக்குதலை எதிர்கொண்டாலும் நாம் எதனாலும் கலங்காது எல்லோரையும் வாழவைத்து கொண்டிருக்கின்றோம். இந்த சங்கம் பரமசிவ பரம்பொருளின் பேரருளால் உருவானது. எதனாலும் அழியாது. எதனாலும் அழிக்கப்படமுடியாது.பக்தர்களே, அன்பர்களே, நித்யானந்த தியானபீடமே, தலைநிமிர்ந்து நில்லுங்கள். நாம் நம்மை நிரூபித்து விட்டோம். நம் வெற்றியை நிரூபித்து விட்டோம். ஜீவன் முக்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான விதையாக அழிக்க முடியாத விதையாக நாம் உருவாக்கிவிட்டோம். வன்முறையால், எங்கள் பலத்தை நிரூபிக்கும் அரசியல்வாதிகள் அல்ல. தாக்குவதால் எங்கள் பலத்தை நிரூபிக்க நாங்கள் அரசியல் வாதிகள் அல்ல. தாக்குப்பிடிப்பதனால், எங்கள் பலத்தை நிரூபிக்கும் ஆன்மீகவாதிகள்.

அதிகாரப்பூர்வ Youtube சேனல்

தமிழில் பகவான் நித்யானந்த பரமசிவம்அவர்கள் நம் உயிருக்கு அருளும் பரமசிவாத்வைத சைவம் கேளுங்கள் ''வேதங்களிலும், ஆகமங்களிலும் வேர்கொண்டு, பரமசிவப்பரம்பொருளே பராசக்திக்கு அருளி, நாராயணன் அதைப் பெற்று பிரபஞ்சத்தை இயக்குகின்ற மென்பொருளாக்கியிருக்கின்ற இந்த ஞான விஞ்ஞானம் பரமசிவப் பரம்பொருளே நீலகண்ட சிவாச்சாரியாக அவதாரம் செய்து, பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் செய்தருளிய அதில் அவர் ஆப்தப்பிரமணாங்களாக காட்டியருளிய சத்தியங்களை சூட்சுமங்கள் அவைகளை என் ஆத்மப்பிரமாணமாக ஞானகுருநாதன் அருணகிரியோகீஸ்வரரா வந்து எனக்கு அளித்தருளியதை உங்கள் சாட்சிப்பிரமாணமாக, வாழ்வின் அனுபவமாக மாற்றுவதைத்தான் நான் செய்து கொண்டிருக்கின்றேன். அதாவது நான் உங்களுக்கு எதைச் சொல்லுகின்றேனோ அதை பரமசிவாத்வைத சைவம் என்று சொல்லலாம்.'' – பகவான் நித்யானந்த பரமசிவம் வீடியோக்களை நீங்கள் இலவசமாக கண்டு பயன் பெறலாம்.

தமிழ் வீடியோக்களை காண இந்த link ஐ சொடுக்குங்கள்…

இந்து மத சாஸ்திரங்களின் மாபெரும் இணைய களஞ்சியம் (உங்களின் ஜீவன் விழிக்குமிடம்... )

ஆதிசைவம்
பகவத்கீதை
சிவசூத்திரம்

பகவான் ஆற்றிய பங்களிப்புகள் - கால வரிசையில் ( பகவான் உங்களை உங்கள் உயிருக்காக (Consciousness)வெற்றி அடையச் செய்வார்.)

பகவான் நித்யானந்த பரமசிவம்

இந்துமதத்தில் அவதரித்த அவதார புருஷர்கள், ஞானகுருமார்கள், சித்தர்கள், யோகிகள் மற்றும் இன்றைய இந்துமத தலைவர்கள், உலகளாவிய சமூகத்தினரால் ‘இறைசக்தியின் அவதாரமாக’ கணிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வழிபடப்படும் வாழும் அவதார புருஷர். இந்துமதத்தின் மூலதெய்வம் இறைவன் பரசிவனின் நேரடி அவதாரம். பரமசிவன் வாழும் திருக்கைலாயம் எனும் ஞானசக்தி மண்டலத்தை – பூமியில் கைலாஸா எனும் ஒரே இந்து தேசமாக புனரமைத்தலும், மனித உயிர் மற்றும் வாழும் அனைத்து ஜீவன்களையும் விழிப்புணர்வின் அடுத்த உயர் விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் செல்வதுமே பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அவதரித்ததன் நோக்கமாகும். காசி, காஞ்சிபுரம் மற்றும் மதுரை போன்ற 19 பண்டைய சர்வக்ஞபீடங்களுக்கு புத்துயிர் அளிக்கும் இந்து மதத்தின் தலைவராக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய இந்து பல்கலைக்கழகமான நித்யானந்த இந்து பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின் நிறுவனர். ஒருமைத்தன்மை, அஹிம்சை, இயற்கை சமநிலைக்கு மதிப்பளித்தல் மற்றும் ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்திருக்கும் தெய்வீகத்தின் உள்ளார்ந்த ஆன்மீக சக்திகளின் வெளிப்பாடு போன்ற கைலாயத்தின் கோட்பாடுகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்பவர். கைலாஸத்தின் சட்டப்பூர்வமான மற்றும் முறையான கலாச்சாரம், ஆன்மீகம், மதம், சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றின் மீது நடத்தபட்ட பல திட்டமிட்ட படையெடுப்புகள், தாக்குதல்களால் உலகம் முழுவதிலும் வியாபித்திருந்த இந்த ஜீவன் முக்த சமுதாயம் இன்று குறுகிய நிலைக்கு வந்துவிட்டது. பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், நாம் இழந்த அனைத்து கைலாஸத்தின் மரபுகளையும் மீட்டெடுத்து பூமியில் ஜீவன் முக்த சமுதாயத்தை புனரமைக்கின்றார்.