November 25 2017

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

Title:

ஜீவன் சிவனாகும் நுட்பம்

Link to Video

Video Audio




Transcription in Tamil

ஜீவன் சிவனாகும் நுட்பம் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். உலகம் முழுவதிலும் இரு முனைக் காணொலிக் காட்சியின் வழியாகவும், தீபம் ரிவி, ஆகமம் ரிவி, நித்தியானந்த தொலைக்காட்சி மூலமாகவும் அமர்ந்திருக்கும் அன்பர்களையும், சீடர்களையும் வணங்கி வரவேற்கின்றேன். வேதங்கள் வாழ்வின் அடிப்படை அறிவியல். ஆகமங்கள் அதை தினசரி அனுபுதியாக மாற்றுகின்ற நுட்பம். ஆழ்ந்து கேளுங்கள். வேதங்கள் வாழ்க்கையின் அடிப்படை அறிவியல். ஜீவன், ஜெகத், ஈஸ்வரன், பசு, பதி, பாசம். பசு என்பது தனிப்பட்ட ஜீவன். பதி என்பது பரம்பொருள். பாசம் என்பது இவைகளுக்கு இடையிலே திரையாகவிருக்கும் மாயை. ஜீவன் தனிப்பட்ட உயிர். ஜெகத் பிரபஞ்சம். ஈஸ்வரன் இறைவன். இவைகளைப் பற்றியெல்லாம் அடிப்படை உண்மைகளை நமக்கு அறிவிக்கக்கூடிய அறிவியல் வேதம். இந்த அறிவியலினாலே நம்முடைய வாழ்க்கையை சாதாரண நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்று, உயர்ந்த நிலையிலே நம் வாழ்க்கையையே மலர வைக்கின்ற நுட்பம் ஆகமங்கள். ஆகமங்கள் உயிரை உயிர்ப்பிக்க வைக்கும் ஓர் உயர் தன்மையின் உயர்விற்கு நம்மை உயிர்ப்பிக்க வைக்கும் சக்தி வாய்ந்தவைகள். ஆகமங்களில் அடிப்படையான ஒரு சத்தியக் கட்டமைப்பு அருமையான ஆழ்ந்த சத்தியங்களை நம்முடைய அனுபுதியாக மாற்றிக் கொள்ளவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் கட்டமைப்பு. சத்தியத்தை சாத்தியமாக்கும் கட்டமைப்பு. ஐகெசயளவசரஉவரசந றரைஉா ளை டிரடைவ ரள வழ சநயடணைந வாந ரடவைஅயவந. இந்த உதாரணத்தைப் புரிந்துகொள்ளுங்கள். பெரும் வௌ்ளம் ஒரு அணையாலே தடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த வௌ்ளம் பழையபடி சர்வ சுதந்திரமாகப் பொங்கிச் செல்ல வேண்டுமானால், அணை உடைக்கப்பட்டாக வேண்டும். இந்த அணையை உடைக்கின்ற வேலையை நீங்கள் ஒவ்வொரு செங்கல்லா, ஒவ்வொரு கருங்கல்லா, ஒவ்வொரு கல்லா உடைத்து எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு கல்லாகத் தான் எடுக்க வேண்டும் என நினைத்தீர்களானால் அது முட்டாள்தனம். ஐயோ! இவ்வளவு கல்லையும் எப்போது எடுப்பேன் என்று மலைத்துப் போனால் அது முட்டாள்தனம். பொங்கிப் பெருகி வந்து இந்த அணையாலே அடைக்கப்பட்டிருக்கின்ற வௌ்ளத்தின் பலத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்களானால், வேறு எதுவும் தேவையில்லை. சரியான இடங்கில் ஒன்றிரண்டு ஓட்டைகள் போதுமானவை. அதில் பீறி பொங்கியெழும் வௌ்ள நீர் தானாகவே அணையைச் சுக்கு நூறாக உடைத்து விட்டுத்தான் வௌியேறும். அதேபோல, நமக்குள்ளே ஆத்ம அனுபுதி, சதாசிவப் பரம்பொருள் அணையால் தடுக்கப்பட்டிருக்கும் வௌ்ள நீரைப் போல பொங்கிக்கொண்டிருக்கின்றார். அந்த அணைதான் சுயசந்தேகம், சுய மறுப்பு, சுய வெறுப்பு. சுயசந்தேகம் -ளநடக னழரடிவஇ சுய மறுப்பு, ளநடக னநெயைடஇ சுய வெறுப்பு. ளநடக ாயவசநன ஆகும். சுய சந்தேகமும், சுய மறுப்பும், சுய வெறுப்பும் சேர்ந்ததைத்தான் அகங்காரம் என்று சொல்கின்றோம். பாசம் என்றும் சொல்லலாம். நம்மைப் பற்றி நமக்கே தௌிவில்லாமல் இருப்பதனால் ஏற்படும் மாயை. பொங்கி வருகின்ற சதாசிவப் பெரும்பொருளின் சக்தி, பரசிவப் பரம்பொருளின் சக்தி அகங்காரமாகிய சுய சந்தேகமும், சுய மறுப்பும், சுய வெறுப்பு அனைத்தும் அதனைத் தடுத்துக்கொண்டிருக்கின்றது. நீங்கள் நினைக்கலாம் இது எல்லாத்தையும் எப்ப எடுத்து பரம்பொருளின் சக்தி, பேரறிவு ஆற்றலாக பரவுவதற்கு அனுமதிக்கப்போகின்றோம். எப்போது அது பரந்து விரியப்போகிறது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கின்ற ஒவ்வொரு தடையையும் விலக்கவேண்டிய அவசியம் இல்லை. சரியான ஒரு சில தடைகளை மட்டும் விலக்கினீர்களானால் எப்படி அந்த அணையிலேயே ஒரு சில துளைகளை மட்டும் இட்டாலே போதும் வௌ்ளத்தின் சக்தியால் அணை உடைந்து பெருகும். அதுமாதிரி நாம் நம்மைப்பற்றி வைத்திருக்கும் கருத்தான அகங்காரத்திலே ஒரு சில துளைகளை இடவேண்டும். அந்தத் துளையிடுவதென்றால் என்னவென்றால் சக்தி வௌிப்பாடு. நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கும் கருத்தை மாற்றுதல். நஞ்சாக இருக்கும் கருத்தைப் பஞ்சாக மாற்றுதல். கல்லாக இருக்கும் நெஞ்சு கலையாய் மாறுவது. நம்முடைய உணர்விற்குள் நாம் வைத்திருக்கும் கருத்துக்கள் சக்தி வௌிப்பாட்டின் மூலமாக மாறத் துவங்கினால், அணையை உடைத்து வௌ்ளம் பொங்குவதுபோல் நம் பாசத் திரையை அறுத்து பதி பசுவிற்குள் பொங்கிப் பெருகுவான். பரமசிவன், பரசிவன் ஜீவனிற்குள் பொங்கிப் பெருகித் தன் சாமித்தியத்தை நிலைநிறுத்திக் கொள்வதுதான் ஜீவன் சிவனாகும் சிவவாழ்க்கை. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். தன்னைப் பற்றித் தான் வைத்திருக்கும் கருத்து மாறுவதற்கான ஒரே வழி ஆகமங்களில் இறைவன் அருளிய அறிவியலை ருசித்தல். வெறும் ரசித்தலால் வாழ்க்கை மாறுவதில்லை. எல்லா ஆலையங்களிலும் நடக்கின்ற திருவிழாக்கள் கோலாகலங்கள் இவைகள் எல்லாம் ஆகமங்களின் அளவுகடந்த தன்மையை ரசிப்பதற்கான வாய்ப்பு. ஆகமங்களுடைய கிரியாபாதம் பரம்பொருளின் மகிமையை ரசிப்பதற்கான வாய்ப்பு. ஞானபாதமோ பரம்பொருளின் தன்மையை ருசிப்பதற்கான வாய்ப்பு. கிரியாபாதம் பரம்பொருளின் தன்மையை ரசிப்பதற்கான வாய்ப்பு. ஞானபாதம் பரம்பொருளின் தன்மையை ருசிப்பதற்கான வாய்ப்பு. கிரியா பாதத்திற்கு முன்பு நம்மை நாமே தயார்படுத்திக்கொள்ளுதல்தான் சரியாபாதம். ஞான பாதத்திற்கு முன்பு நம்மை நாமே தயார்படுத்திக்கொள்ளுதல்தான் யோகபாதம். ஆகமங்களின் இந்த நான்கு பாதங்களுமே நம்மை நாம் சதாசிவத் தன்மைக்குள் செலுத்தி நாம் சதாசித்தன்மையில் வாழ்வதற்கான வழிதான். நாம் பரம்பொருளை, இறைவனை, சதாசிவப் பொருளை அனுபுதியாக அடைந்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் வௌிப்படுத்துவதுதான் ஆகமங்கள் வேதங்களின் சாரம். அது நமக்கு அளிக்கும் சத்தியம். பிரச்சினை என்னவென்றால், சத்தியத்தை யாரும் மறுப்பதில்லை. அது சாத்தியமா இல்லையான என்ற நிலையில்தான் சி்க்குகிறார்கள். சாத்தியம், சாத்தியமில்லை என்ற பிரதி வாதங்கள் எப்போதும் நிகழும். அந்தக்காலத்தில் சாத்தியம் இப்போதெல்லாம் முடியுமா? என்பது பாமர மக்களின் வாதம். இல்லப்பா இருந்திருக்கிறார்கள் கொஞ்சக்காலத்திற்கு முன்பு ரமணமகரிஷி, ராமகிருஸ்ணர் அவர்கள் எல்லோரும் இருந்திருக்கிறார்கள். அவங்கல்லாம் காட்லயே இருப்பாங்கப்பா, வௌியில் எல்லாம் வரமாட்டார்கள் என்பது நடுத்தர வர்க்கத்தின் நாட்டாமை. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். கிருஷ்ண ஸ்ரீீகிருஷ்ண சைத்தன்ய என்று ஒரிசாவிலே வாழ்ந்த ஒரு மிகப்பெரிய பக்தன். கிருஷ்ணருடைய அவதாரமாகவே கருதப்படுமளவிற்கு கிருஷ்ண பக்தியை உலகிற்கு அளித்தவர். அவரிருந்த காலத்தில எல்லாரும் அவரிடம் சென்று புலம்புவார்களாம் கிருஷ்ணர் இருந்த காலத்தில் தாம் இல்லையே என்று. கொஞ்கக் காலம் கழிந்த பின்பு ராமகிஷ்ணர், பெரிய அவதார புருஷர் வந்தார், அவரிடம் சென்று எல்லோரும் புலம்புவார்களாம். சைதன்யர் இருந்த காலத்தலும், கிருஷ்ணர் இருந்த காலத்திலும் நாம் இல்லையே என்று புலம்புவார்களாம். கொஞ்சக் காலம் கழித்து ரமண மகரிஷியிடம் சென்று ராமகிருஷ்ணர் இருந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என புலம்புவார்களாம். மனித மனமே இப்படித்தான். இருக்கும்வரை கல்லால் அடித்து, சென்ற பின்பு கல்சிலையில் வடித்து, வாழ்க்கையை வீணடித்துக்கொள்வது. இருக்கும்பொழுது கல்லால் அடித்தல், சென்றபின்பு கல்லால் வடித்தல். இருக்கும்போது கல்லால் அடித்து, சென்றபின்பு கல்லால் வடித்து, கடைசிவரையும் தம் நெஞ்சக்கல்லை கல்லாகவே வைத்திருந்து வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். பெருமான் ஆகமங்களில் அளிக்கின்ற இந்த சத்தியங்கள் சாத்தியம். வெறுமனே திருவிழாக்கள், உற்சவங்கள், நிகழ்ச்சிகள் இவைகள் மூலம் பெருமானின் பேரருளை ரசிப்பதோடு நின்றுவிடாமல், ஞான பாதங்களின் சத்தியங்களை உள்வாங்கி கடைப்பிடித்து, அவருடைய பேராண்மையை, பெரும் சக்தியை ருசிக்கவும் செய்யுங்கள். நீங்களும் சிவத்துவத்தை வௌிப்படுத்தி வாழ முடியும். இது சாத்தியம். இது சத்தியம். பெரிய பெரிய திருவிழாக்களை மட்டும் பார்த்து இறைவனின் திருமேனியின் முன்பு மட்டும் வணங்கிவிட்டுச் செல்வது பெரிய ஸ்ரார் ஹோட்டலுக்குச் சென்று மெனுக்கர்டை மட்டும் படித்துவிட்டு வௌியில் செல்வது போன்றது. நாமே சக்தி வௌிப்பாட்டை அனுபுதியாக அறிந்து, நாமே அந்த சிவத்தன்மையை வாழ்ந்து, சதாசிவத்தை வௌிப்படுத்தவதுதான் உண்பதற்குச் சமம். வெறுமனே ரசிப்பது வேறு. ருசிப்பது வெறு. வெறுமனே ரசிப்பது வேறு. ருசிப்பது வெறு. சதாசிவன் உலகத்திற்கு அளித்திருக்கின்ற இந்த அறிவியலை ருசிக்க வேண்டுமென்று நினைத்தீர்களானால். வாருங்ள். சிவதீட்சை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்களும் தியானத்தில் மூழ்குங்கள். இறைவனின் சதாசிவப் பரம்பொருளிந் சாந்நித்யம் உங்களுக்குள் நிகழ அனுமதியுங்கள். உங்களின் மூன்றாவது கண்ணும் ஔிர அனுமதியுங்கள். அவருடைய சக்திகள் உங்களுள் வௌிப்பட அனுமதியுங்கள். நம் எல்லோருடைய மூன்றாவது கண் மலர்வதுதான் திருவண்ணாமலை உச்சியில் காட்டப்படும் தீபம். மலைத் தீபம், பெருமான் பேரருளை ரசிப்பது. அகத்தீபம் பெருமான் பேரருளை ருசிப்பது. வெறுமனே ரசிப்பதோடு நிற்காது ருசிக்கவும் செய்யுங்கள். மலையேறி மலைத்தீபத்தை மட்டும் பார்ப்பது, ரசிப்பது. அண்ணாமலையேறி ஆறு சக்கரங்களைத் தாண்டி அகத்தீபத்தைக் காண்பது பெருமானின் பேரருளை ருசிப்பது. ரசிப்பதை மட்டும் செய்யாமல் பெருமான் பேரருளை ருசிப்பதையும் செய்தீர்களானால் வாழ்வு பெருவளம் பெற்றுச் சதாசிவத் தன்மையில் மலர்ந்துவிடும். ஐயா, ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். கருத்து அனுபவமாகாது. வெறும் கருத்து உற்சாகம் வேண்டுமானால் அளிக்கலாம். ஒரு சாதாரண நல்ல கருத்தைக் கேட்டால் உற்சாகம் வேண்டுமானால் வரலாம். உற்சாகம் அனுபுதி கிடையாது. வரும், போய்விடும். சில நேரங்களில் அறிவு வேண்டுமானால் வரலாம் கருத்திலிருந்து. அறிவும் அனுபவம் கிடையாது. சில நேரங்களில் அனுபவம்கூட வரலாம். அனுபவம்கூட அனுபுதி கிடையாது. கருத்து, அறிவு, அனுபவம், அனுபுதி. எப்பொழுது, ஒரு அனுபவம் நம்முடைய வாழ்க்கைக்குள் ஆழ்ந்து நமது வாழ்க்கையின் எல்லாச் சிந்தனைப் பரிமாணங்களையும் இந்த அனுபுதி சார்ந்தே பரிணமிக்க வைக்கின்றதோ அப்பொழுது அப்பொழுது, அனுபவம் அனுபுதியாக மாறுகிறது. ஆழ்ந்து கேளுங்கள். எப்பொழுது ஒரு சத்தியம் நம் உணர்விற்குள் நிறைந்து, நம்முடைய அனுபவமாக மாறி நம்முடைய எல்லாச் சிந்தனை ஓட்டத்திலும் மலருகின்றதோ அப்பொழுது அது அனுபுதியாய் மாறுகிறது. உதாரணத்திற்கு. ஒரு ஞான குரு ஆகமத்தைப் பற்றி அறிமுகம் கொடுத்தால் அது கருத்து. அதைப்பற்றி ஆழமாக நுட்பங்களை விளக்கினால் அது உங்களுக்கு அறிவு. உங்களைச் செய்ய வைத்து தீட்சை கொடுத்து ஒரு சக்தியை உங்கள் மூலமாக வௌிப்படுத்த வைத்தால் அது அனுபவம். அந்த அனுபவத் தன்மையை உள்வாங்கி, ஆஹா!, எனக்குள் இருக்கும் சதாசிவத் தன்மையைத்தானே இந்த மாதிரி சக்தியாக வௌிப்படுத்தியிருக்கிறார், மூன்றாவது கண்ணில் இத்தனை சக்திகள் வருகின்றதே, அப்படியென்றால் நானும் சதாசிவன்தானே என்ற தௌிவிற்கு வந்து, உங்களுடைய ஆசை, அச்சம், சுகம், கோபம், துக்கம், நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் உங்களுடைய சதாசிவத் தன்மையிலிருந்தே நீங்கள் சிந்திக்கவும், செயல்படவும், இயங்கவும் தொடங்கினால்அது அனுபுதி. மிருக மாமிசத்தை உண்ணுகின்ற மனிதனுக்கு காய், கனியின் இனிமைத்தன்மை மனதில் சிக்குவதுமில்லை உணர்வால் உணரப்படுவதுமில்லை. நல்லாப் புரிங்சிக்கோங்க. மாமிசம் கீழ்நிலையில் இருக்கும் மனிதர்களின் உணவு. விலங்கு நிலை மனிதர்களின் உணவு. இயற்கையான கனிகாய்கள் உயர்நிலைக்குச் செல்லவிரும்பும் மனிதனின் உணவு. உணர்வு தவிர வேறொரு உணவில்லாதிருத்தல் உயர் நிலைக்குச் சென்றவனின் வாழ்க்கை. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். மாமிச பட்சியாக வாழுகின்ற ஒருவனுக்கு இந்த உயர் நிலை உணவைப் பற்றி, உணர்வைப்பற்றிப் புரிதல்கூட நடப்பதில்லை. அவன் அதற்காக ஏங்குவதுகூடவில்லை. பிரச்சினையே ஞானத்தை அடையாமல் இருத்தல்கூடவில்லை. அதை அடைய வேண்டுமேயென்ற தேடுதல்கூட இல்லாதிருத்தல். தேடுதல் வந்தால்தான் ஆகமங்கள்கூடத் தௌிவையளிக்க முடியும். தேடுதல் வந்தால்தான் ஆண்டவன்கூட அனுபுதியை அளிக்க முடியும். தேடுதல் வராதவரை ஆண்டவனே முன்னாடி வந்தாலும் ஆதார்காட் கேப்போம். பிரபஞ்சத்திற்கே ஆதாரமானவன் முன் வந்தாலும் ஆதார் காட் கேட்போம். மண்ணைப் படைத்தவன் வந்தாலும் மண்ணைச் சுமக்க வைப்போம். நம்மையெல்லாம் விடுதலை செய்ய வந்தவனைக்கூட சிறையிலிட முயற்சிப்போம். வாழ்க்கை தேடுதல் இல்லாதபோது எதனைப் பற்றிய தௌிவும் வருவதில்லை. தேடுதல் வரும்பொழுதுதான் வாழ்க்கையில் தௌிவு பிறக்கத் தொடங்குகின்றது. சக்திகள் மலரும்பொழுதுதான் சதாசிவத்தன்மை சாத்தியமென்று நம் எல்லோருக்கும் புரியத் தொடங்குகின்றது. சக்திகளை உங்களுக்குச் சாத்தியமாக்கும் தீட்சைகள் ஆகமத்தில் பெருமான் அருளியவாறே சக்திகளை உங்களுக்கு சாத்தியமாக்கம் தீட்சகைள் தொடர்ந்த சத்சங்களில் உங்களுக்கு வந்து சேரும். அடுத்தடுத்த தியான சத்சங்கங்களில் சக்திகளைச் சாத்தியமாக்கும் சக்திகளைச் சாத்தியங்களாக்கும் தீட்சைகள். தொடர்ந்து இணைந்திருங்கள் இறையனுபுதிக்காக. தினந்தோறும் காலை 7 மணிமுதல் நடைபெறும் நித்ய சத்சங்கத்தில் இணைந்திருங்கள். கல்பதரு சக்தியை உங்களுக்குள் மலரச் செய்வதற்கு. நீங்கள் எல்லோரும் நித்தியானந்தத்தில் நிறைந்து. நித்தியானந்தத்தில் கரைந்து, நித்தியானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன். ஆனந்தமாகவிருங்கள்.


Photos From The Day:


Nithyananda Peetham, Bengaluru Aadheenam | Tamil Nithya Satsang | Infosys Campus Visit with Mohandas Pai - Mysore

https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-satsang_IMG_0026.jpg?1511692247 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-satsang_IMG_0029.jpg?1511692254 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-satsang_IMG_0041.jpg?1511692258 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-satsang_IMG_0042.jpg?1511692262 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-satsang_IMG_0077.jpg?1511692266 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-satsang_IMG_0080.jpg?1511692272 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-satsang_IMG_0108.jpg?1511692278 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-satsang_IMG_0112.jpg?1511692283 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_tamil-satsang_IMG_0127.jpg?1511692288 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1469.jpg?1511683781 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1478.jpg?1511683789 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1480.jpg?1511683797 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1488.jpg?1511683801 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1491.jpg?1511683807 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1492.jpg?1511683813 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1502.jpg?1511683817 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1507.jpg?1511683823 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1510.jpg?1511683827 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1513.jpg?1511683833 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1522.jpg?1511683837 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1524.jpg?1511683841 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1527.jpg?1511683847 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1545_0.jpg?1511683856 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1574.jpg?1511684071 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1598.jpg?1511683890 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1611.jpg?1511684204 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_DSCN1622.jpg?1511684208 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_0051.jpg?1511684222 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_0064.jpg?1511684226 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_0071.jpg?1511684233 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_0101.jpg?1511684238 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_9436.jpg?1511684324 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_0195.jpg?1511684242 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_0197.jpg?1511684248 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_0239.jpg?1511684252 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_0254.jpg?1511684257 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_0397.jpg?1511684261 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_0398.jpg?1511684266 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_0712.jpg?1511684271 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_9245.jpg?1511684274 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_9301.jpg?1511684349 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-25-nithyananda-diary_bengaluru-adheenam_infosys-mysore-visit-with-mohandas-pai_IMG_9317.jpg?1511684318 https://nithyananda.org/sites/default/files/photo-gallery/Day-03.jpg?1512384393






Facebook Link

https://www.facebook.com/ParamahamsaNithyananda/


Photos Of The Day:

Puja

Satsang

Mysore-InfoSys-Campus-Visit

Photos Of The Day:

Tamil-Satsang

Mysore-Infosys-Campus