July 21 2016

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

Title

ஏன் சத்குரு ?

Description

இந்த கல்பதரு த்யான சத்சங்கத்தில் பரமஹம்ச நித்யானந்தா ஸ்வாமிகள் கல்பதரு என்றால் என்ன ? வாழ்வின் அதிநுட்பமான வாழ்வியல் ரகசியங்களை பெருமான் உரைத்ததை பற்றி தெளிவாக எடுத்துரைக்கின்றார் . நம் கற்பனைக்கும் எதை உருவாக்க நினைத்தாலும் அதை நிஜமாக்கி தருகின்ற சக்தியை கல்பதரு என்றழைக்கின்றனர் .

(21 July evening Tamil satsang)

Link to Video:

Video Audio



Transcript in Tamil

உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்

கல்பதரு - இந்த ஒரு வார்த்தையில் சொல்லப்பட்டிருக்கும் உண்மைகளையும் சத்தியங்களையும் உரைக்க முயற்சித்தாலே மொத்த ஆன்மீக அறிவியலையும் விளக்க வேண்டியிருக்கும்.

திருக்குறளைப் பற்றி சொல்லும்போது ஒரு புலவர் சொல்வார், ‘கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி கடுகைத் துளைத்து ஏழ் கடலையும் அதற்குள் புகட்டி அளித்தாக’ இந்த வரியைக் கேட்டவுடன் ஔவைபிராட்டிக்கு கோபம் வந்துவிட்டது. ஔவை பிராட்டி சொல்கிறார் முட்டாளே! அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி என்று சொல்கிறாள். பொய்யா மொழிப்புலவன் வள்ளுவன், கடுகைத்துளைத்து ஏழ் கடலைப் புகட்டவில்லை, அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி இருக்கிறான் என்று.

இந்தக் கல்பதரு எனும் இந்த வார்த்தைக்கு, இந்த ஔவையின் விளக்கம் அழகாய்ப பொருந்தும்.

நேற்றைய சத்சங்கத்தில் சித்தி என்றால் என்ன? சக்தி என்றால் என்ன? என்று விளக்கிக் கொண்டிருந்தேன், யோகிகள் தாங்களாகவே இயம நியம ஆசனம் பிராணாயாம பிரத்தியாகார தாரணை தியானம் சமாதி எனும் மன முயற்சிகளினால் தங்களுக்குள் இருக்கும் சக்தியை மேல் நிலைக்குக் கொண்டுவந்து அமானுஷ்யன் நிகழ்வுகளாக வௌிப்படுத்துவது சித்தி.

ஞானிகள் தங்களுடைய சுத்தாத்வைத இருப்பு நிலையை சுத்தாத்வைத சுகபோக இருப்பின் ஸ்திரத்தன்மையாலே ஸங்கல்ப மாத்திரத்தால் ஆமானுஷ்ய நிகழ்வுகளை வௌிப்படுத்துவது சக்தி.

யோகக் கலையின் உள்கட்டமைப்பு ஐெநெச கைெசயளவசரஉவரசந யோகக் கலையின் உள்கட்டமைப்பு அஷ்டாங்கம் எனப்படும் எட்டு அங்கங்களை உடையது.

அந்த முறைப்படி சாதனைகள் செய்பவர்கள் ஞானத்தை அடையும் வழியிலே இதுபோன்ற அமானுஷ்யமான நிகழ்வுகளை வாழ்விலே சந்திக்கிறார்கள். அதைத்தான் சித்திகள்னு சொல்லேறாம்.

இதில் ஒரு பிரச்சினை என்னன்னா அந்த சித்திகளில் சிக்கிக்கொண்டு ஞானத்தை அடையாமலேயே வாழ்வை கழித்து விடுவதற்கான சாத்தியம் இங்கு இருக்கிறது.

யோக சம்பிரதாயத்தில் பல நன்மைகள் உள்ளன, சில அபாயங்கள் உள்ளன இது ஒரு முக்கியமான அபாயம்.

சுத்தாத்வைத ஜீவன்முக்த ஞான பரம்பரையில் இந்த தத்துவத்தின் உள்கட்டமைப்பு அனுபவத்திலிருந்துதான் அமானுஷ்ய நிகழ்வுகள் பொங்க முடியும் வௌிப்பட முடியும். சுத்தாத்வைத நிலையில் இருந்துதான் அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழத்துவங்கும்.

அதனால்தான் ஞானத்தை அடைவதற்கு முன்பாக வௌிப்படுகின்ற அமானுஷ்ய நிகழ்வுகள் சித்திகள், அடைந்தபின் சுத்தாத்வைத நிலையில் இருந்து வௌிப்படும் அமானுஷ்ய நிகழ்வுகள் சக்திகள்.

இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு ஒவ்வொரு சம்பிரதாயத்திற்கும் ஒவ்வொரு உள் எண்ணக் கட்டமைப்பு உண்டு. மெண்டல் இன்னர் இன்ப்ராஸ்டெக்சர். உள் சித்தக் கட்டமைப்பு உள் எண்ணக் கட்டமைப்பு, உள் மனக் கட்டமைப்பு.

இதன் அடிப்படையே புரியாமல் சாத்திரங்களை பயிலாமல், பயிலவும் விரும்பாமல் பல விரும்பாததை பெருமையாக கருதிக்கொண்டிருக்கும் சிலர், சித்திகளை வௌிப்படுத்தாதீர்கள். அது உங்களுக்கு நல்லதல்ல நித்யானந்தர் செய்வது தவறு, சித்திகளை வௌிப்படுத்தாதீர்கள் அது உங்களுக்கு நல்லதல்ல என்கின்ற வார்த்தையை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் நித்யானந்தர் செய்தது தவறு என்ற வார்த்தை புரியாத்தனத்தனால் பேசும் முட்டாள்தனமான வார்த்தை.

நித்யானந்தர் ஒரு காலத்தில் சித்திகளை வௌிப்படுத்துவதில்லை. அவர் சீடர்களுக்கும் சித்திகளை வௌிப்படுத்தக் கற்றுத்தரவில்லை, அவர் வௌிப்படுத்தும், அவர்கள் சீடர்கள் வௌிப்படுத்தும் சக்திகள்!.

சுத்தாதவைதத்தில் சதாசிவன் நேரடியாக உபதேசித்தருளிய, ஆகமங்களில் அடங்கியிருக்கும் யோகபாத சம்பிரதாயம், சதாசிவனின் நேரடி உபதேசங்களான ஆகமங்களில் அடங்கியிருக்கும் யோகபாதத்திலே அடங்கி இருக்கும் சுத்தாத்வைத சம்பிரதாயத்தில் அஷ்டாங்க யோகம் கிடையாது. சஷ்டாங்க யோகம்தான் உண்டு. இந்த பாரம்பரியத்தில் ஞானத்தை அடையும் முன்பாக வழியிலே அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதில்லை.

இந்தப் பாரம்பரியத்தின் எண்ண உள்கட்டமைப்பே சுத்தாத்வைத நிலையை உணர்ந்து அந்த நிலையில் நிலைபெற்று அங்கிருந்து பொங்குகின்ற அமானுஷ்ய நிகழ்வுகளைதான் நாங்கள் வௌிப்படுத்துகிறோம், அவைகளுக்கு சித்திகள் என்ற பெயர் அல்ல சக்திகள் என்று பெயர். சித்தி வேறு சக்தி வேறு

சக்தி தாய்.. சித்தி சின்னம்மா.

சக்தி தாய் பெற்றவள் சித்தி சிறிய தாயார் உற்றவள். சக்திக்கு நிகரய் சித்தியைச் சொல்லக்கூடாது.

சக்தி எது? சித்தி எது? என்று தெரிய வேண்டுமானால் தயவு செய்து கொஞ்சம் சாத்திரம் படியுங்கள். இல்லையென்றால் சும்மாவாவது இருங்கள். இருக்கின்ற பேரையெல்லாம் வம்புக்கு இழுக்காது, சும்மாவாவது சுகமாய் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருங்கள்.

யோக பாரம்பரியமும் சுத்தாத்வைத சைவ பாரம்பரியமும் முழுவதுமாக ஒன்றுக்கொன்று மாறுபட்டவை, வேறுபட்டவை. ஒவ்வொன்றிற்குமே அதற்கான நன்மையும் தீமையும், அந்தந்த பாரம்பரியங்களை வாழ்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த புரிந்த ரகசியங்கள்.

ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன், அஷ்டாங்க யோகமான யோக பாரம்பரியம் பதஞ்சலியினால் வகுத்து தொகுத்து அளிக்கப்பட்டது. சஷ்டாங்க யோகமான யோக பாரம்பரியம் பதஞ்சலி தொழுத எம்பெருமான் அம்பலவாணன் சதாசிவன் நேரடியாய் திருவாய் மலர்ந்து அருளியது. அம்பலவாணன் சிதம்பரநாதன் சதாசிவன் திருவாய்மலர்ந்தருளிய சஷ்டாங்க யோகம், சுத்தாத்தைவத சைவ சம்பிரதாயத்தில் சாரமான சஷ்டாங்க யோகமே என்னால் உலகத்திற்கு அளிக்கப்படுகிறது. பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த சம்பிரதாயத்தில் ஞானம் அடைவதற்கு முன் சக்திகளோ சித்திகளோ வௌிப்படுவதில்லை. ஞானத்தில் நிலைகொண்டு இருப்பதால் இருப்பின் பலத்தினால் வாழ்வில் அமானுஷ்ய நிகழ்வுகள் வௌிப்படுகின்றன. வலியின் பலத்தினால் வருகின்ற வலிமை சித்தி! வழிபாட்டின் பலத்தினால், வலி அல்ல! ஆழ்ந்து தெரிந்துகொள்ளுங்கள். வலியின் பலத்தினால் வருகின்ற வலிமை சித்திகள்.

சுத்தாத்வைத பரம்பரையிலோ, இறைவனோடு ஒன்றாய் இருந்து சுத்தாத்வைதமான ஒருமைத் தன்மையை உணர்ந்து சாயுஜ்ய நிலையில் நிலைபெற்று வரும் களியின் தன்மையால் வௌிப்படும் அமானுஷ்ய நிகழ்வுகள் சக்திகள்.

வலியின் வலிமையால் வௌிப்படுவது சித்தி. களியின் வலிமையால் வௌிப்படுவது சக்தி.

நிறையபேர் என்கிட்ட கேட்கிறதுண்டு, ‘‘ஏன் சாமி பதஞ்சலி யோகம் உலகம் முழுக்க பிரபலமாயிருக்கு, எப்படி பிரபலமாயிருக்கு அந்த மாதிரி ஏன் ஆதிசிவனே சதாசிவனே அருளியி ஆகமத்தில் சொல்லியருளிய யோக பாதம் ஏன் பிரபலமாகவில்லை?

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் பதஞ்சலியின் பெயரால் பணம பண்ணுகின்ற எல்லோருக்கும் சவால் விடுகின்றேன் ஒரே ஒரு இடத்தில்கூட பதஞ்சலி ஒரு ஆசனத்தைகூட சுத்திரத்தால் விளக்கிச் சொல்லவில்லை, ஒரே ஒரு ஆசனத்துக்கு பதஞ்சலியோட ஒரிஜினல் சுத்திரத்துல இருந்து ரெப்பரன்ஸ் குடுங்க.. ஆசனங்கள் 960ம் அம்பலவாணன் தான் ஆகமத்தில் யோகபாதத்தில் தௌிவாக விளக்குகின்றார்.

ரொம்ப தௌிவா செயல்முறையாக வலது கையை எடுத்து இடது காலின் மீது வைத்து, இந்த மாதிரி செய்முறை நுட்பமாக இடது கை மூலமாக வலது நாசியை மூடி, செய்முறை விளக்கமாக, குனிந்து இரு பாதங்களையும் இரு கைகளால் பற்றி என்கின்ற எப்படி என்கின்ற செய்முறை விளக்கமாக 960 ஆசனங்களையும் யோகபாதத்தில் தான் எம்பெருமான் தௌிவாக விளக்குகின்றார்.

இத்துணை தௌிவாக எம்பெருமான் ஆகமத்திலே விளக்கி இருக்க ஏன் ஆகமத்தின் யோகபாதம் பதஞ்சலியின் யோகத்தை போல உலகம் முழுவதும் பரவவில்லை? ஏன் உலகம் முழுவதும் யோகம் என்றாலே பதஞ்சலியை மட்டுமே கோள்காட்டுகிறார்கள்? அஷ்டாங்க யோகத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள் காரணம் என்ன?

‘‘ஐயா! பத்தாவது படிச்சிட்டாலே பதஞ்சலி புக்க புரட்டி க்ளாஸ் எடுத்தலாம் ஆனால் யோகபாதம் சொல்லணும்னா தானே சிவத்தை தன்மயமாய் உணர்ந்திருக்க வேண்டும் ஐயா!’’

ஆசிரியர்களோ ஆச்சாரியர்களோ பதஞ்சலியை பட்டவர்த்தனமாய் பாருக்கெல்லாம் சொல்லி விடுவது சாத்தியம். ஆசிரியர்களோ ஆச்சாரியர்களோ பட்டறிவு இல்லாது வெறும் சுட்டறிவு வைத்தே பாருக்கெல்லாம் பதஞ்சலியை பரப்புவது சாத்தியம். பட்டறிவு படிப்பறிவு வைத்தே பதஞ்சலியை பார்க்கச் செல்வது சாத்தியம்.

ஆனால் சதாசிவன் சங்கரனின் யோகபாதமோ தானே அனுபவித்து தன்மையமே சிவமயமாய் சுத்தாத்தைத நிலையில் இருக்க இருப்பின் வலிமையினால் தீக்ஷையளிக்க மாத்திரமே ஆகமத்தின் யோகபாதம் அனுபுதி சத்தியமாய் மாறும்.

ஆகமத்தின் யோகபாதத்தில் அடிப்படையானதேவை தானே புரணத்துவம் அடைந்த, ஞானமடைந்த சித்தத்தை சிவன்பாலே வைத்து ஆண்பாலும் பெண்பாலும் அலிப்பாலும் கடந்து சிவன்பால் குடித்தவர்கள். சித்தத்தை சிவன்பால் வைத்ததனால், ஆண்பால் பெண்பால் அலிப்பால் எனும் முப்பாலும் கடந்து, அப்பாலும் இருந்து சிவன்பால் குடித்த சித்தத்தினருக்கு சுத்தாத்வைத நிலையில் சிவனோடு நின்றிருக்கும் நிலையில் இருப்பவர்களால் மட்டும்தான் சுத்தாத்வைதத்தில் தீக்ஷை அளிக்கமுடியும்.

அந்த தீக்ஷை சக்தி பாதம் எனப்படும் தீட்சை சுத்தாத்வைத சம்பிரதாயத்தின் அடிப்படை, யாரால் அந்த தீக்ஷையை அளிக்கமுடிகின்றதோ அவர்களால்தான் இந்த சக்தியை வௌிப்படுத்தவும், சக்திகளை வௌிப்படுத்தும் அறிவியிலை வௌிப்படுத்தவும், சக்திகளை வௌிப்படுத்தும் அறிவியலை வௌிப்படுத்தி நெறிப்படுத்தவும், சக்திகளை வௌிப்படுத்தும் அறிவியலை வௌிப்படுத்தி நெறிப்படுத்தி, வௌிப்படுத்தி நடைமுறைப்படுத்தியும் ஆக்க முடியும்.

சித்திக்கும் சக்திக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. சாதாரண அல்ல மிகப்பெரிய வித்யாசம் உண்டு.

சித்தி வலியின் வலிமையால் வருவது, சக்தி சத்குரு ஞானத்தால் அளிப்பது. இரண்டுத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. சுத்தாத்வைத சுகபோத அனுபவத்திலிருந்து வௌிப்படுவது சக்திகள்.

மிகத்தௌிவாக எப்பெருமான ஆகமத்தில் விளக்குகின்றார் ‘சிவோகம்’ எனும் அனுபூதி நிலைக்குள் நிலைபெற்று இருப்பவர்கள்தான் முதல்நிலை சிவதீக்ஷைகூட அளிக்க முடியும்.

சிவோஹம் என்னும் உணர்வுடன் எண்ணத்துடன் அல்ல பாவனையுடன் அல்ல உணர்வுடன் அனபூதியுடன் சந்தனத்தை இரண்டு கைகளிலும் ஏந்தி சிவதீக்ஷை துவங்கனும் என்று சொல்றாரு.

அனுபுதி தனக்குள் மலர்ந்து பொங்கி எழும்பொழுது மட்டுமே சுத்தாத்வைதத்தில் தீக்ஷை அளிக்கமுடியும். அதுபோன்று தீக்ஷை அளிக்கப்பட்டால் நேரடியாக சுத்தாத்வைதத்தின் விதை உங்களுக்குள் ஊன்றப்பட்டு உங்களுக்குள் இருந்து அந்த அத்வைத சத்தியத்தின் ஆழத்திலிருந்து அமானுஷ்ய நிகழ்வுகள் சக்திகளாய் வௌிப்பட்டுக்கொண்டே இருக்கும். அவைகள் சித்திகள் அல்ல சீடர்களே வாழுங்கள் ஆனந்தமாய் இவை சக்திகள்.

நம் பக்தர்கள் எல்லோருக்கும் நான் சொல்ல விரும்புவது எக்காரணம் கொண்டும் உங்கள் ஜீவன் முக்தப் பாதைக்குத் தடையாய் இருக்கும் எதையும் அனுமதிக்கவும் மாட்டோம் மற்றவர் அனுமதிக்க அனுமதிக்கவும் மாட்டோம். அனுமதிக்கவும் மாட்டோம் மற்றவர் அனுமதித்தில் அமைதிகாக்கவும் மாட்டோம். சித்தி வேறு சக்தி வேறு. சித்தி வேறு சக்தி வேறு.

ஒரு குரு எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று மிகத்தௌிவாக எம்பெருமான் ஆகமத்தில் விளக்குகிறார், தனக்கே அனுபூதி உடையவராக அனுபூதி இல்லாத பண்டிதர்களிடமிருந்து நீங்கள் எதையும் பெற முடியாது, ஏட்டுச் சுரக்காய் கறிக்கு ஆகாது அனுபூதி இல்லாத பண்டிதர்களிடமிருந்து நீங்கள் எதையும் பெறமுடியாது.

வெறும் சாத்திரத்தை படித்தவர்களுக்கு உங்களுக்கு அதை வாழ்வியல் சுத்திரமாய அளிக்கத் தெரியாது, வெறும் தோத்திரத்தை படித்தவர்களுக்கு அதை அனுபூதியாய் உங்களுக்குள் மாற்ற தெரியாது. வெறும் பண்டிதர்களிடமிருந்து, அனுபூதி இல்லாத வெறும் பண்டிதர்களிடமிருந்து எதையும் பெற முடியாது.

ஆத்மப் பிரமாணம் - தன்னுடைய அனுபுதியை தௌிவாக உணர்ந்தவராய் இருத்தல் வேண்டும். அடுத்தது அது வெறும் அனுபுதி பத்தாது, அது வெறும் அனுபுதி போதாது, சாஸ்திரப்பிரமாணம் - முன்னோர்கள் அவர்களுடைய ஆத்மப்பிரமாணங்களையெல்லாம் வகுத்து தொகுத்து நெறிப்படுத்தி நமக்கு அளித்திருக்கின்ற சாஸ்திரப் பிரமாணம் தன்னுடைய ஆத்மப் பிரமாணத்தை சாஸ்திரப்பிரமானத்தோடு ஒத்து இரண்டையும் தௌிவாக வௌிப்படுத்தப்படும் சத்தியங்களையே சாக்ஷிப்பிரமாணமாக மாற்றுபவரே குரு.

சில நேரத்தில் சில பேருக்கு அவர்களுக்கு ஒருவேளை ஏதாவது ஓரிரண்டு அனுபூதிகள் இருக்கலாம் இல்லைன்னு சொல்லல, ஆனால் அந்த அனுபுதி அவர்களுக்கு மட்டும் நல்லது. அதை உலகத்திற்கு கொடுப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது ஏனென்றால் மற்றவர்களுக்கு அது நல்லதா? கெட்டதா? என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு மட்டும் உணவாக இருக்கின்றது என்று மற்றவர்களுக்கு விஷமாகவும் வாய்ப்புண்டு. உதாரணத்துக்கு ஒரு குரு அவருடைய தேடுதல் காலத்துல அசைவ உணவு இல்லாமல் மது மாமிசம் இரண்டையும் விட்டு ஒருவேளை கிடைக்காத காரணத்தால்கூட இருக்கலாம் விட்டு ஏதோ சில யோகங்களை பயின்றார், ஏதோ ஓர் இடத்தில் அவருக்கு ஏதோ ஒரு அனுபவம் கிடைத்தது அதை நேரடியாக உலகத்திற்கு சொல்ல ஆரம்பிக்கும்பொழுது, அவர் பயின்ற சில யோகங்களையும் கிரியைகளையும் மட்டும்தான் சொல்வாரே தவிர, மதுமாமிசங்கள் இல்லாமல் இருந்தது அவருக்கே தெரியாமல் நடந்த செயல் என்பதனால் ஒரு முக்கியமான தேவை என்பதை மற்றவர்களுக்கு சொல்லித்தர மறந்து இருக்கவும் வாய்ப்புண்டு. அது ஒருவேளை தேவையில்லாத விதி என்று நினைக்கவும் வாய்ப்புண்டு.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், வாரத்திற்கு 3 முறை மது அருந்தும் மனிதன் சிரசாசனம் செய்வானேயானால். ் நிச்சயமாக மனச்சிதைவிற்கு ஆளாவான்.

மாமிச உணவருந்தும் மனிதன் பஸ்த்ரிகா போன்ற கிரியைகளையோ தௌதி போன் வயிற்றை சுத்தமாக்கும் கிரியைகளையோ செய்தால், மிகுந்த வியாதிகளுக்கும் பக்கவிளைவுகளுக்கும் உள்ளாவான்.

சில குருமார்கள் இந்த மது மாமிசத்தை தவிர்த்தல் போன்ற விஷயங்களை இதுபோன்ற சில யோகத்திற்கான தேவைகளை சாஸ்திரங்களை படிக்காததனால் அது தேவை என்று தெரியாமல், தன்னுடைய ஆத்மப்பிரமாணத்தை மட்டுமே சாட்சியாக வைத்துக் கொண்டு சாஸ்திரப்பிரமாணத்தை சாதாரததனால் பக்கவிளைவுகளையும் பின்விளைவுகளையும் ஏற்படுத்துகின்ற செயல்களை அறியாமையின் காரணமாக பலருக்கும் பரப்பி, பலரையும் உடல் மன நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டாக வேண்டும்.

குருடன் குருடனுக்கு வழி காட்டியது போலே, ஒருவேளை அவர்கள் அனுபூதியைப் பெற்றிருந்திருக்கலாம், ஆனால் எந்தெந்த முறையில் அந்த அனுமதி மற்றவர்களுக்கு உபயோகமாகும்? எப்படி அது மற்றவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்? என்கின்ற தௌிவு தன்னுடைய ஆத்மப்பிரமானத்தை சாஸ்திரப் பிரமாணத்தை வைத்து ஒப்பிட்டுப் பார்க்க மட்டுமே இயலும், ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே இயலும். சாஸ்திரப்பிரமாணம் எனும் அமிலத்தை வைத்து, ஆத்மப்பிரமாணத்தை முழுமையாக உருக்கிப்பார்த்தாக வேண்டும்.

தங்கத்தை புடம் போடுவது போல சாஸ்திரப் பிரமாணத்தின் மூலமாக ஆத்மப்பிரமாணத்தைப் புடம் போட்டு எஞ்சிய சுத்தத் தங்கம்தான் சாட்சிப்பிரமாணமாக மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

சாஸ்திரப் பிரமாணத்தால் புடம்போடப்படாத தங்கம், சில நேரத்தில் பங்கமாய் போய் முடியலாம். 24 22 கேரட் தங்கம் என்று சொல்லலாம் இரண்டு கேரக்டர் தங்கம் என்று சொல்லமுடியாது பங்கம்னுதான் சொல்லணும்.

தங்கம் 2சதவிகிதம் தகரம் 98 சதவிகிதம் இருந்தா அதை தங்கம் என்று சொல்ல முடியாதப்பா பங்கம் என்றுதான் சொல்லவேண்டும்.

பங்கத்தை நகையாக்கி அங்கத்தில் சார்த்திக் கொண்டு அலையும் மூடர்களே! என் அங்கத்தில் இருக்கும் தங்கத்தை மட்டுமே விமர்சிக்க தெரிந்த மூடர்களே! சாஸ்திரப்பிரமாணம் எனும் அமிலம் கொண்டு ஆத்மப் பிரமாணம் எனும் தங்கத்தை புடம்போட, பொங்கி வௌிவரும் சுத்தத்தங்கத்தை மாத்திரம் சொக்கத்தங்கத்தை மாத்திரம், சாக்ஷி பிரமாணமாக மாற்றுவதே, சாக்ஷி பிரமாணமாக அளிப்பதுதான் ஒரு குருவின் வேலை.

ஆத்மப்பிரமாணத்தை சாஸ்திரப்பிரமாணம் எனும் அமிலத்தில் புடம் போட்டு அதை சாக்ஷி பிரமாணமாக மாற்றி அளிப்பவரே குரு!

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் வெறும் சாஸ்திரப் பிரமாணம் மட்டுமே தெரிந்த ஆத்மப் பிரமாணம் தெரியாத, ஆத்மப் பிரமாணம் இல்லாத பண்டிதர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது ஏதோ ஓரிரு அனுபவங்கள் நடந்து, ஆத்மப் பிரமாணம் மட்டும் இருந்து, சாஸ்த்ரப் பிரமாணம் இல்லாத அகங்காரிகளிடமிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.

காரணம் என்னன்னா? எந்த சுழலில் அவர்களுக்கு அனுபூதி நடந்ததோ அந்த சுழலை அதே சுழலை மற்ற எல்லோருக்குள்ளும் உருவாக்க செய்கின்ற அறிவியல் அவர்களுக்குத் தெரியாது. ஏனென்றால் அவர்களுக்குள்ளேயே அது விபத்தாகதான் நடந்தது!

விபத்தாய் நடந்தோரிடம் சென்று கற்பது அபத்தாய் முடியும் விபத்தமாய் யாருக்குள் அது நடந்ததோ அவர்களிடமிருந்து சென்று கற்பது அபத்தாமாய் முடியும்! விபத்தாய் நடந்தாலும் அதன் அறிவியலை உற்றாய் உருக்கி, சாஸ்த்ரப்பிரமாணத்தை சற்றாய் முழுமையாய் உணர்ந்து உங்களோடு பகிர்ந்து கொண்டால் அது உங்கள் வாழ்க்கையை மலரச் செய்யும்.

தயவுசெய்து எந்த ஆன்மீகமான ஆன்மீகம் சார்ந்த கலைகளாயினும் சரி, யோகமாகட்டும், ஜோதிடமாகட்டும் வாஸ்து ஆகட்டும், சித்தா மருந்துகள் ஆகட்டும், ஆயுர்வேத மருந்துகள் ஆகட்டும், இந்திய ஆன்மீகம் சார்ந்த எந்த காலையாகட்டும் தயவுசெய்து தயவுசெய்து மூல சாத்திரங்களை முழுமையாய் படித்தவர்களிடமிருந்து தன் அனுபுதியை உணர்ந்தவர்கள் இந்த இரண்டு தகுதியும் உடையவர்களிடமிருந்து மட்டும் தயவு செய்து கேளுங்கள்.

பல பேர் என்கிட்ட வந்து கேட்கிறதுண்டு ஜோதிடம் உண்மையா? நூன் சொல்றதுண்டு உண்மைகிடையாது ஒரு அறிவியல்! அப்ப யார்கிட்ட போறது? ஒரே விடை எந்த ஜோதிடரிடம் செல்லலாம் எந்த வாஸ்து அறிஞரிடம் செல்லலாம் எந்த நியுமராலஜி கலைஞரிடம் செல்லலாம் என்று என்னிடம் கேட்கும் எல்லோருக்கும் நான் அளிக்கின்ற ஒரே விடை ஆழ்ந்து கேட்டுக்கொள்ளுங்கள், யாரெல்லாம் அந்தக் கலையின் மூலம் சாத்திர நூல்களை கற்று உங்களுக்கு மூல சாத்திர நூலை மேற்கோள்காட்டி, உங்களுக்கு உரிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு தௌிவுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களிடம் எல்லாம் என்று சென்று ஆலோசனைகளை பெற்று பலன் பெறுங்கள்.

நிறைய பேரு, டாக்டருக்கு 5 வருஷம் அசிஸ்டன்டா இருந்து கால்வலிக்கு கருப்பு மாத்திர, வயித்து வலிக்கு வௌ்ள மாத்திரை, தலைவலிக்க பச்ச மாத்திர, முதுகு வலிக்கு மஞ்சள் மாத்திரை, மாத்திர கலர தெரிஞ்சி வெச்சிகிட்டு அதையே சுத்திரமாவும் எழுத ஆரம்பிச்சு, திடீர்ன்னு டாக்டர் செத்து போயிட்டாரு வேறு எந்த தொழிலுக்கு எனக்கு என்னடா தொழில் தெரியும்? ஒரு பத்து ஊரு தாண்டி போர்டப் போட்டு இவரையே டாக்டராக்கிக்கிட்டு. வர்றவங்க போறவங்களுக்குகெல்லாம் தலை வலிக் பச்ச, கால் வலிக்கு கருப்ப வயித்து வலிக்கு மஞ்சள், முதுகு வலிக்கு வௌ்ளைன்னு அதே சுத்திரத்தை இவரும் செய்ய ஆரம்பிச்சா.. ஆமா! கொஞ்ச நாள் ஓடும் மருந்து கம்பெனிகாரன் கலரை மாத்தாத வரைக்கும், மருந்து கம்பெனி காரங்க மருந்தோட சாயத்தை மாத்தினா இவரு சாயம் வெளுத்துவிடும்.

ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள் ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து யோகம், சித்தா, ஆயுர்வேதம் இவை எல்லாம் மிகப்பெரிய வைதீக அறிவியல், வைதீக அறிவியல்.

யாரெல்லாம் மூல சுத்திரங்கள், மூல சாத்திரங்களை சொல்லி அதைச் சார்ந்து உங்களுக்கு ஆலோசனைகளையும் அறிவுரையையும் அளிப்பதற்கு சக்தியுடையவர்களாக தௌிவுடையவர்களாக புத்தி உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களிடம் இருந்து எல்லாம் பலனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

தன்னுடைய அனுபுதியை ஆத்மப்பிரமாணத்தை சாஸ்த்ரப்பிரமாணம் எனும் அமிலத்தால் புடம்போட்டு புடத்தில் எஞ்சியிருக்கும் சுத்த அத்வைத அனுபவத்தை, சுத்தப்பிரமாணத்தை சாக்ஷி பிரமாணமாக உங்களுக்கு அளிக்க வல்லவர்களே குரு.

ஐயா ஒரு விஷயம் சொல்றங்கையா, இந்து மதத்திலே யாருமே எதுவுமே புதுசா எதையும் கண்டுபிடிக்க முடியாது, தேவையும் இல்ல. சதாசிவனை விடவும் இவர்கள் வாழ்க்கையில் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. சாஸ்த்திரங்கள் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு தன் அனுபூதி மாத்திரமே பிரமாணம் என்று நினைத்து யோகத்தையும் ஞானத்தையும் உலகத்திற்கு அளிக்க முயற்சிப்பவர்கள், அவர்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ மனித இனத்திற்கு மிகப்பெரிய கொடுமை செய்து, மக்களுக்கு பல்வேறு விதமான உடல் மன வியாதிகளையும் பிரச்சனைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எந்த யோகத்திற்கும் யோகா வகுப்பு, யோகா கிளாஸ், தியானம் கிளாஸ், மெடிடேஷன் கிளாஸ், எங்க போனீங்கன்னாலும் சொல்லித்தருபவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி எந்த சாத்திரத்தின் அடிப்படையில், எந்த சாஸ்திரப் பிரமாணத்தின் அடிப்படையில் இந்த சத்தியங்களை எங்களுக்கு சொல்லித் தருகிறீர்கள்?

எந்த சாஸ்திரத்தைப் பிரமாணமாக வைத்தும் அவர்கள் சொல்லித் தருகின்ற விஷயங்கள் இல்லை என்று சொன்னால் அவர்களுடைய சொந்த அனுபவம் மட்டும்தான் என்று சொன்னால் நீங்கள் சாப்பிடுவது காக்கா பிரியாணியாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்!

கத்தும்பொழுது ஏன் காக்காய் சத்தம் வருகிறது என்று ஆராய்ந்தால், காக்கா பிரியான சாப்பிட்டால் குயில் சத்தமா வரும்?

சாஸ்த்ரப்பிரமாணமாக மூல சுத்திரங்கள், ஜோதிடத்திற்கு வராஹமிஹ்ரரின் சுத்திரங்கள், ஆயுர்வேதத்திற்கு சுஸ்ருதர் சரகரின் சுத்திரங்கள் யோகத்திற்கு சதாசிவன் ஆதி குருநாதன் சதாசிவன் ஆகமங்கள் மூலமாக அருளிய யோகபாத சுத்திரங்கள், இதுபோன்ற மூல நூல்கள், மூல சுத்திர நூல்கள் சாஸ்த்ரப் பிரமாணமங்கள் இவைகளை சார்ந்து ஞானத்தை உங்களுக்கு அளிப்பவரிமிருந்து மட்டுமே கற்றுக் கொள்ளுங்கள்.

அவைகளை சார்ந்தே உங்கள் ஆன்மீக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் அவைகளை சார்ந்தே உங்களுடைய வாழ்க்கையை மலர வைத்துக் கொள்ளுங்கள்.

சாஸ்த்ரப் பிரமணாத்தை வைத்து ஆத்மப்பிரமணாத்தோடு புடம்போடும்போது வரும் சுத்தப் பிரமாணம் மற்றவர்களுக்கு சாக்ஷி பிரமாணமாக எடுத்துச் செல்லப்படும் பொழுதுதான் ஞானம் மலர்கிறது. சுத்தாத்வைத சைவம் அனுபூதியாக மாறுகின்றது.

இந்த சுத்தாத்வைத சைவத்தின் அறிவியலே கல்பதரு அறிவியல். இந்த கல்பதரு அறிவியல் நம் எல்லோருக்கும் பலன் தருமா? அல்லது இதற்கென்று ஏதேனும் சிறப்புத் தகுதி இருக்கின்றதா? விசேஷமான செய்முறைகள் செயல் முறைகள் இருக்கின்றனவா? யாருக்கு இது பலம் தரும்? யாருக்கு இது பலன் தரும்? பலம் வேறு பலன் வேறு! பலம் நல்லதாய் மட்டும்தான் இருக்க முடியும், பலன் கெட்டதாயும் இருக்க முடியும்.

பலம் வேறு பலன் வேறு! பலனில் நற்பலன் தீயபலன் என்று இரண்டும் உண்டு. பலத்தில் நற்பலம் தீயபலம் கிடையாது. பலம் நன்மையே செய்யும் பலன் இரண்டும் உண்டு

இது யாருக்கு? இதை எப்படி அனுமதி ஆக்கிக் கொள்வது? நடைமுறை சாத்தியமா என்கிற கேள்விகளோடு இருக்கும் எல்லோரும் வாருங்கள் பெங்களுர் ஆதீனத்திற்கு

ஆகஸ்ட் 13ம் 14ம் நித்ய தியான யோகம் உங்களுக்காகவே! முதல் நிலை சிவதீட்சையும் உங்களுக்காகவே!

ஆலயம் சென்று சதாசிவனை தொழுது, அழுது, வழிபட்டு, உடலெல்லாம் தரையில் புரள அங்கப்பிரதட்சனம் செய்து வழிபடுகின்ற கோடிக்கணக்கான பக்தர்களுக்குக்கூட தெரியவில்லை பெருமானே திருவாய் மலர்ந்து அருளிய யோகமுறைதான் ஆகமத்தில் இருக்கும் யோகபாதம். பெருமானை வழிபடுவது மாத்திரமல்லாமல் அவர்காட்டிய வழி-படுவதுதான் முழுமையான சைவம்.

சிவனை வழிபடுவது மட்டுமல்ல, சிவன் காட்டியி வழி படுவது! வழிபாடு மட்டுமல்ல, அவன் காட்டிய வழிபடுங்கள், அதுவே முழுமையான சைவ வாழ்க்கை. அதுவே முழுமையான சைவம். சிவனை வழிபட்டு, அவன் காட்டிய வழியும் பட்டு சுத்தாத்வைதத்தை வாழுங்கள்!.

இன்றைய சத்சங்கத்தின் சாரம், ஆத்மப்பிரமாணம் சாஸ்த்ரப்பிரமாணம் கற்றவர்களிடமிருந்து மட்டுமே சாட்சிப்பிரமாணமாக ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்!.

கங்கை கிடைக்கவில்லையென்றால் காத்திருங்கள், சாக்கடையை அருந்தாதீர்கள்! என்றேனும் நீங்கள் கங்கையைத் தொடமுடியவில்லையென்றாலும் கங்கை வந்து உங்களைத் தொடுவாள். கங்கையைத் தொடமுடியாத காரணத்தால் சாக்கடையை குடித்தாள் சீக்கடையில் விழுவீர்கள். பூரணமாக சுத்தாத்வைத சைவத்தை வாழ்ந்து நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தத்தில் கரைந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றோம்! நன்றி ஆனந்தமாக இருங்கள்!.



Photos From The Day:


Aadi Shaivam - Tamil Evening Satsang

Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Participants are in deep listening of the spiritual secrets. Participants are in deep listening of the spiritual secrets. Participants are in deep listening of the spiritual secrets. Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang