December 31 2015
Title:
ஆதி சைவம், கண்ணப்பனின் பக்தி (Aadhi Saivam, Kannapa's Devotion)
Link to Video:
Video | Audio |
Link to Video:
Nithyananda Times, 31st December, 2015 The Daily Video Magazine of the Nithyananda Sangha
Transcript in Tamil
ஆதி சைவம், கண்ணப்பனின் பக்தி ாவவிள:ஃஃலழரவர.டிநஃ1ஒஒணுபுஒணு0ரந0
உலகத்துல மனிதர்கள் மேம்படுவதற்காக மனிதர்கள் உயர்நிலை அடைவதற்காக பல்வேறு விதமான மதங்கள் சம்பிரதாயங்கள் ஆன்மீக வழிகாட்டிகள் குருமார்கள் பாரம்பரியங்கள் இனங்கள் வழிபாட்டு, முறைகள் எத்தனை எத்தனையோ உருவாக்கி உருவாகியிருக்கு உருவாக்கப்பட்டிருக்கு.
இது எல்லாத்தோட சாரமே பார்த்தீங்கன்னா நம்ம உணர்வுகுள்ள நஞ்சாய் இருக்கிற நெஞ்சை பஞ்சாய் மாற்றுவது.
ஒருத்தருடைய செல்வ வளத்தை மட்டும் பார்த்து அதற்கு அவர் செய்த தியாகம் உழைப்பைப் பார்க்காவிட்டால் அவருடைய உழைப்பைப் பார்க்காவிட்டால், அதாவது அவருடைய உழைப்பைப் போற்றாமையால் வருவது பொறாமை.
ஒரு செல்வந்தர் வாழ்க்கையில் ஒரு பார்த்தீங்கன்னா ஒரு பெரிய நிலையில் இருக்கிற பார்த்தீங்கன்னா அதுக்கு அவர் பட்டிருக்கிற கஷ்டத்தைப் பார்க்காமல் விட்டீங்கன்னா, அவர் பட்ட கஷ்டத்தை போற்றாமல் விட்டால் அவர் செல்வத்தை மட்டும் பார்க்கின்ற மனத்தால் வருவது பொறாமை. போற்றாமையால் வருவது பொறாமை.
அவர் அதற்காக செய்திருக்கின்ற தியாகத்தைப் பார்த்தீங்கன்னா வர்றது இன்ஸ்பிரேஷன். அவரை ஒரு நபரை பார்க்கும் பொழுது இவ்ளோ வச்சிருக்காரு அப்படீன்னு மட்டும் பார்த்தீங்கன்னா பொறாமை. ஓ! அதுக்கு இவ்வளவு தியாகம் பண்ணி இருக்கான்னு பாத்தீங்கன்னா உத்சாகம். நஞ்சு நினைவுகள் பஞ்சு நினைவுகளாய் மாறுதல்.
ஒரு நபரை உங்கள் உடமையாக்கிக் கொள்ள நினைத்தால் அது காமம். உங்கள் வாழ்க்கையின் பாகமாக்கிக்கொண்டால் அது காதல்.
ஒவ்வொரு உணர்விலும் அதனுடைய சுக்ஷ்மமான மலர்ந்த நிலையை அடைய வைப்பதற்குத்தான் எல்லா மதங்களுமே!
மண் தாமரையாய் மலர வேண்டும். மூலப்பொருள் சேறு, மண்தான். அதிலிருந்துதான் செந்தாமரை மலர்கிறது.
மூலப்பொருள் காமம்தான் அதிலிருந்துதான் காதல் மலர்கிறது அன்பு மலர்கிறது. மூலப்பொருள் பொறாமைதான் அதிலிருந்துதான் உத்சாகம் மலர்கிறது.
மூலப் பொருளாக இருக்கின்ற உணர்ச்சிகளிலிருந்து முழுமையின் வௌிப்பாடாக இருக்கின்ற உணர்வுகளை மலர வைப்பதுதான் எல்லா மதங்களின் சாரமும் எல்லா மதங்களும் எல்லா ஆன்மீகமும் இதோட சாரம் என்னன்னா? சுயற -ஆன ாரஅயெ நஅழவழைளெ சைிநன ஆன ர்ரஅயெ வைெநடடபைநெஉந ஆ மலர வைக்கிறது.
சுயற -ஆன ாரஅயெ நஅழவழைளெ கநயச டரளவ இது மாதிரியான காமம் பயம் பொறாமை இதுமாதிரியான சுயற -ஆன ாரஅயெ நஅழவழைளெ சைிநன ஆன பழுத்த உணர்வுகளான இனிமையான அன்பு, இனிமையான உற்சாகம், மலர்ந்த தியாகம் இதுமாதிரி உயர்ந்த உணர்வுகளாக மலர வைப்பது தான் எல்லா மதத்தின் சாரமும், எல்லா ஆன்மீகத்தின் சாரமும்.
இதை மலர வைக்கிற இந்த யடஉாநஅல நடத்துற இந்த ஞான ரசவாதத்தை நடத்தற ஏஜென்ட் கெமிஸ்ட்ரில சொல்வோம் யடஉாநஅல ஏஜென்ட் அந்த ஏஜென்டதான் பக்தி.
நல்லா புரிஞ்சுக்கோங்க காமத்தை மிக உயர்ந்த அன்பாக மாற்றுகிற காமம் என்கிற நிலையிலிருந்து மிக உயர்ந்த அன்பாக வைக்கிற அந்த ஞான ரசவாத நிகழ்ச்சியிடைய வேதிப்பொருள் பக்தி.
போற்றாமையால் வருகின்ற பொறாமையை உற்சாகம் என்கின்ற உயிர் உணர்வாக மாற்றுகின்ற ஞான வேதிப்பொருள் பக்தி.
சுயற நஅழவழைளெ அ சுயற -ஆன உணர்ச்சிகளை மலர்ந்த உணர்வாக மாற்றுகிற இந்தக் காரணி பக்தி. அதனாலதான் எல்லா சம்பிரதாயங்களும் பக்தியை தங்களுடைய சம்பிரதாயத்தின் முக்கியமான பாககமாக யுஸ் பண்ணுவாங்க.
பக்தி ஆன்மீக வாழ்க்கையில் ஒரு அடிப்படையான ஞான வேதிப்பொருள்.
ளிசைவைரயட யடஉாநஅல யபநவெ ஒரு மனிதனுக்குள்ள சேற்றில் ஒரு செந்தாமரை கிழங்கின் வேறைப் போட்டீங்கன்னா சில மாதங்கள் தாமரை புத்துக்குலுங்கறமாதிரி உங்களுக்குள்ள என்ன சேரிருந்தாலும் சரி பக்தி என்கிற அந்தச் செந்தாமரை வேறை போட்டீங்கன்னா வாழ்க்கையே ஞானத்தால் புத்துக்குலுங்கும்.
இந்த பக்தியை மலர வைக்கிறதுக்கு பல்வேறு சம்பிரதாயங்களும் பல்வேறு முறைகளை கடைபிடிக்கின்றனர்.
ஒருமுறை வந்து நல்ல கருத்துக்களை சொல்லுகிற ஞானக்கருத்துகளை சொல்கிற புத்தகங்களை படித்து, அந்த ஞானக்கருத்துக்களை கடைபிடிக்க முயற்சி செய்து, அதனால் உருவாக்கப்படும்.
அதனாலதான் இன்னைக்குக் காலைல சொன்னேன்.. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் பக்தி அது மனப்பழக்கம். சிந்தனையாலும் செயலாலும் பக்தியை உருவாக்குவது. அது ஒரு பரம்பரை அது ஒரு சம்பிரதாயம், பல சம்பிரதாயங்கள் இந்த முறையை உபயோகப்படுத்துவார்கள்.
ஆழந்து கேளுங்க.. இன்னும் சில பாரம்பரியங்கள் அந்த உயர்ந்த உணர்வுநிலை மலர்வதற்கான யோகங்கள் தியானங்கள் இதை எல்லாம் செஞ்சு குண்டலினி சக்தி விழிப்படைய வச்சி அதனால பக்தியைப் பொங்க வைப்பாங்க. அது ஒரு சம்பிரதாயம்.
இன்னும் சில சம்பிரதாயங்களை தொடர்ந்து பக்தியில் பழுத்த அடியார்களுக்கு சேவை செய்து அவர்களுடைய கதைகளை எல்லாம் படித்து சிந்திப்பதன் மூலம் பக்தியை மலர வைப்பாங்க அது ஒரு சம்பிரதாயம்.
நான் சொல்ற இந்த ஒவ்வொரு சம்பிரதாயமே எல்லா மதத்திலுமே இருக்கும்.
எல்லா மதத்திலும் இந்த நான் சொல்ற ஒவ்வொரு சம்பிரதாயமும் இருக்கும். ஏன்னா எல்லா மதங்களுடைய அடிப்படையான பார்முலா சுத்திரத்தை நான் இப்ப உங்களோட பேசிட்டு இருக்கேன். அதாவது ஞானக்கருத்துக்கைள சிந்தித்து செயல்படுத்தி அதனால் பக்தியை மலரச்செய்தல், யோகம் தியானம் கிரியை போன்றவைகளை செய்து அதனால் பக்தியை மலரச்செய்தல், ஏற்கனவே பக்தி நிலையை அடைந்த பக்தர்கள் ஞானிகள் குருமார்கள் கதைகளைப்படித்து அவர்களுக்கு சேவைகள் செய்து, அவர்களைப் போன்றவர்களுக்கு சேவைகள் செய்து அன்னதானம் செய்து, பல்வேறு தொண்டுகள் செய்து அதனால் பக்தி வளர வைக்கிறது, மலர வைக்கிறது.
ஆனா இந்த எந்த பாரம்பரியமான முறையும் இல்லாமல் கண்ட மாத்திரத்தினாலேயே தன் உயிரே உலுக்கி, தன் உயிலே உலுக்கப்பட்டு ‘தான்’ என்று எதை ஒருவன் நினைக்கிறானோ அதையேத் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கின்ற அந்த ஸ்பான்டேனியஸ் பக்தியின் வெடிப்பு கண்ணப்பன் கதையில் மட்டுமே உள்ளது.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், ஞானசம்பந்தருக்கு சைவத்தை வாழ்ந்தார் என்பதால் சிறப்பு, சுந்தரருக்கு சைவத்தை பரப்பினார் என்பதால் சிறப்பு மற்ற மற்ற அடியவர்களுக்கெல்லாம் சைவத்தை வாழ்ந்ததால் சிறப்பு கண்ணப்பன் சைவத்திற்கு சிறப்பு.
மற்ற எந்த மதத்தவர்களாலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத கதாபாத்திரம் கண்ணப்பன். கண்ணப்பன் என்கின்ற ஒரே ஒரு கதாபாத்திரத்தில் மட்டும் கண்ணப்பன் கதையினால் மட்டும் சைவம் மற்ற மதங்களைவிட ஒருபடி உயர்ந்து நிற்பதனால் சைவத்துக்கு கண்ணப்பன் சிறப்பு.
பல மேடைகல்ல பட்டிமன்றம் போடுவாங்க, பெரிய புராணத்தில் பெருமான் சிறப்பைச் சொல்கிறாரா? அடியார் சிறப்பைச் சொல்கிறாரா? என்று. பெரிய புராணம் இல்ல மொத்த சைவ நூல்களை எடுத்தாலும், மொத்த சைவத்தையும் எடுத்தாலும், மொத்த சைவ சாஸ்த்திரங்கள், ஸ்தோத்திரங்கள், சுத்திரங்கள் அனைத்தையும் எடுத்தாலும் கண்ணப்பன் ஒருவன் சிறப்பிற்கு எதுவும் சமமில்லை.
கண்ணப்பனை மாதிரி ஒரு கேரக்டரை வேறு எந்த மதத்தின் குருமார்களாலும், கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இன்னமும் ராஜராஜன் கட்டிவைத்த தஞ்சை ஆலயத்தை வேறு ஒருவரால், கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை இன்னும் தலை நிமிர்ந்து நிற்கின்ற மிகப்பெரிய கிரானைட் கட்டிடன் உலகத்திலேயே அதுதான். இன்னமும் முறியடிக்கப்படாத சாதனை! அதேமாதிரி மகாபாரதம் ஒரு லட்சம் சுத்திரத்தோடு வியாசர் எழுதிவைத்த காப்பியம் இன்னமும் அதுல வருகின்ற கதாபாத்திரங்களை வேறொரு கலாச்சாரத்தில் வேறொருவர் யாராலும் கற்பனை செய்ய முடியவில்லை, அதனால் இன்னமும் உடைக்கப்படாத ரெக்கார்டா இருக்கு மகாபாரதம். அதேமாதிரி கண்ணப்பன் கேரக்டர் இன்னமும் மற்றும் இதற்குப் பிறகும் யாராலும் கற்பனை செய்து சொல்ல முடியாத, யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத கதாபாத்திரம்.
அதனால் கண்ணப்பன் ஒருவன் கதை உயிரோடு இருக்கும் வரை உயிரோடு இருப்பது மட்டுமல்லாது உலகின் எல்லா ஆன்மீகப் பாரம்பரியங்களின் தலைசிறந்த பரம்பரையாக பாரம்பரியமாக உயிரோடு இருக்கும்.
எல்லாப் பாரம்பரியத்திலையுமே இந்த 3 அநவாழன யுஸ்பன்னிதான் பக்தியை உருவாக்க முடியும். ஞானக்கருத்துக்களைப் படிச்சிப் பழகறது, இல்ல யோகம், தியானம் இவைகளைப் பண்ணிப் பழகறது. இல்ல ஏற்கனவே பக்தர்களாக இருந்தவர்களுடைய கதைகளைப் படிச்சிக் கேட்டு அவர்களுக்கு சேவை செய்து, பக்தி மலர்வது. இந்த மூன்று மட்டும்தான் உலகத்தில் இருக்கிற எல்லா மதத்திலும் பக்தி மலர்வதற்கான முறை, இப்படி மட்டும்தான் உலகம் பார்த்திருக்கிறது, இந்த மூன்றையும் இந்த மூன்று பாதைகளில் நடக்காத ஒரு பக்தனையோ ஞானியையோ, குருமாரையோ எந்த மதத்தாலும் நினைத்தும் பார்க்க முடியவில்லை, கற்பனையும் செய்து பார்க்க முடியவில்லை. அவர்களால் எந்த இடத்திலும் கற்பனை செய்து கதாபாத்திரத்தை வடிவமைத்து காட்ட இயலவில்லை.
ஆனால் இந்த இலக்கணங்களை எல்லாம் உடைத்து, இலக்கணங்களை உடைத்தவர்களின் தலைக்கனங்களை உடைத்து, தனக்கென்று ஒரு இலக்கணமே சொல்லமுடியாத தியாகத்தின் வடிவம்! சொல்லச் சொல்ல என நாக்கு மட்டுமல்ல நெஞ்சே இனிக்கும் பக்தியின் வௌிப்பாடு கண்ணப்பன்.
திருவாசகத்தை பெருமானே கைப்பட மாணிக்கவாசகர் சொல்ல, பெருமானே எழுதி கடைசியில் ‘வாதவுரன் சொல்ல அம்பலவாணன் எழுதியது’ என்று கையொப்பமிட்டு வைத்துச் சென்றார் என்று சொல்வார்கள்.
வாதவுரான் சொல்லி திருவாசகம் எழுதியபோது பெருமான் கண்கள் மலர்ந்தது கண்ணீர் பூத்தது. கண்ணப்பன் கதையை எழுதி இருந்தார்ன்னா கண்ல இரத்தம் வந்திருக்கும். அதனாலதான் எழுதல அவரு. திருவாசகம் வார்த்தைகள் நம் இதயத்தை கரையவைக்கும் அதனாலதான் ‘திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்’ என்று சொல்வாங்க ஆனா கண்ணப்பன் வாழ்க்கை நம் நெஞ்சை கரைய வைக்கும். கண்ணப்பனுடைய வாழ்க்கை திருவாசகம் நம் நெஞ்சைக் கரைய வைக்கும். கண்ணப்பனுடைய வாழ்க்கை திருவாசகங்களின் வாழ்க்கைக்குச் சமம். மாணிக்கவாசகர் வார்த்தையாக உதிர்த்தை கண்ணப்பன் வாழ்க்கையாக வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். அவனுக்கு வார்த்தை சொல்ல தெரியாமல் இருக்கலாம், ஆனால் வாழ்க்கையாக வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறான்.
பெரிய பெரிய ஞானக்கருத்துக்களையெல்லாம் படிச்சிட்டு, பிராக்டீஸ் பண்ணி பக்தி வர்ரது என்னங்கையாப் பெரிய விஷயம்? அதெல்லாம் படிச்சி பிராக்டீஸ் பண்ணி பக்தி வர்லன்னாத்தான் தப்பு. அதென்ன பெரிய விஷயம்? அதே மாதிரி தியான யோகம், மூக்கப்புடி நாக்கைப்புடி இதையெல்லாம் பண்ணி பக்தி வர்றத என்னையா? அதையெல்லாம் பண்ணி பக்தி வர்லனாதான் தப்பு. பெரிய பெரிய பக்தர்கள் கதையை கேட்டு அவர்களுக்கு சேவை பண்ணி, தரிசனம் பண்ணி அவர்கள் எல்லாம் பார்த்து என்ன பெரிய விஷயம்? அதெல்லாம் பார்த்த பக்தி வரலநா தான் தப்பு.
அப்பாரைப் பார்த்து அப்புதியடிகள் பக்தி செய்தார் அப்படி ஒன்றும் பெரிய விஷயமில்லை, அப்பரை மாதிரி ஒரு பர்சானிலிட்டிய பார்த்து பக்தி வரலனாதான் தப்பு.
ஆனால் எந்த சாஸ்திரமும் படிக்காமல் எந்த ஸ்தோத்திரமும் படிக்காமல் எந்த சுத்திரம் படிக்காமல் எந்த ஞானமும், யோகமும், பழகாமல் புத்தனைப் போல வாழ்க்கையில் ஏதோ ஒரு துக்கத்தை பார்த்துவிட்டு வாழ்க்கையை விட்டு ஓடாமல், வாழ்க்கையில் ஒரு துக்கத்தையும் பார்க்காத தேனும் தினைமாவும் பற்றியும், கண்ணில் பட்டதையெல்லாம் கொன்று உண்டு, தினவெடுத்த தோள்கள் திருமார்பும் வாய்த்து இளமையின் உச்சத்தில் பார்க்கின்ற பெண்ணோடெல்லாம் சல்லாபித்து, வாழ்க்கையின் உச்சத்தில் எந்த விதமான சமூகத்தினுடைய கட்டுப்பாடு ஒழுக்கம், கோப்பு என்பதையெல்லாம் பற்றி கவலைப்படாத, கேள்விப்பட்டிராத தோள் தினவெடுத்து நினைத்ததை செய்கின்ற சுதந்திரமான காட்டரசு வாழ்க்கை வாழுகின்ற திண்ணப்பன், அவன் ஒன்னும் பெரிய கலாச்சார ரீதியாக உணர்ச்சிகளை உணர்வா மாத்தணும் அப்படின்னு நினைக்கல, ஜீவன் முக்தி அடையனும்னு நினைக்கல, ஜீவன்முக்திக்காக சிவபுஜை பண்ணனும்-னு நினைக்கல. இல்ல கடவுள் உடல் நலம் கொடுப்பார், மன நலம்கொடுப்பார், நாம நினைக்கிற பண்ணிய சீக்கிரமா பிடிக்க ஹெல்ப் பண்ணுவாரு. இல்ல தேவையான வேட்டையைப் பிடிச்சிக்கொடுப்பாரு அதுக்காக பக்திப்பண்ணனும்னு நினைக்கல. இல்ல தன்னுடைய காமம் அன்பாக மாறனும், இல்லை பொறாமை உற்சாகமாக மாறனும், இல்ல பயம் தியாகமாக மாறனும் அப்படீன்ற பெரிய பெரிய கருத்துக்களாலெல்லாம் பக்தி பண்ணல.
அவனுக்கு தெரிந்ததெல்லாம் கண்ல எதுப்பட்டாலும் தன்னைப் பார்த்து புன்னகைச்சா நண்பண் இல்லன்னா எதிரி முடிச்சிரு. நண்பனைக் கூட வச்சுக்கோ எதிரி கொன்னு கூட்ல வச்சுக்கோ அவ்வளவுதான். வேறொன்றும் தெரியாது.
வாழ்க்கையில் துக்கம் என்கின்ற வார்த்தைக்கு பொருள் தெரியாதவன். உடலாலோ உள்ளத்தாலோ வலியைப் பார்த்திராதவன். இளமையின் உச்சத்தில் இருந்தவன் வயிற்றுப் பசிக்கு உணவு உடல் பசிக்குப் பெண்கள் என்று தன் வாழ்க்கையை தன் விருப்பத்தோடு வாழ்ந்தவன்.
எந்தவிதமான சமூகத்தின் நல்லது கெட்டது போன்ற விதிகளைப் பற்றி கவலைப்படாதவன். கலாச்சாரமான ஆன்மீக ரீதியான நூல்கள் சாத்திரங்கள் ஸ்தோத்திரங்களை பற்றி கேள்விகூட படாதவன். என்னதான் நடந்தது அவனுக்குள்ளே? ஏன் இந்த மாற்றம்? எப்படி அந்த திண்ணப்பன் கண்ணப்பனானான்?
சாஸ்திர அறிவு இல்லை, தோத்திரங்களும் சுத்திரங்களும் படித்ததில்லை வாழ்க்கையில் தன்மாத்திரமே உண்டு. வேறொன்றும் கண்டதில்லை கண்ப்பனுக்குள் என்ன நடந்தது? என்பது இன்னமும் எந்த சாஸ்திரத்திலும் எந்த புராணத்திலும் யாராலும் விளக்க முடியாத, யாராலும் வார்த்தை கொண்டு வரிக்க முடியாது சுட்சுமமாகவே இருக்கின்றது.
சிறுவயதிலிருந்து நம்முடைய பெற்றோரோ முன்னோரோ சிவபுஜை செய்து பார்த்து பழகி இருந்தால் லிங்கத்தை பார்த்தவுடன் பக்தி பொங்குவது இயற்கை.
ஆனால் இவனோ அதுபோன்ற ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை, அது போன்றதொரு பாரம்பரியத்திலிருந்து வந்தவனும் இல்லை எந்தவிதமான பின்புலமும் இல்லாதவன் தெரிந்ததெல்லாம் தேனும், தினைமாவும், மதுவும், மங்கையரும் உறக்கமே வாழ்க்கை. ஒரு துக்கம் இல்லை துக்கத்தால் ஏற்படுகின்ற உயர் ஆன்மீகத் தேடுதல் இல்லை.
தனக்கும் வருத்தமில்லைத் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் வருத்தமில்லை இப்படியாக இவன் வாழ்க்கை இருந்துகொண்டிருக்கிறது.
ஒரு நாள் வேட்டையைத் தேடி மான் பின்னால் ஓடுகிறான். மானைத் துரத்திக் கொண்டு இன்னொரு புலியும் வருவதைப் பார்க்கிறான், இரட்டை அம்புகளால் மான் புலி இரண்டையும் மறிக்கச் செய்தான், இரண்டையும் கொன்றுவிட்டு எதை முதலில் எடுக்கலாம் என்று நிமிர்ந்து பார்த்தபோது கண்ணில் பட்டது ஒரு சிவலிங்கம்! ஒரு முதியவர் லிங்கத்தின் அருகில் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருக்கிறார், அது என்னவென்று அவர் என்ன செய்கிறார் என்று எதுவும் தெரியாது. ஆனால் பார்த்தவுடன் ஏதோ இவனுக்குள் நிகழ்கிறது பார்த்தவுடன் இவனுக்கு ஏதோ நிகழ்கிறது இது என்ன கலைப்பொருளா? தெய்வமா? தெய்வம் என்னவென்று அடிப்படை அறிமுகம்கூட திண்ணப்பனுக்கு இல்லை. சில நேரத்துல சில விஷயங்கள் நமக்குள் ஒரு மிகப்பெரிய உணர்வு மாற்றத்தை உண்டாக்கும்.
எப்பவாவது வாழ்க்கையில் நீங்களும் அனுபவித்திருப்பீர்கள், அதாவது மாலை வேளையில் கடற்கரையில் சுரிய அஸ்தமனத்தை பார்க்கும்பொழுது தன்னையே, அறியாத தன்னையே மறந்த ஒரு நிம்மதி. அல்லது காலைவேளையில் மலை உச்சியில் சுரிய உதயத்தை பார்க்கும் பொழுது தன்னையே அறியாத ஒரு அமைதி.
சில நேரங்களில் உங்களை அறியாமலே சில காட்சிகள் உங்களுக்குள் உங்களுடைய ஆழமான உணர்வை தூண்டிவிட்டு உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்தது.
அந்த உணர்வுகள் அந்த இடத்தை விட்டு நீங்க போன உடனே போய்விடும், ஆனால் இந்த இடத்தில் அந்த சிவலிங்கம் அதன்முன் அமர்ந்து இருந்த வயோதிகர் செய்துகொண்டிருந்த செயல்கள் கண்ணப்பனுக்குள் ஏதோ ஒன்றை கிளப்பியது. கண்ணப்கனுக்குள் ஏதோ ஒன்றை கிளப்பியது.
சில நேரத்துல சில சுழல்கள் நமக்குள்ள பொங்க வைக்கிற உணர்ச்சிய தாங்க முடியாமல் அந்த இடத்தை விட்டு ஒதுங்கி போயிருவோம், முதல்ல கண்ணப்பனும் அதைத்தான் செய்தார்.
அந்த சுழல் இவருக்குள் எதையோ ஏற்படுத்தியது, எதையோ அடிவயிற்றிலிருந்து உயிரே உலுங்கியது. என்ன நடந்தது என்று திண்ணப்பனுக்கே தெரியவில்லை ஆனால் எதுவோ நடக்கிறது என்று மட்டும் தெரிகிறது. நடக்கின்ற நிகழ்வின் உணர்வின் தாக்குதலை தாங்க முடியாமல் அந்த இடத்தில் உட்காராமல் அந்த இடத்தில் நிற்காமல் கண்ணப்பன் அந்த இடத்தை விட்டு ஒதுங்கி செல்கின்றார். அப்ப திண்ணப்பன்னு பேறு ஒதுங்கிச் செல்கின்றார். ஒதுங்கிச் சென்றாலும் மனம் விட மறுக்கின்றது.
ஐயா! ஆழ்ந்து புரிஞ்சிகோங்க.. சில நேரத்துல நம்முடைய வாழ்க்கைல சில சுழலோ சில நபரோ இந்த மாதிரி நம்ம உயிரையே உயிர்ப்பிக்கின்ற, உயிரையே உயிர்ப்பிக்கின்ற சிலவற்றை நிகழ்த்தி விடுகிறார்கள். ஒரு ஆணோ பெண்ணோ அதைச் செய்தால்தான் காதல் என்று நாம் அதற்குப் ெ பெயர் கொடுக்கின்றோம். குருவோ கடவுளோ அதைச் செய்தால் தீக்ஷை என்று அதற்குப் பெயர்.
உங்களுக்குள் இருக்கின்ற உங்களுக்கேத் தெரியாத அன்பு என்கிற பாரிமாணத்தை உயிர்பிக்க வைப்பவர்கள்தான் காதலனோ காதலியோ.
ஆனால் உங்களுக்குள்ளேயே இருக்கிற உங்களுக்கே தெரியாத பக்தி என்கிற பரிமாணத்தை உயிர்ப்பிக்க வைக்கிறவர்தான் குருவும் கடவுளும்.
ஸ்பான்டேனியஸா எந்த விதமான ளிசைவைரயட ிசயஉவைஉந-ம் இல்லாம, எந்த ஆன்மீகம் சாதனையும் இல்லாமல், எந்தத் தேடுதலும் இல்லாமல் தன்னையே அறியாமல் தனக்குள் இருந்து பொங்கி வரும் பக்தியின் வௌிப்பாடு முதல்முறையாக ரசிக்கின்றான் திண்ணப்பன்.
உடம்பால் மட்டுமே எதையுமே ரசித்துப் பழகிய அவனுக்கு மனதால் எதையோ ரசிப்பது மிகவும் புதுமையானதாக இருந்தது. உடம்பால் மட்டுமே ரசித்து பழகியவன், மனதாலே ரசிப்பது என்பது சமூகத்தின் பழக்கம். ஆனால் அவன் ஒரு வளர்ந்த சமூகத்தின் அல்ல பாகமானவனல்ல, காட்டுவாசிகளான மனிதர்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் உடல்மட்டும்தான். வலின்னா உடம்புக்கு வர்றது, அது சுகம்னா உடம்புக்கு வர்றது அவ்வளவுதான்.
மனிதர்களுக்கு புகழ் அப்படிங்கிறது அது வந்து உடம்புக்கு வர்ரதில்லை, மனசுக்கு வர்றத. இகழ்ச்சி அப்படீங்கிது வலி அது வந்து உடம்புக்கு வர்ரதில்லை மனசுக்கு வர்றது. ளழ அதனால உடலால் மட்டுமல்லாது மனதாலும், துக்கப்படவும் தெரிந்தவர்கள் சமூகத்தில் இருக்கும் மனிதர்கள்.
ஆனால் காட்டில் இருக்கும் மனிதர்கள் அவங்களுக்கு சுகம்னாலும், துக்கம்னாலும் இரண்டுமே உடம்பு சார்ந்தது மட்டும்தான், மனசு சார்ந்தது கிடையாது. அதனால உனக்கு ரொம்ப புதுசா இருக்கு, இதனால் எனக்கு என்ன பத்தி தெரியாத ஒரு ஒரு புதுசா இருக்கு. தனக்கே தன்னைப்பற்றி புதுமையாக இருக்கிறது.
தன்னை அறியாமல் வாயெல்லாம் நுரைதள்ளி சுகத்தின் ஊற்றாலே சுகபோதத்தின் ஊற்றாலே, தன்வயம் இழந்து பரவயப்பட்டு, தன் வசமிழந்து பர-வசப்படுதல்தான் பரவசப்படுதல். தன்வயம் இழந்து பரவயப்பட்டு பரவசத்தில் இருக்கின்றான் திண்ணப்பன். என்ன நடந்ததுன்னு புரியல்ல ஆனா எங்க நடந்தது மட்டும் புரியுது என்ன உள்ள நடந்ததுன்னு புரியல்ல எங்க நடந்தது புரிய எங்க நடந்தது இந்த லிங்கத்தை பார்த்து நடந்தது. என்ன நடந்ததுன்னு புரியல்ல ஆனா எங்க நடந்தது மட்டும் புரிஞ்சதால திரும்ப அந்த இடத்துக்கே வருவதற்கு முயற்சி பண்ணான்.
இரண்டு காரணத்துக்கா ஒன்னு திரும்ப அது நடக்கணும்ங்கறத்துக்காகவும், என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்கலாமேங்கறதுக்காகவும், திரும்பவும் வந்தான் என்ன நடந்ததோ அது மீண்டும் நடந்தது.. ஆனால் ஏன் நடந்தது என்று இன்னும் புரியவில்லை.
முதல்முறை என்ன நடந்ததோ அது மீண்டும் நடந்தது, ஆனால் ஏன் என்று புரியவில்லை. சமூகத்தின் விதிகள், சமூகத்தின் ஆசை அச்சங்கள், சமூகத்தின் சரி தவறு இவைகளையெல்லாம் கற்றுக்கொண்டு வளர்ந்த மனதிற்கு இந்தக் கண்ணப்பன் கதையின் ஆழம் புரிய முடியாது. ஏன்னா உங்களுக்கு எல்லாமே எல்லாமே இந்த சரி-தவறு மட்டும்தான் யோசிச்சு பழக்கும் ஒருத்தன் நண்பனா? பகைவனா? அவ்வளவுதான் ரெண்டுமே இல்லாம அவ பாட்டுக்கு நான் பாட்டு நான் இருக்கிறேன் இருக்க முடியாது. ஏன்னா சமூகம் உங்கள மாதிரி பழகவிடல வாழவிடல. ஒருத்தன் நல்லவன் இல்லைன்னு சொன்னாபோதும் கெட்டவன்னு நீங்களே முடிவு பண்ணிடுவீங்க. ஒருத்தன் கெட்டவன் இல்லைன்னு சொன்னா சொன்னா போதும் நல்லவன்னு நீங்களே முடிவு பண்ணிடுவீங்க, இந்த ரெண்டையும் ரெண்டு பாக்லையும் போடாம ஒருத்தன விடுங்களேம்பா.. விடமுடியாது நம்மளால.
இந்த மனத்துக்கு கண்ணப்பனுக்குள் என்ன நடந்ததுன்னு புரியாது. திரும்பப் போறான் பாக்குறதுக்கு, திரும்ப பார்க்கிறான் அதே லிங்கம், அதே பெரியவர் உட்கார்ந்திருக்காரு இவனுக்குள்ள அதே மலர்ச்சி நடக்குது.
வாழ்க்கையில் அனுபவித்த எல்லாத்தையும் விட ஆயிரம் மடங்கு இவனுக்கு ஏதோ ஒரு புரிப்பு! ஒருவேளை இந்த பெரியவருக்கும் இதேமாதிரி அவர் என்ன பண்றாரோ அத கத்துகிட்டு நாமும் அதையே பண்ணா இது நிறைய நிறைய வருமோ? நமக்குள்ள இப்போ என்ன நடக்குதோ அந்த போதமும் பூரிப்பும் நிறைய நிறைய வருமோ? பார்க்கின்றான் அவர் என்ன செய்கிறார் என்று. ஒரு சின்ன பாத்திரத்தில் தண்ணி ஊத்துரார், ஒரு பூவை எடுத்துப்போடரார்.. ஏதொ பொருள் உணவுப்பொருளை வச்சி முன்னாடி காட்றார், கொஞ்சநேரம் விழுந்து விழுந்து கும்பிட்டார் போயிட்டார்.
இவன் பார்க்கிறான் இதைத்தான் செய்யணுமா? உடனே பக்கத்தில் இருந்த ஓடைக்கு ஓட்டுறான் பாத்திரம் எதுவுமில்லை தண்ணீர் கொண்டுவர, இருந்த ஒரே பாத்திரம் வாயில நீரை ரொப்பிக்கிறான், உணவுப்பண்டம் எதுவுமில்லை உடனே சுத்தி முத்திப்பாக்கிறான் காட்டு பன்றி இரண்டைக் கொன்று நெருப்பை மூட்டி சுடுகின்றான் சுடும்பொழுது நல்லா வெந்தபாகம் எதுவோ அதுதான் ருசிக்கும். நல்ல சாப்பாடா குடுக்குனுமில்ல அவருக்கு, அதனால கடிச்சிப்பாக்கிறான்.. எது நல்ல வெந்த கறி வெந்த பாகம் எது அப்படீன்னு.. அந்த வெந்த பாகத்தை மட்டும் நல்லா வாயில ஒரு பக்கமா ஒதுக்கிக்கிறான், வேகாத பாகத்தை துப்பிடரான்..
வுாயில ஒரு பாகத்தில் தண்ணி, இன்னொரு பாகத்தில் வெந்த கறி, சுத்தி சுத்தி தேடுறான் இன்னொன்னு வச்சிருந்தாரே பூ பு! கரெக்ட்டு கரெக்ட்டு சுத்தி அங்க இருக்கிற காட்டுப்பூவை பறிக்கிறான்.. வைக்க இடமில்ல தலைலையெ சொருகிக்கிறான். எல்லாத்தோடையும் தயாரா வர்ரான். வந்து நாக்கை ஒதுக்கி ஒரு பக்கம் இருக்குற தண்ணிய துப்புறான்..
அதுக்கு அப்புறமா நாக்க ஒதுக்கி இன்னொரு பக்கமா இருக்கிற இந்த பன்றி கறியை எடுத்து வைக்கிறான் தலையில் வைத்திருந்த புவெல்லாம் எடுத்து வைக்கிறான், அவர் செஞ்சதெல்லாம் செஞ்சுட்டேன்பா அப்படீன்னு தன்னை மறந்து மீண்டும் அந்தப் போதத்தில் அமர்ந்திருக்கிறான்.
வாழ்க்கையில எப்பவாவது குருவுடனோ கடவுளுடனோ தன்னையே மீறிய, தன்னை விடவும் இவர் தனக்கு முக்கியமானவர் என்ற உணர்வு ஏற்பட்டிருந்தால் இப்ப நான் சொல்றது உங்களுக்கு முழுசா புரியும். ஒரு முறையாவது எப்பவாவது வாழ்க்கையில குருவோடு கடவுளோடு இந்த உணர்வு உங்களுக்கு ஏற்பட்டிருந்திச்சினா.. சத்தியமா தெரிஞ்சுக்கோங்க உங்களுக்கு ஜீவன் முக்தி நிச்சயம்.
இதுக்குமேல வாழ்க்கையில உங்களுக்கு பயப்படுவதற்கு ஒன்றுமில்லை அதாவது என்னை விட எனக்கு இவர் முக்கியம் ஐயா அது யோசிச்சால்லாம் வராது, பிளான் பண்ணி வராது இவர் இது குடுத்தாரு அதனால அப்படின்னல்லாம் வராது லாட்டரி டிக்கெட் நம்பர் கேட்டுகிட்டு வராது, உடம்ப சரிபன்னுன்னு கேட்டுட்டு வராது. இவர் இத செஞ்சாரு அவர் இத செஞ்சாரு அப்படீன்னல்லாம் வராது.
தன்னை மீறி வரும் ஏன் வரும் என்று யாருக்கும் தெரியாது, சுற்றத்தார் புலம்பலாம், உறவினர் புலம்பலாம் கணவனோ மனைவியோகூட புலம்பலாம். மகனோ மகளோகூட புலம்பலாம். ஆனாலும் நமக்குத்தோணும் இவங்களுக்குல்லாம் என் புரியவே மாட்டேங்குது அப்படின்னு மட்டும்தான் தோணும்.
அதை வாழ்க்கையில அனுபவிச்சிருந்தீங்கன்னாத்தான் நான் இப்ப சொல்றது புரியுங்கையா.. கண்ணப்பன் எப்படி இருக்கான்றது புரியுங்கையா.. எப்பவோ ஒருதரம் நாம நம்மள பத்தி வச்சிருக்கிற அந்த நம்மள பத்தி நாம வச்சிருக்கிற கருத்து பிழன்று, நம்முடைய ஆன்மா உணர்விற்குள் முழுகிவிடும்.
நாம நம்மள பத்தி நம்ம வச்சிருக்கிற கருத்து இதயத்தில் இருக்கும் நாம் அப்படிங்கற உணர்வு ஆனந்த கந்தத்தில் இருக்கும், உலகத்திலேயே மிகப்பெரிய கடக்றதுக்கு கஷ்டமான தூரமே அந்த ரெண்டு இன்ச் தூரம்தான். அந்த அகங்காரம் அந்த ஆனந்த கந்தத்திற்குள் விழனும், அவ்வளவுதான் நாமன்னு நம்மள பத்தி வச்சிருக்கிற கருத்து உண்மையான நமக்குள்ள மூழ்கனும். அவ்வளவுதான், நாமன்னு நம்மள பத்தி வச்சிருக்கிற கருத்தா அகங்காரத்தை உண்மையான நமக்குள்ள நமக்குத் தெரியாமலே முழுகடிச்சிட்றவர்தான் குரு.
எப்பவாவது நடந்துருச்சுனா வலின்னு சொல்லமுடியாது வேதனைன்னும் சொல்ல முடியாது சுகம்னும் சொல்ல முடியாது துக்கம்னும் சொல்லமுடியாது. கண்டதும் கண்ணெல்லாம் பெருகும். கண்டதும் கண்ணெல்லாம் பொங்கும்.
எலும்பு மஜ்ஜையெல்லாம் வெண்ணைப்போல் உருகும், நெஞ்சு பஞ்சாய் கரையும். ஏன்னும் புரியாது ஏன்னும புரியாது சரி-தப்புன்னு யோசனையும் பண்ண முடியாது.
தன்னை மறந்து கரைந்துபோய் கிடக்கின்றான் திண்ணப்பன்.. என்ன பண்றதுன்னு புரியல இனம்புரியாத சுகம். சுகம் என்றால் அது சுகம் என்றுகூடத் தெரியாத சுகம்.
ஏன்னா திண்ணப்பனுக்குத் தெரிந்ததெல்லாம் உடலாலே வருகின்ற சுகமும் துக்கமும்தான், வேறு ஒன்னும் கிடையாது. ஆனா அவனுக்கு புரியவே புரியாத ஒரு உணர்வு, நாம் நாம் என்று நாமே நம்மைப்பற்றி வச்சிருக்கிற கருத்து, நம்மை அதோட பிடி தளரும்பொழுது நம்மீது வருகிற சுகம், குருவாலும் கடவுளாலும் மட்டும்தான் அதனுடன் பிடியை நம்மீது தளர்த்த முடியும்.
நமக்குள்ள ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு கீ தொறந்து, ஏதோ ஒரு இடத்துல ஏதோ ஆயி, 24 மணிநேரமும் நாம நம்மளப் பத்தி வச்சிருக்கிற அற்த கருத்து நம்மளைய பிசாசு மாதிரி பிடிச்சிருக்கு இல்லையா? பேயி மாதிரி இந்த இடத்தில்தான் புடிச்சிருக்கும் டைட்டா எப்பவும், ஒரு அளவுக்கு மேல சிரிச்சா கப்புன்னு இழுத்துப்பிடிக்கும் ரொம்ப எதுக்கு வழியிற இந்த பிரச்சினையை மறந்து போச்சா? இப்ப என்ன வேலை கொண்டாட்டம்? வருது அடுத்த பிரச்சினை நாளைக்குப் பாக்கரியா என்னாவதுன்னு? இன்னிக்கு ரொம்ப ஆட்டம் போடறியா? நாளைக்கு இதே மாதிரி இருந்திட்ரியான்னு பாக்கலாமா? இந்த மாதிரி மீண்டும் மீண்டும் நம்மை நினைவுறுத்தி உறுத்தல் துக்கத்திலேயே வைத்திருக்கின்ற, இந்த மமகாரம் நம்ம மமகாரத்தின் பிடியை தளர்த்தி, சுதந்திரமாய் சுவாசிக்க வைக்கும் குருவருளும் திருவருளும் கூட்டும்போது பொங்குகின்ற போதம்தான் பக்தி.
தன்னை மறந்து தன்னை மறந்திருத்தல்...
நல்லா புரிஞ்சிக்கோங்க.. எப்ப உடம்புக்குள்ள மனசுக்குள்ள ஏதாவது உற்சாகம் தவறிப்போய் பொங்கினாகூட, இப்ப என்ன? இப்ப ரொம்ப உத்சாகப்பட்றதுக்கு என்ன இருக்கு? இது எவ்வளவு நாள் இருந்துரும்? இப்ப பெங்களுர்ல இருக்கிற வரைக்கும் குதிப்ப வௌில வா அப்புறம் பார்க்கலாம்.. இந்தச் சாமியார் எல்லாத்தையும் சரிபண்ணிடுவாரா? இங்கே இருக்கிற சரி வீட்டுக்கு வந்தப்புறம், உன் வீட்டம்மாவோட நீதான வாழ்ந்தாகனும்? பார்ப்போம் வா..! எதுவுமே போடாமல் ஒரு இருக்கத்திலேயே நம்மை நாமே ஆழ்த்தி வைத்திருக்கும் அந்த மமகாரத்தின் நாமே மறந்து மறந்திருக்கும் உணர்வு. நம் மமகாரத்தின் பிடியை நம் மீது நாம் மறந்துவிட்டோம் என்பதையும் மறந்து இருக்கும் மறதி.
எந்த காரணங்களை சொல்லி சொல்லி நம்ம மமகாரத்தின் பிடியை நம்மீது இறுக்கிக்கொண்டு நாமே நமக்கு தூக்கத்தை வரவழைத்துக்கொண்டு அந்த தூக்கத்தினால்தான் நம் வாழ்க்கையை நாம் முறையாக சீராக ஒழுங்காக நடத்துகிறோம் என்று நம்பிக்கொண்டு நமக்கே சில நேரத்துல நாம இல்லல்ல இப்ப இந்த துக்கச்தெல்லம் நினைச்சி என்ன சரியாவா? இதனால என்ன ஆகப்போகுதுன்னு நெனைச்சா,. ஆ! இதெல்லாம் நினைக்காம இருந்தா வாழ்க்கைல உருப்படுவியா நீ? இதை நினைச்சிகிட்டே இருந்தினாதான் இதையெல்லாம் ளழடஎந பண்ணி வாழ்க்கையில உருப்படுவன்ன, துக்கத்தை நினைப்பதற்கு சரியான காரணத்தையும் வேறு கற்பித்துக்கொண்டு..
எத்தனை பேருக்கு நான் சொல்றது தௌிவாப் புரியிது? நினைப்பது மட்டுமல்லாமல் நினைப்பதற்கு சரியான காரணத்தையும் நினைப்பித்துக்கொண்டு நம்மை நாமே நரகத்தில் ஆழ்த்திப் பட்டுக்கொண்டிருக்கும் மமகாரத்தின் பிடியை நாமே அறியாமல் எடுத்து விடுபவன்தான் ஞானசத்குருநாதன்.
நமக்குத் தெரிஞ்சி எடுத்துவி்டாக்கூட பிடிச்சிப்பீங்கையா.. ‘‘இல்ல இல்ல, உங்களுக்கு என்ன சொல்லுவீங்க எங்களுக்கு தான் தெரியும்’’ அந்த மனம் வருவதற்கு முன்பாக அறிவு அறியும் முன்பாக அறிவிலிருந்து விடுபடுத்துதல் அறிவு அறியும் முன்பாக அறிவிலிருந்து விடுபடுத்துதல், மமகாரம் அறியும் முன்பாகவே மமகாரத்திலிருந்து விடுபடுத்துதல், அதைத்தான் திண்ணப்பன் அனுபவித்துக்கொண்டிருக்கிறான்.. தான் தன்னைப் பற்றி நினைக்கும் முன்பாகவே தான் தன்னைப் பற்றி வைத்திருக்கும் கருத்திலிருந்து மறந்து தன்வயம் இழந்து, பரவய போதத்தில், பரவச போதத்திலோ பரவசத்தில் காரணமில்லாமல் இருக்கின்றான் கண்ணப்பன்.
கண்ணப்பன் பூஜையின் அழகு!
ஒரு அன்பர் கேட்டாரு.. அவர் மட்ம் பண்ணி மாமிசம் வச்சாரே..
ஆழமாப் புரிஞ்சுக்கோங்கய்யா.. இப்ப விசேஷ தீக்ஷைலகூட நீங்க புஜையைப் பழகும்போது ஒரு மந்திரம் வரும், புஜை செய்வதற்கு முன்பாக செய்கிற அ அந்த புஜைக்கு மானச பூஜைன்னு பெயர்.
‘‘ஹ்ருத்பத்மம் ஆசம் அப்படீன்னு ஒரு அழகான மந்திரம், அந்த மந்தித்துல ஒரு வார்த்தை, ‘தேன அம்ருதேன ஆச்சமனீயம், ஸ்நானீயம்தே நசஸ்ம்ருதம்’ அப்படீன்னா ‘‘பெருமானே உன்னை நினைத்து பொங்குகிற பக்தி ஆனந்தத்தால் சகஸ்ராரத்தில் உச்சந்தலையிலிருந்து பொங்கி வழிகின்றன அமிர்தம்தான் நீ வாய்கழுவும் நீர் உனக்கு அபிஷேகம்’’ ஐயா அவன் பன்றிக்கறியை படைக்கவில்லை எச்சிலை உமிழ்ந்து அபிஷேகம் செய்யல பக்தி பொங்கும்பொழுது உங்க வாயெல்லாம் இனிக்கும் அதை ஒரு தரமாவது அனுபவிச்சிருந்தீங்கன்னாத் தெரியும் தெரியும் அதுதாங்கையா அமிர்தம்.., எப்பவாவது ஒரு தரமாவது என்னையும்விட என் உயிருக்கு இனிப்பவனே என்று குருநாதனை அனுபவிச்சிருந்தீங்கன்னா, பார்த்தவுடன் நினைத்தவுடன் வாயெல்லாம் இனிக்கும் அந்த அமிர்தத்தைத்தான் அபிஷேகமாகப் பொழின்றாகின் கண்ணப்பன்.
அதனால கண்ணப்பன் செய்தது ஆகமத்தின் படியான பூஜையே! ஆகமத்திற்கு எதிரானது அல்ல. மானஸ பூஜை மந்திரத்துல என்ன விளக்குகிறார்களோ.. ஹ்ருதய பத்மம் ஆசனம் - இறைவனை நினைந்ததும் பொங்குகிற அந்த ஆனந்தம் அமிர்தம் - மானஸ பூஜையில் என்ன சொல்லுதோ அதையேத்தான் கண்ணப்பன் செய்திருக்கிறான். பொங்கிய ஆனந்தத்தால்..
ஒரு பிரச்சினை என்னன்னா? நாலு வயசு குழந்தை வந்து காதல்னா என்னப்பான்னு கேட்டா உங்களால பதில் சொல்லி புரிய வைக்க முடியாது நீங்க சொல்லுவீங்க வயது வரும்போது உனக்கு புரியும் அப்பா, அதுவே ஒரு 14 15 வயதாகும்போது இந்த குழந்தை தானாகவே முதல் காதல் வயப்பட்டு அப்படின்னா என்னன்னு புரிஞ்சுக்கோம்.
அதேமாதிரி யாராவது ஒருத்தர் புதுசா வர்றவர் பக்தின்னா என்ன சாமி? ஏன்று கேட்டா எப்படி சின்ன பையன் வயசு வரும்பொழுது பிசிக்கல் மெச்சுரிட்டி வரும்போது புரியும்பான்னுதான் சொல்லமுடியும்.
ீாலளைஉயட அயவரசவைல வரும்போது காதல்னா என்னன்னு புரியும், அது மாதிரி ஆநவெயட அயவரசவைல வரும்பொழுது பக்தின்னா என்னன்னு புரியும். நான் சொல்றதெல்லாம் எத்தனை பேருக்கு புரியுது நல்லா தெரிஞ்சி உங்களுக்கு ஆநவெயட அயவரசவைல வந்துருச்சு. ஒருமுறையாவது இந்த குருபக்தியை உணர்ந்தீர்களானால் நான் சொல்ற இந்தக் கண்ணப்புனுடைய நிலை திண்ணப்பன் நிலை உங்களால் தௌிவாக உணர்ந்து பார்க்க முடியும்.
தன்னையே மறந்து திண்ணப்பன் தன் எல்லாவற்றையும் சமர்ப்பிக்கின்றான், அவருக்கு அதுக்கு மேல வேற என்ன பண்றதுன்னு தெரியல..
ஐயா! புைஐன்னா என்னன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க ‘‘என்ன கொடுக்கிறதுன்னு தெரியாம திக்குமுக்காடிபோய், தன்னையே படைத்துவிட்டு இதற்குமேல் வேறொன்றுமில்லை அப்பனே!’’ அப்படின்னு கரைஞ்சி கிடைக்கிறதுதான் புஜைங்கையா.. ‘‘ஐயனே! எனது உடமை மட்டுமல்ல என்னை கொடுத்தேன், இதற்குமேல் கொடுப்பதற்கு ஏதும் இல்லை ஆனால் கொடுக்க வேண்டுமென்று தோன்றுகிறது’’ என்கின்ற உணர்வுதான் புஜை. ‘‘இதற்கு மேல் ஒன்றும் இல்லை ஆனால் கொடுக்க வேண்டும் என்கின்ற தோன்றல் மட்டும்தான் இருக்கிறது. அதையும் கொடுத்தேன்’’ என்று சரணடைந்து கிடக்கின்ற பக்தியின் இரசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
இப்படியாக ஒரு வாரம் கழிந்தது தினந்தோறும் இதுவேதான் போவான்.. காட்டு பன்றியை கொன்று சுட்டு நல்ல மாமிசத்தை கொண்டு வந்து, காட்டு மலர்களைக் கொண்டு வந்து வாயிலே நீரைக் கொண்டுவந்து இருப்பதையெல்லாம் பெருமான் மீது கொட்டி, தனக்கு என்ன தெரியும் அதன்படி அத்தனையும் செய்து தன்னையே படைத்து இதற்கு மேல் என்னவிருக்கிறது? என்று கரைந்து கொண்டிருந்தான்.
ஒருநாள் கரைந்து போய் இருக்கும்பொழுது பெருமான் தன்னுடைய ஒரு கண்ணிலே ரத்தம் வரவழைத்தார்.. ஏன்? என்று கேட்கலாம் அவருக்கு வேலையே இதுதான்!
பக்தனின் பக்தியின் ஆழத்தை கிளறிப்பார்த்து ருசித்தல். ஆழத்தை கிளறிப்பார்த்து ருசித்தல் மேல மட்டும் வெந்திருக்கா.. உள்ளையும் வெந்திருக்கா.. பானை மேல் சோரு மட்டும் வெந்திருக்கா? உள்ளையும் வெந்திருக்கா? போட்ட பொருளெல்லாம் மேல மட்டும் கூடி இருக்கா? இல்ல கூடி இருக்கா? புளியோதரை மேல மட்டும்தான் கலந்திருக்கா இல்ல சரியா கலந்திருக்கான்னு? கிளரிப்பார்த்து ருசிக்கிறது. ‘‘சோதித்து தன் பக்தர்கள் சாதித்தார்கள்’’ என்று உலகிற்கு சொல்லும் பெருமான். ‘‘சோதித்து தன் பக்தர்கள் சாதித்தார்கள்’’ என்று உலகிற்கு சொல்லும் பெருமான்.
ஒரு கண்ல இரத்தத்தை வரவிட்டவுடன், முதல்ல கண்ணப்பன் செய்த வேலை அங்கும் இங்கும் தேடிப்பார்த்து பச்சிலைகளைக் கொண்டு வந்துபோட முயற்சி பண்றார். ஆனால் நிக்கல, நிக்கல தூங்குபவர்களை எழுப்ப முடியுமா? பச்சிலைப் பத்துக்கெல்லாம் மடிவதற்கா பெருமான் இரத்தம் வரவழைப்பான்?
‘உயிர் குடிக்கும் இறைவன்’ சிவபெருமான் இறைவன் சிவன் மட்டும்தான் யாரிடம் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் எதையாவது கொடுத்து எதையாவது வாங்கிக்கொள்ளலாம், ஆனால் பெருமானிடம் உயிரைக் கொடுத்தால் மட்டும் தான் எதையும் வாங்க முடியும். பெரிய பெருமான் அப்படீகிறதனாலதான் பெரிய பொருளாக் கொடுத்தாகனும்.
என்னப் பச்சிலை வைத்துக் கட்டியும் ரத்தம் நிற்கவில்லை, பளீரென்று கண்ணப்பனுக்கு உதித்தது! இந்த கண்ணிலிருந்து ரத்தம் வடிவது நிற்க வேண்டுமென்றால் நம் கண்ணை கொடுத்தால் தான் நிற்கும்.
கவலையே படாமல் அம்பை எடுத்து கண்ணை பெயர்த்து கண் மீது பொருத்திவிட்டான் ரத்தம் நின்றுவிட்டது! ஆனந்தக் கூத்தாடுகிறான்! கண்ணை இழந்த அதைப் பற்றி கவலையேபடாமல் வழியில்லாமல் உணர்வில்லாமல் வேதனையில்லாமல் தன்னையும் விட உயர்ந்த ஒரு பொருளுக்கு தந்துவிட்டோம் என்கின்ற ஆனந்தத்தில்!
ஐயா.. புரிஞ்சுக்கோங்க புத்தி இல்லாமல் சுதந்திரம் இருப்பதுதான் மிகப்பெரிய சிறை புத்தி உடையவனுக்கு அடிமையாக இருப்பததான் மிகப்பெரிய சுதந்திரம். நல்லாத் தெரிஞ்சிகோங்க.. புத்தி இல்லாத சுதந்திரம்தர்ன மிகப்பெரிய சிறை, புத்தி இருக்கிறவனுக்கு அடிமையாக இருக்கிறதுதான் மிகப்பெரிய சுதந்திரம்.
தன்னை விடவும் பெரிது என்று ஒன்றை உணராமல் வாழ்வதுதான் வாழ்க்கையின் தரித்திரம். தன்னைவிட உயர்ந்தது ஒன்று உண்டென்று உணர்ந்து அதற்கு எதை வேண்டுமானாலும் அளிப்பதுதான் செல்வம்.
தன்னைவிட பெரிதொன்று அப்படீன்னு ஒன்னைக் கண்டுபிடிச்சி அதுக்கு எதைக் கொடுத்தீங்கன்னாலம் உங்களுக்கு மட்டில்லாத மகிழ்ச்சியும் எந்த செல்வம் உங்களுக்கு கொடுக்க முடியாத திருப்தியை அளிக்கும்.
நம்மளவிட பெருசுன்னு எதையாவது ஒன்னைக் கண்டுபிடித்து அதற்கு நீங்க எதையாவது செய்யும்பொழுது ஏற்படற மகிழ்ச்சியை அனுபவிச்சிருந்தீங்கன்னா.. இப்ப நான் திண்ணப்பன் சொல்ற மகிழ்ச்சியை அனுபவிக்கிறத நீங்கள் உணர்ந்து பார்க்கலாம்.
அது மட்டிலாச் செல்வம், தன்னை விட பெரிசான ஒன்னுக்கு நாம ஏதோ தோன்ற திருப்தி இருக்கு பாருங்க.. அதுலையும் அவர் கண்ல ரத்தர் வர்றது நின்ன உடனே அவர் வாங்கிகிட்டார்னு தௌிவாயிருத்தில்லையா? நாம குடுத்தோம என்பது மட்டுமல்லாமல் அவர் வாங்கிக்கிட்டார் அவர் ஏத்துக்கிட்டார் அப்படீன்னும்பொழுது ஏற்படுகிற திருப்தி அதுதான் செல்வத்தின் உச்சி. எந்த செல்வமும் கொடுக்க முடியாத திருப்தியின் உச்சி.
ஐயோ இதை வாழ்க்கையில் ஒருமுறைகூட அனுப்பவிக்காதவைனைப்பேல வரியவன் எவனுமில்லை. யாரெல்லாம் உங்கள் வாழ்க்கையில் தன்னைவிட முக்கியமானவர் என்று ஒருவரை கண்டுபிடித்து அவருக்கு ஏதோ ஒன்றை கொடுத்து அவர் அதை ஏற்று, அந்த சுகத்தை கண்டிருக்கிறோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! அந்த சுகத்தை காணாதவர்கள் வாழ்க்கையில் வறுமையை மட்டுமே பார்த்தவர்கள்.
கண் போனதைப் பற்றி கவலையேயில்லை கண்ணப்பனுக்கு.. வலியும் இல்லை ஆனந்தத்தால் கூத்திடுகிறான். அம்பலவாணனோ ஆரம்பிக்கிறான் அடுத்த சோதனையை அடுத்த கண்ல இரத்தம் வருது..
ஒரு வினாடிகூட தயக்கமில்லை திண்ணப்பனுக்கு காணரம் இப்ப அவனுக்கு வைத்தியம் தெரியும், ஒரு வினாடிகூட தயங்கல இன்னொரு கண்ணு அவ்வளவுதான? தோ எடுக்கிறேன்! கண்ணை எடுக்கப்போகும்பொழுதூன் அவனுக்கு நினைவு வந்தது, ஐயோ எடுத்துட்டன்னா எனக்குக் கண்ணு தெரியாதே!? எந்த இடத்துல நான் வைப்பேன்? அப்ப எப்படி இடத்தப் பாத்து வச்சிக்கிறது.. ஏன்னா இரண்டு கையும் வேணும் கண்ணை எடுப்பதற்கு.. ஒரு கையை வச்சிக்கவும் முடியாது! காலை எடுத்து கண்மீது வைத்துக்கொள்கிறான்., அந்த இரத்தம் வருகின் இரண்டாவது கண்மீது அடையாளத்திற்காக தன் காலை எடுத்து வைத்துக்கொள்கிறார்.. வைத்துக்கொண்டு இரண்டாவது கண்ணைப் பேர்தெடுத்து அப்புகிறான். முதல்லையேச் சொன்னாமாதிரி வேடர்களுக்கு கண் மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு வாழ்க்கைக்கே சமம். ஏன்ன கண்ணால் பார்த்துத்தான் அவர்கள் தங்களை மிருகங்களில் இருந்து காத்துக்கொள்ள முடியும்.
கண்ணால் பார்த்துதான் அம்பு எய்து வேட்டையாட முடியும், அவங்க உணவும் உயிர் இரண்டுமே கண்லதான் இருக்கு. ஆனா இதக் குடுக்கிறது மூலமா இரண்டையுமே கொடுக்கத் தயாராயிட்டான்.
அவனுக்கு நல்லாத் தெரியும் இரண்டு கண்ணும் போனா இதுக்கு மேல வேட்டையாட போக முடியாது மிருகங்கள் வந்தால் தன்னை காத்துக் கொள்ளவும் முடியாது. உணவுக்கும் வழியில்லை. உயிரைக் காத்துக் கொள்ளவும் வழி இல்லை. ஆனாலும் பரவாயில்லை வாழ்ந்தது போதுமடா இதற்குமேல் வாழ்வதற்கும் அடைவதற்கும் ஒன்றும் இல்லை என்கின்ற முழுமைத்தன்மை.
இதற்குமேல் அனுபவிக்கிறதுக்கு ஒன்னுமில்லை என்கிற முழுமைத்தன்மையை பக்தியினால்மட்டும்தான் உணர வைக்க முடியும். அது உயிரே மலரும் உணர்வு. ஒருமுறை வாழ்க்கையில் பக்தியை அனுபவித்துவிட்டீர்களானால் எமனைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பீர்கள்.
ஏனென்றால் வாழ்ந்துவிட்ட திருப்தி மலர்ந்துவிடும் இந்த உடல் எந்த உச்ச பரவச நிலையை அனுபவிக்க முடியுமோ அதை அனுபவித்துவிட்டது! இதற்குமேல் இது இருந்தோ இல்லாதிருந்தோ நான் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற திருப்தி தான் மரண பயம் இன்மை. அதுதான் மரணம் பயம் இன்மை.
இந்த உடலால் பார்க்க வேண்டியதைப் பார்த்து முடித்துவிட்டேன். இரண்டாவது கண்ணை அப்பும்பொழுது அப்பன் ‘நில்! கண்ணப்பா.’ என்று திருமேனியில் இருந்து வௌிப்பட்டு கண்ணப்பன் கையை பிடிக்கின்றார்.
நல்லவேளை கண்ணப்பன் ஐயு பண்ணி மூன்றாவது கண்ணு அவேக்கன் ஆயிருந்தா மூன்றாவது கண்லையும் வரவழைச்சிருப்பாரு.. யாருக்கு தெரியும்? அவருக்கு இரண்டுதான் திறந்திருந்ததால இரண்டாவதுலையே வந்து ஆசிர்வாதம் பண்ணிட்டாரு.
பெருமான் திருமேனித் தாங்கித் தோன்றி பக்தனின் பக்தியை ருசித்து இரண்டு கண்ணையும் அளிக்கின்றார், மூன்றாவது கண்ணையும் மலரச்செய்கின்றார். இரண்டு கண் அளித்து மூன்று கண் பெற்ற முக்கண்ணன். மூன்றாவது கண்னான ஞானக்கண்ணையும் அளிக்கின்றார. அதுமட்டுமல்ல! ‘‘நீ கொடுத்த கண்ணை நானே வைத்துக்கொள்கிறேன் நான் உனக்கு கொடுக்கிறேன்’’ என்று கண் கொடுத்து, கண்ணப்பன் என்கின்ற பெயரும் கொடுத்து தன்னையும் கொடுத்தான்.
இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல மாற்றப்பட்டதைகூட நான் பெருசா நினைக்கல ஆனால் எந்தவிதமான சாத்திரம் ஸ்தோத்திரம் சுத்திரம் என்கின்ற பயிற்சியோ இல்ல தியானம் யோகம் போன்ற சாதனைகளோ, இல்ல பக்தர்களுடைய கதைகள் போன்றவைகளை கேட்டு மனதை பக்குவப்படுத்துவதேுர் இந்த எதுவுமே இல்லாமல் எப்படித்தான் இந்த கண்டதும் காதல் என்பதுபோல, தன்னை மறந்த தான் தன்வயம் இழந்து பரவயப்பட்ட பரவசப்பட்ட அந்த பக்தி போதம் மலர்ந்தது. எப்படித்தான் இந்த பக்தி போதம் மலர்ந்தது? அதன் சுட்சுமம் என்ன? உண்மையிலேயே அதன் ரகசியம் என்ன? கண்ணப்பன் யார்? அவனுக்கு எப்படி இந்தப் பக்தி மலர்ந்தது? எப்படி இந்த பரவசம் மலர்ந்தது? எப்படி அதை நமக்குள் மலர வைப்பது? இந்த எல்லா கேள்விகளுக்கும் அனுபவப்புர்வமான விடைதெரிய நாளை ஆதிசைவம் நிகழ்ச்சியில் பாருங்கள்!
நாளை ஆதிசைவத்தில் கண்ணப்பனின் பக்தியின் ரகசியம், கண்ணப்பனின் பக்தியின் சுட்சமம் நாளை காண்போம் அடுத்த வகுப்பில் சந்திக்கலாம் ஆனந்தமாக இருங்கள்.