28 ஏப்ரல் 2008 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினமலர், தினகரன், தினத்தந்தி


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :இரண்டாம் சர்வதேச ஆன்மிக மாநாடு

நாள் :28 ஏப்ரல் 2008

தலைப்பு : ஞான உணர்வை பெறுவது எப்படி? சேலம் சத்சங்க கூட்டத்தில் பரமஹம்ஸ நித்யானந்தர் விளக்கம் - சேலத்தில் நித்யானந்த தியானபீடம் சார்பில் கோடிக்கண் ரத யாத்திரை: பரமஹம்ஸ நித்யானந்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் - ஒவ்வொரு மனிதனும் கடவுளின் அம்சங்கள்: ஆன்மிக மாநாட்டில் நித்யானந்தர் விளக்கம்

"சேலத்தில் இரண்டாம் சர்வதேச ஆன்மிக மாநாடு 25 ஏப்ரல் 2008 அன்று துவங்கி 27 ஏப்ரல் 2008 வரை நடைபெறும் என்ற செய்தி இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்வு 3 நாட்கள் சேலம் போஸ் மைதானத்தில் நடைபெறும் என்றும் பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி நிரல்: 25, 26,27 ஏப்ரல் 2008 காலை முதல் இரவு வரை பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் வீற்றிருந்து பக்தர்களுக்கு நல்லாசியும், வழங்கினார்.

25, 26,27 ஏப்ரல் 2008 - மூன்று நாட்களும் மாலை 6 மணிக்கு ஆன்மிக அருளுரை, தியான சொற்பொழிவு வழங்கினார்.

25 ஏப்ரல் 2008 - காலை - சுமங்கலி திருமண மண்டபத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆசிரமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து மகளிர் அமைப்பாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

26 ஏப்ரல் 2008 - இளைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 12 மணிக்கு தியான பயிற்சியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

27 ஏப்ரல் 2008 - மாலை கோடிக்கண் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனந்தேஸ்வரி சமேத ஆனந்தேஸ்வரர் ரதம் சேலம் அம்மாப்பேட்டையில் காமராஜர் வளைவில் இருந்து புறப்பட்டு போஸ் மைதானத்தை வந்தடைந்தது. இந்த தெய்வ விக்ரஹங்கள் தமிழ்நாடு முழுவதும் எடுத்து செல்லப்பட்டு பிறகு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் ஆசிரமத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ரத யாத்திரையை போஸ் மைதானத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். பக்தர்கள் தங்கள் நாட்டுக்கொடி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். மேள தாளங்கள், கரகாட்டம், பூரண கும்பம், முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

மாலை நிகழ்ந்த சொற்பொழிவிற்கு எம்.எல்.ஏ திரு ராஜா அவர்கள், எம்.எல்.ஏ திரு ராமசாமி அவர்கள், எம்.எல்.ஏ திரு ராஜேந்திரன் அவர்கள், மேயர் ரேகா பிரியதர்ஷிணி அவர்கள், முன்னாள் மேயர் சூடாமணி அவர்கள், சேலம் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் சுரேஷ்குமார் அவர்கள், பாவை கல்லூரி சேர்மன் ஆடிட்டர் நடராஜன் அவர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் பேசும் பொழுது - மக்கள் நல்வாழ்விற்காகத்தான் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் சத்சங்கங்களை நிகழ்த்துகிறார் என்று பாராட்டி பேசினார்."

28 ஏப்ரல் 2008

28 ஏப்ரல் 2008 -பத்திரிகை செய்தி