25 ஜனவரி 2009 மருத்துவ முகாம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

மருத்துவ முகாம் (Medical Camp)

வருடம்  : 2009

நாள் :25 ஜனவரி 2009

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : கல்பதரு - ஒருநாள் தியான அனுபவ முகாம் மற்றும் திருப்பத்தூர் நித்யானந்த தியான பீடம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மருத்துவர்களின் விபரம் : மருத்துவர் பரிமளா செல்வராஜ் மற்றும் எலும்பு, நரம்பு மருத்துவர் லெனின் அவர்கள்

அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் : பொது மருத்துவம், எலும்பு மற்றும் நரம்பு மருத்துவம்

நடைபெற்ற இடம் : திருப்பத்தூர் - ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : திருபத்தூரில் உள்ள கைலாஸா

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : ஆயிரக்கணக்கான பொது மக்கள்.

நிகழ்வின் விவரனை : " "பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மக்கள் வேண்டிய வரத்தை கர்ப்பக விருட்சமாக 'கல்பதரு' என்கின்ற ஒரு நாள் தியான அனுபவ முகாமில் வழங்குகின்றார்கள். இந்நிகழச்சியை நிகழ்த்த பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களே நேரடியாக திருப்பத்தூருக்கு வருகை தருகின்றார் என்கின்ற செய்தி திருப்பத்தூர் செய்திகள் என்கின்ற நாளிதழில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி 2009 வருடம் வெளிவந்துள்ளது.

கல்பதரு தியான முகாமானது 20 பிப்ரவரி 2009, காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை திருப்பத்தூரில் உள்ள ஶீ விஜய சரவண மஹாலில் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

மற்றும்

திருப்பத்தூர் நித்யானந்த தியான பீடம் இளைஞர் மையம் சார்பில் ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளியில் இலவச மருத்துவ முகாம் ஜனவரி 25 ஆம் தேதி 2009 வருடம் நிகழ்ந்தது. இச்செய்தியை ‘திருப்பத்தூர் செய்திகள்’ என்கின்ற நாளிதழ் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி 2009 வருடம் வெளியிட்டுள்ளது.

பொது மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர் பரிமளா செல்வராஜ் அவர்கள் மற்றும் எலும்பு, நரம்பு மருத்துவர் என். லெனின் அவர்கள் மருத்துவம் பார்த்தார்கள்.

இந்த மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் பகல் 2 வரை நடைபெற்றது. மருத்துவ பரிசோதனை, மருந்துகள், மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அடுத்த இலவச மருத்துவ முகாம் பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என்ற தகவல் அறிவிக்கப்பட்டது.

திருப்பத்தூர் இ.எல்.ராகவனார் தெருவில் உள்ள பரமஹம்ஸ நித்யானந்த தியானபீடத்தில் காலை, மாலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை தியான வகுப்புகள், தியான சிகிட்சை இலவசமாக வழங்கப்படுகிறது எனும் தகவல்கள் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது." "

மருத்துவ முகாம்-புகைப்படங்கள்


மருத்துவ முகாம்_சாஸ்திர பிரமாணம்

"நமது சாஸ்திரங்கள் தேகத்தைப்பற்றியும், உயிரின் நோக்கத்தை தேகத்தால் அடைவது பற்றியும் விவரித்துள்ளது.

தேகம் அழியக்கூடியதே

க்ரு'மி-கோடிபிராவிஷ்டம் துர்கந்த-குலதூஷிதம் |

அநித்யம் து:கநிலயம் தேஹம் வித்தி-வராநநே||

அழகிய முகம் படைத்தவளே! கோடிக்கணக்கான கிருமிகள் கொண்டதும், துர்நாற்றம் பொருந்தியதும், துக்கம் நிறைந்நதுமான இத்தேகம் அழியக்கூடியது என்பதை அறிவாயாக! - குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)

தேகம் அழியக்கூடியதே...அதனால் வாழும் காலத்தில் அதை மிகவும் உன்னதமான நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும். ஆன்ம ஞானத்தை பெற்று தேகத்தில் வாழும் பொழுதே மோட்சத்திற்கு வழிதேட வேண்டும்.

குருவே சிறந்த வைத்தியர்

அஜ்ஞாநேநாஹிநா க்ரஸ்தா: ப்ராணிநஸ்தான் சிகித்ஸக: |

வித்யாஸ்வரூபோ பகவாந் தஸ்மை ஶீகுரவே நம: ||

அஞ்ஞானமென்கின்ற பாம்பினால் கவ்வப்பட்ட ஜீவன்களைக் கடைத்தேற்ற பிரஹ்மஞான அனுபூதியை அளிக்கவல்லதான மஹாமந்திரத்தை அறிந்தவரான குருவைத் தவிர, வேறொரு வைத்தியர் இல்லை. பகவானாகிய அந்த ஶீ குருவுக்கு நம்ஸ்காரம்.

- குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மஹா வைத்தியராவார். பல லட்சக்கணக்கான ஜீவர்களுக்கு குருவாக தீட்சையளித்து ஞான அனுபூதி தந்து, ஞான வைத்தியராக தியான சிகிட்சை அளித்து உடல்-மன சிகிட்சையும் அளித்ததோடு மட்டுமல்லாது கைலாஸாவின் மூலமாக எண்ணற்ற மருத்துவ முகாம்களை நடத்தி பிணிபோக்கும் சிகிட்சை அளிக்கின்றார். கைலாஸாவின் வைத்தியாலயா குழு ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கிலும் ஏற்படுத்துகிறது.

கைலாஸா'வின் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பல லட்சக்கணக்கான பேர் பயனடைந்துள்ளனர். "