23 பிப்ரவரி 2018 பத்திரிகை செய்தி
வெளியீடு
நெற்றிக்கண்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: நித்யானந்த பீடம் மேல் சுமத்தபட்ட பொய் குற்றச்சாட்டில் உள்ள உண்மை நிலவரம்
நாள் :23 பிப்ரவரி 2018
தலைப்பு : நித்யானந்தர் ஆசிரமம் - பொய் குற்றச்சாட்டின் உண்மையும் அதன் பின்னணியும்!
"நெற்றிக்கண் என்ற தமிழ் வார இதழில் 23 பிப்ரவரி 2018 அன்று “நித்யானந்தர் ஆசிரமம் - பொய் குற்றச்சாட்டின் உண்மையும் அதன் பின்னணியும்!” என்ற தலைப்பில் நித்யானந்தபீடம் மேல் சுமத்தபட்ட பொய் குற்றச்சாட்டில் உள்ள உண்மை நிலவரம் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. மனோஜ் என்ற 35 வயதான அரசு பணியில் இருந்த மருத்துவரும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் கடந்த 10 வருடங்களாக பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர்களாக இருந்தவர்கள்.
மனோஜ் அவரின் இரண்டு சகோதரிகள் ஒரு சகோதரியின் மகள் ஆகிய நால்வரும் நித்யானந்த ஆதீனத்தில் வாழ வேண்டும் என்று அவர்களின் சொந்த விருப்பத்தினால் வசிக்க வந்தவர்கள். வனிதா அவரின் மகள் மற்றும் சகோதரர் ஆதீனத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக ஆதீனத்தில் வாழ்ந்த பொழுது காணொளியில் பதிவிட்டுள்ளார்கள். ஆனால் மனோஜ் மற்றும் அவரின் சகோதரியின் மகளை 6 மாதங்களாக காணவில்லை என்றும் நித்யானந்தர் ஆசிரமத்தில் மூளை சலவை செய்யப்பட்டு வைத்திருந்தவர்களை மீட்டு சென்றதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது.
மனோஜின் பெற்றோர்கள் சில சமூக விரோத கும்பல் மற்றும் ஊடகங்களுடன் திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்த ஆதீனம் வந்து பிரச்சனையில் ஈடுபட்டனர். தங்களின் சுய லாபத்திற்காக ஒரு பொய்யான புகாரை கொடுத்து மக்களை நம்ப வைக்க செய்யப்பட்ட சூழ்ச்சிதானே தவிர இந்த குற்றச்சாட்டில் சிறிதும் உண்மை இல்லை. "
23 பிப்ரவரி 2018
23 பிப்ரவரி 2018 -பத்திரிகை செய்தி