2017 ஜூலை தியான சத்சங்கம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

தியான சத்சங்கம் (Tamil Satsangs)

வருடம்  : 2017

நாள் :ஜூலை 2017

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : தியான சத்சங்கம்

சொற்பொழிவின் தலைப்பு : பன்றிக்கு பூணுல் அணிவிக்கும் போராட்டத்தை எதிர்த்து -கண்டனம் தெரிவித்தார் பரமஹம்ச நித்யானந்தர்

நடைபெற்ற இடம் : கைலாஸா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : கைலாஸா

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1 லட்சம்

வீடியோ

ஜூலை 2017 தியான சத்சங்கம்


தியான சத்சங்கம்_விவரனை

எழுதப்பட்டதன் நகல் (Transcript) :

"பன்றிக்கு புணுல் அணிவிக்கும் போராட்டத்தை எதிர்த்து -கண்டனம் தெரிவித்தார் பரமஹம்ச நித்யானந்தர்

தமிழ்ல வாயத்திறந்தேன்னா இவனுங்க என்ன ஆவாங்கன்னு தெரியலையே!...

இந்தப் பகுத்தறிவுப் பன்னாடைப் பன்றிகளுக்காக, பணத்திற்கு மலம் தின்னும் பன்றிகளே.. பன்றிக்கு புணுல் போடும் ஆர்ப்பாட்டம் என்கின்ற பெயராலே.. சில பகுத்தறிவு பன்னாடை கும்பல்கள் ஹிந்து மதத்தை மட்டுமே எதிர்ப்பதாக கங்கணம் கட்டிக்கொண்டு மற்ற சமூகங்கள் மதங்களில் எத்துனை அறிவு சாராத விஷயங்கள் இருந்தாலும் அவைகளை எல்லாம் பார்ப்பதில்லை என்று நவத்துவாரங்களையும் மூடிக் கொண்டிருக்கும் இந்த நாதாரிகள் ஹிந்து மதத்தில் மட்டும் எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும் கூட தின்ற பணத்திற்கு அதிகமாக கூவியே ஆக வேண்டிய கட்டாயத்தினால் தொடர்ந்து எங்களுடைய வாழ்க்கை முறையையும் மத உணர்வுகளையும் புண்படுத்தி கொண்டே இருப்பதை, தங்கள் வாழ்க்கை முறையாக வைத்துக்கொண்டு பன்றிக்கு புணூல் போடும் ஆர்ப்பாட்டம் என்று ஒரு மூடத்தனமான ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

முதல் விஷயம், நான் சொல்ல வேண்டும். அவர்களுடைய இந்த அடிப்படையான ஸ்டேட்மென்ட் என்னவென்றால் புணூல் தமிழனை சுத்திரன் ஆக்குவதாகவும் ஏதோ மிகப்பெரிய பிரிவினையை செய்வது போலவும் காட்டுகிறார்கள். முதல் விஷயம் யக்ஞோபவீதம் என்று சொல்லப்படும் புணூல் , நீங்கள் நினைப்பது போல் பிராமணர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா ஜாதியினரும் உபயோகப்படுத்துகின்ற விஷயம். தமிழ்நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாக கீழடியின் காலம்தொட்டு கீழடியில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அந்த நாகரீகம் முறையாக காமிகாமத்தின்படி கட்டப்பட்டுள்ள ஊர் என்பதை என்னால் ஆதாரங்களுடன் விளக்க முடியும். மூத்த குடித் தமிழன் சைவத் தமிழன்! வேதாகமங்களை வாழ்ந்தவன், வாழ்கின்றவன், வாழப்போகின்றவன்.. அறுபதாண்டு ஆட்டம் போடும் அள்ளக் கைகளால் 60 ஆயிரம் ஆண்டு பரம்பரையா ஆடி விடப்பபோகின்றது?

முதல் விஷயம் ஆகமங்களை கடைபிடிக்கின்ற வாழ்க்கை முறையை வாழ்பவர்கள் நாங்கள் என்பதனால் யக்ஞோபவீதம் எல்லோருக்கும் சொந்தமானது. ஒரு குலத்திற்கு மட்டும் அல்ல, மொத்த இந்துக்களுக்கும் சொந்தமானது.

முதல். இரண்டாவது. இதனால் யக்ஞோபவீதத்தை புணூலை அவமதிப்பது மொத்த இந்துக்களையும் அவமதிப்பது.

மூன்றாவது, மிகவும் முக்கியமானது, பன்றி கூட எங்களுக்கு வழிபடும் தெய்வங்களுல் ஒன்று. ஆனால் நீங்கள் அந்த நோக்கத்தில் இதை செய்யவில்லை. உங்கள் நோக்கம் அவதூறு செய்வது!

உங்கள் நோக்கத்தை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். பன்றிக்கு புணூல் போட்டு வராக மூர்த்தி என்று நாங்கள் வழிபாடு செய்வது வேறு! நீ பன்றிக்கு புணூல் போட முயற்சிப்பது வேறு. அது உன் பன்றி, இது எங்கள் பன்றி!

எங்கள் இனப்பன்றிகள் எல்லாம் வழிப்படத்தகுந்தவை! உங்கள் இனப்பன்றிகள் உங்களை போல் இழிவுப்படத் தகுந்தவை! என்ன வேண்டுமானாலும் இந்துக்களை செய்வது, அவர்கள் சும்மா இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் போய் விட்டது! இது ஒன்னும் 1960 இல்ல அப்பு! தேடித் தேடி போய் ஏன்யா உட்கார ஆப்பு மேல? எல்லாம் நல்லாத்தான் போயிட்டுருக்கு?

புணுல் போடறதுன்னா என்ன? கருவழிப்பரம்பரைக்கும் குருவழிப்பரம்பரைக்கும், அடுத்த ஜெனரேஷனுக்கு, நம்முடைய வாரிசுக்கு நம்முடைய சத்தியங்களைக் கொடுப்பதற்காக அளிக்கப்படுகின்ற தீக்ஷை இந்த புணுல் போடுவது.

இதை மீறி பன்றிக்கு புணூல் போடும் போராட்டத்தை நடத்தினால் நித்யானந்த பீடத்தின் சார்பில் பன்றிகளுக்கு கருப்பு சட்டை அணிவித்து போராட்டம் நடத்தப்படும். தேவையில்லாமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காக மக்களுடைய மத உணர்வுகளை புண் படுத்துவதையே செய்து கொண்டிருக்கும் இதுபோன்ற சமூக விரோதிகள், சட்ட விரோதிகள், இந்து விரோதிகள் தங்கள் வாலை சுருட்டி, உங்கள் வாழ்க்கையை கவனித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று பணிவன்போடு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

எல்லோரும் யக்ஞோபவீதம் அணியுங்கள், காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்யுங்கள். சமய தீட்சை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று வருகின்ற அனைத்து இனத்தவருக்கும் மதத்தவருக்கும் திருவண்ணாமலையில் யக்ஞோபவீதம் அளிக்கப்பட்டு, காயத்ரி தீக்ஷை அளிக்கப்பட்டு, சமய தீட்சை அளிக்கப்படும்.

அது போராட்டம் அல்ல வேரோட்டம். நீ எத்தனை போராட்டம் செய்தாலும் எங்கள் வேரோட்டத்தை நிறுத்த முடியாது. என்னுடைய பக்தர்கள், சீடர்கள், சன்யாசிகள், பிரம்மச்சாரிகள் யக்ஞோபவீதம் தாங்குகின்ற எல்லோரும் இந்த போராட்டத்தை எதிர்ப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நம்முடைய சன்யாசிகள் சைவ சம்பிரதாயத்தில், வேதாந்த சம்பிரதாயத்தில், சன்யாசிகள், யக்ஞோபவீதம் அணிவதில்லை. ஆனால் யக்ஞோபவீதத்திற்கு சமமாகத்தான யோக வல்லாடு அணிகின்றோம். யக்ஞோபவீதம் அணிகின்ற பௌதிக பிரம்மச்சாரிகள் நைஷ்டிகப் பிரம்மசாரிகள், கிரஹஸ்தர்கள், யோக வல்லாடு அணிகின்ற சன்யாசிகள் இவர்கள் எல்லோருக்கும் இந்த போராட்டத்தை எதிர்ப்பது அடிப்படைக் கடமை!

பெரிய பிரச்சினையே என்னன்னா? அவங்க ஏதோ பண்ணிட்டுப் போறாங்க, நாம் பூணுல் கரெக்டாதானப்பா இருக்கு, ‘ஓ! உங்க பூணுலை வந்து அறுக்கற வரைக்கும் நமக்கு இல்லை’ அப்படீன்னு படுத்திருப்போமில்லையா? அப்படிப் படுத்திருந்தீங்கன்னா அவங்க வந்து அறுக்கப்போறது உங்க பூணுலை இல்ல.. தலையன்னு சொல்ல வந்தேங்கையா! சாஸ்திரப் பிரமாணம் காமிக ஆகமம் உத்தரபாதத்தில், மிகத்தௌிவாக யக்ஞோபவீதத்தை அளிக்க வேண்டிய விதிகளைப் பற்றி விளக்குகின்றது. சாஸ்திரப் பிரமாணம் போல் நாம் வாழுகின்ற நம் வாழ்க்கை முறை நம்முடைய மத சுதந்திரம். இதை அவதூறு செய்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இதை அவதூறு செய்வதற்கு யாருக்கும் எந்த விதத்திலும் உரிமை கிடையாது. இந்தியா, இந்திய நாட்டின் அரசியல் சாசனம் நம்முடைய மத வழிபாடுகளை நாம் செய்வதற்கு உரிமை அளித்திருக்கின்றது. யாருடைய மத உரிமையையும் அவதூறு செய்வதற்கு உரிமை அளிக்கவில்லை. யக்ஞோபவீதத்தை நாங்கள் மிகுந்த பக்தியோடு வழிபடும் யக்ஞோபவீதத்தை உங்கள் வெறுப்பிற்கு பலியாகியிருக்கின்ற பன்றிக்கு அளிப்பது, போடுவது மத உணர்வுகளை புண்படுத்தும் செயல். பன்றி எங்களுக்கு வேண்டுமானால் புனிதமாக இருக்கலாம், உங்களுக்கு நீங்கள் புனிதம் என்கின்றன நோக்கில் அதற்கு பூணுல் போடவில்லை. உங்கள் நோக்கம் எங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவது. நிச்சயமாக பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். அன்னை காயத்ரி, பிரத்யங்கராவாகவும் மாறுவதற்கு சக்தி படைத்தவள்! இதை கடுமையாக கண்டிக்கின்றேன். பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை கடுமையாக கண்டிக்கின்றேன். இதை எதிர்க்க வேண்டியது, இந்து மதத்தை வாழுகின்ற என்னுடைய எல்லா சீடர்களுடைய பொறுப்பு. கடமை!"


தியான சத்சங்கம்_சாஸ்திர பிரமாணம்

" ஆத்மஞானத்தை குருகிருபையே நல்கும், குருவின் உபதேசத்தாலேயே அஞ்ஞானம் அழியும்.

குருரேகோ ஹி ஜாநாதி ஸ்வரூபம் தேவமவ்யயம் | தத்ஜ்ஞாநம் தத்ப்ரஸாதேந நாந்யதா ஶாஸ்த்ர கோடிபி: ||

ஶ்வரூபஜ்ஞாநசூ'ந்யேந க்ரு'தமப்யக்ரு'தம் பவேத் | தபோ ஜபாதி்கம் தேவி ஸகலம் பாலஜல்பவத் ||

மாற்றமற்ற பரம்பொருளைப் பற்றிய உண்மை சொரூபத்தை (ஆத்ம ஞானத்தை) அறிந்தவர் குரு ஒருவரே. இந்த ஞானத்தை குரு கிருபையாலன்றி கோடிக்கணக்கான சாஸ்திரங்களாலும்கூட ஒருவன் பெற முடியாது.

தேவி! ஆத்மஞானம் இன்றிய தவம், மந்த்ர ஜபம் போன்ற அனைத்தும் குழந்தையின் மழலைக்கு நிகரே; பயனற்றவையே.

- குருகீதை (பரம்பொருள் பரமசிவனார் பார்வதி தேவிக்கு உபதேசித்தது)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பரமசிவ பரம்பொருளின் நேரடி செய்திகளை கைலாஸாவிலிருந்து தமது சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துகிறார்.

பகவான் அவர்கள் அனைத்து நிலை ஜீவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் உபதேசம் அருள்கிறார். ஒரு ஜீவனின் உயிர் எந்த நிலையில் இருந்தாலும், அது மிகுந்த உற்சாகத்தோடும் வாழ்க்கையை நோக்கிய மிகுந்த உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும், வேகத்தோடும், இயங்குகின்ற நிலையில் இருந்தாலும், அல்லது தளர்ந்து சோர்ந்து படுக்கையை விட்டே அசையமுடியாத நிலையில் இருந்தாலும், அல்லது மாயை என்ற மன உளைச்சலில் மூழ்கி தன்னை மறந்து வீழ்ந்து கிடந்தாலும், ஒரு ஜீவன் எந்த நிலையில் இருக்குமானாலும் அது அடையப்பட வேண்டியது பரமசிவ பரம்பொருளோடு சாயுஜ்யநிலையே என்பதை அருள்கிறார். பரமசிவப் பரம்பொருள் பிரபஞ்சத்தின் அடிப்படை அறிவியலாக தன் அரூப ரூபத்திலிருந்து அளித்த வேதங்களும், அதை வாழ்க்கையில் சாத்தியமாக்கிக் கொள்ளும் பயன்பாட்டுத் தொழில் நுட்பமாக அருளிய ஆகமங்களையும் அருளி ஒவ்வொரு ஜீவனுக்கும் வழிகாட்டுகிறார். "