2012 ஜூலை தியான சத்சங்கம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

தியான சத்சங்கம் (Tamil Satsangs)

வருடம்  : 2012

நாள் :ஜூலை 2012

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : தியான சத்சங்கம்

சொற்பொழிவின் தலைப்பு : சிவசூத்திரம் - அறிமுகம்

நடைபெற்ற இடம் : கைலாஸா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : கைலாஸா

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1 லட்சம்

வீடியோ

2012 ஜூலை தியான சத்சங்கம்


தியான சத்சங்கம்_விவரனை

எழுதப்பட்டதன் நகல் (Transcript) :

"சிவ சுத்திரம் ஒரு அறிமுகம்:

நாட்டினுடைய தெற்கு மூலையிலே ""சிவம்"" என்கின்ற தத்துவத்தின் சக்தி வௌிப்பாடு லீலைகளாக மதுரையிலே மலர்ந்தது. சிவம் என்கின்ற தத்துவத்தின் வௌிப்பாடு நாட்டினுடைய வடக்கின் மூலையான காஷ்மீரத்திலே சிவ சுத்திரங்களாக மலர்ந்தது. காஷ்மீரத்திலே தத்துவம் புத்தியின் வௌிப்பாடும் தென் தமிழ்நாட்டில் மதுரையிலே விளையாடல்கள் லீலைகள் சக்தியின் வௌிப்பாடும் நிகழ்ந்தது. புத்தியைத் தரும் சிவ சுத்திரத்தையும் சக்தியைப் பற்றி சொல்லும் லீலைகளையும் ஒன்றாய் நாம் புரிந்து கொள்ளும் பொழுது நம்மையே அறியாது பக்தி நமக்குள் மலருகின்றது. புத்தியும், சக்தியும், பக்தியும் மலரும் பொழுது நம் வாழ்க்கை இயற்கையாகவே ஜீவன் முக்தியோடு அமைகின்றது. ஹ்ருத்யாகாசே நிலீநாக்ஷஹ பத்மசம்புடம மத்யகஹ அனன்யசேதாசுபஹே பரம் சௌபாக்யம் ஆப்னோயாத் அனைத்து நற்பாக்கியங்களின் வடிவானவளே! அன்னை பார்வதி மீனாட்சி பிராட்டியாரை நோக்கி ஈசன் உரைக்கின்ற வார்த்தைகள் : அனைத்து நற்பாக்கியங்களின் வடிவானவளே ! கண்களை மூடி மனத்துடன் கூடிய அனைத்து இந்திரியங்களையம் ஒருங்கிணைத்து இதய தளத்தில் அமைந்திருக்கும் தாமரைப் புவின் மத்தியில் இருக்கும் மந்திரத்தைத் தியானிக்கும் ஒருவர் மிக உயர்ந்த ஆன்மீக அனுபுதியைப் பெறுகின்றார். அருமையான ஒரு தியான நுட்பத்தை எம்பெருமான் இந்த சுத்திரத்திலே வௌிப்படுத்துகின்றார். மிகவும் சக்தி வாய்ந்த நேரடியாக ஞான நிலையை நமக்கு அருளக்கூடிய தியான நுட்பம். படிப்படியாகப் பார்ப்போம் : ரொம்ப அழகா பகவான் ஈஸ்வரன் செய்முறையை வழிமுறையை அளிக்கின்றார். சிவ சுத்திரத்தினுடைய முக்கியத்துவம் என்னவென்றால் தத்துவமோ வேறு விதண்டாவாதங்களோ கண்டன மண்டனங்களோ எதுவுமே இல்லாத நூல் இந்த நூல். நேரடியாக செய்முறைகளுக்கு வருகின்றார் எம்பெருமான். நேரடியான செய்முறை. இதைச்செய் இந்த ஞான நிலையை நீ அடைவாய். அதோட ஈஸ்வரன் முடித்து விடுகின்றார். அருமையான சுத்திரம் முதல்படி : கண்களை மூடி’ இந்த வார்த்தை கண்களை மூடி என்கின்ற வார்த்தையை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் கண்களை மூடுகின்றோம். ஆனால் மீண்டும் கண்ணுக்குள்ளே நம்முடைய கற்பனைத் திரையிலே பல்வேறு நிகழ்வுகளும் வார்த்தைகளும் எண்ண ஓட்டங்களும் சிந்தனைகளும் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. வௌியிலே காட்சிகளைக் காண்பது. உள்ளுக்குள் காட்சிகளைக் காண்பது என்கின்ற இரண்டு செயலில் ஏதாவது ஒன்றை மாறி மாறிச் செய்து கொண்டிருக்கின்றோம். கண் இமை திறந்தால் வௌியிலே காட்சிகள் மாறுகின்றன. இமைகளை மூடினாலும் உள்ளுக்குள்ளே காட்சிகள் மாறி ஓடிக்கொண்டேயிருக்குமானால் நீங்கள் கண்களை மூடவில்லை. கண் இமைகளைத்தான் மூடி இருக்கின்றீர்கள். இங்க எம்பெருமான் சொல்கின்றார் கண்களை மூடி கண் இமைகளை மூடி அல்ல, அப்படியென்றால் உள்ளுக்குள்ளே காட்சி மாற்றங்கள் எண்ண ஓட்டங்கள் ஓடுவதையும் நிறுத்த வேண்டும். அடிப்படையான ஒரு வார்த்தை கண்களை மூடி அந்த வார்த்தைக்கே ஆழமான பொருள் உண்டு. கண்களை மூடுவது சாதாரண வேலையல்ல. கண் இமைகளை மூடுவது சாதாரண வேலை. ஆனால் கண்களை மூடுவது சாதாரண வேலையல்ல. கண்களை மூடுவது என்றால் உள்ளுக்குள்ளேயும் கூட எந்த எண்ண ஓட்டமும் இல்லாது எந்த மன ஓட்டமும் இல்லாமல் எந்த விதமான உணர்வு ஓட்டமும் இல்லாமல் இருத்தல்.

ஹ்ருத்யாகாசே நிலீநாக்ஷஹ பத்மசம்புட மத்யகஹ அனன்யசேதாசுபஹே பரம் சௌபாக்யம் ஆப்னோயாத் கண்களை மூடி. எப்படிக் கண்களை மூடுவது. பதஞ்சலி அருமையாக யோகசுத்திரத்திலே விளக்குகின்றார். கண் இமைகளை மூடி உள்ளுக்குள்ளே இருக்கும் கருவிழிகளை எந்த விதமான சிறிய அசைவு கூட இல்லாமல் மனதாலே நிறுத்தினீர்களானால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு ""கருவிழி இரண்டும் கருங்கல்லைப்போல மாறியதாக பாவனை செய்தீர்களானால் கருவிழியினுடை மெதுவான எந்த அசைவுகளையும் தடுத்து நிறுத்துவீர்களானால், அந்தக் கருவிழியின் அசைவு அடங்கும்பொழுது தானாகவே கண்ணுக்குள்ளே காட்சிகள் அசைவதை, இயங்குவதை தடுத்து நிறுத்திவிட முடியும்"". கண்ணுக்குள்ளே காட்சிகள் இயங்குவதும். நாவுக்குள்ளே வார்த்தைகள் இயங்குவதும் மனம் அடங்காமல் இருப்பதற்கான அறிகுறிகள். கண்ணுக்குள்ளே காட்சிகள் இயங்காது இருத்தல், நாவுக்குள்ளே வார்த்தைகள் இயங்காது இருத்தல் அதாவது தொண்டைக் குழியிலே நாக்கு உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாது துடித்துக் கொண்டேயிருக்குமானால் உங்களையும் மீறி வார்த்தைகள் ஓடிக்கொண்டேயிருக்கும். அதேபோல கண்ணுக்குள்ளே உங்களையும் அறியாமல் கண் அசைவு நிகழ்ந்து கொண்டேயிருக்குமானால் காட்சிகள் ஓடிக்கொண்டேயிருக்கும். நாக்கிலே வார்த்தைகளும், கண்ணிலே காட்சிகளும் இயங்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். என்ன செய்ய வேண்டுமோ அதற்குள் இறங்குவோம். தொண்டைக்குழியிலே மனதை ஓன்றாக்கி நாக்கின் அசைவை நிறுத்தினீர்களானால் உள்ளே எண்ண ஓட்டம் நின்றுவிடும். கண் கருவிழியிரண்டையும் ஸ்திரமாக்கி கண் கருவிழியின் அசைவை நிறுத்தினீர்களானால் எண்ண ஓட்டம் மனதிற்குள் படங்களைப் பார்க்கின்ற மன ஓட்டம் அடங்கிவிடும். எம்பெருமான் ஈஸ்வரன் முதல் செய்தியாக செய்முறையாக கண்களை மூடி என்கின்ற வார்த்தையை விளக்குகின்றார்உரைக்கின்றார் அடுத்த இன்ஸ்ட்ரக்ஷன் செய்முறை: மனதுடன் கூடிய அனைத்து இந்திரியங்களையும் ஒருங்கிணைத்து. இது ரொம்ப ஆழமான வார்த்தை. நாக்கு அப்படின்னா அதில சுவைப்பது என்கின்ற குணம் புலன் சுவையை உணர்ந்து இது நற்சுவை தீய சுவை என்று நமக்கு விளக்குவது இந்திரியம். நல்ல சுவைதான் வேண்டும். தீய சுவை வேண்டாம் என்கின்ற கட்டுறு மனப்பாங்கை உருவாக்குவது மனம். இந்த மூன்றுமே அடங்கும் பொழுது தான் சுவை சார்ந்த பந்தங்களிலிருந்து நீங்கள் விடுபடுகின்றீர்கள். நாக்கு மட்டும் அடங்கினாலோ நாக்குக்குப் பின்னால் பகுத்தறியும் இந்திரியம் மட்டும் அடங்கினாலோ நீங்கள் முழுமையாக சுவையினால் ஏற்படுகின்ற பந்தத்திலிருந்து விடுபவதில்லை. சில நேரத்தில நாக்கினாலே உண்ண முடியாது. பிரித்து சொல்லுகின்ற மனமான நற்சுவை, தீஞ்சுவை என்று பிரித்து சொல்லுகின்ற மனமான இந்திரியம் அடங்கிவிட்டிருக்கலாம். புலனும், இந்திரியமும் அடங்கிவிட்டாலும்கூட வாசனையினால் கூட நாக்கினுடைய மனப்பாங்கு கட்டுறு மனப்பாங்கு விழிப்படையும் வாய்ப்பு உண்டு. ஒரு சின்ன உதாரணத்திற்கு சொல்லணும்னா அப்ப தான் சாப்பிட்டு முடிச்சிருப்பீங்க. இதுக்கு மேல சாப்பிடறதுக்கு நாக்குக்கு தேவையிருக்காது. திகட்டிய நிலையிலே நாவிருக்கும். ரொம்ப சாப்பிட்டு முடிச்சி இதுக்கு மேல சாப்பிட முடியாதுங்கற நிலையிலதான் இந்திரியமும் இருக்கும். ஆனா ஒரு ஹோட்டல் வழியா கார்ல போயிட்டு இருக்கும்பொழுது அந்த ஹோட்டலோட ஸ்மெல் என்னப் பண்ணுது? உங்களுக்குள் உணவு சார்ந்த எல்லா மனப்பாண்மை உழனெவைழைெபைெ கட்டுறு மனப்பாங்கையும் விழிப்படையச் செய்கின்றது. வெறும் புலன் அடங்குவதால் வெறும் இந்திரியம் அடங்குவதால் உங்களுடைய சுவையால் ஏற்படுகின்ற எல்லா பந்தங்களிலிருந்தும் நீங்கள் விடுபட்டுவிடுவதில்லை. புலனும், இந்திரியமும் இந்திரியங்கள் உருவாக்கிக் கொடுக்கின்ற மன அமைப்பை தாங்குகின்ற மனமும் சோ்ந்து அடங்கும் பொழுது தான் புரணமான சுதந்திரம் வருகின்றது. உதாரணத்திற்குக் காது. காது என்பது புலன். நல்ல இசை பிடிக்காத இசை என்று பிரித்து அளிக்கின்ற சக்தி இந்திரியம். நல்ல இசை மட்டுமே வேண்டும். பிடிக்காதது வேண்டாம் என்று சொல்லுகின்ற குணம் மனம். அந்த பேட்டர்ன்ஸ். அதுதான் மனம். பேட்டர்னா கட்டுறு மனப்பாங்கு. இந்த வார்த்தைகளுக்கு சங்க கால தமிழ் முறையிலே வார்த்தைகள் இருந்ததேத் தவிர நடைமுறைத் தமிழிலே பல்வேறு வார்த்தைகள் இல்லை. அதனால் தான் நிறைய தமிழ் வார்த்தைகளை நானே உருவாக்க வேண்டியத் தேவை இருக்கின்றது. கட்டுறு மனப்பாங்கு அப்படின்னா உழனெவைழைெபைெ. இந்த வார்த்தையை ஆழமா புரிஞ்சுக்கங்க . காலைல எந்திரிச்சவுடனே காஃபி குடிச்சு பழகிருச்சுன்னா பத்து வருஷம் கழிச்சு அந்தக் காஃபி இல்லாமல் இருக்க முடியாது. கண்டிஷனிங். அந்தக் கண்டிஷனிங்கைத்தான் கட்டுறு மனப்பாங்குன்னு சொல்றேன். ஹ்ருத்யாகாசே நிலீநாக்ஷஹ பத்மசம்புடம மத்யகஹ அனன்யசேதாசுபஹே பரம் சௌபாக்யம் ஆப்னோயாத் கண்களை மூடி மனத்துடன் கூடிய அனைத்து இந்திரியங்களையும் ஒருங்கிணைத்து அப்படின்னா புலன், இந்திரியம், மனம் மூன்றையும் ஒன்றாக்கி, இந்திரியங்கள் பதினொன்று. கர்மேந்திரியம் ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, இந்திரியங்களுடைய ஆதாரமாக இருக்கின்ற மனம் என்பது மற்றொரு இந்திரியம் ஒன்று. மொத்தம் பதினோரு இந்திரியங்கள். இந்தப் பதினோரு இந்திரியங்களையம் மனதோடேயே ஒன்றாக்கி ஒன்றிணைத்து. அப்படின்னா முழுக்க முழுக்க முழுக்க வௌி உலகத்திலிருந்து நம்மை ஈர்த்துக்கொண்டு ""ஆமை தன்னுடைய நான்கு கால்களையும் தலையையும் உள்ளிழுத்துக் கொள்வதைப்போல நம்முடைய உணர்வு முழுவதையும் உள்ளே இழுத்துக் கொள்ளுதல்"" இது போன்று ஒருங்கிணைத்து இதயதளத்தில் அமைந்திருக்கும் தாமரைப்புவின் மத்தியில் ""ஹ்ருத்யாகாசே நிலீனாக்ஷகஹா - இந்த இடத்திலே ஈஷ்வரன் ஹ்ருதயாகாசம் என்கின்ற வார்த்தையை உபயோகிக்கின்றார். ஹ்ருதய பத்மம் என்கின்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை. ஹ்ருதய பத்மம்னா அனாஹத சக்ரம் ஹ்ருதயாகாசம் என்று எம்பெருமான் சொல்வதனால் ஆனந்த கந்தம். ஹ்ருதயத்திற்கு அருகாமையிலே இருக்கின்ற ஆகாசம் ஆனந்த கந்தம். ஓவ்வொரு சிவாலயமுமம் மனிதனுடைய மேனியை விரிவுபடுத்தி வைத்தது தான் ஓவ்வொரு சிவாலயங்கள் சிவாலயமும். பாதங்கள் தான் கோபுரங்கள் விரல்கள் தான் கலசங்கள்.. ஆகமத்தின்படி ஸ்தாபத்ய வேதத்தின்படி மனிதனுடைய மேனியைச் சார்ந்துதான் ஆலயம் அமைக்கப்படுகின்றது. எல்லா ஆலயத்திலும் ஆனந்த கந்த பகுதியிருக்குமிடத்தில் தான் ஈசன் ஆனந்த நடனமிடும் அம்பலம் இருக்கும். ஆக்ஞா சக்கரம் தான் கர்ப்ப க்ருஹம். கர்ப்பக்ருஹத்தில் இருக்கின்ற தெய்வீகத் திருமேனி பின்னால் இருக்கும் வெட்டவௌி தான் சஹஸ்ராரம். திருமேனி ஆக்ஞா சக்கரம் வெட்ட வௌி சஹஸ்ராரம். வௌியிலிருந்து உள் செல்லும்பொழுது பார்த்தீர்களானால் வழி வழியாய் ஆண் குறியைத்தான் த்வஜஸ்தம்பம் என்று சொல்வார்கள். அப்படியே உள்ளே போயிட்டிருந்தோம்னா ஆனந்த கந்த சக்கரம் இருக்க வேண்டிய இடத்தில்தான் அம்பலம் இருக்கும். சிதம்பரத்தில் பொன்னம்பலம். மதுரையில் வௌ்ளி அம்பலம் குற்றாலத்தில் சித்ரசபை. வேறு வேறு விதமான அம்பலங்களாக சபைகளாக இருக்கலாம். ஆனால் ஆனந்த கந்தம் ஹ்ருதாயாகாசம் தான் எம்பெருமான் பிரபஞ்ச பெருந்தாண்டவத்தை பிரபஞ்சப் பெருங்கூத்தை நடத்துகின்ற இடம். ஹ்ருதய ஆகாசத்திலே நம் உணர்வை எல்லாம் ஒன்றாக்கி அங்கே ஔிருகின்ற நிலைப்பெற்றிருக்கின்ற மந்திரத்தை தியானிக்கும் ஒருவர் உயர்ந்த ஆன்மீக் அனுபுதியை அடைகின்றார். அங்க இருக்கின்ற மந்திரத்தை ""தியானியுங்கள்"". எம்பெருமான் உச்சரியுங்கள் என்று சொல்லலை. அனன்யசேதா..ஹ்ருத்யாகாசே நிலீநாக்ஷஹ பத்மசம்புடம மத்யகஹ, அனன்யசேதாசுபஹே பரம் சௌபாக்யம் ஆப்னோயாத்

எம்பெருமான் உச்சரியுங்கள் என்று சொல்லவில்லை. அஜபாஜபம் செய்யுங்கள் என்று கூட சொல்லவில்லை. அங்கு தானாகவே, இயற்கையாகவே பொங்குகின்ற மந்திரத்தை தியானியுங்கள் என்று தான் சொல்லுகின்றார். கரிக்குருவிக்கு உபதேசித்து, நாரைக்கு முக்தியளித்து, ஈன ஜென்மங்கள் என்று சொல்லப்படுகின்ற உணர்வு விழிப்படையாதவை என்று சொல்லப்படுகின்ற சரீரங்களுக்கெல்லாம் கூட உபதேசமும், முக்தியும் அளித்து லீலைகள் செய்த சுந்தரேசன், நேரடியாய் நாம் எல்லோரும் உயர்நிலை அடைவதற்காக கொடுக்கின்ற இனிமையான தியான நுட்பம் ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு படியாக விளக்குகின்றேன். கண்களை மூடி, புலன், இந்திரியம் மனம் எல்லாவற்றையும் ஒன்றாக்கி இதயமத்தியிலே இருக்கின்ற ஆனந்தகந்த இடத்தில், இதயத்திற்கு கொஞ்சம் கீழே இதய மத்திக்கு கொஞ்சம் கீழ அனாஹதத்துக்கு கொஞ்சம் கீழ, ஆனந்தகந்த மத்தியிலே தானாகவே பொங்கிக் கொண்டிருக்கின்ற மந்திரத்தை ஆழ்ந்து கேளுங்கள். தானாகவே என்ன மந்திரம் பொங்குகிறது? ஆழ்ந்து உணர்வை ஒன்றாக்கி கேட்டீர்களானால் தானாகவே அந்த மந்திரம் பொங்குவதைப் பார்ப்பீர்கள். பேசா எழுத்து என்றும் சொல்லாத மந்திரம் என்றும் மௌன உபதேசம் என்றும் அந்த மந்திரத்தைத்தான் சொல்லுகின்றோம். சொல்லவொண்ணாத அந்தப் பெருமந்திரத்தை சாந்யத்தின்மூலமாய் சக்தி தரிசனத்தின் மூலமாய் தீக்ஷையின் மூலமாய்த் தான் உள்வாங்க முடியும். "


தியான சத்சங்கம்_சாஸ்திர பிரமாணம்

" ஆத்மஞானத்தை குருகிருபையே நல்கும், குருவின் உபதேசத்தாலேயே அஞ்ஞானம் அழியும்.

குருரேகோ ஹி ஜாநாதி ஸ்வரூபம் தேவமவ்யயம் | தத்ஜ்ஞாநம் தத்ப்ரஸாதேந நாந்யதா ஶாஸ்த்ர கோடிபி: ||

ஶ்வரூபஜ்ஞாநசூ'ந்யேந க்ரு'தமப்யக்ரு'தம் பவேத் | தபோ ஜபாதி்கம் தேவி ஸகலம் பாலஜல்பவத் ||

மாற்றமற்ற பரம்பொருளைப் பற்றிய உண்மை சொரூபத்தை (ஆத்ம ஞானத்தை) அறிந்தவர் குரு ஒருவரே. இந்த ஞானத்தை குரு கிருபையாலன்றி கோடிக்கணக்கான சாஸ்திரங்களாலும்கூட ஒருவன் பெற முடியாது.

தேவி! ஆத்மஞானம் இன்றிய தவம், மந்த்ர ஜபம் போன்ற அனைத்தும் குழந்தையின் மழலைக்கு நிகரே; பயனற்றவையே.

- குருகீதை (பரம்பொருள் பரமசிவனார் பார்வதி தேவிக்கு உபதேசித்தது)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பரமசிவ பரம்பொருளின் நேரடி செய்திகளை கைலாஸாவிலிருந்து தமது சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துகிறார்.

பகவான் அவர்கள் அனைத்து நிலை ஜீவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் உபதேசம் அருள்கிறார். ஒரு ஜீவனின் உயிர் எந்த நிலையில் இருந்தாலும், அது மிகுந்த உற்சாகத்தோடும் வாழ்க்கையை நோக்கிய மிகுந்த உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும், வேகத்தோடும், இயங்குகின்ற நிலையில் இருந்தாலும், அல்லது தளர்ந்து சோர்ந்து படுக்கையை விட்டே அசையமுடியாத நிலையில் இருந்தாலும், அல்லது மாயை என்ற மன உளைச்சலில் மூழ்கி தன்னை மறந்து வீழ்ந்து கிடந்தாலும், ஒரு ஜீவன் எந்த நிலையில் இருக்குமானாலும் அது அடையப்பட வேண்டியது பரமசிவ பரம்பொருளோடு சாயுஜ்யநிலையே என்பதை அருள்கிறார். பரமசிவப் பரம்பொருள் பிரபஞ்சத்தின் அடிப்படை அறிவியலாக தன் அரூப ரூபத்திலிருந்து அளித்த வேதங்களும், அதை வாழ்க்கையில் சாத்தியமாக்கிக் கொள்ளும் பயன்பாட்டுத் தொழில் நுட்பமாக அருளிய ஆகமங்களையும் அருளி ஒவ்வொரு ஜீவனுக்கும் வழிகாட்டுகிறார். "