15 ஆகஸ்ட் 2012 மருத்துவ முகாம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

மருத்துவ முகாம் (Medical Camp)

வருடம்  : 2012

நாள் :15 ஆகஸ்ட் 2012

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : மருத்துவ முகாம்

மருத்துவர்களின் விபரம் : பெண்களுக்காக குழந்தைப்பேறு சிறப்பு மருத்துவம், பொது மருத்துவம் பார்க்கப்பட்டது.

அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் : அனைவருக்கும் பொது பரிசோதனை செய்யப்பட்டது, குறிப்பிட்ட நோய்க்கு ஆலோசனைகளும் அதற்கான மருந்துகளும் வழங்கப்பட்டது.

நடைபெற்ற இடம் : திருப்போரூர்

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : திருப்போரில் உள்ள கைலாஸா (Kailaasa in Thiruporur)

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1500 நபர்கள்

நிகழ்வின் விவரனை : திருப்போரூரில் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாணைப்படி தீட்சை பெற்ற சீடர்களால் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு வந்த அனைவருக்கும் இலவச தியான சிகிச்சை வழங்கப்பட்டது, அன்னதானம் செய்யப்பட்டது.


படங்கள்



மருத்துவ முகாம்_சாஸ்திர பிரமாணம்

"நமது சாஸ்திரங்கள் தேகத்தைப்பற்றியும், உயிரின் நோக்கத்தை தேகத்தால் அடைவது பற்றியும் விவரித்துள்ளது.

தேகம் அழியக்கூடியதே

க்ரு'மி-கோடிபிராவிஷ்டம் துர்கந்த-குலதூஷிதம் |

அநித்யம் து:கநிலயம் தேஹம் வித்தி-வராநநே||

அழகிய முகம் படைத்தவளே! கோடிக்கணக்கான கிருமிகள் கொண்டதும், துர்நாற்றம் பொருந்தியதும், துக்கம் நிறைந்நதுமான இத்தேகம் அழியக்கூடியது என்பதை அறிவாயாக! - குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)

தேகம் அழியக்கூடியதே...அதனால் வாழும் காலத்தில் அதை மிகவும் உன்னதமான நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும். ஆன்ம ஞானத்தை பெற்று தேகத்தில் வாழும் பொழுதே மோட்சத்திற்கு வழிதேட வேண்டும்.

குருவே சிறந்த வைத்தியர்

அஜ்ஞாநேநாஹிநா க்ரஸ்தா: ப்ராணிநஸ்தான் சிகித்ஸக: |

வித்யாஸ்வரூபோ பகவாந் தஸ்மை ஶீகுரவே நம: ||

அஞ்ஞானமென்கின்ற பாம்பினால் கவ்வப்பட்ட ஜீவன்களைக் கடைத்தேற்ற பிரஹ்மஞான அனுபூதியை அளிக்கவல்லதான மஹாமந்திரத்தை அறிந்தவரான குருவைத் தவிர, வேறொரு வைத்தியர் இல்லை. பகவானாகிய அந்த ஶீ குருவுக்கு நம்ஸ்காரம்.

- குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மஹா வைத்தியராவார். பல லட்சக்கணக்கான ஜீவர்களுக்கு குருவாக தீட்சையளித்து ஞான அனுபூதி தந்து, ஞான வைத்தியராக தியான சிகிட்சை அளித்து உடல்-மன சிகிட்சையும் அளித்ததோடு மட்டுமல்லாது கைலாஸாவின் மூலமாக எண்ணற்ற மருத்துவ முகாம்களை நடத்தி பிணிபோக்கும் சிகிட்சை அளிக்கின்றார். கைலாஸாவின் வைத்தியாலயா குழு ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கிலும் ஏற்படுத்துகிறது.

கைலாஸா'வின் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பல லட்சக்கணக்கான பேர் பயனடைந்துள்ளனர். "