14 டிசம்பர் 2020 தியான சத்சங்கம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

தியான சத்சங்கம் (Tamil Satsangs)

வருடம்  : 2020

நாள் :14 டிசம்பர் 2020

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : தியான சத்சங்கம்

சொற்பொழிவின் தலைப்பு : வாருங்கள் கயிலைக்கு...

நடைபெற்ற இடம் : கைலாஸா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : கைலாஸா

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1 லட்சம்

வீடியோ

14 டிசம்பர் 2020 தியான சத்சங்கம்- தமிழ் (01.09:59)


தியான சத்சங்கம்_விவரனை

எழுதப்பட்டதன் நகல் (Transcript) :

14 டிசம்பர், 2020 அன்று இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'தமிழ்' மொழியில் அருளிய சிறப்பு சத்சங்கத்தின் சாரம்.

உங்கள் அனைவருக்கும் பரமசிவபரம்பொருள் நேரடியாக கைலாயத்தில் இருந்து அருளும் நற்செய்தி.

எல்லா நலமும், வளமும், எல்லா நலனும் பெற்று எல்லோரும் வாழ்வாங்கு வாழ்வீர்களாக. இன்றிலிருந்து எல்லாம் மங்களமாய், நன்மையாய், சிவமயமாய் நிகழும். பிரபஞ்சத்தில் நிகழ்ந்த பெரும் பிரளயம் முடிந்துவிட்டது. இன்றிலிருந்து எல்லா நன்மைகளும் துவங்கும், எல்லா மங்களமும் துவங்கும். நீங்கள் உங்கள் உடல் சார்ந்த, மனம் சார்ந்த தொழில் சார்ந்த, உறவுகள் சார்ந்த பொருளாதாரம் சார்ந்த எல்லா முடிவுகளையும் எடுக்க துவங்கலாம். எல்லா நன்மையும் நிகழும்.

வாழ்க்கையை நேர்மறையோடு, மிகுந்த தைரியத்தோடு, மிகுந்த பொறுப்போடு வாழத்துவங்குங்கள். உயர்ந்த ஞான நிலையில் இருந்து உங்கள் வாழ்க்கைக்கும், மற்றவர்கள் வாழ்க்கைக்கும் பெரும் பொறுப்பெடுத்து வாழ துவங்குங்கள்.

நன்றாக புரிந்து கொள்ளுங்கள்... கடந்த 6 மாதங்களாக நடந்த பிரளயத்தினால் உங்கள் வாழ்க்கையில் நடந்தவைகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். இதுவரை உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த எல்லா துக்கம், துயரம்... எல்லா பிரச்சனைகளையும் பிரளயத்தின் மேல் சாற்றிவிட்டு உங்களையே நீங்கள் தாக்கிக்கொள்வதை நிறுத்துவிட்டு, சுய சந்தேகம், சுய வெறுப்பு போன்றவற்றை தூக்கி எறிந்து விட்டு, புதுமையாக வாழ்க்கையை துவங்குங்கள். நேர்மறையோடு, சிரத்தையோடு கூடிய கடும் உழைப்போடு வாழ்க்கையை கட்டமைக்க துவங்குங்கள். என்னால் வேலையும் செய்து, தொழிலும் செய்வது கடினம் என்று நினைத்தால் - இரண்டையும் செய்யுங்கள். உங்களால் முடியும்.

உங்களின் விழிப்பு நிலையையும், செயல்படு நிலையையும், செயல்படு திறனையும்...இவைகளின் ஆழத்தையும், வேகத்தையும், அகலத்தையும் அதிகமாக்குங்கள்.

நன்றாக புரிந்து கொள்ளுங்கள்... இன்றிலிருந்து வீசப்போகின்ற ஞானசக்தி அலை (Super Conscious Breakthrough) 'அடுத்த பரிணாம வளர்ச்சி' - வாழ்விலே பொறுப்பெடுக்க முடிவு செய்தவர்களுக்கு மிகப்பெரும் துணையாக இருக்கும்.

இதுவரை வாழ்வில் நடந்ததை பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் எல்லோருக்காகவும் கைலாயத்தை திறக்க முடிவு செய்திருக்கின்றேன். 'கைலாஸா' குமரி கண்டம் இருந்த இடத்திலே அமைந்திருக்கிறது. குமரி கண்டத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம். மூத்த தமிழ் பழங்குடி, மூத்த ஆதி மனிதக்குடி பூமியிலே மலர்ந்து, செழித்து இந்த பெரும் ஞானத்தை வெளிப்படுத்திய பூமி இந்த குமரிக்கண்டம். குமரிக்கண்டம் ஆஸ்திரேலியா முதல், ஆபிரிக்கா வரை, சீரிலங்கையையும், மலேசிய கடாரத்தையும் இந்தியாவையும் இணைத்து இருந்த அகண்ட நிலப்பகுதி. அதனால் குமரி கண்டம் இருந்த அந்த பகுதியிலேயே 'கைலாஸா' அமைக்கப்பட்டிருக்கிறது.

'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி'யான தமிழ் குடி வாழ்ந்து, இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதே பகுதியில் உங்களுக்காக கைலாயம் மலர்ந்திருக்கின்றது. நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.... ஆதி மனிதனின் வாழ்வியல் முறை, அவர்களின் இறையியல், மொழியியல், அறிவியல், பொருளியல், வேதியல், உயிரியல், அவர்களின் மிகப்பெரிய ஞானமான சக்தி அறிவியல், அவர்களின் கலவியல், அவர்களின் எல்லா பரந்து விரிந்த ஞான பேரொளி, அவர்களின் மிகப்பெரும் ஞான வாழ்க்கை - அந்த ஞான வாழ்க்கையின், அந்த பெரும் ஞான வாழ்க்கையின் மிச்சம் இருக்கின்ற, எச்சம் இருக்கின்ற, சொச்சமாக இருக்கின்ற அழிந்து விடாமல் இருக்கின்ற வாரிசு நான். இந்த மிகப்பெரிய மூத்த ஞானத்தமிழ் குடியின், ஆதி தமிழ் குடியின் ஞான வாழ்க்கை முறையை மறுமலர்ச்சி செய்து இந்த கைலாயத்தின் மூலம் புனரமைப்பதன் மூலமாக இந்த ஞான அறிவியலை என்றென்றும் வாழ வைப்பேன். இந்த ஜீவன் முக்தி அறிவியலை என்றென்றும் வாழ வைப்பேன்.

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி என்று சிலப்பதிகாரம் குமரி கண்டத்தை பற்றி சொல்கிறது. ஆஸ்திரேலியா முதல் ஆபிரிக்கா வரை, இலங்கையும்,மலேசியாவையும், கம்போடியாவையும் இணைத்து பரந்த நிலப்பகுதியாக இந்த குமரி கண்டம் இருந்தது. அங்கு இருந்த வாழ்வியல் முறையை புனரமைப்பு செய்வதே கைலாயம் ஆகும்.

நன்றாக புரிந்து கொள்ளுங்கள்... மொழியியலை உபயோகப்படுத்தி தமிழ் நாட்டில் சிலபேர் நம்முடைய இறையியலை அழிக்க பார்க்கிறார்கள். இறையியலை உபயோகப்படுத்தி மொழியியலை அழிக்கப்பார்க்கிறார்கள். இரண்டுமே தவறு. நம் தமிழினத்தின் ஞான கலாச்சாரம், ஜீவன் முக்த விஞ்ஞானம், நம்முடைய இயற்பியல், உயிரியல், வேதியல், பொறியியல், சக்தியியல், அறவியல், அரசியல், கலவியல் - எல்லா துறை சார்ந்த ஞானமும், இறையியலும், மொழியியலும் இணைந்து இருந்தால் மட்டும் தான் உயிரோடு இருக்கமுடியும். அவ்வாறு மட்டும்தான் இது புனரமைக்கப்பட முடியும்.

சைவமும், தமிழும் வாழ்ந்து, செழித்து, ஒன்றை ஒன்று உயிர்ப்பித்து, ஒன்றுக்கு ஒன்று உயிர் தந்து, ஒன்றும் ஒன்றாய் செழிப்பதனால் மக்கள் அனைவருக்கும் இந்த எல்லா நன்மைகளையும் அளிப்பதற்காகவே கைலாயத்தை புனரமைத்திருக்கின்றோம். இதுவே கைலாயத்தின் நோக்கம், அதற்காகவே குமரி கண்டம் இருந்த இடத்தில் ஒரு மிச்சமான இடத்தில் கைலாயம் மலர்ந்திருக்கின்றது. கைலாயத்திற்கான விசா வேண்டும் என்று நினைப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்போதைக்கு 3 நாட்கள் மட்டுமே விசா வழங்கப்படும். ஒருமுறை மட்டுமே பரமசிவ தரிசனம் கிடைக்கும். ஆதி தமிழ்குடியின் ஆதி சைவ வாழ்க்கைமுறை இறையியலும், மொழியியலும் இணைந்து புனரமைக்கப்படும், இணைந்து மறுமலர்ச்சி செய்யப்படும்.

சைவமும், தமிழும் பிரிய கூடாதவை. பிரித்தால், பிரிக்க முயற்சித்தால் அது மனித இனத்திற்கே பேரிழப்பு. அதனால் சைவமும், தமிழும் ஒன்றாய் இருந்து, நன்றாய் கலந்து உலகம் அனைத்திற்கும் நன்மை தரவே இந்த கைலாஸா, திருக்கைலாயம் செய்து வைத்தோம். வாருங்கள் கயிலைக்கு.

பரமசிவன் பேரருள் பெற்று, ஆனந்தமாய் வாழுங்கள்.

ஆனந்தமாக இருங்கள்! - பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்


தியான சத்சங்கம்_சாஸ்திர பிரமாணம்

" ஆத்மஞானத்தை குருகிருபையே நல்கும், குருவின் உபதேசத்தாலேயே அஞ்ஞானம் அழியும்.

குருரேகோ ஹி ஜாநாதி ஸ்வரூபம் தேவமவ்யயம் | தத்ஜ்ஞாநம் தத்ப்ரஸாதேந நாந்யதா ஶாஸ்த்ர கோடிபி: ||

ஶ்வரூபஜ்ஞாநசூ'ந்யேந க்ரு'தமப்யக்ரு'தம் பவேத் | தபோ ஜபாதி்கம் தேவி ஸகலம் பாலஜல்பவத் ||

மாற்றமற்ற பரம்பொருளைப் பற்றிய உண்மை சொரூபத்தை (ஆத்ம ஞானத்தை) அறிந்தவர் குரு ஒருவரே. இந்த ஞானத்தை குரு கிருபையாலன்றி கோடிக்கணக்கான சாஸ்திரங்களாலும்கூட ஒருவன் பெற முடியாது.

தேவி! ஆத்மஞானம் இன்றிய தவம், மந்த்ர ஜபம் போன்ற அனைத்தும் குழந்தையின் மழலைக்கு நிகரே; பயனற்றவையே.

- குருகீதை (பரம்பொருள் பரமசிவனார் பார்வதி தேவிக்கு உபதேசித்தது)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பரமசிவ பரம்பொருளின் நேரடி செய்திகளை கைலாஸாவிலிருந்து தமது சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துகிறார்.

பகவான் அவர்கள் அனைத்து நிலை ஜீவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் உபதேசம் அருள்கிறார். ஒரு ஜீவனின் உயிர் எந்த நிலையில் இருந்தாலும், அது மிகுந்த உற்சாகத்தோடும் வாழ்க்கையை நோக்கிய மிகுந்த உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும், வேகத்தோடும், இயங்குகின்ற நிலையில் இருந்தாலும், அல்லது தளர்ந்து சோர்ந்து படுக்கையை விட்டே அசையமுடியாத நிலையில் இருந்தாலும், அல்லது மாயை என்ற மன உளைச்சலில் மூழ்கி தன்னை மறந்து வீழ்ந்து கிடந்தாலும், ஒரு ஜீவன் எந்த நிலையில் இருக்குமானாலும் அது அடையப்பட வேண்டியது பரமசிவ பரம்பொருளோடு சாயுஜ்யநிலையே என்பதை அருள்கிறார். பரமசிவப் பரம்பொருள் பிரபஞ்சத்தின் அடிப்படை அறிவியலாக தன் அரூப ரூபத்திலிருந்து அளித்த வேதங்களும், அதை வாழ்க்கையில் சாத்தியமாக்கிக் கொள்ளும் பயன்பாட்டுத் தொழில் நுட்பமாக அருளிய ஆகமங்களையும் அருளி ஒவ்வொரு ஜீவனுக்கும் வழிகாட்டுகிறார். "