06 பிப்ரவரி 2018 தியான சத்சங்கம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

தியான சத்சங்கம் (Tamil Satsangs)

வருடம்  : 2018

நாள் :06 பிப்ரவரி 2018

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : தியான சத்சங்கம்

சொற்பொழிவின் தலைப்பு : ஒரு ஜீவன் அடைய விரும்புவதும் அடையப்பட வேண்டியதும் என்ன?

நடைபெற்ற இடம் : கைலாஸா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : கைலாஸா

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1 லட்சம்

வீடியோ

06 பிப்ரவரி 2018 தியான சத்சங்கம்


தியான சத்சங்கம்_விவரனை

எழுதப்பட்டதன் நகல் (Transcript) :

"ஒரு ஜீவன் அடைய விரும்புவதும் அடையப் பட வேண்டியதும் என்ன?

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. மீண்டும் தியான சத்சங்கத் தொடரைத் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். சதாசிவப் பரம்பொருளே, சக்தி வௌிப்பாடாய், உணர்வில் பொங்கி, இதயத்தில் நிறைந்து, மூச்சில் முகர்ந்து, நாவில் வௌிப்பட்டு, உலகிற்கெல்லாம் நல்லதை செய்திடென்று வேண்டி சத்சங்கத்திற்குள் நுழைகின்றேன். வேதங்களின் உட்பொருளாக அதனுடைய காரணமாக, அதனுடைய நோக்கமாக, வேதங்களின் காமிகமாக சதாசிவ பரம்பொருள் நமக்கெல்லாம் உரைத்தருளிய காமிக ஆகமத்தில் இருந்து சில சத்தியங்களை தொடர்ந்து இந்த சத்சங்களின் மூலமாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அடைய விரும்புவதும் அடையப்பட வேண்டியதும், ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். அடைய விரும்புவதும் அடையப்பட வேண்டியதும். ஒரு உயிர் என்ன காரணத்திற்காக உயிர்த்து, மலர்ந்து, இயங்குகின்றதோ அது இறுதி வீடு பேராக அடையப் படவேண்டியது, ஆனால் அது உயிர்த்து மலர்ந்து இயங்கும் பொழுது அடைய விரும்புவது. இரண்டிற்கும் மிக பெரிய இடைவௌி உண்டு. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். உங்களை நீங்கள் எவ்வாறு உணர்க்கின்றீர்களோ, அவ்வாறே நீங்கள் அடைய வேண்டிய குறிக்கோளையும் நீங்கள் நிர்மாணம் செய்கின்றீர்கள். தன்னை ஏழை என்று மனதாலே உணர்கின்ற, உணர்வாலே உணர்கின்ற, ஒரு மனிதனை , ஜீவன் முக்தியை நோக்கி நீங்கள் என்ன முயற்சித்தாலும் விரட்ட முடியாது. ஆனால், ஜீவன் முக்தி பெற்றால் பெரும் செல்வம் கிடைக்கும். செல்வந்தனாக ஆகலாம் என்று சொன்னால் அதை நோக்கி அவன் ஓடும் வேகத்தை தடுக்க முடியாது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். அடையப் பட வேண்டியது, அடைய நினைப்பது. ஒரு உயிர் அடைய வேண்டியது மகாசதாசிவ பதவியாக இருக்கலாம். மஹாஸதாசிவ பதமாக இருக்கலாம். பதவி என்ற வார்த்தை இந்த இடத்தில் சாதாரணமாக, யார் வேண்டுமானாலும் அமர்கின்ற பதவி என்ற பொருளால் சொல்லப்படவில்லை. அவன் பதத்தைப் பற்றி அவனாய் மாறிவிடுகின்ற சாயுஜ்ய முக்தியை தான் பதவி என்கிற வார்த்தையால் இங்கு சுட்டி காட்டியுள்ளோம். ஆழ்ந்து கேளுங்கள். அடையப்பட வேண்டியது அடைய விரும்புவது. ஒரு ஜீவனின் உயிர் எந்த நிலையில் இருந்தாலும், அது மிகுந்த உற்சாகத்தோடு வாழ்க்கையை நோக்கிய மிகுந்த உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும், வேகத்தோடும், இயங்குகின்ற நிலையில் இருந்தாலும், அல்லது தளர்ந்து சோர்ந்து படுக்கையை விட்டே அசைய முடியாத நிலையில் இருந்தாலும், அல்லது மாயை எனும் மன உளைச்சலில் மூழ்கி, தன்னை மறந்து வீழ்ந்து கிடந்தாலும், ஒரு ஜீவன் எந்த நிலையில் இருக்குமானாலும் அது அடையப்பட வேண்டியது, மகாசதாசிவ பரம்பொருளோடு சாயுஜ்யநிலை. ஆனால் அடையப்பட அடைய விரும்புவது, அந்த ஜீவன் தன்னை எதோடு ஒன்று படுத்திக்கொண்டு உணர்கின்றதோ அதைச் சார்ந்து அமைகின்றது. தன்னை ஏழை என்று ஒரு உணர்வோடு அந்த ஜீவன் ஒன்று படுத்திக் கொள்ளுமானால் பரம்பொருளை அல்ல, பொருளைத் தேடித்தான் அது ஓடும். எது தன்னிடம் இல்லை என்று நினைக்கிறதோ அதை நோக்கிய செல்வது ஜீவனின் உயிர்ப்புத்தன்மை, உயிர்ப்பு குணம். அதுதான் உயிர்ப்பு குணம். இன்னேட் டெண்டெனசி அதன் உயிர்ப்பு குணம். தன்னிடம் இல்லாத ஒன்றை தேடி ஓடுவது, தன்னிடம் ஒன்று இல்லை என்று நினைத்து அதை நோக்கி இயங்குவது தான் ஜீவனின் உயிர்ப்புக் குணம். உயிர்ப்பு உணர்வு. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். எவன் தன்னை ஏழை என்று நினைகின்றானோ, அவன் பணம் தேடி ஓடுகின்றான், பொருள் தேடி ஓடுகின்றான், எவன் தன்னை அறிவில்லாதவன் என்று நினைக்கின்றானோ அவன் அறிவைத் தேடி ஓடுகின்றான். எவன் தன்னை பலமில்லாதவன் என்று நினைக்கின்றனோ, அவன் பலத்தை தேடி ஓடுகின்றான். எவன் தன்னை அதிகாரமில்லாதவன் என்று நினைக்கின்றனோ, அவன் அதிகாரத்தைத தேடி ஓடுகின்றான். உயிர் அடைய விரும்புவது, உயிர் அடைய வேண்டியது, இந்த இரண்டு வார்த்தைகளை நீங்கள் உள் வாங்கினீர்களானால் உங்களுக்குள் இருக்கும் பல்வேறு விதமான மோகங்கள் கரைந்து மறையும். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் மோகங்கள் கரைந்தால், உங்கள் உயிரின் காரணம் புரியும், காமியம் சித்திக்கும். உங்கள் உயிரின் காரணம் புரியும். நல்லா புரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு நாள் வரை, நீங்கள் உங்களை ஏழை என்ற முடிவில் இருக்கின்றீர்களோ இந்த முடிவு சரி தவறு என்று அப்படியெல்லாம் நான் இப்போது ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை. எவ்வளவு நாளைக்கு நீங்கள் உங்களை ஏழை என்ற முடிவோடு நீங்கள் வாழ்கின்றீகளோ அவ்வளவு நாள் வரை பணம் மட்டுமே தேடப்படும். பொருள் மட்டுமே தேடப்படும். இறைவனில் கூட பொருளை அளிப்பதற்காக அவர் வௌிப்படுத்துகின்ற பரிணாமத்தை மட்டுமே நினைந்து வழிபடுவீர்கள். நீங்கள் வழிபடுவது இறையை அல்ல வெறும் இரையை. அல்லது இரை கொடுக்கும் இறையை! இரை கொடுக்கும் இறையை. உங்களை ஏழையாக உணர்வீர்களானால் ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சமூகத்தின் விதிகளின்படியோ, விதிகளுக்கு அப்பாற்பட்டோ, நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டோ, சட்டத்திற்கு அப்பாற்பட்டோ பொருளை தேடிக்கொண்டு தான் இருப்பீர்கள். ஏனென்றால் இங்கு (இதயத்தில்) உங்களுக்குள் எந்த வெறுமையை உணர்கின்றீர்களோ, அந்த வெறுமையை நிரப்புவதற்காக இயங்கியே தீருவீர்கள். எதுவாக உங்கள் இருப்பை நீங்கள் உணர்கின்றீர்களோ அது சிவம். எதை நோக்கி நீங்கள் செயல்படுகின்றீர்களோ அது சக்தி. உங்கள் சிவம் உங்கள் சக்தியின் வௌிப்பாட்டை முடிவு செய்கின்றது. வறியவனாக, வறியவனாக உங்கள் இருப்பை நீங்கள் உணர்ந்தீர்களானால் செல்வத்தை நோக்கி உங்கள் சக்தி செயல்படும். சமூகத்தின் விதிகட்கு உட்பட்டோ, சமூகத்தின் விதிகட்கு உட்படாமலோ, நாட்டின் விதிகட்கு உட்பட்டோ அல்லது விதிகளை உடைத்தோ. இங்கு (இதயத்தில்) நீங்கள் எந்த கருத்தை, எந்த சத்தியத்தை உங்கள் சிவமாக உணர்கின்றீர்களோ உங்கள் இருப்பை உணர்கின்றீர்களோ அது சார்ந்து உங்கள் சக்தி இயங்கியே தீரும். ஊழலின் மூலம் தன்னை வறியவனாய் உணர்வது, ஊழலின் மூலம் தன்னை வறியவனாய் உணர்வது. திருட்டின் மூலம் தன்னை வறியவனாய் உணர்வது, கொள்ளையின் மூலம் தன்னை வறியவனாய் உணர்வது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். தன்னை வறியவனாய் உணராதவர்க்கு உலகமே உடமை. தன்னை வறியவனாய் உணர்ந்தவர்க்கு இவ்வுலகில் இல்லை உரிமை. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். இந்த இரண்டு வார்த்தைக்கும் இருக்கின்ற இடைவௌி, முதல் இரண்டு வார்த்தைகளை அறிமுகப்படுத்தினேன். அடையப்பட வேண்டியதும், அடைய விரும்புவதும் இப்பொழுது இரண்டு வார்த்தைகளை அறிமுகப்படுத்துகிறேன். அவை உடமை மற்றொன்று உரிமை போஸ்ஸஸ்ஸிங். உடமை என்பது கடமைக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் உரிமை. உரிமை என்பது தன் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்காக எடுத்துக் கொள்ளப்படும். அசுரத்தனமான உடமை. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். போஸ்ஸஸ்ஸிங். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் உடமை, உரிமை. உதாரணத்திற்கு இந்த நிலம், இந்த ஆசிரம், ஆதினம் அமைந்திருக்கும் நிலம். இது என் உடமை. உரிமை அல்ல. என் உடமையாய் வைத்திருக்கின்றேன். ஏனென்றால் இதை காப்பதற்காக. இதை காக்கின்ற கடமையை செய்வதற்காக மட்டுமே உடமையாய் வைத்திருக்கின்றேன். இதை இங்கே வந்து அனுபவிக்கின்ற எல்லோருக்கும் உரிமை பொருளாக கொடுத்து விட்டேன். நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நிறைய பேர்இங்க வந்து உரிமை கொண்டாடுவதற்குத்தான் இந்த இடத்தின் மகிமை, இந்த இடத்திற்கு சிறப்பு. நான் மட்டுமே உடமையாக வைத்திருப்பதனால் இந்த இடம் உயிர் பெற்று விடுவதில்லை. பலபேருக்கும் உரிமையாய் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த இடம் உயிர் பெற்று இருக்கிறது. உடமை வேறு! உரிமை வேறு. தௌிவாக புரிந்துகொள்ளுங்கள். ஒரு தனி நபருடைய வீடு, அவருடைய உரிமை. அவரைத் தவிர உள்ளே வேறு யாரும் நுழைய முடியாது. அவர் விரும்பிய அவருடைய குடும்பத்தார் மட்டும் வேண்டுமானால் செல்ல முடியும். தனி நபரின் உரிமை (போஸ்ஸஸ்ஸிங் வேற . இந்த இடத்தின் சிறப்பு, கடமையைச் செய்வதற்காக இது என் உடமை. ஆனால் என் உரிமை அல்ல. உரிமை உலகத்திற்கே. அதனால் தான், அது தான் இந்த இடத்தின் சிறப்பு. உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பாருங்கள். எங்கெல்லாம் நீங்கள் வறுமையை ஆழமாக உணர்கின்றீர்களோ அங்கெல்லாம் உங்கள் உரிமையை நிலை நாட்ட முயற்சிக்கின்றீர்கள். எங்கெல்லாம் நீங்கள் நிறைவோடு இருக்கின்றீர்களோ அங்கெல்லாம் உங்கள் கடமையை செய்யும் உடமை தன்மையைத் மட்டும் தான் நீங்கள் வௌிப்படுத்துகின்றீர்கள். கடமையைச் செய்கின்ற கடமை செய்வதற்காக உடமைத்தன்மையை வௌிப்படுத்தி, உலகிற்கு அதை உரிமையாக்குவதே கர்மயோகம். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். கடமையைச் செய்கின்ற அளவுக்கு மாத்திரம் உடமைத்தன்மையை ஏற்றுக்கொண்டு அதை உலகுக்கே உரிமையா urimaiyai ஆக்குவதே கர்மயோகம். வாழ்க்கையை அப்படியே புரட்டிப் பாருங்கள். எங்கெல்லாம் நீங்கள் கடமையை செய்வதற்கான உடமைத் தன்மையை தாண்டி உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கின்றீர்களோ எஸ்சிலுசிடிவிட்டி அங்கெல்லாம் தான், வாழ்க்கை உங்களுக்கு கடுமையான வலியைத்தரும் பாடங்களை போதிக்கின்றது. கடுமையான வலிகளை தரும் பாடங்களை போதிக்கின்றது. ஞானமும், வீரமும், தியாகமும், வைராக்கியமும், நல்ல தன்மையாக சொல்லப்படும், எல்லா குணங்களும் இறைவனுடைய நிறைத்தன்மையாக சொல்லப்படும் எல்லா குணங்களும் எப்பொழுதெல்லாம் நீங்கள் உயர்ந்த உணர்வோடு உங்களை, உங்களின் இருப்பை இணைத்துக் கொள்கின்றீர்களோ, எப்பொழுதெல்லாம் உயர்ந்த உணர்வோடு உங்கள் இருப்புத்தன்மையை உணர்கின்றீர்களோ, அப்பொழுதெல்லாம் அந்த உயர் உணர்வு தன்மையின் இருப்புத்தன்மையை நோக்கியே உங்களின் சக்தியும் இயக்குகின்றது. இந்த நான்கு வார்த்தைகளை இன்று புரிந்து கொள்ளுங்கள். அடையப்பட வேண்டியது, அடைய முயற்சிப்பது. அடையப்பட வேண்டியதை, நோக்கி உங்கள் சக்தி இயங்காமல், வேறு ஏதோ ஒன்றை அடைய முயற்சிப்பதற்கு காரணம் மோகம். ம-அகம் . உண்மையில் எது நீங்களோ அதை மறந்து, வேறொன்றை நீங்களாய் நினைக்கின்ற ம-அகம் எனும் மோகமே அடையப்பட வேண்டியதை தவிர்த்து வேறொன்றை அடைய விரும்புகின்றது. உங்கள் இருப்பு சரியான தௌிவோடு இருக்குமானால், அடையப்பட வேண்டியதும், அடைய விரும்புவதும் ஒன்றாகும். அடையப்பட வேண்டியதும், அடைய விரும்புவதும் ஒன்றானவன், சிவஞானம் மலர்ந்தவனாய் மாறுகின்றான். அப்ப உங்களுக்குள் இருக்கும் சிவத்தன்மைக்கும் உங்களுக்கும் இனிமையான உறவு மலர்கின்றது. இது இரண்டிற்கும் நடுவில் இடைவௌியோ அல்லது படைவௌியோ இல்லாமல் போகின்றது. இடைவௌி என்றால் கேப். படைவௌியோ என்றால் போர். சில நேரத்தில் உங்களுக்கும் உங்கள் சிவத்தன்மைக்கும் இடையில் இடைவௌி இருக்கும். சில நேரத்தில் படையே நடக்கும். போரே நடக்கும். உங்கள் இருப்பு, நீங்கள் எதுவாக உங்களை உணர்கின்றீர்கள் எதுவாக உங்களை உணர முடிவு செய்கின்றீர்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். சில நேரத்தில் ஏற்கனவே பல முறை முடிவு எடுத்ததனால் இப்பொது உங்களை வறியவன் என்கின்ற இருப்பாக நீங்கள் உணர்ந்து கொண்டு இருக்கலாம். ஆனால் இதற்கு மேல் இந்த தவறான இருப்பில் இருந்து ஒதுங்கி, தவறான தன்மையை தன்னுடைய சிவமாக உணர்வதை மாற்றி உண்மையான சிவத்தன்மையோடு என் இருப்புத்தன்மையை ஒன்ற வைத்துக் கொள்வது என்று நீங்கள் முடிவுவெடுத்தால் நீங்கள் சிவபக்தன். எந்த இருப்பை உங்கள் இருப்பாக நீங்கள் மாற்றிக்கொள்ள முடிவெடுக்கின்றீர்களோ அதை நீங்கள் வழிபடுப்படுகின்றீர்கள். அதன் வழிபடுகின்றீர்கள். அதை நோக்கி நீங்கள் நெறிப்படுகின்றிர்கள். அதை நோக்கி நீங்கள் முன்னேறிச் சென்று கொண்டு இருக்கின்றீர்கள். உங்கள் இருப்பின் தன்மையை மாற்றுவதாக நீங்கள் எடுக்கும் முடிவு சிவபக்தி. சிவத்தன்மையை உங்கள் இருப்பு தன்மையாக மாற்றிக் கொள்வது என்ற முடிவு எடுத்து அதை நோக்கி செயல்பட துவங்குவது சிவபக்தி. அதை நோக்கி உங்கள் எண்ணங்களை நெறிப்படுத்திக் கொள்வது சிவநெறி. அதை நோக்கி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வது சிவ வாழ்க்கை. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீரும் ருத்ராக்ஷமும், நினைவில் பாஞ்சாக்சரமும், ஊரும் ஆனந்தமும், சிவ உன்மத்த, சுக போதமும், தேரும் திருவிழாவும் பரம்பொருள் பேரும் பெருநன்மையும் உணர்வில் சிவத்தன்மை ஊறும் அன்பர்க்கே உடமை. யார் தன்னுடைய உணர்வு நிலையை, இருப்புநிலையை இதுவரை எதுவாக வேண்டுமானலும் இருந்து விட்டு போகட்டும். இதற்கு மேல் அதை சிவத் தன்மையாக மாற்றிக் கொள்வேன். அதற்காக எல்லா முயற்சியும் எடுப்பேன் என்று முடிவெடுக்கின்றானோ அவனுக்கு இந்த நீறும் ருட்ராக்ஷமும், நெஞ்சில் ஊறும் பாஞ்சாக்சரமும், தேரும் திருவிழாவும், உன்மத்த ஆனந்த சிவபோத ஞான களிப்பும் உடமையாகின்றது. உலகிற்கெல்லாம் அதை கொண்டு சேர்க்க வேண்டிய அவனது கடமையாகின்றது. இருப்பின் திரிப்பு நாத்திகம், இருப்பின் மறுப்பு கம்யுநிஸம், இருப்பின் தெறிப்பு சைவம். ஆழ்ந்து உள்வாங்கி கொள்ளுங்கள். அடைய வேண்டியதும் அடையப்பட வேண்டியதும் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அடைய வேண்டியதும் அடைய நினைப்பதும் மாறுவதற்கு காரணம் தன் இருப்பை பற்றி தனக்கு தௌிவில்லாமல் வருகின்ற மோகம். ம -அகம், அகம் மறந்து திரிப்படையும் பொழுது வருகின்றது மோகம். தன்னை தன் சுய நிலையான சுவ - அனுபவ, ஸ்வா - அனுபவ, சொரூப அனுபவ நிலையான சதாசிவன் நிலையில் உணராது வறியவனாய், மூடனாய், திரிந்து, திரிபுபட்ட நிலையில் துரோபாவ நிலையில், சிவபாவ நிலையில் உணராது, துரோபாவ நிலையில் உணரும் பொழுது அடையப்பட வேண்டியது அடைய விரும்புவதும் விலகிப்போகின்றது. அடைய விரும்புவதையும் அடையப் பட வேண்டியதையும் நமக்குள் இருக்கின்ற ம - அகத்தை மாற்றி சிவோகம் நிலையை கொடுத்து இரண்டையும் ஒன்றாக்கி நமக்கு அளிக்கின்ற அறிவியல் தான் காமிக ஆகமம். அகம் திரிபு இருந்தால், அடையப் பட வேண்டியதும் அடைய நினைப்பதும் வேறு வேறாக இருந்தாலும், அந்த நிலையிலும், அடையப்பட வேண்டியதும் அடைய நினைப்பதும் ஒன்றாகி விட்டாலும் அந்த நிலையிலும், அடையப்பட வேண்டியது, அடைய நினைப்பது அத்துணையும் அதன் மூலத்தில் இருந்தே ம - அகத்தில் இருந்து, சோ - அகத்தில் இருந்து சிவோகத்திற்கு நம்மை கொண்டு சென்று சேர்த்து உண்மையை உரைப்பது மட்டுமல்லாது உறைக்க வைப்பது. உண்மையை உரைப்பது வேறு உறைக்க வைப்பது வேறு. வெறும் உரைத்தலால் அகங்காரம் மாறி விடாது. காரமோடு உறைக்க வைக்கும் பொழுது தான் அகங்காரத்தில் இருந்து காரம் விலகி அகம் சிவோகமாய் மலரும். உண்மையை உரைத்தலும், உறைக்க வைத்தலும் எனும் இரு நிலையில் இருந்தும் சத்தியத்தை சதாசிவப் பரம்பொருள் நமக்கு சாத்தியமாக்குகின்றார். இந்த காமிக ஆகமத்தின் மூலம். ஆகமங்கள் சொல்லும் வாழ்வியல் அறிவியல். ஆகமங்கள் வேதங்களின் சாரம் அல்ல. ஆகமங்கள் வெறும் வேதங்களின் சாரம் அல்ல. . ஆகமங்கள் வேதங்களின் உட்பொருள். ஆகமங்கள் வேதங்களின் உட்பொருள். மகாசதாசிவப் பரம்பொருள் வேதங்களின் உட்பொருளாய் நமக்கெல்லாம் அளித்தருளிய ஆகமங்களின் உத்தமமான பகுதிகளை உங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளும் சத்தியமான பகுதிகளை, இந்த கல்பதரு என்ற தொடர் சத்சங்கங்களில் மூலமாக உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் கல்பதரு தியான முகாமும் சமய தீக்க்ஷையும் நிகழ்கின்றது. சதாசிவப் பரம்பொருள் மீண்டும் மீண்டும் சொல்லிகின்றார். இந்த ஆகமங்களின் அறிவியல் சமய தீக்ஷை எடுத்தவர்களுக்கு கேட்ட மாத்திரத்திலேயே ஞானமாக மலர்கின்றது. ஞானம் விஞ்ஞானமாக செயல் படுகின்றது. தீக்ஷை எடுக்காது இந்த கருத்துக்களை கேட்பவர்களுக்கு இது வெறும் ஞானம். தீக்ஷை எடுத்து இந்த கருத்துக்களை கேட்பவர்களுக்கு இது விஞ்ஞானம். தினந்தோறும் இந்த சத்சங்கங்களைக் கேட்டு இதை உங்கள் அனுபூதியாக மாற்றிக் கொள்ள விரும்புகிறவர்கள் வாருங்கள், ஒவ்வொரு ஞாயிறும் சமய தீக்க்ஷையான சிவ தீக்ஷை காமிக ஆகமத்தின் படி உங்களுக்கு அளிக்கப்படும். கல்பதரு யோகம் தியான வகுப்பும் சமய தீக்ஷையும் உங்களுக்கு அளிக்கப்படும். வருகின்ற பிப்ரவரி 13ம் நாள் மஹாசதாசிவராத்ரி - மஹாசதாசிவப்பரம்பொருளின் இருப்பை நாம் எல்லோரும் கொண்டாடும் இனிய நாள். வாருங்கள்! அவர் இருப்பை வாழ்வோம் கொண்டாடுவோம். உங்கள் எல்லோரையும் மஹாசதாஷிவராத்திரிக்கு வரவேற்கின்றேன், அழைக்கின்றேன். வாருங்கள் சதாசிவனைக் கொண்டாடுவோம். நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து நித்யானந்தத்தில் மலர்ந்து நித்தியானந்தம் ஆகிட ஆசீர்வதிக்கின்றேன்."


தியான சத்சங்கம்_சாஸ்திர பிரமாணம்

" ஆத்மஞானத்தை குருகிருபையே நல்கும், குருவின் உபதேசத்தாலேயே அஞ்ஞானம் அழியும்.

குருரேகோ ஹி ஜாநாதி ஸ்வரூபம் தேவமவ்யயம் | தத்ஜ்ஞாநம் தத்ப்ரஸாதேந நாந்யதா ஶாஸ்த்ர கோடிபி: ||

ஶ்வரூபஜ்ஞாநசூ'ந்யேந க்ரு'தமப்யக்ரு'தம் பவேத் | தபோ ஜபாதி்கம் தேவி ஸகலம் பாலஜல்பவத் ||

மாற்றமற்ற பரம்பொருளைப் பற்றிய உண்மை சொரூபத்தை (ஆத்ம ஞானத்தை) அறிந்தவர் குரு ஒருவரே. இந்த ஞானத்தை குரு கிருபையாலன்றி கோடிக்கணக்கான சாஸ்திரங்களாலும்கூட ஒருவன் பெற முடியாது.

தேவி! ஆத்மஞானம் இன்றிய தவம், மந்த்ர ஜபம் போன்ற அனைத்தும் குழந்தையின் மழலைக்கு நிகரே; பயனற்றவையே.

- குருகீதை (பரம்பொருள் பரமசிவனார் பார்வதி தேவிக்கு உபதேசித்தது)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பரமசிவ பரம்பொருளின் நேரடி செய்திகளை கைலாஸாவிலிருந்து தமது சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துகிறார்.

பகவான் அவர்கள் அனைத்து நிலை ஜீவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் உபதேசம் அருள்கிறார். ஒரு ஜீவனின் உயிர் எந்த நிலையில் இருந்தாலும், அது மிகுந்த உற்சாகத்தோடும் வாழ்க்கையை நோக்கிய மிகுந்த உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும், வேகத்தோடும், இயங்குகின்ற நிலையில் இருந்தாலும், அல்லது தளர்ந்து சோர்ந்து படுக்கையை விட்டே அசையமுடியாத நிலையில் இருந்தாலும், அல்லது மாயை என்ற மன உளைச்சலில் மூழ்கி தன்னை மறந்து வீழ்ந்து கிடந்தாலும், ஒரு ஜீவன் எந்த நிலையில் இருக்குமானாலும் அது அடையப்பட வேண்டியது பரமசிவ பரம்பொருளோடு சாயுஜ்யநிலையே என்பதை அருள்கிறார். பரமசிவப் பரம்பொருள் பிரபஞ்சத்தின் அடிப்படை அறிவியலாக தன் அரூப ரூபத்திலிருந்து அளித்த வேதங்களும், அதை வாழ்க்கையில் சாத்தியமாக்கிக் கொள்ளும் பயன்பாட்டுத் தொழில் நுட்பமாக அருளிய ஆகமங்களையும் அருளி ஒவ்வொரு ஜீவனுக்கும் வழிகாட்டுகிறார். "