06 ஜூலை 2002 ஆச்சாரியார் பயிற்சி முகாம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

ஆச்சாரியார் பயிற்சி முகாம் (Acharyar Training)

வருடம்  : 2002

நாள் :06 ஜூலை 2002

நிகழ்வு : ஆச்சாரியார் பயிற்சி முகாம்

பங்கேற்பாளர்களின் விபரம் : தீட்சை பெற்ற சீடர்கள்

நிகழ்வின் பெயர் : ஆச்சாரியார் பயிற்சி முகாம்

நடைபெற்ற இடம் : ஏற்காடு, தமிழ்நாடு, இந்தியா.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்தபீடம், தமிழ்நாடு

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்.

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 100

நிகழ்வின் விவரனை : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஏற்காட்டில் ஆச்சாரியார் பயிற்சி அளித்தார். இதுவே முதல் ஆச்சாரியார் பயிற்சி முகாம் ஆகும்.


பக்தி பாடல்கள்.-சங்கீர்த்தன்


ஆச்சாரியார் பயிற்சி_பிரமாணம்

" வேத தர்மத்தை உலகிற்கு சொல்ல விரும்புபவர்கள், வேத மாதாவை பாதுகாக்க விரும்புபவர்கள் மற்றும் வேத சத்தியங்களை வாழ ஆசைப்படுபவர்கள் - இந்து மதத்தில் ஆச்சாரியர்களாக (ஆசிரியர்கள்) அறியப்படுகிறார்கள், அவ்வாறே அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இவர்களுக்கு வேத தர்மத்தின்படி வேத ஞானத்தின் அறிவியல் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ராமணம் தே கார்யாகார்யவ்யவஸ்திதெள |

ஜ்ஞாத்வா ஶாஸ்த்ரவிதாநோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி || 16.24

ஒருவர், வேதங்களின் விதிமுறைப்படி எது கடமை, கடமையில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேதங்களின் கட்டளைகளை நன்றாக உள்வாங்கிய பிறகு, அதன்படி செயல்புரிய வேண்டும்.

- பகவத் கீதை (தெய்வாஸூர ஸம்பத் விபாக யோகம் - 24 ஆம் ஸ்லோகம்)

முறைப்படி இவர்கள் தங்கள் வாழ்க்கையில் இந்து தர்ம சத்தியங்களை கடைப்பிடித்து வாழ ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன்பிறகே இவர்கள் மூலமாக உலகமனைத்திற்கும் வேத ஞானம் பகிரும் பாரம்பரிய சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் இந்துமதத்தை எல்லா பரிமாணங்களிலும் அதன் உண்மைத்தன்மையுடன் எளிமையாக பின்பற்றி வாழ வழிகாட்டுகிறார்.

ஞானத்தின் அறிவியலை உலக நன்மைக்காக கற்பிக்கின்றார்.

தனி நபர்களின் நன்மைக்காக...

1. ஆரோக்கியமான மற்றும் ஆனந்தமான வாழ்க்கையை வாழ நினைக்கும் புதிய மனிதர்களுக்கு ஆரோக்கியமான - ஆனந்தமான - இணக்கமான முறையில் இந்து மதத்தை அறிமுகப்படுத்துகிறார்.

2. ஏற்கனவே இந்து மதத்தை வாழ்பவர்களை, அதில் மேலும் சிரத்தையோடு வாழ்வதற்கு உத்வேகமளிக்கின்றார்.

உலகின் நன்மைக்காக...

1. வேத பாரம்பரிய சடங்குகள், வேத சத்தியங்கள் மற்றும் நுட்பங்கள் மூலம் இந்து வாழ்க்கை முறையை பரப்புவதற்கு ஆச்சாரியார் பயிற்சி அளித்து இந்து மதத்தை வாழும் ஆச்சாரியார்களை உலகிற்கு அளிக்கின்றார்.

2. சனாதன இந்து தர்மத்தை வாழவும், சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள இந்து தலைமைப் பதவிகளை வகிக்கவும், ஆன்மிகத் தலைவர்கள், சமூகத் தலைவர்களை பயிற்றுவித்து உலகிற்கு அளிக்கின்றார்.

3. பல துறைகளிலும் உண்மையான சாதனைகளும், பங்களிப்பும் நிகழ சக்திகளை வெளிப்படுத்தி நன்மைகள் புரியும் தலைவர்களை வழங்குகின்றார்.

பரம்பொருள் பரமசிவனார் பூமியில் நிர்மாணித்த ஜீவன் முக்த சமுதாயமானது பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களால் புனரமைக்கப்படுகிறது."