05 மார்ச் 2005 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

நாள் :05 மார்ச் 2005

தலைப்பு : ஈகோ

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர். 05 மார்ச் 2005 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'ஈகோ' எனும் தலைப்பில் அகங்காரத்தைப்பற்றி மனதால் நிகழும் பாதிப்புகள், எவ்வாறு அகங்காரத்தை கழற்றி எறிவது, அகங்காரத்தை விடுத்து கடவுளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதைப்பற்றி எடுத்துரைத்து, கடவுள் அருளைப்பெற்று வெற்றியடைவதற்கான மார்க்கத்தை அறிவித்து, அறிவுத் தெளிவை பெற்று, ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்.

05 மார்ச் 2005

05 மார்ச் 2005-பத்திரிகை செய்தி