03 ஆகஸ்ட் 2016 தியான சத்சங்கம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

தியான சத்சங்கம் (Tamil Satsangs)

வருடம்  : 2016

நாள் :03 ஆகஸ்ட் 2016

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : தியான சத்சங்கம்

சொற்பொழிவின் தலைப்பு : வான் கலந்த மாணிக்கவாசகர்!

நடைபெற்ற இடம் : கைலாஸா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : கைலாஸா

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1 லட்சம்

வீடியோ

03 ஆகஸ்ட் 2016 தியான சத்சங்கம்


தியான சத்சங்கம்_விவரனை

எழுதப்பட்டதன் நகல் (Transcript) :

"வான் கலந்த மாணிக்கவாசகர்.

ஆழ்ந்து இந்த சில சாத்தியங்களை புரிந்துகொள்ளுங்கள். பக்தி, வெறும் ஏதோ சில செயல்கள் சார்ந்தது அல்ல, உங்களுக்குள் பெரும் சக்தியை ஊற்றெடுக்க வைக்கும் யுக்தி. ஆழ்ந்து கேளுங்கள்.., பக்தி ஏதோ வெறும் சில செயல்களை சார்ந்தது அல்ல, உங்களுக்குள் மிகப்பெரும் சக்தியை ஊற்றெடுக்க வைக்கும் யுக்தி. பரம்பொருளை, பர தத்துவத்தை, எங்கோ வேறொரு லோகத்தில் இருப்பதாக வைத்து அதனிடம் மன்றாடுவதும் பிச்சை எடுப்பதும் மண்டி இடுவதும் அல்ல. அந்த பரம்பொருள், சதாசிவம், உங்களுடைய உயிரின் உயிராக உங்கள் கண்ணுக்குள்ளிருந்து காணுவது எதுவோ, காதுக்குள்ளிருந்து கேட்பது எதுவோ, எண்ணத்துள்ளிருந்து எண்ணுவது எதுவோ, சிந்தையிலிருந்து சிந்திப்பது எதுவோ, உள்ளத்துள்லிருந்து உள்ளுவது எதுவோ, அந்த உயிருக்குள்ளிருந்து உணர்வது எதுவோ அந்த பரம்பொருள், சதாசிவமே! அந்த பொருள் சதாசிவமே என்கின்ற தௌிவோடு, இருப்பும் வாழ்க்கையின் செயல்பாடுகளும், இரண்டுமே இறை நிலையிலிருந்து இயங்க வைக்கும் யுக்தி பக்தி. ஆழ்ந்து கேட்டுக்கொள்ளுங்கள், உங்களுடைய இருப்பு, செயல்படும் தன்மை, இரண்டுமே இறை நிலையிலிருந்து இயங்குவதற்கான தௌிவும், இரண்டுமே இறை நிலையிலிருந்து வௌிப்படுவதற்கான சக்தியும் இரண்டுமே இறை நிலையிலிருந்து இயங்குவதற்கான யுக்தியும், பக்தி. நினைப்பது, நடப்பது, செய்வது , இது எல்லாவற்றிலும் நிறைத்தன்மையை உணர வைக்கும் யுக்தி, பக்தி. மாணிக்கவாசகருடைய வாழ்க்கையே கல்பதரு. நினைக்கும் பொழுதெல்லாம் பெருமான் நேர் நின்று கேளாது அளித்தான். மாணிக்கவாசக பெருமான் நரியெல்லாம் பரியாக்கி நீயே குதிரை சேவகனாய் மாறி மதுரைக்கு வா என்று சொல்லவுமில்லை, கேட்கவுமில்லை. தன்னை அறியாத பெரும் பரவசத்தால் அரசனின் விதி, சமூகத்தின் நேர்மை இதையல்லாம் பற்றி கவலைப்படாமல் அரசன் கொடுத்த பணத்தை குதிரை வாங்காமல் கோவிலை கட்டி விடுகின்றார். ராமகிருஷ்ணர் ரொம்ப அழகாக சொல்வாரு - ஒரு அளவுக்கு மேல கங்கையில் வௌ்ளம் போனா, இருக்கற பாறை, குழி, மேடு, பள்ளம் இதெல்லாம் தெரியாது. ஒரு அளவுக்கு மேல பக்தி பெருக்கெடுத்து ஓடினாள் சமூகத்தின் விதிகள், நாட்டின் விதிகள் போன்றவைகள் தெரியாமல் வாழ்க்கை நிகழ துவங்கி விடுகிறது. அப்படித்தான் மாணிக்கவாசகர் வாழ்க்கையில் நடந்துருச்சு . உண்மையில் இந்த அரசன் தண்டனை கொடுத்தால், அவனுடைய நீதிப்படி, அரச தர்மத்தின் படி அது சரி. ஆனால் பிரபஞ்சத்தின் தர்மத்தின் படி அது, தவறு. பிரபஞ்சம் உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து தலையிட்டு உங்களை தன் தலை மீது வைத்து காக்கும் வாழ்க்கை முறை தான் பக்தி. மாணிக்கவாசகர் வாழ்க்கையே ஒரு நீண்ட , பக்தி எனும் பனை ஓலையில் இனிமை எனும் எழுத்தாணி கொண்டு பெருமான் பேரருள் பொங்க பொங்க, எழுதி வைத்த காப்பியம் மாணிக்கவாசகரின் வாழ்க்கை. வள்ளல் பெருமான் மணிவாசகரை பற்றி திருவாய் மலர்ந்தருளிய இனிமையான நான்கு வரிகள்..., வான்கலந்தமாணிக்கவாசகனின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனிதீஞ்சுவை கலந்து என் ஊன்கலந்து, உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே. வான்கலந்த மாணிக்கவாசகர் என்கின்ற சொல்லுக்கு பொருள் சொல்லிக்கொண்டிருந்தேன்..., ஆழ்ந்து கேளுங்கள் எந்த விதமான சாதனை முறையை நீங்கள் வாழ்க்கையில் ஏற்கிறீர்களோ அந்த விதத்திலே ஜீவன் முக்தி உங்களுக்குள் மலரும். ஐந்து பூதங்கள் , பஞ்ச பூதங்களான நிலமும், நீரும், நெருப்பும், காற்றும், நிறை ஆகாயமும் இந்த ஐந்து புதங்களின் பூதங்களின் மூலமாகவும் மலர்தல் நிகழ்ந்து, ஞானத்திற்குள் ப்ரபஞ்ச பெருவௌிக்குள் கரைய முடியும். சுத்த ஜீவன் முக்தி நிகழ முடியும். சுத்தாத்வைத சுகபோத நிலை மலர முடியும். அருட்பேராற்றலான் சதாசிவ தன்மைக்குள் லயிக்க முடியும். உடலால் செய்யக்கூடிய சரியை முறைகளான புஜை , ஆலயம் தொழுதல், உழவாரப்பணி செய்தல், போன்றவற்றை செய்தும் சுத்தாத்வைத சிவயோக நிலையை அடையலாம். எண்ணத்தை ஒழுங்காக்கி ஸ்தோத்திரங்கள், ஜெபங்கள் போன்றவற்றை செய்தால் நீர் தத்துவத்தில் மலர்ந்து ரத்தம் கூட சிவம் என்கின்ற மந்திரத்தின் வழியாகவே ஓடுகின்ற அளவுக்கு ஸ்தோத்திரமும், ஜபமும் செய்தவர்களுக்கு உள்ளுக்குள் நீர் தத்துவம் மலர்ந்து ஜீவன் முக்தி சாத்தியம். அதனினும் உயர்ந்த உருவத்தை, தியானித்தல், நாமத்தை சொல்வது, நீர் தத்துவத்தை மலர வைக்கும். உருவத்தை தியானித்தல் அக்னி தத்துவத்தை மலர வைத்து இறை நிலையில் சேர்க்கும். அதனினும் உயர்ந்த உருவத்தை பக்தி உணர்வோடு சேர்த்து பொங்கும் பக்தி பெருவௌ்ளத்தால் உருவத்தோடு கலந்திருத்தல் காற்று தத்துவத்தை மலர வைத்து ஜீவன் முக்தியை சேர்க்கும். இரண்டறக் கலந்து சித்தம் சிவன்பாலே நிறைந்து வாழும் பொழுதே அத்வைத பரத்தில் நிறைந்திருக்கும் ஜீவன், ஆகாய தத்துவம் மலர்ந்து சுத்தாத்வைத சுகபோத நிலையான சிவசாயுஜ்யத்தை அடைகிறார்கள். மாணிக்கவாசகப்பெருமான் வான் கலந்தவர். அதனால தான் வள்ளல்பெருமான் வான் கலந்த மாணிக்கவாசகர் என்று உரைக்கின்றார். நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் - இந்த வார்த்தையை ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும். ரமண மஹரிஷியினுடைய வாழ்க்கையிலே நடந்த ஒரு நிகழ்வு - ஒரு நாள் சீடர்கள் பகவானை சுற்றி அமர்ந்து கொண்டு, பகவான் எழுதிய அருணாச்சல அக்ஷரமணமாலை என்கின்ற ஒரு ஸ்தோத்திரத்திற்கு பொருள் சொல்வதற்கு, விளக்க உரை சொல்ல வேண்டுமென்று கேட்கிறார்கள். அந்த ஸ்தோத்திரம் பெருமான் ரமண மஹரிஷி ஸ்பான்டனெவ்ஸ் ஆ உள்ளம் உடைந்து, பொங்கியல்ல உடைந்து, மலைவளம் வரும் பொழுது சில மணி நேரங்களுக்குள் எழுதி சாற்றிய ஸ்தோத்திரம். எழுதி சாற்றிய பாமாலை, அக்ஷர மண மாலை. அக்ஷரங்களாலான மணமாலை. அண்ணாமலையானுக்கு மதுர பாவத்திலே ரமண மஹரிஷி செய்தளிக்கின்ற ஸ்தோத்திரம். இதற்கு பொருள் சொல்ல வேண்டுமென்று பக்தர்கள் கேட்கிறார்கள். பகவான் முகத்திலே எந்த உணர்ச்சியும் எப்போதும் பார்க்க முடியாது. நிர்விகல்பமாக இருப்பார். ஆனால் சொல்லொணாத வெட்கத்தினால் தலை குனிந்தாராம். சொல்லொணாத வெட்கத்தினால் தலை குனிந்து அதற்கு பொருள் சொல்வது சாத்தியமில்லை. அது எனக்கும் பெருமானுக்கும் இடையிலே நிகழும் உறவின் ரகஸ்யம். உறவின் ரகஸ்யதுக்கு உரை சொல்ல முடியாது. உரை சொன்னால் உறவின் ரகஸ்யம் அம்பலம் ஏறிவிடும். மிக ஆழமான உறவுகள் யார் வாழ்விலுமே வௌிச்சொல்ல முடியாது. யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாததை, யாரிடம் பகிர்ந்து கொள்கிறோமோ அது தான் ஆழமான உறவு. அந்த உறவை வேறு யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாது. பெருமான் சொல்றாரு, ரமண மஹரிஷி சொல்றாரு உரை சொல்ல முடியாது. பலமுறை பல விதங்களில் பக்தர்கள் கேட்டும் மறுத்து விடுகின்றார். ஒரு பக்தர் கேக்கறாரு, உரை சொன்னால் உறவின் ரகஸ்யம் வௌியில் வந்து விடும் என்கிறீர்கள், பின் ஏன் பாடலாக மட்டும் அதைப் பாடி வைத்தீர்கள்? என்று கேக்கிறார். பின் பாடலாக மட்டும் ஏன் பாடிநீர்கள், அது ரகசியத்தை வௌியிட்டது ஆகாதா?. அப்பொழுது பகவான் ரொம்ப அருமையா சொல்றாரு, ""யாரெல்லாம் உடன் இருக்கும் போது அந்த பாடலை நான் பாடினேனோ, அவர்கள் எல்லோரும் என்னுடைய பாகமாக மாறிவிட்டுருந்தமையால், அவர்களை நான் வேறொருவர் என்று கருதாது, நானே அவர்கள் என்று உணர்ந்ததனால், இந்த வரிகளை நான் அவர்களோடு பகிர்ந்து கொண்டேன்."" அப்படிங்கறார். நான் கலந்தவர்க்கு மட்டுமே நாதன் நாயக ரகசியங்கள் வௌிப்படும். நண்பனாய் இருந்தால், ராஜ ரகசியமான ராஜ வித்யா, ராஜ குஹ்யம் எனப்படும் கீதையை கொடுக்க இயலும். கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு அளித்தான். நண்பன் என்கின்ற காரணத்தால். மிகுந்த சிரத்தையுடைய சீடன் என்பதற்காக தேவ ரகசியமான மரணத்தின் ரகசியத்தை யமதர்ம ராஜன் நசிகேதனுக்கு தந்தான். ஆனால் நட்பினால் வரும் நெருக்கமோ சிரத்தையுடைய சீடனாக இருப்பதனால் வரும் இருக்குமோகூட போதாத, இரண்டே இல்லாத கரைப்பு நிகழ்ந்தால் மட்டுமே மஹாதேவ ரஹஸ்யம் சொல்லப்பட இயலும். நண்பன் இணைப்பு, சீடன் பிணைப்பு, இது இரண்டும் கூட போதாது. நண்பனுக்கு ராஜ ரகஸ்யம் சொல்லலாம், சீடனுக்கு தேவ ரகஸ்யம் சொல்லலாம், தானன்றி வேறொன்றாக இல்லாமல் தானாய் போனவர்களுக்கு மட்டும்தான், நான்கலந்த பின்தான், மஹாதேவ ரஹஸ்யம் சொல்லப்பட இயலும். ரமண மகரிஷி சொல்றாரு, யார் என் பக்கத்தில் இருக்கும் பொழுது நான் இந்த அக்ஷர மண மாலையை சாற்றினேனோ அவர்கள் எல்லோரும் நானாகவே, என் பாகமாகவே மாறிப்போய் இருந்ததனால் தான் வெட்கம் இல்லாமல் இந்த ரகசியத்தை வௌியிட்டேன். இப்பொழுது உரை சொல்லும் அளவிற்கு சாத்தியம் இல்லை. அங்கிருந்து சீடர்கள் எழுதுகிறார்கள், பகவான் திருமுகத்தில் வெட்கம் வந்து நாங்கள் பார்த்த முதல்-கடைசி முறை அதுதான். நிர்விகல்ப நிலையிலேயே நிலைத்திருக்கும் பெருமான் திருமுகத்தில் அதை தவிர வேறொரு உணர்ச்சியின் பெருக்கு சாத்தியமென்றால் நிர்விகல்பத்தையும் தாண்டியது பக்தியின் பெருக்கு. அத்வைதம் நிர்விகல்பம், சுத்தாத்வைதம் பக்தி. நான் கலந்தால் மட்டுமே சில விஷயங்கள் வாழ்வில் புரிபடும். நான், நான் என்கின்ற அகந்தை சற்றே தள்ளி வைத்து விட்டு யாரிடம் நம்மை திறக்கிறோமோ அது நட்பு, நான், நான் என்கின்ற அகந்தையை யார் காலடியில் முழுமையாக கரைக்கிறோமோ அது சரணாகதி, குரு சீடன் உறவு, நான் யாரிடம் கலக்கிறதோ அது அனுபுதி. நானை சற்றே தள்ளி வைத்து அர்ஜுனன் உணர்வு திறந்ததால் ராஜ ரகஸ்யம் சொன்னார் கிருஷ்ணன். நானை நசிகேதன் யமனின் காலடியில் போட்டதனால் தேவ ரகஸ்யம் சொன்னான் யமதர்மன். கடோபநிஷதத்தில். நானை முழுமையாய் பெருமானுடன் கரைத்தால் தான் மகாதேவ ரகசியம் நமக்குள் மலர முடியும். வள்ளல் பெருமான் சொல்லறாரு, வான் கலந்த மாணிக்கவாசகா, நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் , நான் என்கின்ற என் உணர்வு கலந்து, நீ எந்த நிலையில் இருந்தாயோ, அந்த நிலையிலேயே இருந்து நான் பாடும் பொழுது, நன்றாக ஆழ்ந்து சில உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள் - ஒரு ஓவியமோ, காவியமோ எந்த உணர்விலிருந்து வௌிவருகிறதோ, ரசிப்பவர்களை அதே உணர்விற்கு கொண்டு செல்லும் சக்தி வாய்ந்தது. காவியமோ ஓவியமோ ஆவியமோ, எதுவானாலும் எங்கிருந்து வருகிறதோ அதே நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் சக்தி வாய்ந்தது. வார்த்தையை உருக்கி செய்வது காவியம், நெஞ்சை உருக்கி உயிர்ப்பது ஓவியம், உணர்வை உயிரையே உருக்கி ஆக்குவது ஆவியம். எதிலிருந்து காவியமோ ஓவியமோ ஆவியமோ வருகின்றதோ அதே நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் சக்தி வாய்ந்தவைகள் அவைகள். அதனால தான் மிகவும் கீழ்த்தரமான ரசனையோடு ஒரு பாடலோ, ஒரு ஓவியமோ ஒரு கலையோ வௌிப்படுத்தப்பட்டால் காண்பவர்களையும் அதே உணர்வுக்கு கொண்டு செல்லும். உயர்ந்த ரசனையோடு ஒரு காவியமோ, ஓவியமோ ஒரு கலையோ வௌிப்படுத்தப்பட்டால், காண்பவர்களை அதே நிலைக்கு கொண்டு செல்லும். மூலாதாரம் காம உணர்வின் இருப்பிடம். அதிலிருந்து ஒரு பாடலோ கவிதையோ வந்தால், அதை நீங்கள் ரசித்தீர்களானால் உங்களையும் அதே உணர்விற்கு உங்களையும் கொண்டு செல்லும். ஸ்வாதிஷ்டானம் பய உணர்வின் இருப்பிடம். பய உணர்விலிருந்து ஒரு காவியமோ ஓவியமோ வந்தால் அதை நீங்கள் ஆழ்ந்து ரசித்தீர்களானால் உங்களையும் அதே பயத்திற்குள் கொண்டு செல்லும். அதனாலே தான் பேய் படம் பாத்துட்டு வீட்லே வந்து படுத்தீங்கன்னா போதும், ஒரு திரை அசைஞ்சாக் கூட என்ன, ஐயோ வந்திருச்சோ, ஒரு காத்தாடிச்ச கூட என்ன ஐயோ வந்திருச்சோ, இல்ல எங்கியாவது ஒரு மூலையிலே புனை கத்துனா ஐயோ, அன்னைக்கு பாத்து தான் கதவு ஜன்னலை திறந்து வெச்சுருப்பீங்க, வௌியே இருக்கின்ற மல்லிகைப்பு செடியில் பூ பூத்து அந்த வாசம் கொஞ்சம் காத்து வழியா உள்ளே வரும். இது என்னடா மல்லிகைப் பூ வாசம் திடீர்னு ரூம்ல வருது. பய உணர்வு சார்ந்த விஷயங்களை ரசித்தீர்களானால் நீங்களும் அதே உணர்வில் இருப்பீர்கள். திருவாசகம் ஆனந்தகந்த சக்தியான பக்தியில் இருந்து வௌி வந்தது. அதை ரசித்தீர்களானால் நீங்களும் அதே பக்தி நிலைக்குள் மலருவீர்கள். அதை தான் பெருமான் சொல்றாரு. வள்ளல் பெருமான், வான் கலந்த மாணிக்க வாசகா, நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால். என்னுடைய உணர்வே அதில் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே.. தேன் கலந்து, பால் கலந்து செழுங்கனிதீஞ்சுவை கலந்து, என் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.

இது ஒரு அருமையான வார்த்தையை உபயோகிக்கிறார் மாணிக்கவாசகர்., வள்ளல் பெருமான் மாணிக்கவாசகரய் பற்றி சொல்லும் பொழுது, நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால், வெறும் நினைச்சா போதாது, கேட்பவர்களுக்கு எப்படி இருந்தாலும் கவலைப்படாமல், நம் உணர்வை கலந்து பாடத் துவங்கி விட வேண்டும். நல்லா புரிஞ்சுக்கோங்க. பலமுறை நான் சிறு வயதுல அண்ணாமலையார் ஆலயத்துல பாத்திருக்கேன், குரல் ஒன்னும் பெரிய வளமால்லாம் இருக்காது, ஆனா கேட்பவர்கள் என்ன சொல்வார்கள், அதைப்பத்தியெல்லாம் எந்த கவலையும் படாமல், ஏதோ ஒரு கோயிலின், ஆலயத்தின் மூலையில உக்காந்திட்டு தன்னை மறந்து தனக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி திருவாசகத்தை பாடுகின்ற, தேவாரத்தை பாடுகின்ற, அடியார்களை பார்த்திருக்கிறேன். ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள், இப்ப என்ன யறயசன வேணுன்னா பாடறோம் ? யறயசன வேணும்னு பாடினா தான் மத்தவங்க என்ன சொல்வாங்கன்னு கவலைப்படணும், யறயசன க்காக இல்ல அம்பலவாணனுக்காக. வள்ளல் பெருமான் ஒரு வார்த்தையை கூட குறைத்தோ அல்லது அதிகமாகவோ சொல்லவில்லை. பாட வேண்டும் என்கின்றார், நான் கலந்து பாட வேண்டும். ஏனென்றால் சில செயல்கள், உணர்வை உங்களுக்குள் ஆழமாக்கும். அதுல பாடுவது ஒன்று. பெருமானை நினைந்து உணர்வு கரைந்து நெஞ்சம் நிறைய வாய் திறந்து பாடுவது. ஞான சம்பந்தப் பெருமான் ரொம்ப அழகா சொல்வார், ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப்போம் நமது உள்ள வினைகளே. ராமகிருஷ்ணர் ரொம்ப அழகா சொல்வார், ஒரு மரத்துக்கு கீழ நின்னு கைகளை தட்டினால் பறவைகளெல்லாம் பறந்துவிடும். அதுபோல இறைவனின் நாமம் சொல்லி கைகளை தட்டினால் நெஞ்சத்திலிருக்கும் வினைகளெல்லாம் பறந்துவிடும். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பாக சீர்காழியில் அன்னையின் முலைப்பால் அருந்திய உமையின் பாலகனாகட்டும் இருநூறு ஆண்டுக்கு முன்பாக காளியோடு விளையாடிய காளியின் மைந்தனாகட்டும், சத்தியம் ஒன்றே., வார்த்தைகள் தான் வேறு வேறு. ஞானசம்பந்தரும், ராமகிரிஷ்ணரும் ரெண்டு பெரும் அதையே தான் சொல்றார்கள். இங்க வள்ளல் பெருமானும் நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழுங்கனிதீஞ்சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே. நான் கலக்காமல், திருவாசகம் மாதிரி ஒரு பெரிய பேர் உணர்வு நூல்கள் அது செய்ய வேண்டிய தாக்கத்தை உங்களுக்குள் செய்வது சாத்தியமில்லை. நன்றாக புரிந்து கொள்ளுங்கள். சில விஷயங்கள்ல இறங்கி வாரி புசிக்கிட்டு , அத வாழ துவங்குனா மட்டும் தான் அது புரியும். தானே வாழ்ந்து பாரம்பரிய முறைப்படி குருகுலத்தில் பயின்று அனுபுதி மலர்ந்து, வாழ்கின்ற ஒருவரால் மட்டும் தான் வேதங்களை மொழி பெயர்க்கவும் உரை சொல்வதும் சாத்தியம். தானே வாழ்ந்தவர்கள் தொகுத்தால் அது திரட்டு, அறியாதனத்தால் வாழாது தொகுத்தால் அது திருட்டு. சிவ தீக்ஷை பெற்று ,முழுநீறு புசி ருத்திராக்கன் தாங்கி பெருமானை சிந்தையில் குளிரக் குளிர ரசித்து ருசித்து அனுபவித்தவனுக்கு மட்டும் தான் மணிவாசகர் விளங்குவான். வாழாது புரியாத ஆவியம் திருவாசகம். இது வெறும் வார்த்தையால் புரிந்து கொள்கின்ற காவியமும் அல்ல., சற்றே உணர்ச்சிப் பெருக்கினால் புரிந்து கொள்ளக்கூடிய ஓவியமும் அல்ல. ஆன்மாவே கரைந்தால் மட்டும் தான் புரிந்து கொள்ளக்கூடிய காவியம். வாதப் பிரதிவாதப் பொருள் அல்ல திருவாசகம். வாழ்ந்து, வாழ்ந்து மொழியை சார்ந்தது , இலக்கணம் இலக்கியங்கள் உயிர் உணர்வை சார்ந்தது தெய்வீக இலக்கியங்கள். திருவாசகம் ஒன்றும் இலக்கணமோ இலக்கியமோ அல்ல, இது ஆவியம். ஆன்மா உருக, உயிர் உருக, உணர்வு உருக, சுத்தாத்வைத சுகபோத நிலையை, மாணிக்கவாசகன் கரைய, அம்பலவாணனே ஆணி கொண்டு எழுதிய ஆவியம். மாணிக்கவாசகரே தன்னைத் தானே ஒலி வடிவத்தில் ஒலித்து வைத்ததே திருவாசகம். ஒரே சக்தியின் ஒலி வடிவம் திருவாசகம், ஔி வடிவம் மணிக்கவாசகன். ஒரே அனுபுதியின் ஔி வடிவம் மணிவாசகன், ஒலி வடிவம் திருவாசகம், இந்த ஒலி வடிவத்தை வரி வடிவத்தில் செய்து வைத்தவன் இரண்டுக்கும் மூலமான அம்பலவாணன். ஔி ஒலியாய் உருகுவதால், அதை வரியாய்ச் செய்ய வெறு யாராலும் முடியாதென்று வரிந்து கட்டிக்கொண்டு வந்து அதை வரியாய்ச் செய்து வைத்தான் வரிப்புலி உடை உடுத்திய அம்பலவாணன். கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொல்ல, அதை சஞ்சயன் திருதராஷ்டிரன்னுக்கு சொல்ல, அதை வியாசர் விநாயகருக்கு சொல்ல அவர் எழுதி வைத்தது தான் கீதை. பல இடங்களிலும் பல்வேறு விதங்களிலும் பல்வேறு நூல்கள் சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வைத்திருப்பதை பார்க்கலாம். பெருமான் தேவிக்கு சொல்ல, தேவியிடமிருந்து விஷ்ணு வாங்கி எழுதி வைத்தது தான் ஆகமங்கள். பெருமான் தேவிக்கு சொல்ல , தேவியிடமிருந்து விஷ்ணு பெற்று பிரபஞ்சத்தின் வாழ்வியல் முறையாக உருவாக்கி வைத்தது தான் ஆகமங்கள். ஆனால் எந்த நூலுக்கும் இல்லாத சிறப்பு பக்தன் கரைய பரமன் எழுதி வைத்தது, திருவாசகத்திற்கே உண்டு. எழுதும் நிலையில், கரையும் பக்தன் இல்லை, கரையும் பக்தனே எழுதும் நிலையில் இல்லாத பொழுது கேட்பவன் எவனால் அதை முழுமையாய் எழுதி வைக்க முடியும். வேறு எவலராலும் அதை எழுத முடியாது என்பதால் எதனில் அவன் கரைகிறானோ அதுவே அமர்ந்து ஔி ஒலியாய் கரைய ஒலியை வரியாய் வரித்து வைத்தான் அம்பலவாணன். திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார். பக்தன் கரைய பரமன் வரைந்து வைத்தது திருவாசகம். பக்தன் கரைந்து வைத்தான் பரமன் வரைந்து வைத்தான். பக்தன் கரைந்ததில் பகவான் வரைந்ததில் நாம் நிறைந்தால் என்ன நடக்கும், தொடர்ந்து கேளுங்கள். நீங்கள் எல்லோரும் நித்யானந்த நிலை மலர்ந்து நித்யானந்த நிலை இருந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன் .நன்றி. ஆனந்தமாக இருங்கள்.!!!!"


தியான சத்சங்கம்_சாஸ்திர பிரமாணம்

" ஆத்மஞானத்தை குருகிருபையே நல்கும், குருவின் உபதேசத்தாலேயே அஞ்ஞானம் அழியும்.

குருரேகோ ஹி ஜாநாதி ஸ்வரூபம் தேவமவ்யயம் | தத்ஜ்ஞாநம் தத்ப்ரஸாதேந நாந்யதா ஶாஸ்த்ர கோடிபி: ||

ஶ்வரூபஜ்ஞாநசூ'ந்யேந க்ரு'தமப்யக்ரு'தம் பவேத் | தபோ ஜபாதி்கம் தேவி ஸகலம் பாலஜல்பவத் ||

மாற்றமற்ற பரம்பொருளைப் பற்றிய உண்மை சொரூபத்தை (ஆத்ம ஞானத்தை) அறிந்தவர் குரு ஒருவரே. இந்த ஞானத்தை குரு கிருபையாலன்றி கோடிக்கணக்கான சாஸ்திரங்களாலும்கூட ஒருவன் பெற முடியாது.

தேவி! ஆத்மஞானம் இன்றிய தவம், மந்த்ர ஜபம் போன்ற அனைத்தும் குழந்தையின் மழலைக்கு நிகரே; பயனற்றவையே.

- குருகீதை (பரம்பொருள் பரமசிவனார் பார்வதி தேவிக்கு உபதேசித்தது)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பரமசிவ பரம்பொருளின் நேரடி செய்திகளை கைலாஸாவிலிருந்து தமது சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துகிறார்.

பகவான் அவர்கள் அனைத்து நிலை ஜீவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் உபதேசம் அருள்கிறார். ஒரு ஜீவனின் உயிர் எந்த நிலையில் இருந்தாலும், அது மிகுந்த உற்சாகத்தோடும் வாழ்க்கையை நோக்கிய மிகுந்த உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும், வேகத்தோடும், இயங்குகின்ற நிலையில் இருந்தாலும், அல்லது தளர்ந்து சோர்ந்து படுக்கையை விட்டே அசையமுடியாத நிலையில் இருந்தாலும், அல்லது மாயை என்ற மன உளைச்சலில் மூழ்கி தன்னை மறந்து வீழ்ந்து கிடந்தாலும், ஒரு ஜீவன் எந்த நிலையில் இருக்குமானாலும் அது அடையப்பட வேண்டியது பரமசிவ பரம்பொருளோடு சாயுஜ்யநிலையே என்பதை அருள்கிறார். பரமசிவப் பரம்பொருள் பிரபஞ்சத்தின் அடிப்படை அறிவியலாக தன் அரூப ரூபத்திலிருந்து அளித்த வேதங்களும், அதை வாழ்க்கையில் சாத்தியமாக்கிக் கொள்ளும் பயன்பாட்டுத் தொழில் நுட்பமாக அருளிய ஆகமங்களையும் அருளி ஒவ்வொரு ஜீவனுக்கும் வழிகாட்டுகிறார். "