01 நவம்பர் 2018 பத்திரிகை செய்தி
வெளியீடு
குடும்ப நாவல்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: காலம் மற்றும் நேரம் பற்றி விளக்கும் கட்டுரை
நாள் :01 நவம்பர் 2018
தலைப்பு : காலம் சார்ந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்! வேத ஆகமங்களின் சாரம் : 1
"குடும்ப நாவல் என்ற மாதம் இருமுறை வெளிவரும் இதழில் நவம்பர் 1 2018 வருடம் “காலம் சார்ந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்! வேத ஆகமங்களின் சாரம்” என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட இக்கட்டுரை வெளியாகி இருந்தது. இதில் நாம் உயர்நிலை அடைய காலம்தான் தேவையே தவிர நேரம் அல்ல என்று விளக்கப்பட்டுள்ளது.
‘காலம்’ நம் வாழ்க்கை. ‘நேரம்’ சமூகம் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கின்ற ஒன்று. விநாயகர் அகவலில் ஒளவைப்பிராட்டியார் கூறியிருக்கின்ற “அணுவுக்கும் அணுவாய் அப்பாலுக்கும் அப்பாலாய்” என்கின்ற சொற்தொடரை புரிந்து கொள்வோம். அணுவுக்கும் அணுவாய் இருப்பது தன் சுய - இருப்பு. அப்பாலுக்கும் அப்பாலாய் இருப்பது இறைவனின் இருப்பு. இவை இரண்டுக்கும் இடையிலே இருப்பது பிரபஞ்சத்தின் ஜகத்தின் இருப்பு. தம்மைப் பற்றியும் உலகைப் பற்றியும் கடவுளைப்பற்றியும் நிறைய முடிவுகளை எடுத்து வைத்திருக்கின்ற மனிதன் வாழ்க்கையில் ஒரு ஆழமான வாழ்க்கையை வாழ்கின்றான். காலத்தை நேரமாக ஏன் மாற்றுகின்றோம் ? எது நமக்கு இல்லையென்கின்ற வெறுமையை நாம் உணர்கின்றோமோ அதை நோக்கி நாம் நம் வாழ்க்கையை செலவிடத் துவங்குவது தான் காலத்திலிருந்து நேரத்திற்கு விழும் வீழ்ச்சி. காலம் நேரமாக மாறாமல் இருக்க வேண்டுமென்றால் ‘தள்ளிப்போடுவதை’ நிறுத்துங்கள் என்று பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளினார்கள்."
01 நவம்பர் 2018
01 நவம்பர் 2018 -பத்திரிகை செய்தி