01 ஜூன் 2009 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினகரன், தினமனி, தினத்தந்தி


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக விழிப்புனர்வு விழா

நாள் :01 ஜூன் 2009

தலைப்பு : கொட்டி கிடக்கும் செங்கலை கோபுரமாக உயர்த்துபவர் குரு – திருமதி சோபா சந்திரசேகர் பேச்சு - ஆன்மிக விழிப்புனர்வு விழா - குருவை வணங்கினால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம் - விழாவில் திரைப்பட எழுத்தாளர் பேச்சு.

"நித்யானந்த தியான பீடம் மகளிர் அமைப்பு சார்பில் 'ஆன்மிக விழிப்புனர்வு விழா' கோவையில் உள்ள என்.எஸ்ஆர் ரோட்டில் உள்ள சாய் பாபா காலணியில் 31 மே 2009 அன்று நிகழ்ந்தது.

இந்நிகழ்ச்சியை கேஎம்சிஆர்இடி நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி பழனிச்சாமி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். விழாவில் எழுத்தாளரும், பாடகருமான சோபா சந்திரசேகர் அவர்கள் குருவின் மேன்மையை பற்றி பேசினார். அவர் தம்முடைய உரையில், ' நாம் எல்லோரும் கொட்டிக்கிடக்கும் செங்கல்கள். அதை கட்டி முடித்து கோபுரமாய் உயர்த்தி பார்க்கும் அளவிற்கு செய்து முடிப்பவர் குரு. அந்த குருவை போற்றுவோம். குரு காட்டிய பாதையை பின்பற்றுவோம்' என்று பேசினார்.

நித்யானந்த வைத்தியாலயா தலைமை மருத்துவர் பேசுகையில், ' எண்ண ஓட்டங்களால் தான் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.நோய் நொடி ஏற்படுகிறது. இதை குறைக்க தொடர் தியானம் செய்தால் உடல் நல பாதிப்புகளை குறைக்கலாம்' என்று தெரிவித்தார்."

01 ஜூன் 2009

01 ஜூன் 2009 -பத்திரிகை செய்தி