01 ஜனவரி 2012 சனாதன இந்து தர்மத்தின் மேன்மையான அறிவியல்
சனாதன இந்து தர்மத்தின் மேன்மையான அறிவியல் (Hinduism-The Greater Science)
வருடம் : 2012
நாள் :01 ஜனவரி 2012
ஆய்வு நிகழ்வு நடைபெற்ற நாட்கள் : 21 நாட்கள் ( தியான முகாம் துவங்கும் முன் - தியான முகாமின் கடைசி நாள்)
நிகழ்வு : உடல் நலம் மீது நடத்தப்பட்ட ஆராய்ச்சி
பங்கேற்பாளர்களின் விபரம் : 2011 வருட இன்னர் அவேங்கனிங் தியான முகாமின் பங்கேற்பாளர்கள்.
நடைபெற்ற இடம்: ஆதி கைலாஸா - நித்யானந்தபீடம், பெங்களூரு ஆதீனம், பிடதி, கர்நாடகா, இந்தியா
ஆய்விற்காக பயன்படுத்திய இயந்திரங்கள் : QEEG இயந்திரம்
ஆய்வில் கண்டறிந்து வெளியிட்ட பலன்கள், செய்திகள், தகவல்கள் : உடல் நலம் மேம்பாடு அடைந்தது.
பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்மையே நடந்தது.
நிகழ்வின் விவரனை : "சனாதன இந்து தர்மத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களால் நிகழ்த்தப்படும் 21 நாட்கள் நடைபெறும் இன்னர் அவேக்கனிங் தியான முகாமில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களின் உடல் நலம் அபரிமிதாக உயர்ந்தது. இது QEEG ஆராய்ச்சியில் அறிவியல் பூர்வமாக நிரூபணமானது.
குண்டலினி சக்தி என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகப் பொங்கும் உள் உயிராற்றலின் பெயர். பகவான் அவர்கள் பங்கேற்பாளர்களின் குண்டலினி சக்தியை தீட்சையால் விழிப்படைச் செய்கிறார். 21 நாட்களும் பங்கேற்பாளர்கள் பகவானிடமிருந்து குண்டலினி விழிப்பு தீட்சை பெற்றனர். குண்டலினி சக்தி விழிப்படையும் பொழுது உடல் - மனம் மற்றும் உணர்ச்சி ரீதியான நோய்கள் குணமடையும்.
2011 இன்னர் அவேக்கனிங்கில் இந்த ஆராய்ச்சி அனைத்து பங்கேற்பாளர்களாலும் தன்னார்வத்துடன் ஏற்கப்பட்டது.
ஆராய்ச்சி முடிவுகள்: 1.95% பேர் உடல் ஆரோக்கியம் மேம்பாடு அடைந்திருந்தது. 2. மைட்டோகாண்டிரியா செல் செயல்பாடு 967 சதவிகிதம் அதிகரித்தது. 3. செல் கட்டமைப்பில் அளவிடக்கூடிய விளைவுகளும், மரபணுக்களில் நேர்மறை செயற்பாட்டையும் நிகழ்த்தியிருந்தது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தையும், முதுமையடைதலை தடுத்தலையும் நிகழ்த்தியது. 4. முதுமையடைதல் மற்றும் கேன்சர் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும் மரபணுக்களின் எண்ணிக்கை 420 வரை உயர்ந்தது."
படங்கள்
இந்து மதத்தின் மேன்மையான அறிவியல்_சாஸ்திர பிரமாணம்
" நம் எல்லோருக்குள்ளும் கடவுளின் விதை இருக்கின்றது. நமக்குள் இருக்கின்ற கடவுள் சக்தியின் விதையைத்தான் குண்டலினி சக்தி என்று சொல்கின்றோம். கடவுள் விதையை சரியான முறையில் நமக்குள் விழிப்பிக்க வைத்தோமானால் அது கடவுளாக மலரும்.
நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் இறைசக்தியை விழிக்கச் செய்கின்ற கணக்கிடமுடியாத நுட்பங்களை, முறைகளை இந்துமதம் அறிவியலாக வழங்குகிறது. இந்து மதத்தின் மேன்மையான அறிவியல் குண்டலினி சக்தியை தினசரி வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதற்கு கற்றுத் தருகிறது. வாழ்வின் எல்லா அம்சங்களிலும், பரிமாணங்களிலும் இந்த தொன்மை வாய்ந்த அறிவியல் இறைசக்தியை வழிப்பிக்க பங்களிக்கின்றது.
’’மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து, இடை பிங்கலை எழுத்தறிவித்து கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி, மூன்று மண்டலத்த முட்டிய தூணின் நான்கெழு பாம்பின் நாவில் உணர்த்தி’’
- ஒளவைபிராட்டி விநாயகர் அகவலில் வெளிப்படுத்திய சத்தியங்கள்
ஔவையார் ஒரு பொிய சித்தர். குண்டலினி சக்தியை ஒரு பாம்பாக உருவகப்படுத்தி சொல்கிறார். ’’மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து’’ என்றால் குண்டலினி சக்தியை காலால் எட்டி உதைத்து எழுப்ப முடியாது. கால் என்றால் காற்று. வாசியாலே, பிராணாயாமத்தாலே எழுப்புகின்ற கருத்தை அறிவித்து, நமக்குள்ள இருக்கிற கடவுளின் விதையை, குண்டலினி சக்தியை பிராணாயாமத்தால் எழுப்பலாம் என்று தெரிவிக்கின்றார்.
சரியான ஞானக்கருத்துக்களை கேட்டு அதை சரியாக வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம் எழுப்பலாம். முறையான மந்திரங்களால் அதை விழிப்பிக்க வைக்கலாம். க்ரியைகளால் விழிப்பிக்க வைக்கலாம். நம்முடைய சக்தி, மனோ சக்தியாலேயேகூட விழிப்பிக்க வைக்கலாம். இந்தத் துறையில கைதோ்ந்த சரியான சித்தர்களாயிருந்தால் சாதாரண ஒரு மூலிகையைக் சாப்பிடுவதன் மூலமாக மட்டுமே உங்கள் குண்டலினியை விழிப்பிக்க வைத்துவிட முடியும்.
இந்து மதத்தில் குண்டலினி சக்தியை விழிப்பிக்க பல்வேறு முறைகள் அறிவியலாக இருக்கின்றது.
எப்படி நீங்கள் 1+1=2 என்பதை குழந்தைகளுக்கு அடிப்படை அலகுகளைக் கொண்டு உலகில் வாழ்வதற்கான அடிப்படை கணித அறிவியலாக கற்பிக்கின்றீர்களோ, அதுபோன்று அவர்களுக்கு உள்ளுலகில் வாழ்வதற்கானஅடிப்படை அலகுகளையும் கற்பிக்க வேண்டும். நீங்கள் உங்களை பற்றி வைத்திருக்கும் கருத்தே உள்ளுலக வாழ்க்கையின் அடிப்படை அலகு. அதை சார்ந்தே நீங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கடவுள், உலகம் இவற்றைப்பற்றி வைத்திருக்கும் கருத்து அமையும். இவை அனைத்திலும் உச்ச அனுபவமான பரமசிவ நிலையை ஒவ்வொருவருமே உணர முடியும். அதற்கான அடிப்படை அலகுகளை அறிவியலாக பகவான் அவர்கள் வழங்குகின்றார்கள்.
இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் வழங்கும் மெய்ஞான சத்தியங்களால் நிகழும் மாற்றங்களை, சக்தி வெளிப்பாடுகளைப்பற்றி பகவான் அவர்கள் மீதும், அவரது தீட்சை பெற்ற சீடர்கள்மீதும் உலக அறிவியலாளர்கள், மருத்துவர்கள், பல்கலைக்கழகங்கள் பல விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள்.
அந்த ஆராய்ச்சி ஆய்வுகளின் முடிவுகளால் உலகம் இந்து மதத்தின் சத்தியங்களை அறிவியலாக அறியத் துவங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சிகள் பகவான் அவர்கள் உலக நன்மைக்கு செய்த மிகப்பெரிய பங்களிப்பாகும்.
உலக அறிவியலாளர்கள் இந்து மதத்தின் மேன்மையான அறிவியலை உணர்ந்து, உலகமே அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கின்றார்கள்.
"