01 ஜனவரி 1989 அருணகிரி யோகீஸ்வரர் தரிசனம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

01 ஜனவரி 1989 அருணகிரி யோகீஸ்வரர் தரிசனம்


சுயசரிதை(Auto Biography)

வருடம்  : 1989

நாள் : 01 ஜனவரி 1989

நிகழ்வு : அருணகிரி யோகீஸ்வரர் தரிசனம்

நிகழ்வின் தலைப்பு : அருணகிரி யோகீஸ்வரர் அளித்த அத்வைத அனுபவம்

நடைபெற்ற இடம் : திருவண்ணாமலை

நிகழ்வின் விவரணை :

படைக்கும் தெய்வமான பிரம்மாவிற்கும், காக்கும் தெய்வமான விஷ்ணுவிற்கும் எழுந்த பேதத்தை போக்கிட அத்வைத அனுபவத்தை அளிக்க முடிவு செய்து அடிமுடி காண முடியாத அக்னி ரூபமாய் எழுந்தார் ஈசன்.

ஈசனின் அருளால், அவருடைய பிரம்மாண்ட பேராற்றலால் பேதமுற்றிருந்த மனம் இருவருக்கும் அழிந்தது. சுத்தாத்வைத அனுபவம் பிறந்தது. தங்களை தடுத்தாட்கொண்டது போன்று அன்பின் வடிவான ஈசனி்ம் உயிர்கள் அனைவருக்கும் இவ்வனுபவத்தை வழங்கி அருள் செய்ய வேண்டி பக்தியுடன் போற்றி துதித்து வேண்டினார்கள்.

ஜோதி ஸ்தம்பமாய் எழுந்தருளிய ஈசன் அத்வைத அனுபவத்தை உயிர்களுக்கெல்லாம் அளித்து பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கும் மாமருந்தாக என்றென்றும் இங்கிருந்து ரட்சிப்பேன் என்று ஈசன் அருணகிரிமலையாக எழுந்தருளினார்.

எல்லோரும் பக்தி வழிபாடு செய்து கொண்டாடும் வடிவமும் தாங்கியருள வேண்டும் என்று இருக்கடவுளும் தொடர்ந்து பக்தியுடன் வேண்டிட... அபிஷேகம் ஆராதனை செய்து வழிபடும் பொருட்டு அம்மலையுள் மறைந்து சுயம்பு லிங்கமாகவும் தோன்றியருளினார்.

பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் நேரடியாக தரிசனம் தந்து சுத்தாவைத ஞானமருளிய எம்பெருமான் அருணகிரி யோகீஸ்வரன் - தாமே நேரடியாக பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் வாழ்விலும் எழுந்தருளி சுத்தாவைத அனுபவத்தை, அழியாத பரமசிவ ஞானத்தை அருளினார். பகவானுடன் 9 மாதங்களாக உறவாடி பகவானுக்குள் உயர் உயிர் மலர்ச்சியை தாமே நிகழ்த்தினார்.

பிரம்மா விஷ்ணுவிற்காக லிங்க ரூபம் எடுத்த அருணகிரி யோகீசன் ஈசன் 01 ஜனவரி 1989 அன்று பகவான் ஶீ நித்யானந்த பரமசிவத்திற்காக சிவ லிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் எழுந்தருளி தரிசனம் வழங்கினார்.

அதிகாலை வேளையில்...தன்னை காண வேண்டும் என்று தவிப்புடன் தேடி பக்தியுடன் கர்ப்ப கிரஹத்தை நோக்கி ஓடோடி வந்த 11 வயதேயான பாலகனுக்காக, பகவான் நித்யானந்த பரமசிவத்தின் பிரார்த்தனைக்காக அச்சுயம்பு லிங்கத்திலிருந்து தோன்றி லிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் காட்சி தந்தார் அருணகிரி யோகீஸ்வரர்.

வேத கால அட்டவனைப்படி (Vedic Calendar) 01 ஜனவரி 1989 அன்று பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் பிறந்த நாள் என்பதால் அண்ணாமலையார் திருக்கோயில் கர்ப்ப கிரஹத்தில் அருணகிரி யோகீஸ்வரரை சுயம்பு லிங்கத்தின்மீது அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் செய்த அந்நாளை மிகவும் பசுமையான நினைவாக தம்முள் பதிந்து வைத்ததாக பகவான் அந்நாளின் சிறப்பை இவ்வாறு விவரித்தார்...'அருணகிரி எம்பெருமான் லிங்கத்தின்மீது அமர்ந்த நிலையில் 'அத்வைத அனுபவத்தை - ஒருமைத்தன்மை நிலை'யை என்னுள் பரிமாற்றம் செய்தார். இந்த அத்வைத அனுபவ தீட்சை பெற்றவுடன் என்னுள் பேதப்படுத்தும் மனம் விடுப்பட்டது. Unclutching அனுபவம் நிகழ்ந்தது. இந்த அத்வைத அனுபூதிக்குப் பிறகு அருணகிரி யோகீஸ்வரர் என் வாழ்வில் தோன்றா நிலை என்ற ஒன்றே எப்போதும் இருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். 9 மாத காலத்தில் அருணகிரி யோகீஸ்வரர் தாமே எழுந்தருளி அத்வைத அனுபவத்தை பற்பல தருணங்களில் என்னுள் பரிமாற்றம் செய்ததையும், அவர் என்னுள் முழுமையாக நிலைபெற்றுவிட்டார், முழுமையாக ஆட்கொண்டுவிட்டார் என்பதையும் என்னால் தீர்க்கமாக உணர முடிந்தது' என்று தாமே வந்து அருள் செய்து தம்மையாட்கொண்ட அருணகிரி எம்பெருமானை பற்றி உருகி வணங்கி பக்தியோடு தம் அனுபவத்தை பகிர்ந்தார் பகவான்.

இந்த படம் அந்த நிகழ்வை விவரிக்கும் படமாக அமைந்துள்ளது.

லிங்கத்தில் பரமசிவ தரிசனம் - சாஸ்திர பிரமாணம்:

எம்பெருமான் அருணகிரி ஈசனை நோக்கி பிரம்மாவும் விஷ்ணுவும் இங்ஙனம் பக்தியுடன் பிரார்த்தனை செய்தார்கள்...

அடுத்தருண கிரியோனே யுனக்குவிண்ணீ ரலதுபுன லாட்டுவா ரார் தொடுத்தவுடுத் திரளலது திருமுடிக்கு மணிமாலை சூட்டுவா ரார் கடுத்திகழு மிடற்றானே கதிர்களன்றி மணித்தீபங் காட்டுவா ரா ரெடுத்திறைஞ்சிப் பூசைசெய்ய விதன்கீழோ ரிலிங்கவடி வெடுப்பா யென்றார்.

இ-ள்: அருணாசலேசுரே! மலையாகியவுமக்கு ஆகாயத்தில் நின்றும் பெய்யாநின்ற மழையேயல்லாமல் ஜலங்கொண்டுவந்து அபிஷேகஞ் செய்கிறவாகளார்? நக்ஷத்திரக்கூட்டங்களே முத்துமாலையானதல்லது வேறேமுகதுமாலை சூட்டுகிறவர்களார்? சூரியகிரணமே தீபமாவதல்லாமல் தீபங்கொண்டுவந்து வேறே காட்டுகிறவர்களார்? ஆனபடியினாலே, நாங்கள் அபிஷேக முதலானவைகள் செய்து பூஜை செய்வதற் கிந்தமலையின்கீழ் ஓரிலிங்கவடிவமா யெழுந்தருள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

அன்னதுவா யிருக்குதுநீர் காமியத்தி லருச்சியுமென் றசலப் புக்கா ரெந்நிலமும் புகழவங்கோர் சிவனுருவ முளைத்ததுகண் டிரைஞ்சி யேத்தி மன்னியபூ மழைபொழிந்து பரவசமாய் மகிழ்ந்தாடி மயனைக் கூவித் தன்னிகரில் கோபுரமு மண்டபமு மணிமதிலுஞ் சமைப்பித் தார்கள்.

இ-ள். அப்படியே இலிங்கமாகிறோம் பக்தியுடன் பூசியுகைளென்று அந்த மலையினுள்ளே மறைவு கோலஞ் செய்தார். எந்தத்தேகமும் புகழும்படி யவ்விடத்தில் ஓரிலிங்கந் தோன்றிற்று. அதைக் கண்டு வணங்கித் தோத்திரஞ் செய்து புட்பவருஷம் பொழிந்து, பரவசமாய்ச் சந்தோஷமடைந்து, ஆனந்தக்கூத்தாடி மயனென்கிற தேவதச்சனைக்கூப்பிட்டு ஒப்பில்லாத கோபுரங்களும் மண்டபங்களும் அழகு பொருந்திய மதிலுஞ் செய்வித்தார்கள்.

- நந்தி பெருமான் மார்க்கண்டேயருக்கு அருளியது ஆதாரம்: அருணாசலப்புராணம் - இரண்டாம் அத்தியாயம் - திருமலைச் சருக்கம்

அருணகிரி யோகீஸ்வரர் தரிசனம்

Darshan-Of-Arunagiri-Yogeshwara - 46051491_739850559709335_3636217783508795392_n.jpg

{{}}

சுயசரிதை_சாஸ்திர பிரமாணம்

எப்பொழுதெல்லாம் வேத பாரம்பரியத்தினுடைய அடிப்படைகளுக்கு ஆபத்து வருகின்றதோ, சனாதன தர்மத்திற்கு எப்பொழுதெல்லாம் பங்கம் ஏற்படுகின்றதோ ... அப்பொழுதெல்லாம் மனித குலம் அழிவுறத் துவங்கும். மனித குலத்தை காப்பாற்றவும், அழிவிலிருந்து தடுக்கவும் சனாதன இந்து தர்மத்தை புதுப்பிக்கவும் பிரபஞ்ச சக்தி ஜெகத்குருவாக அவதரிக்கிறது.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத |

அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||

பரித்ராணாய ஸாதூநாம் விநாஶாய ச துஷ்க்ரு'தாம் |

தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

தர்மம் குறைந்து, அதர்மம் அதிகரிக்கும் சமயங்களில் நான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறேன். பக்தி உடையவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் நேர்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் நான் காலங்காலமாக, மீண்டும் மீண்டும் பிறக்கிறேன். - பகவான் ஶீ கிருஹ்ணர் பகவத்கீதையில் அளித்த வாக்குறுதி ( 4.7 & 8)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் வேத பாரம்பரியத்தை புனரமைக்கிறார், பூமியில் கைலாஸாவை புனரமைக்கிறார்.

பூமியில் பரமசிவ ஞானம் அழியும் அபாயத்தில் உள்ளது. பரமசிவம் என்பது சத்தியம். அது வெறும் உயர் உயிர் நிலைப் பண்புகளின் அல்லது தாத்பரியங்களின் தொகுப்பு அல்ல. பரமசிவம் அவை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தாலும், அவற்றிற்கு அப்பால் உள்ளது, அவற்றை கடந்தது, அதனினும் மேலானது. பரமசிவம் தன்னிச்சையாக பிரபஞ்சத்தை இயக்கும் அறிவாற்றல், அதுவே பிரபஞ்சத்தின் ஆதாரமாகும். பஞ்ச கிருத்தியங்களான படைத்தல் (சிருஷ்டி), காத்தல் (ஸ்திதி), அழித்தல் (சம்ஹாரம்), மாயையிலிருந்து மீட்டல் (த்ரோபாவம்), முக்தியளித்தல் (அனுக்கிரஹம்) ஆகிய ஐந்து கிருத்தியங்களையும் புரிகிறார். கைலாலத்தில் அமர்ந்து பிரம்மாண்டத்தில் நிகழ்வதை பிண்டாண்டத்தில் நிகழ்த்தும் பரமசிவ பரம்பொருள் பூமியில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் உடலில் அவதரித்து தன்னை வெளிப்படுத்துகிறது. பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தம்முடைய பரமசிவ அனுபவத்தை 'கைலாஸா'விலிருந்து மனித உடல்களுக்குள் பரிமாற்றம் செய்கின்றார்.

வேத பாரம்பரியம் பூமியில் தழைத்தோங்க காரணமான மூன்று அடித்தளங்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்படுகின்றது. இதனால் பூமியில் தர்மத் நிலை குலைந்து உள்ளது.

1. வேத ஞானத்தை பாதுகாக்கும் பீடங்கள். 2. புனித சிறப்புக் கலைகள் மற்றும் கட்டிடங்கள். 3. சத்தியத்தை மிகத் தூய்மையாகவும், துரிதமாகவும் உரைக்கும் மொழி.

இன்றைய சூழலில் இம்மூன்றும் அதன் உயரிய நோக்கத்திலிருந்து துண்டிக்கப்பட்டு பெயரளவில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் இம்மூன்று அடிப்படைகளும் அதன் உண்மை நோக்கத்திற்கு ஒருங்குவித்தலுடன் இயங்க பரமசிவன் அருளிய சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு சாசனங்களை வகுத்தளித்து தமது கைலாஸாவில் செயல்படுத்துகிறார். இதன்மூலம் பூமி முழுவதும் ஜீவன் முக்த சமுதாயத்தை நிர்மாணிக்கின்றார்.