சுயசரிதை: 1982 முதல் சாதுர்மாஸ்ய விரதம்
சுயசரிதை(Auto Biography)
வருடம் : 1982
நாட்கள் : 4 மாதங்கள்
நிகழ்வு : சாதுர்மாஸ்ய விரதம்
நிகழ்வின் தலைப்பு : முதல் சாதுர்மாஸ்ய விரதம்
நடைபெற்ற இடம் : திருவண்ணாமலை
நிகழ்வின் விவரனை : "
" சாதுர்மாஸ்யம்: சாதுர்மாஸ்ய காலம் என்பது தக்ஷிணாயன காலத்தில் - ஆடி பெளர்ணமி முதல் கார்த்திகை பெளர்ணமி வரையான காலம் ஆகும். சனாதன இந்து தர்மத்தில் இந்த இடைப்பட்ட நான்கு மாத காலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த காலத்தில் சன்யாசிகளால் மிகவும் சிரத்தையோடு ஆன்மிக பயிற்சிகள் செய்யப்படும். சன்யாசிகள் வேறு எந்த இடத்திற்கும் பிரயாணம் செய்யாமல் ஒரே இடத்தில் தங்கி சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொள்வர். இந்த சாதுர்மாஸ்ய காலத்தில் பாற்கடலில் திருமால் யோக நித்திரையில் துயில்கொள்வார். இந்த 4 மாதம் மழைக்காலம் என்பதால் சாது சன்யாசிகளுக்கு தங்களால் பிற உயிர்களுக்கும், பிற உயிர்களாலும், மழை வெள்ளத்தாலும் தீங்கு நேரக் கூடாது என்பதற்காகவும் இந்த சாதுர்மாஸ்ய காலம் சனாதன இந்து தர்மத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
சாதுர்மாஸ்ய விரதம்:
விஷ்ணு புராணம் சொல்கிறது...
சத்கர்மஹ் சத்கதாச்சைவ சத்ஸேவ தர்சனம் சதாம் விஷ்ணு பூஜாரத்திதானே சாதுர்மாஸ்ய சுதுர்லபஹ
சாதுர்மாஸ்ய விரத காலத்தில் கடைப்பிடிக்கும் அனுஷ்டானங்கள்: 1. சத்சங்கம் 2. த்விஜபக்தி 3. குரு, தேவ, அக்னி தர்ப்பணம் 4. கோப்பிரதாணம் 5. வேத பாடம் 6. சத்க்ரியைகள் 7. சத்ய பாஷணம் 8. கோ பக்தி 9. தான பக்தி 10. தர்ம சாதனம்
இந்நான்கு மாதத்தில் நான்கு விரதங்கள் மேற்கொள்ளப்படும். அவையாவன
சாக்க விரதம் தாதி விரதம் க்ஷீர விரதம் த்விதல விரதம்
இந்த சாதுர்மாஸ்ய விரத காலத்தில் குறிப்பிட்ட உணவு எடுத்துக்கொள்ளப்படும், சில உணவுகள் தவிர்க்கப்படும்.
1982 ஆண்டில் பெற்ற முதல் சாதுர்மாஸ்ய தீட்சை:
சனாதன இந்து தர்மத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் முதன் முதலாக தம்முடைய நான்காம் வயதில் சாதுர்மாஸ்ய தீட்சை பெற்றார். மற்ற பாலகர்களைப்போன்று அல்லாமல் விளையாட்டிலும், உணவிலும் பற்றற்று இறை வழிபாட்டிலும், ஆன்மிகத்திலும் மிகுந்த ஸ்ரத்தையுடன் இருக்கும் பகவானை குருமார்கள் கொண்டாடினார்கள். ஈஸ்வர பக்தி
பாலக வயதிலேயே ஞானத் தேடுதல் தீவிரமடைந்திருந்த பகவானின் மகோன்னத நிலை வெளிப்படுவதற்காக பல தீட்சைகளை அளித்தனர்.
தாம் அவதரித்த திருவண்ணாமலையின் ஞான கர்ப்ப சூழலியலில் குருமார்களிடமிருந்து பகவான் அவர்கள் பாலக பருவத்திலேயே சாதுர்மாஸ்ய தீட்சை பெற்று காவியுடை தரித்து தண்டம் தாங்கி பால சன்யாச திருக்கோலத்தில் அருள்புரியும் திருக்காட்சியாகும்.
நான்காம் வயதில் துவங்கி இதுநாள் வரை கையிலாத்தை பூமியில் புனரமைப்பதன் பொருட்டு பகவான் வருடாவருடம் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்கிறார்.
மாதா விபுதானந்தபுரி தேவி நான்கு வயது பகவானை தம் மடியில் அமரச் செய்து அவர் சார்பாக சடங்குகளை செய்தார். இந்த வரலாற்று நிகழ்வை மாதா விபுதானந்தபுரி தேவி புகைப்படம் எடுத்து மிகப்பெரும் பங்காற்றினார்.
சாஸ்தர பிரமாணம்:
பகவான் வியாஸருக்கு தேவரிஷி நாரதர் அவர்கள் தம்முடைய முந்தைய பிறவியின் பாலக வயதில் (5 வயதிற்கு முன்) பெற்ற சாதுர்மாஸ்ய தீட்சையும், சாதுர்மாஸ்ய ருதுவில் செய்த பயிற்சிகளையும், அடைந்த பலன்களையும் விவரித்தார். இது ஶீ பாகவதத்தில் ப்ரதம ஸ்கந்தத்தில் அருளப்பெற்றுள்ளது.
(ஆதாரம்: ஶீ பாகவதம் - ப்ரதம த்விதீய ஸ்கந்தங்கள் - தமிழ் வசனம் - ஶீ.அ.வீ.நரஸிம்ஹாசார்யர் அவர்களால் இயற்றப்பட்டது. வருடம் - 1915. )
ப்ரதம ஸ்கந்தத்தில்...
தேவரிஷி நாரதர்: ' ...முனிவரே! நான், முன் கல்பத்தில் நடந்த ஜன்மத்தில் வேதமோதும் ஸந்யாஸிகளுக்கு தாஸியான ஓர் பெண்டிர்க்குப் பிள்ளையாகப் பிறந்திருந்தேன். ஒருக் கால் வர்ஷ காலம் வரக்கண்டு அந்த யோகிகள் சாதுர்மாஸ்ய தீக்ஷையைக் கொண்டு இருப்பிடத்தை விட்டுப்போகாதிருக்க முயலுகையில், நான் பாலகனாயிருக்கும் பொழுதே என்னை அந்த யோகிகள் சுஶ்ரூஷை செய்ய நியோகித்தார்கள். யோகிகள் எல்லோரிடத்திலும் ஒரே விதமான காட்சியுடையவரே. ஆயினும் அவர்கள், நான் ஜிஹ்வாசாபலம் முதலிய சாபலங்களொன்றுமின்றி இந்திரியங்களை அடக்கிக்கொண்டு பாலர்க்கு இயற்கையாகவே ஏற்பட்ட விளையாடல்களிலும் பற்றற்று அனுகூலனாகிச் சொன்னபடி சுஶ்ரூஷை செய்வதும், மிதமாகப் பேசுவதுமாயிருக்கக் கண்டு என்னிடத்தில் கருணைகூர்ந்தார்கள். அவர்கள் எனக்குத் தாங்கள் புசித்து மிகுந்த அன்னாதிகளைக் கொடுத்து என்னை ஸந்தோஷப்படுத்துகையில், நான் அவற்றை ஒருக்கால் புசித்தேன். அதனால் பாகவதரிடத்தில் ப்ரீதி உண்டாவதற்குத் தடையான பாபங்களெல்லாம் தீரப்பெற்றேன். இங்ஙனம் பகவானிடத்தில் பக்தியுடைய அந்த யோகிகளுக்குச் சுஶ்ரூஷை செய்ய முயன்ற நான் பகவத் பக்தர்கள் ஆசரிக்கிற தர்மங்களில் ப்ரீதி உண்டாவதற்குத் தடையான பாபங்களெல்லாந்தீர்ந்து பரிசுத்தமான மனமுடையவனாகி அந்த தர்மத்திலேயே ருசி உண்டாகப் பெற்றேன்.
மனத்தில் தர்ம ருசி உண்டானபின்பு தினந்தோறும் பகவானான க்ருஷ்ணனுடைய கதைகளைப் பாடுகின்ற அந்த யோகிகளின் அனுக்ரஹத்தினால் மனத்திற்கினிமையான அந்த க்ருஷ்ண கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஓ வ்யாஸரே! அந்த க்ருஷ்ண கதைகளைக் காலந்தோறும் (மூன்று காலங்களிலும்) ஶ்ரத்தையுடன் கேட்டுக்கொண்டிருக்கிற எனக்கு, அனைவர்க்கும் ப்ரீதியை விளக்கவல்ல பெரும் புகழுடைய பகவானிடத்தில் ப்ரீதி உண்டாயிற்று. அப்பொழுது ப்ரியமான புகழுடைய அந்த பகவானிடத்தில் ருசி உண்டாகப்பெற்ற எனது மதி எவ்வகைத் தடையுமின்றி விளக்க முற்றது. அந்த மதியால் பரப்ரஹ்மம் உள்ளே புகுந்து தரிக்கப்பெற்ற நான் கார்யகாரண ஸ்வரூபமான ஜகத்தெல்லாம் என்னிடத்தில் இருப்பதாகவும், அந்த ஜகத்தெல்லாம் என்னுடைய மாயையால் கற்பிக்கப்பட்டதாகவும் கண்டேன். ப்ரக்ருதியின் பரிணாமமான தேஹத்தைச் சேதனன் தரிக்கிறானென்றும் சேதனனை ஈஶ்வரன் தரிக்கின்றானென்றும் ஆத்மாவும் தேஹமும் வேறுபட்டவையென்றும் ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள ஸம்பந்தம் அழிக்கமுடியாததென்றும் அறிந்தேன். இங்ஙனம் அந்த யோகிகள் பாடுகின்ற பகவானுடைய நிர்மலமான புகழை, சரத் ரிது - வர்ஷ ருது ஆகிய இரண்டு ருதுக்கள் முழுவதும் மூன்று காலங்களிலும் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மனத்தின் தோஷமான ரஜஸ்ஸூ தமஸ்ஸூ ஆகிய இவைகளைப் போக்குந் திறமையுடைய பக்தி உண்டாயிற்று. அங்ஙனம் பக்தி உண்டாகப் பெற்று அனுராகமுடைய நான் பாலனாயினும் மிக்கவணக்க முடையவனாயிருந்தேன். க்ரமத்தில் பாபங்களெல்லாம் தொலையப் பெற்றேன். இந்திரியங்களை வென்றேன். இத்தகைய நான் அந்த யோகிகளைத் சுஶ்ரூஷை செய்துகொண்டிருக்கையில், தீனரிடத்தில் ப்ரீதி செய்யுந்தன்மையரான அம்மஹானுபாவர்கள் போக முயன்று என்னிடத்தில் கருணைகூர்ந்து பகவான் தானே மொழிந்ததும் மிக ரஹஸ்யமுமான தத்வஜ்ஞானத்தை எனக்கு உபதேசித்தார்கள். ஜகத்தையெல்லாம் படைப்பவனும் ஜ்ஞானம் பலம் முதலிய குணங்கள் நிறைந்தவனுமாகிய வாஸூதேவனுடைய மாயையென்னும் ப்ரக்ருதியின் மஹிமையை நான் எந்த ஜ்ஞானத்தினால் அறிந்தேனோ, எந்த ஜ்ஞானத்தினால் யோகிகள் அப்படிப்பட்ட வாஸூதேவனுடைய ஸ்தானமான பரமபதத்தைப் பெறுகின்றார்களோ, அப்படிப்பட்ட அர்த்த பஞ்சகஜ்ஞானத்தை உபதேசித்தார்கள்.
ப்ராஹ்மண ஶ்ரேஷ்டரே! பலன்களை விரும்பாமல் செய்யுஞ் செயல்களை ஈஶ்வரனிடத்தில் அர்ப்பணஞ்செய்கையே ஆத்யாத்மிகமென்றும் ஆதிதெய்விகமென்றும் ஆதிபெளதிகமென்றும் மூன்று வகைப்பட்ட ஸம்ஸார தாபங்களைப் போக்கவல்லதென்று ஶ்ருதியும் ஸ்ம்ருதியும் புராணங்களும் தெரிவிக்கின்றன. ஸம்ஸார தாபங்கள் பாபத்தினால் விளைகின்றன. அந்த பாபம் பலன்களை விரும்பாமல் செய்யப்படும் தர்மத்தினால் தொலையும். அப்போது பக்தி யோகம் உண்டாகும். அதன் மஹிமையால் அந்த ஸம்ஸாரதாபங்கள் தாமே தொலையும்.
வ்ரதங்களை நன்றாக அனுஷ்டித்தவரே! எந்த ஆஹாராதிகளால் வ்யாதி உண்டாகிறதோ, அப்படிப்பட்ட அபத்யமான த்ரவ்யத்தைவிடாமல் வ்யாதியை போக்கும் மருந்தை உபயோகப்படுத்தினும் வ்யாதி வளருமேயன்றித் தீராது. எந்த வஸ்துவால் எந்த வ்யாதி வளருமோ அந்த வ்யாதிக்கு அதையே மருந்தாக நினைத்து உபயோகப்படுத்தினால் அது அந்த வ்யாதியை வளர்க்குமேயன்றி அதைத் தீர்க்காது. இங்ஙனம் பயன்களை விரும்பிச் செய்யும் செயல்களெல்லாம் ப்ராணிகளுக்கு ஸம்ஸாரத்தை வளர்ப்பவையேயாம். அவற்றை ஈஶ்வரனிடத்தில் அர்ப்பணஞ் செய்யாமல் விடின் அவை கடைசியில் ஆத்ம நாசத்தை விளைப்பனவாம். (ஸ்தாவர ஜன்மங்களை விளைத்து ஆத்மநாசத்தையுங் கொடுக்கும்). பகவானை ஸந்தோஷப்படுத்தும்படியான எந்தச்செயல் செய்கிறோமோ, அதனால்தான் பக்தி யோகமும் பரமாத்மாவை ஸாக்ஷாத்கரிப்பதற்கு ஹேதுவான ஜ்ஞானமும் உண்டாக வேண்டும். 'நீ செய்யுஞ் செயல்களையெல்லாம் என்னிடத்தில் அர்ப்பணஞ் செய்வாய்' என்று பகவான் உபதேசித்த சிக்ஷையை உட்கொண்டு அடிக்கடி வர்ணாஶ்ரமங்களுக்குத் தகுந்த கர்மங்களைச் செய்துகொண்டு பகவானான க்ருஷ்ணனுடைய கல்யாண குணங்களையும் அவற்றை வெளியிடுகிற அவனது நாமங்களையும் பக்தியோகத்தில் விருப்பமுடையவர் வாயாற் சொல்லுவதும் நெஞ்சால் நினைப்பதுஞ் செய்வார்கள். பகவான் கற்பித்த சிக்ஷையின்படி கர்மங்களைச் செய்து அவற்றை அவனிடத்தில் அர்ப்பணஞ் செய்தலும், குணங்களையும் நாமங்களையும் நினைத்தல் சொல்லுதல் முதலியவைகளும் பக்தியோகத்தை விளைப்பனவாம். ப்ரணவத்துடன் வாஸூதேவ ப்ரத்யும்ன அநிருத்த ஸங்கர்ஷண மூர்த்தி நாமங்கள் நான்கையும் வாயார மொழிந்து நமஸ்காரஞ் செய்து, மந்த்ரமே வடிவாகப் பெற்றவனும் கர்மத்தினால் விளையக்கூடிய வேறு வடிவமில்லாதவனும் யஜ்ஞங்களால் பூஜிக்கப்படும் புருஷனுமாகிய பரமபுருஷனைப் பூஜிக்கும் புருஷனே நல்லறிவுடையவனாவான்.
அந்தணரே! இங்ஙனம் நான் தனது கட்டளையின்படி ஆசரித்ததைக்கண்டு கேசவன், எனக்கு தன்னிடத்தில் பக்தியையும் அதனால் விளையக்கூடிய ஸாக்ஷாத் காரரூபஜ்ஞானத்தையும் ஐஸ்வர்யத்தையும் கொடுத்தான்.
பல பெரியோரிடத்தில் பலவாறு தர்மங்களைக் கேட்டுணர்ந்தவரே! பெரும் புகழோரே! பகவானுடைய புகழை வெளியிடுவதான ஓர் ப்ரபந்தத்தை இயற்றுவீராக. அதில், அறிவுடையவர் விரும்பும் ப்ரயோஜனங்களெல்லாம் குறைவற அமைந்திருக்க வேண்டும். மூன்று வகைப்பட்ட ஸம்ஸார தாபங்களால் வருந்தின மனமுடைய மனிதர்களின் வருத்தங்களெல்லாம் மற்ற எந்த உபாயங்களாலும் தீராதவையாயினும் அந்த ப்ரபந்தத்தினால் தீர வேண்டும். இதுவே நமது விருத்தங்களை எல்லாம் தீர்க்கும். மற்ற எதனாலும் தீராது என்று ப்ராணிகள் அனைவரும் ஆதரிக்கும்படியான ஓர் ப்ரபந்தத்தை இயற்றுவீராக.
நாரத வ்ருத்தாந்தம்
ஸூதர் சொல்லுகிறார்: அந்தணர் தலைவரான செளனகரே! இங்ஙனம் ஸத்யவதியின் புதல்வரான வ்யாஸர் தேவர்ஷியாகிய நாரதருடைய ஜன்மத்தையும் கர்மத்தையும் கேட்டு, மீளவும் அம்முனிவரை வினாவினார்.
வ்யாஸர் சொல்லுகிறார்: உமக்கு ஜ்ஞானோபதேசஞ் செய்த அந்த யோகிகள் சாதுர்மாஸ்ய தீக்ஷை கழிந்தவுடன் வெளியே போகையில், இளம் பருவத்திலிருந்த நீர், அப்பால் என் செய்தீர்? ப்ரஹ்மாவின் புதல்வரே! அந்த யோகிகள் போனபின்பு மேலுள்ள வயதையெல்லாம் எந்த நடத்தையால் கழித்தீர்? காலம் வருகையில் இந்த சரீரத்தை எவ்வாறு துறந்தீர்? முனிஶ்ரேஷ்டரே! முன் கல்பத்தில் உமக்கு யோகிகள் உபதேசித்த தத்வஜ்ஞானத்தை இக்காலம் மறைக்கவில்லையன்றா? காலம் எல்லாவற்றையும் அழிக்கும் தன்மையுடையது. ஆயினும் உமக்கு ஜன்மாந்தரத்தில் விளைந்த தத்வஜ்ஞானம் இந்த ஜன்மத்திலும் மாறாதிருக்கின்றதே. நாரதர் சொல்லுகிறார்: எனக்கு ஜ்ஞானோபதேசஞ் செய்த யோகிகள் சாதுர்மாஸ்ய தீக்ஷை கழிந்த பின்பு வெளியே போகையில், இளம்பருவத்திலிருந்த நான் அப்பால் இங்ஙனம் செய்தேன்.
"
முதல் சாதுர்மாஸ்ய விரதம்_படங்கள்
சுயசரிதை_சாஸ்திர பிரமாணம்
எப்பொழுதெல்லாம் வேத பாரம்பரியத்தினுடைய அடிப்படைகளுக்கு ஆபத்து வருகின்றதோ, சனாதன தர்மத்திற்கு எப்பொழுதெல்லாம் பங்கம் ஏற்படுகின்றதோ ... அப்பொழுதெல்லாம் மனித குலம் அழிவுறத் துவங்கும். மனித குலத்தை காப்பாற்றவும், அழிவிலிருந்து தடுக்கவும் சனாதன இந்து தர்மத்தை புதுப்பிக்கவும் பிரபஞ்ச சக்தி ஜெகத்குருவாக அவதரிக்கிறது.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத |
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||
பரித்ராணாய ஸாதூநாம் விநாஶாய ச துஷ்க்ரு'தாம் |
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ||
தர்மம் குறைந்து, அதர்மம் அதிகரிக்கும் சமயங்களில் நான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறேன். பக்தி உடையவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் நேர்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் நான் காலங்காலமாக, மீண்டும் மீண்டும் பிறக்கிறேன். - பகவான் ஶீ கிருஹ்ணர் பகவத்கீதையில் அளித்த வாக்குறுதி ( 4.7 & 8)
இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் வேத பாரம்பரியத்தை புனரமைக்கிறார், பூமியில் கைலாஸாவை புனரமைக்கிறார்.
பூமியில் பரமசிவ ஞானம் அழியும் அபாயத்தில் உள்ளது. பரமசிவம் என்பது சத்தியம். அது வெறும் உயர் உயிர் நிலைப் பண்புகளின் அல்லது தாத்பரியங்களின் தொகுப்பு அல்ல. பரமசிவம் அவை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தாலும், அவற்றிற்கு அப்பால் உள்ளது, அவற்றை கடந்தது, அதனினும் மேலானது. பரமசிவம் தன்னிச்சையாக பிரபஞ்சத்தை இயக்கும் அறிவாற்றல், அதுவே பிரபஞ்சத்தின் ஆதாரமாகும். பஞ்ச கிருத்தியங்களான படைத்தல் (சிருஷ்டி), காத்தல் (ஸ்திதி), அழித்தல் (சம்ஹாரம்), மாயையிலிருந்து மீட்டல் (த்ரோபாவம்), முக்தியளித்தல் (அனுக்கிரஹம்) ஆகிய ஐந்து கிருத்தியங்களையும் புரிகிறார். கைலாலத்தில் அமர்ந்து பிரம்மாண்டத்தில் நிகழ்வதை பிண்டாண்டத்தில் நிகழ்த்தும் பரமசிவ பரம்பொருள் பூமியில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் உடலில் அவதரித்து தன்னை வெளிப்படுத்துகிறது. பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தம்முடைய பரமசிவ அனுபவத்தை 'கைலாஸா'விலிருந்து மனித உடல்களுக்குள் பரிமாற்றம் செய்கின்றார்.
வேத பாரம்பரியம் பூமியில் தழைத்தோங்க காரணமான மூன்று அடித்தளங்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்படுகின்றது. இதனால் பூமியில் தர்மத் நிலை குலைந்து உள்ளது.
1. வேத ஞானத்தை பாதுகாக்கும் பீடங்கள். 2. புனித சிறப்புக் கலைகள் மற்றும் கட்டிடங்கள். 3. சத்தியத்தை மிகத் தூய்மையாகவும், துரிதமாகவும் உரைக்கும் மொழி.
இன்றைய சூழலில் இம்மூன்றும் அதன் உயரிய நோக்கத்திலிருந்து துண்டிக்கப்பட்டு பெயரளவில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் இம்மூன்று அடிப்படைகளும் அதன் உண்மை நோக்கத்திற்கு ஒருங்குவித்தலுடன் இயங்க பரமசிவன் அருளிய சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு சாசனங்களை வகுத்தளித்து தமது கைலாஸாவில் செயல்படுத்துகிறார். இதன்மூலம் பூமி முழுவதும் ஜீவன் முக்த சமுதாயத்தை நிர்மாணிக்கின்றார்.