என் குரு நித்யானந்தர் 13 சாக்ஷி பிரமாணம்
சாக்ஷி பிரமாணம் (Sakshi Pramana)
வருடம் : 2007
தலைப்பு :சாக்ஷி பிரமாணம்
பெயர் : சூர்ய குமார்
இடம் : சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சாக்ஷி பிரமாணம்:
இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர்கள் தங்கள் குருவால் வாழ்வில் பெற்ற உன்னதங்களை, பகவான் தங்கள் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை பக்தியுணர்வோடும், நன்றியுணர்வோடும் பகிர்ந்துள்ளனர்"
பக்தரின் அனுபவம் : சூர்ய குமார் என்பவர் 'என் குரு நித்யானந்தர்' என்ற தலைப்பில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களை பற்றி தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 2010 ஆம் வருடம் ஸ்வாமிஜியிடம் பெற்ற ஒரு தீட்சையினால் ஒரு உண்னத ஆன்மிக அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஸ்வாமிஜியை தரிசித்த பிறகு அவர் உடல் ஆரோக்கியத்திலும் தொழிலிலும் நல்ல அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. ஸ்வாமிஜியின் தீட்சையினால் பல சக்திகளையும் வெளிப்படுத்த துவங்கிவுள்ளார் என்பதை இக்காணொளியில் நன்றிவுணர்வுடன் பதிவிட்டுள்ளார்.
சூர்ய குமார் என்பவர் 'என் குரு நித்யானந்தர்' என்ற தலைப்பில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களை பற்றி தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இக்காணொளியில் 2017 ஆம் வருடம் மஹாசதாசிவோஹம் என்ற தியான முகாமில் கலந்து கொண்ட பிறகு ஸ்வாமிஜியுடன் ஆழமான ஒருமைத்தன்மையில் இருக்க முடிவதால் பல நிகழ்வுகள் நிகழ்வதற்கு முன்பே உள்ளுணர்வின் மூலமாக அவருக்கு தெரிந்து விடுகின்றது. மேலும் மற்றவர்களும் நன்மை அடையும் வகையில் ஆனந்த சேவை செய்து வருவதாக நன்றிவுணர்வுடன் பதிவிட்டுள்ளார்.
சூர்ய குமார் என்பவர் என் குரு நித்யானந்தர் என்ற தலைப்பில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களை பற்றி தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஸ்வாமிஜியிடம் தியான சிகிச்சைக்கான தீட்சை பெற்று தனக்கும் மற்றவர்களுக்கும் தியான சிகிச்சை அளித்து ஆனந்த சேவை செய்து வருகின்றார். அதுமட்டுமின்றி ஸ்வாமிஜியின் தீட்சையினால் மூன்றாம் கண் விழிப்படைந்து தன் உடலின் பிரச்சனை என்னவென்று தெரிந்து குணமாகி உள்ளதை நன்றிவுணர்வுடன் பதிவிட்டுள்ளார்.
சாக்ஷி பிரமாணம்
பகவானைப்பற்றி பக்தர்களின் பதிவு : என் குரு நித்யானந்தர்
சாஸ்திர பிரமாணம்
சாஸ்திர பிரமாணம்:
குருவின் மகத்துவத்தை சிவ மஹாபுராணம் இவ்வாறு போற்றுகிறது...
குருவே சிவன். சிவனே குரு. - உபமன்யு முனிவர் பகவான் கிருஷ்ணருக்கு செய்த உபதேசம். ( ஆதார நூல்: அத்தியாயம்: குரு தீக்ஷா விதி , சிவ மஹாபுராணம்)
பக்தர்களுக்காக பரமசிவன் தோன்றி அருள்பாலிக்கும் கருணையை அருணாச்சல புராணம் இவ்வாறு போற்றுகிறது...
அன்பர்கருதிற்கடுமை யாகியெதிர்வந்தே துன்பமகல்விக்குமது தூயதொழிலானான்
அடியார்கள் நினைத்தால் சீக்கிரத்தில் தானே அவர்களுக்கு எதிராகத் தோன்றித் துன்பம் நீக்குவதே தமக்கு பரிசுத்தமாகிய தொழிலாகக் கொண்டவன் பரமசிவன். - பாவந்தீர்த்த சருக்கம், பன்னிரெண்டாவது அத்தியாயம், அருணாச்சலப் புராணம்
ஆத்ம பிரமாணம்:
இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் குருவாய் எழுந்தருளி தம்மிடத்தில் சரண்புகுந்தவர்களை தம்மைபோலவே பரமசிவ நிலையடையும் பொருட்டு ஞான உபதேசஞ் செய்து வரமருள்கின்றார். தம் சீடர்களையும், பக்தர்களையும் காத்தருளுகின்றார்.