அக்டோபர் 2017 பத்திரிகை செய்தி
வெளியீடு
ஈகிள் ரவுண்ட்ஸ்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: மார்ச் 02 தேதி 2010 வருடம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை பற்றி வெளிவந்த அவதூறு செய்திகள் பற்றிய உண்மைகள்.
நாள் :அக்டோபர் 2017
தலைப்பு : சுவாமி நித்யானந்தாவின் மறைக்கப்பட்ட உண்மைகள்
"ஈகிள் ரவுண்ட்ஸ் என்ற தமிழ் மாத இதழில் ‘சுவாமி நித்யானந்தாவின் மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற தலைப்பில் மார்ச் 02 தேதி 2010 வருடம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை பற்றி வெளிவந்த அவதூறு செய்திகள் பற்றிய உண்மைகளை வெளியிட்டுள்ளார்கள்.
எந்த போலி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்களோ அதன் உண்மைத் தன்மையை கண்டறிய அமெரிக்க அரசு மற்றும் FBI னால் அங்கீகரிக்கப்பட்ட 4 முன்னணி தடயவியல் நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானியர்களுக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இத்துறையில் 30 வருடங்கள் அனுபவமுள்ள ‘எட்வர்ட் ஜான் ப்ரிமேஷ்’; என்கின்ற FBI அதிகாரி அந்த வீடியோ பற்றிய தன் ஆய்வு அறிக்கையில் Composite Layering முலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளார். Composite Layering என்பது வெவ்வேறு காலக் கட்டங்களிலும் இடங்களிலும் எடுக்கப்பட்ட காட்சிகளை ஒன்றாக கலப்பு செய்து உண்மைபோல் தோற்றம் அளிக்க செய்யப்படும் ஒரு தொழில் நுணுக்கம். இதை செய்வது முற்றிலும் சுலபமானது. இதிலிருந்து இந்த வீடியோ முற்றிலும் போலியானது, பொய்யானது மற்றும் உண்மை சம்பவத்திற்கு புறம்பானது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மீது சுமத்தப்பட்ட அடுத்த குற்றச்சாட்டை ஆய்வு செய்த வகையில் 50 சந்தர்ப்பங்களில் தான் கற்பழிக்க பட்டு விட்டதாக பொய் குற்றம் சாட்டும் பெண்ணுக்கு 4 STD அதாவது Sexually Transmitted Diseases இருப்பதை மருத்துவ அறிக்கை தெளிவாக நிரூபித்துள்ளது. 2004-ல் இருந்தே அந்த பெண் தன்னுடைய 4 பாலியல் நோய்கும்மிச்சிகன் மருத்துவமனையில் (Michigan Hospital) சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த பாலியல் நோய் சரி செய்ய முடியாத தன்மை கொண்டது. இந்த நோய் பரவும் தன்மை கொண்டது. பாலியல் நோய் உள்ள அந்த பெண்ணின் உமிழ் நீர் பட்டால்கூட மற்றவர்களுக்கு பரவக்கூடிய அபாயம் உள்ளது என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அறிக்கை அளித்து உள்ளனர். ஆனால் கற்பழிப்பு வழக்கில் பழி சுமத்தபடும் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு அப்படி எந்த நோயும் இதுவரை இருந்தது இல்லை.
கடந்த 10 வருட காலத்தில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 2,75,000 கற்பழிப்பு புகார்களில் பாதிக்கப்பட்ட நபர் பற்றிய எந்தவிதமான குறிப்பும் இல்லாமல் ஒருவரை கைது செய்திருப்பது பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் வழக்கில் மட்டுமே நிகழ்ந்துள்ளது."
அக்டோபர் 2017
அக்டோபர் 2017 -பத்திரிகை செய்தி