September 20 2019-Tamil

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

Title

ஆதி சைவம் - ஆனந்த களிப்பு, ஆன்மபலம் இரண்டும்தான் உங்கள் வாழ்வின் மூலப்பொருள்!

Narration

இன்றைய சத்சங்கத்தின் சாரம் 20 செப்டம்பர் 2019 *நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம்.. நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம்... அஸ்மதச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்.. *உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்... *ஆழ்ந்து கேளுங்கள்.. காலபைரவர் தன் முழுமையான சக்தியில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறார்.. *ஆழ்ந்து கேட்டீர்களானால் சத்தியங்களை அப்படியே உள்ளிறக்கிவிடுவார்;.. *இன்று தெளிந்த சில ஆழமான சத்தியங்களைச் சொல்லப்போகிறேன்.. குறிப்பெடுத்துக்கொள்ள நினைத்தாலும் ஒரு புத்தகத்தை வைத்து எழுத்திக்கொள்ளுங்கள்.. *காலபைரவர் நேரடியாகத் தமிழில் பேசப்போகின்றார்.. ஆழ்ந்து கேளுங்கள்.. *உயிர் - உங்களுக்குள் இருக்கின்ற அந்த Consciousness.. அதுதான் உங்கள் வாழ்க்கையின் மூலப்பொருள். அந்த மூலப்பொருள் பொங்கி மலர்வதற்கு இரண்டு விஷயம் வேண்டும். ஒன்று - ஆனந்தம். *ஆனந்தம் - என்றால் தன்னைப்பற்றியும், தன்னனைத்சுற்றியிருக்கின்ற உலகத்தைப் பற்றியோ கவலைப்படாத நிலை. ஆனந்தம் - அதனோடு சேர்ந்த -Will Persistence , இது இரண்டும் Deadly combination. இதைப் புரிந்துகொண்டீர்களானால் நீங்கள் என்னுடைய குழந்தைகள். *நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. எந்தவித ஒளிவும் மறைவும் இல்லாமல் சத்தியத்தை அப்படியே சொல்கின்றேன்.. *ஆனந்தம் என்பது... ஏதாவது ஒரு காரணத்தினால் ஒரே ஒரு சரியான புரிதல் உள்ளே புரிந்துவிட்டால் கூட உள்ளுக்குள் அப்படியே 'குப்' என்று பூத்துவிடும். *ஆழமாகக் இந்த சத்தியத்தைக் கேளுங்கள்.. என் அருணகிரியோகீஸ்வரருக்கும் எனக்கும் இருந்தது ஒரு உயிரே மலர்கின்ற இனிமையான உறவு!

Video and Audio

ஆதி சைவம் - ஆனந்த களிப்பு, ஆன்மபலம் இரண்டும்தான் உங்கள் வாழ்வின் மூலப்பொருள்!

Video Audio


Transcript

  • இன்றை சத்சங்கத்தின் சாரம்

20 செப்டம்பர் 2019

  • நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம்..

நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம்... அஸ்மதச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்..

  • உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்...
  • ஆழ்ந்து கேளுங்கள்..

காலபைரவர் தன் முழுமையான சக்தியில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறார்..

  • ஆழ்ந்து கேட்டீர்களானால் சத்தியங்களை அப்படியே உள்ளிறக்கிவிடுவார்;..
  • இன்று தெளிந்த சில ஆழமான சத்தியங்களைச் சொல்லப்போகிறேன்..

குறிப்பெடுத்துக்கொள்ள நினைத்தாலும் ஒரு புத்தகத்தை வைத்து எழுத்திக்கொள்ளுங்கள்..

  • காலபைரவர் நேரடியாகத் தமிழில் பேசப்போகின்றார்..

ஆழ்ந்து கேளுங்கள்..

  • உயிர் - உங்களுக்குள் இருக்கின்ற அந்த Consciousness.. அதுதான் உங்கள் வாழ்க்கையின் மூலப்பொருள். அந்த மூலப்பொருள் பொங்கி மலர்வதற்கு இரண்டு விஷயம் வேண்டும்.

ஒன்று - ஆனந்தம்.

  • ஆனந்தம் - என்றால் தன்னைப்பற்றியும், தன்னனைத்சுற்றியிருக்கின்ற உலகத்தைப் பற்றியோ கவலைப்படாத நிலை. ஆனந்தம் - அதனோடு சேர்ந்த -Will Persistence , இது இரண்டும் Deadly combination.

இதைப் புரிந்துகொண்டீர்களானால் நீங்கள் என்னுடைய குழந்தைகள்.

  • நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..

எந்தவித ஒளிவும் மறைவும் இல்லாமல் சத்தியத்தை அப்படியே சொல்கின்றேன்..

  • ஆனந்தம் என்பது... ஏதாவது ஒரு காரணத்தினால் ஒரே ஒரு சரியான புரிதல் உள்ளே புரிந்துவிட்டால் கூட உள்ளுக்குள் அப்படியே 'குப்' என்று பூத்துவிடும்.
  • ஆழமாகக் இந்த சத்தியத்தைக் கேளுங்கள்..

என் அருணகிரியோகீஸ்வரருக்கும் எனக்கும் இருந்தது ஒரு உயிரே மலர்கின்ற இனிமையான உறவு!

  • வெறும் குருசிஷ்ய உறவு - என்று மட்டும் சொல்லிவிட முடியாது.. தாய், தந்தை, மாமன், நண்பன், எல்லாமும் அதைத்தாண்டியும் எனக்கும் அவருக்கும் ஒரு ஆழமான உயிர்க்காதல் இருந்தது!
  • ஒருநாள் அவர் எனக்கு நவக்கிரங்கங்களைப பற்றியப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

அப்பொழுது இந்த நவக்கிரகங்களை செஸ்ஸில் இருக்கிற காயின் மாதிரி வைத்து காண்பித்தார். பிறகு முடிந்தவுடன் சூரியனை எடுத்து வலது கண்ணிலும்.. சந்திரனை எடுத்து இடது கண்ணிலும்.. துடைத்துக் கொண்டார். அதை நேரில் பார்த்தவுடன், அப்பொழுது.. எனக்கு ஒரு க்ளிக் நடந்தது

  • சூரியனை இடது கண்ணாகவும், சந்திரனை வலது கண்ணாகவும், அக்னியை மூன்றாவது கண்ணாகவும் கொண்டவர்பரமசிவனாயிற்றே! அப்பொழுது என் குருநாதன் பரமசிவனல்லவா.. ? என்று எனக்குள் பளிச் என்ற க்ளிக் ஆனது!
  • நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. அதற்கு முன் அவர் பரமசிவனா? இல்லையா? என்ற சந்தேகம் எனக்கில்லை, ஆனால் அப்பொழுது அந்த 'கிளிக்' நடக்கும்பொழுது எல்லையில்லா ஆனந்தம், ஆனந்தக் களிப்பு உள்ளுக்குள் மலர்ந்தது!
  • இப்பொழுது ஆழ்ந்து கேளுங்கள்..

உயிர் - அது உயிர்த்து பரமசிவக்ஞானத்தை, பரமசிவ விக்ஞானத்தை வெளிப்படுத்துவதற்கு இரண்டே இரண்டுதான் வேண்டும் பரமசிவக்ஞானம், பரமசிவ விக்ஞானம்

  • பரமசிவக்ஞானம் - உயிர் ஞான சத்தியங்கள்.

பரமசிவக்ஞானம் - அந்த உயிர் ஞான சத்தியங்களால் வெளிப்படும் சக்திகள். இரண்டே இரண்டுதான்.

  • ஆனந்தம் - எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு தெனாவட்டான ஆனந்தம்..

Will Persistence ஆன்ம பலம், உயிர் பலம் - இந்த இரண்டும் எப்படி உங்களுக்குள் வரும் என்று சொல்கிறேன் ஆழ்ந்து கேளுங்கள்.

  • அதாவது.. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..

இந்த உயிர், உயிர்த்து மலர்வதற்கு, இரண்டே இரண்டுதான் வேண்டும்.. அனந்தம் - Will Persistence ஆன்ம பலம், உயிர் பலம் அருணகிரியோகீஸ்வரர் ஒருமுறை எனக்கு மிக எளிமையாக இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய விக்ஞானங்களை விளக்கிக்கொண்டிருந்தார்.

  • நவக்கிரகங்களைப் பற்றி கற்பித்துக்கொண்டிருந்தார்.

எல்லாம் முடிந்தவுடன்.. சூரியனை எடுத்து வைத்தார், சந்திரனை எடுத்து இடது கண்ணில் வைத்தார்... அதை நேரில் பார்த்தவுடன் எனக்குள் மாளாத ஆனந்தம்.

ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை சூரியனை வலக்கண்ணில் தரித்தவுரும், சந்திரனை இடக்கணில் தரித்தவர், அக்னியை மூன்றாம் கண்ணாகத் தரித்தவர் பரமசிவன் என்று கதையில் படித்திருக்கின்றேன். இன்று அதை நேரில் பார்க்கும்பொழுது.. மன்னாத ஸ்ரீ ஜகன்னாதோ.. மத்குரு ஸ்ரீ ஜகத்குரு.. என் சிவம் - பரமசிவம் என்ற ஆனந்த களிப்பு உள்ளுக்குள் மலர்ந்தது!

  • அது நடக்கிற வரைக்கும் எனக்கு அவர் பரமசிவன்தானா? இல்லையா? என்ற சந்தேகம் கிடையாது. ஆனால் அது நேரடியாக பார்த்த பிறகு எனக்குள் ஒரு தெனாவட்டான ஆனந்த களிப்பு மலர்ந்தது!
  • இந்தக் கிராமங்களில் சொல்வார்கள் இல்லையா?

கல்லுச்சாரயம் கலந்து குடிச்சாமாதிரின்னு.. அதுபோல் ஆன்மீக ரீதியாக அந்த ஆனந்த களிப்பு நடந்தது !

  • இந்தக் களிப்பு.. பல்வேறு காரணங்களுக்காக நமக்குள் வெடிக்கலாம், ஆனால் ஆன்மீகக் காரணங்குளுக்காக வெடிக்கும்பொழுது அந்தக் களிப்பின் ஆழம் உங்கள் உயிரை மலர்த்திவிடும்.
  • நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..

என் குருநாதன் அருணகிரியோகீஸ்வராக வந்த பெருமான் எனக்களித்த அதே ஆனந்த களிப்பை இப்பொழுது உங்கள் எல்லாருக்கும் ஆசிகளாக வழங்குகிறேன்.

  • நீங்கள் தெளிவாக உங்வாங்க வேண்டிய மிக முக்கியமான சத்தியம் இதுதான்..

பரமசிவனே நேரா வந்து எங்க சாமிக்கு குடுத்திருக்கு.. எங்க சாமி நேரா வந்து எனக்கு குடுக்கிறன்னு சொல்லிடுச்சு.. இதுக்கு மேல என்னடா வேணும்.. வேற ஒன்றும் தேவையில்லை, என்று புரிந்துவிட்டால் வெடித்துப் பொங்கும் ஆனந்த களிப்பு!

  • ஆன்மீகக் காரணத்திற்காகப் பொங்கும் அந்த ஆனந்த களிப்பு உங்கள் உயிரில் உரைத்து உயிரையே மலர்த்திவிடும்.
  • இந்து மதத்தினுடைய எல்லா சம்பிரதாயங்களுடைய எல்லா சத்தியங்களின் ஆணிவேரை பரமசிவன் அருணகிரியோகீஸ்வரராய் எனக்கு அருளியிக்கின்றார்.
  • நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..

வைணவத்தின் ஆழமான சத்தியத்தின் சாரமான பக்தி இன்றி யாரும் ஞானத்தை அடைந்துவிட முடியாது! சைவத்தின் பிரபஞ்சவியலைப் பற்றிய ஞானம் இன்றி வைணவத்தில் யாரும் பக்தியின் உச்சத்தை அடைந்துவிட முடியாது. இப்படி இந்து மதத்தின் அனைத்து சம்பிரதாயங்களுமே ஒவ்வொரு சத்தியத்தின் சாரத்தை கற்றுத்தேர்ந்திருக்கின்றார்கள்.

  • ஊட்டியில் குளிரால் நடுங்கினால் காஷ்மீர் கம்பளியை உடுத்துக்கின்றோம்.. ஆனால் உயிர் நடுங்கும்பொழுது காஷ்மீரி சைவம் சொல்கின்ற சத்தியங்களை வாழ மறுக்கின்றோம்.
  • ஆழந்து கேளுங்கள்.. இந்த ஆனந்தக் களிப்பு, ஏதாவது ஒரு காரணத்திற்காக வரலாம்..

சில நேரத்தில், முதல் முறை நீங்கள் காதலில் விழும்பொழுது, சில நேரத்தில் புதிதாக ஒரு இல்லத்தை அமைக்கும் பொழுது என பல காரணங்களில் இந்த ஆனந்தக் களிப்பு வரலாம்.. ஆனால் ஆன்மீகக் காரணத்தினால் வருமாலால் இந்த ஆனந்தக்களிப்பு உயிரையே மலர்த்திவிடும்.

  • எனக்குள் இந்த ஆனந்தக்களிப்பு ஆன்மீகக் காரணத்தினால் உருவானது! என் குரு இந்த பரமசிவப் பரம்பொருள் என்று புரிந்த உடனேயே.. அந்த ஆனந்த களிப்பு வெடித்தது!

இந்த ஆனந்த களிப்பு உங்களுக்குள்ளும் மலர்ந்திட இரண்டே இரண்டுதான், இந்த இரண்டு சத்தியத்தை மிக ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்.. பரமசிவமே என் குரு அருணகிரியோகீஸ்வரராக வந்து எனக்கு குடுத்துச்சு.. நான் உங்களுக்கு குடுத்தே அதை கொடுத்தே தீருவேன்

  • அப்படியேச் சொல்லவேண்டுமானால்,

பரமசிவமே எங்க சாமிக்கு குடுத்துடுச்சு.. எங்க சாமிக்கு எங்களுக்கு குடுக்கிறேன்னு சொல்லிடுச்சு.. இதுக்கு மேல என்ன? போடா.. எங்களுக்கு எல்லாம் கைலாசம் டிக்கெட் உறுதி டா இந்த தெனாவட்டான ஆனந்த களிப்பு!

  • சாதரணப் பொருட்கள் நிரந்தரமில்லா பொருட்கள் சார்ந்து வர ஆனந்த களிப்பு கொஞ்ச நேத்தில் போய்விடும்.. ஆனால் ஆன்மீகம் சார்ந்து வருகின்ற அந்த ஆனந்த களிப்பு உயிருக்குள் சென்று உயிரையே மலர்த்திவிடும்.
  • கவலையேப் படாதீர்கள்! அருணகிரியோகீஸ்வரர் எனக்கு அளித்த மொத்தத்தையும் உங்களுக்கு அளித்துவிடுகின்றேன்..
  • தமிழில் ஒரு முதுமொழி சொல்வார்கள்..

சோழநாடு சோறுடைத்து.. பாண்டி நாடு முத்துடைத்து.. சேரநாடு வேழமுடைத்து.. தொண்டை நாடு... சான்றோருடைத்து... என்று!

  • அதாவது இந்த பழமொழியை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..

சோழ நாட்டு மக்கள்., சோற்றை, அரிசியை விளைவிக்கின்ற அறிவிலைக் கற்றுத் தேர்ந்துவிட்டார்கள். காவிரி நீரின் வளமையால், தரமான அரிசியை விளைவிக்கின்ற அறிவிலைக் கற்றுத் தேர்ந்துவிட்டார்கள். பாண்டிநாட்டு மக்கள், கடலோடு வாழ்ந்து கடலில் இருந்து முத்தெடுக்கும் அறிவியலைக் கற்றுத் தேர்ந்துவிட்டார்கள். சேரநாடு - யானைகளோடு வாழ்ந்து வந்து.. யானை, பூனைபோல் வீட்டுச் செல்லப்பிராணிகளைப்போல வளர்க்கும் அறிவியலைக் கற்றுத் தேர்ந்துவிட்டார்கள். தொண்டை நாடு... சான்றோருடைத்து - அதாவது மிக உயர்ந்த உயிர் மன, உடல், வளர்க்கும் அறிவியல், கான்சியஷ் மியூட்டேஷன் பன்ற அந்த அறிவியலை தொண்டை நாடு மக்கள் கற்றுத் தேர்ந்துவிட்டார்கள். இந்த முழு சூப்பர் ஹியூமனை உருவாக்குகின்ற செயலின் அறிவியலை தொண்டை நாட்டு மக்கள் கற்றுத்தேர்ந்துவிட்டார்கள்.

  • அதனால்தான் அக்காலத்தில் மூன்று நாட்டு அரசவைகளிலும். மனைவியும், மந்திரியையும் தொண்டைநாட்டிலிருந்துதான் அழைத்து வருவார்கள்..
  • நாட்டில் உள்ள எல்லா வளங்களின் சிறப்பானவற்றையும் தன்னிடம் எடுத்துவந்து ஆள்பவன்தான் முழுத்தலைவன், முழு அரசன்!

இதுபோலதான் இந்து மதத்தின் ஒவ்வொரு சம்பிரதாயமும் ஒரு சத்தியத்தை கற்றுத்தேர்ந்தார்கள்.. வைணவம் - பக்தியiயும், சாக்தம் - யோகத்தையும், சைவம் - பிரபஞ்சவியல்.. என்று ஒவ்வொரு சம்பிரதாயமும் அதற்கான அறிவியலைக் கற்றுத் தேர்ந்தது, அதற்காக அந்த சத்தியத்தை தவற வேறு எந்த சத்தியத்தையும் உள்வாங்க மாட்டேன்னு என்று சொல்பவர் பைத்தியக்காரர்கள்..

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. வைணவத்தின் சாரத்தை புரிந்துகொள்ளாமல் பக்தியின் சத்தியத்தை எவனாலும் உணர முடியாது.. சைவத்தின் சாரத்தை, பிரஞ்சவியலை கற்காகமல் ஞானத்தின் உச்சத்தை எவனாலும் உணர முடியாது. அத்வைதத்தின் ஆழத்தை புரிந்துகொள்ளாமல் தன் அகவியலின் ஆழத்தை எவனாலும் உணர முடியாது.

  • இப்படி, இந்தப் பல்வேறு சம்பிரதாயங்களும் பல்வேறு சத்தியங்களை கற்றுத் தேர்கின்றார்கள்.. அந்த எல்லா அறிவிலையும் தனக்குள் வாங்கிக்கொண்டு அதை வைத்து வாழ்பவன்தான், அதை வைத்து நாட்டிற்குத் தேவையான நல்லனவற்றைச் செய்பவன்தான் முழுமையான தலைவன்.
  • நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..

இந்து மதத்தினுடைய இருப்பே இனிமையான ஒற்றுமையோடு பகிர்ந்துகொள்கின்ற தன்மை சார்ந்துதான் வாழ முடியும். அதனால்தான் நம் ஆச்சாரியர்கள் இந்த அன்பு - இனிமை இதைச்சார்ந்தே அனைத்தையும் வகுத்துவைத்தார்கள்.

  • ஆழமாக புரிந்துகொள்ளுங்கள்..

சக்தி மலர்வதற்கு தேவை ஆனந்த களிப்பு, ஆனந்த களிப்பு - வாழ்க்கையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல், எதிர்காலத்தில் வரப்போவது எதைப்பற்றியும் துயரப்படாமல் இருப்பதனால் வரக்கூடியது.

  • அதாவது.. அட! பரமசிவனே என் பக்கம்.. எவன் வந்தால் என்ன? எவன் போனால் என்ன?

சிவன் இருக்கான்டா..! என்கிற ஆனந்த களிப்பு! பரமசிவன் மீது வந்த காதலால் ஏற்பட்ட ஆனந்த களிப்பு! எனக்கு அதேதான் நடந்துது..

  • அருணகிரியோகீஸ்வரப்பெருமான், சூரியனை எடுத்து வலக்கண்ணில் இட்டு, சந்திரனை எடுத்து இடக்கண்ணில் இட்டவுன்.. ஆஹா.. என் பட்டறிவுக்கு புரிந்துவிட்டது அவன் பரமசிவப் பரம்பொருளன்றி வேறில்லை என்று!
  • ஒவ்வொன்றிர்க்கும் நாம் ஒரு வரையரை வைத்திருப்போம்..

காதல் என்றால் என்ன என்று? அந்த காலத்தில் இந்த 60, 70பதுகளில், ஒரு துண்டு சீட்டில் லவ்-லெட்டர் என்கிற பெயரில் எழுத்தி. ஒரு ரோஜாவை அதில் ஒட்டி.. பிறகு 90 களில் வேறு ஒரு மாதிரி, அந்ததந்த காலகட்டத்தில் மனிதர்களுக்கு ஒரு ஐடியா இருந்தது. இப்போது போனில் செய்தியாகவா, இன்ஸ்டாகிராமிலா என்று தெரிவியவல்லை.. ஒவ்வொன்றிர்க்கும் நாம் ஒரு வரையரை வைத்திருப்போம் அதை வைத்து முடிவு செய்வது.. அதில் வெற்றிபெரும்பொழுது, நம்முடைய அறிவிற்கு எட்டிய ஏதொ ஒன்றில் வெற்றி என்பதில் வருகின்ற கருத்து!

  • எனக்கு என்ன நடந்தது என்றால்.. ஆஹா! எனக்குத் தெரிந்த விவரம் அது - சூரியனையே வலக்கண்ணாகவும். சந்திரனையோ இடக்கண்ணாகவும், அக்னியை மூன்றாம் கண்ணாகவும் பரமசிவப்பரம்பொருள். இதை நான் நேரில் பார்த்தவுடன் எனக்குள் அந்த ஆனந்த களிப்பு பளிச் சென்று க்ளிக் ஆகிவிட்டது!

மன்னாத ஸ்ரீ ஜகன்னாதோ.. என் சிவம்தான் பரமசிவம், என்குருதான் இந்த ஜகத்குரு.. என்ற ஆனந்த களிப்பு உயிரில் வெடித்தது!

  • நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்..

சாமி எங்க சாமிக்கு குடுத்துடுச்சு எங்க சாமி எனக்கு குடுத்துச்சு. அவ்வளவுதான்! முடிஞ்சிபோச்சு.. இனி எல்லாம் முடிஞ்சிருச்சு.. இந்த சத்தியத்தை உங்களுக்கு வருகின்ற, துக்கம், வேதனை இவைககளைப் பார்த்துச் சொல்லுங்கள்.. உங்கள் வாழ்க்கையைப் பார்த்து சொல்லுங்கள்...

  • உங்கள் வாழ்க்கையைப் பார்த்து இந்தத் தெனாவட்டோடு வாழக்கற்றுக்கொள்ளுங்கள்.. அவ்வளவுதான்..

சாமி-எங்க சாமிக்கு குடுத்துடுச்சு எங்க சாமி எனக்கு குடுத்துடுச்சு. இதுக்குமேல என்ன உள்ள இருந்து உளர்ற என்று உங்கள் வாழ்க்iகியல் வரும் துக்கம், துயரம். இது எல்லா வற்றையும் பார்த்து சொல்லுங்கள். தெனாவட்டான ஒரு ஆனந்த களிப்பு!

  • அநித்யப் பொருட்கள் சார்ந்து இல்லாமல், நித்யப்பொருட்கள் சார்ந்து இந்த ஆனந்தக் களிப்பு நடக்கும்பொழுது அது உங்களுக்குள் நிரந்தரமாக மலர்ந்தவிடும்.
  • இந்த ஆனந்த களிப்பு தான் - மூலப்பொருள்.
  • உடலில் வருகின்ற ஹாட்-பிளாஷ்தான் மருத்துவத்துறைக்குத் தெரியும், ஆனந்தத்தில் வருகின்ற ஹாட்பிளாஷ் நமக்கு மட்டும்தான் தெரியும்!
  • நினைக்க நெஞ்சூறும் பெருமான் உயிர் உறவு கொண்டவருக்கே உயிர் உரைக்கும் ஆனந்தக் களிப்பு புரியும்.
  • ஆனந்த களிப்பிற்கு ஓரு பெரிய பலம் உண்டு.. இந்த நரம்பு மண்டலம் எல்லாவற்றையும் திடப்படுத்தி தலையில் ஆயிரம் தாமரை மலர்ந்தது போல இருக்கும்..
  • தெளிவாக இருங்கள்..

பரமசிவக்ஞான சத்தியத்தை தலையில் வைத்தால் சஹஸ்ராரத்தில் ஆயிரம் தாமைரை இதர மலர்த்தால்போல இருக்கும். நரம்பு மண்டலம் எல்லாம் குண்டலினி சக்தி மலர்ந்து உயிர்பெறும்.

  • டீவி சீரியல் பார்த்தீர்காளானால் உங்கள் ஆயுட்காலம் ஒவ்வொருவாரம் குறைந்துகொண்டே வரும்..

அது உங்களுக்கு நீங்களே; செய்துகொள்கின்ற ஆன்மீகத் தற்கொலை.. டிவி சீரியல் பார்ப்பது ஆன்மீகத் தற்கொலை! டீவிசீரியல் பார்ப்பது.. ஆன்மீக சாத்தியக்கூறை தற்கொலை செய்துகொள்வதற்கு சமம்

  • ஆழ்ந்து கேளுங்கள்..

பரமசிவம் சாமிக்கு கொடுத்துச்சு, சாமி எனக்கு குடுத்துச்சு.. இந்த சத்தியத்தை நினைக்கும்பொழுது ஒவ்வொருமுறையும் உங்களுக்குள் ஆனந்த களிப்பு வரும்பொழுதும் உங்கள் வாழ்க்கை ஒரு ஒருவாரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏதிர்மறையான பயத்தாக்குதல் வரும்பொழுது.. ஹாட்பிளாஷ் வரும்பொழுது.. உங்கள் வாழ்க்கை ஒரு ஒரு வாரம் குறைந்துகொண்டே வருகிறது.

  • ஆனந்த களிப்பு,

ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப்போம் நமது உள்ள வினைகளே! என்று ஞானசம்பந்தப்பெருமான் பாடுகின்றார்கள்..

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. ஞானசம்பந்தர், அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர் இந்த நால்வரும்.. பல சிவாலயங்களைப் பற்றி பாடியிருக்கின்றார்கள். ஆனால் இந்த நால்வரும் அண்ணாமலையானைப் பற்றிப் பாடும்பொழுது மட்டும் 'ஆடிப்பாடுவதை மட்மே உட்கருத்தாக வைத்துப் பாடியிருக்கின்றார்கள் அண்ணாமலையாருக்கும், ஆடிப்பாடுவதற்கும் எதோ ஒரு ஆழமான தொடர்பு இருக்கிறது!

  • ஒவ்வொருமுறை.. ஆனந்த களிப்பு வரும்பொழுதும் உங்கள் வாழ்நாள் அதிகரிக்கும்..

ஒவ்வொருமுறை பயத்தாக்குதல் வரும்பொழுதும் உங்கள வாழ்நாள் குறையும்.

  • இன்னொருமுறை சொல்கின்றேன் ஆழ்ந்து உள்வாங்கிக்கொள்ளுங்கள்..

முதல் சத்தியம்.. வாழ்க்கையே ஆனந்த களிப்போடு இருக்க வேண்டும்.. ஆனந்தகளிப்புதான் அடிப்படை அடித்தளம்! அதுதான் உங்களின் முதல் கேரக்டர்.. முதல் குணாதிசியம்.

  • என்னைப்போல.. காதும் காதும் இணைவதுமாதிரி ஈ - என்று இளிக்கின்றவர்கள்தான் என் பக்தர்கள்..

என்னைவிட உங்களுக்கு அதிக பிரச்சினை? ஒரே ஒரு தெளிவுதான்.. சாமியைப் பாருங்கள் என்ன பாடு படுத்துகிறார்கள்.. அதைவிட நாம் வாழ்க்கiயில் படுகின்றோம்? ஆனால் அவர் எப்படி எப்பொழுதும் சிரித்து ஆன்நதமாக இருக்கின்றார், அப்ப நான் ஏம்பா துக்கப்படனும்!? இந்தத் தெளிவு யார் யாருக்கெல்லாம் இருக்கோ அவர்கள்தான் என் பக்தர்கள்! காதையும் சேர்ப்பது ஈ என்று சிரித்து வாழ்வு இனித்து இனிமையோடு இருக்கும் ஆனந்தப் புன்னகை!

  • தெளிவோடு ஆனந்தக் களிப்பில் இருங்கள்..

ஒவ்வொரு முறை ஆனந்தகளிப்பு உங்களுக்குள் வரும்பொழுதும் உங்கள் வாழ்நாள் நீள்கின்றது ஒவ்வொருமுறை சீரியல் பார்த்து ஹாட் -பிளாஷ் வரும்பொழுதும் உங்கள் வாழ்நாள் குறைகின்றது.

  • நித்யானந்த பக்தர்கள் என்றால் கண்ணமே வலிக்கின்ற மாதிரி சிரித்துக்கொண்டெ இருக்கவேண்டும்..

காதோடு காது இணைவது போல இனிமையாலே இளித்துக்கொண்டே இருப்பது. நடிப்பது அல்ல!

  • உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம்..

என்னடா இந்த சாமியோட பக்தர்கள் இப்படி இருக்கிறார்கள்..? எமனே வந்தாலும்.. என்ன வெயிட் பன்னு உள்ள சாமிகிட்ட கேட்டுட்டு வரேன்.. என்று சொல்லும் தைரியம்! சிவதீட்சை எடுத்துவிட்டால்., எமதூதுவர்கள்.. வரமுடியாது சிவதூதுவர்கள் வந்து கைலயத்திற்குதான் எடுத்துச்செல்ல முடியும். உயிருக்குத் தாலி- கண்ட மாலை!

  • பெருமான் ஆகமத்தில்.. தெளிவாக சொல்கிறார்கள்..

சிவ தீட்சை எடுத்து சிவ அபராதமும், குரு அபராதமும், செய்யாமல் வாழ்ந்தீர்களானால்.. போதும் சிவ தூதுவர்கள் தான் வரமுடியும்! எமன் வந்தால், என்ன அட்ரஸ் மாரி வந்துவிட்டாயா? சிவ தீட்சை எடுத்திருக்கிறோம்.. கண்ட மாலை பாத்த இல்லையா போ போ! என்ற சொல்லும் தைரியம்!

  • எதைப்பற்றியும் கவலைப்படாமல்.. இந்த ஒரு சத்தியத்தை ஆழ்ந்து தியானியுங்கள்..

பரமசிவப் பரம்பொருளே பரமசிவஞானத்தை, பரமசிவ விக்ஞானத்தையும் அருணகிரியோகீஸ்வரராக வந்து என் குருநாதன் நித்யானந்த பரமசிவத்திற்கு கொடுத்தார்.. என் குருநாதன் நித்யானந்த பரமசிவம் எனக்கு அதைக் கொடுக்கிறார்.

  • பரமசிவன் எனக்கு பாதுகாப்பு, அபயம், ஆனந்தம், சுகம், ஞானம், அனைத்தையும் என் கொடுக்கின்றார். எனக்கு பரமசிவப் பரம்பொருள் என்னவெல்லாம் கொடுத்தாரோ அது எல்லாவற்றையும் உங்களுக்கும் அளிக்கின்றேன்!
  • மீண்டும் உரைக்கின்றேன்.. கேளுங்கள்!

வாழ்க்கையை அதன் உச்ச நிலையான பரமசிவ ஞானத்தை அடைந்து வாழ்வதற்கு இரண்டே இரண்டுதான் தேவை.. ஆனந்த களிப்பு - உயிர் பலம் வாழ்க்கையின் உள் வெளிப்பிரச்சினை பற்றிக் கவலைப்படாமல் இறைவனை இறைவனை இறுகப் பற்றிக்கொள்வதனால் வருகின்ற ஆனந்த களிப்பு!

  • உயர்ஞான சத்தியங்கள் உள்ளுக்குள் ஒலித்து உயிர்த்து மலர்ந்திட ஆனந்த களிப்பு உங்களுக்குள் பொங்கட்டும்.

பரமசிவன் எங்க சாமிக்கு கொடுத்துச்.. எங்க சாமி எனக்கு குடுக்கும் அவ்வளவுதான்! பரமசிவப் பரம்பொருள் என்ன சொல்றாரோ அப்படியே உங்களுக்கு சொல்கிறேன் அவ்வள்வுதான். சத்தியத்தை நேரடியாகச் சொல்கிறேன்.. உண்மையை உங்கள் உயிருக்குள் உரைப்பதுபேல் சொல்வது மட்டும்தான் என் வேலை..

  • சம்பிரதாங்களை பேதம் பார்ப்பது பைத்தியத்காரத்தனம்.. எல்லா சம்பிரதாயத்திலும் விளைந்த ஞானசத்தியங்களை பரமசிவ எனக்கு அருளியிருக்கின்றார்..

அதை உங்வாங்கிக்கொள்ளுங்கள்.. ஆனந்த களிப்பை அடைந்து , உயிர் பலத்தை அடையுங்கள்..

  • பரமசிவப் பரம்பொருள் என் குரு நித்யானந்த பரமசிவத்திற்கு கொடுத்தது!

என் குரு நித்யானந்த பரமசிவம் எனக்கு அளிக்கின்றது!

  • இந்த சத்தியத்தை தியானித்து ஆனந்தக்களிப்போடு வாழ்ந்திருப்போம்..
  • நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தத்தில் கரைந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றோம்! - ஆனந்தமாக இருங்கள்!

Photos

Adi Shaivam Tamil Satsang

Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6010_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6016_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6019_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6020_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6030_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6063_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6064_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6065_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6068_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6073_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6075_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6076_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6082_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6084_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6092_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6094_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6099_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6104_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6113_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-20_IMG_6125_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-21_IMG_7863_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-21_IMG_7864_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-21_IMG_7882_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-21_IMG_7942_nithya-satsang-tamil.jpg Nithya Tamil Satsang - 2019-09-21_IMG_7948_nithya-satsang-tamil.jpg



Link to Facebook Post

https://www.facebook.com/srinithyananda.swami/posts/1402859139869081