May 18 2025
Title
சனாதன ஹிந்து தர்மத்தைப் பற்றிய சந்தேகங்களை தீர்க்க பகவான் நித்யானந்தரை கேளுங்கள்
Link to Video:
Transcript:
Satsang Title : நியூஸ் க்ளிட்ஸ் மற்றும் பிரபலங்களின் கேள்விகளுக்கு பகவானின் நேரடியான பதில்கள்
நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பரமசிவ சக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன்.
இணையத்தின் மூலமாகவும், இதயத்தின் மூலமாகவும் உலகம் முழுவதிலும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன்.
News Glitz Tamil, India Glitz Tamil, ஆன்மிக கிளிட்ஸ் தொலைக்காட்சிகள் மூலமாக, சமூக ஊடகங்கள் மூலமாக இணைந்திருக்கும் அன்பர்களையும், பார்வையாளர்களையும், சீடர்களையும் - அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன்.
இன்று News Glitz தொலைக்காட்சி - அவர்கள் கேட்டிருக்கும் எல்லா கேள்விகளுக்கும், பல பிரபலங்கள் News Glitz தொலைக்காட்சி மூலமாக கேட்டிருக்கும் கேள்விகளுக்கும், News Glitz தொலைக்காட்சியின் சந்தாதாரர்கள் (Subscribers) கேட்டிருக்கும் கேள்விகளுக்கும் நேரலையில் பதிலளிப்பதில் மிகுந்தப் பெருமைக்கொள்கின்றேன், ஆனந்தம் அடைகின்றேன்.
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
திரு.தேவேந்திரன்...News Glitz சேனலுடைய Chief Editor திரு.தேவேந்திரன் அவர்கள் கேள்விகளை அனுப்பி உள்ளார்கள். முதலில் அவருடைய கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சிக்கின்றேன்.
திரு.தேவேந்திரன் அவர்கள் அனுப்பியுள்ள முதல் கேள்வி. சனாதனம் என்றால் என்ன? அதை ஒழிக்க முடியுமா?
'சனாதனம்' என்கிற வார்த்தையை முதலில் புரிந்துகொள்வோம்.
'ஸ நித்ய: சநாதன:'
எது நித்யமோ, அதுவே சனாதனம்.
'சதா பவதி இதி சநாதன:' என்றும் உள்ளதோ, எப்பொழுதும் இருப்பது எதுவோ, அதுவே சனாதனம்.
'சதா திஷ்டதி நா நூதன: நா விநஷ்யதி இதி சநாதன:' ஆழ்ந்து கேளுங்கள்... எது என்றும் உள்ளதோ, மாறாது இருப்பதோ, அழிவிற்கு அப்பாற்பட்டதோ - அதுவே சனாதனம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஒரு இருண்டக் காட்டில் ஒரு மனிதன் சிறிய தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு அந்தக் காட்டிலே என்ன இருக்கின்றது - மரங்கள், விலங்குகள் -அவைகளைப்பற்றி எல்லாம் அறிந்துகொள்ள முயற்சிப்பதுதான் அறிவியல். மொத்த அறிவியலுமே நம்முடைய இந்த ஐம்புலன்கள் என்கின்ற தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு, இந்த பிரபஞ்சம் எனும் பெருங்காட்டைத் தேடிக்கொண்டு இருப்பதுதான் - அதுதான் மொத்த அறிவியலும். ஆனால் ஒரே மின்னலில், ஒரே மின்னல் ஒளியில் மொத்தக் காட்டையும், அதில் இருப்பது அனைத்தையும் பார்ப்பதுதான் ஆன்மிக அனுபவம்.
ஆழ்ந்து கேளுங்கள், ஒரு இருண்டக் காட்டிலே, ஒரு தீப்பந்த ஒளியிலே 'என்ன மரங்கள் இருக்கின்றன, என்ன விலங்குகள் இருக்கின்றன' என்று ஒரு மனிதன் தேடித் தேடிப் பார்ப்பது அறிவியல். ஆனால் ஒரு மின்னலில், இருக்கின்ற அனைத்தையும் பார்ப்பது ஆன்மிக அனுபவம். இந்தப் பிரபஞ்சம் எனும் பெருங்காட்டை, ஒரு மின்னல் ஒளியிலே இருக்கின்ற மரங்கள், விலங்குகள் அனைத்தையும் பார்ப்பது ஆன்மிக அனுபவம். அதுவே சூரியன் மலர்ந்து முழு ஒளியிலே நிரந்தரமாக, அந்த முழுக் காட்டையும் உள்ளது உள்ளபடி, அவ்வாறே, அதன் விலங்குகள், அமைப்பு, நதிகள், மரங்கள் அனைத்தையும் பார்ப்பது - சனாதனம்.
சனாதனம் ஏன் என்றும் மாறாததாக இருக்கிறது என்றால்... அது முழு ஞானத்தையும், முழு அறிவினையும் பூரணமான சத்தியத்தை உள்ளது உள்ளவாரே உணர்ந்து, அதை உரைத்து, இந்த உணர்ந்து உறைக்கப்பட்ட அந்த சத்தியத்தின் தொகுப்புதான் சனாதனம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்... ஏன் சனாதனம் அழிவில்லாதது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஏன் சனாதனம் மாறாதது என்று புரிந்துகொள்ளவேண்டும். இந்த 'சனாதனம்' என்கின்ற வார்த்தை பல்வேறு, நம்முடைய மிக மூத்த (Earleist) சனாதன தர்மத்தினுடைய சாஸ்த்திரங்களில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில உதாரணங்களைச் சொல்கின்றேன்.
இராமாயணத்திலே இந்த 'சனாதன தர்மம்' என்கிற வார்த்தை அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
'ராஜ்யபார நியுக்தா நாமேஷ தர்ம சநாதன:' இராமாயணத்தில் பாலகாண்டத்திலே இந்த ஸ்லோகம் சொல்லப்படுகின்றது. 25வது சர்க்கம் 18வது ஸ்லோகம்.
'ராஜ்யபார நியுக்தா நாமேஷ தர்ம சநாதன:'
அரசாளும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு, நித்ய தர்மமாக - நிலைத்த நீதியாகச் சொல்லப்படுவது சனாதனம். சனாதனமும் இந்து தர்மமும் ஒன்றே.
இதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இந்து தர்மத்தை அழிக்க விரும்புபவர்களும், சனாதனத்தை அழிக்க விரும்புபவர்களும், சனாதனத்தையும் இந்து தர்மத்தையும் தனித்தனியாகப் பிரிக்க முயற்சிக்கின்றார்கள்.
சனாதனமும் இந்து தர்மமும் ஒன்றே.
இதை ஆழ்ந்துக் கேட்கவேண்டும்...இந்து தர்மத்தினுடைய எல்லா சம்பிரதாயங்களுமே, சனாதனத்தின் சாஸ்த்திரங்களின்மீதுதான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது, ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது, நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது. இந்து தர்மத்தின் அடிப்படையை, ஆணிவேரைத்தான் 'சனாதனம்' என்று சொல்கிறேன். அதனால் சனாதன இந்து தர்மம் என்பதுதான் சரியான வார்த்தை.
சனாதன இந்து தர்மம் - அதாவது எல்லா சமயங்களும் - சைவம், வைணவம், சாக்தம் மற்றும் இந்துமதத்தினுடைய எல்லா உட்பிரிவுகள், எல்லா சமயங்களுமே வேதத்திலேப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். சைவம், வைணவம், சாக்தம் காணபத்தியம், கௌமாரம், சௌரம் என எல்லா சமயங்களும் வேதத்திலேப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். வேதத்திலே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்.
எல்லா சித்தாந்தங்களும்... அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், சுத்தாத்வைதம் என சகல சித்தாந்தங்களும், பிரஸ்தானத்ரையம் எனப்படும் 'உபநிஷதம் - பிரம்மசூத்திம் -பகவத் கீதை' என்ற இந்த பிரஸ்தானத்ரையங்களின் மீது ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். எல்லா ஸ்தல புராணங்களும்... அருணாச்சல புராணம், காஞ்சிப் புராணம், காசிப் புராணம் என எல்லா ஸ்தல புராணங்களும் வியாசர் அருளிய 18 மஹாபுராணங்கள் மற்றும் 108 உப-புராணங்களின் மீதுதான் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்.
எல்லா மரபுகளும்... திருவிழாக்களாகட்டும், நடைமுறை மரபுகளாகட்டும் - இவை எல்லாமே ஆகமங்களிலும், தர்மசாஸ்த்திரங்களிலும்தான் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்.
இதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். அதனால் இந்து தர்மம் 'சனாதனத்தில்' ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. 'சனாதனம், இந்து' என்கின்ற இரண்டு வார்த்தைகளைக்கூட தனித்தனியாக நாம் உபயோகிப்பது தவறு. இப்பொழுது நாம் கடைப்பிடிக்கின்ற மொத்த இந்து தர்மத்தையும், 'சனாதன இந்து தர்மம்' என்கின்ற வார்த்தையினால்தான் உபயோகப்படுத்த வேண்டும். அதுதான் சரி.
நம்முடைய வாழ்க்கையிலே நாம் பயன்படுத்துகின்ற மெய்யியல் கருத்துக்களாக இருக்கட்டும், ஆன்மிகத் தேடலாக இருக்கட்டும், நம்முடைய வழிபாட்டு முறைகளாக இருக்கட்டும், நாம் வாழ்கின்ற மரபுகள், தர்ம நியதிகள், நாம் வாழ்கின்ற வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கின்ற தர்மக்கோட்பாடுகளாக இருக்கட்டும், நாம் கொண்டாடும் திருவிழாக்களாக இருக்கட்டும்... இவை எல்லாமே சனாதன இந்து தர்மத்தில்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. சனாதன சாஸ்த்திரங்களில்தான் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டிருக்கின்றது. அதனால் சனாதனமும், இந்து தர்மமும் வேறு வேறு அல்ல. சனாதன இந்து தர்மமே நம்முடைய வாழ்க்கைமுறை.
சனாதன இந்து தர்மம் - பல்வேறு மதங்களின் தொகுப்பு, பல்வேறு மதங்களுக்குமான ஆணிவேர், மூல மதம், மூல அறிவுக் களஞ்சியம். சனாதனம் என்றால் என்ன என்று நீங்கள் கேட்கின்றக் கேள்விக்கு இதுதான் விடை.
அடுத்தது, 'அதை அழிக்க முடியுமா?' என்று நீங்கள் கேட்கின்றீர்கள்.
சனாதனத்தை அழிக்க முடியாது. ஆனால் சனாதனத்தைக் கடைப்பிடித்து வாழும் மக்களை அழிப்பதன் மூலமாக, சனாதனத்தை அழித்துவிட முடியும்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சனாதனத்தை அழிக்க முடியாது. சனாதனத்தை வாழும் மக்களை அழித்தொழித்துவிட்டால், சனாதனத்தை ஒரு Living Civilization ஆக - உயிர்ப்போடு வாழுகின்ற ஒரு இனமாக இருக்கவிடாமல், ஒரு அருங்காட்சியகத்திற்குள் (Museum) அடைத்துவிட முடியும். சனாதன இந்து தர்மத்தை அழிக்க முயற்சிப்பவர்கள், முயற்சித்தவர்கள் எல்லாமே இதைத்தான் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். செய்தும் இருக்கிறார்கள்.
இப்பொழுது, 'சனாதனத்தை அழிக்க முடியாது' என்ற ஒரு பொய்யைச் சொல்லி, உங்களை ஒரு மாயையில் இருக்கச்செய்து, ஒரு மிதப்பிலே உங்களைக் கிடத்தி, மாய மிதப்பில் உங்களைப் போடுவதற்கு நான் தயாராக இல்லை. வரலாற்றைப் பார்த்தோமானால், சனாதனத்தை அழிக்க முடியவில்லை என்றாலும், சனாதன இந்து தர்மத்தை வாழும் மக்களை அழித்திருக்கிறார்கள். அதுதான் வரலாறுக் காட்டுகின்ற நிதர்சனமான உண்மை.
ஒரு சிறிய புள்ளிவிபரத்தைக் (statistics) கொடுக்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். பிரஹஸ்பதி ஆகமம் சொல்கிறது… 'ஹிமாலயம் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம் தம் தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் பிரசக்ஷதே' - பிரஹஸ்பதி ஆகமம், வேதத்தில் இருக்கும் பிரஹஸ்பதி ஆகமம் இதைச் சொல்கின்றது.
'ஹிமாலயம் ஸமாரப்பிய யாவத் இந்து ஸரோவரம் தம் தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் பிரசக்ஷதே' என்றால்... இமாலயத்தில் துவங்கி இந்து சரோவரம் வரை இறைவனால், தெய்வங்களால், கடவுள்களால் நிர்மாணிக்கப்பட்ட தேசம் ஹிந்துஸ்தானம்.
நம் எல்லோருக்கும் சொல்லப்படுகின்ற இன்னொருத் தவறானக் கருத்து - 'ஹிந்து' என்கின்ற வார்த்தை நம்முடையப் புராணங்களில், நம்முடைய சாஸ்த்திரங்களில் இல்லை' என்று சொல்லப்படுகிறது. அது தவறு. குறைந்த பக்ஷம் மூப்பது இடங்களில் 'ஹிந்து' என்கின்ற வார்த்தையும், 'ஹிந்து தர்மம்' என்கின்ற வார்த்தையும் 'ஹிந்துஸ்தானம்' என்கின்ற வார்த்தையும் விளக்கமாக, நம்முடைய மூல சாஸ்த்திரங்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இப்பொழுது நான் சொல்லுகின்ற, இந்த பிரஹஸ்பதி ஆகமத்திலே வருகின்ற இந்த சூத்திரத்திற்கு பொருள் என்னவென்றால், இமாலய மலைத்தொடரிலிருந்து இந்தியப் பெருங்கடல்வரை ஹிந்துமகா சமுத்திரம் என்று சொல்கின்றார்கள். 'ஹிமாலயம் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம் தம் தேவ நிர்மிதம் தேசம் இந்துஸ்தானம் பிரசக்ஷதி' - இமாலயத்தில் துவங்கி இந்து சரோவரம் வரை பரவியுள்ள, கடவுளால் நிர்மாணிக்கப்பட்ட இந்த நாட்டை 'ஹிந்துஸ்தானம்' என்று அழைக்கிறோம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், 5000 ஆண்டுகளுக்கு முன்பு மஹாபாரதத்தினுடைய ஆவணப்படுத்துதல்களின்படி (Documentation) 200 இந்து சாம்ராஜ்ஜியங்களும், 1,700 இந்து மஹா நகரங்களும், 56 தேசங்களும் சனாதன இந்துதர்மத்தை தங்களுடைய அரசு மதமாகக்கொண்டு - Official Religion ஆக வைத்து, அரச சமயமாகக்கொண்டு நடத்தினார்கள்.
காந்தாரம் முதல், காந்தஹார் என்று இப்பொழுது சொல்கிறோம் இல்லையா அங்கிருந்து காம்போஜ தேசம் வரை - கம்போடியா என்று இப்பொழுது நாம் சொல்வது அந்தக் காலத்தில் காம்போஜ தேசம். அதனால் இது முழுவதும் 5000 ஆண்டுகளுக்கு முன்பு practically, known civilized human world - சனாதன இந்து தர்மத்தை தங்களுடைய அரச மதமாகக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். மெது மெதுவாக மெது மெதுவாக சனாதன இந்து தர்மத்தை வாழும் மக்கள் அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, ஒழிக்கப்பட்டு, பல்வேறு விதமானத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, நாடுகள் ஒவ்வொன்றாக இழந்து இழந்து இழந்து, இப்பொழுது இன்றைய நிலையில் - சனாதன இந்து தர்மத்தை தங்களுடைய இராஜ்ஜியமதமாகக் கொண்ட ஒரு நாடுகூட இல்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற நாடு (secular country). நேபாளத்தைப் பொறுத்தவரையும்கூட மதச்சார்பற்ற நாடு. இந்த இரண்டு நாட்டிலும் சனாதன இந்து தர்மத்தை வாழும் மக்கள், வாழ்ந்துகொள்ளலாம். ஆனால் அரசாங்க மதம் அது அல்ல. அரசாங்க மதம் சனாதன இந்து தர்மம் கிடையாது. சனாதன இந்து தர்மத்தை வாழும் மக்கள் இந்த இரண்டு நாட்டிலும் வாழ்ந்துகொள்ளலாம். ஆனால் மற்ற நாடுகளில், இந்த 56 தேசத்திலே இந்த இரண்டு நாட்டைத் தவிர மற்ற 54 நாடுகளிலும் சனாதன இந்து தர்மம் அரச மதமாகவும் இல்லை, சனாதன இந்து தர்மத்தை வாழும் மக்கள் அங்கு வாழவும் முடியாது. இதுதான் நிதர்சனமான உண்மை. அதனால் 56 தேசங்களில் சனாதன இந்து தர்மத்தை மக்கள் வாழ்ந்து, சனாதன இந்து தர்மத்தை அரச மதமாக, சனாதன தர்மம் அரச தர்மமாக இருந்தது போய், இப்பொழுது அரச தர்மமாக சனாதன தர்மம் ஒரு நாட்டில்கூட இல்லை என்ற உண்மையும், அந்த நிதர்சன நிலையில் இருக்கின்றோம்.
சனாதன இந்து தர்மத்தை வாழும் மக்கள் வேண்டுமானால் இந்தியாவிலும், நேபாளத்திலும் வாழ்ந்துகொள்ளலாம். இந்த சூழ்நிலைதான் வந்திருக்கிறது. அதனால், 'சனாதன இந்து தர்மம் அழிக்கப்பட முடியாதது' என்கின்ற ஒரு மாயக் கருத்தை உங்களுக்குள் திணிக்க நான் விரும்பவில்லை.
'சனாதன இந்து தர்மம்' என்ற தர்மம் அழிக்கப்பட இயலாதது. ஆனால் அந்த தர்மத்தை வாழும் மக்களை அழிப்பதன் மூலமாக, அந்த தர்மத்தை ஒரு அருங்காட்சியகத்திற்குள் கொண்டுபோய், ஒரு பழங்காலக் காட்சிப்பொருளாக மாற்றுவதில், சனாதன தர்ம விரோதிகள் வெற்றியடைந்து இருக்கிறார்கள். அதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே சனாதன இந்து தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. அதெல்லாம் பொய், அது என்றும் இருக்கும் என்று நம்மை நாமே ஒரு மாயக்கற்பனையில் ஆழ்த்திக்கொண்டு முட்டாள்தனமாக வாழாதீர்கள். ஏனென்றால், 56 நாடுகளில் 54 நாட்டில் ஏற்கனவே சனாதன இந்து தர்மம் அருங்காட்சியகத்திற்குச் சென்றுவிட்டது. அங்கு அது வாழ்க்கைமுறையாக இல்லை.
மஹாபாரதம் ஆவணப்படுத்தும்பொழுது சனாதன தர்மம் பரவியிருந்த இந்தப் பகுதிகளில், அதனுடைய பரப்பளவில் இப்பொழுது 70 சதவிகிதத்திற்கு மேல் இழந்துவிட்டோம். 30 சதவிகிதம்தான் இருக்கின்றது. அதுவும் அரச தர்மமாக சனாதன இந்து தர்மம் இல்லை. சனாதன இந்து தர்மத்தை வாழும் மக்கள் அங்கு வாழ்ந்துகொள்ளலாம். அவ்வளவு தான்.
1947ல் இந்திய சுதந்திரத்தின்போது 565 Princely States மொத்தமாய் இருந்தது.
அதில் 548 Princely States இந்துமதத்தை - சனாதன தர்மத்தை ஆட்சி மதமாக, அரச தர்மமாகக் கொண்ட இராஜ்ஜியங்கள். 548 Princely State சனாதன இந்து தர்மத்தை அரச தர்மமாகக் கொண்டவைகள். ஆனால் நாடாக உருவாகும்பொழுது பல்வேறு காரணங்களினால் பிற்காலத்திலே 'மதச்சார்பற்ற' என்கின்ற வார்த்தை அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டு, constitution - இல் அந்த வார்த்தைச் சேர்க்கப்பட்டு, மொத்த 548 Hindu Princely State- அந்த Stateனினுடைய நிலம், மக்கள்தொகை எல்லாமே மதச்சார்பற்ற தேசமாக மாறுகின்றது.
அதனால் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், வரலாற்றை உங்கள் முன் விரித்து வைக்கின்றேன். அதுதான் இப்பொழுது நான் செய்கின்ற வேலை. அதனால் சனாதன இந்து தர்மம் அழிவற்றது. ஆனால் சனாதன இந்து தர்மத்தை வாழும் மக்களை அழிக்க முடியும்.
1.9 பில்லியன் இஸ்லாமியர்களுக்கு 56 இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன. 2.3 பில்லியன் கிறிஸ்தவர்களுக்கு 27 கிறிஸ்தவ தேசங்கள் இருக்கின்றன. அதாவது அதிகாரப்பூர்வமாக, அசர மதமாக கிறிஸ்தவத்தை அவர்களுடைய நாட்டின் மதமாக வைத்திருக்கின்ற 27 கிறிஸ்தவ நாடுகள் இருக்கின்றன. 500 மில்லியன் பௌத்தர்களுக்கு 2 பௌத்த நாடுகள் இருகின்றன. 15.7 மில்லியன் யூதர்களுக்கு ஒரு யூத நாடு இருக்கிறது. ஆனால் 2 பில்லியன் இந்துக்களுக்கு...?
உலகம் முழுவதிலும் 2 பில்லியன் இந்துக்கள் இருக்கிறார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்துக்கள் - இந்துமதத்திலே பிறந்து இந்துமதத்தில் வாழ்பவர்கள், இந்துமதத்தை வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொண்டவர்கள். இது மொத்தமும் பார்த்தால் உலகம் முழுவிதிலும் 2 பில்லியன் இந்துக்கள் இருக்கிறார்கள். ஆனால் கைலாஸாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இந்துமதம் அரச மதம் (State Religion) கிடையாது. இந்த உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதனால் 'சனாதன இந்து தர்மத்தை அழிக்க முடியாது' என்கின்ற ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி, நம்மை நாமே மயக்கத்தில் வைத்துக்கொண்டிருப்போமானால் அது மிகப்பெரிய முட்டாள்தனம். அது மாயை!
ஒரு சிறு உதாரணம் சொல்கின்றேன்: 50 வருடங்களுக்கு முன்னால், லாஹூரில் இருந்த மக்களிடம் '50 வருடங்களுக்குப் பிறகு உங்கள் அடுத்தத் தலைமுறை தீபாவளிக் கொண்டாட முடியாது என்று நாம் சொல்லியிருந்தால், சொன்னால் அவர்கள் நம்பியிருக்கமாட்டார்கள். ஆ… என்ன சொல்கிறாய்? என்று அதை நம்பியிருக்கமாட்டார்கள். அதேமாதிரி 50 வருடங்களுக்கு முன்னால் வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில், டாக்கா என்கின்ற அந்த ஊரே டாக்கேஷ்வரி என்கின்ற தேவியின் பெயரால்தான் அந்த டாக்கா என்ற ஊர் இருக்கிறது. எப்படி காளிகாட் என்கின்ற காளியின் பெயரால்தான் 'கல்கத்தா' என்கின்ற அந்த ஊரின் பெயர் வைக்கப்பட்டதோ, அதேபோல டாக்கேஷ்வரியின் பெயரால்தான் டாக்கா என்ற ஊர் பெயரே வைக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பாக டாக்காவில், 'நீங்கள் துர்கா பூஜையை பெரிதாக நடத்த முடியாது, இந்து கோயில்களை நடத்தமுடியாது, இந்துக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று சொல்லியிருந்தால் அவர்கள் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைய நிதர்சன உண்மை, அங்கு இந்துக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை, இந்து ஆலயங்கள் நடத்தப்பட முடியவில்லை, இந்துப் பூஜைகள் நடத்த முடியவில்லை. அதுதான் உண்மை. அதனால் நிதர்சன சத்தியத்தைப் பார்க்கவேண்டியது, வரலாற்றைத் தெளிவாகப் பார்க்கவேண்டியது நம்முடைய கடமை.
அதனால், முழுக்க முழுக்க சத்தியத்தையும் வரலாற்றையும் ஆராய்ந்தோமானால், இரண்டு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல முடியும். சனாதன இந்து தர்மத்தை அழிக்க முடியாது, ஆனால் சனாதன இந்து தர்மத்தை வாழும் மக்களை அழிப்பதன் மூலமாக, சனாதன இந்து தர்மத்தை, அருங்காட்சியகத்தின் காட்சிப்பொருளாக மாற்ற முடியும் என்பதை வரலாறு நிரூபிக்கின்றது. இதுதான் உண்மை!
ஐயா தேவேந்திரன் அவர்கள் இரண்டாவது கேள்வி கேட்டிருக்கின்றீர்கள், ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவருடையப் பெயரைச் சொல்லி, அவருடையக் கருத்துக்கு என்னுடைய கருத்தைக் கேட்கின்றீர்கள்.
ஐயா திரு.தேவேந்திரன் அவர்களே, உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இதை ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன், இப்போது மீண்டும் நீங்கள் கேட்பதனால் மீண்டும் சொல்கின்றேன். எந்த நாட்டினுடைய எந்த அரசியல் தலைவரைப் பற்றியும் எந்த கருத்தும் சொல்லமாட்டேன். எந்த அரசியல் தலைவருடையக் கருத்துகளைப் பற்றியும் கருத்து சொல்லமாட்டேன். எந்த நாட்டினுடைய அரசியல் நிகழ்வுகளைப் பற்றியும் கருத்து சொல்லமாட்டேன். I am not a political commentator. என்னுடையப் பணி, சனாதன இந்து தர்மத்தைப் பற்றி உலகத்திற்குச் சொல்வதும், சனாதன இந்து தர்மத்தை மறுமலர்ச்சிப் பெறச்செய்வதும்தான் என் பணி.
நீங்கள் சனாதன இந்து தர்மம் பற்றி என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், பதில் சொல்கிறேன். ஆனால் எந்த நாட்டினுடைய அரசியல் தலைவர்களைப் பற்றியும், அந்த அரசியல் தலைவர்களுடையக் கருத்துக்களைப் பற்றியும், அரசியல் நிகழ்வுகளைப் பற்றியும் எந்த கருத்தும் சொல்லமாட்டேன். இதை மீண்டும் ஒருமுறை பதிய வைக்கின்றேன்.
அடுத்ததாக திரு. தேவேந்திரன் அவர்களுடைய மூன்றாவதுக் கேள்வி: ஏற்றத்தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம், ஜாதி இப்படி நிறைய தவறான விஷயங்களின் அடிப்படையாக சனாதனம் இருக்கிறது. அதனால்தான் அதை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறார்களே? என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
ஐயா. திரு தேவேந்திரன் அவர்களே, இது உண்மையில் கேள்வி அல்ல. உங்களுடைய Judgement. Judgement என்பதைவிட உங்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு Judgement- கருத்து. மூளைச்சலவை செய்து உங்களுக்குள் விதைக்கப்பட்ட ஒரு விஷக்கருத்தை நீங்கள் கேள்வியாக சொல்கிறீர்கள். ஆனால் இதில் ஒரு அழகான ஒரு வார்த்தையை நீங்கள் உபயோகப்படுத்தியிருக்கின்றீர்கள். 'சொல்கிறார்களே' என்று கேட்டிருக்கின்றீர்கள். அப்படியென்றால் ஒரு நல்ல விஷயம், இது உங்களுடைய கருத்து இல்லை என்று நீங்கள் தெளிவாகக் காண்பித்துவிட்டீர்கள். 'சொல்கிறார்களே, அதைப்பற்றி நான் என்ன சொல்லவேண்டும்?' என்று கேட்கிறீர்கள்.
அதாவது ஐயா, திரு.தேவேந்திரன் ஐயா அவர்களே நன்றாகக் கேளுங்கள். இந்த மாதிரி சொல்கிறார்கள் இல்லையா, ஏற்றத்தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம், ஜாதி இப்படி நிறைய தவறான விஷயங்களின் அடிப்படையாக சனாதனம் இருக்கிறது. அதனால் அதை ஒழிக்கவேண்டும் என்று உங்களுக்கு வந்து சொல்கிறார்கள் இல்லையா, அவர்களிடம் முதலில் கேளுங்கள்… 'இந்த மாதிரி எல்லாம் அவர்கள் சொல்வதற்கு ஆதாரம், சான்றுகள் (evidence, reference) - சாஸ்த்திரப் பிரமாணம் எந்த சனாதன இந்து தர்மத்தின் சாஸ்த்திரங்களிலே இது இருக்கிறது?' என்று ஆதாரத்தைக் கேளுங்கள். நீங்கள் ஆதாரத்தைக் கேட்காமலே defend செய்தாலே தோற்றுவிடுவீர்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சனாதன இந்து தர்மத்தை அழிப்பவர்கள், அழிக்க நினைப்பவர்கள் சனாதன இந்து தர்மத்தினுடைய விரோதிகளும், துரோகிகளும், சனாதன இந்து தர்மத்தை அழிக்கும் தீவிரவாதிகளும் செய்யும் முதல் வேலை என்னவென்றால் - பொய்களை, கட்டுக்கதைகளை, புரட்டுக்கதைகளை நம்மீது அள்ளித் தூவிவிட்டு, கொட்டிவிட்டு, நாம் defend செய்வதை அமர்ந்து, பார்த்து இரசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் சொல்கின்றப் பொய்களுக்கும், விஷத்திற்கும், வெறுப்பு உமிழ்வுகளுக்கும் (Hate speech) எந்த சான்றுகளும், ஆதாரங்களும் அவர்களிடம் இருக்காது.
இப்பொழுது உங்களிடம் வந்து சொல்கிறார்கள் இல்லையா ஐயா, அவர்களிடம் நீங்கள் கேளுங்கள். யார் உங்களிடம் வந்து, 'ஏற்றத்தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம், ஜாதி இந்த மாதிரி தவறான விஷயங்களின் அடிப்படையாக சனாதனம் இருக்கிறது' என்று உங்களிடம் வந்து விஷத்தை விதைக்கிறார்கள் பார்த்தீர்களா, வெறுப்பை உமிழ்கிறார்கள் பார்த்தீர்களா, அவர்களிடம் 'ஆதாரத்தைக் கொடுங்கள்' என்று மட்டும் கேளுங்கள். ஒன்றுமே இருக்காது!
நம் இனத்தின் மீது, சனாதன இந்து நாகரிகம் மீது (Hindu civilization) இந்த மூளைச்சலவையும், இந்த வெறுப்பு உமிழ்வும் எப்படி செய்யப்பட்டது என்பதை உங்களுக்குச் சொல்கிறேன், புரிந்து கொள்ளுங்கள் ஐயா. இதைப் புரிந்துகொண்டீர்களானால், இந்த விஷத்தை உங்கள்மீது வாந்தியெடுப்பவர்களுக்கு நீங்கள் சரியான பதில் கொடுத்து, நீங்கள் அழிந்துவிடாமல், அவர்கள் கையிலே ஒரு விஷக்கருவியாக நீங்கள் மாறிவிடாமல், உங்களைக் காத்துக்கொள்ள முடியும்.
முதலில் நம்முடைய பாரதத்தையும், மக்களையும் அடிமைப்படுத்தி, ஆண்டு, அழித்து, நம் செல்வங்களைச் சுரண்டிக் கொள்ளையடித்து, தங்கள் வாழ்க்கையையும் தங்கள் நாட்டையும் வளப்படுத்திக்கொண்டக் கொடூரமான இனங்கள், கொடூரக் கும்பல்... முதலில் அவர்கள் செய்த வேலை என்னவென்றால், நம்மைப் பற்றி இல்லாதப் பொய்களை உருவாக்கி, நம் சமூகத்தைப் பற்றி, நம் இனத்தைப் பற்றி, நம் தர்மத்தைப் பற்றி, நம் வாழ்க்கையைப் பற்றி இல்லாதப் பொய்களை உருவாக்கி, அதை ஒரு விவரணையாக (Narrative) அமைப்பது. நூல்கள் மூலமாகவும், மற்ற புத்தகங்கள், வேறு வேறு விதத்தின் மூலமாவும், ஆவணப்படுத்துதலின் மூலமாகவும் அந்த விவரணையை உருவாக்குவது. அடுத்தத் தலைமுறை அந்த விவரணையை, அதாவது இவர்கள் உருவாக்கிய நூல்கள், Material, இந்த Atrocity Material என்று சொல்வோம். இவர்கள் உருவாக்கிய Material -ஐ உபயோகப்படுத்தி அடுத்தத் தலைமுறையை மூளைச்சலவை செய்து, அந்த தலைமுறையை வைத்து, இந்த Atrocity Material இதை வந்து வெறுப்பு உமிழ்வாக, வாழ்க்கைமுறையாக மாற்றுவது. அதற்குப் பிறகு இந்த Atrocity Material வெறுப்பு உமிழ்வாக மாறி, இதை ஒரு பொதுவான விவரணையாக மக்களை நம்பவைத்து மூளைச் சலவை செய்து, இது சார்ந்த சட்டங்களை உருவாக்குவது. அதற்குப் பிறகு அந்தச் சட்டங்களை உபயோகித்து இன்னமும் சனாதன தர்மத்தை அழிப்பது. இது ஒரு 7 நிலைகளில் படிப்படியாகச் செய்யபடுகின்ற இனப்படுகொலை (Genocide).
ஒரு நேர்மையான இரண்டு மேலை நாட்டு அறிஞர்கள், மிகவும் தெளிவாக ஒரு புத்தகத்தில் எழுதுகிறார்கள், பிரிட்டன் உடன்... அந்த இனங்கள் - காலனித்துவம் (colonize) செய்த நாடுகள், நம் இந்தியாவைக் காலனித்துவம் செய்த நாடுகள், அவர்களுடைய அறிவு, செல்வம், அந்த நாடுகள் முழுவதுமே இந்தியாவின் செல்வத்தையும், அறிவையும் சுரண்டிதான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது நான் சொல்லவில்லை. கொஞ்சம் நேர்மையாக வரலாற்றை ஆராய்ந்த பல வல்லுநர்கள், அதில் முக்கியமான இரண்டு மேலை நாட்டு வல்லுநர்கள் சொல்கின்றார்கள். உங்களுக்குச் சான்றையும் கொடுக்கிறேன், பார்த்துக்கொள்ளுங்கள்.
படிப்படியாக நம்முடைய சமூகத்தைப் பற்றி, வாழ்க்கைமுறையைப் பற்றி, தர்மத்தைப் பற்றி, Atrocity Materials- ஐ உருவாக்கி, வெறுப்பு உமிழ்வுகளைச் செய்து, அதை ஒரு பொதுவான விவரணையாக அமைத்து, அதைச் சார்ந்து சட்டங்களை உருவாக்கி நம்மை ஒடுக்கினார்கள்.
இன்னொருக் கொடுமை என்னவென்றால், அவர்கள் நமக்கு எல்லாக் கொடுமைகளையும் செய்து விட்டு, இந்தக் கொடுமைகளெல்லாம் நமக்கு, 'நம்முடைய வாழ்க்கைமுறையில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுப் பிரச்சனைகளால்தான் இழைக்கப் பட்டது' என்று நம்மையே நம்ப வைத்து, மூளைச்சலவை செய்து, விஷத்தைத் திணித்து, உண்மையில் இந்தக் கொடுமைகளைச் செய்த அவர்கள் 'இந்தக் கொடுமைகள் நாம் ஒருவருக்கு ஒருவர் நமக்குள் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளால் செய்துகொண்டோம்' என்று நம்மை நம்ப வைத்து, இதை ஒரு மாபெரும் விவரணையாக அமைத்து (grand Narrative), கடைசில்... 'இதுமாதிரி Un-civilized ஆக இருக்கின்ற இந்துக்களையும், இந்தியர்களையும் Civilize செய்வதற்காகத்தான் நாங்கள் அவர்களை அடிமையாக்கினோம், செய்ததற்குக் காரணமே அவர்களை Civilize செய்வதற்குத்தான் என்று' தனக்குத் தானே ஒரு உயர்வு மனப்பான்மையை (superiority complex) உருவாக்கிக்கொண்டு, அவர்கள் செய்த கொடுமைகளுக்கெல்லாம் ஒரு நியாயத்தைக் கற்பித்துக்கொண்டு, நமக்குள் சுய-சந்தேகத்தையும், சுய-வெறுப்பையும், சுய-மறுப்பையும் (Self doubt, Self hatred, Self denial) முழுக்க முழுக்கத் திணித்து, நம்மை அழித்தார்கள் என்பதுதான் உண்மை!
ஒரு சின்னக் கதை சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள், இது சின்னக் கதை.
அதாவது ஒரு காட்டிலேக் கருப்பெறும்புகளும், வெள்ளை எறும்புகளும்… அதாவது கட்டெறும்புகளும், வெள்ளை எறும்புகளும் அதனதன் வாழ்க்கைமுறையைப் பார்த்துக்கொண்டு இனிமையாக வாழ்ந்து கொண்டிருந்தன. அது அது அதனுடைய வேலையைப் பார்த்துக்கொண்டு எல்லாமே நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தன. ஆனால் அங்கு வந்த ஒருவனுக்கு, இந்த எறும்புகளிடமிருந்து அந்த நிலத்தை அபகரிக்க வேண்டும். ஆனால் இந்த எறும்புகளுடைய எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. எப்படி இந்த நிலத்தை அபகரிப்பது? இந்த எறும்புகள் விடாது. அப்பொழுது ஒரே வழி என்னவென்றால், ஒரு பெரியக் குடுவையிலே இந்த கருப்பெறும்பையும் - கட்டெறும்பையும், சிகப்பெறும்பையும் ஒன்றாகப் போட்டு அந்தக் குடுவையை வேகமாகக் குலுக்கி திரும்பக் கொட்டினாம். இந்த மிகப்பெரிய குலுக்கல், இந்த எறும்புகளுக்குள்ளே ஒரு மிகப்பெரியக் குழப்பத்தை ஏற்படுத்தி, ஒரு பெரிய நிலநடுக்கம்போல ஏற்படுத்தி, அந்த எறும்புகளுக்கு - கட்டெறும்புகளுக்கும் சிகப்பெறும்புகளுக்கும் என்ன நடந்ததென்றேப் புரியாமல் அவைகள் திகைத்துக்கொண்டு, 'உண்மையில் என்னதான் நடக்கிறது?' என்றே அவைகளுக்குத் தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும்பொழுது, அந்த கட்டெறும்புகளுக்கு.. பாரு, பாரு - இந்தக் குழப்பத்திற்கெல்லாம் காரணம் சிகப்பெறும்பு என்றும், சிகப்பெறும்புகளுக்கு, இந்த குழப்பத்திற்கெல்லாம் காரணம் கட்டெறும்பு என்றும் சொல்லி, அந்த இரண்டு எறும்புகளும் உண்மையைப் புரிந்துகொள்ளாமல், உண்மையைப் புரிந்துகொள்கின்ற அளவிற்கு அவைகளுக்கு சூழலும், நிலையும், இடமும், நேரமும் இல்லாதக் காரணத்தினால், இந்த இரண்டு எறும்புகளும் ஒன்றையொன்று அடித்துக்கொண்டு இறந்துபோனது. அந்த நிலத்தை அந்தக் கொடூர அரக்கன் கைப்பற்றிக்கொண்டான். இந்த கதைத்தான் நம் சனாதன இந்துதர்மத்தின் மீதும் நிகழ்த்தப்பட்டது.
இந்தக் கதையை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்... கருப்பெறும்பும் செவ்வெறும்பும் - இரண்டையும் அடித்துக் கொள்ளச்செய்து, இரண்டும் ஒன்றை ஒன்று அடித்து மாய்ந்ததனால் மூன்றாமவன் அந்த நிலத்தை அபகரித்துக்கொண்டான். அந்த கருப்பெறும்பும் செவ்வெறும்பும் சேர்த்து வைத்திருந்த எல்லா சொத்துகளையும் அபகரித்துக் கொண்டான். 'நம்மைக் குலுக்கிக் கொட்டியவன்தான் நம்முடைய உண்மையான எதிரி' என்று அந்த இரண்டு எறும்புக்குமே கடைசிவரை தெரியவில்லை. ஆனால் கண் முன்னால் இருக்கின்ற சிகப்பு எறும்பை எதிரி என்று கட்டெறும்பு நினைத்து, கட்டெறும்பு எதிரி என்று சிகப்பெறும்பு நினைத்து, கடைசியில் இரண்டு எறும்புகளும் ஒன்றையொன்று அடித்துக்கொண்டு மாய்ந்ததனால், நிலத்தை இராட்சஸன் பறித்துக்கொண்டுப் போனான். நிலத்தையும், சொத்துக்களையும் அந்த அரக்கர்கள் கொண்டுபோனார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்தியாவிலிருந்து... இந்து தேசமாக இருந்த இந்தியாவிலிருந்து கிறிஸ்தவ தேசமான பிரிட்டிஷ் தேசம் கொண்டு சென்ற சொத்தின் மதிப்பு... நான் வரலாற்றிலிருந்தே எடுத்து உங்களுக்கு இந்த புள்ளி விவரங்களை சொல்கின்றேன். நீங்கள் வேண்டுமானாலும் கூகுள் செய்துப் பார்க்கலாம், AI -ஐ சென்றுப் பார்க்கலாம். பிரிட்டிஷால் கொண்டு செல்லப்பட்ட அறிவு மற்றும் செல்வம், இந்து தேசமாக இருந்த இந்தியாவிடம் இருந்து சுரண்டப்பட்ட அறிவு மற்றும் செல்வம் அளப்பிட இயலாதது. இவைகளையெல்லாம் சுரண்டிக்கொண்டு, 'நம்முடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் நமது சனாதன இந்து தர்மம்தான் காரணம்' என்று நம்மை மூளைச்சலவை செய்து, நம்மை நம்பவைத்து, விஷத்தை நமக்குள் விதைத்துவிட்டு, இந்த விஷத்தை நமக்குள் விதைத்துவிட்டதனால், அவர்கள் யார் மீதும் நம்முடைய சந்தேகம் வராமல் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். 64.82 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் சொத்து, 1765ஆம் வருடத்திலிருந்து 1900 வரை மட்டும், இந்து நாடாக இருந்த பாரதத்திலிருந்து கிறிஸ்தவ நாடான United Kingdom சுரண்டி எடுத்துச் சென்றிருக்கின்றது. இது அவர்களுடைய தரவுகளின்படி நான் சொல்லுகின்ற புள்ளி விவரம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கிறிஸ்தவ United Kingdom நம்மை அடிமைப்படுத்தி, நம்மிடமிருந்துச் சுரண்டுவதற்கு முன்பு உலகத்தின் 25% GDP இந்து பாரதத்தில் இருந்தது. இந்து பாரதத்தினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உலகத்தின் 25%. இந்தப் புள்ளிவிவரங்களை, வரலாற்றின் பக்கங்களை சற்றே நேர்மையோடுத் தெரிந்துகொள்ளுங்கள். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டி சற்றே நேர்மையோடு இந்தப் புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொண்டால் உங்களுக்குள் விதைக்கப்பட்டது விஷம் என்று உங்களுக்குத் தெளிவாக புரியும்.
நீங்கள் இப்பொழுது சொல்கிறீர்கள் அல்லவா ஒரு கருத்து… அதாவது ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமை, ஜாதி... இதெல்லாம் நம்முடைய இந்துமதத்தில் இருந்ததாக, சனாதனத்தில் இருந்ததாக, அதனால்தான் இதை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள் இல்லையா? இந்த கேள்விக்கு ஒரு ஒரு பாகமாகப் பார்த்தோமானால், ஆயிரக்கணக்கான சான்றுகளை என்னால் தெளிவாகச் சொல்ல முடியும். நமக்குள் ஏற்றத்தாழ்வும் இருந்ததில்லை, பெண்ணடிமைத்தனமும் இருந்ததில்லை, ஜாதியும் இருந்ததில்லை.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் இதை defend செய்யப்போனாலே நாம் தோற்றுவிடுவோம். முதலில் உங்களை எப்படி எப்படியெல்லாம் மூளைச்சலவை செய்திருக்கிறார்கள் என்றுப் புரிந்துகொள்ளுங்கள். Defend செய்துகொண்டே இருந்தீர்கள் என்றாலேத் தோற்றுவிடுவீர்கள். அதாவது நம்முடைய எதிரிகள் விளையாட்டை எப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்றால், நீங்கள் defend செய்யவில்லை என்றாலும் உங்களுக்கு அழிவு, defend செய்தாலும் தோற்றுவிடுவீர்கள். அந்த மாதிரிதான் விளையாட்டை வடிமைத்து, அந்த சதி வலைக்குள் நீங்கள் சிக்க வைக்கப்பட்டிருக்கின்றீர்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பது மட்டும்தான் இந்த சதியிலிருந்து நீங்கள் வெளிவருவதற்கான ஒரே வழி.
ஒவ்வொரு Pointஆகச் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்.
ஒன்று: நம்முடைய இந்துப் பல்கலைக்கழகங்களான நளந்தா, தக்ஷசீலா, விக்ரமசீலா, காஞ்சிப் பல்கலைக்கழகம், காசிப் பல்கலைக்கழகம் இவையெல்லாம் அடியோடு அழிக்கப்பட்டன..
இரண்டாவது: இந்த பெண்ணடிமையைப் பற்றி ஒரு சிறிய Data-வைக் கொடுக்கின்றேன். இப்பொழுது 2025ஆம் வருடத்தில், மேற்கத்திய நாடுகள் முழுவதிலும் மொத்த தேசியப் பாராளுமன்றங்களிலும் வெறும் 27.2 சதவிகிதம்தான் பெண்கள் இருக்கின்றார்கள். 27.2 சதவிகிதம்தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. பெண்கள் அவ்வளவுதான் இருக்கிறார்கள்.
ஆனால் சனாதன இந்து தர்மத்தில், எல்லா அரசனுமே அரசியோடு சேர்ந்துதான் அரசவையை நடத்தியாக வேண்டும். ஐம்பது சதவிகிதப் பெண்கள் பிரதிநிதித்துவம் சனாதன இந்து தர்மத்தின் எல்லா அதிகார மையங்களிலும் இருந்தது.
வால்மிகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் இராமர் வனவாசம் செல்லும்பொழுது, மிகத்தெளிவாக அந்த சூத்திரம் சொல்கிறது, 'ஸாது தர்ம ப்ருதா நித்யாராஜ்ஞ்ய ப்ரியஸமாஸதி: ஸர்வேஷாம் தர்மசீலாணாம் பிரதிஷ்டா தர்ம தர்ஷிநி ஸ யதா புருஷோராஜ்ஞோ தர்மேநாபிஹிதாபுரா ததைவ குருகல்யாணி தர்மபத்நி யதாவிதி:' இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வால்மிகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில், இராமர் வனவாசம் செல்லும்பொழுது, அந்த இராஜ குரு வசிஷ்டர்... நம் சனாதன இந்து தர்மத்தினுடைய அரசமைப்பை நீங்கள் சிறிது புரிந்துகொள்ள வேண்டும். இராஜா எப்பொழுதுமே பிரதம மந்திரி மாதிரி Executive Authority. இராஜ குருதான் President - Constitutional Head.
constitutional Head இராஜ குரு, அரசர் Executive authority தான். Executive power மொத்தமாக அரசரிடம் இருக்கிறது. ஆனால் Constitutional Head இராஜ குருதான்.
அதனால் இராஜ குரு வசிஷ்டர், இராமர் வனவாசம் செல்லும்பொழுது அடுத்து அந்த இராஜ்ஜிய அதிகாரத்தை சீதையிடம்தான் ஒப்படைக்கிறார். சிறிது இராமாயணம் படியுங்கள். படியுங்கள் ஐயா… இராமாயணத்திலே அயோத்தியா காண்டத்தில் இராமர் வனவாசம் சொல்லும்பொழுது, 33 சர்க்கத்திலே தெளிவாக இந்த ஸ்லோகம் வருகிறது, 'ஸாது தர்ம ப்ருதா நித்யாராஜ்ஞ்ய ப்ரியஸமாஸதி: ஸர்வேஷாம் தர்மசீலாணாம் பிரதிஷ்டா தர்ம தர்ஷிநி ஸ யதா புருஷோராஜ்ஞோ தர்மேநாபிஹிதாபுரா ததைவ குருகல்யாணி தர்மபத்நி யதாவிதி:'
அப்பொழுது என்ன அர்த்தம்? இராமர் போனால் சீதை தான் நாட்டை ஆண்டாகவேண்டும். வசிஷ்டர் 'சீதைக்குத்தான் இராஜ்ஜியம்' என்று ஒப்படைக்கிறார். சீதையும், 'நான் இராமரோடு செல்ல வேண்டும்' என்று சென்றதாலே இராஜ்ஜியம் பரதனுக்குச் செல்கின்றது.
அதனால் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், எங்கேப் பெண்ணடிமைத்தனம்? படுபாவிகள் நம்மை மூளைச்சலவை செய்தார்கள். அதனால்தான், ஐயா தேவேந்திரன் - ஐயா நான் உங்களுக்குச் சொல்கின்ற என்னுடைய ஒரு சிறு வேண்டுகோள், உங்களிடம் வந்து இந்த மாதிரி சொல்கிறார்கள் பார்த்தீர்களா, ஓ! பெண்ணடிமை அப்படி இப்படி... இதெல்லாம் சனாதனத்திலே இருந்தது' என்று சொல்கிறார்கள் இல்லையா, அவர்களிடம் ஆதாரத்தை மட்டும் கேளுங்கள் ஐயா. இறுதியில் அவர்கள் ஆதாரமாக யாரைக் காட்டுவார்கள் தெரியுமா? அவர்கள் கும்பலில் யாரோ ஒருவர் பொய்யாக மொழிபெயர்த்து, திரித்து எழுதிய அவர்களுடைய நூல்கள், அந்த hate speech, atrocity material அதையேதான் ஆதாரமாகக் காட்டுவார்கள்.
இந்த hate speech செய்வது, அதற்கடுத்தத் தலைமுறை atrocity materials -ஐ உருவாக்குவது, இந்த atrocity materials - hate speechஐ வைத்து அதற்கடுத்தத் தலைமுறை அதை விவரணையாக அமைப்பது, அதற்கடுத்து அந்த விவரணையை அடிப்படையாக வைத்து சட்டங்களை உருவாக்குவது, அதற்கடுத்து அந்தச் சட்டங்களை உபயோகித்து இன்னமும் சனாதன இந்து தர்மத்தை அழிப்பது. இப்படிப் படிப்படியாக இந்த இனப்படுகொலை நடத்தப்பட்டது. classical இனப்படுகொலை... ஒரு இனப்படுகொலை என்றால் என்னவென்று ஒரு classical Typical example பார்த்தால், இந்த சனாதன இந்து தர்மத்தின் மீது கடந்த 200 ஆண்டுகளில் நடத்தப்பட்டதுதான் இனப்படுகொலை!
நம்மிடம் இல்லாத எல்லாவற்றையும் நம்மிடம் இருந்ததாக நம்மையே நம்பச் செய்தது. அதுதான் கொடுமை! இப்பொழுது நீங்கள் எல்லோருமேகூட நம்பத் துவங்கிவிட்டீர்கள். அந்த மூளைச்சலவை, விஷப்பேச்சு, விஷத்தினுடைய ஆழம்... எந்த ஆதாரமும் இல்லாமல், அவர்கள் கற்கும் விஷத்தை நீங்களேகூட நம்பத் துவங்கிவிட்டீர்கள்.
ஐயா, நம்மிடம் பெண்ணடிமைத்தனம் இல்லை என்று சொல்வதற்கு இன்னும் என்னால் ஒரு 100 ஆதாரங்களைக் கொடுக்க முடியும். ரிக் வேதத்தில் 116வது பாகத்தில், 15வது ஸ்லோகம், 'இராணி விஸபாலா என்ற ஒரு பெண், தன்னுடைய செயற்கைக் காலைக்கொண்டுப் போரிலேப் பங்கேற்றாள்' என்று ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள்.
'ஸோதாவோ ஜங்கமாய்சிங் விஸபோலாய் தநஹிதே ஸ்டெர்பப் பிரக்யாத்தியம்' ரிக் வேதத்தினுடைய ஸ்லோகம் இது. கேலரின் மனைவியான விஸபாலாவின் கால் இரவு நேரப் போராட்டத்தில், ஒரு பறவையின் சிறகுபோல் துண்டிக்கப்பட்டது. உடனே நீங்கள் அவளுக்கு ஒரு உலோகக் காலைக் கொடுத்தீர்கள். அதனால் அவளால் நடக்க முடிந்தது. ரிக்வேத காலத்தில், பெண்கள் அரசியாக இருந்துப் போரில் பங்கேற்றிருக்கிறார்கள்.
இராணி துர்காவதி, இராணி ருத்ரமாதேவி, இராணி லக்ஷ்மிபாய், இராணி அஹில்யாபாய் ஹோல்கர் என்று பரம்பரையாக ரிக் வேத காலம் மட்டுமல்லாது, இந்த நவீன வரலாறு வரை என்னால் ஆதாரங்களைக் கொடுக்க முடியும். பெண்கள் ஆன்மிகத்திலும், அரசியலிலும் - எல்லாவற்றிலும் power center ஆக இருந்து முழுமையாகப் பங்கேற்று வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்ந்தார்கள்.
சனாதன இந்து தர்மத்தை காலனித்துவம் செய்தக் கொடுங்கோலர்களும், படையெடுத்த... கொடூரமானத் தாக்குதல்கள் மூலமாக (barbaric attacks) நம்மைப் படையெடுத்த முகலாய மற்றும் கிறிஸ்தவ பிரித்தானியர்கள் செய்த இந்தத் தாக்குதல்கள் - இவர்களெல்லாம் வந்து சனாதன இந்து தர்மத்தை தாக்கி அழிப்பதற்கு முன்பாக இந்த எந்தப் பிரச்சனையும் நமக்குள் இல்லை. இவர்கள்… இந்த சனாதன இந்து தர்மத்தினுடைய விரோதிகள், நம்மிடம் இருப்பதாக நம்மை நம்ப வைத்த எந்த பிரச்சனையும் நம்மிடம் இருந்ததில்லை என்பதுதான் வரலாறு சொல்கின்ற உண்மை.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த கிறிஸ்தவ பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின்பொழுது நம்மை அடிமைப்படுத்துவதற்காக, நம்மை மூளைச்சலவை செய்து, நம்மிடம் இல்லாதக் குறைகளை நம்மிடம் இருப்பதாகச் சொல்லி, நம் பிரச்சனைகளுக்கு இதுதான் காரணம் என்று நம்மை நம்ப வைத்து, மூளைச்சலவை செய்து, விஷத்தை நமக்குள் திணித்திருக்கிறார்கள்.. இதைப் புரிந்துகொள்ளுங்கள்.
அதே மாதிரி இராமாயணத்திலே சுந்தரகாண்டம் 14வது சர்க்கத்தில் தெளிவாகச் சொல்லுகிறது… 'ஸந்தியா காலமநாஷ்யாமா துருவம் ஏஷதீ ஜாநகி நதீம் சயிமாம்சிவ ஜலாம் ஸந்தியா அர்த்தேவரே வரணிநி
சந்தியா வேளையிலே சடங்குகளில் ஆர்வம் உள்ள சீதை, சிறந்த நிறம் கொண்ட என்றும் விளையவளான சீதை, சந்தியா வந்தனத்திற்காக, இந்த சிவத்தை, நீரைக் கொண்டு பூஜிப்பதற்காக, சந்தியா வந்தனம் செய்வதற்காக நதிக்கு வருவாள் என்று வால்மிகி இராமாயணம் ஆவணப்படுத்துகின்றது. ரிக்வேதத்திலே 27-க்கும் மேற்பட்ட பெண் தத்துவ ஞானிகளான கார்கி, மைத்ரேயி, லோபமுத்திரா, அபாலா, ரோமஷா நம்முடைய ரிஷிகாக்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் ஏற்றிய சூப்தங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது. ப்ருஹதாரண்யக உபநிடதத்தில்; கார்கி, ரிஷி யாக்ஞவல்கியரோடு வாதம் செய்கின்ற மொத்த வாதப் பிரதிவாதங்களும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதே மாதிரி பாணினி அஷ்டாத்தியாயியைக் கற்றுக்கொடுப்பதற்குப் பெண்கள் ஆசிரியர்களாக மற்றும் மாணவிகளாக இருந்திருக்கிறார்கள். 'உபாத்யாயி' என்கிற வார்த்தை மூலமாக பெண் ஆசான் இருந்திருக்கிறார்கள், பெண் மாணவிகள் இருந்திருக்கிறார்கள் என்பது ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அதனால் இதையெல்லாம் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சனாதன இந்து தர்மத்திலே பெண்கள் அறிஞர்களாக, பண்டிதர்களாக, ஆச்சாரியர்களாக இருந்தனர். 'நம்மைத் தாக்கி சனாதன இந்து தர்மத்தை அழித்துவிட்டு, பிறகு இரண்டு மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக நம்முடைய வாழ்வியல் அறுபட்டப் பிறகு, நம்மையே மூளைச்சலவை செய்து, நாம் பிற்போக்கான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்று நம்மை நம்ப வைத்தக் கொடூரம்' கிறிஸ்த்துவ பிரித்தானிய காலனிய ஆதிக்கக் கொடுங்கோலர்களால் நமக்கு நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
விழித்துக்கொள்ளுங்கள்! எல்லோருக்கும் கல்வி இருந்திருக்கின்றது, எல்லோரும் சமமாக வாழ்ந்திருக்கின்றார்கள், எல்லோருக்கும் எல்லா வாய்ப்பும் அளிக்கப்பட்டிருக்கின்றது. இதெல்லாம்தான் உண்மை! வரலாற்றுரீதியிலான உண்மை.
அடுத்தது எப்போதுமே defend செய்துகொண்டே இருந்தோமென்றால், நம் defend-ஐக்கூட அவர்கள் மீண்டும் மீண்டும் நோண்டிக்கொண்டிருப்பார்கள். நம்முடைய பங்களிப்பு, நாம் வாழ்ந்த நம்முடைய சனாதன இந்து தர்மத்தினுடையப் பங்களிப்பு, பெருமை (contribution, glory) அதை எடுத்துச் சொல்லத் துவங்கினோம் என்றால்தான், அதை நாம் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு சொல்லத் துவங்கினோமானால்தான், நாம் செய்யவேண்டிய சரியானச் செயலைச் செய்தவர்களாக ஆவோம். Defend செய்துகொண்டே இருக்காதீர்கள். ஏனென்றால் அவர்களுடையக் கேள்வியேப் பொய்யை அடிப்படையாக வைத்து அளிக்கப்பட்டக் கேள்வி.
அடுத்தது, ஐயா திரு.தேவேந்திரன் அவர்கள் கொண்டு வந்திருக்கின்ற அடுத்த ஒரு கேள்வி... ஜாதி, வர்ணாசிரமம் இதைப் பற்றி எடுத்துக்கொண்டு வருகிறீர்கள்.
நான் சொல்கின்ற இந்த சிலக் கருத்துக்களை ஆழ்ந்து கேளுங்கள் ஐயா.
ஆழ்ந்து உள்வாங்கிக்கொள்ளுங்கள், உலகத்திலேயே நடந்த மிகப்பெரிய ஊழல் என்னவென்றால் பணத்தை வைத்து அல்ல, பணம் என்கின்ற கருத்துதான் (concept) மிகப்பெரிய ஊழல்.
ஆழ்ந்து கேளுங்கள்... பணத்தை வைத்து, பணத்தைத் திருடிக்கொண்டு, பணத்தைக் கொள்ளயடித்து அப்படியெல்லாம் நடந்த எந்த ஊழலுமே மிகப்பெரிய ஊழல் கிடையாது. பணம் என்கின்ற ஒரு போலித்தனமானக் கருத்துதான் மிகப்பெரிய ஊழல். மனித இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய ஊழல் என்னவென்றால், World’s largest corruption என்னவென்றால், பணம் என்கின்ற fake concept. இரண்டாவது மனித இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மிகப்பெரியத் தாக்குதல் எது என்றால், World war1> world war 2 இந்தப் போர்கள் எல்லாம் கிடையாது. 'அடக்கி ஆளப்பட்டால் மட்டும்தான் மனிதன் நிம்மதியாக வாழமுடியும்' என்று அவனை மூளைச்சலவை செய்து, நம்ப வைத்ததுதான் மனித இனத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல். அடுத்தது மனித இனத்திற்கு செய்யப்பட்ட மிகப்பெரிய delusion, மனித இனத்தின் மீது திணிக்கப்பட்ட மிகப்பெரிய மாயை, மனிதன் இனத்தின் மீது செய்யப்பட்ட மிகப்பெரிய Brain washing delusion என்னவென்றால் - Fake ownership.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் 'பணம்' என்கின்ற கருத்துதான். பணத்தை வைத்து செய்யப்பட்ட ஊழல் எல்லாம் பெரிய ஊழல் கிடையாது. பணம் என்கின்ற கருத்துதான் மிகப்பெரிய ஊழல். மனிதர்கள் மீது தொடுக்கப்பட்டப் போர்கள் எல்லாம் மிகப்பெரிய அநீதிகள் அல்ல. 'அடக்கி ஆண்டால்தான் நீங்கள் நிம்மதியாக அமைதியாக வாழ முடியும்' என்று உங்களை நம்ப வைத்ததுதான் மிகப்பெரிய அடக்குமுறை. அதே மாதிரி மிகப்பெரிய டெல்யூசன் இந்த fake ownership.
இதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், பணம் என்கின்ற மிகப் பெரிய போலித்தனமான ஊழலை எடுத்து வந்து திணித்துவிட்டுத்தான், பணத்தை ஒரு குறிப்பிட்டவர்கள் ஒன்றாக சேர்த்துக்கொண்டு, மற்றவர்களை வறுமையிலே ஆழ்த்துகின்ற இந்த சமூக அமைப்பு நிகழ்கிறது. இதற்கான அடிப்படை - fundamental principle என்ன? பணம் என்கிற கருத்து.
இன்னொரு இந்த உதாரணத்தைச் சொல்கிறேன், புரிந்துகொள்ளுங்கள். Pure science, applied science என்று சொல்வோம். Pure science என்பது Principle. Applied science என்பது நடைமுறை. பணம் என்கிற pure science என்று நம்ப வைத்துவிட்டு, ஊழல் என்கின்ற வாழ்க்கைமுறையை applied science ஆக மாற்றுவது. மனிதர்களை, உங்களை அடக்கி ஆள்வதற்கு ஒரு அரசாங்கம் இருந்து, அரசன் இருந்து அடக்கி ஆண்டால்தான் நீங்கள் எல்லோரும் நிம்மதியாக, அமைதியாக, சாந்தத்தோடு, Peacefulஆக வாழ முடியும் என்று நம்ப வைத்துவிட்டு, ஆனால் அவனுடையத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக இந்த மொத்த நாட்டையுமே போர் செய்வதற்கான ஒரு கருவியாக உபயோகப்படுத்திக்கொள்வது.
அடுத்து இந்த fake-ஆன ownership idea-வை மக்களுக்குள் திணித்து அந்த fake ownership idea- வை வைத்து மக்களைத் தொடர்ந்து பயத்திலேயே வைத்து ஆள்வது, அடக்குவது. இந்தக் கருத்துகளையெல்லாம் கொஞ்சம் ஆழ்ந்துப் புரிந்துகொள்ளுங்கள், அப்பொழுதுதான் மேற்கத்திய நாகரிகம் எப்படி இந்தப் பணம், நிலம், அதிகாரம், ஞானம் (money, land, power, knowledge) இதை எப்படி உபயோகப்படுத்தியிருக்கிறது, நம்முடைய சனாதன இந்து நாகரிகம் இந்த நான்கையும்.. அதாவது பணம், அதிகாரம், நிலம், ownership இந்த நான்கையும் எப்படி தனித்தனியாக decentralize செய்து ஒரு இடத்தில் அதிகாரம் குவிந்து விடாமல், யாரோ ஒருவரோ அல்லது ஒரு குழுவோ எல்லோரையும் வஞ்சித்துவிடாமல் (exploit) இந்த நான்கையும் பிரித்து வைத்து, ஒரு சமநிலையோடு இருக்கும் சமூக நீதியோடு இருக்கும் அருமையான அழியாத ஒரு நாகரிகத்தை உருவாக்கியிருக்கிறார்கள், நம்முடைய சனாதன இந்து தர்மம் எப்படி உருவாக்கியிருக்கிறது என்பதையே நீங்கள் அப்பொழுதுதான் புரிந்து appreciate செய்ய முடியும் ஐயா.
கொஞ்சம் உலகம் முழுவதும், Pre-bronze age என்று (வெண்கல காலத்திற்கும் முந்தையகால நாகரிகம்) சொல்வோம்... அந்த 48 நாகரிகங்கள் பற்றியும், அதற்குப் பிறகு எழுந்த, இருந்த, விழுந்த நாகரிகங்கள் பற்றியும், எப்படி நாடுகள் எழுகின்றன, இருக்கின்றன, விழுகின்றன, எப்படி இந்த நாகரிகங்ள் எழுகின்றது, இருக்கின்றது, விழுகின்றது - இதைப் பற்றியெல்லாம் சிறிதுப் படித்தோமானால், ஆராய்ச்சி செய்தோமானால், ஒன்றுத் தெளிவாகத் தெரிகிறது. Pre-bronze age 48 நாகரிகங்களில் 47 அழிந்துவிட்டன. ஒரே ஒரு நாகரிகம் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது - அது சனாதன இந்து நாகரிகம் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. அது ஒன்று.
இரண்டாவது, இந்த நாகரிகத்தில் என்னென்னவெல்லாம் சரியானவை, எங்கெங்கெல்லாம் நாம் Suffer - ஆகியிருக்கிறோம், அதற்கானக் காரணம் என்ன? இவைகளை எல்லாம் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தீர்களானால், நம்முடைய மாட்சிமை மற்றும் நீட்சிமை, நம்முடைய glory and continuity - இந்த இரண்டிற்கும் காரணம், நம்முடைய சனாதன இந்து தர்மத்தின் - இந்த நாகரிகத்தினுடைய visionaries மிக அருமையாக அறிவு, பணம், அதிகாரம், நிலம் இந்த நான்கையும் மிகச்சரியாக decentralize செய்து, பொருத்தி ஒருவரையொருவர் வஞ்சித்துகொள்ள முடியாமல், அழகாக நான்கு வர்ணங்களிடம் இதை ஒப்படைத்து, சமூகநீதியோடு, சமச்சீரோடு மாட்சிமையோடும், நீட்சிமையோடும் வாழுகின்ற ஒரு அருமையான நாகரிகத்தை உருவாக்கியிருக்கிறார்கள் ஐயா.
பணம் என்கிற கருத்துதான் மிகப்பெரிய ஊழல் என்று சொன்னேன். ஆனால் பணம் இல்லாமல் நாம் ஒருவருக்கொருவர்,உரையாட முடியாது. அதற்குப் பணம் தேவை. அதே மாதிரி அதிகாரம் இல்லாமல் ஒருவருக்கொருவர், நாம் ஒரு சமச்சீரான அமைதியோடு இருக்கின்ற சமூகத்தை உருவாக்கிக்கொள்ள முடியாது. அதேமாதிரி அறிவு இல்லாமல் நம்முடைய எல்லா கடந்தக்காலக் கண்டுபிடிப்புகள் இவையெல்லாவற்றையும், அடுத்தடுத்தத் தலைமுறைக்குக் கடத்திச் சென்று நம்மை மேம்படுத்திக்கொண்டே செல்வதும் இயலாது.
நில உரிமை இல்லாமல் இருந்தால், நாடுகள் மேம்படுத்தப்பட்டு, விரிவமைப்பிக்கப்பட்டு வளர்ச்சி நடக்காமல் போய்விடும். நம்முடைய நாகரிகத்தினுடைய வளர்ச்சி நடக்காமல் போய்விடும். ஏனென்றால் மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டேதான் செல்லப்போகிறது. அதனால் இந்த நான்குமே வேண்டும். ஆனால் இந்த நான்கும் யாருடைய ஒரு அதிகார மையமாக மாறி, இந்த நான்கும் ஒருவரிடம் குவிந்து, அசுரத்தன்மையில் மக்களின் அழிவிற்கு உபயோகமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான், மிக அழகாக இந்த நான்கையும் பிரித்து, நான்கு வர்ணத்தையும் அருமையாக Interdependent ஆக இந்த நான்கு சமூகமும் Interdependent ஆக இருந்து, சமூகநீதியோடு இனிமையான சமூகமாக வாழ்வதற்காக நம் முன்னோர்கள் உருவாக்கியக் கட்டமைப்புதான் வர்ணாசிரம தர்மம்.
இன்று வரை நம்முடைய மாட்சிமையும், நம்முடைய நீட்சிமையும் - இந்த சனாதன இந்து தர்மத்தின் மாட்சிமையும் நீட்சிமையும், வர்ணாசிரம தர்மத்தை முறையாகக் கடைப்பிடித்தபொழுதெல்லாம் நிகழ்ந்திருக்கின்றது. எங்கெங்கெல்லாம் நமக்கு துக்கம் வந்து கஷ்டப்படுகின்றோமோ, பிரச்சனைகள் வந்து தீர்க்க முடியாமல் தடுமாறுகின்றோமோ, தெரிந்துகொள்ளுங்கள் அங்கெல்லாம் நம்முடைய எதிரிகள், இந்த வர்ணாசிரம தர்மத்தின் வாழ்க்கைமுறையை சமநிலையற்றதாக ஆக்கி, அழித்து, 'அந்த தர்மம்தான் நம்முடையப் பிரச்சனைகளுக்குக் காரணம்' என்று நம்மை மூளைச்சலவை செய்து, விஷப்பேச்சுக்கள் மூலமாக விஷ விதைகளைத் திணித்து, நமக்குள்ளேயே சுய-சந்தேகம், சுய-மறுப்பு, சுய-வெறுப்பை உருவாக்கி நம்மை அழித்ததுதான் காரணம்.
அதாவது நம்முடைய நன்மைக்கும் - வெற்றிக்கும் எது காரணம், நம் தீமைக்கும் - அழிவுக்கும் எது காரணம் என்று நாம் தெளிவாகப் புரிந்துகொள்வது அடிப்படைத் தேவை.
கீதையில் மிக அழகாகக் கிருஷ்ண பெருமான் சொல்கிறார்…
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ரு'ஷ்டம் குணகர்ம விபாகஶ: தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யகர்;தாரமவ்யயம்
'குணங்களின் அடிப்படையில் நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன்' என்று மிகத்தெளிவாகச் சொல்கின்றார்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஜாதி டி.என்.ஏவில் இருக்கிறது, அது பிறப்பின் அடிப்படை. ஆனால் வர்ணம், நாம் ஏற்றுக்கொண்ட குணங்களின் அடிப்படை. நம்முடைய சூக்ஷும சரீரமான குணத்தின் அடிப்படையில் வர்ணம் நிர்ணயப்படுகின்றது. இன்னொரு முக்கியமான விஷயம் தெரிந்துகொள்ள வேண்டும், எந்த ஜாதியினரும் எந்த வர்ணத்திற்குள்ளும் நுழையலாம். ஏனென்றால், வர்ணம் நம்முடைய conscious decision. வர்ணம் நம்முடைய குணத்தைச் சார்ந்து நாம் முடிவெடுத்துக்கொள்வது. இதற்குப் பல ஆயிரக்கணக்கான சாஸ்த்திரப் பிரமாணங்களை என்னால் கொடுக்க முடியும்.
காமிக ஆகமம் தெளிவாச் சொல்கிறது… யார் வேண்டுமானாலும் தீக்ஷை எடுத்து, எந்த வர்ணத்திற்குள் வேண்டுமானாலும் நம்மை ஆட்படுத்திக்கொள்ளலாம் ஒரு ஸ்திரமான – நிலையான (stable) சமுதாயத்திற்கும், தொடர்ந்து specialization நடந்துகொண்டே இருப்பதற்கும் இந்த வர்ணாசிரம தர்மம் மிகப்பெரிய நல்ல காரணி.
சற்றேப் பொறுமையோடு மூளைச்சலவைக்கு ஆளாகாமல், நம்முடைய வரலாற்றை புரட்டிப் பார்த்தீர்களானால், வர்ணாசிரம தர்மம் ஒரு மிகப்பெரிய நேர்மையான, சமூகத்தை இனிமையாக, அமைதியாக, ஆனந்தமாக, சமூகநீதியோடு வாழ்வதற்காக நம் முன்னோர்கள் செய்து வைத்த சமூகக்கட்டமைப்பு என்பது மிகத்தெளிவாக நமக்குப் புரியும்.
ஆழ்ந்து கேளுங்கள், அதாவது நீங்கள் கேட்டிருக்கும் ஒரு ஒரு கேள்விக்கும் என்னால் ஆயிரக் கணக்கான சாட்சிகளை அளிக்க முடியும். காலத்தைக் கருதி இந்தக் கருத்துகளின் சாரத்தையும் சில சாட்சிகளையும் மட்டும் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
அடுத்ததாக, கிளிட்ஸ் சேனல் மூலமாக சமூகப் பிரபலங்கள் உங்களுடையக் கேள்விகளை அனுப்பியிருக்கிறீர்கள்.
திரு. இரவீந்தர் சந்திரசேகர், திரைப்படத் தயாரிப்பாளர் (film producer) அவர்கள் உங்களுடையக் கேள்விகளை அனுப்பியிருக்கிறீர்கள்.
திரு.இரவீந்தர் சந்தரசேகர் அவர்களை வணங்குகிறேன். திரு. ரவீந்தர் சந்தரசேகர் அவர்களுடைய கேள்வி… கைலாசா என்னும் தேசத்தை உருவாக்கி, ஈசனைப்போல் வாழ்ந்துகொண்டிருக்கும் நித்யானந்த மகரிஷி அவர்களுக்கு முதல் என் வணக்கம்.
வணக்கம் ஐயா.
என்னுடைய கேள்வி அவரிடம் என்னவாக இருக்க வேண்டுமென்றால், ஒருநாள் பொழுது இப்படித்தான் போகவேண்டுமென்ற ஆன்மிக வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்து, அந்த நாள் போக்கை, இறைவழிபாடு அல்லது preaching அல்லது Motivation இந்த மாதிரி ஒரு நாள் பூரா ஒரு டிசைனில், ஒருநாளுடையபொழுது 24 மணி நேரம் செலவு செய்யும் நீங்கள் நாளை ஒருநாள் என்னுடைய Regular routine போக்கில் இருந்து, புதிதாக ஒரு நாளை நான் வாழ்ந்துப் பார்க்க வேண்டும் என்றால், அந்த ஒருநாளில்… உங்களுடைய ஒரு நாள் நீங்கள் உங்களுக்காகப் புதிதாக ஒரு முழுநாள் வரை, இதுவரை செய்த செயல்களே இல்லாத ஒரு நாளாக என்னென்ன செய்வீர்கள் ஐயா? அது எப்படி இருக்கும் என்று 'என்றைக்காவது ஒருநாள் இப்படி நாம் இருக்கவேண்டும்' என்று அதற்காக ஒருநாள் ஒதுக்கவேண்டும் என்று என்றைக்காவது முயற்சி செய்திருக்கிறீர்களா?
திரு.இரவீந்தர் சந்திரசேகர் ஐயா அவர்களே, இந்தக் கேள்விக்கு விடையளிக்க வேண்டும் என்றால், I will have to give sneakpeak about my personal life. என்னுடையத் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு சின்ன sneakpeak, உண்மைகளை அப்படியேச் சொல்கிறேன் ஐயா. எப்படி இருக்கிறதோ அப்படியே சொல்கிறேன். ஒருவேளை ஒரு சிறிய A day in my life என்று வேண்டுமானால் ஒரு வீடியோ செய்து Upload செய்கிறேன். அது திரு. இரவீந்தர் சந்தரசேகருக்கு அர்ப்பணம். உங்களுக்காக அதை dedicate செய்கிறேன். ஒருநாள் என்னுடைய வாழ்க்கைமுறை என்ன, நான் எப்படி இருக்கேன், காலையிலேயே எப்படி எழுகின்றேன், எழுந்த உடனே என்ன செய்கிறேன், அதை வேண்டுமானால் ஒரு சின்ன ஒரு வீடியோ செய்து Upload செய்கிறேன் ஐயா.
என்னுடைய வாழ்க்கை, யாராலுமேக் கட்டாயப்படுத்தப்படாத, எந்தச் சூழலாலும் வடிவமைக்கப் படாத, என்னுடைய ஆன்மீக அனுபூதியிலிருந்து நான் வாழும் வாழ்க்கை ஐயா. இப்பொழுது அப்படியே என்னுடைய ஒருநாள் பொழுதை எப்படி வாழுகிறேன் என்று பார்த்தீர்களானால் ஒரே ஒரு நிமிடம்கூட, ஒரு விநாடிகூட எந்த stress-ஓ நேரமாகிவிட்டது, இதற்குப் போகவேண்டும், அது அடுத்து, இந்த appointment இருக்கு, இது இருக்கே என்ற எந்த Stressமே இல்லாத smooth ஆக, relaxedஆக, மிக இனிமையாக, Joyfullஆக, stress என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாத வாழ்க்கை ஐயா. எப்படி வாழுகிறேன் என்று வேண்டுமானால் ஒரு சிறிய gist, sneakpeak கொடுக்கின்றேன். ஒரு so you can understand.
காலையில் எழுந்து யோகா, உடம்பு என்று இருந்தால், keeping it active ,healthy. Not taking the body for granted - அதுதான் யோகா. யோகா என்றால் வேறு ஒன்றும் இல்லை. உடம்பு என்று இருந்தால் அதை நாம் பராமரிக்க வேண்டும். அதனால் யோகா பண்ணவேண்டும் என்றுகூட நான் என்னைக் கட்டாயப்படுத்திக் கொள்வதில்லை. அது இருக்கிறது, We can’t take the body for granted, so I do it. காலையில் எழுந்ததும் என் வாழ்க்கையோட முதல் பாகம் யோகா. யோகாவிற்குப் பிறகு என்னுடைய பூஜை. That’s my personal time with Paramashiva.
பரமசிவப் பரம்பொருளோடு என்னுடைய தனிப்பட்ட நேரம் மிகவும் ஆனந்தமாக, தளர்வாக அமர்ந்து - வேக வேகமாக அந்தமாதிரியெல்லாம் ஒன்னும் செய்யமாட்டேன் ஐயா. மிகவும் Relaxedஆக அமர்ந்து, என்னுடையப் பூஜைக்கு என்னென்ன வேண்டுமோ அது எல்லாவற்றையும் தயார் செய்து வைத்துக்கொண்டு, மெதுவாக மந்திரங்களைச் சொல்லி, இரசித்து, ருசித்து, இனிமாயாக, Relaxed ஆக பூஜை செய்வேன். பூஜை முடிந்த பிறகு, சமாதியில் அமர்ந்து இருப்பேன். அந்த நேரத்தில்தான் இந்த நிர்வாகரீதியானத் தீர்வுக் கண்டுபிடிக்க வேண்டிய சூழல்கள், இது எல்லாவற்றையும் கொண்டு வருவார்கள். சமாதியில இருந்தபடியே அவைகள் எல்லாவற்றிற்கும் தீர்வுகளை அளிப்பது, அதற்குப் பிறகு பக்தர்கள், அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கின்றப் பிரச்சனைகள் கேள்விகள் இதெல்லாம் அனுப்புவார்கள். அது எல்லாவற்றிற்கும் பதிலளிப்பது, தீர்வளிப்பது, ஆன்மிகரீதியாக அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச்செய்வது - இது எல்லாவற்றையும் செய்வேன் ஐயா. அதற்குப் பிறகு, இப்பொழுது இந்த ASK NITHYANANDA -AI என்ற ஒன்றை மேம்படுத்திக்கொண்டிருக்கின்றேன். நம்முடைய சனாதன இந்து தர்மத்தினுடைய எல்லா சாஸ்த்திரங்களையும் என்னுடைய அனுபூதியிலிருந்து மொழிபெயர்த்து, அவைகளை AI-க்குள் செலுத்துகின்றேன். யார் என்ன கேள்வி கேட்டாலும், அந்த சாஸ்த்திரங்களிலிருந்து என்னுடைய அனுபூதியின் மூலமாக விடையாக அளிக்கின்ற அந்த AI-க்கு வேலை செய்துகொண்டிருக்கின்றேன்.
அந்த சாஸ்த்திரங்களை மொழிப்பெயர்த்து, என்னுடைய அனுபூதியிலிருந்துப் பார்த்து, அந்த AI மாயைக்குள் சென்றுவிடாமல் அந்த AI -க்குப் பயிற்சிகொடுத்து ,அந்த AI-ஐக் கட்டமைக்கின்ற வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். அதனால் இப்பொழுது இந்த இவைகளை எல்லாம் செய்வதற்கே எப்படியும் இரவு 11-12 மணியாகிவிடும் ஐயா. அதற்குப் பிறகு என்னுடைய சமாதி. ஒரு நாளைக்கு ஒருவேளை உணவெடுத்துக்கொள்வேன். இதற்கிடையில் மாலை நேரத்தில் கொஞ்சம் walking போவேன். ஒரு 6 அல்லது 7 மணிக்கு walking சென்று, இந்தக் கைலாஸம் முழுவதும் கட்டுமானப்பணிகள் நடப்பதையெல்லாம், எங்கெங்கு என்னென்ன கட்டுமானங்கள் நடக்கிறது, இதையெல்லாம் சுற்றிப் பார்ப்பேன். அவை எல்லாம் பார்ப்பேன்.
மொத்தமாகப் பார்த்தீர்களானால், என்னுடைய மொத்த நாள் எங்கேயும் எந்த அழுத்தமோ (pressure) எந்தக் கட்டாயமோ இல்லாததனால், எனக்கு சோர்வோ, சலிப்போ (tiredness, boredom) எதுவுமே இல்லாததனால், அதாவது 'என்னுடைய வாழ்க்கையை யாரோ உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள், என்னைச் சுரண்டுகிறார்கள்' என்பது போன்ற எந்தக் கருத்தும் எனக்கு இல்லாததனால், நானே என்னுடைய வாழ்க்கையை எல்லோருடைய நன்மைக்காகவும் தியாகம் செய்ததனால், மற்றவர்கள் சனாதன இந்து தர்மத்தை வாழ்வதற்காக, அதாவது என் வாழ்க்கையை, எனக்குள் எல்லா நன்மையும் அளித்த பரமசிவ பக்தி, பரமசிவ ஞானம், பரமசிவ விஞ்ஞானம், இந்த பரமாத்வைதம் மற்றவர்களுக்கும் செல்ல வேண்டுமென்று, மற்றவர்களும் இதை அனுபவிக்க வேண்டுமென்று, 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று இதை மற்றவர்களுக்கும் அளிப்பதற்காக என் வாழ்க்கையை நானே தியாகம் செய்ததனால், என் வாழ்க்கை முழுவதுமே ஒரு இனிமையான வசந்தமாகவே இருப்பதனால், இப்பொழுது நான் வாழ்ந்கொண்டிருக்கின்ற Routine-இல் இருந்து மாறி இன்னொரு Routine செய்யவேண்டும் எனக்குத் தோன்றவில்லை ஐயா. அது ஒன்று.
இப்பொழுது இந்த Routine - ஐ நான் சொல்லும்பொழுது, இது மிக நீண்ட routine மாதிரி தெரிந்தாலும், மிக Sweet ஆக, humorous ஆக, இனிமையாக… அதாவது பரமசிவனை பற்றி சொல்லும்போது சொல்வார்கள், Easyly pleased – ஆசுதோஷன் என்று, பிறகு போலேநாத், innocent, simply pleased, மிகவும் சிறு விஷயங்களாலேயே ஆனந்தித்துவிடுகின்ற ஒரு innocent ஆன போலேநாத்-ஆக இருக்கின்ற, அது மாதிரியான ஒரு உணர்விலேயே நான் இருப்பதனால், அந்த மாதிரியான ஒரு உணர்வாகவே என் வாழ்க்கையை நான் கட்டமைத்துக் கொண்டேன். கடந்த ஒரு மணிநேர சத்சங்கத்தில் மிக ஆழமான, தீர்க்கமானக் கருக்த்துகளையெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தாலும், வரலாற்றைப் பற்றியும், வரலாற்றில் நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றியும் - இதை எல்லாம் சொல்லிக்கொண்டே வந்தாலும், அது சார்ந்து எந்த stress யும் எனக்குள் உருவாக்கிக்கொண்டதே கிடையாது ஐயா. உண்மை, இது நடந்தது, இதற்கு மேல என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வோம். அதனால் easily pleased ஆக இருப்பதனால், ஒரு innocent ஆன போலேநாத் மாதிரி innocent ஆக இருப்பதனால், மிகவும் ஜாலியாக சிரித்துக்கொண்டு, கிண்டலிடித்துக்கொண்டு, கதை சொல்லிக்கொண்டு, என்னைச் சுற்றி வாழ்பவர்களுடன் நானும் மிக இனிமையாக, நிம்மதியாக இருப்பேன்.
அதனால், எந்த விதமான என்னுடைய தினசரி routine -ம் ஒரு pressured ஆக நான் உணர்வதே இல்லை ஐயா. அது அன்று. அதனால் இதில் எதையும் மாற்றவேண்டும் என்றும் எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை நீங்கள் சொல்கிறீர்கள் இல்லை? 'ஒருவேளை மாற்ற வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்?' என்று, ஆழ்ந்து மீண்டும் மீண்டும் யோசித்தால், ஒருவேளை மாற்றவேண்டுமென்றால், என்ன செய்வேன் என்றால் அமைதியாக சமாதியில் அமர்ந்திருப்பேன்.
வேறு ஒன்றுமே, வேறு alternative மாதிரி எனக்கு எதுவும் தோன்றவே இல்லை. வேறு என்ன செய்வேன்? எழுந்து தினசரி நான் செய்கின்ற இந்தச் செயல்கள் எல்லாம் இல்லையென்றால், அமைதியாக என்னுடைய ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு, உண்மையில் என்னுடைய ஊஞ்சலில் இருந்துப் பார்த்தால்... ஒரு பக்கம் பார்த்தால் கடல் - இன்னொரு பக்கம் பார்த்தால் மலை. அதனால் இந்தக் கடலையோ அல்லது மலையையோ அமைதியாகப் பார்த்துகொண்டு சமாதியில் அமர்ந்திருப்பேன். எண்ணங்கள் இல்லாத, மனம் கடந்த பரமாத்வைத நிலையிலே சமாதியில் அமர்ந்திருப்பது வேண்டுமானால் என்னுடைய தினசரி நடவடிக்கையிலிருந்து எனக்கு ஒரு மாற்றாக இருக்கலாம். அவ்வளவுதான் ஐயா. என்னுடைய தினசரி நடவடிக்கைகள் எனக்கு பளுவாகவோ, சோர்வையோ, சலிப்பையோக் கொடுப்பதுபோல இல்லாததனால், என் தினசரி நடவடிக்கை எனக்கு vacationமாதிரிதான் ஐயா. என் வாழ்க்கையே எனக்கு vacation மாதிரிதான். Change of work is vacation - ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலையை மாற்றிக்கொண்டு செய்வதுதான், என்னைப் பொருத்த வரை எனக்கு vacation ஐயா.
அடுத்த கேள்வி..
திரு.தேவேந்திரன் அவர்கள் - News glitz சேனலினுடைய Chief editor கேட்டிருக்கும் ஒரு கேள்வி இந்துமதத்தில் என்னென்ன சீர்தருத்தங்களைச் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ஐயா உண்மையில், உண்மையை நேரடியாகச் சொல்கிறேன் ஐயா, சனாதன இந்து தர்மத்தில் திருத்துவதற்கு – சீர்திருத்துவதற்கு என்று ஒன்றுமே இல்லை ஐயா. நம்முடைய முன்னோர்கள், சனாதன இந்து தர்மத்தினுடைய அந்தப் பொற்காலத்தில் (golden period) எப்படி இருந்ததோ என்ன context -இல் நம் சனாதன இந்து தர்மத்தை நம் முன்னோர்கள் உருவாக்கினார்களோ, அந்த context மாறாமல் அதை அப்படியே இன்று நம்முடைய வாழ்க்கைக்கு பொருத்திக்கொண்டு மறுமலர்ச்சி செய்தாலே போதுமானது.
ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன், மற்ற நாடுகளுடைய வரலாறுகள் எல்லாம் காகிதங்களிலும் புத்தகங்களிலும் எழுதப்பட்டிருக்கும். நம்முடைய சனாதன இந்து தர்மத்தினுடைய வரலாறு கல்லில் எழுதப்பட்டிருக்கின்றது. நம்முடைய ஆலயங்களில் வடித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய ஆலயங்களில் இருக்கும் Massive ஆன அந்த creative art work> கொஞ்சம் நஞ்சம் ஆலயங்களா? அப்பா.. மிச்சம் இருப்பதே லக்ஷத்திற்கும் மேல் .இந்த ஆலயங்களில் இருக்கின்ற… அது மட்டும் இல்லை ஐயா, இது ஏதோ பிரமிடு மாதிரி ஏதோ அடிமைகள் செதுக்கிக் குவித்து வைக்கப்பட்டது கிடையாது. ஒவ்வொரு அங்குலமும் கலை வேலைப்பாடுகள், உருவாக்கும் திறனின் உச்சம். இந்த ஆலயங்கள்தான் நம்முடைய சனாதன இந்து நாகரிகத்தின் உருவாக்கும் திறன். நம்முடைய மெய்யியல், மெய்யியலைச் சார்ந்து நாம் மெய்யியல் அனுபூதியிலிருந்து வெளிப்படுத்திய அறிவுத் திறன், கலைத் திறன், உருவாக்கும் திறன் இது எல்லாவற்றினுடைய வெளிப்பாடுதான் நம்முடைய ஆலயங்கள்.
நம்முடைய உருவாக்கும் திறன், நம்முடைய ஆயக் கலைகள் 64 என்று சொல்வோம். அதாவது நம்முடைய இறை அனுபூதியிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட, இது எல்லாவற்றினுடைய வெளிப்பாடுதான் நம் ஆலயங்கள். நம் கோவிலில் இருக்கின்றத் திருமேனிகள், இறைவன்கள் - இவை எல்லாமே புனிதமானது மட்டுமல்லாது, அது நம்முடைய வாழ்க்கைமுறையின் வெளிப்பாடு. இதுதான் நம் சனாதன இந்து தர்மத்தின் உச்சத்தின் சாத்தியம். அது ஒன்று.
இரண்டாவது கோயிலுக்குச் செல்லும்போது, பல கோவில்களில் நம் தெய்வங்களுடைய… ஆதாவது ஆண் தெய்வங்களாக இருந்தால் மூக்கும், கையும் உடைக்கப்பட்டு, பெண் தெய்வங்களாக இருந்தால் மூக்கும், மார்பகமும் அறுக்கப்பட்டிருக்கின்ற திருமேனிகளை எல்லாம் பாருங்கள். அது நம் சனாதன ஹிந்து தர்மத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு சாட்சி.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்… ஒவ்வொரு படியாகப் புரிந்துகொள்ளுங்கள்.
உருவாக்கி வைத்தது சனாதன இந்து தர்மத்தின் மாட்சிமை. அதில் உடைக்கப்பட்டிருப்பது நம்மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கான சாட்சிகள். எவ்வளவுக் கொடூரமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறன என்பதற்கான சாட்சிகள். 2004 – 2005 ஆம் ஆண்டுகளில் நான் அமெரிக்காவில் வாஷிங்க்டன் டீசி-யில் இருக்கின்ற ஜுயிஷ் ஹோலோகாஸ்ட் (Jewish Holocaust) அருங்காட்சியகத்திற்குச் சென்றேன். அதைப் பாத்துவிட்டு வந்து உடனடியாக அமெரிக்காவில் இருக்கின்ற நம்முடைய இந்து பக்தர்கள் அவர்களையெல்லாம் ஒன்று திரட்டி, 'இது மாதிரி அமெரிக்காவில் இந்து ஹோலோகாஸ்ட் அருங்காட்சியம் செய்யவேண்டும்' என்று சொல்லி, அந்தத் திருப்பணியை, அந்தக் கருத்தை விதைத்து உருவாக்கி வைத்தோம்.
பரமசிவப் பரம்பொருளின் அருளாலே, இப்பொழுது அது மலர்ந்து நிஜத்திற்கு வருகின்ற நிலைக்கு வந்துவிட்டது. இப்பொழுது இருக்கின்ற அமெரிக்காவின் அதிபர் அதற்கான அனுமதியைக் கொடுத்திருக்கின்றார்கள். அது செயல் வடிவம் பெறுகின்றது. அது ஒரு பக்கம். தனியாக ஒரு Hindu Holocaust Museum அமெரிக்காவிலும், மற்ற நாடுகளிலும் செய்யவேண்டும் என்கின்ற செயலையும் செய்கின்றோம். அதுபோக, இந்த திருமேனிகள் உடைக்கப்பட்டு, நம் நாட்டிலே இருக்கின்ற ஒரு திருக்கோயிலுமே, இந்து ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம்தான் ஐயா.
இந்துக்கள் அனைவரும் புரிந்துகொள்ளுங்கள், இந்தத் திருமேனிகள் உடைக்கப்பட்டு, அதிலும் ஒரு சூக்ஷமும் இருக்கின்றது, ஆண் தெய்வத்தினுடையத் திருமேனியாக இருந்தால் மூக்கையும், கையையும் உடைப்பார்கள். பெண் தெய்வத்தினுடையத் திருமேனியாக இருந்தால் மூக்கையும், மார்பையும் அறுப்பார்கள். இந்த மாதிரி நின்று இருக்கின்ற எல்லா திருமேனிகளுமே நாம் எதிர்கொண்டத் தாக்குதலுக்கு சாட்சி. அதனால்தான் சொல்கிறேன், நம் எல்லாக் கோயில்களுமே ஒரு ஹோலோகாஸ்ட், இந்து ஹோலோகாஸ்ட் மியூசியம்தான். அடுத்தது, இதையெல்லாம் தாங்கிக்கொண்டும் நம் சனாதன இந்து தர்மம் நிற்கின்றது என்பதைத்தான், மிச்சம் இருக்கின்ற கோவில்கள் காட்டுகின்றன.
அதற்கடுத்ததாக, பல நாடுகளிலும் இந்தத் திருமேனிகளெல்லாம் முறையாக, புதியதாக உருவாக்கப்பட்டு, புதுப்புது ஆலயங்கள் அமைந்துகொண்டு பரவிக்கொண்டே இருப்பது, சனாதன இந்து தர்மம் உலகம் முழுவதும் பரவுகின்றது என்பதற்கு சாட்சி.
அதற்கடுத்தது, உலகம் முழுவதும் இருக்கின்றக் கோவில்களிலும் வந்து Graphitie மூலமாக நம்மை அவதூறு செய்து, தாக்குதல் செய்து, Hate speech செய்து, Hindu phobia-வையும், Hindu Mesia -வையும் உருவாக்கிக்கொண்டிருக்கின்ற, பரப்பிக்கொண்டிருக்கின்ற இவர்கள்… இன்னமும் இந்துமதத்தின் மீது தொடர்ந்து அவதூறு நடக்கின்றது, தொடர்ந்துத் தாக்குதல் நடக்கிறது என்பதற்கு சாட்சி.
நம்முடைய ஆலயங்களே நம்முடைய மொத்த வரலாற்றின் பெட்டகங்கள். அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்து மதத்திலே சீர்திருத்துவதற்கு ஒன்றுமே இல்லை ஐயா. சீர்திருத்தம் எல்லாம் செய்ய வேண்டியில்லை. சீர்திருத்தம் செய்கின்ற அளவிற்கு நமக்கெல்லாம் யாருக்கும் தகுதியோ, அறிவோ எதுவும் கிடையாது. நம் முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ, context மாறாமல் அதைச் சரியாகப் புனரமைப்பதுதான் நாம் செய்யவேண்டிய திருப்பணி. நாம் செய்யவேண்டிய ஒரே திருப்பணி சனாதன இந்து தர்மத்தைப் புனரமைப்பது தானே தவிர, சீர்திருத்துவது அல்ல. சீர்திருத்தம் என்கின்றப் பெயரால் உள்ளே வருகின்ற எல்லாருமே Criptos தான். சனாதன இந்து தர்மத்தை அழித்து, அதை அருங்காட்சியகத்துக்குள் தள்ளுவதற்கான முயற்சி செய்பவர்கள்தான் 'சீர்திருத்தம்' என்கிற ஒரு Indirect - ஆன வார்த்தையை உபயோகிக்கிறார்கள். அதுதான் உண்மை.
அடுத்தக் கேள்வி திரு.தேவேந்திரன் அவர்கள் கேட்டிருக்கிறீர்கள், அனைத்து ஜாதி அர்ச்சகர் திட்டம் குறித்த உங்கள் பார்வை என்று..
ஐயா அது வேறு நாட்டினுடைய உள்ளாட்டு விவகாரம். உள்ளாட்டுப் பிரச்சனைகளைப் பற்றியும் கருத்து சொல்லமாட்டேன். அதனால் இந்த 'அனைத்து ஜாதி அர்ச்சகர் திட்டம்' என்பது இந்தியாவினுடைய, தமிழ்நாட்டினுடைய உள்நாட்டு விவகாரம் என்பதனால், அதில் எந்தக் கருத்தும் சொல்லமாட்டேன். சனாதன இந்து தர்மம் பற்றி எதை வேண்டுமானாலும் கேளுங்கள், சொல்லுகின்றேன். ஆனால் அரசியல் கலப்பு மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் என்கின்ற நிலையில் மாறிப்போன எந்தப் பிரச்சனையிலும் நான் கருத்து சொல்வது சரி அல்ல. சரியாக இருக்காது.
இப்பொழுது ஒருவேளை நான் இந்தியாவிலேயே இருந்திருந்தேன் என்றால், நான் அப்போ அந்தப் பிரச்சனைகளைப் பற்றி கருத்துச் சொல்வது சரியாக இருக்கலாம். தார்மீகமாக சரி. இப்பொழுது, இந்தியாவினுடைய உள்ளாட்டுப் பிரச்சனைகள், தமிழ்நாட்டினுடைய உள்ளாட்டு விவகாரங்களைப் பற்றி நான் கருத்து சொல்வது தார்மீகமாகவும் சரியில்லை, சட்டரீதியாகவும் சரியில்லை. அதனால் கருத்து சொல்லமாட்டேன்.
அடுத்தது, ஐயா தேவேந்திரன் ஐயா நீங்கள் வந்து கைலாஸத்தில் எப்படி அர்ச்சர்கள் நியமிக்கப்படுக்கிறார்கள்? எப்படி இருக்கிறது? என்று கேள்வி கேட்டீர்களென்றால், அதற்கு வேண்டுமானால் பதில் சொல்றேன். ஆனால் 'அனைத்து ஜாதி அர்ச்சகர் திட்டம்' என்று தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒரு திட்டத்தைப் பற்றி, தமிழ்நாட்டின் விவகாரங்களைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன்.
அடுத்த கேள்வி, அம்மா சுஜாதா பாபு அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள்.
அம்மா சுஜாதா பாபு உங்களை வணக்குகிறேன்.
அவர்களுடைய கேள்வி.. ஐயா வணக்கம் உங்களிடம் அரசியல் சார்ந்தோ அல்லது நடைமுறை வாழ்க்கை சார்ந்தோ அல்லது ஆன்மிகம் சார்ந்தோ எந்தக் கேள்வி கேட்டாலுமே நீங்கள் சொல்கின்ற பதிலில், ஒரு Hasyam content - நகைச்சுவை content இல்லாமல் நீங்கள் எதுவுமே சொல்வது இல்லை. அது எல்லோரும் எற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த முதிர்ச்சி உங்களுக்கு ஆன்மீகத்தில் வந்ததா? அனுபவத்தில் வந்ததா? சொல்லுங்களேன்.
சுஜாதா பாபு அம்மா அவர்களே.. 'ஆன்மீகத்தில் வந்ததா? அனுபவத்தில் வந்ததா?' என்று கேட்கிறீங்கள். ஆன்மிகம் அனுபூதி - அனுபவமாக மாறியதால் வந்தது. அதாவது ஆன்மீக அனுபூதி உள்ளுக்குள்ளே மலர்ந்து, அந்த அனுபூதியை மக்களுக்கு அளிக்கும்பொழுது, மக்களோடு ஏற்படுகின்ற அனுபவம், இந்த இரண்டும் கலந்ததனால் வந்தது.
ஒரு விஷயம் அம்மா, உலகத்தில் கவலைப்படுகின்ற அளவிற்குப் பெரிய விஷயம் எதுவுமே இல்லை அம்மா. ஏனென்றால், கவலைப்படுவதனால் நம்முடைய குறிக்கோளை நோக்கி செய்யவேண்டியதை நாம் செல்லுகின்ற வேகம் உயரப்போவதே இல்லை. அதாவது... நாம் செய்ய வேண்டியதை, கவலைப்படுவதனால் செய்து முடிக்கப் போவதே இல்லை. உண்மையில் பார்த்தீர்களானால், கவலைப்படுவது ஒரு காரில் சென்றுகொண்டிருக்கும்பொழுது பிரேக்கை அழுத்துவதுபோன்றது. பிரேக்கை அழுத்துவதனால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கச் சென்றுவிடுமோ? கிடையாது! பிரேக்கிற்கு வேறு உபயோகம் இருக்கின்றது. அது வேறு விஷயம். ஆனால் நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளை, நோக்கத்தை அடைவதற்குக் கவலை எந்த விதத்திலும் உபயோகமாகாது. அதனால் கவலைப்படுகின்ற அளவிற்கோ, கஷ்டப்படுகின்ற அளவிற்கோ வேறு எதுவுமே இல்லை. அதனால் கஷ்டப்பட்டு நாம் புடுங்குகின்ற ஆணி எல்லோமே தேவையில்லாத ஆணிதான். அதனால் அம்மா இந்த ஒரு சிறிய உதாரணத்தைப் புரிந்துகொள்ளுங்கள், உண்மையில தன்னை மிகவும் Light ஆக,light personality – ஆக வைத்துக்கொண்டு ஜோவியலாக, கேஷுவலாக, இனிமையாக, ஜாலியாக ஒரு காமெடியன் மாதிரி வாழ்பவர்கள்தான் நிஜமான வாழ்க்கையில் ஹீரோவா சாதிக்கின்றார்கள்.
தன்னை ஹீரோ என்று தானே நினைத்துக்கொண்டு, இறுக்கமாக Constipated முகத்தை வைத்துக்கொண்டு, தன்னை ஹீரோ என்று ஒரு பெரிய Pedestal இல் தன்னைத்தானே வைத்துக்கொண்டு, அந்த அகங்காரத்தோடேயே இயங்குபவர்கள் நிஜ வாழ்க்கையில் காமெடியன் மாதிரிதான் இருப்பார்கள். எல்லாரும் அவர்களை காமெடியன் மாதிரித்தான் பார்ப்பார்கள், காமெடிப் பீஸாகத்தான் போவார்கள். ஆனால் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் இனிமையாகவும், Joyfullஆகவும், casualஆகவும், ஒரு காமெடியன் மாதிரி relaxedஆகவும் Enjoy செய்துகொண்டு வாழ்பவர்கள், நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக மாறிவிடுகின்றார்கள் அம்மா. இதுதான் உண்மை. அதனால் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் ஜாலியாக அணுகுங்கள். முதல் தேவை...எந்தப் பிரச்சனையாக, எந்தச் சூழலாக இருந்தாலும், அமைதியோடும், சாந்தத்தோடும், ஆனந்தத்தோடும், இனிமையோடும், ஒரு இனிமைத்தன்மையுடனும் அணுகுங்கள். ஜெயித்துவிடலாம். அப்பொழுது மட்டும்தான் நாம் முழுமையாக ஒன்றிணைந்து இயங்குகிறோம், செயல்படுகிறோம். அதனால் கவலைப்படுகின்ற அளவிற்கு உலகத்தில் எதுவுமே இல்லை. தன்னைக் காமடியனாக உணர்ந்து, சந்தோஷமாக, ஜாலியாக வாழ்பவர்கள், நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக சாதித்துவிடுவார்கள். அடைந்துவிடுகின்றார்கள்.
தன்னை ஏதோ பெரிய ஹீரோ என்றும், அகம்பாவத்தினால், அகங்காரத்தினால் தன்மை ஏதோப் பெரிதாக நினைத்துகொண்டு, Consitipatedஆக, Stressலேயே வாழ்பவர்கள், வாழ்க்கையில் Loosers ஆகத்தான் போகின்றார்கள். மற்றவர்களால் சாதாரணக் காமெடிப் பீஸாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். இதுதான் உண்மை அம்மா.
இன்னும் நிறைய பிரபலங்களுடைய கேள்விகளும் இருக்கின்றன. தொடர்ந்து பார்ப்போம். திரு.தேவேந்திரன் அவர்கள், அடுத்தக் கேள்வி கேட்கிறீர்கள்…
ஒரு காலத்தில் கோவிலுக்குள்ளேயே வராதீர்கள் என்றார்கள், அந்த நிலைமை மாறிவிட்டது, இப்பொழுது கோயிலுக்குள் வாருங்கள், ஆனால் கருவரைக்குள் வராதீர்கள் என்கிறர்கள். அந்த அந்த நிலைமையும் மாறுமா? மாறவேண்டுமா?
ஐயா மீண்டும்… ஐயா ஞானசம்பந்தர் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டு வாழ்ந்தவர். ஞானசம்பந்தப் பெருமான் திருநீலகண்ட யாழ்ப்பானரையும், அவருடைய மனைவியையும் எப்போதும் தன்னுடன் அவர் சென்ற எல்லா ஆலயங்களுக்கும் அழைத்துச் சென்று இருக்கின்றார்.
நீங்கள் 'நந்தனார் நந்தனார்' என்று சொல்கிறீர்களே அந்தக் கதையில், சினிமாவைப் பார்த்துட்டு நந்தனார் கதையை வைத்துக்கொண்டு நீங்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உண்மையான நந்தனாருடையப் புராணத்தை - சரித்திரத்தை சேக்கிழார் பெருமான் எழுதியிருக்கின்றார். அதை ஒருமுறைப் படித்துப் பாருங்கள் ஐயா. எங்கையுமே இந்த சினிமாவில் வருகின்ற அந்த பிராமண எஜமானர் கதாப்பாத்திரமே இல்லை. 'சிதம்பரம் போக வேண்டாம்' என்று தடுக்கின்ற நந்தனார் படத்திலே வருகின்ற பிராமண எஜமானர் கதாப்பாத்திரமே, சேக்கிழார் எழுதியிருக்கின்ற உண்மையான நந்தனாருடைய சரித்திரத்தில் இல்லை.
இராமானுஜர் எல்லோரையும் ஆலயங்களுக்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாது, எல்லோருக்கும் வைணவத்தை அளித்திருக்கின்றார். ஆழ்ந்துப் பார்த்தீர்களானால் நீங்கள் கேக்கின்ற இந்தக் கேள்வி, பல தவறான முடிவுகளை வைத்து, தவறான முடிவுகளைச் சார்ந்து நீங்கள் சொல்லுகின்ற விடையாகத்தான் நான் பார்க்கிறேனேத் தவிர, இது கேள்வியாக நான் பார்க்கவில்லை.
உண்மையில் நீங்கள் கேள்வி கேட்டால் நான் பதில் சொல்வேன், நீங்கள் பதில்களை எடுத்து வந்து சொன்னால், அந்த பதில்களை நான் கேள்வி கேட்பேன். இப்பொழுது நீங்கள் சொல்லியிருப்பது பதில். அதை நான் கேள்விதான் கேட்கவேண்டும்.
கோவிலுக்குள் வராதீர்கள் என்று யார் சொன்னார்கள் ஐயா? கிடையாது.
கருவரைக்குள் வராதீர்கள் என்று யார் சொல்கிறார்கள் ஐயா? கிடையாது.
எந்தந்த ஆலயங்களை அதை உருவாக்கியவர்கள் எந்தந்த காரணத்திற்காக எவ்வாறு உருவாக்கியிருக்கிறார்களோ, அந்த ஆகமம், அந்தப் பத்ததி, அந்த முறைப்படி அவை அவை இனிமையாக இயங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.
அடுத்தது R.K சுரேஷ் அவர்கள்… திரு. R.K சுரேஷ் அவர்களை வணங்குகிறேன்.
நீங்கள் ஒரு கேள்வி அனுப்பியிருக்கிறீர்கள், பொய் என்றால் என்ன? வதந்தி என்றால் என்ன? உங்களைச் சுற்றி வதந்தி - பொய்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பொய் உண்மையைவிட மிகவும் வலிமையாக இருக்கின்றது. அதையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள் இதனுடைய அர்த்தம் ஒரு அளவிற்குத் தெரியும், ஆனால் சுவாமிஜி அளவிற்கு எனக்குத் தெரியாது.
R.K. சுரேஷ் அவர்களை வணங்குகிறேன், இந்த கேள்விக்கு பதில் கேட்டுக்கொள்ளுங்கள்.. இது உங்களுக்கு மட்டுமல்ல பொதுத்தளத்தில் இயங்குகின்ற எல்லோருக்குமே இந்த பதில் உபயோகமாகும் என்று நினைக்கிறேன்.
'வதந்தி' என்றால், உங்களைப்பற்றி மற்றவர்கள் சந்தேகப்படுகின்ற அளவிற்கு ஒரு தவறான செய்தியைப் பரப்புவது வதந்தி. உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு கொலை செய்துவிட்டதாகச் செய்தி பரப்புவது வதந்தி. ஆனால் அதையே கொஞ்சம் ஆழ்ந்து home work செய்து, வேற யாரோ கொலை செய்த ஒரு சடலத்தை எடுத்து, நீங்கள் செய்ததுபோலக் கட்டமைத்து, பொய்யான evidences> witnesses - இந்த மொத்தத்தையும் உருவாக்கி, எல்லோரையும் 'அந்தக் கொலையை நீங்கள்தான் செய்தீர்கள்' என்று convince செய்துவிடுவதுதான் பொய். இதுதான் வதந்திக்கும் பொய்க்கும் இருக்கின்ற வித்தியாசம்.
'வதந்தி' உங்களைப் பற்றி ஒரு தவறான சந்தேகத்தைக் கிளப்பிவிடுவது. 'பொய்' உங்களைப் பற்றி ஒரு தவறானக் கருத்தை, பொய்யான ஆதாரங்களை உருவாக்கி, தவறான ஆதாரங்களை உருவாக்கி நிரூபிக்க முயற்சிப்பது. மற்றவர்களை convince செய்துவிடுவது. இதுதான் பொய். இந்தப் பொய்க்கும் வதந்திக்கும் இருக்கும் வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா.
அடுத்தது நீங்கள் கேட்கிறீர்கள், 'பொய் உண்மையைவிட வலிமையாக இருக்கிறது என்று.
ஐயா, ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், மிகவும் Practicalஆக, down to earth உங்களுடையச் சூழலிலிருந்து இதற்கான விடையை அளிக்குறேன் கேட்டுக்கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்களைப் பற்றி ஒரு பொய்யைப் பரப்பும்பொழுது, அந்தப் பொய்யைக் கேட்பவர்கள் உங்களைப்பற்றி ஒரு தவறான முடிவிற்கு வந்து, உங்கள் வாழ்க்கையில் அவர்கள் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ, அந்த சம்பந்தத்திலெல்லாம் மிகப்பெரிய பாதகம் உண்டாகும். உதாரணத்திற்கு உங்களுடைய நண்பர்கள் உங்களை விட்டு விலகுவார்கள், உங்களுடைய ஆதரவாளர்கள் உங்களை விட்டு விலகுவார்கள், நீங்கள் எங்குச் சென்றாலும் உங்களை பற்றிப் பரப்பப்பட்ட பொய்யை, 'அது பொய்' என்று நிரூபித்துவிட்டு, அதற்குப் பிறகுதான் நீங்கள் உறவுகளையே ஆரம்பிக்க இயலும். இது மாதிரியான இந்தப் பல்வேறுக் கஷ்டங்கள் உங்களுக்கு உருவாக்குகின்றது இல்லையா? அந்தக் கஷ்டங்களிலே அந்தச் சூழல்களிலே 'நீங்கள் அழிந்து விடுவீர்கள்' என்கின்ற எதிர்பார்ப்புதான் உங்களைப் பற்றிப் பொய்யையும் வதந்தியையும் பரப்புபவர்களுடைய நோக்கம். நீங்கள் கஷ்டப்பட்டீர்கள் என்றால் அது அவர்களுக்கு வெற்றி.
இந்த மாதிரி சமூகத்தில் இருப்பவர்கள், உங்ககளைப் பற்றி எதிர்மறையான முடிவெடுத்து, உங்கள் வாழ்க்கையில் உங்களுடைய நோக்கத்தை, உங்கள் வளர்ச்சியைத் தடுப்பார்கள் என்று உங்கள் எதிரிகள் எதிர்பார்ப்பதனால்தான் பொய்யைப் பரப்புகின்றார்கள். அது ஒன்று. நீங்கள் அதைப் பார்த்து பயப்படுவீர்கள் என்பதுதான் அவர்களுடைய பலம். அது இன்னொன்று.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். Practicalஆக, நிதர்சனமாகப் பார்த்தீர்களானால், உங்களுடைய வாழ்க்கையில் உங்களுடைய நோக்கத்தை furtherசெய்து நீங்கள் செயல்படுவதற்கு எங்கெல்லாம் உங்களைப்பற்றிப் பரப்பப்பட்ட வதந்தியும், பொய்யும் தடையாக இருக்கிறதோ, அங்கெல்லாம் கொஞ்சம் உங்களுடைய வேலையை அதிகமாக்கி, கடினமாக உழைத்து அவர்களுக்குப் புரிய வைத்து, சந்தேகங்களைக் கேள்விகளைப் புரியவைத்து, தைரியமாக செயல்படத் துவங்கினீர்களானால், இந்த பொய்யும் வதந்தியும் உங்களைப் பொசுக்காது, நசுக்காது.
இந்த பொய்யும் வதந்தியும் உங்களைப் பொசுக்கவும் நசுக்கவும் முடியவில்லை என்பது உங்களுடைய எதிரிகளுக்குத் தெரிந்தாலே அவர்கள் பொசுங்கிப் போவார்கள், நசுங்கிப் போவார்கள். இதுதான் உண்மை ஐயா.
அதனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள், பொய்யோ - வதந்தியோ - நான் சத்தியத்தில் நிலைபெற்றிருப்பேன். உண்மையினுடைய சக்தியைவிட பொய்யினுடைய சக்தி வலிமையாக இருக்கிறது என்ற நினைப்பதே பொய். அது உங்களுக்குள் திணிக்கப்பட்ட சுய-சந்தேகம், சுய-வெறுப்பு, சுய- மறுப்பு (Self-doubt, self-hatred, self-denial). SDHD என்று சொல்வேன். அதாவது உங்களைப்பற்றி ஒரு பொய்யையோ வதந்தியையோ சொல்லி, மற்றவர்களை நம்ப வைத்துவிடுவது ஒரு பக்கம் என்றால், உங்களுக்குள்ளேயே ஒரு பலவீனத்தை.. ஐயோ இப்பொழுது மற்றவர்களெல்லாம் நம்பிவிட்டார்களே, இதற்குமேல் எப்படி நான் இவர்களோடு வாழ்வேன், நான் எப்படி வேலை செய்வேன், எப்படி செயல்படுவேன், என் வாழ்க்கை என்ன ஆகும்?' என்று உங்களுக்குள்ளேயே ஒரு பலவீனத்தை உருவாக்குவது. அதுதான் உங்கள் எதிரிகளின் வெற்றியாக மாறிப்போகும்.
அதை அனுமதிக்காதீர்கள். அந்த பலவீனம்தான், பொய் உங்களுடைய சத்தியத்தைவிட, உங்களுடைய உண்மையைவிட வலிமையானது' போன்று உங்களுக்கு ஒரு மாயையை, உங்களுக்கு ஒரு பலவீனத்தை உருவாக்கிக் காட்டுகின்றது. உண்மையில் பொய் உண்மையைவிட வலிமையானது அல்ல! உங்களுக்குத் தேவையே சிறிது… மிகவும் சிறிது.. எக்காரணத்தைக் கொண்டும் எந்தப் பொய்யாலும் வதந்தியாலும் மற்றவர்கள் நம்ப வைக்கப்பட்டாலும், அந்த பொய்யும் வதந்தியும் என்னை பாதிக்க நான் விடமாட்டேன்!
ஐயா வெளியிலிருந்து சூழ்நிலைகள் எப்படி வருகிறது என்பது உங்கள் கையில் இல்லை. ஆனால் உள்ளே நீங்க அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்து உங்கள் கையில்தான் இருக்கிறது. அதனால் உங்களைப் பற்றி பரப்பப்படும் பொய்களும் வதந்திகளும், மற்றவர்களை வேண்டுமானால் உங்களுக்கு எதிராகத் திருப்பலாம். ஆனால் அவைகள் உங்களையே நம்ப வைத்து, உங்களை உங்களுக்கு எதிராகத் திருப்பிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். என் வாழ்க்கையில் இதுதான் என்னுடைய வெற்றிக்கான முதல் காரணம். எத்துனைப் பொய்யை, வதந்தியையைப் பரப்பினாலும், உலகத்தையே convince செய்தாலும், பரமசிவன் அருளாலே… என்னை என்னுடைய எதிரிகளால் convince செய்யவும் முடியவில்லை, பலவீனப்படுத்தவும் முடியவில்லை.
ஐயா, இன்னொரு சிறிய உதாரணம் கொடுக்கின்றேன், 160 நாடுகளில் இந்த ஆன்மிக இயக்கத்தைத் துவங்கி, பல்லாயிரக்கணக்கான State mens, Parlimentarians - அரசியல் தலைவர், ஆன்மிகத் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், இவர்கள் எல்லோரோடும் உறவுகளை ஏற்படுத்தி, தூதரகரீதியிலான உறவுகளை எல்லாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன் ஐயா. இது எல்லாவற்றிலும் நான் எதிர்கொள்ளாததை விடவா நீங்கள் எதிர்கொண்டிருக்கப் போகிறீர்கள்?
அதனால் என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன், இந்த ஒரு சின்ன சத்தியத்தை உள்வாங்கிக்கொள்ளுங்கள் ஐயா. என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன், உங்களைப் பற்றிப் பரப்பப்பட்ட பொய்யையும் வதந்தியையும் உண்டுவிட்டு, அந்தக் கருத்துகளோடு உங்களை வந்துப் பார்ப்பவர்கள் அல்லது நீங்கள் யாராவது ஒருவரைச் சென்றுப் பார்க்கும்போது, அந்தக் கருத்துகளை உங்கள் முன்னால் வைப்பவர்களிடம், அதை தெளிவுப்படுத்தவதற்கானச் செயலை மட்டும் சோர்வடைந்துவிடாமல், கவலைப்படாமல் தொடர்ந்து செய்யத் துவங்கினீர்களானால், ஒரு இரண்டு மூன்று மாதத்தில், இவர்கள் எல்லாருடைய கேள்விகளுக்கும் உங்களால் பதில் சொல்ல முடிவது மட்டுமில்லாமல், இந்த எந்த வதந்தியாலும் பொய்யாலும் நீங்கள் நொடித்துப் போகமாட்டீர்கள், பலவீனமாக மாட்டீர்கள் என்று உங்கள் எதிரிக்குக் காட்டிவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் அதற்குமேல் வெற்றிதான். உங்களைச் சுற்றிப் பரப்பப்படும் பொய்களாலும் வதந்திகளாலும் ஏற்படுகின்ற வலி தாங்கும் வலிமைதான் ஒரு தலைவனுக்கு வலிமை ஐயா. அதுதான் ஒரு தலைவனுக்கு வலிமை!
இன்னொன்று, பொய்கள் வதந்திகள் உருவாகாமலேயே ஒரு மனிதன் பொதுதளத்திலே இயங்க வேண்டும் என்றால் அது சாத்தியமே இல்லை. அது எப்படி சாத்தியம் என்று சொல்கிறீர்கள்? என்ன எதிரிகளே இல்லாமல் வாழ்ந்தவிட முடியும் நினைக்கிறீர்களா? கிடையாது!
எதிரிகள் இல்லாமல் வாழ்வது சாத்தியம் இல்லை. ஆனால் எதிரிகளால் சாய்க்கப்படாத சக்தியோடு வாழ்வது சாத்தியம். அதனால் பொய்யோ வதந்தியோ, உங்களைப் பற்றி எழுப்பப்படும் பொய்யோ வதந்தியோ - மற்றவர்களை convince செய்வது எப்படியோ, ஆனால் உங்களை அது பலவீனமாக்கிவிடாமல், உங்களை அது convince செய்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுதான் வெற்றியின் இரகசியம், தலைமைப்பண்பின் இரகசியம். இது வந்து உங்களுக்கு மட்டுமல்ல ஐயா, சமூக செயல்பாட்டாளர்கள் எல்லோரும், எந்தத் துறையில் சமூக செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தாலும், அது ஆன்மீகம், கலை, பொருளாதாரம், அரசியல், நீதி, காவல் என எந்தத் துறையை எடுத்தாலும், எந்தத் துறையில் சமூக செயல்பாட்டாளர்களாக இருந்தீர்களானாலும், எந்தத் துறையில் சமூக செயல்பாட்டாளராக நீங்கள் இருந்தாலும், பொய்யும் வதந்தியும் இயற்கை. அது நமக்குள் பலவீனத்தை ஏற்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்வதுதான் தலைவனின் தன்மை. ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய அடிப்படை தகுதி.
திரு.தேவேந்திரன் அவர்களுடைய அடுத்த கேள்வி, திரு.தேவேந்திரன் அவர்கள் அடுத்த ஒரு கேள்விக் கேட்கிறீங்கள்… ஜாதி ஏற்றத்தாழ்வுகளை அல்லது அதன் வீச்சை நீங்கள் எப்போதாவது உணர்ந்துள்ளீர்களா?
இப்பொழுதுதான் எல்லாரும் முழுமையாக, கூர்மையான கவனத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பதில் - இந்த பதில். சாதி ஏற்றத்தாழ்வுகளை அல்லது அதன் வீச்சை நீங்கள் எப்போதாவது உணர்ந்துள்ளீர்களா?
திரு.தேவேந்திரன் அவர்களே, 'ஆம்' என்றோ 'இல்லை' என்றோ இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க மாட்டேன். 'உணர்ந்து உள்ளேன்' என்றும் சொல்லமாட்டேன் 'உணரவில்லை' என்றும் சொல்ல மாட்டேன். ஒருவேளை உணர்ந்திருந்தாலும், சனாதன தர்மத்தை சாதி ஏற்றத்தாழ்வு எனும் கருத்தைப் புகுத்தி அழித்துவிட நினைக்கின்ற சனாதன தர்ம விரோதிகளின் கையில், ஒரு நாளும் ஆயுதமாக மாற மாட்டேன்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் - அதன் வீச்சையும் நான் உணர்ந்து உள்ளேன் என்றும் சொல்லமாட்டேன், உணரவில்லை என்றும் சொல்லமாட்டேன். ஒருவேளை உணர்ந்திருந்தாலும், சனாதன இந்து தர்மத்தை அழிப்பதற்காக இதை ஒரு கருவியாக உபயோகப்படுத்த நினைக்கும் அரக்கர்கள், இராட்சதர்கள், சாத்தான்களின் கையில் கருவியாக ஒரு நாளும் மாறமாட்டேன். இது ஒரு மிகப்பெரியப் பிரச்சனை. சனாதன இந்து தர்மத்தை அழிக்க நினைப்பவர்கள், எப்படியாவது என்னை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கான ஒரு ஆயுதமாக கருவியாக நான் மாறிவிடமாட்டேனா என்று மிகவும் முயற்சித்தார்கள், முயற்சிக்கின்றார்கள். ஆனால் ஒரு நாளும் சனாதன இந்து தர்மத்திற்கு பங்கம் செய்ய முயற்சிக்கும் இராக்ஷஸ சாத்தான் கும்பலின் கையில் கருவியாக மாறமாட்டேன்.
அடுத்தது, ஒருவேளை இந்த வீச்சை நான் உணர்ந்திருந்தாலும், கட்டெறும்பையும், செவ்வெறும்பையும் சற்றே அமைதிக்கு வரவழைத்து, அதற்குள் பேசி 'நம்மைக் குலுக்கிக் கொட்டியவன்தான் நம் விரோதி' என்பதை அவைகளுக்குப் புரிய வைத்து, 'நாம் ஒருவருக்குள் ஒருவர் அடித்துமாய்வது, நம் விரோதியின் நோக்கத்தைப் பூர்த்திசெய்யும் வேலையாக மாறிவிடும். அதனால் அதை நாம் செய்யக்கூடாது' என்று புரிய வைத்து சுமூகமாக்கும் முயற்சியை மட்டும்தான் செய்வேனேத் தவிர, சாத்தான்கள் கையில் ஆயுதமாக மாறமாட்டேன்.
அடுத்தது திரு.மோஹன் வைத்யா அவர்கள் கேட்டிருக்கின்றீர்கள்… திரு.மோஹன் வைத்யா.. 'சுவாமிஜி வணக்கம்'
ஐயா மோஹன் வைத்யா உங்களை வணங்குகிறேன்.
நாங்கள் எப்பொழுது கைலாஸத்திற்கு வரவேண்டும், கைலாஸத்திற்கு வருவதற்கான Formalities என்ன? என்று கேட்கிறீர்கள். அதாவது உங்கள் கேள்வியைப் படிக்கிறேன்.. நான் மோஹன் வைத்யா, சென்னையிலிருந்து உங்களுடைய இடத்துக்கு நாங்கள் வரவேண்டும். உங்களுடன் நாங்கள் இருக்கவேண்டும் என்று நினைத்தால், அதற்கு என்ன Formalities என்று கொஞ்சம் சொன்னீர்களென்றால் நன்றாக இருக்கும். ஏனென்றால் எங்களுக்கு வழி தெரியவில்லை, எப்படி வரவேண்டும் என்ன செய்ய வேண்டும்? அதற்குக் கொஞ்சம் நல்ல வழி சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
ஐயா திரு.மோஹன் வைத்யா அவர்களே உங்களை வணங்குகின்றேன், முதலில் கைலாசத்திற்கு வரவேண்டும் என்று நினைப்பவர்கள்.. அதாவது இரண்டு வகையினர், நிரந்தரமாக வந்து கைலாஸத்தில் செட்டில் ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லது ஒரு வாரம் சுற்றுலாவாசிகள் மாதிரி வந்து பார்த்துவிட்டுப் போகவேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லது ஒரு மூன்று மாதம், ஆறு மாதம் இங்குத் தங்கியிருந்து இந்த வாழ்க்கைமுறையைப் பார்த்து, இங்கு இருந்துதான் பார்க்கலாமா? முயற்சி செய்துப் பார்க்கலாமா அல்லது முடியவில்லையென்றால் திரும்பிச் சென்றுவிடுலாம், இந்த மாதிரி எல்லா வகையிலும் இருப்பவர்களுக்கும், நீங்கள் இதில் எந்த வகையினராக இருந்தாலும், ஒரு மாதம் 'பரமசிவ சேனா' என்கின்ற நிகழ்ச்சியை உலகம் முழுவதிலும் நடத்திக்கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலிருந்து கடைசி தேதிவரை முப்பது நாள் நிகழ்ச்சி. அமெரிக்காவில் லாஸ் ஏன்ஜலிஸில் நடக்கிறது, கனடாவில் நடக்கிறது. டொரண்டோவில் நடக்கிறது, மலேஷியாவில் நடக்கிறது, க்ரெனடாவில் நடக்கிறது, ஆப்பிரிக்காவில் நடக்கிறது, ஈக்வெடாரில் நடக்கிறது, இந்தியாவில்… நீங்கள் இந்தியாவிலிருந்துதான் இந்தக் கேள்வி கேட்பதனால், இந்தியாவில் காசியில் நடக்கின்றது, சேலத்தில் நடக்கிறது, ஐதராபாத்தில் நடக்கிறது. இந்தியாவில் இருக்கின்ற ஏதாவது ஒரு கைலாஸாவில் - கைலாஸா காசி, கைலாஸா சேலம், கைலாஸா ஐதராபாத் இங்கு ஏதாவது ஒரு இடத்திற்கு நீங்கள் செல்லலாம். அந்த முகவரி வேண்டும் என்று நினைத்தீர்களானால் கூகுளில் பார்த்தீர்களானால் கிடைத்துவிடும், எங்களுடைய வலைத்தளத்தில் பார்த்தீர்களானாலும் கிடைத்துவிடும். கைலாஸா காசி - விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிலேயே இருக்கிறது. காசி விஸ்வாதர் கோவில் அருகில் சென்று, நீங்கள் கைலாஸா காசி எங்கிருக்கிறது? என்று கேட்டால் யார் வேண்டுமானாலும் சொல்லிவிடுவார்கள். கூகுள் மேப்பில் பார்த்தாலும் தெரிந்துவிடும். கைலாஸா காசி, கைலாஸா ஐதரபாத், கைலாஸா சேலம் என எந்த ஒரு இடத்தில் வேண்டுமானாலும் நீங்கள் சென்று பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க இலவசம். ஒரு மாதம் உணவு, தங்கும் இடம், நிகழ்ச்சி அனைத்தும் முழுவதும் இலவசம்.
இது வந்து ஒரு விசா நேர்முகத்தேர்வு மாதிரி ஐயா. எங்களுடைய வாழ்க்கை முறையை உங்களுக்கு சொல்கின்றோம். அதாவது கைலாஸாப் பற்றி நிறையத் தவறான கருத்துகள், ஊடகங்களால் பொய், வதந்தி எல்லாமே பரப்பப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் சரிசெய்து, நிஜமாக எங்களுடைய வாழ்க்கைமுறை என்ன? என்பதை உங்களுக்கு விளக்குகின்றோம். அப்பொழுது நீங்கள் நன்றாகப் புரிந்துகொண்டு முடிவெடுக்கலாம். அதற்காகத்தான் இந்த ஒரு மாத நிகழ்ச்சி ஐயா. இந்த ஒரு மாத நிகழ்ச்சி எங்களுடைய மெய்யியல். கைலாஸாவினுடைய மெய்யியல், எங்களுடைய ஆன்மிகத் தத்துவம் (spiritual philosophy) என்ன? எங்களுடைய நோக்கம் என்ன? நாங்கள் எப்படி வாழ்கின்றோம்? எங்களுடைய வாழ்வாதாரம் என்ன? இவைகள் மொத்தத்தையும் எங்களுடைய அரசாங்கக் கட்டமைப்பு (Political structure) என்ன?? சமூகக் கட்டமைப்பு (social structure) என்ன? என்ற மொத்தத்தையும் இந்த ஒரு மாத நிகழ்ச்சியில் மிகத்தெளிவாக உங்களுக்கு விளக்கிவிடுவோம்.
அது மட்டுமல்லாமல், இந்த ஒரு மாத நிகழ்ச்சியில் நீங்கள் எங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். நாங்கள் உங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். அதற்குப் பிறகு கைலாயத்தினுடைய எந்த கைலாயத்தின் எந்த பாகமாக நீங்கள் மாறலாம் என்று நீங்களும் Informed decision எடுக்கலாம். நாங்களும் Informed decision எடுக்கலாம். அப்போது நம்முடைய உறவு இனிமையாக நீண்ட நல் உறவாக அமையும்.
கைலாயத்திற்கு உங்களுக்கு சொல்லப்படும் நல்வரவு, நல் உறவு வரவு. நல் உறவு, நல்வரவு, நல் உறவு வரவு என்கின்ற நிகழ்ச்சிதான் இந்த பரமசிவ சேனா நிகழ்ச்சி. அதனால் இந்த ஒரு மாத நிகழ்ச்சியின் தேதிகளைக் காட்டுகின்றேன். எதாவது ஒரு கைலாஸத்தில் சென்று நீங்கள் கலந்துகொள்ளுங்கள். கலந்துகொண்ட பிறகு, இந்த ஒரு மாதத்திலே உங்களுக்கு interview எல்லாம் நடந்துவிடும். அப்பொழுது உங்களுக்கு விசா எல்லாமே கொடுத்துவிடுவோம்.
நீங்கள் நிரந்தரமாக கைலாஸத்திற்கு வந்து தங்கிவிடவேண்டும் என்று நினைத்தாலும் வரலாம் அல்லது ஒரு வாரம் வந்து ஒருநாள், ஒருவாரம், மூன்றுநாள் அந்த மாதிரி வந்து பார்த்துக்கொண்டுச் செல்லவேண்டும் என்றாலும் செல்லாம் அல்லது ஒரு ஆறுமாதம், ஒரு வருஷம் இருந்து இந்த வாழ்க்கைமுறையை முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்று நினைத்தாலும் செய்யலாம். இந்த மாதிரி என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால் இந்த ஒரு மாத நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்வது அடிப்படைத் தேவை. அதாவது எந்த நாட்டிற்குச் செல்லவேண்டும் என்றாலும் அந்த நாட்டினுடைய விசாவிற்கான நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். விசாக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இப்பொழுது, கைலாஸாவைப் பொருத்தவரை விசாவிற்கு எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. முற்றிலும் இலவசம்! ஆனால் இந்த விசா நேர்முகத்தேர்வில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும். இந்த விசா நேர்முகத்தேர்வு 30 நாள் நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதம் முதல் நாளிலிருந்து அடுத்த மாதம் முதல் நாள் வரை நிகழ்கின்றது. நீங்கள் எந்த கைலாஸத்திலாவது சென்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள். இதுதான் கைலாஸத்திற்கு வருவதற்கான Formalities.
அடுத்தது திரு. இராம்ஜி பரஹம்ஸர் அவர்கள், astrologer கேள்விகளைக் கேட்டிருக்கின்றீர்கள்,
உங்களை வணங்குகிறேன்..
நீங்களும் 'எப்பொழுது நான் கைலாஸத்திற்கு வரவேண்டும், எப்பொழுது கைலாஸத்திற்கு வரலாம்?' என்று கேட்கின்றீர்கள்.
ஐயா உங்களுக்கும் இதே விடைதான். இப்பொழுது நான் அவர் திரு.மோகன் வைத்யா அவர்களுக்குச் சொன்ன மாதிரி, உங்களுக்கு எப்பொழுது முடியுமோ அப்பொழுது இந்த ஒரு மாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இந்த விசா நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுங்கள் ஐயா. அதிலியே உங்களுக்கு மிகத்தெளிவாக இந்த எல்லாக் கேள்விகளுக்குமான விடை கிடைத்துவிடும்.
நன்றி.
இன்னமும் பல கேள்விகள், பல பிரபலங்களுடையக் கேள்விகளும் இருக்கின்றன. ஏற்கனவே 2 மணிநேர சத்சங்கம் இப்போது 2 மணிநேரத்தைத் தாண்டி 2.30 மணிநேரத்தையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கின்றது. ஆனால் இணையத்திலே இணைந்திருக்கின்ற நீங்கள் எல்லாம் செல்லாமல் இருப்பதனால், தொடர்ந்து நேரலை தொடர்வதனால் நிச்சயமாக மற்ற கேள்விகளுக்கும் விடையளிகின்றேன்.
திரு. MJ..ஸ்ரீராம் அவர்கள் கேள்வி அனுப்பியிருக்கின்றீர்கள்,
உங்களை வணங்குகிறேன்…
திரு. MJ. ஸ்ரீராம் அவருடைய கேள்வி என்னவென்றால்… உங்களுடைய ஆன்மிகத்துடைய Final destination என்ன? உங்களுக்கு நிறைய principles இருக்கின்றன, நிறைய logic இருக்கின்றன, நிறைய ideas இருக்கின்றன, உங்களுடைய ஆன்மிகம் உங்களுடைய perspective -இல் எது Final destination? இதுதான் என்னுடைய கேள்வி.
ஐயா, சனாதன இந்து தர்மத்தினுடைய ஆன்மிகம் மெய்யியலினுடைய Final destination என்னவென்றுச் சொல்கிறேன் உள்வாங்கிக்கொள்ளுங்கள். அதாவது வைணவமாகட்டும், சைவமாகட்டும், சாக்தமாகட்டும், காணபத்யம், கௌமாரம், சௌரம் மற்றும் எல்லா சமயங்கள், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சுத்தாத்வைதம் என்கின்ற சம்பிரதாயங்கள், சித்தாந்தங்கள் மற்றும் ஆயிரக்கணக்காண உட்பிரிவுகள், சம்பிரதாயங்கள் இவைகள் எல்லாவற்றிருக்குமே நம் சனாதன இந்து தர்மத்தில் குறைந்தபக்ஷம் living traditions ஒரு 10,000 traditions ஆவது இருக்கும். நான் சொல்வது living, still even now alive இப்போதும் உயிரோடு இருக்கின்ற சம்பிரதாயங்கள் ஒரு 10,000 சம்பிரதாயங்களுக்கும் மேல் இருக்கும்.
இந்த 10,000 சம்பிரதாயங்களும், 'பரப்பிரம்மம்' என்று சொன்னாலும், 'பரந்தாமன்' என்கின்ற வார்த்தையாலும், 'பரமசிவன்' என்கின்ற வார்த்தையாலும், 'பரமேஸ்வரன்' என்கின்ற வார்த்தையாலும் 'பரமேஸ்வரி' என்கின்ற வார்த்தையாலும், 'பரமாத்மா' என்கின்ற வார்த்தையினாலும், இந்த எல்லா வார்த்தைகளாலும் சொல்லப்படும் 'பரம்' - Ultimate அந்தப் 'பரம்' ஒன்று என்று சொல்லமாட்டேன், Oneness – ஒருமைத்தன்மை. அந்த பரமுக்தி – பரமோக்ஷநிலை. இப்பொழுது அதை ஒவ்வொரு சம்பிரதாயமும் ஒரு ஒரு மாதிரி விவரிக்கும். ஆனால் அந்த பரமோக்ஷ நிலை பரமுக்தி என்னுடைய அனுபூதியின்படி ஒன்றுதான், அது ஒருமைத்தன்மைதான் - Oneness அந்தப் பரமுக்தி நிலைதான் எங்கள் ஆன்மீகத்தின் final destination. 'பரப்பிரம்மம்' எனும் வார்த்தையினாலும், 'பரந்தாமன்' எனும் வார்த்தையினாலும், 'பரமசிவன்' எனும் வார்த்தையினாலும் 'பரமாத்மா' எனும் வார்த்தையினாலும், 'பரமேஸ்வரன் பரமேஸ்வரி' எனும் வார்த்தைகளாலும் சுட்டிக் காட்டப்படும் பரமுக்தி. அதுதான் எங்கள் ஆன்மிகத்தினுடைய final destination. இதை நோக்கிதான் நாங்கள் பயணிக்கின்றோம். வாழும்பொழுதே அதை அடைந்து, ஜீவன் முக்தர்களாக வாழ்வதுதான் மனித வாழ்க்கையின் இலட்சியம். உயிரின் உயிர்ப்பின் காரணமே இதுதான்.
அடுத்த கேள்வி, திரு.தேவேந்திரன் அவர்கள் இன்னும் நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்.. அது இல்லாமல் மற்றப் பிரபலங்களுடையக் கேள்விகள் நிறைய இருக்கின்றது.
அம்மா பாத்திமா பாபுவர்கள் கேட்டிருக்கிறீர்கள், பாத்திமா பாபு அவர்களை வணங்குகிறேன். உங்களுடைய கேள்வி, ஸ்வாமி தங்களுடையப் புறத்தோற்றமாகட்டும், தங்களின் சிஷ்யைகளின் அலங்காரங்களாகட்டும் கண் விரியப்பா ர்க்கும் அளவு அவ்வளவு அழகு. துறவு வாழ்க்கை என்பது சர்வாலங்காரங்களையும் சேர்த்தேத் துறப்பது இல்லையா?
அம்மா… துறவு என்பது தனி வ்யக்தியை - Individual person – ஐ, Individual identity - ஐ, Individual being-ஐ பரம்பொருளில் துறந்து விடுவதுதான் துறவு!
தனிப்பட்ட தனி வ்யக்தியைத், தனிப்பட்ட அகங்காரத்தைப், பரம்பொருளில் துறந்து விடுவதுதான் துறவு.
நாங்கள் எங்களுடைய உடல், மனம், அகங்காரம், உணர்வு, சித்தம் இதைப் பரம்பொருளில் துறந்தவர்கள். பரம்பொருளை நாங்கள் எப்படி உணர்கின்றோமோ, அவருடைய அலங்காரத்தை எங்கள் அலங்காரமாக ஏற்றுக்கொண்டவர்கள். பரம்பொருளின் உயிர்ப்புத்தன்மையே உயிர்ப்புத்தன்மையாய், பரம்பொருளின் இருப்புத்தன்மையே எங்கள் இருப்புத்தன்மையாய், பரம்பொருளின் அலங்காரத்தையே எங்கள் அலங்காரமாய், பரம்பொருளின் குணங்களையே எங்கள் குணங்களாய் ஏற்றுக்கொண்டவர்கள் நாங்கள். பரம்பொருளுக்குள் எங்களைத் துறந்து, பரம்பொருளை எங்களுக்குள் நிறைத்துக்கொண்டு, பரம்பொருளை எல்லாவிதத்திலும் எங்கள் வாழ்க்கையிலே முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள் நாங்கள். அதனால் அவருடைய குணங்களை, அவருடைய அனந்தகல்யாண குணங்களை எங்கள் உயிரிலேத் தாங்குகின்றோம். அவருடைய அலங்காரங்களை எங்கள் உடலிலேத் தாங்குகின்றோம்.
மிக அருமையாகத் திருநாவுக்கரசுப் பெருமான் சொல்வார்... 'முன்னை அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கேப் பிச்சி ஆனாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் அசாரத்தை தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே' அதாவது நம்முடைய தனித்தன்மையை பரம்பொருளுக்குள் துறந்து, எங்கள் உயிரையும், உணர்வையும், உணர்ச்சிகளையும் பரம்பொருளுக்குள் துறந்து, அவரையே எங்களுக்குள் நிறைத்துக்கொண்டு, அவருடைய அனந்தகல்யாண குணங்களை உணர்வில் தாங்கி, அவருடைய அலங்காரங்களை நாங்கள் தாங்குகின்றோம். எங்களுக்கு… எனக்குப் பரம்பொருள் எப்படி அனுபூதியானார் என்றால், பரமசிவப் பரம்பொருளாக அனுபூதி அளித்தார். அதனால அவருடைய அலங்காரங்களைத்தான் நான் தாங்குகிறேன் அம்மா. பாருங்கள்… அவருடைய ருத்ராக்ஷத்தை மேனியில் தாங்குகின்றோம். அவருடைய திருநீற்றை மேனியில் தாங்குகிறோம். அவருடைய திருநாமத்தை மனதில் தாங்குகிறோம். அவருடைய அனந்தகல்யாண குணங்களை உணர்வில் தாங்குகிறோம். அவரை உயிரில் தாங்குகிறோம். அதனால் இந்த அலங்காரங்கள் 'சிவவேடம்' என்று சொல்லி நம்முடையப் பாரம்பரியத்திலே வருகின்ற 'திருமூலவர்க்க வேடம், சிவவேடம்' என்று சொல்வார்கள். சிவத்தில் தனைக் கரைத்து, சிவமாகவே வாழ்ந்து, சிவவேடம் தாங்குதல்.
இப்பொழுது ஒவ்வொரு சம்பிரதாயத்தையும் பார்த்தீர்களானால், வைஷ்ணவ சம்பிரதாயத்தவர்கள், விஷ்ணுவைப் போலவே... அவருடைய அலங்காரத்தையேத் தாங்கள் தாங்குவார்கள். சாக்த சம்பிரதாயத்தவர்கள் தேவியின் அலங்காரத்தையேத் தாங்குவார்கள். அதுபோல நாங்கள் பரமசிவப் பரம்பொருளில் எங்களை கரைத்ததனால், எங்களைத் துறந்ததனால் அவருடைய அலங்காரங்களையே நாங்கள் தாங்குகின்றோம். இது துறவிற்கு எதிரானது அல்ல, துறவின் மரபிற்கு, நேரடியாக துறவின் மறபு சார்ந்ததே.
அடுத்தது கேக்கிறீர்கள் அம்மா, திரைப்படங்கள் பார்ப்பதுண்டா?
உண்மையில் நேரம் இல்லாத காரணத்தினால் பார்ப்பதில்லை. ஒரு இரண்டாண்டுகளுக்கு முன்புவரை என்னைப் பற்றி இந்த சேட்டையர் காமிடி செய்தார்களானால், என்ன மாதிரியேக் காண்பித்து சேட்டையர் காமிடிகள் எல்லாம் ஏதாவது செய்திருந்தார்களானால், அந்த மாதிரி ஏதாவது ஒரு அந்தக் க்ளிப்ஸை எடுத்து வந்துக் காட்டுவார்கள். இப்பொழுது ஆனால் இரண்டு வருடமாக ASK NITHYANANDA AI-இல் வேலை செய்யத் துவங்கியதிலிருந்து, காலம் நேரம் இல்லாதக் காரணத்தால் திரைப்படங்கள் பார்ப்பதில்லை அம்மா. அதுதான் உண்மை.
அடுத்தது உங்களுடைய அடுத்த கேள்வி, 'நடப்பது நடந்தே தீரும் என வாழாவிருப்பது சரியா?'
இல்லை, சரி இல்லை. நடப்பது நடந்தே தீரும் என வாழாவிருப்பது சரி இல்லை.
நீங்கள் கேட்கிறீர்கள், 'நம் முயற்சியினால் விதியை மாற்ற இயலும் தானே? என்று.
நிச்சயமாக நம் முயற்சியினால் விதியை மட்டும் இல்லை அம்மா, DNA--வையே மாற்ற முடியும். Epigenetics - இந்த மரபு மேலாண்மைக் காட்டுவது என்னவென்றால், நம்முடைய conscious - ஆன முடிவுகள் மூலமாக, concious ஆக நம்முடைய மனத்தையும், எண்ண ஓட்டத்தையும் அமைத்துக்கொள்வதன் மூலமாக, நம்முடைய வாழ்க்கைமுறையை conscious - ஆக வடிவமைத்துக்கொள்வதன் மூலமாக நம்முடைய DNA-வையே மாற்ற முடியும். அதனால் நம் முயற்சியினால் விதி மட்டுமல்ல எதை வேண்டுமானாலும் மாற்ற முடியும். அதுதான் உண்மை, அதுதான் சத்தியம்.
அடுத்தது நீங்கள் கேட்கின்ற கேள்வி… ஓஷோ சொல்கின்றார்.. எது ஒன்றை மனம் விழைகிறதோ அதில் முழுமதுமாகத் துய்த்துவிட்டால் அது அலுக்கும். சட்டென்று மனம் பரம்பொருளை நோக்கித் திரும்பும் என. அப்படியானால் கடவுளையே நினைத்தும், துதித்தும்வந்தால் அதுவும் ஒருநாள் அலுத்து விடுமா?
இல்லை!
அம்மா ஆழ்ந்துப் புரிந்துகொள்ளுங்கள், இந்த ஒரு சின்ன உதாரணம், ஒரு நாய் வரண்ட எலும்பைக் கடித்துக் கடித்துக் கடித்து, அந்த எலும்பு தன்னுடைய ஈறுகளைக் குத்திக் காயப்படுத்தி, தன் ஈறுகளிலிருந்து வருகின்ற இரத்தத்தையே அந்த நாய் சுவைத்து, அந்த இரத்தம் எலும்பிலிருந்து வருவதாகக் கற்பனையிலிருந்துகொண்டு, எலும்பிலிருந்து சுவை வருவதாக அந்த நாய் நினைக்குமானால் அது எவ்வளவு முட்டாள் தனமோ, அதேபோல்தான் நாமும் புலன்களை நோக்கி வேகவேகமாகச் சென்று வரட்டெலும்பைக் கடித்துக் குதறி, ஆனால் உண்மையில் இந்த செயல்பாடுகளின்போது, நம் மனம் ஒரு சில துளிகளாவது ஒரு சில வினாடிகளாவது நம் ஆன்மாவிற்குள் ஒடுங்கும்போது, நமக்குள்ளிருந்து வருகின்ற அந்த ஆனந்தத்தைத்தான் நாம் அனுபவிக்கின்றோம். ஆனால் அந்த ஆனந்தத்தைப் புலன்களிலிருந்து வருவதாக நாம் நம்மையே ஒரு மாயக்கற்பனையில் ஆழ்த்திக்கொள்கின்றோம். அதனால் சிற்றின்பம்கூட, நமக்குள் இருக்கும் பரமாத்ம சக்தியிடமிருந்துதான் வருகின்றது. அதனால் அந்த பரமாத்மாவை நோக்கி நாம் திரும்புவோமானால், பொங்குகின்ற பேரின்பம் ஒரு நாளும் சலிக்காது அலுக்காது. பேரின்பம் தன்னைத் தானே தனக்குள் எப்போதும் தயக்கம் இல்லாது துய்த்துக்கொண்டிருக்கும் நித்யானந்தம் என்பதனால், கடவுள் பக்தியினால், பரம்பொருளை நோக்கி நாம் திரும்புவதனால் ஏற்படும் இன்பம் சலிக்காது, போரடிக்காது. மனம் அதனால் எந்தவிதமான அலுப்புத் தன்மையையும் அடையாது. அது நிச்சயம் அலுத்துவிடாது.
2 மணிநேரம் செல்லவேண்டிய நேரலை இப்பொழுது 3 மணிநேரம் ஆகிவிட்டதனால், இத்துடன் கேள்விகளுக்கு விடை அளிப்பதை நிறைவு செய்துகொள்கின்றேன்.
ஆனால் இன்னும் நிறையப் பிரபலங்கள் நிறைய கேள்விகள் அனுப்பியிருக்கின்றீர்கள், திரு.நிழல்கள் ரவி அவர்கள் கேள்வி அனுப்பியிருக்கீன்றீர்கள்.
உங்களை வணங்குகிறேன் மற்றும் நிறையப் பிரபலங்களுடையக் கேள்விகள் வந்திருக்கின்றன.
திரு. ஆக்டர் பசந்த் ரவி அவர்கள் கேள்விகளை அனுப்பியிருக்கின்றீர்கள், உங்களையும் வணங்குகின்றேன்.
நிச்சயமாக அடுத்த சத்சங்;கங்ளில் உங்களுடைய கேள்விகளுக்கு விடையளிக்க முயிற்சிக்கின்றேன்.
திரு. ஜீவா ரவி அவர்கள் கேள்வி அனுப்பியிருக்கின்றீர்கள், உங்களையும் வணங்குகிறேன்.
நீண்ட பட்டியல்… நிறைய பிரபலங்கள் கேள்விகள் அனுப்பியிருக்கின்றீர்கள். திரு. சைவம் ரவி, திரு. ஜீவா ரவி இன்னும் இன்னும் சில பிரபலங்களுடையக் கேள்விகள் வந்திருக்கின்றன. உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். காலமின்மையின் காரணத்தினால் உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்க முடியவில்லை என்பதனால், உங்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன். ஆனால் அடுத்தடுத்த சத்சங்கங்களில் நிச்சயமாக உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சிக்கின்றேன்.
2 மணிநேரம் நடத்த வேண்டிய நேரலை நிகழ்ச்சி 3 மணிநேரம் ஆகிவிட்டது. இன்னும் கிளிட்ஸ் சேனலினுடைய சந்தாதாரர்கள் நிறைய பேருடையக் கேள்விகள் இருக்கின்றன. திரு.தேவேந்திரன் அவருடைய கேள்விகள் இருக்கின்றன. அடுத்தடுத்த சத்சங்கங்களில் விடையளிக்க முயற்சிக்கின்றேன்.
இணையத்தாலும் இதயத்தாலும் இணைந்திருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
பார்வையாளர்கள், கேள்விகளை அனுப்பியப் பிரபலங்கள், நேரலை செய்த தொலைக்காட்சியின் உரிமையாளர்கள், செய்தியாளர்கள், திரு.தேவேந்திரன் மற்றும் உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். நன்றி!
எல்லோரும் பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். நன்றி.. ஆனந்தமாக இருங்கள்!
Event Photos