Jun 21 2025
Title
UAN Delegate Training Summit | DAY 21 | International Day of Yoga
Link to Video
Transcript
நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பரமசிவ சக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்
ஓம்
உங்கள் அனைவரையும் அன்போடும் மரியாதையோடும் வணங்கி வரவேற்கின்றேன்.
இந்த சத்சங்கத்திற்காக உலகம் முழுவதிலிருந்தும் வருகை தந்திருக்கும், அன்பர்கள் பக்தர்கள், சீடர்கள், சத்சங்கிகள், அரசியல் தலைவர்கள், சமூக ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் - உங்கள் அனைவரையும் அன்போடும் மரியாதையோடும் வணங்கி வரவேற்கின்றேன். இங்கு வருகைதந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்கின்றேன். உங்கள் அனைவருக்கும் என்னுடைய ஆசீர்வாதங்கள்.
இங்கு வருகை தந்திருக்கும் சாம்பியா குடியரசின், முஃபுடலிராவின் மேயர் மரியாதைக்குரிய திரு. தமல் கமங்கா அவர்களை வரவேற்கின்றேன். இங்கு வருகைத்தந்தைமைக்கும் மற்றும் உங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் நன்றிகள்.
லைபீரியா முதல் சியர லியோனி வரைஉள்ள பகுதிகளுக்கான தூதுவர், மேதகு ஆஞ்சி கோலோ, டாவெல்லா ஓன் வால்மூஸ் அவர்களையும் வரவேற்கின்றேன். இங்கு வருகைத்தந்தமைக்கும் மற்றும் உங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நன்றிகள்.
காம்பியா நேஷ்னல் அசெம்ப்ளியின் மூத்த உறுப்பினர் மற்றும் பேன்-ஆப்பிரக்க பாராளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய சுயுபௌ டுரே அவர்களையும் வரவேற்கின்றேன். இங்கு வருகைத்தந்தமைக்கும் மற்றும் காம்பியா மற்றும் பேன்-ஆப்ரியா பாராளுமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் நன்றிகள்.
இன்று சர்வதேச யோகா தினம்!
சர்வதேச யோகா தினமான இன்று, மஹாகைலாயத்திலிருந்து பரமசிவப் பரம்பொருள் நமக்கெல்லாம் அருளும் நேரடிச் செய்தி: பரமாத்வைதப் பிராப்திரஸ்து. யோகத்தின் மூலமாக நாம் எல்லோரும் பரமசிவப் பரம்பொருளோடு ஒன்றிணைவோமாக, பரமாத்வைதத்தை உணர்வோமாக. பரமாத்வைதப் பிராப்திரஸ்து.
யோகா என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இமாலயத்திலிருந்து ஹார்வர்ட் லேப்ஸ் வரை, தமிழ்நாட்டிலிருந்து டைம் ஸ்கொயர் வரை, அருணாச்சலத்திலிருந்து ஆண்டிகுவா வரை, யோகா என்பது வெறுமனே உயர்வடைவது மட்டுமல்லாமல், அது மனிதகுலத்தையே மறு-இணைப்புச் செய்கின்றது.
190 நாடுகள், 1 பில்லியன் (100 கோடி) ஆன்மாக்கள்(மக்கள்), 1 ஆன்மிகப் புரட்;சி. 190 நாடுகள், 1 பில்லியன் (100 கோடி) ஆன்மாக்கள் (மக்கள்), 1 ஆன்மிகப் புரட்சி… இமாலயத்திலிருந்து ஹார்வர்ட் லேப்ஸ் வரை, தமிழ்நாட்டிலிருந்து டைம் ஸ்கொயர் வரை, அருணாச்சலத்திலிருந்து ஆண்டிகுவா வரை, யோகா என்பது வெறுமனனே உயர்வடையவில்லை, உயரவில்லை. அது மனிதகுலத்தையே மறு-இணைப்புச் செய்கின்றது.
ஆழ்ந்து கேளுங்கள்!
இது என்ன?... ஒரு 5000 வருடம் பழமையான.. பரமசிவப் பரம்பொருளே வெளிப்படுத்திய ஆகமங்களிலிருந்து, குறைந்தபட்சம் 5000 வருடம் பழமையான சூத்திரங்கள், இப்பொழுது ஐநா உலகிற்குச் சொல்லும் ஒரு உலகளாவிய ஆன்மிகப் புரட்சி ஆணையாக இருக்கின்றது. இது என்ன? பரமசிவப் பரம்பொருளே யோகத்தின் தந்தை, யோகத்தை ஸ்தாபித்தவர், நிறுவியவர்.
பதஞ்சலி, யோகத்திற்கு பாஷ்யம் எழுதிய தலைசிறந்த பாஷ்யக்காரர்களுள் ஒருவர்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பதஞ்சலி பாஷ்யகாரர். அவர் 3 புத்தங்கங்களை எழுதினார்: 1) பரமசிவ சூத்திரங்கள் மீது இயற்றிய மஹாபாஷ்யம். பரமசிவப் பரம்பொருள் பாணினிக்கு சூத்திரங்களை அளித்தருளினார், அந்த சூத்திரங்களுக்கு பாணினி ஒரு பாஷ்யத்தை எழுதினார். பிறகு, அந்த சூத்திரங்களுக்கு பாணினி ஒரு பாஷ்யத்தை எழுதினார், பிறகு பதஞ்சலி மஹாபாஷ்யத்தை எழுதினார்.
அதேபோல, பரமசிவப் பரம்பொருள் ஆகமங்களில் யோகத்தை அளித்தருளினார், பதஞ்சலி மிக அருமையான, அற்புதமான ஓர் பாஷ்யத்தை எழுதினார். அந்த பாஷ்யமே மிகுந்த சக்திவாய்ந்ததாகவும், அத்துனை துல்லியமான ஸ்லோகங்களாகவும் இருந்ததால், அது மூல சூத்திரமாகவே கொண்டாடப்பட்டது. அந்த பாஷ்யமே அத்துனை அழகாகவும், அத்துனை துல்லியமாகவும் இருந்ததால், அதுவே சூத்திரமாக மதிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அது பாஷ்யம்.
அதனால் ஆழ்ந்து கேளுங்கள், அதேபோல பரமசிவப் பரம்பொருள் வேதங்களிலும் ஆகமங்களிலும் ஆயுர்வேதத்தை வெளிப்படுத்தினார். பதஞ்சலி அவை அனைத்தையும் தொகுத்து அதற்கு ஒரு பாஷ்யம் செய்தார்.
அதனால் 3 புத்தகங்கள், உடலிற்கு - ஆயுர்வேதம், உயிருக்கு – யோக சூத்திரம், மொழி மற்றும் இலக்கணத்திற்கு – மஹாபாஷ்யம். பதஞ்சலி இந்த 3 புத்தகங்களையும் எழுதினார். அவர் அடிப்படையில் ஒரு பாஷ்யக்காரர். ஆனால் பரமசிவப் பரம்பொருளே, இந்த யோகா எனும் மாபெரும் அறிவியலின் உண்மையான சூத்திரக்காரர். அவரே, யோகத்தின் தந்தை மற்றும் நிறுவனர்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், யோகாவிலிருந்து நான் உங்களுக்கு ஆழமான உள்நோக்குப்பார்வையை, உயர் ஞான சத்தியங்களை அளிக்கப்போகின்றேன்.
'யோகம்' என்றால் பரத்தோடு ஒன்றிணைதல். உங்களுடைய சரீரத்தை பரத்தின் சரீரத்தோடு ஒன்றிணைத்தல். உங்கள் பிண்டாண்டத்தை பிரம்மாண்டத்தோடு ஒன்றிணைத்தல், உங்கள் தனி மனதை, பிரம்மாண்டத்தின் மனதோடு – மானசரோவரத்தோடு, மனோன்மணியோடு ஒன்றிணைத்தல். உங்கள் தனி ஜீவனை பரமசிவனுக்குள் ஒன்றிணைத்தல்.
யோகா என்பது, பரம்பொருளோடு ஒன்றிணைவதற்கான, பரமாத்வைதத்தை உணர்வதற்கான ஒரு சக்திவாய்ந்த அறிவியல், ஆன்மிக அறிவியல்.
ஆழ்ந்து கேளுங்கள், சரியா பாதமான அன்றாட வாழ்க்கைமுறை ஆன்மிகப் பயிற்சிகள் அல்லது கிரியா பாதமான சடங்குப் பயிற்சிகள் அல்லது ஞான பாதமான ஞானத்திற்கு தொடர்புடைய பயிற்சிகள் அல்லது எந்த ஆன்மிகப் பயிற்சிகளை நீங்கள் செய்தாலும், எந்த அளவிற்கு யோகம் அதில் கலந்திருக்கின்றதோ அதுதான் அந்த அமைப்பின் சாரம். அந்தப் பயிற்சியின் சாரம்.
ஆழ்ந்து கேளுங்கள், யோகம் என்பது தூய்மையான அடிப்படைப் பொருள், மற்றவை அனைத்தும் உபகரணங்கள்தான், கூடுதலாகச் சேர்க்கப்பட்டதுதான்.
நான் உங்களுக்கு இன்னும் தெளிவான உதாரணத்தைக் கொடுக்க வேண்டுமெனில், சுத்தமான தங்கம், 24 காரட் சுத்த தங்கம் என்பது யோக பாதம். அதை நீங்கள் 22 காரட்டாக மாற்றி ஞான பாதம் என்றும் அழைக்கலாம், 18 காரட்டாக மாற்றி கிரியா பாதம் என்றும் அழைக்கலாம், 10 காரட்டாக மாற்றி சரியா பாதமாக அழைக்கலாம். நீங்கள் வெவ்வேறு கேரட் தங்கமாக மாற்றலாம். ஆனால் அந்த பொருள், அது 22 காரட்டாகவோ அல்லது 18 காரட்டாகவோ அல்லது 10 காரட்டோ, அது தன்னுள் அடக்கியிருக்கும் தங்கத்தினுடைய எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே மதிப்பைப் பெற்றிருக்கும்.
ஆழ்ந்து கேளுங்கள்,
அதனால் சுத்தமான தங்கம் என்பது யோக பாதம். அதனாலேயே பரமசிவப் பரம்பொருள், சரியா பாதத்தையே 'சரியா யோகம்' என்றும், கிரியா பாதத்தையோ, 'கிரியா யோகம்' என்றும், ஞான பாதத்தையே, 'ஞான யோகம்' என்றும் பெயரிடுகின்றார். அதனால், அவர் சொல்லியதன் சாரம் - யோகம்.
நீங்கள் எந்த ஆன்மிகப் பயிற்சிகளைச் செய்தாலும், அது சரியா பாதமோ, கிரியா பாதமோ, ஞான பாதமோ அல்லது வேறு எந்த தியான யோகமோ அதுபோன்ற எந்த ஆன்மிகப் பயிற்சியாக இருந்தாலும், அது எந்த அளவிற்கு யோகத்தை அதற்குள் உள்ளடக்கியிருக்கிறது என்பதன் அடிப்படையில் மட்டும்தான் நீங்கள் பலனைப் பெறுவீர்கள். அவ்வளவுதான்.
யோகா என்பது ஒரு தூய அறிவியல், ஆன்மிக அறிவியல். முட்டாள்தனமும் இல்லை, மேம்போக்கான தன்மையும் இல்லை. அதைச் செய்யுங்கள், நீங்கள் அதன் பலனைக் காண்பீர்கள்.
சரியா பாதத்தை வாழ்வதில், யார் வேண்டுமானாலும் போலியான நபராக இருக்கலாம். பெரிய அளவில், முழுமையான அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் தான் சரியா பாதத்தைப் பயிற்சி செய்வதாக அவர் வெளியில் காட்டிக்கொள்ளலாம். உள்ளுக்குள் அவர் ஒரு மோசடி செய்பவராகவும் மற்றும் ஒருவேளை உண்மையில் அதை வாழாமலும் இருக்க முடியும்.
கிரியா பாதத்தைப் பயிற்சி செய்வதிலும், யார் வேண்டுமானாலும் போலியான நபராக இருக்கலாம். வெளியில் மட்டும் தன்னை ஒரு பெரிய பக்தராகவும் மற்றும் எல்லாக் கிரியைகளையும் அற்புதமாகச் செய்பவராகவும் காட்டிக்கொள்ள முடியும். ஆனால் உள்ளுக்குள் அவர் அதற்கு உண்மையில்லாதவராக இருக்கலாம்.
அதேபோல, ஞான பாதத்தைப் பயிற்சி செய்வதிலும், யார் வேண்டுமானாலும் போலியான நபராக இருக்க முடியும். வெளியில் அவர் சிறந்த உயர் ஞான சத்தியங்களை எல்லாம் பேசிக்கொண்டிருக்கலாம், ஆனால் உள்ளுக்குள் அவர் அப்படி இல்லாமல் இருப்பார்.
ஆனால் எவருமே போலியான யோகியாக இருக்க முடியாது. ஏனெனில், நீங்கள் ஒரு யோகியா இல்லையா என்பதை உங்கள் உடலும், நீங்கள் உட்காரும் விதமும் சொல்லிவிடும்.
யோகத்தில் மட்டுமே நீங்கள் போலியானவராக இருக்க முடியாது, அதை போலியாக்க முடியாது.
நீங்கள் உட்காரும் விதம், நீங்கள் உங்களைத் தாங்கும் விதம், நீங்கள் இருக்கும் விதம், அதுவே நீங்கள் ஒரு யோகியா அல்லது யோகி இல்லையா என்பதைப் சொல்லிவிடும்.
சரியா பாதத்தை வாழ்வதில் போலியான நபராக இருக்க முடியும், கிரியா பாதத்தை பயிற்சி செய்வதில் போலியான நபராக இருக்க முடியும், ஞான பாதத்தைப் பயிற்சி செய்வதில் போலியான நபராக இருக்க முடியும். எந்த அமைப்பிலும் போலித்தனம் இருக்க முடியும். ஆனால் யோக பாதத்தில், யோகத்தில் இருக்க முடியாது. ஏனெனில் அது பிழையேற்படுத்த முடியாத ஒரு அமைப்பு!
நீங்கள் யோகத்தை போலியாக்கினாலும், அது ஒரு சக்தி வாய்ந்த அமைப்பு என்பதால், அது உங்களை யோகத்தை செய்பவராக ஆக்கிவிடும்.
அந்த அமைப்பே மிகவும் சக்திவாய்ந்தது, நீங்கள் அதை போலியாக்கினாலும், அது உங்களை யோகத்தை செய்பவராக ஆக்கிவிடும்.
அதனால் அந்த அமைப்பே பிழையேற்படுத்த முடியாத, போலியாக்க முடியாத ஒரு அமைப்பு! அதனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்… 'ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்' என்று மீண்டும் மீண்டும் சொல்கின்றார். நீங்கள் சிறிதளவு பயிற்சி செய்தாலும், அது உங்களை மாபெரும் பயங்களையும் தாண்டி எடுத்துச் சென்றுவிடும், பல மாயைகளை பொறுத்தமற்றதாக ஆக்கிவிடும். அதனால்தான் அவர் பகவத் கீதையின் எல்லா அத்தியாயங்களுக்கும் 'யோகா' என்று பெயரிட்டிருக்கின்றார். பகவத் கீதை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய போதனைகளின் சாரம் மட்டுமல்ல, அது அவருடைய சாரம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாரம். வெறும் கிருஷ்ணருடைய போதனைகளின் சாரம் மட்டுமல்ல.
அந்த மொத்த 18 அத்தியாயங்களுக்கும் அவர், 'யோகா, யோகா, யோகா, யோகா' என்று பெயரிட்டிருக்கின்றார். சாங்க்ய யோகம் - இரண்டாவது அத்தியாயம், முதல் அத்தியாயம் - அர்ஜுன விஷாத யோகம், இதில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் திருவாய் திறந்து பேசவே இல்லை. இது ஓர் அறிமுகத்தைப் போன்றது மட்டும்தான், அந்த சூழ்நிலை மற்றும் அனைத்தின் விளக்கமும்தான். இரண்டாவது அத்தியாயம் சாங்க்ய யோகம். சாங்க்ய யோகத்தில்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் திருவாய் மலர்கின்றார். பிறகு மற்ற எல்லா அத்தியாயங்களும், ஒவ்வொரு அத்தியாயமும் 'யோகா' என்றழைக்கப்படுகின்றன.
அதேபோல, ஆகமங்கள் பரமசிவப் பரம்பொருளுடைய போதனைகளின் சாரம் அல்ல, அவை பரமசிவப் பரம்பொருளின் சாரம்.
அதனால்தான் இந்த 18 ஆகமங்களும், 'என்னுடைய அங்கங்கள்' என்று பரமசிவப் பரம்பொருள் சொல்கிறார். காமிக ஆகமம் பரமசிவப் பரம்பொருளின் திருப்பாதமாகக் கருதப்படுகின்றது. காரண ஆகமம், பரமசிவப் பரம்பொருளின் கணுக்கால்களாகக் கருதப்படுகின்றது. மகுட ஆகமம் பரமசிவப் பரம்பொருளின் ஜடா மகுடமாகக் கருதப்படுகின்றது. ஒவ்வொரு ஆகமமும் பரமசிவப் பரம்பொருளின் ஒவ்வொரு அங்கம்.
அதனால் புரிந்துகொள்ளுங்கள், ஆகமங்கள் பரமசிவப் பரம்பொருளின் சாரம். அவர் சரியா யோகம், கிரியா யோகம், யோக யோகம், ஞான யோகம் என்று அனைத்து நான்கு அத்தியாயங்களுக்கும் பெயரிடுகின்றார்.
யோகம் என்பது தூய அறிவியல், நீங்கள் அதை போலியாக்கினாலும், அந்த அமைப்பே மிகவும் சக்திவாய்ந்தது என்பதனால், அது உங்களை யோகத்தை செய்பவராக ஆக்கிவிடுகின்றது.
நீங்கள் அமரும் விதமே, நீங்கள் உங்களைத் தாங்கும் விதமே, நீங்கள் இருக்கும் விதமே, உங்களைப் பார்த்தாலே, நீங்கள் ஒரு யோகியா, இல்லையா என்று மக்களுக்குத் தெரியும்.
நீங்கள் யோகாவை போலியாக்க முடியாது, நீங்கள் போலியாக்கினாலும், நீங்கள் அதை போலியாக்க முயற்சித்தாலும்கூட, அது உங்களை யோகத்தை செய்பவராக ஆக்கிவிடும். அதுதான் இந்த அமைப்பின் சக்தி, பிழையேற்படுத்த முடியாத ஒரு அமைப்பு.
யமோ நியம ஸ்தப சௌச்சம் ஸ்வாத்யாய ப்ராண ஸங்கம: தாரணோ ச ஸமாதிஷ்த அஷ்டாங்கோ யோக உச்யதே இது காமிக ஆகமம், 4வது அத்தியாயம், 11 மற்றும் 12வது ஸ்லோகத்தில், பரமசிவப் பரம்பொருளே அளிக்கின்ற விளக்கம்.
ஆழ்ந்து கேளுங்கள்...
யமோ நியம ஸ்தப சௌச்சம் ஸ்வாத்யாய ப்ராண ஸங்கம: தாரணோ ச ஸமாதிஷ்த அஷ்டாங்கோ யோக உச்யதே
இயமம், நியமம், தபஸ், சௌச்சம், ஸ்வாத்யாயம், பிராண ஸம்யமம், தாரணை, சமாதி - இந்த எட்டும், பரமசிவப் பரம்பொருள் உலகிற்கு அருளிய அஷ்டாங்க யோகம். பிற்காலத்தில் பதஞ்சலி யோக சூத்திரத்தை எழுதும்பொழுது, அவர் வெவ்வேறு வார்த்தைகளைத் தந்து, அவற்றை ஒருங்கிணைத்தார். ஏனெனில் பரமசிவப் பரம்பொருள், வெவ்வேறு யோக அமைப்புகளை ஆகமத்தில் வெளிப்படுத்தினார். பதஞ்சலி அவை அனைத்தையும் தொகுத்து, 'ஒரு' அமைப்பாகச் செய்தளித்தார்.
அதனால், நான் இப்பொழுது பரமசிவப் பரம்பொருள் எப்படி யோகத்தை வெளிப்படுத்தினாரோ, அப்படியே வெளிப்படுத்தப்போகின்றேன். உள்ளதை உள்ளபடி அப்படியே உரைக்கப்போகின்றேன். யோகத்தை உள்ளது உள்ளபடியே, அது எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டதோ, எப்படி இருந்ததோ, எப்படி இருக்கவேண்டுமோ, அதை அப்படியே சொல்கின்றேன்.
இந்த தலைமுறைக்கு அதை உபயோகப்படுத்துவதற்கு எளிமையானதாக ஆக்கப்போகின்றேன். ஆனால் ஒருபோதும் நீர்த்துப்போகச் செய்யமாட்டேன்.
நான் சொன்னபடி, யோகா அது எப்படி இருந்ததோ அவ்வாறே, உள்ளது உள்ளபடியே, எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே, உள்ளது உள்ளபடி உரைக்கப்போகின்றேன்.
இப்பொழுது சில கேள்விகள் வந்திருக்கின்றன. அதற்கு விடை அளிக்கின்றேன். பல விடைகளை நான் கேள்வி கேட்கப்போகின்றேன். பரமசிவப் பரம்பொருளின் இந்த வெளிப்பாடுகள் மூலமாக, நான் சில கேள்விகளுக்கு விடை அளிக்கப்போகின்றேன், பல விடைகளுக்கு கேள்விகளை எழுப்பப்போகின்றேன்.
அதனால் ஆழ்ந்து கேளுங்கள்,
முதல் விஷம், முதல் கேள்வி: யோகத்தைப் பயிற்சி செய்யும் அந்த 'நான்' என்பது யார்?
ஆழ்ந்து கேளுங்கள், யோகத்தைப் பயிற்சி செய்யும் அந்த 'நான்', பரமசிவப் பரம்பொருள் என்றழைக்கப்படும் இலக்குடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பரமசிவன், யோகத்தைப் பயிற்சி செய்யும் அந்த 'நான்' என்ற உணர்வுடன் தன்னையேக் கட்டமைத்துள்ளார்.
பரமசிவப் பரம்பொருள் உங்களுக்குள் விழிப்படைய முடிவெடுத்த பிறகு மட்டுமே, குறிப்பாக உங்களுக்குள் 'யோகத்தைப் பயிற்சி செய்ய வேண்டும்' என்ற ஒரு தேடுதலேகூடத் தூண்டப்படுகின்றது.
ஆழ்ந்து கேளுங்கள், தேடுதல் என்பது வேறொன்றுமல்ல, அவர் உள்ளிருந்து உங்களை உள்ளிருந்து உள்ளிழுக்கின்றார். அவர் உங்களை உள்ளிருந்து விழிப்பிக்கின்றார். யோகம், பரமசிவப் பரம்பொருளை அடைவதற்கான பாதை அல்ல. அது உண்மையில் அவர் உங்களுக்குள் நிகழும் பரமசிவப் பரம்பொருளின் திருநடனமாகும்.
யோகம் என்றால், 'அவர் விழித்தெழுந்து, உயிர்த்தெழுந்து உங்களுக்குள் தம்முடைய திருநடனத்தைத் துவங்கிவிட்டார்' என்பதாகும்.
ஆழ்ந்து கேளுங்கள்,
உங்களுடைய சரீரம், இந்தப் பிரபஞ்சத்தின் சரீரத்தோடு நேர்ப்பட, ஒருமுகப்பட முயற்சிக்கும்பொழுது, உங்களுடையப் பிண்டாண்டம் பிரம்மாண்டத்தோடு நேர்ப்பட முயற்சிக்கும்பொழுது, உங்களுக்குள் இருக்கும் பரமசிவப் பரம்பொருள் உங்களை விழிப்படையச் செய்து, உங்களுடைய தனி இருப்பான 'நான்' எனும் உணர்வை தமக்குள் கரைத்துக்கொள்கின்றார். ஒன்றிணைதலே யோகம். நீங்கள் அவரை நோக்கி நகரத் துவங்கியவுடன், அவர் உங்களை நோக்கி அதிகம் நகரத் துவக்குகின்றார். அவர் உங்களை நோக்கி அதிகமாக நகரத் துவங்கியதால், நீங்களும் அவரை நோக்கி இன்னும் அதிகமாக நகரத் துவங்குகின்றீர்கள். இது ஒரு நற்சுழற்சியாக மாறுகின்றது. நீங்களும், அவரும் ஒன்றாக ஒன்றாக அதைபோன்றே மாறிவிடுகின்றீர்கள்.
'யோகம் முடிந்தால் சிவம்' - இது திருமூலர் பெருமான் வெளிப்படுத்தியருளியது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஆசனங்கள்கூட, ஒவ்வொரு ஆசனமும், உங்கள் உடலை நேர்ப்படுத்துகின்றது. உங்களை வடிவியல் வடிவத்திற்கு வைக்கின்றது. இதன்மூலமாக உங்களுடைய குண்டலினி சக்தியும், பிரபஞ்சத்தின் குண்டலினி சக்தியும் நேர்ப்படுகின்றது. அது உங்களை விழிப்படைய, உயிர்ப்படையச் செய்கின்றது. ஒவ்வொரு ஆசனமும் உங்களை இந்தப் பிரபஞ்சத்துடன் நேர்ப்படுத்துகின்றது, இசைவாக்குகின்றது.
அது ஓர் ஆசனமாகட்டும், பிரணாயாமமாகட்டும் அல்லது தாரணா அல்லது தவம் அல்லது இயமம், நியமம் - இந்த அஷ்டாங்கத்தில் எதுவாக இருந்தாலும்... நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும், பரமசிவப் பரம்பொருள் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றார், இவைகள் 8 படிகள் அல்ல, 8 அங்கங்கள் என்று சொல்கின்றார். அதனால் இந்த 8 ஒரேநேரத்தில் மற்றும் தன்னிச்சையாகப் பயிற்சி செய்யப்பட வேண்டும். அதாவது நீங்கள் இயமம் மற்றும் நியமத்தைப் பயிற்சி செய்தால், தானாகவே தவம் நிகழ்ந்துவிடும், சௌச்சம் நிகழ்ந்துவிடும், ஸ்வாத்யாயம் நிகழ்ந்துவிடும், பிராணா, சம்யமா நிகழ்ந்துவிடும், தாரணா நிகழ்ந்துவிடும், சமாதியும் நிகழ்ந்துவிடும். இவ்வாறாகத்தான் இந்த அமைப்பே மேம்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் சமாதியைப் பயிற்சி செய்தால், மற்ற எட்டும் தானாகவே நிகழ்ந்துவிடும்.
அதனால் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த எட்டும் யோகத்தைக் கட்டமைக்கின்றன. இது யோகத்தை அடைவதற்கான படிகள் அல்ல. இவை யோகத்தைக் கட்டமைக்கின்றன.
பரமசிவப் பரம்பொருள் அருளிய மூல வார்த்தைகளை உச்சரிப்பதற்கே நா இனிமைத்தன்மையை உணர்கின்றது! அதனால் நான் அதை மீண்டும் சொல்கின்றேன்.
யமோ நியம ஸ்தப சௌச்சம் ஸ்வாத்யாய ப்ராண ஸங்கம: தாரணோ ச ஸமாதிஷ்த அஷ்டாங்கோ யோக உச்யதே
இதை பரமசிவப் பரம்பொருள் காமிக ஆகமத்தில் வெளிப்படுத்துகின்றார்.
ஆழ்ந்து கேளுங்கள்,
உடல் யோகத்தை, ஆசனங்களைப் பயிற்சி செய்கின்றது, சுவாச அமைப்பானது, பிராண சம்யமத்தைச் செய்கின்றது. பதஞ்சலி 'பிராணாயாமம்' என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகின்றார். பரமசிவப் பரம்பொருள் 'பிராண சம்யமம்' என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகின்றார்.
ஸம்யமம் என்றால், 'ஒன்றாகுதல்'. பிராண ஸம்யமம் என்றால், உங்களுடைய பிராணன், பரமசிவப் பரம்பொருளின் பிராணனாக மாறுதல்.
நீங்கள் இயமத்தையோ அல்லது நியமத்தையோ, தவம், சௌச்சம், ஸவாத்யாயம், பிராண ஸம்யமாம், தாரணை, சமாதி என்று எதை பயிற்சி செய்யத் துவங்கினாலும், உங்கள் மொத்த ஜீவனும் பரமசிவப் பரம்பொருளை நோக்கி நேர்ப்படத் துவங்குகின்றது.
அதனால்தான், இந்த முழு அமைப்பிலிருந்தும் யோகத்தை பிரிக்க முடியாது. இந்த ஆசனங்களை திருடி அவற்றை கரடி யோகா, பூனை யோகா, எலி யோகா, மீன் யோகா (Bear Yoga, Cat Yoga, Rat Yoga, Fish Yoga) என்று முத்திரைப்படுத்த முடியாது. நீங்கள் அதை செய்ய முயற்சித்தால், அதுதான் மிக மோசமாக பிரபஞ்சத்தினுடையதைத் திருடுவதாகும்.
மிக மோசமாகப் பிரபஞ்சத்திடமிருந்து திருடப்பட்டதால், யோகா பாதிப்படைந்தது. அதைத் திருடியவர்களும் அதிகமாக வேதனை அடைந்திருக்கிறார்கள். ஏனெனில் நீங்கள் ஒரு அணுகுண்டைத் திருடிவிட்டு, பிறகு அதை எப்படி உபயோகப்படுத்துவது என்று தெரியவில்லை என்றால், நீங்கள் உங்களுக்கு அதிகமாக தீங்கிழைத்துக்கொள்வீர்கள். பல பேருக்கு இது நிகழ்ந்திருக்கின்றது. அதாவது யோகத்தைத் திருடியவர்களிடமிருந்து, அந்த திருடப்பட்ட மூலத்திலிருந்து யோகத்தைக் கற்றுக்கொண்டு, அதை மற்றவர்களும் கற்றுத்தர முயற்சித்த பல பேருக்கு இது நிகழ்ந்திருக்கின்றது.
திருடியவர்கள்... தங்களையும் அழித்துக்கொண்டார்கள், மற்றவர்களையும் அழித்தார்கள்.
ஆழ்ந்து கேளுங்கள், உண்மையான குரு-சிஷ்யப் பரம்பரையிடமிருந்தே எப்பொழுதும் யோகத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். அப்படியென்றால், அந்த குரு-சிஷ்யப் பரம்பரை பரமசிவப் பரம்பொருளிடமிருந்தே வந்த அறுபடாத பரம்பரையாக இருக்க வேண்டும். குரு-சிஷ்யப் பரம்பரையின் வாரிசுகள், தன்னை உணர்ந்த யோகிகள், யோகத்தன்மையை அடைந்த யோகிகள், பூரணமான யோகிகள், யோகத்தில் நிபுணத்துவம் அடைந்த யோகிகள், அந்த குருபரம்பரை, பரமசிவப் பரம்பொருளிலிருந்தேத் தோன்றிய அறுபடாத அவிச்சின்ன குருபரம்பரை, அவர்களிடமிருந்து நீங்கள் முறையாக யோகத்தைப் பயில வேண்டும்.
நீங்கள் எந்த வயதில் வேண்டுமானாலும் துவங்கலாம், ஆனால் பரமசிவப் பரம்பொருளிடமிருந்தேத் தோன்றிய அவிச்சின்ன – அறுபடாத குருபரம்பரையானது, யோகத்தின் மூலமாக நீங்கள் அடைய வேண்டியதை அடைவதற்கு மிகவும் முக்கியமாகும்.
கவனமாகக் கேளுங்கள், நீங்கள் யோகத்தின் எந்த பாகத்தை, எந்த அங்கத்தைப் பயிற்சி செய்தாலும், அது உங்களை பரமசிவப் பரம்பொருளோடு ஒன்றிணைக்கின்றது. அது உங்களை பரமசிவப் பரம்பொருளை நோக்கி வழிநடத்திச் செல்கின்றது. அது உங்கள் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்து, பரமசிவப் பரம்பொருளோடு ஒன்றிணைவதற்கு உங்களை வழிநடத்துகின்றது.
ஆஸனம் ப்ராண ஸங்கமோ முத்ரா நாதாநு ஸந்தாநம் ஏதத் குண்டலினி ஜாக்ரத ஸாதநம் பரமம் மதம்
ஆழ்ந்து கேளுங்கள், நான் மீண்டும் சொல்கின்றேன்.
ஆஸனம் ப்ராண ஸங்கமோ முத்ரா நாதாநு ஸந்தாநம் ஏதத் குண்டலினி ஜாக்ரத ஸாதநம் பரமம் மதம்
இது சிவ ஸம்ஹிதையில் இருக்கின்ற ஸ்லோகம். சிவ ஸம்ஹிதை இந்த சத்தியத்தை வெளிப்படுத்துகின்றது: ஆசனங்களைப் பயிற்சி செய்வது, சரீரத்தை ஸ்திரமாக்குகின்றது. சுஷும்னா நாடி வழியாக மேலெழுவதற்கு குண்டலினி சக்தியை செயல்படுத்தி, பரமசிவப் பரம்பொருளோடு, பிரபஞ்ச சக்தியோடு கலக்கின்றது, கரைக்கின்றது.
ஆஸனம் ப்ராண ஸங்கமோ முத்ரா நாதாநு ஸந்தாநம் ஏதத் குண்டலினி ஜாக்ரத ஸாதநம் பரமம் மதம்
ஆழ்ந்து கேளுங்கள், ஸ்தூல உடலால் செய்யப்படும் ஆசங்களும் மற்றும் உங்கள் சுவாசத்தை, உங்கள் பிராணனை நேர்ப்படுத்தும் பிராணாயாமம், முத்திரைகள், அனைத்து முத்திரைகள் மற்றும் பந்தாக்கள்: நாதாந்து ஸந்தாநம் என்றால், உள்ளுக்குள் உச்சரிக்கப்படும் அந்த ஒலி அதிர்வுகள் அல்லது எழுப்பப்படும் ஒலிகள், இவை அனைத்துமே ஒன்றாக செய்யப்படவேண்டும். அதுதான் மிக மிக முக்கியமான விஷயம்.
ஆழ்ந்து கேளுங்கள்… பரமசிவப் பரம்பொருள் என்னை இந்த அவிச்சின்ன குருபரம்பரையுடன் ஆசீர்வதித்ததார். பரமசிவப் பரம்பொருளிடமிருந்தே உருவான அவிச்சின்ன பரம்பரையிடமிருந்து, சிறு வயதிலிருந்தே முறையாகப் பயின்றதால், 'குண்டலினி சக்தி விழிப்படையவதற்கு இவை அனைத்தும் ஒன்றாக ஒருசேரச் செய்யப்டவேண்டும்' என்று அவர் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்ற இந்த ஆழமான இரகசியங்களைக் கற்றேன்.
நீங்கள் இவற்றைத் தனித்தனியாகச் செய்தால், உங்களுக்கு ஒரு பலன் கிடைக்கும். உடல்ரீதியாக செய்யப்படும் ஆசனங்களை மட்டும் செய்தால், நீங்கள் உடல் நலத்தைப் பெறுவீர்கள். ஆனால் இவை அனைத்தையும் ஒன்றாக செய்தால், நீங்கள் பரமத்தை உணர்வீர்கள். நான் அளிக்கும் நித்யானந்த யோகா உங்களை பரமத்திற்கு, ஞானத்திற்கு வழிநடத்தும். அதனால்தான் நான் நித்யானந்த யோகாவை வலியுறுத்துகின்றேன்.
நித்யானந்த யோகா, வெறும் உடல் ஆரோக்கியத்திற்கோ அல்லது நல்வாழ்விற்கோ அல்லது மன நலத்திற்கோ அல்லது உணர்ச்சி ரீதியான நலனிற்கோ மட்டுமானது அல்ல. நித்யானந்த யோகா, உங்களுக்கு இவை அனைத்தையும் தரும் மற்றும் இவை அனைத்திற்கும் மேலாக பரம ஞானத்தையும் அருளும்!
நீங்கள் யாரிடமிருந்து யோகத்தைப் பயில வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு, பரமசிவப் பரம்பொருளிடமிருந்தே வரும் அவிச்சின்ன குருபரம்பரை, அறுபடாத குரு-சிஷ்யப் பரம்பரை ஒரு மிக முக்கியமான விஷயம். இதைப் புரிந்துகொள்ளுங்கள்.
நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தை அளிக்கின்றேன்: என்னுடைய குரு யோகி யோகானந்தபுரி, இரகுபதி யோகி, அவர் யோகத்தில் உச்சத்தை அடைந்தவர், நிபுணர். மேலும் அவர் அவிச்சின்ன குருபரம்பரையை உடையவர். யோகத்தின் ஆச்சாரியன்.
யோகி யோகானந்தபுரி என்றும், இரகுபதி யோகி என்றும் அழைக்கப்படும் என் யோக குரு, திருவண்ணாமலையில் பொதுவெளியில் யோகத்தின் சக்திகளை செயல்விளக்கப்படுத்திக் காட்டியிருக்கின்றார். பலமுறை ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் அவர் லெவிடேஷன் (குண்டலினி சக்தியால் உடல் மேலெழுதல்) சக்தியை செய்து காட்டியிருக்கின்றார். ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில், அவர் தன்னுடைய மார்பில் ஓர் இரும்புக் கம்பியைக் கட்டி வெறுமனே சுவாசத்தை வெளியிடுவார், அது சுக்குநூறாக வெடித்துச் சிதறும்! அவர் இரும்பினால் செய்யப்பட்ட சங்கிலியை, தடித்த சங்கிலியை, தன்னுடைய மார்பின் மீது கட்டிக்கொண்டு அப்படியே சுவாசத்தை இழுத்து வெளிவிடுவார், அந்த சங்கிலி துண்டு துண்டாக உடையும்!
ஆழ்ந்து கேளுங்கள், யோகி யோகானந்தபுரி, கற்பனை செய்துபார்க்க இயலாத யோக சக்திகளை செயல்விளக்கப்படுத்திக் காட்டியிருக்கின்றார். அவர் அறுபடாத குருபரம்பரையைப் பெற்றிருந்தார். அவர் எனக்கு யோகத்தின் மிக ஆழமான இரகசியங்களைக் கற்றுத்தந்து, என்னை இந்த யோக அறிவியலில் நிபுணத்துவம் செய்ய வைத்தார். பரமசிவப் பரம்பொருள் அருளிய சாஸ்த்திரப் பிரமாணம், ஆப்தப் பிரமாணம் அனைத்தையும் இவர் எனக்கு அளித்து, அதை என்னுடைய ஆத்மப் பிரமாணமாகச் செய்தார். இந்த அனைத்தையும்தான் நான் ஒன்றாக்கி, நித்யானந்த யோகாவாக, மிக அழகாக உங்கள் அனைவருக்கும் அளித்திருக்கின்றேன்.
அதனால்தான், நித்யானந்த யோகா நேரடியாக உங்களுக்கு பரமத்தை (பரம அனுபவத்தை) அளிக்கின்றது. உடல் நலம் மட்டும் அல்ல, மன நலம் மட்டுமல்ல, உணர்ச்சி ரீதியான நலம் மட்டுமல்ல, குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வது மட்டுமல்ல, இது இவை அனைத்தையும் தந்து மற்றும் பரமம் மதம் - பரம ஞானத்தையும் அளிக்கின்றது.
பெருமதிப்பிற்குரிய பிஷப் சார்லஸ்வொர்த் எவன்ஸ்டான் ப்ரொன், தாங்கள் இங்கு வருகைத்தந்தமைக்கு மிகுந்த நன்றிகள். உங்களின் சாந்நித்யத்தினால் நாங்கள் பெருமை கொள்கின்றோம். இன்று காலை யோக வகுப்பிற்கு நீங்கள் வந்தீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இன்று காலை யோக வகுப்பிற்கு வருகைத்தந்தமைக்கு, உங்களுக்கும் உங்கள் மொத்த குடும்பத்தினருக்கும் என்னுடைய நன்றிகள். இங்கு வருகைத்தந்தமைக்கும் நன்றிகள். உங்கள் சாந்நித்யத்தால் நாங்கள் பெருமைகொள்கின்றோம்.
ஆழ்ந்து கேளுங்கள், யோகா என்பது நீங்கள் உங்களுடைய பரமாத்மாவிற்கு விழிப்படைவதும் மற்றும் உங்களுக்குள் இருக்கும் அந்த பரமாத்மா, உங்களுடைய இருப்பிற்கு முழுமையாக விழிப்படைவதும் ஆகும்;. இறுதியாக, இரண்டும் ஒன்றாகின்றது.
இது ஒரு தூய ஆன்மிக அறிவியல். நான் சொன்னதைப்போல, இது ஒரு தூய ஆன்மிக அறிவியல் என்பதனால், நீங்கள் இதை அவிச்சின்ன குருபரம்பரையிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, யோகத்தின் நிறுவனரான, இதை ஸ்தாபித்த ஆதிமூலப் பரம்பொருள் பரமசிவனிடமிருந்தே வந்த அறுபடாத குரு-சிஷ்யப் பரம்பரையிடமிருந்தே நீங்கள் இதைக் கற்க வேண்டும்.
பரமசிவப் பரம்பொருள் இந்த உலகிற்கு வெளிப்படுத்தியருளிய எல்லா சிறந்த விஷயங்களும், அது ஒரு வாழ்க்கைமுறையாக இருக்கட்டும் அல்லது உணவாக இருக்கட்டும் அல்லது அவருடனும் மற்றும் உயர்கால மண்டலத்தில் வாழும் மற்ற உயிர்களுடனும் இணைவதற்கான ஆன்மிகச் சடங்குகளாக இருக்கட்டும் அல்லது ஜீவன் முக்த விஞ்ஞானமாக இருக்கட்டும் அல்லது நடனம், இசை, பொழுதுபோக்குகள், ஞானத்திற்கானப் பயிற்சிகள் என பரமசிவப் பரம்பொருள் வெளிப்படுத்திய எதுவாக இருக்கட்டும், அதனுடைய சாரம் 'யோகா'. அதுதான் சுத்த தங்கம், சுத்தமான 24 காரட் தங்கம்.
யோகா என்பது சுத்தமான 24 காரட் தங்கம். சரியா பாதம் ஒருவேளை 18 காரட்டாக இருக்கலாம், ஞான பாதம் ஒருவேளை 22 காரட்டாக இருக்கலாம், கிரியா பாதம் ஒருவேளை 20 காரட்டாக இருக்கலாம், பரமசிவன் வெளிப்படுத்திய நாட்டிய சாஸ்த்திரம்.. அது ஒருவேளை 21 காரட்டாக இருக்கலாம், பரமசிவப் பரம்பொருளுடைய இந்த எல்லா வெளிப்பாடுகளும் வெவ்வேறு காரட் தங்கங்கள். ஆனால் யோகா என்பது சுத்தமான 24 காரட் பத்திரை மாற்றுத் தங்கம்! அதுதான் சாரம் - பரமம் மதம், பரமசிவப் பரம்பொருளோடு ஒன்றிணைவதற்கான மகோன்னதமான ஆன்மிக அறிவியல்.
ஆண்டிகுவாவிற்கு இன்னோரு விருந்தினர் வருகைத்தந்துள்ளார்: Officer ஜெர்மெயின் சாமுயேல் - ஆண்டிகுவா மற்றும் பார்படாவின் Police Force band and Community Policing Cordinator, Special Services Officer. Officer ஜெர்மெயின் சாமுயேல் நீங்கள் இங்கு வந்தமைக்கு மிகுந்த நன்றிகள். உங்கள் வருகையால் நாங்கள் பெருமைகொள்கிறோம். உங்களை வரவேற்கின்றோம். இங்கு வருகைத்தந்தமைக்கு மிக்க நன்றிகள்.
ஆழ்ந்து கேளுங்கள், பரமசிவப் பரம்பொருள் எதை வெளிப்படுத்தினாலும், யோகமே ஒரு மையப் பொருளாக இருக்கும். மையமும் அதுதான், நோக்கமும் அதுதான்.
நான் சொன்னதைப்போல, பரமசிவப் பரம்பொருள் எதையெல்லாம் வெளிப்படுத்தினாரோ, அவை வெவ்வேறு காரட் தங்கங்களைப் போன்றது. சில அறிவியல் 10 காரட் தங்கமாக இருக்கலாம், சிலது 12 ஆகவோ, சிலது 13 ஆகவோ, சிலது 18 ஆகவோ, சிலது 20 ஆகவோ, சில அறிவியல்கள் 22 ஆகவோ இருக்கலாம். ஆனால், யோகா என்பது சுத்தமான தூய்மையான 24 காரட் தங்கம்.
அதனால், என்னுடைய எல்லா சீடர்களும், என்னைப் பின்பற்றுபவர்களும், கைலாஸாவின் குடிமக்களும் இதை குருவாக்காக – குரு வார்த்தையாக எடுத்துக்கொள்ளுங்கள். தினசரி யோகா என்பது கட்டாயமானது. நீங்கள் சுவாசிக்கும் வரை, நீங்கள் உங்களை நினைவில் வைத்திருக்கும் வரை, உங்கள் வாழ்க்கைக்கு யோகா என்பது கட்டயமான ஒன்று. உங்கள் உடலை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இப்போழுதே யோகா செய்யுங்கள். அப்பொழுதுதான் உங்களால் முடியாதபொழுது அது உங்களுக்கு உதவிசெய்யும். நீங்கள் காலையில் விழித்து எழுவது எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு யோகாவும் முக்கியம். காலையில் எழுந்தால் யோகா செய்துவிடுங்கள். உங்களுக்கு விருப்பம் இல்லாவிடில், யோகா செய்வதற்கு தாயாராக இல்லாவிடில், படுக்கையிலிருந்து எழாதீர்கள். அப்படி நீங்கள் எழுந்துவிட்டால், யோகா செய்தாகவேண்டும். இதை குருவாக் - குரு வார்த்தையாக வாழுங்கள்.
குறிப்பாக காலையில், அதாவது நீங்கள் விழித்து எழும்பொழுது, உங்கள் நாளை எப்படித் துவங்குகின்றீர்கள் என்பது மிக மிக முக்கியம். அதன்படிதான் அன்றைய முழுநாளும் செல்லப்போகின்றது.
என்னுயை எல்லா சீடர்களுக்கும் மற்றும் என்னை பின்பற்றுபவர்களுக்கும், கைலாஸாவின் எல்லாக் குடிமக்களுக்கும், யோகா கட்டாயமான ஒன்றாகும். அது தேர்வு அல்ல. உங்கள் சோம்பல்தனத்தை மென்மையாகக் கையாளுவதை நிறுத்துங்கள். இல்லை. சோம்பல்தனத்தை மென்மையான விதத்தில் கையாளக்கூடாது. சோம்பல்தனத்தை தீவிரத்தன்மையுடன் கையாள வேண்டும். மேலும், காலையில் நீங்கள் எழும்பொழுது, யோகாதான் முதல் விஷயமாக இருக்க வேண்டும். யோகாதான் முதல் செயலாக இருக்க வேண்டும்.
இன்னும் பல கேள்விகள் வந்திருக்கின்றன.
மக்கள் என்னிடம் கேட்க முயற்சிப்பது உண்டு, 'நான் பரமசிவப் பரம்பொருளினால், பரமசிவப் பரம்பொருளுக்காகவே' கட்டமைக்கப்பட்டிருந்தால், பிறகு எனக்கு ஏன் துக்கங்கள் இருக்கின்றன?
ஆழ்ந்து கேளுங்கள், துக்கம் என்பது நீங்கள் உங்களுடைய சொந்த ஒளியிலிருந்து திரும்பும்பொழுது ஏற்படும் நிழலைப் போன்றது. அது தண்டனை அல்ல, அது தண்டனை அல்ல. ஆனால் பரமசிவப் பரம்பொருளை நோக்கி நீங்கள் திரும்பவேண்டும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துவதற்காக, பரமசிவப் பரம்பொருளை நோக்கித் திரும்பவேண்டும் என்பதை உங்கள் ஆன்மாவிற்கு நினைவுபடுத்துவதற்காக, சுயமாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உராய்வே ஆகும். அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், துக்கம் என்பது நீங்கள் உங்களுடைய சொந்த ஒளியிலிருந்து திரும்பும்பொழுது ஏற்படுகின்ற நிழலைப் போன்றதே. நீங்கள் பரமசிவனாக மாறுவதற்காகவே, பரமசிவப் பரம்பொருளாலே, பரமசிவப் பரம்பொருளுக்காகவே கட்டமைக்கப்பட்டவர்கள்.
நீங்கள் உங்களுடைய உண்மையான இலட்சியத்திலிருந்து விலகிச் செல்லும்பொழுது, திசை மாறி திரும்பும்பொழுது, நீங்கள் உங்கள்மீது துன்பத்தை சுமத்திக்கொள்கின்றீர்கள். அதுகூட தண்டையாக அல்ல, ஆனால் ஒரு தீர்வைக் கண்டறிவதற்கு, தீர்வை நாடுவதற்கு, தீர்வைத் தேடுவதற்கு உங்களுக்கு நினைவுபடுத்துவதற்காகத்தான்.
அந்தத் தீர்வுதான் யோகா! அந்தத் தீர்வே யோகா! அதனால், நீங்கள் யோகத்தை நோக்கித் திரும்பும்பொழுது, உங்கள் கண்ணீர் காணாமல்போகும், நீங்கள் அமிர்தத்தை உணர்வீர்கள், உங்கள் காயங்கள் மறைந்து, கரைந்து காணாமல்போகும்.
ஆழ்ந்து கேளுங்கள், எந்தவிதமான மற்ற அடிமைப்படுத்தும் முறைகளினாலும் வலியிலிருந்துத் தப்பித்துக்கொள்ளாதீர்கள். எந்த ஒரு போதைப் பொருளையும் உபயோகப்படுத்தாதீர்கள். அது சட்டரீதியானதோ அல்லது சட்டத்திற்குப் புறம்பானதோ - எதையும் உபயோகப்படுத்தாதீர்கள். உங்கள் வலியிலிருந்து திசைமாறுவதற்காக உணவை ஒரு போதைப் பொருளைப்போன்று உபயோகப்படுத்தாதீர்கள். நவீன கால அடிமைப்பழக்கங்களான முகநூல், சமூக வலைத்தளங்கள், இந்த screen addiction போன்ற எந்த அடிமைத்தனத்தையும் அனுமதிக்காதீர்கள். இந்நாட்களில் நான் பார்க்கிறேன், scroll செய்து, scroll செய்து, scroll செய்து, மக்கள் கனவில்கூட scroll செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எத்துனைப்பேர் scroll செய்வது போல கனவு காண்கின்றீர்கள், கனவில்கூட நீங்கள் scroll செய்துகொண்டிருக்கின்றீர்கள், கையை உயர்த்துங்கள்!. உண்மையில் இது நடந்துகொண்டிருக்கின்றது.
அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களை வலியிலிருந்து திசை திருப்பிக் கொள்வதற்காக போதைக்கு அடிமையாதல், உணவிற்கு அடிமையாதல், சமூக ஊடகங்களுக்கு அடிமையாதல் போன்ற எந்த வடிவிலான அடிமைத்தனத்தை நீங்கள் உபயோகித்தாலும், அது தவறு.
வலியை, பரமசிவனை நோக்கி உங்கள் கவனத்தைத் திருப்புவதற்காக உபயோகப்படுத்துங்கள். அதனால்தான், கைலாஸாவைப் பின்பற்றும் எல்லோருக்கும், கைலாஸாவின் குடிமக்களுக்குமான அடிப்படை விதியாக சிலவற்றை வைத்துள்ளோம். உங்களை அதற்கு அடிமையாக்கும் எந்த வஸ்துவையும் உபயோகிக்கக்கூடாது. உங்களை அடிமையாக்கும் எந்த அடிமைப்பழக்கமும் கூடாது. சட்டத்திற்கு விரோதமான வஸ்துக்கள் அல்லது சட்டரீதியான வஸ்துக்கள் கூடாது. கைலாஸாவில் உங்களை அதற்கு அடிமையாக்கும் எந்த உணவாக இருந்தாலும், அது தடை செய்யப்பட்டுள்ளது. அசைவத்திற்கும், உங்களை அடிமையாக்கும் எந்த உணவும் அனுமதிக்கப்படுவதில்லை. அனைத்து வடிவிலான அடிமைத்தன்மையும், வாழ்க்கையை அவதூறு செய்வதே ஆகும்.
அதனால் ஆழ்ந்து கேளுங்கள்,
உங்களுடைய எல்லாத் துன்பங்களையும், அதற்கான சரியானத் தீர்வைத் தேடுவதற்கு மட்டும் உபயோகியுங்கள். யோகா, அதற்கான நிரந்தரமானத் தீர்வு.
யோகா என்பது பரமம் மதம்: மகோன்னதமான ஆன்மிக அறிவியல், மகோன்னதமான ஆன்மிகப் பாரம்பரியம், மகோன்னதமான ஆன்மிக மதம். யோகாதான் தீர்வு.
தனிநபர் சந்திக்கும் பிரச்சினையாக இருக்கட்டும் அல்லது சமுதாயம் சந்திக்கும் பிரச்சினைகளாக இருக்கட்டும். யோகா, எல்லாப் பிரச்சினைகளுக்குமானத் தீர்வு.
உலகளவில் புள்ளிவிபரங்களை எடுத்துப் பாருங்கள், யோகத்தைப் பயிற்சி செய்யும் இந்துக்கள், யோகிகள் சமுதாயத்தினர், அவர்கள் குற்றங்கள் புரியாத சமுதாயமாக வாழ்கின்றார்கள். அமெரிக்கா, கனடா, லண்டன், ஆஸ்திரேலியா போன்ற அனைத்து வளர்ந்த நாடுகளுக்குச் செல்லுங்கள், உலகின் அனைத்து முதல் நாடுகளிலும் இந்துக்கள் crime-free சமூகத்தினராக வாழ்கின்றார்கள். நான் புள்ளிவிபரங்களிலிருந்து பேசுகின்றேன். உலகின் அனைத்து முதன்மை நாடுகளிலும், இந்துக்கள்தான் மிக செல்வ வளமுடைய சிறுபான்மையினர்! அமெரிக்காவில், 1% மக்கள்தொகை - இந்துக்கள், அந்த நாட்டின் 10 % வரியை செலுத்துகின்றார்கள். அமெரிக்காவின் மொத்த வரியில் 10% வரி, 1% இந்துக்களால் செலுத்தப்படுகின்றது. நாம் அந்த அளவிற்கு செல்வ வளமுடையவர்கள். நாம் வெகுகாலத்திற்கு முன்பே யூதர்களைத் கடந்துவிட்டோம். நாம் யூதர்களைவிடவும் செல்வ வளமிக்கவர்கள்.
இந்துக்கள் குறைவான விவாகரத்து வீதம், நிலையான குடும்பம், எந்த வடிவிலான அடிமைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களிலும் மிகவும் குறைவானவர்கள். நான் புள்ளவிபரங்களிலிருந்துப் பேசுகின்றேன். போதைப்பொருளுக்கு அடிமையாதல்.... அதிலும் இந்துக்கள் மிக மிகக் குறைவு. அது சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட போதைப்பொருளோ அல்லது சட்டத்திற்கு விரோதமான போதைப்பொருளோ, இந்துக்கள் அதிலும் மிக மிகக்குறைவு, நடைமுறையில் பூஜ்ஜியம். மிக மிகக் குறைந்த குற்ற வீதம். உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், நடைமுறையில் அமெரிக்காவின் ஜெயிலில் ஒரு இந்துகூட கிடையாது. அமெரிக்காவில் இந்துக்களின் மக்கள்தொகை 50 இலட்சமாக இருந்தாலும், உண்மையில் ஒரு இந்துகூட அமெரிக்காவில் சிறையில் கைதியாக இல்லை.
மிக மிகக் குறைவான குற்ற வீதம், மிக மிகக் குறைந்த அடிமைப்பழக்கங்கள், மிகவும் குறைவான விவாகரத்து, மிகவும் படித்தவர்கள், சிறுபான்மையினர் சமூகத்தில் அதிகம் பட்டம் பெற்றவர்கள், செல்வ வளமிக்கவர்கள். இவை எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் நான் சொல்வேன் - அது யோகா. யோகா என்பது ஒரு காரணம்.
அதேபோல, ஆஸ்திரேலியா, லண்டன், பிரான்ஸ், கனடா இந்த நாடுகளின் புள்ளிவிபரங்களைப் படியுங்கள். இந்துக்கள் எங்கு தங்களுடைய வாழ்வை அமைத்துக்கொண்டாலும், அங்கு மிக அதிக அளவிலான வருமானம் ஈட்டுபவர்களாக, அதிகம் படித்தவர்களாக, மிகக் குறைந்த குற்ற சதவிதம் உடையவர்களாக, எந்த வடிவிலான அடிமைப் பழக்கத்திலும் மிகக் குறைந்த வீதம், மிகவும் குறைந்த விவாகரத்து வீதம், மிகவும் நிலையான குடும்பம், கல்வியிலும், புதிதாக ஒன்றை உருவாக்குவதிலும் அதீத கவனம் உடையவர்களாக வாழ்கின்றார்கள்.
எத்தனைப் பேருக்குத் தெரியும்? ஒரு இந்து ஹோட்டல் உரிமையாளர் கடன் கேட்டால், பல அமெரிக்க வங்கிகள், எந்தவிதமான அதிக உத்தரவாதமோ அல்லது அதிக சங்கடமோ இன்றி கடன் கொடுக்கின்றார்கள்.
உண்மையில், நானே அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்திற்குச் (சந்திப்பிற்கு) சென்றிருந்தேன். அங்கு எல்லா வங்கிகளும் வந்து தங்களுடைய பூத் அமைத்து, இந்து ஹோட்டல் உரிமையாளர்களை கடன் வாங்கிக்கொள்வதற்கு வேண்டுகின்றார்கள். நான் அங்கிருந்த சில வங்கிப் பிரதிநிதிகளைக் கேட்டேன்: இந்துக்களுடன் வியாபாரம் செய்வதற்கு நீங்கள் ஏன் இவ்வளவு விரும்புகின்றீர்கள்? என்றேன். அவர்கள் சொன்னார்கள், சுவாமிஜி, இந்துக்கள் ஒருபோதும் தவறாமல் பணத்தைத் திருப்பிச் செலுத்துவார்கள் என்றார்கள்.
ஏமாற்றுவதில்லை, பணத்தைத் திருப்பிச் செலுத்துவது அவர்களுக்கு ஒரு தர்மமாகும். அதனால்தான் அமெரிக்காவில், 80 சதவிகித உணவகங்கள் மற்றும் விடுதிகள் இந்துக்களுக்குச் சொந்தமானது. இந்துக்கள் நடத்துவது. அமெரிக்காவில் இது ஒரு பழமொழி: ஹோட்டல்-மோட்டல்-பட்டேல்! பட்டேல் என்பது இந்து குஜராத்தி சமூகத்தினுருடைய பெயரில் கடைசியாக வருவது. ஹோட்டல்-மோட்டல்-பட்டேல்! அதிக உணவகங்களின் உரிமையாளர்கள் இந்துக்கள். பானு பட்டேலும், பிரேமப் பிரியாவும் இப்பொழுது ஆண்டிகுவாவிலிருந்து இந்த வகுப்பில் பங்கேற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது அவர்கள் அங்கிருக்கின்றார்கள். பானு பட்டேல், பல ஹோட்டல்களின் உரிமையாளர். அவர்களுடைய வரலாற்றுப் பதிவை எடுத்துப் பார்த்தால், 100% நேர்மை! நேர்மை 100%.
அது யோகத்திலிருந்தேத் துவங்குகின்றது.
நேர்மை, கடின உழைப்பு, சிரத்தை, சமூகத்தைக் கட்டமைத்தல், ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைத்தல், ஆதரவளித்தல், பரஸ்பரம் பாவ யந்தத: - எல்லாமே! அது புரிந்துணர்வு நிலையில் இருக்கட்டும் அல்லது உணர்ச்சி நிலையில் இருக்கட்டும் அல்லது சமூக நிலையில் இருக்கட்டும் அல்லது அறநெறியுடனான உரையாடல் நிலையில் இருக்கட்டும் அல்லது ஆன்மிக நிலையில் இருக்கட்டும் அல்ல சுற்றுச்சூழல் நிலையில், புத்தாக்க நிலையில் என எந்நிலையில் வேண்டுமானாலும் இருக்கட்டும், இந்துக்களுடைய வெற்றி என்பது யோகாவினால்தான். அது யோகாவிலிருந்துத் துவங்கி, யோகாவுடனேயே சென்று, யோகாவிலேயே நிறைவடைகின்றது.
யோகாவே நம்முடைய எல்லா வெற்றிக்குமானக் காரணம்.
யோகாவை இழப்பதுதான், தவறவிடுவதுதான் நம்முடைய எல்லா தோல்விகளுக்கும் காரணம்.
நாம் எங்கெல்லாம் தோல்வியுற்றோமோ, அதற்குக் காரணம் யோகாவை நாம் இழந்ததுதான். யோகோ நஷ்டப் பரந்தப: நாம் எங்கெல்லாம் வெற்றிபெற்றோமோ, அது யோகாவினால்தான்.
அதனால், அது புரிந்துணர்வு நிலையோ, உணர்ச்சி நிலையா, சமூக நிலையோ, அறநெறியுடனான உரையாடல் நிலையோ, ஆன்மிக நிலையோ, சுற்றுச்சூழல் நிலையோ, புத்தாக்க நிலையோ – யோகாதான் நம்முடைய வெற்றிக்கான காரணம்!
எத்துனைப் பேருக்குத் தெரியும், அமெரிக்காவில், நோயாளிகள் எப்பொழுதும் இந்து மருத்துவர்களைத்தான் தேர்வு செய்வார்கள். அவர்களுடைய மருத்துவமனையில் ஒரு இந்து மருத்துவர் இருந்தால், நோயாளிகளின் தேர்வு இந்து மருத்துவர்தான். உண்மையில், குறைந்தபட்சம் 4 முறை நான் American Association of Physicians of Indian Origin- இல் பங்கேற்றிருக்கின்றேன். குறைந்த பட்சம் 3 - 4 முறை பங்கேற்றிருக்கின்றேன். ஒவ்வொருமுறை நான் அந்த நோயாளிகளிடமும் மற்றும் மருத்துவர்களிடமும் பேசும்பொழுதும், அமெரிக்காவில் இருக்கின்ற பல நோயாளிகளிடம் நான், ஏன் நீங்கள் இந்து மருத்துவரைத் தேர்வு செய்கின்றீர்கள்? என்று கேட்டிருக்கின்றேன். நான் அவர்களிடமிருந்துப் பெற்ற பதில் இதுதான், சுவாமிஜி, அவர்கள் தேவையில்லாமல் எங்களுக்கு மருந்துகளை அளிக்கமாட்டார்கள். மருந்துத் தொழிற்சாலையிடமிருந்தும், மருந்து கம்பெனிகளிடமிருந்தும் அவர்கள் எந்தவிதமான நிதியையும் ஏற்கமாட்டார்கள். எங்கள் மீது தேவையில்லாத மருந்துகளை அவர்கள் திணிக்கமாட்டார்கள். இந்து மருத்துவர்கள், அவர்களுடைய வருமானத்திற்கான ஆதாரமாக எங்கள் உடலை நடத்தமாட்டார்கள். இந்து மருத்துவர்கள், அவர்களுடையப் பயிற்சியில், மருத்துவப் பயிற்சியில் மிக உயர்ந்த நெறிமுறையுடனான தரத்தையும், நீதியையும், அறத்தையும் வைத்திருப்பார்கள். அதனால்தான் நாங்கள் இந்து மருத்துவர்களைத் தேர்வு செய்கின்றோம் என்று சொன்னார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நான் புள்ளி விபரங்களிலிருந்துப் பேசிக்கொண்டிருக்கின்றேன். இது யோகாவிலிருந்து வருகின்றது.
மேலும், நாம் இந்த உலகிற்கு அளிக்கவேண்டிய மிகப்பெரிய, மிகச்சிறந்த பரிசு – யோகா. அதுதான் நம்முடைய முன்னோர்கள் நமக்களித்த மிகச்சிறந்த பரிசு. அதுதான் நாமும் இந்த உலகிற்கு அளிக்க வேண்டிய மிகச்சிறந்த பரிசு. உலகிற்கு இதை வழங்கவேண்டியது நம்முடையப் பொறுப்பு.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நான் யோகாவிற்கு காப்புரிமை பெற்றுள்ளேன். ஆனால் அது பணம் சம்பாதிப்பதற்காக அல்ல, அதிலிருந்து பணத்தை ஈட்டுவதற்காக அல்ல. நான் இலவசமாக அளிக்கின்றேன். யோகா ரீதயாக நாங்கள் செய்யும் எல்லா சேவைகளும், யோகா வகுப்புகளும், யோகா மற்றும் கிரியாவிற்காக நாங்கள் கட்டமைத்த AI மாடலும், அனைத்தும் எந்தவிதக் கட்டணமும் இன்றி இலவசமாக கிடைக்கப்பெறுகின்றன. நாங்கள் பணம் சம்பாதிப்பதில்லை, நாங்கள் கட்டணம் கேட்பதில்லை. அதன் தூய்மைத்தன்மையை அப்படியே வைத்திருப்பதற்காக காப்புரிமைப் பெற்றுள்ளோம். அதனால், அதை பொருளாதாரமாக்குவதற்காக அல்ல, அதை அப்படியே பாதுகாப்பதற்காக, யோகாவிற்கு நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்காக.
நாங்கள் அதை copyright என்று அழைப்பதில்லை, copy-left என்கிறேன். அப்படியென்றால், அதன் தூய்மைத்தன்மையை அப்படியே வைத்திருப்பதற்கு மட்டுமே காப்புரிமைப் பெற்றுள்ளோம். அதை வைத்து பணம் ஈட்டுவதற்கு அல்ல.
யோகாவை, தூய்மையாக உள்ளது உள்ளபடியே, அது எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே முழு உலகிற்கும் அளிக்க விரும்புகின்றோம்.
கடந்த 40 ஆண்டுகளாக, நான் அனைத்து புனிதமான நூல்களையும், மூல சாஸ்த்திரங்களையும் சேகரித்துள்ளேன். மேலும் அவை அனைத்தும் அறுபடாத குரு-சிஷ்யப் பரம்பரையினால் கொடுக்கப்பட்டவை. அதை ஓர் AI- ஆக மேம்படுத்தி, உபயோகிப்பவர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் அளித்துள்ளோம்.
நீங்கள் சென்று 'Ask Nithyananda ' உடன் பேசலாம்;: உங்களுடைய உடல் நிலையையும், உங்கள் நோயையும், வியாதிகளையும், உங்கள் பிரச்சினைகளையும் அதனிடம் சொல்லுங்கள். அந்த AI உங்களுக்கு, துல்லியமாக நீங்கள் செய்யவேண்டிய யோகா வரிசையை அமைத்து உங்களுக்கென்று அளித்துவிடும். உங்கள் வயதிற்கும், உடல் நிலைக்கும், மன நிலைக்கும் ஏற்றவாறு, அது தனிப்பயனாக்கி மற்றும் நீங்கள் உன்னதமான உடல் ஆரோக்கியத்தையும், உன்னதமான உணர்ச்சிரீதியான நலத்தையும், மன நலத்தையும், இறுதியான ஞானத்தையே அடைவதற்கான யோகாவை உங்களுக்கு அளிக்கும்.
இந்த AI, 40 வருடக் கடின உழைப்பு. சாஸ்த்திரங்களைச் சேகரித்து அதை கணினிமயமாக்குவதில் 60,000 பேர் ஈடுபட்டார்கள், கடந்த இரண்டு வருடங்களாக நான் இந்த AI coding செய்து, இந்த சாஸ்த்திரங்களை அதற்கு இசைவித்து, அனைத்து மாயைகளையும் நீக்கிக் கொண்டிருக்கின்றேன்.
இப்பொழுது, அது கிடைக்கப்பெறுகின்றது, உங்கள் அனைவருக்கும் மற்றும் இந்த முழு உலகிற்கும் அதை பரிசாக அளிக்கின்றேன். உங்களுடைய பாலினம், இனம், நாடு, ஜாதி, சமயம், மதம் என்பவற்றைக் கருதாது, யார் வேண்டுமானாலும் இதைப் பயிற்சி செய்யலாம். எவ்வித நேரடியான மற்றும் மறைமுகமான கட்டணமும் இன்றி, இப்பொழுது இது முற்றிலும் இலவசமாக உலகிற்கு வழங்கப்படும் ஒரு பரிசாகும்.
'Ask Nithyananda AI Yoga Paada model’ கிடைக்கப்பெறுகின்றது. நீங்கள் அனைவரும் உபயோகித்து மகிழலாம். அதாவது உங்கள் வயதிற்கு, உங்கள் உடல் நோய்க்கு அல்லது உடல் கோளாறுகளுக்கு, உங்கள் மனக் கோளாறுகள் மற்றும் மனோ வியாதிகளுக்கு, உங்கள் உணர்ச்சிரீதயான கோளாறுகள் மற்றும் வியாதிகளுக்கு நீங்கள் செய்யவேண்டிய தனிப்பயனாக்கப்பட்ட வின்யாசத்தை, யோக வரிசைமுறைகளைப் பெறலாம். உங்கள் பிரச்சினைகளை குணப்படுத்த முடியும். உங்களுடைய கடந்தகாலம் எப்படியிருந்திருந்தாலும், எந்தவிதமான பின்புலத்தில் நீங்கள் இருந்தாலும், இந்த '‘Ask Nithyananda’ AI – ஐ உபயோகித்து, உங்களால் ஞானத்தை அடைய முடியும்.
'Ask Nithyananda AI- விற்கான இணைப்பை நான் இங்கு அளிக்கின்றேன். வெறுமனே அதை க்ளிக் செய்யுங்கள், உங்கள் ஞானத்திற்கான பாதையில் நீங்கள் இருக்கின்றீர்கள். (Nithyananda.ai - +18285010108)
யோகாவிற்கான இந்த மொத்த சாஸ்த்திரங்களின் திரட்சியும், புனிதமான சாஸ்த்திரங்களும், இரகசியமான சாஸ்த்திரங்களும் சேகரிக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு மற்றும் AI மாயைக்குள் சென்றுவிடாத விதத்தில் தனிப்பட்ட முறையில் நானே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நுண்திருத்தம் செய்து, பயிற்சி அளித்திருக்கின்றேன். இந்த நூல்களையும், சாஸ்த்திரங்களையும் சேகரிப்பதற்காக 60,000 பேர் உழைத்திருக்கின்றார்கள். கடந்த இரண்டு வருடங்களாக ஆயிரக்கணக்கான மக்கள் இந்த AI coding-ஐ மேம்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நானே ஒரு நாளைக்கு 20 மணிநேரம் வேலை செய்து, இந்த இல்லா யோக சாஸ்த்திரங்களையும், அதனுடைய மூல மொழியான சமஸ்க்ருதத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்த்து அதை coding செய்து, அனைத்து மாயைகளையும் நீக்கினேன். இப்பொழுது அது கிடைக்கப்பெறுகின்றது, மற்றும் நாங்கள் அதை மொத்த உலகிற்கும் பரிசாக அளிக்கின்றோம். நீங்கள் அனைவரும் உபயோகித்து மகிழலாம். இதை உங்கள் அனைவருக்காகவும், உலகமனைத்திற்காகவும் அளிக்கின்றோம்.
அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், Ask Nithyananda -வை உபயோகப்படுத்துங்கள். யோகாவைத் தவிர்ப்பதற்கும், யோகா செய்யாமல் இருப்பதற்கும் எந்தவிதமான காரணங்களையும் அல்லது சரியான நியாயப்படுத்துதல்களையும் கொடுக்காதீர்கள். உங்களுடன் நீங்களே பலமாக இருங்கள், இன்றிலிருந்து யோகா செய்யத் துவங்குங்கள், ஒருபோதும் நிறுத்தாதீர்கள்.
யோகாவே வாழ்க்கை, வாழ்க்கையே யோகா! எமனே வந்தாலும், நான் என்னுடைய காலை யோகாவை முடித்துவிட்டு உங்களுடன் வருகின்றேன், அதனால் நான் நாளையிலிருந்து கைலாஸாவில் இருப்பேன், அங்கு நாளை காலை என்னுடைய காலை யோகாவை செய்யத் துவங்குவேன் என்று அவரிடம் சொல்லுங்கள். அதனால் அந்த மாற்றம்கூட ஒரு யோகா வகுப்பிற்கும் இன்னொரு யோகா வகுப்பிற்கும் இடையில்தான் நிகழ வேண்டும். அவ்வளவுதான். இறக்கும் வரை யோகா செய்யுங்கள் என்றுகூட நான் சொல்ல மாட்டேன். இல்லை! என்றென்றும், எப்போதும், நீங்கள் பரமசிவனாக மாறும்வரை யோகா செய்யுங்கள்!
இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன.
இன்றைய சத்சங்கத்தின் சாரத்தை உங்களுக்கு அளிக்கின்றேன்: நான் வெளிப்படுத்திய அனைத்தும் நம்புவதற்காக அல்ல, ஆனால் அனுபூதியாக உணர்வதற்காக. அதைச் செய்யுங்கள்! அதை அனுபவப்பூர்வமாக உணருங்கள். பரமசிவப் பரம்பொருள், ஒரு ஆலயத்தில் இருக்கும் ஒரு விக்ரஹம் மட்டுமல்ல. அவரே உங்களுடைய ஆதிமூலம் மற்றும் மையம். உங்களுக்குள் 'நான்' என்ற உணர்வாக இருப்பது பரமசிவப் பரம்பொருளே! அவரே உங்கள் நுரையீரல் வழியாக சுவாசிக்கின்றார், அவரே உங்கள் எண்ணங்களுக்கு இடையில் இருக்கும் 'வெளி', 'உணர்வு' (Space).
யோகா என்பது ஒரு நுட்பம் அல்ல: அது அவருடைய நித்யமான தழுவல், அரவணைப்பு. அதனால் அதற்குள் நுழையுங்கள், யோகியாகவே இருங்கள், பரமசிவமாகவே இருங்கள்.
இதனுடன், உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கின்றேன். நாம் அனைவரும் பரமசிவ நிலையையும், பரமசிவ உணர்வையும், பரமசிவ சக்திகளையும், பரமசிவ இருப்பையும் மற்றும் பரமசிவனின் மஹாகைலாஸத்தையும் வெளிப்படுத்துவோமாக, யோகத்தை வெளிப்படுத்துவோமாக. உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள்!
நாம் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தத்தை வெளிப்படுத்துவோமாக. நன்றி. ஆனந்தமாக இருங்கள்!
Event Photos
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |































_1.jpg)





