August 28 2019 - Tamil
Title:
Satsang in Tamil from The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashivam.
Transcript:
ஆதி சைவம் - ஞான பாதம்
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். பரமசிவ பரம்பொருளின் பேரருளால் உலகம் முழுவதிலும் ஆதி சைவமென்னும் இந்த சத்சங்கத்தை உள்வாங்குவதற்காக அமர்ந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், குருகுலத்தின் பால சன்யாசிகள் அனைவரையும் அன்போடும் பணிவோடும் வணங்கி வரவேற்கின்றேன்.
கைலாயத்திலிருந்து பூவுலகிற்கு உண்மையான உயர்ந்த வாழ்க்கை முறையான ஆதி சைவத்தை இறையனார் இந்த செம்மொழியில் இந்த சத் சங்கங்களின் மூலம் நம் எல்லோருக்கும் தந்தருள்வார் .
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் … இறையனார் சுந்தரேச பெருமாள் சொக்கநாதன் உலகிற்கெல்லாம் மிக உயர்ந்த வாழ்வியல் நெறியான ஆதி சைவம் வேதங்களிலும் ஆகமங்களிலும் அவர் வெளிப்படுத்தி அருளிய சிவாத்வைதம் என்னும் சுத்தாத்வைதம் சத்தியத்தின் சாரத்தை வேதங்களிலும் ஆகமங்களிலும் பெருமான் விரித்து உரைத்த விளக்கி உரைத்த வாழ்வியல் சத்தியங்கள் ஸ்ரீகண்ட பரமசிவம் ஆக பெருமான் வெளிப்பட்டு ஆகமங்களில் உரைத்த சத்தியங்களை நீலகண்ட சிவாச்சாரியார் ஆக மீண்டும் அவதரித்து பாஷ்யம் எழுதி அருளி உலகத்திற்கு விளக்கி அருளிய சிவாத்வைதம் சுத்தாத்வைத சத்தியத்தையும் அவர்களுக்குப் பின்னால் வந்த ஆச்சாரியர்கள் எழுதி அருளிய சிவ ஞான பாஷ்யம், மெய்கண்ட சாஸ்திரங்கள், சிவ ஞான போதம் மற்றும் பல்வேறு சைவ சித்தாந்த சாஸ்திரங்களிலும், விளக்கி அருளப்பட்ட மிக உயர்ந்த சத்தியமான சிவ அத்வைத சத்தியம்தனை இறையனார் இந்த சத் சங்கங்களின் மூலமாக நம் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கின்றார்.
கைலாயத்தில் இருந்து பரமசிவ பரம்பொருள் இறையனார் இந்த இனிமையான சத்சங்களின் மூலமாக உலகத்திற்கு மானுட இனத்திற்கு மிக உயர்ந்த வாழ்வியல் முறையை திரு கைலாயத்தில் இருந்து எம்பெருமான் வேதங்களாகவும், ஆகமங்களாகவும் வெளிப்படுத்தினார். அவரே ஆச்சர்யர்களாக வேதங்களையும், பஸ்யங்களையும், உரைகளையும். சைவ சித்தாந்தங்களாக செய்து வைத்தார். அவைகள் அனைத்தின் சாரத்தையும் ஆதி சைவம் என்னும் சத்சங்க தொடராக எம் பெருமான் இறையனார் நம் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கின்றார்/. ஞானபதமாக வித்யா பாதமாக அகமங்களிலே வாழ்வியல் நெறியாக வாழ்க்கைக்கு தேவையான உயர்ந்த உயர் உண்மைகளை பெருமான் ஞான பாதமாக விளக்கி அருளியிக்கின்றார். உள்ளதை உள்ளபடி உள்ளத்தில் உயிர்ப்பித்து உயிர்உயர் நிலை அடைந்து சிவாத்வைத நிலையில் சிவா பரமான சத்தியத்தை உயர் அனுபூதியாய் உணர்ந்த நிலையில் சுத்த அத்வைத நிலையில் உயிர் மலர்ந்து உணர்வு மலர்ந்து ஞான பயிர் மலர்ந்து உலகமெல்லாம் சைவத்தை வேளாண்மை செய்திட ஆதி சைவ வேளாளனாய் அம்பல வாணனே மேனி தாங்கி உலகிற்கெல்லாம் இந்த சத்தியங்களை மீண்டும் உரைத்திட உயிர் மலர்ந்து இங்கு தம்மொழியாம் , செய்தவனின் செம்மொழியாம் செப்பி நம் எல்லோர் உயிருக்குள்ளும் தன்னிலையும், உணர்வும், உயிரும் சக்திகளும் ஞானப்பெருவெளியும் மலர்ந்தருள பெருமான் திருவாய் மலர்ந்தருளும் சத்தியங்களை ஆழ்ந்து கேளுங்கள்/
நன்றாக புரிந்து கொள்ளுங்கள் எளிமையான நேர்மை, எளிமையான சத்தியம், எளிமையான உண்மை, மிக எளிமையான நேர்மையோடு, பெருமானோடு நம்மை இணைத்துக்கொள்வோமானால் அவர் உரைத்திடம் சத்தியங்கள் எல்லாம் நம் உயிருக்குள் உரைத்து நம்மை உயிர்ப்பிக்க வைக்கும் பெருமான் உரைத்திடும் சத்தியங்கள் கடல் கரைத்த பெருங்காயம் அல்ல. நம் காயத்துள் கரைத்த பெருங்காயம். நம் காயத்துள் உள்ளிருக்கும் காயங்களை அழித்திட காயத்திற்குள் பெருமான் கரைத்திடும் பெரும் காயம். இந்த ஞான சாத்தியங்கள் இந்த காயத்திற்குள் இருக்கும் பெரும் காயங்களை எல்லாம் அகற்றிட பெருமான் மலர்ந்தருளும், இந்த சாத்தியங்களை உள்ளதை உள்ளத்தில் உள்ளபடி உள்ளி உரைக்கின்றேன். உள்வாங்கி கொள்ளுங்கள். இது உங்களுக்குள் மலரும் பொழுது சிவபரமான சிவாத்வைதமும், சுத்த அத்வைத நிலையும் உங்கள் உயிருக்குள் மலர்ந்திடும். இறையனார் சொக்கநாத பெருமானை சோமசுந்தர பெருமானை மதுரை வந்து, செந்தமிழ் செய்த காரணமே கைலாயத்தின் வாழ்வியல் நெறிகளை ஞான பாதமாய் வேதங்களிலும், ஆகமங்களிலும் வகுத்து உரைத்த சத்தியங்களை செந்தமிழால், மனித இனத்திற்கு அளிப்பதற்காக ஆதி சைவம் அளிக்கவே பெருமான் செய்து வைத்த செம்மொழி தமிழ் மொழி. தமிழின் காரணமே அமிழ்தினும் இனிய இந்த சுத்த அத்வைத சத்தியங்களை சொல்வதற்க்காகவே, ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், சுத்த அத்வைத சாத்தியங்களை வாழ்வதானால் தமிழன் மட்டுமல்ல தழிழ் மொழியே தன் வாழ்வின் காரணத்தை முழுமை அடைந்து தன் வாழ்வின் நோக்கை சென்றடைந்து முழுமையடைகிறது.
ஆதி சைவத்தை வாழ்தல் தமிழனுக்கு மட்டுமல்ல தமிழுக்கே முழுமை, ஏனென்றால் பெருமான் இறையனாராக திருமேனி தாங்கி, தமிழென்னும் மொழியை முருகனுக்கும், முருகன் மூலமாய் அகத்தியனுக்கு அருளி இலக்கணம் செய்து வைத்த காரணமே கைலாயத்தின் வாழ்வியல் நெறியான வேதங்களையும், ஆகமங்களையும் ஞான பாதத்தின் சத்தியங்களையும் எல்லோருக்கும் சென்று சேர்ப்பதற்காக மட்டுமே, ஒவ்வொரு உயிரின் உயிர்ப்பிற்குள்ளம் உயர்ந்த வாழ்க்கையை நோக்கி
இறையனார் செம்மொழியில் செய்து வைத்திருக்கும் இருப்பு சத்தியத்தை விளக்குகிறார். சத்தியம் சக்தி பாதமாக உங்களுக்கு அளிக்கப்படும் போது சக்தியாக உங்களுக்குள் மலர்ந்து விடுகிறது. சத்தியங்கள் சக்தி பாதமாக உங்களுக்கு அளிக்கப்படும் போது சக்தியாக உங்களுக்குள் மலர்ந்து விடுகிறது இந்த வார்த்தை தான் இந்த சத்சங்கத்தின் சாரம். உயர் உண்மைகள் உங்களுக்கு அளிக்கப்படும் போது அது உங்களின் உயிர் உண்மைகளாக மாறி விடுகிறது.
இருப்பின் 4 கூறுகள் 1. இந்த உலகம் - ஜடம் - பொருட்கள் வாழ்க்கையின் ஒரு கூறு 2.இந்த ஜடத்தை எவ்வாறு அனுபவிக்கின்றோம் என்ற மனம் இரண்டாவது கூறு ஒரே பொருளை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பார்க்கின்றோம். 3.இருப்பின் 3வது கூறு - புத்தி (உங்களுக்குள் முடிவெடுக்க செய்வது) 4. இந்த புத்திக்கு உயிராக இருப்பது - பரமசிவ பரம்பொருளின் சாந்நித்தியத்தின் சக்தி நம் எல்லோருக்கும் 4வது கூறாக இருப்பது
இந்த நான்கும் சமமாக இருந்து வாழும் கால நிலையில் தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். வெவ்வேறு நாடுகளில் காலநிலைகளை அறிந்திருப்போம், நாம் எந்த காலநிலையில் வாழ்ந்தாலும் இந்த 4 கூறுகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகதான் இருக்கும். இந்த 4 கூறுகளையும் சரியாக நாம் வெளிப்படுத்த அதாவது ஜடத்தில் இருந்து மனம், மனதில் இருந்து புத்தி, புத்தியில் இருந்து உயிர் இயங்காமல். உயிரின் தாக்கத்தில் இருந்து புத்தியும், புத்தியின் தாக்கத்தில் மனமும், மனதில் இருந்து ஜடத்தையும் நாம் கையாளும் பொழுது நாம் சக்திகளை வெளிப்படுத்துகிறோம்/
இந்த சாத்தியங்களை அருணகிரியோகிஸ்வரர் எனக்களிக்கும் பொழுது ஒரு எளிமையான நேர்மை மட்டுமே இருந்தது. அதிலிருந்து அவர் சொல்வதை கேட்கும் பொழுது எனக்குள் சக்தியாக மலர்ந்தது ஒருமுறை விநாயகரை பற்றி ஒரு முறை கேள்வி கேட்கும் பொழுது அவர் சொன்னார். நிஜமாக யானை முகமும், தொந்தி வயிறும், திருக்கயிலையிலேயே கணபதி பெருமான் இருக்கின்றார். அதோடு 'ஓம் கம் கணபதியே நம!' என்று சொல்லி அழைத்தால் வருவார் என்றார். அது எனக்கு உயிரில் அடித்தது. உடனே நான் என் குரு சொன்னால் அது சத்தியம் என்ற எளிமையான நேர்மையில் இருந்து நான் மந்திரம் சொன்னவுடன் என் முன்னே விநாயக பெருமான் தோன்றினார். குருவுடன் இருந்த எளிமையான நேர்மையோடும், காதாலோடும், அன்போடும் இருக்கும் பொழுது அவரின் சக்தி உங்களின் சக்தியாக மாறும்.
சத்தியம் சக்தி பாதமாக உங்களுக்கு அளிக்கப்படும் போது சக்தியாக உங்களுக்குள் மலர்ந்து விடுகிறது. இந்த வார்த்தை தான் இந்த சத்சங்கத்தின் சாரம்.
Photos:
Link to Facebook Page:
https://www.facebook.com/srinithyananda.swami/posts/1384283965059932