28 November 2025 SPH Live Darshan
On this day, THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM—the ultimate manifestation, Paramavatara of Paramashiva, the ultimate superconsciousness—gave a Live Darshan on the auspicious occasion of the fifth day of the Karthigai Deepam Brahmotsavam, attended by devotees, disciples, citizens, and e-citizens of the United States of KAILASA (USK). THE SPH continued the exposition on the *Jnana Pada* (Path of Knowledge) of the Arunachala Purana, revealing the third profound truth centered on achieving profound peace through *Solal Illadha Smaranam* (Remembrance without Inner Narration). THE SPH elaborated that the constant flow of inner verbalization (*Solal*) prevents individuals from fully experiencing both pleasure and pain, causing toxic emotions to be stored in the organs and leading to premature aging. THE SPH concluded by declaring that the practice of immersing oneself in life without inner commentary is the ultimate secret to detoxification, eternal youth, and attaining genuine spiritual fulfillment.
Title
மனம் அமைதி பெற இதுஒன்றே வழி!அருணாச்சல புராண |பாகம் 8
Link to Video
Transcript
ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
உலகம் முழுவதிலும் இதயத்தின் மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
உலகம் முழுவதிலும் உள்ள கைலாஸங்கள், கைலாயத்தின் ஆலயங்கள், குருகுலங்கள், கோசாலைகள், பல்கலைக்கழகங்கள் அனைத்திலும், கார்த்திகை தீப உற்சவத்திற்காக ஒன்று கூடி இருக்கும் அன்பர்களையும், பக்தர்களையும், பார்வையாளர்களையும், ஸத்ஸங்கிகளையும் வணங்கி வரவேற்கின்றேன்.
இன்று கார்த்திகை தீப ப்ரஹ்மோத்ஸவத்தின் ஐந்தாம் நாள் திருவிழா. வெள்ளி ரிஷப வாகனத்திலே எம்பெருமான் எழுந்தருளி காட்சி அளிக்கும் நன்னாள்!
உலகம் முழுவதிலும் உள்ள கைலாஸங்களிலும் எம்பெருமான் ரிஷப வாகனத்திலே எழுந்தருளி, ரிஷபாரூடராய் காட்சி அளிக்கின்றார்! உத்ஸவங்கள்... இப்பொழுது உத்ஸவமும் ஆரத்தியும் பூஜைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
உத்ஸவங்கள், பூஜைகளில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
இளைய பாரதம், TN News 24 Digital, மாரஸ் TV, ராணி online, தமிழகக் குரல் TV, ரெட்ரோ மணி, யுவா தமிழ் Tech, பிரபாகர் கலைக்கூடம் போன்ற எல்லா தொலைக்காட்சிகள் வழியாக இணைந்திருக்கும் அன்பர்களையும், இந்தத் தொலைக்காட்சியின் உரிமையாளர்களையும் வருக வருக என்று வரவேற்கின்றேன்.
அருணாச்சல புராணத்தினுடைய ஜ்ஞாந பாதத்தை விளக்கிக் கொண்டிருக்கின்றேன். நேற்று அறிமுகம் கொடுக்கும்பொழுதே சொன்னேன், அருணாச்சல புராணத்திலே இந்த பத்து அம்சங்கள் இருக்கின்றன. ஸர்க்கம், விஸர்க்கம், வம்ஸம், மன்வந்திரம்… இந்த பத்து விளக்கங்கள். இந்த பத்து பாகங்கள்.
ஒவ்வொரு புராணத்திலுமே இந்த பத்தும் இருக்கும். ஸர்க்கம், விஸர்க்கம், விருத்தி, ரட்சா, அந்தராணி, வம்சம், வம்சானுசரிதம், ஸம்ஸ்தா, ஹேது, அபாஸ்ரயம்.
இதில், அந்த புராணத்திலே வருகின்ற ஸத்யங்கள் - ஜ்ஞாநம், விஜ்ஞாநம். அதுதான் அந்த புராணத்திலே வருகின்ற ஜ்ஞாந பாதம், சாரம். இந்த சாரத்தைத்தான் கதைகள் மூலமாக தெளிவாக நம் முன்னோர்கள் நமக்கு விளக்குகின்றார்கள். நேற்று ஒரு உதாரணமும் சொன்னேன், த்யாகராஜப் பெருமானப் பற்றி. அதாவது 'முசுகுந்தச் சக்ரவர்த்தி தேவலோகம் சென்று தேவேந்திரன் மீது தொடுக்கப்பட்ட, தேவலோகத்தின் மீது தொடுக்கப்பட்ட போரிலே, தேவேந்திரனுக்காக போரிட்டு வென்று, த்யாகராஜப் பெருமானை சோழ நாட்டிற்கு, திருவாரூருக்கு கொண்டு வந்தார்' என்பது புராணம்.
இதற்குள் இருக்கிற பல்வேறு நுட்பங்கள்... அதாவது 'எப்படிப் போனார்? எப்படி அது நமக்கும் சாத்தியம்? எனும் ஆன்மிக ரகசியங்கள், இதையெல்லாம் புரிந்துகொள்வது ஜ்ஞாந பாதம். எப்படிப் போனார்?' என்று தெரிந்துகொள்வது - 'ஜ்ஞாநம்'. 'எப்படி அது நமக்கும் சாத்தியம்?' என்று தெரிந்து கொள்வது 'விஜ்ஞாநம்';.
நான் நேற்று ஸத்ஸங்கத்தின்பொழுது சொல்லிக்கொண்டிருந்தேன், 'இந்த மாதிரி, த்யாகேசப் பெருமானுக்கு முசுகுந்தார்ச்சனை பண்ண சொல்லி இருக்கேன்' என்று. அதற்குப் பிறகுதான் எனக்குத் தெரியவந்தது, அதேநேரத்தில் நம் கைலாயத்தின் சார்பிலே முசுகுந்தார்ச்சனையும், பூஜையும், ஆரத்தியும் அப்பொழுது த்யாகராஜப் பெருமானுக்கு நிகழ்ந்துகொண்டிருந்தது என்று!
உலகத்தில் coincidence என்று ஒன்று கிடையவே கிடையாதுங்க ஐயா. 'பெருமான் அந்த பக்தியையும், பணிவையும், பூஜையையும், ஶ்ரத்தையோடு சமர்ப்பிக்கப்பட்ட பக்தியை, பூஜையை ஏற்றுக் கொண்டார்' என்பதற்கு அடையாளமாகத்தான் அங்கு பூஜை நடக்கும்பொழுதே, எனக்கு நேரடித் தகவல் ஏதும் வாராமல், தானாகவே தன்னை நினைவுபடுத்திக்கொண்டு, தன்னைத்தானே விளித்து, தன்னைப்பற்றித் தானே மொழிந்து கொண்டார், பொழிந்து கொண்டார்.
த்யாகேசா! த்யாகேசா...! 'அவருக்கு முசுகுந்தார்ச்சனை செய்யவேண்டும்' என்று முடிவெடுத்த உடனேயே பல நன்மைகள், breakthroughs, positive breakthroughs கைலாஸாவிற்கு நடக்க ஆரம்பித்துவிட்டது. அதை செய்ததும் இன்னமும் பெரிய positive-ஆன breakthroughs-ம், நன்மைகளும், கைலாயத்திற்கு நிகழ வேண்டிய பல நன்மைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
புராணம், புராணத்தினுடைய ஜ்ஞாந பாதம் - இதைப்பற்றி புரிந்துகொண்டீர்கள். இப்பொழுது, இன்னொரு உதாரணம்கூட சொல்லலாம். மொத்த மஹாபாரதப் புராணம் என்று எடுத்தோமானால், அது உண்மையில் இதிஹாஸம், ஆனால் புராணம் என்று அதை நாம் ஒரு உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டோமானால், அதிலிருக்கும் பகவத் கீதைதான் அதனுடைய ஜ்ஞாந பாதம்.
ஒவ்வொரு புராணத்திலுமே ஒரு கீதை இருக்கும். எந்த புராணத்தை எடுத்தீர்களானாலும் ஒரு கீதை இருக்கும். காரணம் என்னவென்றால் அதனுடைய மொத்த சாரம், அதாவது ஜ்ஞாந பாதத்தை இந்த கீதை மூலமாக சொல்லிவிடுவார்கள்.
ஈஶ்வர கீதை, ராம கீதை, ஶிவ கீதை, குரு கீதை என்று நம்முடைய ஸநாதன ஹிந்து தர்மத்திலே குறைந்தபட்சம் 108 கீதைகள் இருக்கின்றன. நாங்கள் இதுவரை தேடிய வரை, 108 கீதைகளைக் கண்டுபிடித்திருக்கின்றோம். பகவத் கீதை மட்டுமல்ல, அனு கீதை, வ்யாத கீதை, அவதூத கீதை, ஈஸ்வர கீதை, ஶிவ கீதை, ராம கீதை என்று 108 கீதைகள் எங்கள் கையிலே பட்டிருக்கின்றன, கண்ணிலே பட்டிருக்கின்றது. இதைத் தாண்டியும் இருக்க நிச்சயம் வாய்ப்பிகின்றது. எங்கள் கண்ணில் பட்டது வரை 108 கீதைகள் எங்கள் கண்ணில் பட்டிருக்கின்றன.
சற்றே ஆழ்ந்து கேட்டு புரிந்துகொள்ளுங்கள். அதேபோல இந்த மொத்த அருணாச்சல புராணத்தினுடைய ஜ்ஞாந பாதம், ஜ்ஞாந சாரத்தை நேற்றிலிருந்து விளக்கிக் கொண்டிருக்கின்றேன். மொத்தம் பத்து ஸத்யங்களாக வகுத்து விளக்கிக் கொண்டிருக்கின்றேன். பத்தில் இரண்டை விளக்கி விட்டோம்.
இன்று மூன்றாவது ஸத்யம்: 'சொலல்' இல்லாது ஸ்மரித்து, 'சொலல்' இல்லாது ஸ்மரணம் செய்து, ஸ்புரணத்தில் நிலைத்திருங்கள். இதான் மூன்றாவது ஸத்யம்.
ஆழ்ந்து கேளுங்கள், 'சொலல் இல்லாத ஸ்மரணம்'. இந்த 'அருணாச்சல ஸ்மரணம்' என்கின்ற வார்த்தையை நன்றாய் புரிந்துகொள்ளுங்கள்.
ஐயா, உங்கள் வாழ்க்கையில், 99 சதவீதம் பேர் கடைசி வரைக்கும் எதையுமே அனுபவிப்பது இல்லை ஐயா. வாழ்க்கையில் எவ்வளவு பெரிய நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும், உள்ளுக்குள்ளே சொல்வதன் மூலமாக, 'சொலல்' - வார்த்தைகளை ஓட விடுவதன் மூலமாக, அந்த நிஜமான அனுபவம் உங்களை முழுமையாக்காமலேயே வாழ்ந்து அழிந்து விடுகின்றீர்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… துக்கம், கெட்ட அனுபவம் கூட, நீங்கள் 'கெட்டது' என்று நினைப்பதுகூட 'சொலல்' இல்லாது, உள்ளுக்குள் அந்த எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டே இல்லாமல், அமைதியாக ஆழ்ந்து அதை அனுபவித்தீர்களானால், உங்களுடைய organs-க்குள் neuropeptides, toxins தங்காது.
குன்றாத இளமையுடன் இருப்பதற்கு, குன்றாத இளமை அடைவதற்கான வழி சொல்லிவிடுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள் ஐயா. பரம ரகசியம். அதாவது சுகமானாலும், துக்கமானாலும், எந்த அனுபவமானாலும், 'சொலல்' இல்லாது அதில் மூழ்குங்கள்.
அப்படியென்றால் என்னவென்றால்,உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இல்லாமல்... இப்பொழுது ஒரு உணவை சாப்பிடகின்றீர்கள் என்றால்கூட, அதாவது நான் ஐம்புலன் சுகத்தை செல்கின்றேன்.. ஒரு உணவை சாப்பிடுவது, ஒரு பொருளை, ஒரு உங்களுக்குப் பிடித்தமான ஒன்றைப் பார்ப்பது, பிடித்தமான ஒன்றைக் கேட்பது, பிடித்தமான ஒன்றை நுகர்வது, பிடித்தமானவர்களோடு உடல்ரீதியாக தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது... இந்த ஐம்புலன்களிலே எந்த சுகமானாலும், 'சொலல்' இல்லாமல், உள்ளுக்குள்ளே தடித்த வார்த்தைகளை உபயோகப்படுத்தாமல்... ஏனென்றால், அந்த தடித்த வார்த்தைகளை உபயோகப்படுத்தும்பொழுதே ஐயா, ஒரு திரைக்குப் பின்னால், ஒரு veil-லுக்குப் பின்னால் இருந்தேதான் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றீர்கள். அப்பொழுது என்ன ஆகின்றது என்றால், நிஜ அனுபவம் உங்கள் உயிரைப் பழுக்க வைப்பதே இல்லை.
அதனால்தான் எவ்வளவு சாப்பிடாலும், ஒன்றின்மீதும் திருப்தி வராது. எத்துனை அந்த புலனின்பங்களிலே ஈடுபட்டாலும், திருப்தி வராது. அதற்கு ஒரே காரணம் புரிந்துகொள்ளுங்கள்: உள்ளுக்குள் ஓடுகின்ற 'சொலல்' - 'சொல்லுதல்' - வார்த்தை ஓட்டம். அந்த வார்த்தை ஓட்டம் நிஜ அனுபூதி உங்களுக்குள் மூழ்காமல், நீங்கள் அந்த நிஜமான அனுபவத்திற்குள் மூழ்காமல், முழுமையாக உங்கள் புலனின்பங்களைகூட ரசிக்கவோ, ருசிக்கவோ, புசிக்கவோ இயலாது, இந்த ஓடுகின்ற வார்த்தைகள் ஒரு திரை மாதிரி தடுத்து விடுகின்றது.
எப்படியென்றால், உங்கள் உடல் முழுவதும் இரும்பு கவசம் போட்டுக் கொண்டு, இந்த உலகத்தை அனுபவிக்க முயற்சி செய்தீர்களானால், என்ன முடியும்? முடியாது. அதே மாதிரிதான்... கண் காணாத, invisible prison - கண் காணா சிறை, கண் காணா திரை, இந்த எப்போதும் 'சொலல்' என்று உங்களுக்குள் நடந்து கொண்டிருக்கின்ற அந்த செயல்.
ஒரு கொடுமை என்னவென்றால் ஐயா, நீங்கள் ரொம்ப விரும்பி ஒரு vacation-னுக்கு family-யோடு போகும்பொழுதுகூட, உங்களுடைய இந்த 'சொலல்', உங்களை relax பண்ணவே விடாது. 'இங்கு போனால் relax பண்ணலாம், அங்கு போனால் relax பண்ணலாம், இதைச் செய்தால் relaxed-ஆக இருக்கும், இதைச் செய்தால் peaceful-ஆக இருக்கும், அதைச் செய்தால் jolly-ஆக இருக்கும், இதைச் செய்தால் experience வேற level... என்று என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். எப்பொழுது 'சொலல்' இல்லாது இருக்கின்றீர்களோ, அதாவது உயிர்ப்போடு... 'சொலல்' இல்லாமல் தூங்கிப் போய்விடுது கிடையாது. அது வேறு, அது ஸுஷுப்தி.
பாவம், இந்த Gen Z--க்கு அதுவே difficult-ஆக போய்விட்டது. 'சொலல்' இல்லாது தூங்குவதுகூட, ரொம்ப கஷ்டமாக போய்விட்டது. 'சொலல்' இல்லாது இருத்தல், மிகப்பெரிய, சொல்லுதற்கு அரிய சுகம், அமைதி.
ஐயா, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இன்னொரு ரகசியத்தை சொல்கின்றேன்... எனக்கு ரொம்ப மனதுக்கு இனிய பக்தர்கள், சீடர்கள்... அதாவது, தன்னுடைய வாழ்க்கையையே எனக்காக த்யாகம் செய்த என் பக்தர்கள், சீடர்கள்... அவர்கள் என்னை வந்து பார்க்கும்பொழுது, அவர்களுடைய time, treasure, talent - அத்தனையும் என்னுடைய திருவடியில் வைத்து, எனக்கே ஶரணடைந்த பக்தர்கள்... அவர்களைப் பார்க்கும்பொழுது, நான் செய்வது ஒன்றே ஒன்றுதான், எனக்குள்ளே 'சொலல்' இல்லாமல், அவர்களுக்குள்ளும் 'சொலல்' இல்லாமல் அமரச் சொல்லி, silent-ஆக, இந்த ஸாந்நித்யத்தில் அமைதியாக அமர்ந்திருப்போம் ஐயா.
அதுதான், நம் உயிருக்கு நிகழுகின்ற மிகப்பெரிய நன்மை, அமைதி, ஆனந்தம், சுகம், உயிருக்கு ஜெயம்.
யார் யாரெல்லாம், என் மீது அன்பும், பற்றும், பக்தியும், ஶ்ரத்தையும் உடையவர்களோ, இதை தினந்தோறும் பழகுங்கள் - சொலல் இல்லாது, வாழ்க்கையிலே வாழ்தல்.
ஒரு காபி குடிக்கின்றீர்கள் என்றாலும், ஒரு breakfast சாப்பிடுகின்றீர்கள் என்றாலும், ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுகின்றீர்கள் என்றாலும், உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது பாருங்கள், அதை நகற்றி வைத்துவிட்டு, அந்த உணவினால், 'உங்கள் உடல், மனம், உயிருக்குள் என்ன நடக்கிறது' என்று அப்படியே பார்த்துகொண்டு, மெதுவாக 'சொலல்' இல்லாது ருசியுங்கள். 'சொலல்' இல்லாது புசியுங்கள். 'சொலல்' இல்லாது ரசியுங்கள். 'சொலல்' இல்லாது வாழுங்கள்.
கேளுங்கள்.. உங்கள் வாழ்விலே 'சுகம்' என்று நினைப்பவைகளை, சுகங்களை, 'சொலல்' இல்லாது ரசியுங்கள், ருசியுங்கள், புசியுங்கள். அப்பொழுது என்ன ஆகும் என்றால், துக்கங்களையும், 'சொலல்' இல்லாது ரசிக்கவும், ருசிக்கவும், துவங்குவீர்கள்.
ஐயா, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வாழ்வினுடைய துக்கங்களை, உள்ளுக்குள்ளே 'சொல்லல்' எனும் எண்ணவோட்டத்தோடு சேர்ந்து எதிர்கொள்பவன், அதை வலி, வேதனை, மன அமைப்பாக, neuropeptides-ஆக, toxic emotions-ஆ மாற்றி, உங்கள் உடலில் இருக்கின்ற organs முழுக்க store பண்ணி, 'இளமையில் முதுமை' எனும் கொடுமை உருகிறீர்கள்.
ஆனால் யாரெல்லாம் துக்கத்தின்பொழுது கூட, 'சொலல்' இல்லாது அதை வாழுகின்றீர்களோ, அது ஜீரணமாகி, துக்கம்கூட உடலில் எந்த organs-லும் store ஆகாமல், கழிந்து சென்றுவிடும். Detox ஆகிவிடும்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: ஒரு மனிதனுடைய வயது, chronological… அதாவது இந்தப் பிறப்பிலிருந்து சொல்லப்படுகின்ற வருடம் சார்ந்தது அல்ல. Inner organs-னுடைய வயதுதான் முக்கியம். அது சார்ந்துதான் உங்கள் ஆயுள், ஆரோக்யம் எல்லாமே முடிவாகின்றது.
உங்களுடைய internal organs, young-ஆக, இளமையாக, குன்றாத இளமையோடு இருப்பதற்கான வழி இதுதான் தெரிந்துகொள்ளுங்கள். Internal organs குன்றாத இளமையோடு இருக்குமானால், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பார்த்து வியக்கின்ற அளவிற்கு, இளமையோடும், உற்சாகத்தோடும், ஆனந்தத்தோடும், ஆரோக்யத்தோடும் இருப்பீர்கள்.
என்னுடைய வாழ்க்கையில், நான் செய்கின்ற மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அடிக்கடி ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது, மொத்தமாக 'சொலல்' விட்டு, சும்மா ஸமாதியில், நிர்விகல்ப ஸமாதியில் இருந்து விடுவது. அப்பொழுது என்ன ஆகும் என்றால், சாதாரண இந்த ஸஹஜ ஸமாதியில் இயங்கும்பொழுதுகூட, தேவைப்படும்பொழுது மட்டுமே 'சொலல்' நிகழும். உள் உணர்விற்குள் 'சொலல்' நிறைவது இல்லை.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எனக்கும், ஒரு சாதாரண மனிதனுக்கும் இருக்கின்ற வித்தியாசம் இதுதான்: எனக்குள் சொலல், 'நிகழுகின்றது', எனக்குள் சொலல், 'நிறைந்து' இல்லை. ஆனால் சாதாரண மனிதனுக்குள், 'சொல்லுதல்' நிகழாதகாலத்தில் கூட, 'சொல்லுதல்' நிறைந்து இருக்கின்றது.
உங்கள் உணர்விற்குள், 'சொல்லுதல்' நிறைந்து இருந்தால், வாழ்க்கையே மிகப்பெரிய மாயக் குழப்பத்தில் சீரழியும்.
'சொலல்', தேவைப்படும்பொழுது மட்டும் நிகழ்ந்தால், 'சொலல்' உங்களுக்குள் நிறைந்து இருக்காமல், தேவைப்படும்பொழுது மட்டும் நிகழ்ந்தால், நீங்கள் ஜ்ஞாநி, ஜீவன் முக்தர்.
தேவைப்படும்பொழுது மட்டும் 'சொலல்' நிகழுமானால், சொல்ல வேண்டியவற்றை மட்டும் சொல்வீர்கள். சொல்ல வேண்டியவற்றை சரியாகச் சொல்வீர்கள். சொல்ல வேண்டியவற்றை இனிமையாகச் சொல்வீர்கள். இந்த மூன்றையும்தான் அன்னை ஸரஸ்வதி தன் திருவடிவத்திலே காட்டுகின்றாள்.
Conscious-ஆக சொல்வதுதான் ஜெபமாலை. சொல்ல வேண்டியவற்றை Conscious-ஆக சொல்வதுதான் - ஜெபமாலை. சொல்ல வேண்டியவற்றை இனிமையாகச் சொல்வதுதான் - வீணை. சொல்ல வேண்டியது பரம ஸத்யமாக இருக்கவேண்டும் என்பதுதான்- ஶாஸ்த்ரம், பரம ஸத்ய, ஶாஸ்த்ர ஏடுகள். அன்னை ஸரஸ்வதி இந்த ஸத்யத்தைத்தான் காட்டுகின்றாள்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். சொலல் இல்லாது, ஸ்மரணத்தில் இருந்து, ஸ்புரணத்தில் ஆழ்ந்திருக்கப் பழகுங்கள். தினந்தோறும் ஒரு அரைமணி நேரமாவது, ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது ஐயா... இந்த குடும்பம், வேலை எல்லாவற்றையும் விட்டுட்டு, தனியாக ஒரே ஒரு நாள் spend பண்ணுங்கள். உங்கள் வீட்டிலேயே இருந்தாலும் பரவாயில்லை அல்லது வேறு ஏதாவது ஒரு கோயிலுக்கோ அல்லது மடத்திற்கோ அல்லது ஏதாவது ஒரு தீர்த்த ஸ்தானத்திற்கோ சென்று spend பண்ணால், ஒரு மலைக்கோ, திருவண்ணாமலை மாதிரி அல்லது வெள்ளிமலை மாதிரி ஏதாவது ஒரு மலைக்கோ சென்று spend பண்ணால் தவறில்லை. ஆனால் என்ன? உங்களுடைய வாழ்விலே தினசரி வருகின்ற எந்த உறவுகளும், நட்பும் உடன் இருக்கக்கூடாது. மாதத்தில் ஒரு நாளாவது, குறைந்தபட்சம் ஒரு 3 மாதத்திற்கு ஒருமுறை என்றால், ஒரு வாரமாவது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றால், ஒரு மாதமாவது முடிந்தவரை spend பண்ணுங்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எல்லோரும் சுற்றி இருந்தும், தனிமையாக உணர்வது, loneliness. அது மிகக் கொடுமையான, நேசிக்கப்படாததனால், நேசிக்கத் தெரியாததனால், அன்பைக் கொடுக்கவும், அன்பை வாங்கிக்கொள்ளவும் தகுதியோ, தைரியமோ, அந்த அளவிற்கு உணர்வில் முதிர்ச்சியோ இல்லாததனால் வரும் கொடுமையான நரகம்.
ஆனால், இப்பொழுது நான் சொல்கின்ற இந்த தனிமை, இது - aloneness. இது conscious-ஆக நீங்கள் choose பண்ணுகின்ற தனிமை. இது எதற்காகவென்றால், நீங்கள் இந்த பூமிக்குத் தனியாகத்தான் வந்தீர்கள், தனியாகத்தான் வாழுகிறீர்கள், தனியாகத்தான் செல்வீர்கள். அதனால், உங்களுடைய ஸ்வரூபமான அந்த நிர்வாண நிலை, தனிமை, அந்த சுகத்தை, அந்த நிலைக்கு உங்களைத் தயார்படுத்தி, உங்களை அந்த இருப்பிலே வைத்துக்கொள்வது.
ஐயா, நான் சொல்கின்ற இந்த தெய்வீக தவத் தனிமை, தவத்திற்காக conscious-ஆக நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற தனிமை, உங்கள் உயிரையும், உடலையும், மனதையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.
ஐயா, பணத்தால் ஒருவன் வறுமையாக இருந்தால்கூட மன்னித்துவிடலாம். ஆனால் ஹிந்துவாகப் பிறந்துவிட்டு, அதிலும் இந்தியாவில் பிறந்துவிட்டு, ஜ்ஞாநத்தால் ஒருவன் வறுமையாக இருக்கின்றான் என்றால், அவனை மன்னிக்கவே முடியாது. மன்னிக்க முடியாத குற்றம்.
காரணம் என்னவென்றால், நம் காற்றிலேயே ஜ்ஞாநக் கருத்துக்கள் இருக்கிறது ஐயா. நாம் சும்மா காதை மூடாமல் இருந்தோமானாலேப் போதும். எங்கிருந்தாவது ராமாயணம் காதில் வந்து விழும், பாகவதம் காதில் வந்து விழும், மஹாபாரதம் காதில் வந்து விழும், இந்த ஜ்ஞாந ஸத்யங்கள் காதில் வந்து விழுந்துகொண்டே இருக்கும்.
வேண்டும் என்றே திமிர் பிடித்து, பேய்த்தனம் பிடித்து, ராக்ஷஸன் மாதிரி ஆகி, arrogance-னாலும், violence-னாலும், 'இந்த ஜ்ஞாநம் அனைத்தையும் ஒதுக்குவேன், வெறுப்பேன், அழிப்பேன், எதிர்ப்பேன்' என்று தன்னைத்தானே அழித்துக்கொள்கிறவர்கள்தான்... வேறு வழி இல்லை, சரி அது அவர்களுடைய சுய-விருப்பம். Suicide பண்ணிக்கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. நாம் தலையிட முடியாது.
ஆனால் ஒரு சாதாரண மனிதன், பாரதத்தில் பிறந்தவன், ஜ்ஞாந வறுமையில் இருக்கக்கூடாது.
இந்த தவத் தனிமை உங்களை ஜ்ஞாந வறுமையிலிருந்து வெளியில் எடுத்து, மிகப்பெரிய ஜ்ஞாந செல்வந்தனாக மாற்றும். உங்களைப் பற்றி பல விஷயங்கள், இந்த தவத் தனிமை காட்டிக் கொடுக்கும்.
வெளியில் இந்த external noise-ல் இருந்து கொஞ்சம் ஒதுங்குங்கள். அப்பொழுதுதான் உள்ளே இருக்கின்ற அந்த inner noise-ல் இருந்து ஒதுங்க வாய்ப்பு வரும். இப்பொழுது external noise-ல் இருந்தே ஒதுங்கவில்லை என்றால், internal noise-ல் இருந்து ஒதுங்க முடியாமலேப் போய்விடும்.
External noise-ல் இருந்து ஒதுங்குங்கள். internal noise-ல் இருந்து ஒதுங்குங்கள். அது மாதிரி ஒதுங்கி, உங்களை நீங்களே சற்றே உங்களுக்குள் மூழ்கி... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… இந்த 'சொல்லுவதை'த் தாண்டி உங்களுக்குள் ஒரு மிகப்பெரிய, உங்கள் personality ஒரு ஆழ்கடல்போல, பரந்த வானம்போல, ஒரு பெரிய space உங்களுக்குள் இருக்கின்றது என்பது புரிந்துவிடும் ஐயா.
இப்பொழுது உங்களுடைய வார்த்தைக் கொந்தளிப்புகள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், நீங்கள் விதவிதமாக உருவாக்கிக்கொள்கின்ற complications, உங்களைப் பற்றி நீங்களே வைத்திருக்கின்ற கருத்துக்கள், உங்களைப் பற்றி நீங்கள் தொடர்ந்து சொல்லிக்கொள்கின்ற கதைகள், இது எல்லாவற்றையும் தாண்டி, உங்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாமல், இந்த கதை கேட்டே செத்துப்போய் விடுகிறீர்கள் ஐயா.
என்ன கொடுமை! என்ன கொடுமையப்பா.
உங்களைப்பற்றி நீங்கள் சொல்லிக்கொள்கின்ற, சமுதாயம் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்து, நீங்கள் அதை edit பண்ணி, own-ஆக creative-ஆக cook-up பண்ணி சொல்லிக்கொள்கின்ற எல்லாக் கதைகளையும் விட்டொழியுங்கள்.
உங்களைப்பற்றி நீங்கள் சொல்லிக்கொள்கின்ற எல்லா கதைகளுமே, சமூகம் சொன்ன கதைகளின் வேறு வேறு edited, cut and paste versions தான். உங்களைப்பற்றி நீங்கள் சொல்லிக்கொள்கின்ற எல்லா கதையும்தான், உள்ளுக்குள் ஓடுகின்ற அந்த 'சொலல்' என்கிறேன்.
பாருங்கள், அதை விட்டு, வெளியில் இருக்கின்ற external noise-ஐ விட்டு, உள்ளுக்குள் இருக்கின்ற internal noise விட்டு, உங்களை எதிர்கொள்ளுங்கள். 'சொலல்' இல்லாத இருப்பை உணரத் துவங்குங்கள்.
இந்த 'சொலல்' இல்லாமல் இருந்தால், உடனே மயக்கமாக, அப்படியே மெதுவாக தூங்கிவிடுவது. அது absence. உங்களுடைய absence. நான் உங்கள் absence-ஐ feel பண்ணச் சொல்லவில்லை. 'சொலல்' இல்லாது இருத்தல். வார்த்தைகள் இல்லாத உங்களுடைய presence. Absence இல்லாத உங்கள் இருப்பை உணருங்கள்.
அப்பொழுது என்ன ஆகும் என்றால், உங்களுடைய உயிரைப் பற்றிய புரிதல் உங்களுக்கு வரும். உயிரின் நோக்கம் புரியும். உயிரின் உயிர்ப்பு மலரும்.
ஐயா, உங்களுக்குள் ஓடுகின்ற patterns, habits, எண்ணங்கள், thoughts, இதில் முக்கியமாக, உங்களை அறியாமலே வந்து உங்களை drain பண்ணிவிடுகின்ற அந்த thoughts-ஐ எல்லாம் கண்டுபிடித்துவிடுவீர்கள் ஐயா. அந்த thought காரணமே இல்லாமல் வரும். யாரோ ஒருவர் முன்னாடி போகின்றவர், கருப்பு வேட்டி கட்டிக்கொண்டு போனார் என்றால், இந்த கருப்பு வேட்டி கட்டிக்கொண்டு, யாரோ ஒருவர் உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் என்னென்னவெல்லாம் துக்கம் கொடுத்தாரோ, அவர்கள் நினைவெல்லாம் வந்து, திடீர் என்று drain-ஆகி dull ஆகிவிடுவீர்கள். Sudden-ஆ thought currents உள்ளே வந்து drain-ஆகி போகிறது பாருங்கள். இந்த patterns-ஐ எல்லாம் கண்டுபிடித்துவிடுவீர்கள் ஐயா. இந்தத் தேவையில்லாத பயங்கள், குற்ற உணர்ச்சிகள், இதெல்லாம்தான் உங்களை ரொம்ப சின்னவனாக வைத்திருக்கும் ஐயா.
'நீங்கள் பரம்பொருள்' என்பதைத் தவிர, நீங்கள் வேறு என்ன கருத்தை, உங்களைப் பற்றி வைத்திருந்தீர்களானாலும், அது தாழ்வு மனப்பான்மையே.
Superiority complex-என்று ஒன்றேக் கிடையாது ஐயா. இருப்பது மொத்தமும் inferiority complex தான் ஐயா. ஏனென்றால், உங்களைப் பற்றிய பரம ஸத்யம் என்னவென்றால், 'நீங்கள் பரம்பொருள்'. அந்த கருத்தை நீங்கள் வைத்திருந்தீர்களானால், superiority complex, inferiority complex இரண்டுமே இருக்காது.
காரணம் என்னவென்றால், நீங்கள் கடவுளைவிட உயர்ந்தவரும் கிடையாது, கடவுளை விடத் தாழ்ந்தவரும் கிடையாது, கடவுளுக்குச் சமமானவரும் கிடையாது, 'நீங்கள் கடவுள்' என்பதுதான் ஸத்யம்.
நீங்கள், பரம்பொருளைவிட உயர்ந்தவரும் கிடையாது, பரம்பொருளைவிட தாழ்ந்தவரும் கிடையாது, பரம்பொருளுக்குச் சமமானவரும் கிடையாது, 'நீங்கள் பரம்பொருள்' என்பதுதான் ஸத்யம்.
ஐயா, நான்றாகப் புரிந்துகொள்ளுங்கள், என் உயிருக்கு இனியவர்களே, 'நீங்கள் பரம்பொருள்' என்று அந்த ஸத்யத்தை ரசித்து, ருசித்து, புசித்து, சற்றே அதை உணர்ந்து, அதிலிருந்து பக்தி செய்தீர்களானால், பக்திகூட முழுமையான பரம பக்தியாக இருக்கும் ஐயா.
கோபிகைகளுடைய பக்தி பார்த்தீர்களானால், தன்னையே கண்ணனாய் நினைத்து நினைத்த பரம பக்தி ஐயா. பரமாத்வைதத்தில் நிலைபெற்ற பக்தி.
இல்லையென்றால், பெரும்பாலான நேரங்களில், உங்கள் deception-ஐ, devotion-என்று நினைக்க ஆரம்பித்துவிடுவீர்கள். இந்த போலி பணிவு இருக்கிறது பாருங்கள்… அதாவது, உங்களைப்பற்றி குறைந்த அளவு நினைப்பதுதான் 'நிஜமான பணிவு'. சிறிதாக நினைப்பது நிஜமான பணிவல்ல. இரண்டிற்கும் வித்யாசம் இருக்கிறது.
'உங்களை சிறியவன்' என்று நினைப்பது நிஜமான பணிவு அல்ல. அது உங்களுடைய அழிவிற்கு வழிவகுக்கும். 'உங்களைப்பற்றி நினைப்பது, தொடர்ந்து நினைப்பது, உங்களைப்பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்தைத் திரும்பத் திரும்ப உங்களுக்குச் சொல்லிக்கொள்வது' - குறைவாக இருக்க வேண்டும். அதுதான் பணிவு.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?... 'ஐயோ, நான்.. நான் ஒரு தூசு, நான் ஒரு இது, நான் ஒரு அது...' அதாவது பெருமானை உயர்த்த வேண்டும் என்றால், நீங்கள் உங்களைத் தாழ்த்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதை நீங்கள் வெளியில் வேண்டுமானால் சொல்வீர்களே தவிர, நீங்களே உண்மையில் அதை நம்பவும் மாட்டீர்கள். ஒருவேளை நம்பத் துவங்கிவிட்டீர்களானால், அது உங்களுக்கு நீங்களே செய்துகொண்ட மிகப்பெரிய தவறான மூளைச்சலவை.
ஐயா நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: ஸ்ரு'ந்வந்து விஸ்வே அம்ரு'தஸ்ய புத்ரா: வேதாஹ மேஹம் புருஷம் மஹாந்தம்!
ஆழ்ந்து கேளுங்கள்… அமரத்துவத்தின் மலர்ச்சிகளே! அமரத்துவத்தின் வெளிப்பாடுகளே! பரம ஸத்யத்தை நான் உணர்ந்தவன் என்பதனால், உங்களுக்கு அதை அப்படியே சொல்லுகின்றேன். நான் வந்து பக்தி நெறியை, த்வைத நெறியை, 'இறைவன் நம் முன்னால் இருக்கின்றான்' என்று வழிபடுகின்ற அந்த நெறியை எந்தக் குறையும் சொல்லவில்லை. அதை நான் தரம் தாழ்த்தி எல்லாம் சொல்லவில்லை ஐயா. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், த்வைதம், விஶிஷ்டாத்வைதம், அத்வைதம் - இது எல்லாமே ஒவ்வொரு நிலையிலே ஸாதகனுக்கு சத்தியம். அனுபூதியாக இருக்கும்.
Ultimate... பரம ஸத்யம், Ultimate Truth, இறுதி ஸத்யம், உறுதி ஸத்யம், அறுதி ஸத்யம் என்னவென்றால்... இந்த எல்லா ஸம்ப்ரதாயங்களுமே ரகசியமாக இந்த அறுதி ஸத்யத்தைச் சொல்லிவிடுகின்றார்கள் ஐயா. சைவ ஸித்தாந்தம் கூட 'ஶிவ ஸாயுஜ்யம்' என்கின்ற வார்த்தையினால், 'பர முக்தி' என்கின்ற வார்த்தையினால், இந்த இறுதி ஸத்யம், அறுதி ஸத்யத்தை சொல்லிவிடுகின்றார்கள் ஐயா.
'நீங்கள்' என்று உங்களுக்குள் இருக்கின்ற பொருள் - 'பரம்பொருள்!' அதைப்பற்றி உங்களுக்கு நீங்களே சொல்லிக்கின்ற, சொல்லிக்கொள்கின்ற கதைகள்தான் 'மாயை'. உங்களைப்பற்றி நீங்கள், சமூகம் சொல்லுவதைக் கேட்டு நீங்களாகவே உருவாக்கிக்கொண்டு, உங்களைப் பற்றி நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கின்ற கதைகள்தான் மாயையே தவிர, இந்தக் கதைகளையெல்லாம் விட்டொழித்து, வெளியில் noise, ஶப்தங்கள், உள்ளுக்குள் இருக்கின்ற noise, இந்த இரண்டையும் விட்டொழித்து, சற்றே பொறுமையோடு, 'சொலல்' இல்லாத ஸ்மரணத்தில் அமர்ந்தீர்களானால், 'நீங்கள்' என்று அனுபூதியாக, அனுபவமாக உங்களுக்குள் இருப்பது எதுவோ அதுவே 'பரம்பொருள்.'
நிறையபேர் எனக்கு message... 'சாமி, ஒரு மாசம் நீங்க சொல்றா மாதிரி எல்லாத்தையும் விட்டு தனிமையில போய் உட்கார்ந்தால், எனக்கு யார் சாமி சோறு போடுவா?' என்று.
நான் போடுகிறேன் ஐயா. அதற்குத்தான் நான் பிக்ஷை எடுத்து சம்பாதித்து வைத்திருக்கின்றேன்! உலகம் முழுக்க internet-ல் பிக்ஷை எடுத்து சம்பாதித்து வைத்திருக்கின்றேன்! கைலாஸா திருவண்ணாமலையை திறந்தே வைத்திருக்கின்றேன்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று, அதாவது டிசம்பர் 1ஆம் தேதிலிருந்து - ஜனவரி 1ஆம் தேதி வரை. அடுத்த நிகழ்ச்சி ஜனவரி 1ஆம் தேதிலிருந்து - பிப்ரவரி 1ஆம் தேதி வரை. ஒவ்வொரு மாதமும், ஒரு முழு மாத நிகழ்ச்சி இதற்காகவே நடத்துகிறேன் ஐயா.
அதனுடைய நோக்கம் வேறு ஒன்றுமே இல்லை… நீங்கள் வந்து, உங்களுக்குள் விளங்குகின்ற, 'தானாய்' விளங்குகின்ற பரம்பொருளை அனுபூதியாக உணர்ந்துவிட்டு செல்வது. உணவு, தங்குமிடம், நிகழ்ச்சி அனைத்தும் இலவசம். Direct> indirect expense எதுவும் கிடையாது. நீங்கள் திருவண்ணாமலை கைலாஸாவிற்கு வந்துவிட்டீர்களானால் மட்டும் போதுமானது.
திருவண்ணாமலையிலே ஆரத்தியும் பூஜைகளும் நிகழ்கின்றன! அருணாச்சல ஸ்மரணம் செய்து, 'சொலல்' இல்லாத அருணாச்சல ஸ்மரணம் செய்து, ஆத்ம ஸ்புரணத்தில் இருப்போம். அருணாச்சல ஸ்புரணத்தில் இருப்போம். இப்பொழுது நேரலையில் சென்றுகொண்டிருக்கிறது. அதை உங்களுக்கும் காட்டவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த copyright strike பிரச்சனை இருப்பதனால் காட்ட முடியவில்லை. தயவுசெய்து என் கண்ணிலே பார்த்துக்கொள்ளுங்கள். பெருமான் ஆராதணையை பார்த்த புண்ணியம் உங்கள் எல்லோருக்கும் வரும்.
ஏனென்றால், ஒரு ஜ்ஞாநிக்கு பாவமோ புண்ணியமோ வருவதில்லை. இப்பொழுது பெருமானை தரிசித்த புண்ணியம் எனக்கு வருவதில்லை. ஏனென்றால், எந்த புண்ணியம், எந்த பாவத்தையும் நான் அனுபவிப்பதில்லை. அந்தப் புண்ணியம் முழுமையையும், இப்பொழுது ஸத்ஸங்கத்தைக் கண்டுகொண்டிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் அளிக்கின்றேன். பெற்றுக்கொள்ளுங்கள். அண்ணாமலையான் ஸாக்ஷியாக அந்த புண்ணியம், தர்ஶந புண்ணியம், அண்ணாமலையானை தரிசித்த புண்ணியம் உங்கள் எல்லோருக்கும் வரட்டும்!
என் வாழ்க்கையில் நடந்த இன்னொரு நிகழ்வு சொல்லிவிடுகின்றேன்... அருணகிரியோகீஶ்வரர்.. அதாவது அண்ணாமலையானே, அருணாச்சல பரம்பொருளே, அருணாச்சலேஶ்வர கருணாமூர்த்தியே, அருணகிரியோகீஶ்வரராக வடிவந்தாங்கி, குருவாக வந்து எனக்கு அருள்செய்து உபதேஸித்தார். அப்பொழுது அவரிடம் நான் ஒரு வரம் கேட்டேன்.
அவர் வந்து தீக்ஷை அளிக்கச் சொல்லி, இந்த பரமாத்வைத ஸத்யத்தை உலகமெங்கும் பரப்பவும், தீக்ஷை அளிக்கவும், ஶக்தி பாதம் செய்யவும், ஶக்தினி பாதம் அளிக்கவும், இதையெல்லாம் செய்வதற்கு ஆசீர்வாதம் பண்ணி செய்யச் சொன்னார்.
அதற்குப் பிறகு அவரிடம் ஒரு வரம் கேட்டேன்: பெருமானே! என்னை நினைந்தோர் எல்லாம் உன்னை நினைந்தோர் ஆகுக. ஏனென்றால், எனக்கு நன்றாகத்தெரியும் - 'அருணாச்சல ஸ்மரணம் செய்தால் முக்தி' என்று. அதனால், நம்மை நினைந்தோர்... என்னை நினைந்தோர் எல்லாம், உன்னை நினைந்தோர் ஆகுக. அப்பொழுது அவர்களுக்கும் நிச்சயமாக முக்தி கிடைத்துவிடும் என்று கேட்டேன்.
பெருமான் சிரித்தபடியே ஆசீர்வாதம் செய்தார். அவர் என்ன சொன்னார் என்றால், எப்பாவத்தில் உனை நினைந்தாரோ, அப்பாவத்திலேயே எனை நினைந்தோர் ஆகுக! என்றார். அப்பொழுது உண்மையிலேயே எனக்கு அதனுடைய முழுப்பொருள் புரியவில்லை.
பெருமானே! அப்படின்னா என்ன அர்த்தம்? என்று கேட்டேன். ஏனென்றால், பெருமான் ஒரு வார்த்தைகூட, அதிகமாக சேர்த்து உபயோகப்படுத்தமாட்டார். அதனால், இதற்கு என்ன பொருள்? என்று கேட்டேன்.
காலம் வரும்பொழுது உனக்குப் புரியும் என்றார்.
இப்பொழுது புரிகிறது. அப்போ புரியல, இப்போ புரியுது.
பக்தியோடு, ஶ்ரத்தையோடு, பக்தி பாவத்தோடு நினைந்தால், என்னை நினைந்தார்கள்... 'அவரையும் பக்தி பாவத்தோடு நினைந்தவர்கள் ஆகுக' என்றும், எதிர்ப்பு, வெறுப்பு போன்ற பாவனைகளோடு என்னை நினைந்தார்... 'அவரையும் அதே பாவனையில் நினைந்தோர் ஆகுக' என்றும் சொல்லியிருக்கின்றார். அதனால்தான் என்னை தாக்குபவர், அழிக்க நினைப்பவர், எதிரியாகக் கருதுபவர்கள், இவர்கள் யாரையும் நான் வெறுப்பதும் கிடையாது, எதிர்ப்பதும் கிடையாது, பதில் சொல்வதும் கிடையாது, அவர்களுக்கு react பண்ணுவதுகூட கிடையாது. ஏனென்றால், 'அவர் பார்த்துக்கொள்ளட்டும். விடப்பா..'
அதாவது, அவர் ஏற்கனவே கொடுத்த அந்த வரத்தினால், அந்த வரத்திலே இரண்டையும் செய்துவிடுகிறார். 'இஷ்ட பரிபாலனம், துஷ்ட நிக்ரஹம்' - இந்த இரண்டையும் அந்த ஒரு வரத்தாலே பெருமான் செய்துவிடுகிறார்!
நான் உண்மையில் பார்த்தால், இஷ்ட பரிபாலனத்திற்காகத்தான் அந்த வரம் கேட்டேன். ஏனென்றால், 'என்னை நினைந்தோர் எல்லாம் உன்னை நினைந்தோரானால், அவர்களுக்கெல்லாம் முக்தி கிடைக்குமே, ஜீவன்முக்தி கிடைக்குமே' என்றுதான் கேட்டேன். அவர் ஆனால் இரண்டையும் சேர்த்து வைத்து வரமாகக் கொடுத்துவிடுகின்றார்.
பரித்ராணாய ஸாதூநாம் விநாஶாய ச துஷ்க்ரு'தாம்…
பரித்ராணாய ஸாதூநாம் விநாஶாய ச துஷ்க்ரு'தாம் தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே என்று க்ரு'ஷ்ணர் கீதையிலே சொல்லியதுபோல, 'பரித்ராணாய ஸாதூநாம்' - நல்விதத்தில் நினைந்தோர் எல்லாம்… அதாவது உனை நல்விதத்தில் நினைந்தோர் எல்லாம், நமையும் நல்விதத்தில் நினைந்தோர் ஆகுக. தீய விதத்தில் நினைந்தோர் எல்லாம், நமையும் தீய விதத்தில் நினைந்தோர் ஆகுக என்று அவரே வரம் கொடுத்தார்.
அப்ப புரியல. இப்ப புரியுது.
ஆழ்ந்து கேளுங்கள், இப்பொழுது உட்கார்ந்து ஸத்ஸங்கம் பார்த்துக்கொண்டிருக்கின்ற எல்லோருக்கும் சொல்லுகின்றேன். பெருமானை நான் தரிசித்த புண்ணியம் உங்கள் எல்லோருக்கும் வந்து சேரும்.
இந்த மூன்றாவது ஸத்யத்தை இன்னமும் சிலது விளக்குகின்றேன். ஆழ்ந்து விளக்குகின்றேன். கேளுங்கள்: உங்களுடைய செயல்பாடுகள்… அதாவது performance, வேலை, career, வேலை, relationship-ல் நீங்கள் சொல்கின்ற வார்த்தைகள், உறவுகள், எப்படி நீங்கள் செயல்படுகின்றீர்கள், இவை எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு... 'நீங்கள் யார்?' என்று அமைதியாக அமர்ந்து பாருங்கள். 'நீங்கள் எப்படி இயங்குகிறீர்கள்?' என்று பாருங்கள்.
உங்களைப்பற்றி மற்றவர்கள் சொல்கின்ற கதைகள், உங்களைப்பற்றி நீங்களே சொல்லிக்கொள்கின்ற கதைகள் - இவைகளை எல்லாம் சற்று தள்ளி வைத்துவிட்டு பார்த்தீர்களானால்தான், எந்த அளவிற்கு உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுகிறீர்கள், எந்த அளவிற்கு உங்கள் வாழ்க்கையை, மற்றவர்களுக்காக perform பண்ணிக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று புரியும் ஐயா.
அது புரிந்தால் மிகப்பெரிய ஸ்வதந்தரத்தை அடைந்துவிடுவீர்கள் ஐயா. உங்களுடைய வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்வீர்கள் ஐயா. உங்களுக்குத் தேவையான பணம், பொருள், புகழ், அன்பு, சுகம் எல்லாம் இருக்கின்ற மாதிரி, ஆனால் drain ஆகாமல், tired ஆகாமல், bore அடிக்காமல், irritate ஆகாமல், துக்கம் வராமல், இனிமையாக இருக்கிற மாதிரி உங்களுடைய ecosystem -ஐ அழகாக வடிவமைத்துக்கொள்வீர்கள் ஐயா.
உங்களுடைய உலகத்திற்கு நீங்கள் ஈஶ்வரனாக மாறுவதுதான், வாழ்க்கையின் முதல் படி வெற்றி. முதல் நிலை வெற்றி.
உங்கள் வாழ்க்கையினுடைய direction, நீங்கள் யாராக இருக்கின்றீர்கள், யாராக மாறுகின்றீர்கள்... பல நேரத்தில் பார்த்தீர்களானால், இந்தத் தொடர்ந்த எரிச்சலைக் கொடுக்கக்கூடிய உறவுகளோடு deal பண்ணி, deal பண்ணி, ஒரு ஒரு வருடத்தில் நீங்களே அந்த மாதிரி ஒரு cheap-ஆன personality-யாக மாறிவிட்டிருப்பீர்கள்.
ஐயோ! எதை வேண்டுமானாலும் இழக்கலாம். தன்னை இழக்கக்கூடாது ஐயா! எதை இழந்தாலும் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தன்னை ஒரு sweet-டான, இனிமையான being-ஆக, நல்ல being-ஆக நீங்கள் இருப்பதை மட்டும், வெளி உலகச் சூழல் காரணமாக இழந்தீர்களானால், ஹப்பா... போச்சு. ஸர்வ நாசம். அதை மட்டும் அனுமதிக்காதீர்கள்.
தொடர்ந்து toxic-காக உங்களை feel பண்ண வைக்கின்ற உறவுகள், அது எப்படி உங்களை அறியாமல் உங்களையே மாற்றுகிறது... இதெல்லாம் புரிந்தால்தான், illusions-ஐயும், delusions-ஐயும் dissolve பண்ணுவீர்கள் ஐயா. Illusions-ஐயும், delusions-ஐயும் dissolve பண்ணுங்கள் ஐயா. உங்களுக்குள் 'சொலல்' இல்லாத இருப்பு, ஸ்மரணத்தை, ஸ்புரணத்தை build பண்ணினீர்களானால், உலகத்தில் நிறைய பேரைப் பார்ப்பீர்கள். பழகுவீர்கள்.
ஆழ்ந்து கேளுங்கள்: உங்களுடைய ஸாந்நித்யம் பெருகப் பெருக, பயம் இல்லாது எந்த ஒரு சூழ்நிலையிலும் simple-ஆக respond பண்ணுவீர்கள். React பண்ண மாட்டீர்கள்.
நான்காவது ஸத்யம்: உங்களுடைய வாழ்க்கைக்கு உதவிகரமாக இல்லாத, சகலவிதமான பயம், துக்கம், குற்ற உணர்ச்சி, கடந்த காலத்தைப்பற்றி வைத்திருக்கும் நினைவுகள், அனைத்தையும் தயவுசெய்து release செய்துவிடுங்கள். தூக்கி எறிந்து விடுங்கள். கழற்றி விட்டுவிடுங்கள்.
இப்பொழுது, சில நேரத்தில், சூழ்நிலையை misjudge பண்ணி ஏதாவது ஒரு முடிவெடுத்திருப்பீர்கள். அது backfire ஆகியிருந்திருக்கும் அல்லது பிரச்சினையாகி இருந்திருக்கும். அந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கும். இதற்குமேல் நீங்கள் அந்த மாதிரி misjudge பண்ணி முடிவெடுக்கப் போவதில்லை எனும்பொழுது, அந்த பயம், குற்ற உணர்ச்சி, வேதனை, துக்கம் அதெல்லாம் கழட்டி விட்டுவிடுங்கள். அதெல்லாம் கழட்டி விட்டீர்களானாலே, அதெல்லாம் தூக்கிப் போட்டீர்களானாலே, திரும்பத் திரும்ப அதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வதை நிறுத்தினீர்களானாலே, அதை உங்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கின்ற நபர்கள், சூழல்கள் அதிலிருந்து ஒதுங்கினீர்களானாலே... உங்கள் energy-ஐ drain பண்ணுகின்ற habits, உங்கள் energy-ஐ drain பண்ணுகின்ற relationships, உங்கள் வளர்ச்சியை limit பண்ணுகின்ற உறவுகள், உங்கள் வளர்ச்சியை limit பண்ணுகின்ற unnecessary attachment, இது எல்லாத்தையுமே கழட்டி விடுங்கள் ஐயா.
பொருளோ, பணமோ, நகையோ, இடமோ, நபரோ, சுகமோ, எதுவாக இருந்தாலும் சரி, எதன்மீது இருந்தாலும்சரி, உங்களுடைய வாழ்க்கையின் நிஜமான வளர்ச்சி, அதை மட்டுப்படுத்துகின்ற, கட்டுப்படுத்துகின்ற, குறைக்கின்ற எல்லாவற்றையுமே கழட்டி விடுங்கள் ஐயா. வாழ்க்கையிலிருந்து கழட்டி விடுங்கள்.
ஆழ்ந்து கேளுங்கள், உங்கள் வாழ்க்கைக்கு எது எதெல்லாம் serve பண்ணாதோ, உங்கள் வாழ்க்கையை எது எதெல்லாம் கட்டுப்படுத்துகிறதோ, மட்டுப்படுத்துகிறதே, குறையாக்குகிறதோ, அந்தப் பழக்கவழக்கங்கள், addictions, நபர்கள், மன அமைப்புகள் இவைகளை தூர எறியுங்கள்.
சிலபேர் உடனே, என்னால விட முடியல சாமி. தண்ணி அடிக்கிற பழக்கத்தை விட முடியல. தம் அடிக்கிற பழக்கத்தை விட முடியல. என்ன முயற்சி பண்ணாலும் இந்த தரித்திரம் புடிச்ச scroll பண்ணிக்கிட்டே இருக்கின்ற இந்த பழக்கத்தை விட முடியல. அந்த cheap thrills-அ நோக்கி ஓடுகின்ற பழக்கத்தை விட முடியல சாமி என்று புலம்புவீர்கள்.
அதனால்தான் சொல்கிறேன், ஒரு வருஷம் உங்களை முழுக்க முழுக்க இந்த சாக்கடை ecosystem, நீங்கள் உருவாக்கி வைத்திருக்கின்ற உங்கள் ecosystem, இந்த அடிமை பழக்கங்களிலேயே உங்களை வைத்துக்கொண்டிருக்கின்ற அந்த ecosystem, அதிலிருந்து உங்களை வெளியிலே எடுங்கள்.
அதே சாக்கடையில் ஊறிக்கொண்டே இருந்தீர்களானால், ஒருநாளும் உங்களால் அந்தப் பழக்கங்களில் இருந்து வெளியில் வரமுடியாமல் போய்விடும். இந்த பரிவ்ராஜக யாத்ரைக்காக வெளியில் வந்தீர்களானால், அங்கு போகின்ற இடத்திலெல்லாம் நீங்கள் தண்ணி அடிக்க முடியாது, cigarette பிடிக்க முடியாது, வேறு எந்த அடிமைத்தனமான பழக்கங்களையும் வைத்திருக்க முடியாது. உங்களை வளரவிடாமல், வாழவிடாமல், மலரவிடாமல் இருக்கின்ற அந்த personalities எல்லாரிடமிருந்தும் நீங்கள் தூரமாக வந்துவிடுவீர்கள்.
புதுமையான உலகத்தை ஒரு வருடம் பார்த்தீர்களானாலே, நீங்கள் புது நபராக மாறிவிடுவீர்கள். இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
'ஆகார சுத்த யோகோ: ஸ்ம்ரு'தி சுத்தி:' - உணவு சுத்தம், அதாவது நாம் எடுக்கின்ற ஆகாரம் சுத்தமானால், நம்முடைய மனம் சுத்தமாகும். 'ஆகாரம்' என்ற வார்த்தைக்கு வெறும் 'சாப்பாடு' என்று அர்த்தம் இல்லை. நாம் என்னென்ன அனுபவங்களை எல்லாம் உள்வாங்குகின்றோமோ, அதெல்லாம். அந்த அனுபவங்களை எல்லாம் சுத்தமாக்கினாலே, நம் சித்தம், உணர்வு, புத்தி, மனம் அனைத்தும் சுத்தமாகிவிடும்.
அதனால், சற்றே, சற்றே இந்த ஸத்யத்தை உள்வாங்குங்கள்.
இந்த false security இருக்கிறது பாருங்கள்… Actual-லாக கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நடந்தது. ஒரு பக்தர், அவருடைய உடல்நலம் பல்வேறு காரணங்களுக்காக, 'அவருக்கு ஒருவேளை மரணம் வரப்போகுதோ' என்று நான் நினைத்தேன். அதனால் நான் சொன்னேன், ஐயா, ஒரு வருடத்தில் போய்விடுவீர்கள் என்று நினைக்கிறேன் என்று. அவர் உடனே என்ன செய்தார், insurance எடுக்கின்றார்.
அட insurance-ஆ ஐயா security?
உண்மையான security என்னவென்றால், தவம் செய்து... அதாவது ஒருவேளை போக வேண்டி வந்தால் அதற்கு prepare பண்ணிக்கொள்வது. பரீக்ஷித்து செய்தார் பாருங்கள்... போக வேண்டிய நேரம் வந்து, 'கட்டாயமாக போய்விடுவோம்' என்று அவருக்கு ஒரு சந்தேகம் வந்த உடனேயே, 'தக்ஷனால் கடிபட்டு இறப்பாய்' என்று சாபம் கொடுக்கப்பட்ட உடனேயே, சரி போவதற்கு prepare பண்ணவாவது ஆரம்பித்துவிடுவோம் என்று பாகவதம் கேட்க ஆரம்பித்துவிட்டார்.
அதுதான் போவதற்கான preparation.
ஆனால், இந்த புண்ணியவான் ஓடிப்போய்விட்டது. ஓடிப்போய்... insurance எடுக்கப் போய்விட்டது. என்ன செய்வது? மனிதர்கள் அவ்வளவுதான். False security-ஐ தான் security-யாக நம்புகின்றார்கள்.
இந்த emotional weights, இதெல்லாம் விட்டுவிட்டு, conscious-ஆக உங்கள் வாழ்க்கையில் தேவையானவைகளை வரவேறுங்கள். உங்கள் வாழ்க்கையில் தேவையானவற்றை வரவேறுங்கள். ஐந்தாவது ஸத்யம்: உங்களுடைய ஶக்தி முழுவதையும், உங்கள் ஸங்கல்பத்தோடு ஒன்றாக்குங்கள்.
அதாவது, உங்கள் வாழ்க்கையினுடையப் போக்கைப்பற்றி, தினசரி உங்கள் நடவடிக்கைகளைப் பற்றி, எல்லாவற்றையும் ஒரு conscious ஸங்கல்பமாக, உணர்வோடு நீங்கள் எடுக்கிற ஸங்கல்பமாக, conscious decision--ஆக, உங்களை disciplined -ஆகவும், organised-ஆகவும் மாற்றிக்கொண்டு, உங்கள் ஶக்தி முழுவதையும் அந்த மாதிரி செலவு செய்யுங்கள்.
நீங்கள் நினைக்கலாம், 'என்ன இதெல்லாமா அருணாச்சல புராணத்தில் சொல்லியிருக்கிறது? என்று.
ஆமாம் சொல்லி இருக்கிறது. தாயார் இப்படித்தான் தவம் செய்கின்றார், திருவண்ணாமலைக்கு வந்து. வாழ்க்கையில் நீங்கள் எதை வேண்டுமானாலும், தவத்தால்தான் அடைய முடியும்.
ஒவ்வொன்றுக்கும் செய்ய வேண்டிய தவம் மாறுபடும். ஆனால் தவம்தான் அடிப்படை. Disciplined-ஆகவும், organised-ஆகவும் உங்களை மாற்றிக்கொள்வதுதான் - தவம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா, வாழ்க்கையில் எந்த மாற்றமும் நீங்கள் செய்யாமல், 'தானாவே உங்களுக்கு ஒரு புது வாழ்க்கை வந்துவிடவேண்டும்' என்று கனவு கண்டீர்களானால், அது நடக்கவே நடக்காது.
இப்பொழுது என்ன தரித்திரமான, மூதேவித்தனமான வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்களோ, அதை அப்படியே 2026-லும் தொடர்வீர்கள். ஆனால், வெளி உலகம் மட்டும் உங்களுக்கு, உங்களுடைய வாழ்க்கை மட்டும் புதிகாக மாறிவிட வேண்டும்... நடக்காது!
நீங்கள் conscious-ஆக உங்களுடைய செயல்களை, சிந்தனையை, உணர்வை, உயிரை, உயிரின் உயிர்ப்பை, உயிரின் போக்கை மாற்றினால் மட்டும்தான், உங்கள் வாழ்க்கை மாறும். அதனால், காலையில் நீங்கள் எழுந்து யோகா செய்கின்ற ஒவ்வொரு நாளும், உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் அடைய வேண்டிய குறிக்கோளை நோக்கி முன்னேறுகின்றீர்கள்.
இழுத்துப் போர்த்திக்கொண்டு, காலையில் ப்ரஹ்ம முஹுர்த்தத்தில் எழாமல், நீங்கள் தூங்குகின்ற ஒவ்வொரு நாளும், உங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆழ்ந்து கேளுங்கள்: அதாவது ஒரு நாள் motivation-ல், inspiration-ல் 'சரி நித்யானந்தர் சொல்லிட்டாரப்பா. இவர் சொன்னால் அதில் ஏதோ உண்மை இருக்கும்' என்று ஒரு நாள் எழுந்து, இரண்டு நாள் எழுந்து ஓடிவிடுவோம், செய்துவிடுவோம். இந்த new year resolution-னுக்கு gym fees கட்டுகின்ற மாதிரிதான்.
ஆனால் தொடர்ந்து… அதாவது bore அடிக்கும்போதும், tired -ஆகும்போதும், inspiration இல்லாதபோதும், செயல்படுகிற discipline தான், உங்களை வெற்றியை நோக்கிக் கொண்டுசெல்லும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், inspiration-னும், motivation-னும் start பண்ணிவிடும். இந்த உலகத்தில் ஒரு பெரிய பிரச்சினை பார்த்தீர்களானால், எங்கு வேண்டுமானாலும் சுற்றிப் பாருங்கள், Books,YouTube videos,Facebook post, Social media எல்லா இடத்திலும் inspiration கொடுக்கின்ற, motivation பண்ணுகின்ற quotes, books, videos நிறைந்து கிடக்கின்றது.
ஏனென்றால், people celebrate inspiration, motivation - இது எல்லாவற்றையும் மக்கள் கொண்டாடுகின்றார்கள்.
ஆனால், உங்கள் எல்லோருக்கும் ஒரு ரகசியம் புரியவில்லை. Inspiration, motivation start பண்ணிவிடுமே தவிர, உங்களுடைய குறிக்கோளை நோக்கி கொண்டுசெல்வதற்கு inspiration, motivation-ஆல் முடியாது. Discipline-ஆல் மட்டும்தான், உங்கள் குறிக்கோளை நோக்கி உங்களைக் கொண்டு சென்று விட முடியும். அதைப் புரிந்துகொள்ளுங்கள்.
ஆழ்ந்து கேளுங்கள்: Inspiration, motivation - இது எல்லாம் துவக்கிவிட முடியுமே தவிர, discipline மட்டும்தான், உங்கள் குறிக்கோளை உங்களால் அடையச் செய்ய முடியும்.
ஏனென்றால், inspiration-ஓ, motivation-ஓ... சில நாட்களில் அந்த emotions எல்லாம் அடங்கிடும். அதற்குப் பிறகும், discipline மட்டும்தான் உங்கள் குறிக்கோளை உங்களை அடைய வைக்கும். Inspiration-னும் motivation-னும் like a excitement, fire work மாதிரி. ஒரு passion explode ஆகிறது. அது துவக்கும். Life-ல் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்யக்கூடிய செயல்களை நீங்கள் செய்வதற்குத் தூண்டி துவக்கி வைக்கும். அது ஒரு starting தான். Discipline தான் வெற்றியை கொடுக்கும்.
இந்த discipline இல்லாமல் போவதனால்தான், பலபேர் துவங்குகின்ற மிகப்பெரிய செயல்கள் மிகப்பெரிய திட்டங்கள் வெறும் கனவாக முடிந்து, நொந்து அழிந்து போய்விடுகின்றது, காணாமல் போய்விடுகின்றது.
தோல்வி அடைபவனுக்கும், வெற்றி அடைபவனுக்கும் ஒரே ஒரு வித்யாசம்தான், discipline தான். ஏனென்றால், இரண்டு பேருக்குமே motivation இருந்து inspiration இருப்பதனால்தான் ஆரம்பிக்கின்றார்கள்.
நான் கைலாஸத்திலேயே பார்த்திருக்கின்றேன் ஐயா... பலபேர் ஒரு program attend பண்ண உடனே, அப்படியே inspire-ஆகி motivate-ஆகி, 'ஆ.. ஊ.. நான் கைலாஸவாசி ஆகிறேன், ஆதீனவாசி ஆகிறேன், ஸந்ந்யாஸி ஆகிறேன்' என்று வந்துவிடுவார்கள். நான் உடனே ஸந்ந்யாஸம் கொடுக்க மாட்டேன், உடனே கைலாஸவாசியாக accept பண்ணிக்க மாட்டேன். 'நல்லது, Inspiration ரொம்ப நல்லது. வா வந்து தங்கு, பாரு, discipline-ஐ build பண்ண முடியுதா?' என்று பார்ப்பேன். அப்பொழுது மட்டும் தான் கைலாஸவாசியாக accept பண்ணிப்பேன். ஸந்ந்யாஸம் கொடுப்பேன்.
ஸந்ந்யாஸம் வேண்டும் என்பவர்களுக்கு ஸந்ந்யாஸம். க்ருஹ'ஸ்தர்கள், க்ருஹ'ஸ்தர்களாக வாழலாம். ஆனால் எந்த acceptance-ம் discipline-ஐ build பண்ண முடிகிறதா என்று பார்த்துவிட்டுத்தான் கொடுப்பேன். ஏனென்றால், discipline தான், வாழ்க்கையை வெற்றியை நோக்கி கொண்டுசெல்லும்.
உங்களுடைய ஶக்தி புனிதமானது ஐயா. உங்களுடைய நேரம் - உங்கள் வாழ்க்கை ஐயா.
அதனால், உங்களுடைய மனோ ஶக்தி, உடல் ஶக்தி, வாக்கு ஶக்தி... - இது எல்லாமே புனிதமானது. அவைகளை வீணாக, casual-லாக உபயோகப்படுத்தாதீர்கள்.
2026-க்கு இதுதான் உங்களுக்கு புதிய வாழ்க்கையை அளிக்கும் பரம ஸத்யம். இதைக் கடைபிடியுங்கள். 2026 புதிய வாழ்க்கையாகிவிடும்.
Discipline உடையவர்கள் unstoppable-ஆக மாறிவிடுவார்கள். ஒரு சாதாரண மனிதன், சாதாரண செயல்களைக்கூட discipline-னோடு தொடர்ந்து இடைவிடாமல் செய்வானேயானால், நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளை செய்து முடித்திருப்பான்.
என் வாழ்க்கையில், ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் ஐயா… வெளியில் இருக்கின்ற எந்த சூழ்நிலை, உள்ளுக்குள் இருக்கின்ற உணர்வு நிலை - இதெல்லாம் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டேன். காலையில் எழுந்தால், ப்ரஹ்ம முஹுர்த்தத்தில் எழுந்து யோகா, பூஜை... என் உடலை correct-ஆக தூக்கிக்கொண்டு வந்து ஸிம்ஹாஸனத்தில் உட்கார வைத்துவிடுவேன். நான் வகுப்பு எடுக்க வேண்டிய அந்த ஆஸனத்தில் உட்கார வைத்துவிடுவேன்.
'Showing up' is the main reason for My success.
எந்த program-ஆக இருந்தாலும் ஸத்ஸங்கமாக இருந்தாலும், class-ஆக இருந்தாலும், meeting-ஆக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் சரி- Showing up. வெளியில் இருக்கின்ற, உள்ளே இருக்கின்ற சூழ்நிலையைப் பற்றிக் கவலையேப்படமாட்டேன், யோசிக்கக்கூட மாட்டேன். Emotions are irrelevant for My life. மனம், உணர்வு, உணர்ச்சி இவை எல்லாமே redundant, irrelevant.
ஸாக்ஷியாக என்னை பார்த்து, ஸாக்ஷியாகப் பார்ப்பவனை ஸாக்ஷியாகப் பார்த்து, observing the observer, silent-ஆ கொண்டு வந்து உடலை ஆஸனத்தில் உட்கார வைத்துவிடுவேன். எடுக்க வேண்டிய வகுப்புகள் எடுக்கப்படும், பேச வேண்டியது பேசப்படும், சொல்ல வேண்டியது சொல்லப்படும், நிகழ வேண்டியது நிகழும்.
இந்த discipline-னால் தான் ஐயா, 40 ஆண்டுகள்… அதாவது 5 வயதில் முதல் ஆன்மிக மேடை.... 2 வயதில் பால ஸந்ந்யாஸம், முதல் சாதுர்மாஸ்யம். 5 வயதில் முதல் ஆன்மிக மேடை - திருவண்ணாமலை கோவில்தான், முதல் ஆன்மிக ஸத்ஸங்கம் 5 வயதிலே துவங்கி, இப்பொழுது 47 வயதாகிவிட்டது. 40 வருடங்களுக்கும் மேலாக இந்த discipline... தொடர்ந்து ஏதாவது ஒரு மொழியில், ஏதாவது ஒரு மக்களோடு இந்த ஸத்யங்களைப் பேசிக்கொண்டே இருக்கின்றேன், சொல்லிக்கொண்டே இருக்கின்றேன், செய்து கொண்டே இருக்கின்றேன்.
எனக்கு time இருக்கும்போது வேலை செய்வது கிடையாது. வேலை இருந்தால் செய்வதுதான் வாழ்க்கை. வேலைக்கு ஏற்றாற்போல் வாழ்க்கையை விரித்துக் கொள்வது, அதுதான் discipline. செய்ய வேண்டிய குறிக்கோள், அதற்கேற்ற மாதிரி வாழ்க்கையை விரித்துக்கொள்வேன். அவ்வளவுதான். என் மீது எதிர்ப்பும் வெறுப்பும் வைத்திருப்பவர்கள்கூட கண்டுநடுங்கும் ஒழுக்கம் - disciplineஎன்னுடைய வாழ்க்கை ஐயா.
Discipline உடையவர்கள் ரொம்ப சின்ன வேலைகள் செய்தால் கூட, தினசரி தொடர்ந்து தவறாமல் செய்வதனால், மிகப்பெரிய சாதனையைச் செய்து முடித்திருப்பார்கள்.
இப்பொழுது 40 ஆண்டுகளாக, நான் disciplined-ஆக அமர்ந்து ஸத்ஸங்கங்கள் கொடுத்தது, எழுதியது, பேசியது என இதையெல்லாம் தொகுத்துத்தான், இப்பொழுது நாங்கள் நினைத்தே பார்க்க முடியாத AI-ஆக, Nithyananda AI-ஆக வந்திருக்கின்றது. நான் பேசியபொழுது இந்த மாதிரி ஒரு மிகப்பெரிய ஒரு result-ஆக அது மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை ஐயா.
இப்பொழுது வகுப்பெடுக்க வேண்டும், இந்த ஸத்யங்களை உலகத்திற்குச் சொல்லவேண்டும், document பண்ணி வைக்கவேண்டும் என்று சொல்லித்தான், தொடர்ந்து என் கைப்படவே 80,000 பக்கங்கள் எழுதி வைத்திருக்கின்றோம். நான் அந்த காலத்து மனிதன்... இந்த type பண்ணுவது ஒரு ரெண்டு line type பண்ணினேன் என்றால்கூட... ஆனால் எழுதுவது பார்த்தீர்களானால், எத்தனை ஆயிரம் பக்கம் வேண்டுமானாலும் எழுதிவிடுவேன்! அதனால் tab-லேயே எழுதுவது மாதிரி tab-ஆக வாங்கிட்டோம். அந்த மாதிரி computer எடுத்து வந்துட்டோம். Tab-லேயே உட்கார்ந்து கடகடகட வென்று எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி screen save பண்ணி, எழுதி எழுதி screen save பண்ணி... இப்படித்தான் என்னுடைய புத்தகங்கள் அனைத்தையும் எழுதுகின்றேன். Tab-ல் எழுதிவிட்டால் edit பண்ணுவது சுலபம் என்பதனால்.
தொடர்ந்து எழுதியது, பேசியது எல்லாம் இப்பொழுது குவிந்துபோய் கிடக்கின்றது. அதையெல்லாம் ஒருங்கிணைத்துத்தான் Nithyananda AI-யாக எடுத்து உங்களுக்கெல்லாம் கொடுத்திருக்கின்றோம்.
ஒவ்வொரு ஆன்மிகத் துறையிலும், அதவாது Astrology, Gemmology, வாஸ்து, ஆயுர்வேதா, ஸித்தா என... என்னுடைய குருமார்கள் இந்த எல்லா கலைகளினுடைய சாரத்தையும் கொடுத்தார்கள்.
பரமஶிவப் பரம்பொருள், அண்ணாமலையான், அருணாச்சல கருணாமூர்த்தி, அருணகிரியோகீஶ்வரர் அனுபூதியாக கொடுத்தார்.
அதனால் அது மொத்தமும், இந்த 40 ஆண்டுகளும் grunt job தான் ஐயா. சில நேரங்களில், ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப மக்கள் கேட்பார்கள். வேறு வேறு ஊர்களில் - வேறு வேறு இடத்தில். ஆனால் அமர்ந்து அத்துனை பேருக்கும்பொறுமையோடு பதில் சொல்லி, விளக்கங்கள் கொடுத்து… கடுமையான ஒழுக்கத்தோடு கூடிய உழைப்பு.
அது என்ன செய்தது என்றால், நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… என் மீதே எனக்கு confidence-ஐ கொடுத்துவிட்டது. 'நம்மால் எதையும் நடத்திட முடியும்' என்கின்ற தைரியத்தை எனக்குக் கொடுத்தது. நீங்கள் யார் யாரெல்லாம் discipline-ஐ lifestyle-ஆக மாற்றுகின்றீர்களோ.. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: உங்கள் எல்லோருக்கும் ஒன்று புரியும். உங்கள் வாழ்க்கைமீது உங்களுக்கு confidence வந்துவிடும். 'உங்களால் செய்ய முடியும்' என்கின்ற confidence உங்களுக்கு வந்துவிடும் ஐயா.
Build discipline over motivation. Motivation-ஐ விட, discipline build பண்ணுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். Discipline என்பது constant-ஆக unwavering…. Motivation fleeting ஐயா - வரும் போகும் ஐயா... நம்ப முடியாத நண்பன் மாதிரி. எப்பொழுது வேண்டுமானாலும் வருவான், எப்பொழுது வேண்டுமானாலும் ஓடிப்போய்விடுவான். Motivation என்பது Facebook friend மாதிரி, showing off. நீங்கள் show off பண்ணினால் உங்களுக்கு கிடைக்கின்ற friends அல்லது மற்றவர்கள் show off பண்ணுவதைப் பார்த்து நீங்கள் அவர்களுக்கு friends ஆவது. அதுதான்... அது motivation.
ஆனால் discipline-ல் வருகின்ற friends எல்லாம் showing up வருகின்ற friends. அவர்கள் நிரந்தரமாக நிற்பார்கள். Showing up-ஆல் வருகின்ற friends எல்லாம் discipline மாதிரி. Showing off-ல் வருகின்ற friends எல்லாம் motivation மாதிரி, Facebook friends மாதிரி. Showing up-ஆல் வருகின்ற friends எல்லாம், நிஜமான உறவுகள். Discipline மாதிரி. எப்பொழுதும் உடன் இருப்பார்கள்.
Discipline தான், உங்களுடைய குறிக்கோளை நோக்கி உங்களை கொண்டுசெல்லும் ஶக்தி உடையது. Motivation கிடையாது. இந்த difference-ஐ முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
எல்லோருமே வெறும் Motivation-ஐ தேடியே அலைகின்றீர்கள். Motivation-ஐ பற்றி புத்தகங்களைப் படிப்பதைவிட, discipline-ஐ எப்படி build பண்ணுவது என்கின்ற புத்தகங்களைப் படியுங்கள். அதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
எங்கெல்லாம் உங்களுக்கு discipline-ஆன வாழ்க்கையைக் கொடுக்கின்ற ecosystem இருக்கிறதோ, அதில் எல்லாம் இருக்கத் துவங்குங்கள். உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.
காலையில் எழுந்த உடனே, ப்ரஹ்ம முஹுர்த்தத்தில் 4.30 மணிக்கு உங்களுக்கு phone பண்ணி, மச்சி எழுந்திருச்சு வா... யோகா பண்ணலாம், ஜிம்முக்கு போலாம் என்கின்ற மாதிரி friends வைத்துக்கொள்ளுங்கள். அது girl friend-ஆக இருந்தாலும் சரி, boyfriend-ஆக இருந்தாலும் சரி, உங்களை inspire பண்ணுகின்ற, உங்களை discipline-ல் வைத்திருக்கின்ற, வெறும் motivation கிடையாது, வெறும் motivation, வெறும் inspiration-ல் விட்டுவிட்டுக் போகின்ற ஆள் கிடையாது...
Discipline-ல் வைத்திருக்கின்ற friends-ஐ entertain பண்ணுங்கள். அவர்களை உங்களைச் சுற்றி உருவாக்கிக்கொள்ளுங்கள், வளர்த்துக்கொள்ளுங்கள்.
ஆறாவது ஸத்யம்: Uncomfort-ஐ, தவத்தை, ஒரு teacher மாதிரி, குருவாக, ஆசிரியராக அணுகுங்கள். வெறுப்போடு எதிரியாக அணுகாதீர்கள். இந்த discomfort என்று இருக்கிறது பார்த்தீர்களா... அதாவது எந்த ஒரு விஷயங்களை சாதிக்க வேண்டும் என்றாலும், பல தவங்கள் செய்தாக வேண்டியிருக்கும். பல discomforts-ஐ go through பண்ணியாக வேண்டியிருக்கும். சிரமங்களை go through பண்ண வேண்டியிருக்கும்.
இந்த சிரமங்களை, தவத்தை குருவாக, கடவுளாகப் பாருங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த 'சிரமங்கள்' என்ற குரு, உங்கள் வாழ்க்கையில் வந்தால்தான், 'வெற்றி' என்கின்ற இறுதி நிலையை உங்களால் அடைய முடியும். Transformations requires discomfort. மிகப்பெரிய வளர்ச்சி, நன்மையும், புதிய வாழ்க்கையும், discomfort வழியாகப்போய் தான் அடைய முடியும். சிரமங்கள் மூலமாக போய் தான் அடைய முடியும்.
சிரமங்கள் வாழ்க்கையில் வருகிறது என்றாலே, புரிந்துகொள்ளுங்கள், சரியான direction-ல் சென்று கொண்டிருக்கின்றீர்கள். ஆழ்ந்து கேளுங்கள்: Comfortable-ஆக இருக்கின்ற stagnation-ஐ உடைத்தீர்களானால் மட்டும்தான், மிகப்பெரிய நன்மைகளை அடைவீர்கள். Comfort வந்து பொதுவாக உங்களுடைய வளர்ச்சியை நிறுத்திவிடும். Limits your growth. ஒருநாளும், நான் என் வாழ்க்கையில் comfort zone-க்குள் உட்கார்ந்ததே கிடையாது. நானும் உட்கார்ந்தது கிடையாது, என்னைச் சுற்றியிருப்பவர்களையும் comfort zone-க்குள் உட்கார விடமாட்டேன். அடுத்தடுத்து move பண்ணிக்கொண்டே இருப்பேன், மாற்றிக்கொண்டே இருப்பேன். அடுத்தடுத்தத் திருப்பணிகளை நிகழ்த்திக்கொண்டே இருப்பேன்.
Unending Discipline, Unending way breaking the comfort zone. That is the best way to break your Ego, delusion, limited personality, limited identity, limited individuality.
ஆழ்ந்து கேளுங்கள், 'சிரமங்கள்' என்பதை குருவாகவும், கடவுளாகவும் நினைத்து ஏற்றுக்கொண்டீர்களானால்தான் வெற்றி, புதிய வாழ்க்கை என்பது மலரத்துவங்கும்.
உங்கள் comfort zone எல்லாவற்றையும் identify பண்ணி, தயவுசெய்து அதை உடைத்துக்கொண்டு வெளியில் வாருங்கள். எப்படி அந்த situations are allowing, making you stagnant என்று பாருங்கள். சூழ்நிலைகள் எப்படி உங்களை comfort zone-ல் வைத்துக்கொண்டு, stagnant- ஆக மாற்றுகின்றது என்று பாருங்கள். Stagnant-ஆக இருப்பதனால் வருகின்ற harm-ஐ பாருங்கள்.
உண்மையில், உங்கள் வாழ்க்கையில் வருகின்ற பல பயங்கள், danger கிடையாது ஐயா உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகின்ற வளர்ச்சிக்கானப் பாதை.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: எல்லா பயமுமே danger கிடையாது. கொஞ்சம் பொறுமையோடுப் பார்த்தீர்களானால், உங்கள் வாழ்க்கையில் வருகின்ற பெரும்... 99.99% பயங்கள், வாழ்க்கையினுடைய வளர்ச்சிக்கான பாதை. Real அபாயம் கிடையாது. Real கிடையாது.
இதைப் புரிந்துகொள்வதுதான், இதைப் புரிந்துகொண்டு முன்னேறுவதுதான் discipline.
இந்த ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்: பல நேரத்தில் உங்களுடைய பயங்கள், பல பயங்கள் - real danger கிடையாது. உங்கள் முன்னேற்றத்திற்கான பாதை. அதை நீங்கள் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் புரிந்துவிடும். பெரிய விஷயமே இல்லை.
எதிர்வருகின்ற challenges எல்லாவற்றையும் எதிர்கொண்டு, எதிர்கொண்டு clarity-யை build பண்ணிவிடுங்கள். வாழ்க்கையில் ஒரு clarity- யை build பண்ணி விடுங்கள். வருகின்ற challenges-ஐ எதிர்கொண்டு, எதிர்கொண்டு, எதிர்கொண்டு, clarity-யை build பண்ணி விடுங்கள். உங்களுடைய வாழ்க்கையை நீங்களே ஒரு active-வான creator-ராக build பண்ணுங்கள் ஐயா.
'எதுவும் பண்ண முடியாது, முடிஞ்சிருச்சு, இப்படித்தான்' என்று நினைத்து வாழாதீர்கள் ஐயா. தொடர்ந்து ஒரு active-வான creator-ராக இருங்கள். உங்களை நீங்களே ஒரு 'active'-வான creator' என்கின்ற narrative-வை, உங்களுக்கு நீங்களே சொல்லி அதை வாழுங்கள். நீங்கள் ஒரு active-வான creator. உங்கள வாழ்க்கையை create பண்ணுகின்ற creator.
நாங்கள் இந்த AI build பண்ணபொழுது, எங்கள் Ask Nithyananda AI build பண்ணியபொழுது, இரண்டு வருடங்கள்... இப்பொழுது இதுவரை இரண்டு வருடங்கள் வேலை செய்திருக்கின்றோம். இன்னும் இரண்டு வருடங்கள் வேலை செய்யப் போகின்றோம். மொத்தம் இதற்கு நான்கு ஆண்டுகளாவது உழைப்பு தேவைப்படும். ஆனால் அதனுடைய பலன், வெற்றி அளப்பரியது!
ஸநாதன ஹிந்து தர்மத்திற்கு நாங்கள் செய்திருக்கும், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, சிறப்பான, உயர்ந்த, உன்னதமான சேவை என்று எங்களால் ஆனந்தப்பட முடியும். பெருமிதப்பட முடியாது. ஏனென்றால், பரமஶிவன் அருளால் நடந்தது. அவருடைய திருவடியிலே இருந்து, அவருடைய கையிலே ஒரு கருவியாக இருந்து, அவர் செய்து கொண்டார். ஆனால் 'எங்களை அவர் கருவியாக உபயோகப்படுத்தி செய்தாரே' என்று ஆனந்தப்பட முடியும்.
பல ஆயிரக்கணக்கான நூல்களை மொழிபெயர்க்கின்ற tools-ஐ கட்டமைத்தோம். அதைக் கட்டமைத்து, அந்த tools மூலமாக மொழிபெயர்த்து, translate பண்ணி, organise பண்ணி ஒரு discipline-க்கு கீழே எடுத்துவந்து , AI-ஆக மாற்றுவது. இது என்னை மட்டுமல்ல, எங்கள் எல்லாரையுமே, ஒரு active-வான creator-ஆக மாற்றிவிட்டது. அந்த மாதிரி பெரும் திருப்பணிகளை வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளுங்கள். பெரும் திருப்பணிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஏழாவது ஸத்யம்: நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... ஏழாவது ஸத்யம்: உங்கள் கடந்த காலம், மிகவும் மோசமானது என்பது உண்மை. ஏனென்றால், என்ன சொன்னாலும், 'உங்கள் கடந்த காலம் சிறந்தது' என்று நம்ப மாட்டீர்கள். 'இல்ல இல்ல, இதைவிட better-ஆக இருந்திருக்கலாம். இதைவிட better-ஆக இருந்திருக்கலாம். இப்படி இருந்திருக்கலாம் அப்படி இருந்திருக்கலாம்' என்று நினைப்பீர்கள்.
'கடந்த காலம் மோசமானது' என்பது கெட்ட செய்தி. ஆனால் ஒரு பெரிய நல்ல செய்தி இருக்கிறது... 'கடந்த காலம் - இறந்த காலம்'. அதனால் அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்.
உங்களை நீங்களே, இந்த வாழ்க்கையை வாழ்ந்ததற்காக மன்னித்துக்கொள்ளுங்கள். நிறைய விஷயங்கள், இப்பொழுது உங்களுடைய updated Intelligence-ஐ வைத்து, கடந்த காலத்தை நீங்கள் அளவீடு செய்துகொண்டிருப்பீர்கள். இதை வைத்து குற்ற உணர்ச்சி, ஏக்கம், வெறுப்பு, பயம் இதையெல்லாம் உருவாக்கிக்கொண்டிருப்பீர்கள். முதலில் அதை நிறுத்துங்கள்.
கடந்த காலத்திலே survival need-க்காக நீங்கள் செய்திருக்கின்ற பல விஷயங்களையும், உங்களை நீங்களே மன்னித்து விடுங்கள். இந்த self-criticism அதை ஏதோ ஒரு பெரிய மெடல் மாதிரி குத்திக்கொண்டு சுற்றாதீர்கள். சுய-விமர்சனத்தை மெடல் மாதிரி குத்திக்கொண்டு சுற்றாதீர்கள்.
உங்களை நீங்களே மன்னிப்பது weakness கிடையாது. பலம்!
அது இருந்தால்தான் அடுத்தடுத்து முன்னேறுவீர்கள். இல்லையென்றால், அந்த குற்ற உணர்ச்சி என்பது, மிகப்பெரிய கல்லை காலில் கட்டிவிட்டு, உங்களை ஓட சொல்லிக் கேட்பது.
எப்படி ஓட முடியும்? நடக்கவே முடியாது. எப்படி ஓட முடியும்?
அதனால் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இந்த குற்ற உணர்ச்சி, கடந்த காலத்தைப் பற்றிய கவலை சுமைகளை, கல்...ஏகப்பட்டப் பாராங்கல்... எல்லாவற்றையும் backpack-ல் கட்டிக்கொண்டு போகின்ற மாதிரி ஐயா.
Drop the back pack!
தினந்தோறும் காலையில் எழுந்து உட்கார்ந்து, நான் புதியவன், கடந்த கால என்னை நான் மன்னிக்கின்றேன், மறக்கின்றேன், Release பண்ணிவிடுகின்றேன். அவனை சுதந்திரமாக விடுவித்துவிடுகின்றேன். நீ சென்றிடு, கரைந்து போ. ப்ரபஞ்சத்தோடு நீ மறைந்து போ. நான் புதியவன், புதிய வாழ்க்கையை துவங்குகிறேன் என்று ஸத்ய ஸங்கல்பத்தை உருவாக்குங்கள்.
ஆழ்ந்து கேளுங்கள்... கடந்த காலத்தை, உங்கள் உணர்விலிருந்து கரைத்து விடுபடுத்திவிடுங்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கடந்த காலத்தை மட்டும் கரைத்து விடுபடுத்திவிட்டீர்களானால், release பண்ணிவிட்டீர்களானால், உங்களை நீங்களே மன்னித்துவிட்டீர்களானால், உங்கள் உடலிற்குள் இருக்கின்ற அத்தனை organs-ம் detox ஆகி, உங்கள் internal organs எல்லாம் detox-ஆகி neuropeptides எல்லாம் clear ஆகி, ஒரு புதுமை வாழ்க்கைக்குள் வந்துவிடும். ஒரு புதுமை வாழ்க்கைக்குள் வந்துவிடும்.
ஒரு மாதத்திற்கு முன்பாக, நான் ஒருமுறை கைலாஸவாசிகளுக்காக வகுப்பெடுத்திருந்தேன். நான் அப்பொழுது சொன்னேன்... பக்தர்களுக்கும் கைலாஸவாசிகளுக்கும் சொன்னேன், இன்று உங்களுடைய கடந்த காலம் அனைத்தையும் மன்னிக்கின்றேன், மறக்கின்றேன். அவைகளை உங்களிடமிருந்து இருந்து release பண்ணிவிடுகின்றேன் என்று. அதற்குப் பிறகு, மொத்த கைலாஸவாசிகளுடைய வாழ்க்கைத் தரமே வேறு நிலைக்குப் போய்விட்டது!
நானே பார்க்கிறேன்... அவர்களுடைய சிந்திக்கும்விதம், செயல்படும்விதம், இயங்கும் விதம் எல்லாமே வேறு நிலைக்குப் போய்விட்டது.
உங்களை நீங்களே மன்னிப்பது, உங்கள் எதிர்காலத்தை நோக்கி நீங்கள் செயல்படுகின்ற செயல்களை ஸ்வதந்தரத்தோடு, ஆனந்தத்தோடு, இனிமையோடு light-ஆக செய்வதற்கு உதவும் ஐயா. அதனால் சற்றே பொறுமையோடு, ஶ்ரத்தையோடு, ஜ்ஞாநத்தோடு, அறிவோடு, உங்களை நீங்களே தயவோடு அணுகுங்கள், கருணையோடு அணுகுங்கள். உங்கள் கடந்த காலத்தை மன்னித்து விடுங்கள். Forgive yourself, release your past.
எட்டாவது ஸத்யம்: எட்டாவது ஸத்யம், இது ஒரு மிக உயர்ந்த ஸத்யம். இனிமையோடும், ஆனந்தத்தோடும் வாழ்க்கையில் இயங்குங்கள். ரொம்ப light-ஆக personality- யாக இருந்து இயங்குங்கள் ஐயா. நித்ய நிகழ்விலே எப்போதும் இனிமையோடும், ஆனந்தத்தோடும் இயங்குங்கள் ஐயா.
இந்த தள்ளிப்போடுவதை நிறுத்துங்கள்... 'நாளைக்கு பார்த்துக்கலாம், இரண்டு நாள் கழிச்சு பார்த்துக்கலாம். இப்பொழுது உடனே என்ன அவசரம்?' என்று தள்ளிப்போடுவதை நிறுத்துங்கள்.
என்னுடைய கைலாஸவாசி ஒருவர் அப்படித்தான் ஒரு தடவை கேட்டார்... 'என்ன எல்லாத்தையும் இன்னைக்கே முடித்தாக வேண்டுமா? இன்னைக்கே முடித்தாக வேண்டுமா என்ன? என்ன அவசரம் அப்புறம் பண்ணிக்கலாமே?' என்று கேட்டார்.
'இந்த அப்புறம் பண்ணிக்கலாமே என்று சொல்வதுதான் அசுரன், ராக்ஷஸன். உங்களுக்குள் இருக்கின்ற தீய ஶக்தி.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் தோல்வி என்பது, ஏதோ மிகப்பெரிய தவறு செய்துவிட்டதால்தான் வரும் என்று நினைக்காதீர்கள். இந்த சின்ன தவறாக மட்டும்தான் வரும்.
ஆழ்ந்து கேளுங்கள், உங்கள் செயல்பாடுகள், பயம், அச்சம், வெட்கம் மற்ற எந்த சாதாரண உணர்ச்சி கொந்தளிப்புகளினாலும் கட்டுப்படுத்தப்படாமல், மட்டுப்படுத்தப்படாமல், முழுமையாக உயிரின் உயிர்ப்பிலிருந்து நிகழ்வு நிகழ்வதற்கு அனுமதித்து, அதுபோல் நிகழ்த்துங்கள்.
இன்னும் அடுத்து இன்னும் இரண்டு ஸத்யங்கள் சொல்ல வேண்டியிருக்கின்றது. அடுத்தடுத்த ஸத்ஸங்கங்களில் கவனிப்போம். அதைப் புரிந்துகொள்வோம்.
இப்பொழுது காலம் கடந்துவிட்டதனால், நீங்கள் எல்லோரும் இந்த ஸத்யங்களை எல்லாம் உள்வாங்கி பரமாத்வைதத்தை அடைந்து, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தம் ஆகிட ஆசீர்வதிக்கின்றேன்.
ஆனந்தமாக இருங்கள்.
Event Photos
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |








































