25 செப்டம்பர் 2013 கோ சேவை

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

கோ சேவை (Go Seva)

வருடம்  : 2013

நாள் : 25 செப்டம்பர் 2013

நாட்கள் : நாள்தோறும் நடைபெறும் சேவை

நிகழ்வு : கோ சேவை

நடைபெற்ற இடம் : ஆதி கைலாஸா, பிடதி, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : ஆதி கைலாஸா, பிடதி, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா.

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் தீட்சை பெற்ற சீடர்கள்.

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 100

நிகழ்வின் விவரனை : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளுடன் நிறுவப்பட்ட நித்யானந்த கோ ஆலயத்தில் வளரும் பசுக்கள்.


நித்யானந்த கோ ஆலயத்தில் வளரும் பசுக்கள்

கோ சேவை-படங்கள்


கோமாதா_சாஸ்திர பிரமாணம்

கோமாதாவை நமது இந்து சாஸ்திரங்கள் பல மேன்மையை உடைய உயிராக, பல தெய்வங்கள் வசிக்கும் உருவகமாக விவரிக்கின்றன.

சிவ மஹாபுராணத்தில் பரமசிவனார் பார்வதி தேவிக்கு இவ்வாறு உரைக்கின்றார்...

பார்வதி! தேவர்கள் அனைவரும் பசுவின் தேகத்தை வந்தடைந்திருக்கிறார்கள். அதை நெற்றியிலும் சந்திர சூரியர் கண்களிலும், பிராணவாயு வாயிலும் அக்கினி முகத்திலும் சந்திரன் நாவிலும் அசுவினி தேவர்கள் காதுகளிலும் உருத்திரமூர்த்திகள் எல்லா அவயங்களிலும் லோக பாலகர்களும் நாக மன்னர்களும் பாதங்களிலும் துவாதச ஆதித்தர்கள் (பன்னிரு சூரியர்கள் கழுத்திலும்) ஏழுகடல்கள் வயிற்றிலும் கங்கை ஸ்தனங்களிலும் அஷ்டவசுக்கள் பக்கங்களிலும் புண்ணிய தீர்த்தங்கள் உபஸ்தத்திலும், லட்சுமி கோமயத்திலும், விசுவதேவர்களும் காத்தியர்களும் வாலிலும்,

மந்திரங்கள், யாகங்கள், தானங்கள் நியமங்கள், மகரிஷிகள், நக்ஷத்திரங்கள் காயத்ரி விஷ்ணு ஜகதி பங்திதிருஷ்ருஷ்டுப் ருக்வேதம் யஜூர்வேதம் சாம வேதம் அதர்வணவேதம் லோக மாதாக்கள், மேகங்கள், வருஷங்கள், தர்மம், நாராயணர், நதிகள் பூதங்கள், யக்ஷர்கள் முதலானோர் பசுவின் கொம்புகளிலும் ஆஸ்ரயித்திருக்கின்றார்கள். இவ்விதமாக எல்லா தேவர்களுக்கும் வாசஸ்தானமாகவுள்ள புனிதமான தேனுவை அலங்காரம் செய்து என்னுடைய சன்னிதியில் பவித்திரபாணியாய்ச் சுவர்ணமும் திலமும் கையில்கொண்டு... ஸர்வலோகமயமாகவுள்ள இந்த தேனுவைத் தானஞ் செய்கிறேன். ஸர்வதேவமயமாகவும் ஸர்வலோகமயமாகவுமுள்ள இந்தத் தேனுவைத் தானஞ் செய்கிறேன்.

ஸர்வலோக நிமித்தாஞ்ச ஸர்வலோக நமஸ்க்ருதாம்!

ப்ரயச்சாமா மஹாமூர்த்தி மக்ஷயாம்

மேஸூபாமிதி என்ற மந்திரத்தை சொல்லி, எவன் ஒருவன் தானஞ் செய்கிறானோ அவன்தான் விரும்பிய உலகங்களில் சாமசாரியாய் பலகாலஞ் சஞ்சரித்து மீண்டும் பூவுலகத்தில் உத்தமச் சக்கரவர்த்தியாகப் பிறவியெடுத்து முற்பிறவி ஞானத்தோடு பலகாலம் புத்திரர்களோடும் வாழ்ந்து அணிமாதி சித்திகளை அடைந்து அடைந்து யோகீஸ்வரனாவான்.

மலையரசன் மகளே! திவ்விய அலங்காரஞ் செய்த பசுவை விதிப்படி உபயகோமுகியாகத் தானஞ்செய்தவன் நரகவாதனை சிறிதும் இல்லாமல் நீங்குவான்.

(ஆதார நூல்: சிவ மஹாபுராணம்)

கோமாதா எல்லா மங்களத்தன்மைகள், வளம் மற்றும் பலத்தின் அடைக்கலமாகும். கோமாதா இருக்கும் இடமே மகிழ்ச்சியாகவும், செல்வத்துடனும் வளமாக இருக்கும். இந்து மதத்தின் அனைத்து சடங்களிலும் கோமாதாவின் பரிசான நெய் முக்கிய இடத்தை பெறுகிறது. கோமாதாவின் பால்,

கோமியம், சாணம் உட்பட எல்லாப் பொருட்களும் புனிதமானது. இது பல வியாதிகளுக்கு மருந்தாகவும் திகழ்கிறது. சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்து தெய்வீக சக்திகளை வரவேற்பதற்கு கோமாதாவின் சாணத்தால் வாசலை மங்களகரமாக அலங்கரிப்பது நம் மரபு.

நம்முடைய பாரம்பரியத்தில் கோமாதாவின் ஆசி பெற எப்பொழுதும் எல்லோராலும் பிரார்த்தனை செய்யப்படும்.

தேனவஹ தன: ஊர்ஜம் அஸ்மே விஶ்வ: துஹனா தந்து||

கோமாதா - தன்னுடைய ஊட்டச்சத்துக்களையும், சக்தியையும் சுரந்து அளித்து, நம்மை எப்போழுதும் வளப்படுத்துவதாக இருந்து நம்மை ஆசிர்வதிக்கட்டும்.

- அதர்வ வேதம் (18.4.34)

இவ்வளவு மங்களத்துவத்தை தனி

மனிதருக்கும், சமூகத்திற்கும் வழங்கும் கோ மாதா வாழும் கோ ஆலயங்கள் இன்றைய காலக்கட்டத்தில் வியாபார வாசலாகிவிட்டதால், பாரம்பரிய கோ ஆலயங்களை புனரமைப்பது இந்து மதத்திற்கு மட்டும் அல்ல, உலகத்தின் பெரும் நன்மைக்கு செய்யப்படும் உண்மையான பங்களிப்பாகும்.

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தமது அனைத்து கைலாஸாவிலும் கோ ஆலயத்தை கட்டாயமான அங்கமாக நிர்மாணித்துள்ளார்கள். தமது ஆலயங்களில் அனைத்து நாட்களிலும் கோபூஜை நடைப்பெற வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்கள். நித்யானந்த கோசாலையில் வளரும் அனைத்து பசுக்களும் - பிறப்பு முதல் மரணம் வரை பாதுகாப்பு அளித்து வளர்க்கப்படுகிறது. எந்தவொரு காரணத்தினாலும் வன்முறை பிரயோகப்படுத்தப்படாமால் அன்புடன் வளர்க்கப்படுகிறது. இயற்கை வேளாண்மையால் விளைந்த பொருட்களே

உணவாக வழங்கப்படுகிறது. தேசிப்பசுக்கள் இனம் அழிப்பு தடுக்கப்படுவதற்காக பகவான் அவர்கள் தமது கோ ஆலங்களில் தேசிப்பசுக்களே வளர்க்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதைப்பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். கைலாஸாவின் கோசாலைகள் பரமசினார் காமிக ஆகமத்தில் அருளியபடி கட்டமைப்பு செய்யப்படுகிறது.

கைலாஸாவின் இந்த அரிய சேவைகளை உலகளாவிய இந்துக்கள் பெரிதும் போற்றி ஆதரவு அளிக்கின்றனர்.