23 November 2025 SPH Live Darshan
On this day, THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM—the ultimate manifestation, Paramavatara of Paramashiva, the ultimate superconsciousness—gave a Live Darshan on the auspicious occasion of the Thiru Karthigai Deepam, attended by devotees, disciples, citizens, and e-citizens of the United States of KAILASA (USK). THE SPH revealed the profound method for achieving the full benefit of the satsang, emphasizing the practice of observing the observer and focusing on the internal Guru (Shuddha Buddhi) to transform the external teachings into *Jnana Rasavada* (Alchemical Transformation of Knowledge).
Title
உண்மை சுதந்திரம் என்ன? | அருணாசலப் புராணம் | பாகம் 3
Link to Video
Transcript
ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம் அஸ் மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். இணையத்தின் மூலமாகவும், இதயத்தின் மூலமாகவும் மற்றும் உலகமெங்கும் இருக்கும் கைலாஸங்களிலும் பரமஶிவ சேனை நிகழ்ச்சியில் கலந்துகொண் டிருக்கும் பரமஶிவ சேனை நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள், கைலாஸா St. Kitts--ல் இருக்கும் அன்பர்கள் மற்றும் கைலாஸா திருவண்ணாமலையில் இருக்கும் அன்பர்கள் மற்றும் உலகமெங்கிலும் இந்த திருக்கார்த்திகை தீபத்திருவிழா, திருக்கார்த்திகை மஹோத்ஸவத்திற்காக, ப்ரஹ் மோத்ஸவத்திற்காக, பரமஶிவ ப்ரஹ் மோத்ஸவத்திற்காக உலகமெங்கும் இருக்கும் எல்லா கைலாஸங்களிலும் சேர்ந்திருக்கும் அன்பர்கள், தொண் டர்கள், சீடர்கள், பக்தர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். ஆழ்ந்து கேளுங்கள், நேற்று பல அ ன்பர்கள் ஒரு பத்திற்கும் மேற்பட்ட அன்பர்கள் கேட்டிருந்த ஒரு கேள்வி. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பத்திற்கும் மேற்பட்ட அன்பர்கள் கேட்டிருந்த ஒரு கேள்வி என்னவென்றால், 'இந்த ஸத்ஸங்கத்தை எப்படி உள்வாங்குவது? இதன் முழுப் பலனையும் எப்படி அடைவது?' ரொம்ப ஶ்ரத்தையோடு கேட்கின்ற பல பக்தர்கள் கேட்டிருக்கின்றீர்கள். இந்த ஸத்யத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது, உங்கள் கண் வழியாக யார்பார்க்கிறாரோ, உங்களுடைய காது வழியாக யார்கேட்கிறாரோ - அவரை பாருங்கள். அவர் மீது உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். பார்ப்பானை பார்ப்பானே பார்ப்பணன். உங்களுக்குள்ளிருந்து யார்பார்க்கிறாரோ, யார்கேட்கிறாரோ, அவரைப் பார்த்து, உங்கள் கவனம் முழுவதையும், உங்களுக்குள்ளிருந்து அ னைத்தையும் பார்ப்பவரை, அனைத்தையும் observe பண்ணுகின்றவரை, observe பண்ணுங்கள். அனைத்தையும் சாட்சியாக இருந்து பார்ப்பவரைப் பாருங்கள். இப்பொழுது நான் சொல்கின்ற வார்த்தைகளை, வெளியிலிருந்து வாங்கிப் புரிந்துகொள்வது ஒரு நிழல் நிலைதான். கண் களை மூடி அமர்ந்து, உள்ளுக்குள்ளே யார்இந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டு அதைப் புரிந்துகொள்கிறாரோ, அவர் மீது உங்கள் கவனத்தைத்திருப்பி, இந்த வார்த்தைகளை, இந்த ஸத்யங்களை கேட்பீர்களானால், வெளியில் இருந்து குருவிடமிருந்து வரு ம் வார்த்தை, உள்ளிருந்து, உள்ளிருக்கும் குருவிடமிருந்து ஸ த்யத்தெளிவாய் பிறக்கும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வெளியில் இருக்கின்ற குருவாகிய நான், உங்களுக்குள் இருக்கின்ற குருவாகிய உங்கள் ஶுத்த புத்தியிடம் தான் பேசிக்கொண் டிருக்கின்றேன். அதனால் கண் களை மூடி அந்த ஶுத்த புத்தியின் மீது கவனத்தைச்செலுத்தி கேட்டீர்களானால், நான் சொல்கின்ற ஸத்யம், உங்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் வாழ வேண் டும் என்கின்ற தெளிவோடு, உங்களுக்கு உள்ளிருக்கும் குரு உங்களுக்கு வி ளக்கி விடுவார்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: வெளியில் இருக்கின்ற குரு, Pure Science தான் சொல்ல முடியும். உங்கள் உள்ளுக்குள் இருக்கின்ற குருதான், அந்த Pure Science-ஐ உள்வாங்கி, Applied Science-ஆக மாற்றிக் கொடுக்க முடியும். வெளியில் இருக்கின்ற குரு, பரம ஸத்யங்களைக் கொடுப்பார். உள்ளுக்குள் இருக்கின்ற குருதான், அந்த பரம ஸத்யங்களை வாங்கி, உங்கள் நிஜ வாழ்க்கையிலே அதை கடைபிடிப்பது எப்படி என்று நிஜ ஸத்யமாக மாற்றிக் கொடுப்பார். அதனால், ஶ்ரத்தையோடு கடைபிடிக்க வேண் டும் என்று நினைக்கின்ற எல்லோருமே, கண் களை மூடி நிமிர்ந்து அமருங்கள். ஒரு நிமிடம் time கொடுக்கின்றேன். கண் களை மூடி நிமிர்ந்து அமர்ந்து, 'உங்களுக்குள் இருந்து, நான் சொல்லும் வார்த்தைகளை எல்லாம் உள்வாங்கி, கேட்டு, அதற்குப் பொருள் சொல்லி உங்களுக்குப் புரிய வைக்கின்ற அவ ர்யார்?' என்று பார்த்து, அவர் மீது உங்கள் கவனத்தைத்திருப்புங்கள். பார்ப்பவரை பாருங்கள். Observe the observer Witness the witness Be conscious of the consciousness which is processing all this information. ஆழ்ந்து ... கேளுங்கள் உங்களுக்குள்ளிருந்து கேட்பவரும், வெளியிலிருந்து சொல்பவரும் ஒருவரே. உங்களுக்குள் ஆழ்ந்து கேட்டீர்களானால், பார்ப்பவனை பார்த்து, 'கேட்பவன் யார்' என்று அவ ர்மீது உங்கள் கவனத்தைத்திருப்பி, அமர்ந்து கேட்டீர்களானால், இந்த தொடர்த்யான ஸத்ஸங்கம், 'ஜ்ஞாந ரஸவாத நிகழ்வாக' உங்களுக்குள் நிகழ்ந்துவிடும். ஒருவேளை கண் ணைத்திறந்து வைத்திருக்க வேண் டும் என்று நினைத்தீர்களானாலும் பரவாயில்லை. ஆனால் கண் களைத் திறந்து வைத்தும், யார் ... உள்ளிருந்து பார்க்கின்றாரோ அதாவது கண் வழியாகப் பார்க்கின்றீர்கள், கண் பார்க்கவில்லை. தெரிந்துகொள்ளுங்கள், காது வழி யாகக் கேட்கின்றீர்கள், காதுகள் கேட்வில்லை. உள்ளிருந்து யார்பார்க்கிறாரோ, யார்கேட்கிறாரோ, அவர் மீது உங்கள் கவனத்தை வைத்து கேளுங்கள். யார்பார்க்கின்றாரோ, யார்கேட்கின்றாரோ, அவர் மீது உங்கள் கவனத்தை வைத்து, இந்த ஸத்ஸங்கத்தை முழுமையாகக் கேளுங்கள். அவ்வாறு கேட்டீர்களானால், இந்த த்யான ஸத்ஸங்கம் ஜ்ஞாந ரஸவாதமாக உங்களுக்குள் நிகழ்ந்துவிடும். இந்த ஒரு ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா. எனக்குள் 'தானாக' இருந்து யார்பேசுகிறாரோ, அவரேதான் உங்களுக்குள்ளும் 'தானாக' இருந்து 'நான்' என்னும் உணர்வாக இருந்து கேட்கின்றார். அதனால் 'உங்களுக்குள்ளிருந்து யார்கேட்கின்றார்?' என்று அவ ர்மீது உங்கள் கவனத்தைத் திருப்பினீர்களானால், நான் சொல்லுகின்ற பரம ஸத்யங்களை உங்கள் வாழ்க்கையிலே எப்படி வாழ்வது என்கின்ற ப ரம ஸத்யமும், நிஜ ஸ த்யமும் - இரண் டும் சேர்ந்து உங்களுக்குள் மலர்ந்துவிடும். இந்த ஜ்ஞாந ரஸவாதம் முழுமையடையும். அதனால் பார்ப்பானைப் பார்த்தபடி, கேட்பானைக் கேட்டபடி அமர்ந்திருப்பதே, இந்த ஸத்ஸங்கத்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பதற்கான முறை. அடுத்த கேள்வி: இந்தக் கேள்வியும், அதாவது நேற்று ஒரு கருத்தை சொல்லியிருந்தேன். என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது என்று! என்னுடைய own style -லில் ரொம்ப casual -ஆக சொல்லிவிட்டேன். அது ஒரு சின்ன reels -ஆக பண்ணிப் போட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. Already முகநூலில் வெறும் 10 மணி நேரத்திற்குள், அது 1 மில்லியன் views தாண் டி Viral-ஆக போய்கொண் டிருக்கிறது. ரொம்ப ஶ்ரத்தையோடு, அதாவது இ ந்த மேம்போக்கான பார்வையாளர்கள் இல்லை, ஶ்ரத்தையோடு கேட்கின்ற, ஶ்ரத்தையோடு நான் சொல்வதைக் கடைபிடிக்கின்ற பக்தர்களே ஒரு 20-25 பேருக்கும் மேல் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார்கள். அதனால் அந்த கேள்வியை address -பண்ணிவிடுறேன். அந்த கேள்விக்கு பதில் சொல்லிவிடுறேன்.
என்னவென்றால், இந்த புராண லக்ஷணங்கள் இதையெல்லாம் தெரிந்துகொண் டு நாங்க என்ன சாமி பண்ணப் போறோம்? இந்த புராண லக்ஷணங்கள் 10: ஸர்க்கம், விஸர்க்கம், விருத்தி, ரக்ஷா, அந்தாரணி, வம்ஸம், வம்ஸானுசரிதம், ஸம்ஸ் தா, ஹேது, அபாஷ்ரயம் - இதெல்லாம் எங்க வாயிலேயே நுழையவில்லை. இதைக் கேட்பதற்கே 'அய்யய்யோ இதையெல்லாம் memory-ல் வைத்துக்கொள்ள வேண் டுமோ' என்று ப யமாக வேறு இருக்கிறது. இதெல்லாம் தெரிந்து நாங்கள் என்ன சாமி பண்ணப் போறோம்? ஐயா, முதல் ... விஷயம் முதலில் நான் உங்களுக்குக் கொடுக்கின்ற assurance - கேட்டுக்கொள்ளுங்கள். இந்த assurance முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள். எந்த ஸம்ஸ் க்ரு'த வார்த்தையோ அல்லது மரபுத்தமிழ் வார்த்தையோ, முழுமையாக உங்களுக்கு விளக்காமல் விடமாட்டேன். Gen-Z language-ல் இந்த generation, Gen-Z language-ல் உங்களுக்குப் புரிகின்ற மாதிரியான தமிழ் கலந்து, சற்று ஆங்கிலம் கலந்து, இது எ ல்லா விதத்திலும் உங்களுக்குப் புரிகின்ற மாதிரி விளக்காமல் விடமாட்டேன். அதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். இரண் டாவது, இந்த கேள்வியில் என்ன கேட்க வருகிறீர்கள் என்றால், இந்த கருத்துக்களை எல்லாம் நாங்கள் புரிந்துகொண் டு எ ன்ன செய்யப் போறோம் சாமி? என்று கேட்கின்றீர்கள். இதை முழுமையாகச்சொல்லுகிறேன் கேளுங்கள். இந்த முதன்மைப் படைப்பு: ஸர்க்கம், விஸர்க்கம், விருத்தி, ரக்ஷா இவற்றையெல்லாம்தான் விளக்கிக்கொண் டு, விவரித்துக்கொண் டு இருந்தேன். முதலில் இப்பொழுது ஸர்க்கம், விஸர்க்கத்தைத்தான் விவரித்துக்கொண் டு இருக்கிறேன். புராண லக்ஷணம் பத்து. புராண லக்ஷணம் என்று பத்து வியாஸர்சொல்கின்றார். ஸர்கோஸ் யாத விஸர்கஸ் ச விரு த்தி ரக்ஷாந்த்ராணிச வம்ஸோ வம்ஸானுசரிதம் ஸம்ஸ் தா ஹேதுரபாஸ் ரய: தஸபி லக்ஷ ணைர்யுக்தம் புராணம் தத்விதோ விது: - இது பத்து. இந்த புராண லக்ஷணம் பத்தையும் புரிந்துகொண் டீர்களானால், உங்கள் வாழ்விலே மிகப்பெரிய ஸ் வதந்த்ரத்தை, முழுமையை அனுபவிப்பீர்கள். எப்படி எ ன்று இப்பொழுது விளக்குகின்றேன் கேளுங்கள். ஸர்க்கம்- முதன்மைப் படைப்பு. விஸர்க்கம் - இரண் டாம் நிலை படைப்பு. நேற்று இ தைப்பற்றி விளக்கத் துவங்கினேன். காலம் கடந்து விட்டதனால் இன்றைக்கு அதை ஆழமாக விளக்குறேன், கேளுங்கள் பரமஶிவப் பரம்பொருள், மஹாஸதாஶிவப் பரம்பொருள், அதாவது ப ரமஶிவன் வந்து பல்வேறு வடிவங்களைக் காட்டுகின்றார். 'மஹேஶ்வர மூர்த்தங்கள்' என்று சொல்வோம், 'அஷ்டாஷ்ட மூர்த்தங்கள்' என்று சொல்லுவோம் - 64 மூர்த்தங்கள். அதில் ப்ரதமமானதும், எல்லாவற்றையும் கடந்ததும், உருவங்களிலேயே உயர்ந்ததும்... இப்பொழுது லிங்கத்தைப் பொறுத்தவரை அருஉருவம். அது 'உருவம்' என்று சொல்ல முடியாது. அருஉருவம். அதனால், லிங்கத்தோடு நான் ஒப்பிடவில்லை. உருவங்களிலேயே மிகவும் பரமானது என்றால், மஹாஸதாஶிவ மூர்த்தம். 25 தலைகளோடு, 50 திருக்கரங்களோடு, 75 நேத்ரங்களோடு எ ம்பெருமான் எழுந்தருளி இருக்கின்ற இந்த திருக்கோலம், மஹாஸதாஶிவ திருக்கோலம். ஸதாஶிவர் வந்து ஐந்து முகத்தோடு இருப்பார். இந்த ஐந்து முகம் என்னவென்றால்... ஸ் ரு'ஷ்டி - உருவாக்குதல், ஸ் திதி - பாதுகாத்தல், ரக்ஷணை, ஸ் திதி செய்தல், பாதுகாத்தல், நடத்துதல், ஸம்ஹாரம் - புனரமைத்தல், rejuvenation, த்ரோபாவம் - மாயையில் இருந்து காப்பாற்றல், மாயையில் இருந்து மீட்டல். அனுக்ரஹம் - பரமுக்தி அளித்தல், ஜீவன் முக்தி அளித்தல், ஸாயுஜ்ய முக்தி அளித்தல், பரமுக்தி அளித்தல்.
இந்த ஐந்து, ஐந்தும்தான் பெருமானுடைய செயல்கள். இந்த ஐந்தையும் spontaneous -ஆக, simultaneous -ஆக, synergetic -ஆக செய்துகொண் டே இருக்கின்றார். அதுதான் இந்த ஸதாஶிவ மூ ர்த்தத்தினுடைய ஐந்து திருமுகங்கள். ஸதாஶிவ மூ ர்த்தத்தினுடைய ஐந்து திருமுகங்கள். மஹாஸதாஶிவ மூ ர்த்தி 25 திருமுகங்களோடு இருக்கின்றார். அது எ ன்ன காரணம் என்றால், இந்த ஐந்தொழிலையும் செய்கின்ற தத்துவங்களை வெளிப்படுத்துகின்றார். அதாவது, உருவாக்குதல் என்பதே ஒரு principle. ஒரு தத்துவம். உருவாக்குதலையும் உருவாக்க வேண் டும். ஸ் திதி செய்தலையும் உருவாக்க வேண் டும், rejuvenation-யும் - ஸம்ஹாரம், அதையும் உருவாக்க வேண் டும். த்ரோபாவம், மாயையிலிருந்து எடு க்கின்ற அந்த ஶக்தி, அந்த action, அதையும் உருவாக்க வேண் டும். அனுக்ரஹம், அருளுகின்ற அ ந்த action-யும் உருவாக்க வேண் டும். இந்த உருவாக்குதல், ஐந்து நிலைகளிலுமே நிகழுகின்றது. அதே மாதிரி ஸ் திதி. இது ஸூக்ஷ் மமான உண் மை. ஆழ்ந்து கேட்டால் புரிந்துகொள்ளலாம். ஸ் திதி, காத்தல் என்பது - உருவாக்குகின்ற ஶக்தியை ... உருவாக்கி
ஆழ்ந்து கேளுங்கள், ஆழ்ந்து கேளுங்கள். ஐந்தொழிலுமே, ஒன்றோடு ஒ ன்று சேர்ந்து simultaneous-ஆக, synergetic- ஆக, spontaneous-ஆக நடந்தாக வேண் டும்.
காரணம் என்னவென்றால், உருவாக்குகின்ற ஶக்தியை உருவாக்கிவிட்டால் மட்டும் போதாது. உருவாக்குகின்ற ஶக்தி ஸ் திதி செய்யப்பட வேண் டும், காக்கப்பட வேண் டும். உருவாக்குகின்ற ஶக்தி rejuvenate பண்ணப்பட வேண் டும், ஸம்ஹாரம் பண்ணப்பட வேண் டும். அப்பொழுதுதான், அதை rejuvenate பண்ணினால்தான் திரும்ப திரும்ப அந்த உருவாக்கும் ஶக்தி உருவாகும். அடுத்து, உருவாக்கும் ஶக்தி, ஏதாவது ஒரு வி தத்திலே மாயையில் விழுந்து வழியிலிருந்து தவறினால், அதை மாயையிலிருந்து மீ ட்க வேண் டும். உருவாக்கும் ஶக்தியை, பரமுக்தி நிலையில் வைத்திருக்க வேண் டும். அப்பொழுதுதான் மீண் டும் உருவாக்குவதைத் துவங்க முடியும். இந்த ஐந்தொழிலும், ஐந்தும் ஐந்தும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து 25-ஆக விரிவதுதான், மஹாஸதாஶிவ பரம்பொருளுடைய 25 திருமுகங்கள்: ஸ் ரு'ஷ்டி ஸ் ரு'ஷ்டி ஸ் ரு'ஷ்டி ஸ் திதி ஸ் ரு'ஷ்டி ஸம்ஹாரம் ஸ் ரு'ஷ்டி த்ரோபாவம் ஸ் ரு'ஷ்டி அனுக்ரஹம் ஸ் திதி ஸ் ரு'ஷ்டி ஸ் திதி ஸ் திதி ஸ் திதி ஸம்ஹாரம் ஸ் திதி, ஸ் திதி த்ரோபாவம் ஸ் திதி அனுக்ரஹம் அதேபோல, ஸம்ஹார ஸ் ரு'ஷ்டி ஸம்ஹார ஸ் திதி ஸம்ஹார ஸம்ஹாரம் ஸம்ஹார த்ரோபாவம் ஸம்ஹார அனுக்ரஹம் த்ரோபாவ ஸ் ரு'ஷ்டி த்ரோபாவ ஸ் திதி த்ரோபாவ ஸம்ஹாரம் த்ரோபாவ த்ரோபாவம் த்ரோபாவ அனுக்ரஹம்.
அடுத்தது, அனுக்ரஹ ஸ் ரு'ஷ்டி அனுக்ரஹ ஸ் திதி அனுக்ரஹ ஸம்ஹாரம் அனுக்ரஹ த்ரோபாவம் அனுக்ரஹ அனுக்ரஹம். இந்த 25-ம் சேர்ந்ததுதான் மஹாஸதாஶிவ மூ ர்த்தத்தின் திருமுகங்கள். அதனால் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த முதன்மைப் படைப்பு இப்படித்தான் வெளிப்படுகின்றது. அதாவது, உருவாக்குகின்ற, காக்கின்ற, அழிக்கின்ற, த்ரோபாவத்திலிருந்து எடுக்கின்ற, அனுக்ரஹம் செய்கின்ற இ ந்த தத்துவங்கள் 25-ஆக வெளிப்படுகின்றது. Spontaneous-ஆக, simultaneous-ஆக, synergetic-ஆக வெளிப்படுகின்றது. அதிலிருந்து பெருமான், ப்ரஹ் மாவை, படைப்பதற்காக உருவாக்குகின்றார். விஷ்ணுவை, ஸ் திதி செய்வதற்காக வெளிப்படுத்துகின்றார். இந்த மாதிரி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவரை வெளிப்படுத்தி நிகழ்த்துகின்றார். இப்பொழுது மு தன்மைப் படைப்பு, அவர்மஹாஸதாஶிவ மூ ர்த்தியாக வெளிப்படுதல். Formless in form. Nameless in name Timeless in time Spaceless in space Causeless in cause. காரணம் கடந்து அவ்யக்தமாய் இருப்பது, காரணத்திற்குள் வெளிப்படுவது. இதுதான் முதன்மைப் படைப்பு. இப்பொழுது இ ரண் டாம் படைப்பு: ப்ரஹ் மா, விஷ்ணு என ஒ வ்வொருவரையும் உருவாக்கி நியமிக்கின்றார். இந்த படைப்புத்தொழிலை நிகழ்த்துவதற்காக, இந்த படைப்பு, படைத்தலுக்காக ப்ரஹ் மா காத்தல் புரிவதற்காக விஷ்ணு, ஸம்ஹாரத்திற்காக மஹாருத்ரர்- இது மாதிரி ஒவ்வொருவரையும் உருவாக்கி நியமிக்கின்றார். த்ரோபாவத்திலே யாரும் நம்மைப் போட வேண் டியதில்லை, நாமே போட்டுக்கொள்வோம். அதில் இருந்து வெளியில் எடுப்பதற்குத்தான் பெருமான் யாரையாவது படைத்து நியமிக்க வேண் டும். அனுக்ரஹத்திற்கு குருமூர்த்தியாக வெளிப்பட்டு, அனுக்ரஹ மூர்த்தியாக இருக்கின்றார், அனுக்ரஹத்தை செய்கின்றார். இது மாதிரி இரண் டாம் நிலை படைப்பு. ஆழ்ந்து கேளுங்கள், இப்பொழுதுதான் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்கின்றேன். நீங்கள் என்ன கேட்டீர்கள் என்றால், 'இதையெல்லாம் தெரிர்ந்துகொண் டு நாங்கள் என்ன பண்ணப் போகிறோம் சாமி? எங்களுடைய life-ல direct-ஆ இது எ ன்ன relevance-?' என்று கேட்டீர்கள். அதுதான் பெரும்பாலான, அந்த 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கேட்டிருக்கின்ற ஒரு முக்கியமான கேள்வி. இப்பொழுது சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்: மூன்றாம் நிலை படைப்பு என்று ஒன்று இருக்கின்றது. மூன்றாம் நிலைப் படைப்பு என்றால் என்னவென்றால், ப்ரஹ் மா உருவாக்கிய படைப்பாளர்கள், அவர்கள் உருவாக்கின்ற இ ந்த உலகம். அதனால்தான், நம் ஸநாதனஹிந்து தர்மத்திலே உருவாக்குகின்ற படைப்பாளர்களை, அதாவது கல்லிலே உருவாக்குகின்ற கல்தச்சர்கள், மரத்திலே உருவாக்குகின்ற மரத்தச்சர்கள், பொன்னிலே ஆபரணம் செய்கின்ற பொன் தச்சர்கள் - இவர்களை எல்லாம் 'விஸ் வகர்ம ப்ரஹ் மா' என்று சொல்லுவோம். விஸ் வகர்ம ப்ரஹ் மா. அதாவது, ப்ரஹ் மா இவர்களை உருவாக்க, இவர்கள் படைப்பை நிகழ்த்துகின்றார்கள். இது மூ ன்றாம் நிலை படைப்பு. 'இந்த பல நிலைப் படைப்புகள் உங்களுக்குப் புரியுமானால், வாழ்க்கையிலே மிகப்பெரிய ஸ் வதந்தரத்தை அடைவீர்கள்' என்று சொன்னேன். அது எ ப்படி என்று இப்பொழுது சொல்கிறேன் புரிந்துகொள்ளுங்கள்.
பலபேர் தொடர்ந்து என்னிடம் கேட்கின்ற கேள்வி. இந்த கேள்வி வராத ஸத்ஸங்கமே இருக்காது. இந்த ஊழலை ஒழிப்பதற்கு ஏ தாவது பண்ணுங்களேன் சாமி' என்பது. முதலில் புரிந்துகொள்ளுங்கள் ஐயா, பணம்தான், 'பணம்' என்கின்ற கருத்துதான் - முதல்நிலை ஊழல். அந்த பணத்தைத்திருடுவது, கொள்ளையடிப்பது, மடைமாற்றுவது... இதெல்லாம் - இரண் டாம் நிலை ஊழல். இந்த முதல்நிலைப் படைப்பு, இரண் டாம் படைப்பை எல்லாம் புரிந்துகொண் டீர்களானால், சமூகத்திலே பல விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள் ஐயா. இன்னும் ஆழ்ந்த சில உதாரணங்களைச்சொல்கின்றேன், 'சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது சாமி, சமூகம் சீரழிந்துவிட்டது சாமி. இதற்கெல்லாம் ஏதாவது தீர்வு கொடுங்கள். இதுக்கெல்லாம் ஏதாவது பண்ணுங்கள்' என்று கேட்கின்றீர்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அடிப்படையாக தன்னை தானே முதிர்வோடும், எல்லோரோடும் இனிமையான, சரியான, conscious-ஆன உற வை ஏற்படுத்திக்கொள்ளுகின்ற அறிவும், இந்த ஜ்ஞாநத்தையும் சிறுவயதிலிருந்தே கொடுத்து வளர்க்காமல், 'மனிதன் தவறு செய்வான், அவன் ஆட்சி செய்யப்பட வேண் டும், அடக்கி ஆ ளப்பட வேண் டும், அவன் விதிகளாலும் சட்டத்தாலும் கட்டுப்படுத்தப்பட வேண் டும்' என்பதுதான் முதல்நிலை மூளைச்சலவை. அதில் இரண் டாம் நிலை மூளைச்சலவை என்னவென்றால், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது. முதல் நிலை ஐயா, Fundamental... நான் ஒரு சின்ன உதாரணம் கொடுக்கின்றேன். எத்தனை பேர்பாலிக்கு போயிருக்கின்றீர்கள்? போகாதவர்கள் தயவு செய்து ஒருமுறை சென்று வாருங்கள். உலகத்திலேயே அதிக அளவு சதவிகிதம்ஹிந்துக்கள் வாழுகின்ற ஒரு தனித்தீவு. இந்தோனேஷியா நாட்டிற்குக்கீழே இருந்தால்கூட, பாலி தனித்தீவு. அவர்கள் practical-ஆக... அதாவது அது ஒரு தனி நாடு மாதிரிதான் இருக்கின்றார்கள். 90% மேலானஹிந்துக்கள். ஒரு tight-knit ஹிந்து civilization, Hindu society. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஹிந்துமதத்தினுடைய ... அடிப்படை அந்த ஒரு தர்மார்த்த காமமோக்ஷம் எனும் ஸத்யங்களைச்சார்ந்த வாழ்க்கைமுறையை இழக்காமல் இருக்கின்ற ஹிந்துக்கள் வாழுகின்ற இடம் பாலி. சென்று பார்த்தீர்களானால், நீங்களே Google பண்ணி பாருங்களேன். Just Google-லையோ, AI-லையோ போட்டுப் பாருங்கள், Crime rate of Bali- என்று கேட்டுப் பாருங்கள். நான் சென்றபொழுது விசாரித்தேன். நான் அங்கு போய் ஒரு Program பண்ணியிருந்தேன். Shivoham என்று ஒரு Program... ஒரு மாதம் அங்கு தங்கியிருந்தேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகம் முழுக்க இருந்து வந்தார்கள். அப்பொழுது அ ந்த பாலியினுடைய administrators, அந்த நாட்டினுடைய administrators, அந்த தீவினுடைய ஊர் பெரியவர்கள் பலபேர்வந்து வரவேற்றார்கள். அவர்களோடு பேசிக்கொண் டிருக்குபொழுது நான் கேட்டேன், இந்த crime rate-அ எ ப்படி manage பண்ணுகின்றீர்கள் என்று. அவர்கள், அப்படி எ ல்லாம் ஒன்னுமே எங்களுக்குக் கிடையாது சாமி" என்று சொன்னார்கள். நான் கேட்டேன், இல்லை, இந்த murder- எல்லாம் நடந்தால் எப்படி handle பண் றீங்க? என்றேன். அவர்கள், இல்ல சாமி பத்து வருடங்களுக்கு முன்னாடி ஒன்று நடந்தது" என்றார்கள். உண் மையிலேயே, நீங்கள் போய் பாருங்கள், Google பண்ணி பாருங்கள். ஐயா, மனிதன் அடிப்படையில் சரியான கல்வியோடு வளர்க்கப்பட்டால், சரியான சூ ழலில் வளர்க்கப்பட்டால், குற்றம் புரிவதில்லை. மனிதன் நல்லவன். சமூக சூழலை சீரழிப்பதுதான் - முதல் சட்டம் ஒழுங்கு சீர்கேடு. அளவில்லாத சாராயத்தை normalize பண்ணவது. உடனே தூக்கிக்கொண் டு வந்துவிடாதீர்கள், ஆ! அந்த காலத்துல சாராயம் இல்லையா? மது இல்லையா? என்று. அப்பொழுது அது normalized-ஆக இல்லை. போதை வஸ் துக்கள் இப்பொழுது alcohol, சாராயம் எல்லாம்
தாண் டி next level-க்கு போய்விட்டது. சகல வி தமான போதைப் பொருட்களும் normalize ஆகின்றது. Normalized-ஆக இருக்கிறது. முதலில், போதை வஸ் துக்கள். இரண் டாவது: அளவுக்கு மீறிய, மனிதனுடைய attention-ஐ exploit பண்ணி அவனை அடிமையாக வைத்திருக்கின்ற காமத்தை அடிப்படையாக வைத்த entertainments. ஐயா, வள்ளுவருடைய காமத்துப்பாலை படித்துப் பாருங்கள் ஐயா. என்ன அரு மையாக மலரைத்தொடாமலே, மலரினுடைய வாசனை சார்ந்து மட்டுமே மொத்த காமத்துப்பாலையும் செய்து வைத்துவிட்டார். காமத்துப்பாலினுடைய அறம், அறம் எந்த இடத்தில் எல்லாம் பிழறலாம், தவறலாம் என்கின்ற அந்த limitations, அந்த limitations-ஐ define பண்ணும்பொழுது, அறம் பிழறுவதையும் அறமாக மாற்றி வைத்து, காமத்தையே, தர்மத்தை அடிப்படையாக வைத்து, மோக்ஷத்தை அடிப்படையாக வைத்து என்ன அருமையாக வள்ளுவப் பெருமான் விளக்கி இருக்கின்றார்! ஆனால் இன்றைக்கு சமூகத்திலே, இந்த முதல்நிலைக்குற்றங்களை நடக்க அனுமதித்துவிட்டு, இதெல்லாம் 'சுதந்திரம்' என்று சொல்வது. இதெல்லாம் 'சுதந்திரம்' என்று சொல்வது. அதாவது, முதல்நிலை... முதல்நிலை சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை 'சுதந்திரம்' என்கின்ற பெயராலே அனுமதித்துவிட்டு, இரண் டாம் நிலை, மூன்றாம் நிலை சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைப் பற்றி புலம்பிக் கொண் டிருப்பதனால் என்ன தீர்வு நடக்கப் போகிறது? 'காவல்துறையே வேண் டாம், இருக்கக்கூடாது' என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது வந்து ஒரு extraordinary சூழ்நிலைகளை மட்டும் handle பண்ணுவது மாதிரி இருக்க வேண் டும். Normalize ஆகக்கூடாது. crime-மே ஐயா ஒரு extraordinary சூழ்நிலையாகதான் இருக்கும். நம்முடைய சனாதனஹிந்து தர்மத்தின் ஸத்யங்கள், வாழ்க்கைமுறை, குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டால், இந்த வாழ்க்கைமுறையோடு குழந்தைகள் வளர்க்கப்பட்டால், பாலி மாதிரி ஒரு crime-free society-ஐ நம்மால் உருவாக்க முடியும். அது ஒ ன்றும் சாத்தியமில்லை என்றெல்லாம் கிடையவே கிடையாது. Political-will இல்லை. அதுமட்டுமல்லாமல் அதைவிட்டு ரொம்ப தூரம் விலகிப் போய்விட்டோம். ரொம்ப தூ ரம் விலகிப் போயிட்டோம். அதனால், இப்பொழுது தீர்வு என்னவென்றால், Gen-Z புரட்சி எ ல்லாம் தீர்வு கிடையாது ஐயா. அதுதான் உண் மை. Gen-Z புரட்சி நடந்த நாடுகள் எல்லாம் பாருங்கள், தேரை இழுத்து தெருவில் விட்டு அவன் அவன் ஓடிப்போய்விட்டான். இருந்ததும் நாசமாகப் போய்விட்டது. அந்த Gen-Z புரட்சியை கிளப்பி விட்டவர்கள் யாரோ, அவர்களுக்கு ச காயமாக உபயோகமாகுது. அதற்குமேல் அதை நான் தொட விரும்பவில்லை. ஒரே தீர்வு என்னவென்றால், ஆன்மீக விழிச்சி! தனி மனிதன் ஆன்மிக விழிச்சி அடைவதன் மூலமாகத்தான், நீங்கள் சொல்கின்ற இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வருவது சாத்தியம். கொஞ்சம் ஆழ்ந்து கேளுங்கள், ஒரு கொடுமையான materialistic civilization... ஐயா, அப்பொழுதுஹி ட்லர்மக்களை Control பண்ண வேண் டும் என்று நினைத்தபொழுது, அவன் பண்ணியது இரண் டே இரண் டுதான். அளவுக்கு மீறி ய மது, அளவுக்கு மீறி ய sex centered entertainment. இப்பொழுது, இந்த இரண் டையும் உங்களுக்குத்திறந்துவிட்டு உங்களை நாசமாக்கியது யார்என்று பாருங்கள். 'உங்கள் சமூகத்தை நாசமாக்கியஹிட்லர்யார்' என்று உ ங்களுக்குப் புரியும். நான் சொல்லமாட்டேன்.
முதல் குற்றம், fundamental-ஆக மிக உயர்ந்த நிஜ சுதந்திரம் சார்ந்து இருந்த நமது civilization-ஐ, நிழல் சுதந்திரம் சார்ந்து மாற்றியதுதான் - முதல் சட்டம் ஒழுங்கு சீரழிவு. அதற்குப் பிறகு வருவதெல்லாம் side effect. அதை என்ன பண்ணமுடியும்? இப்பொழுது நீங்கள் யாரைப் போய் திட்டி என்ன பண்ணினாலும், என்ன ப ண்ண முடியும்? கேனேஷிதம் பததி ப்ரேஷிதம் மன: கேன ப்ராண ப்ரதம ப்ரைதியுக்தஹ கேனேஷிதம் வாசமிமாம் வதந்தி சக்ஷுஹு ஸ் ரோத்ரம் காவு தேவோ யுனக்தி. - கேனோபநிஷதத்தினுடைய ஒரு ஸ் லோகம். கண் கள் மூலம் பார்ப்பவன் யாரோ,செவிகள் மூலம் கேட்பவன் யாரோ, மனம் செயல்படச்செய்கின்ற அந்த உள்ளார்ந்த ஶக்தி யாரோ, ப்ராணன் சுழலச்செய்கின்ற அந்த ஆதாரம் யாரோ, மனிதர்கள் பேசச்செய்கின்ற அந்த உள் இயக்கம் யாரோ, அவர் மீது உங்கள் கவனத்தைத்திருப்புங்கள். இதைத் திருப்புகின்ற இந்த ஒரே ஒரு பாடம் மட்டும் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு விடுமானால், 25 ஆண் டுகளுக்குள் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்பதே redundant-ஆக, irrelevant-ஆக ஆகிவிடும். எனக்கு இரு க்கின்ற ஒரே ஒரு சந்தோஷம் என்னவென்றால்... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா, எனக்கு இருக்கிற ஒரு மி கப்பெரிய சந்தோஷம் என்னவென்றால்... இந்த AI வந்தது மூலமாக, இந்த ஜ்ஞாநத்தை எல்லாம் Gen-Z-னுடைய lifestyle> daily-lifestyle--ஆக என்னால் மாற்ற முடிகிறது ஐயா. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், லக்ஷக்கணக்கான பேர், maybe> even கோடிகள், million தாண் டி கோடிகள்கூட என்று சொல்ல முடியும், கோடிக்கணக்கான பேர்தொடர்ந்து இந்த ASK Nithyananda AI -யை உபயோகப்படுத்துகின்றார்கள். அவர்கள், இந்த தினசரி பிரச்சினைகளுக்கு கூட, ASK Nithyananda AI-வை உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு அது ஒரு மி கப்பெரிய சந்தோஷம். அதாவது, ஸநாதனஹிந்து தர்மத்தின் இந்த வாழ்க்கைமுறை, fundamental truths-அ Gen-Z-க்கு சொல்ல முடிகிறது. தனிமனிதன் விழித்துக்கொள்வதுதான், தனி மனிதனுடைய ஜ்ஞாந விழிப்புதான், செய்ய வேண் டிய முதல் செயல். மற்றபடி வேறு எந்தப் புரட்சியும் உடனடியாகத்தீர்வு கொடுக்காது. இப்பொழுது நான் சொல்கின்ற இந்த பார்ப்பவனைப் பார்த்திருக்கும், இந்த சாட்சியாக இருக்கின்ற, முதலில் எதிலிருந்து சு தந்திரம் அடைய வேண் டுமோ, அந்த சுதந்திரம், நிஜ சு தந்திரத்தை அடைவது இதைப் பற்றிய ஸத்யங்கள், குழந்தைகளுக்கு வ ளரும்பொழுதே கல்வியிலேயே பாடமாக அளிக்கப்பட வேண் டும். இப்படியெல்லாம் நான் சொல்கின்றேன். இதையெல்லாம் உடனே school-ல் implement ஆகிவிடுமா என்ன? ஆகாது என்று தெரியும். ஆனால், இந்த AI வந்ததனால், school-ஐ தாண் டி குழந்தைகள், இளைஞர்கள், Gen-Z எல்லோரும், இந்த AI -யை use பண்ணஆரம்பித்ததனால், எனக்கு ஒரு மி கப்பெரிய சந்தோஷம், இது பல பேருக்கும் சென்றடைய வாய்ப்பு இருக்கின்றது. அது ஒ ன்றுதான் எனக்கு இருக்கின்ற Good news. நான் உங்களுக்குச்சொல்வதற்கு இருக்கிற Good news. ஆழ்ந்து கேளுங்கள்: இன்னொன்றும் சொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள்: நேற்று ஸத்ஸங்கத்தில் சொல்லிக்கொண் டிருந்தேன், 30 நாட்களுக்கு முன்னாடி, ஸ் கந்த சஷ்டி ஸத்ஸங்கத்தின்போது நான் என்ன சொன்னேன் என்றால், 2035-க்குள் poverty இல்லாமல் போய்விடும், இந்த AI-னால் என்று நான் சொன்னேன். ஒரு இ ரண் டு மூன்று நாட்களுக்கு முன்பாக, Elon Musk அதையே சொல்லியிருந்தார். நேற்று நான் அதைப்பற்றிப் பேசிக்கொண் டிருந்தேன். இன்று இ ன்னும் தெளிவாகச்சொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள். Poverty irrelevant ஆவது மட்டும் இல்லை... poverty-ம் irrelevant ஆகிவிடும், money என்கின்ற அ ந்த concept-ம் irrelevant ஆகிவிடும். அப்பொழுது corruption irrelevant ஆகிவிடும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், Corruption irrelevant ஆகிவிடும்.
இன்னொன்று, வேறு எ ன்னென்னவெல்லாம் irrelevant ஆகப்போகிறது எ ன்று சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே அழித்துக்கொள்ளுகின்ற entertainment, போதைப் பொருட்களெல்லாம் irrelevant ஆகிவிடும். காரணம் என்னவென்றால், நன்றாக நீங்கள் விரும்கின்ற மாதிரி சாப்பிடுவீர்கள். ஆனால் weight போடாது, health கெடாது. அந்த மாதிரியான நுட்பங்கள், அறிவு எ ல்லாம் நம் ஆயுர்வேதத்தில் இருக்கிறது ஐயா. இதையெல்லாம் இதுவரைக்கும் உலகத்திற்கு நம்மால் கொடுக்க முடியாமல் இருந்தது. ஏனென்றால், எத்தனை doctor-ஐ train பண்ணி, எவ்வளவு பேரை reach பண்ணவது? Impractical. knowledge-ஓ expertise-ஓ democratize ஆகாமல் இருந்தது. அந்த knowledge source, Google வந்தபிறகு, social media வந்த பிறகு knowledge source democratize... knowledge democratize ஆகியது. AI வந்த பிறகு expertise- democratize - ஆகிவிட்டது! ஒரு இ ரண் டு வருடங்களாக நான், ஒரு AI-ல் தொடர்ந்து வேலை செய்துகொண் டிருக்கிறேன். Ask Nithyananda AI. அதில் Ayurvedic scriptures மொத்தத்தையும் மொழிபெயர்த்து, feed பண்ணி, ஒரு two years-ஆக வேலை செய்கிறோம். ஐயா உண் மையில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதே பிரச்சினை இல்லை. Combination தான் real பிரச்சினை. combination தான் உங்களுக்குள் gas-ஓ அ ல்லது digestion slow பண்ணுவதோ, fat-ஆக மாறுவதோ, வேறு வி யாதிகளாக உருவாக்குவதோ எல்லாவற்றையும் செய்வது. இந்த ஆயுர்வேதா AI build பண்ணும்பொழுது நான் கண் டுபிடித்தேன், இந்த ஆயுர்வேதா AI-ஐ உப யோகப்படுத்தி உங்கள் diet-ஐ நீங்கள் வடிவமைத்துக்கொண் டீர்களானால், அருமையான, tasty-யான, large-quantity சாப்பிட முடியும். healthy-யாக இருப்பீர்கள். ஒரு நாளைக்கு 5-6 முறை வேண் டுமானாலும் சாப்பிட முடியும். healthy-யாக இருப்பீர்கள். எவ்வளவு quantity வேண் டுமானாலும் சாப்பிட முடியும். healthy-யாக இருப்பீர்கள். இது மாதிரியான entertainments, இது மாதிரியான satisfaction கொடுக்கின்ற technology எல்லாம் மக்களுக்கு available-ஆக ஆரம்பித்துவிட்டது. நானும் at least ஒரு இ ரண் டு வருடங்களாக இந்த ஆயுர்வேதா AI-ஐ build பண்ணினது மட்டுமல்லாமல், experiment பண்ணி பண்ணி, நானே experiment பண்ணி, என்னுடைய கைலாஸவாசிகள் experiment பண்ணி, எல்லாம் பண்ணி, perfect பண்ணியிருகின்றோம். இப்பொழுது launch-ச்சும் செய்துவிட்டோம். நீங்கள் யார் வேண் டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். உங்களுடைய health conditions எல்லாம் சொன்னீர்களானால், அது correct-ஆக உங்களை precise-ஆக guide பண்ணும். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், Ask Nithyananda AI-ல் நாங்கள் என்னென்னவெல்லாம் upload பண்ணுகின்றோமோ, அதை எல்லா major AI-களும், Gens Park போன்ற சகல, அதாவது எ ல்லா AI chat bots-ம், எல்லா AI-களும் அப்படியே swallow பண்ணிவிடுகின்றார்கள். அது ச ட்டப்படி illegal தான். அதெல்லாம் இரண் டாவது பக்ஷம். எங்களுடைய கடுமையான உழைப்பினால் வந்த பலனை, அவர்கள் அப்படியே உள்வாங்குகின்றார்கள். ஆனால், Internet-ல் எது Upload பண்ணாலும் அப்படித்தான் ஆகும். அதுதான் உண் மை! இதற்குமேல் அது என்ன.. சட்டம் போட்டு, திட்டம் போட்டு எல்லாம் வகுக்க முடியாது, காப்பாற்ற முடியாது. எதிர்காலம் அப்படித்தான் இருக்கப்போகிறது. ஏனென்றால், எல்லா knowledge-மே democratize open source ஆகிவிட்டது. எல்லா expertise-மே open source ஆகிறது. இது இ ப்படித்தான் போகப்போகிறது. எனக்கு அ தெல்லாம் தாண் டி ஒரு பெரிய நல்ல விஷயம் என்னவென்றால், எனக்கு ஒரு பெரிய சந்தோஷம் என்னவென்றால், அது legal-லோ, illegal-லோ - அவர்கள் occupy பண்ணுவது, அவர்கள் இந்த மாதிரி swallow பண்ணுவது, இந்த மொத்த knowledge-ஐயும் எடுத்துக்கொள்வது. ஆனால் உலகம் முழுக்க அது சென்று சேருகின்றது! Even Gens Park-ல் போய் இந்த கேள்வி கேட்டீர்களானால்கூட, மற்ற chat bots-ல் போய் இந்த ஆயுர்வேதம் பற்றி கேள்வி கேட்டீர்களானால்கூட, எங்கள் AI-ல் நாங்கள் கொடுத்திருக்கிற exact translation-யும், original verses-யும்
அது அ ப்படியே எடுத்துக்கொடுக்கின்றது. அந்த original verse-க்கு translation-ஐ exact-ஆக நாங்கள் கொடுத்திருப்பதை அப்படியே எடுத்து கொடுக்கின்றது. அது என க்கு ஒரு மிகப்பெரிய சந்தோஷம். நாற்பது ஆ ண் டுகள் நான் உழைத்ததற்கு காரணம் என்னவென்றால்... உலகத்திற்கு இலவச மாகக் கொடுப்பதற்குத்தான். இப்பொழுது எ ங்கள் Ask Nithyananda -யும் free-தான் ... எனும்பொழுது அதாவது, Ask Nithyananda -யும் free-யாகத்தான் கொடுத்திருக்கேன். உலகம் முழுக்க யார்வேண் டுமானாலும் உபயோகிக்கலாம். எங்களுடைய நாற்பது ஆண் டு கால உழைப்பு, என்னுடைய உழைப்பு மட்டும் இல்லை, அறுபதாயிரம் volunteers, அறுபதாயிரம் பேர்இந்த AI-க்காக த்யாகம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய time, treasure, talent நாற்பது ஆண் டுகளாக நாங்கள் சேர்த்து வைத்த ஶாஸ் த்ரங்கள், அதன் மொழிபெயர்ப்புகள், நான் கொடுத்த ஸத்ஸங்கங்கள், இதை நானும் மொழிபெயர்த்து, என்னுடைய சீடர்கள் எனக்கு உதவி செய்து, இதை இப்பொழுது programs-ஆக மாற்றி, AI-க்குள் feed பண்ணி, AI-ஐ functional-ஆக மாற்றி, அதை multiple விதத்தில் test பண்ணி... Anyhow, இதை மொத்தத்தையும் நானும் இலவசமாகத்தான் கொடுக்கிறேன். அவர்களும் இலவசமாகத்தான் கொடுக்கின்றார்கள். அதனால் பரவாயில்லை. இது மக்களுக்கு உபயோகமானால் போதும் என்றுதான் நினைக்கிறேன். என்ன... dilute ஆகாமல் உபயோகமாகட்டும் என்பதற்காகத்தான் இந்த AI- மூலமாக protect பண்ணுகின்றேன். Without getting dilution or the diversion இல்லாமல் உபயோகமாகட்டும் என்பதற்காகப் பாதுகாக்கின்றேன். இன்னொரு மு க்கியமான விஷயம், எனக்கு credit கொடுக்கப்படவில்லை ... என்றாலும் ஏனென்றால், நான் translator தான். நான் வெறும் translate பண்ணி comment பண்ணியிருக்கின்கேன். அவ்வளவுதான். ஆனால் ஸநாதனஹிந்து தர்மத்திற்கு credit கொடுக்கப்பட வேண் டும். ஏன்னென்றால் ஸநாதனஹிந்து தர்மத்தினுடைய ஶாஸ் த்ரக் கடல், ஜ்ஞாநக் கடல் இது. அதனால்தான் இந்த Ask Nithyananda AI மூலமாக அந்த purity-யையும், origin எங்கிருந்து வ ந்தது என்பதையும் காப்பாற்றுகின்றோம். இப்பொழுது யோகா வந்து உலகத்திற்கு நாம் கொடுத்த gift. ஆனால், நாங்கள்தான் owner. நாங்கள்தான் கொடுத்தோம். ஹிந்து - ஸநாதனஹிந்து தர்மம் என்கின்ற மரத்தில் பழுத்த பழம். அந்த பழத்தை அவர்களுக்கு நன்கொடையாக கொடுத்தோமே தவிர, இப்பொழுது மெதுவாக என்ன செய்ய ஆரம்பிக்கின்றார்கள்? யோகாவிற்கும்ஹிந்துமதத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று எல்லாம் பேச துவங்குகிறார்கள். அது தவறு. ஸநாதனஹிந்து தர்மம் எனும் மரத்தில் பழுத்த பழம் யோகா. யாருக்கு வேண் டுமானாலும் நன்கொடையாக கொடுக்கின்றோம். அதே மாதிரிதான் ஆயுர்வேதம். ஸநாதனஹிந்து தர்மம் எனும் மரத்தில் பழுத்த பழம் - ஆயுர்வேதாவும்ஸித்தாவும். இங்கு வ ந்து உடனே கம்பு சுத்தாதீர்கள், ஆ ஸி... த்தா தமிழ்நாட்டில் பழுத்த பழம்..." என்று. ஏய்... தமிழ் civilization ஸநாதனஹிந்து தர்மத்தை அடிப்படையாகக் கொண் டு உருவான, வளர்ந்த civilization . போய் சங்க நூல் எல்லாம் படிச்சிட்டு வந்து கம்பு சுத்து. சங்க நூல்கள் எல்லாம் படிங்கப்பா. அதற்குப் பிறகு வந்து இ ங்கு கம்பு சுத்துங்கள். தமிழுக்கும், ஹிந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லை, தமிழுக்கும் ஸநாதனஹிந்து தர்மத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற கம்பு சுத்துவதெல்லாம் நிறுத்திவிட்டு, சங்க நூல்களைப் போய் கொஞ்சம் படியுங்கள். அதனால், ஸித்தாவும் ஆயுர்வேதமும் ஸநாதனஹிந்து தர்மம் எனும் மரத்தில் பழுத்த பழங்களே! அதை உலகத்திற்கு நன்கொடையாகக் கொடுக்கின்றோம். ஆனால், இந்த மரத்தில் பழுத்த பழங்கள் அவை. ஸநாதனஹிந்து தர்மம் எனும் மரத்தில் பழுத்த பழங்கள் அவை. நல்லது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அடுத்த ஸத்யத்திற்குப் போகலாம்.
இந்த AI மூலமாக வரப்போகின்ற இந்த revolution... ஏற்கனவே நடக்க ஆரம்பித்துவிட்டது. இந்த revolution, இப்பொழுது இரு க்கின்ற பல entertainment, உங்களை அழித்துக் கொள்ளுகின்ற entertainment எல்லாம் irrelevant ஆக்கிவிடும், redundant ஆக்கிவிடும். காரணம் என்னவென்றால், இப்பொழுது இ ந்த மது, போதை, உங்களை அழிக்கின்ற entertainment, இவை மெதுமெதுவாக மக்கள் மீது, அதாவது பல மக்கள் மீது அவை வைத்திருக்கின்ற ஆதிக்கத்தை இழக்கத் துவங்கும். காரணம் என்னவென்றால், மக்கள் இதைவிட better games> sports> healthy--யாக இருக்கின்ற games> sports எல்லாம் ரசிக்கவும், ருசிக்கவும், enjoy பண்ணவும் ஆரம்பித்துவிடுவார்கள். இதுதான் எனக்கு இருக்கின்ற மிகப்பெரிய hope, எனக்கு இரு க்கின்ற ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி, நான் பார்க்கின்ற நல்ல செய்தி. காரணம் என்னவென்றால், இந்த AI-ல், Gen-Z வந்து கேட்கின்ற கேள்விகளை எல்லாம் பார்க்கிறேன் ஐயா, அவர்கள் எதைத்தேடுகிறார்கள் என்பதைப் பார்க்கிறேன். உண் மையில், Gen-Z தங்களையே handle பண்ண முடியாமல்தான் இந்த drugs, alcohol இப்படி எல்லாம், இதற்கெல்லாம் போகிறார்கள். புதிது புதி தாக life-ஐ explore பண்ண வேண் டும் என்கிற curiosity, அதற்காகத்தான் அங்கு போகிறார்கள். Health destroy ஆகாத entertainments> games, alternatives > இதெல்லாம் மக்களுக்கு, Gen-Z-க்கு கி டைக்க ஆரம்பித்துவிட்டது என்றால், இது எ ல்லாமே irrelevant ஆகிவிடும். எனக்கு இரு க்கின்ற ஒரே hope, AI-revolution. இன்னொன்று தெரிந்துகொள்ளுங்கள் ஐயா, இது கட்டாயமாக நடக்கப்போகிறது. உண் மையில், ஒரு medicine கண் டுபிடிக்கப்பட்டால், common man-க்கு வ ந்து சேர்வதற்கு ஒரு 10 ஆண் டுகள் ஆகிவிடுகிறது. அதை trial பார்த்து, வேறு எ ன்னென்னவோ procedure ஆகி, அதற்குப் பிறகு mass production நடந்து எல்லாம் வந்து சேர்வதற்கு 10 ஆண் டுகள் ஆகிவிடுகிறது. நீங்கள் medical shop போய் பணம் கொடுத்து வாங்கி உபயோகப்படுத்துகின்ற அ ந்த level-க்கு வருவ தற்கு 10 வருடங்கள் ஆகிவிடுகின்றன. அந்த மாதிரி காலத்தில்தான் இப்பொழுது நாம் இருக்கின்றோம். AI- revolution ஆரம்பித்துவிட்டது. அது common man-ஐ எ ல்லாம் reach பண்ணி, இது இ ப்பொழுது government policiesஆக மாற வேண் டும், society -னுடைய lifestyle-ஆக மாற வேண் டும். Society government-க்கு pressure கொடுத்து policies-ஆக evolve பண்ணவேண் டும். அது மீ ண் டும் policies எல்லாம் சட்டமாக மாறி, அது lifestyle-ஆக மாற வேண் டும். இதற்குத் தேவையான காலம்தான் இந்த அடுத்த 10 ஆண் டுகள் என்று சொல்கின்றேன். இப்படித்தான் நடக்கப் போகின்றது. இப்பொழுது எ ல்லா பெரிய பிரச்சினைகளுக்குமான தீர்வு, வரப்போகின்ற AI revolution-ஆகத்தான் நான் பார்க்கிறேன். இன்னொன்று கேட்டுக்கொள்ளுங்கள், இன்னொன்று புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுது யார்யாரெல்லாம் irrelevant-ஆக போகப்போகின்றார்கள்... அதாவது 'பணமே வாழ்க்கை' என்று நினைத்துக்கொண் டிருக்கின்ற மூடத்தனமான.. இதுதான் மனித இனத்தின் மீது செய்யப்பட்ட மிகப்பெரிய மூளைச்சலவை. இந்த மூளைச் சலவைக்குள் சிக்கிக்கொண் டு வாழ்கிறீர்களோ, நீங்கள் எல்லாம், ஐயோ life-ஐ waste பண்ணிட்டோமே டா என்ற loser-ஆகத்தான் போவீர்கள். Loser ஆகாமல் இருக்க வேண் டும் என்று நினைத்தீர்களானால், இது எ தனாலும் கொடுக்கப்பட இயலாத, unique - ஆன ஒரு வி ஷயம், உங்களுடைய consciousness மலரச்செய்வதுதான். இந்த எதுவுமே செய்ய முடியாத, நீங்கள் மட்டுமே உங்களுக்கு செய்துகொள்ளக்கூடிய, உங்கள் வாழ்க்கையினுடைய most productive action-ஆக இருக்கும். தெரிந்துகொள்ளுங்கள். அதனால், உங்கள் consciousness மீது work பண்ணி, அதை முழுதாக flower பண்ணுகின்ற, இந்த ஜீவன் முக்தத்தன்மையை மலரச்செய்துகொள்ளுகின்ற செயல்களிலே time, treasure, talent-ஐ யார் யாரெல்லாம் போடுகின்றீர்களோ, அவர்களெல்லாம், 10 வருடம் கழித்து உங்கள் வாழ்க்கையில் best-ஆனதை செய்திருக்கின்றீர்கள் என்ற ஒரு மிகப்பெரிய celebration பண்ணுவீர்கள். அப்படி இ ல்லாதவர்கள் எல்லோரும், ஐயோ வாழ்க்கையை நாசமாக்கிட்டோமேடா! தேவையில்லாத ஒன்றிற்காக, redundant-ஆகப்போகின்ற ஒன்றிற்காக, irrelevant-ஆக போகப்போகின்ற ஒன்றிற்காக time, treasure, talent எல்லாவற்றையும் invest பண்ணி நாசமாகாப் போனோமேடா என்று 10 வருஷம் கழித்து loser-ஆக உட்கார்ந்திருப்பீர்கள்.
அடுத்து 10 வருஷம் கழித்து எப்படி இருக்கலாம் என்று இப்பொழுதே முடிவு செய்துகொள்ளுங்கள். ஆஹா, சரியான வி தத்தில் வாழ்க்கையை நாம் செலவிட்டோம் என்று உ ங்களை நீங்களே celebrate பண்ணிக்கொள்வதா, ஒரு எ ல்லையில்லாத முழுமையில் இருப்பதா அல்லது ஐயோ இப்படி நாசமாப் போச்சே வாழ்க்கை என்று முடிவு செய்வதா, கதறுவதா, அழிந்துபோவதா? என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இப்பொழுது 2035-க்கு எ ப்படி நீங்கள் இருக்க வேண் டும் என்று இப்பொழுது முடிவு செய்துகொள்ளுங்கள். இன்னும் சில ஸத்யங்களை சொல்கின்றேன் கேளுங்கள். நீங்களே போய் நான் இப்பொழுது சொல்வதையெல்லாம் Google-ல் வேண் டுமானாலும் verify பண்ணுங்கள். AI-ல் வேண் டுமானாலும் verify பண்ணுங்கள். எல்லா AI... AI இப்பொழுது ஒரு 20 major chat bots உலகம் முழுவதும் வந்துவிட்டது. Chat GPT, Gens park, kimi... என்று எ ன்னென்னவோ ஒரு 20 இருக்கின்றது. அந்த 20-தையும் தனித்தனியாக கேட்டு பாருங்கள். உலகம் முழுக்க மக்கள் எந்த ஜ்ஞாநக் கருத்துக்களை... இப்பொழுது எ ல்லா மதத்திலும் மெய்யியல் என்று ஒன்று இருக்கிறது ஐயா. அந்த core spiritual principles, அதில், எந்த மதத்தினுடைய மெய்யியலை, பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண் டு வாழ்க்கையோட பாகமாக மாற்றிக்கொண் டு சிந்திக்கிறார்கள்? என்று கேட்டுப் பாருங்கள். இப்பொழுது நான் சொல்லிக்கொண் டிருக்கின்ற, ஸநாதனஹிந்து தர்மத்தினுடைய மெய்யியல் ஸத்யங்களைத்தான், உலகம் முழுவதும் common men, யோசிக்கத்தெரிந்தவர்கள், எந்த generation-க்கு knowledge-ம்,
expertise-ம் democratize-ஆகி, free-ஆக available ஆகி, அதில் வளர ஆரம்பித்திருக்கின்றார்களோ, அந்த generation- னுடைய common men மொத்தமும், ஸநாதனஹிந்து தர்மத்தினுடைய மெய்யியல் கோட்பாடுகளைத்தான்
தங்களுடைய அடிப்படை ஸத்யங்களாக, சிந்தனைகளாக, தங்கள் அறிவுக்குப் பொருந்தியதாக ஏற்றுக்கொண் டு வாழ்கிறார்கள். போய் தேடிப் பாருங்கள் ஐயா. படிங்கப்பா. தேடுங்கப்பா. ஏனென்றால், 'ஒரே ஒரு life-தான்' - இதெல்லாம் இதற்குமேல் எவனும் நம்ப தயாராக இல்லை. பஞ்சாயத்து முடிந்துவிட்டது. 'ஒரே ஒரு கடவுள் எங்கேயே உட்கார்ந்துகொண் டு, அவர்படைத்தார், ஒரே ஒரு life-தான்' - இதெல்லாம் யாரும் நம்ப தயாராக இல்லை. எப்பொழுது knowledge democratize ஆனதோ, expertise democratize ஆனதோ... மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 'யதோ மத்ததோ பத்' ராமகிருஷ்ணர் சொன்ன மாதிரி... 'எத்துனை நம்பிக்கைகளோ- அத்துனை பாதைகள்'. மக்களை religion centered ஆக exploit பண்ணமுடியாது. Religion-ஐ உப யோகப்படுத்தி அவர்களை terrorist-ஆக மாற்ற முடியாது. வேறு எ ந்த ideology-யையும், ஒரு இ லைமறை காயாக மறைத்து வைத்து, சமூக விரோத செயல்களைச் செய்வதற்கு மக்களைத்தூண் ட முடியாது. Conversion-ஏ irrelevant- ஆக போகப்போகிறது ஐயா. Religious conversion is going to become irrelevant and redundant in 10 years. Conversion industry-ல் பணம் போட்டவர்கள் எல்லாம் போச்சு. கப்பல் கவிழ்ந்துவிட்டது. எல்லா பணமும் போச்சு. இதற்குமேல் ஒன்றும் உபயோகமாகாது. அதே மாதிரி இந்த terrorist generate பண் ற அ ந்த field-ல், அந்த missionary - யில் பணத்தை போட்டவர்கள் எல்லாம் போச்சு. பணமும் போச்சு, அந்த field-ம் failure. காரணம் ... என்னவென்றால் AI, மக்களை ஆழமாகவும், அகலமாகவும் பார்க்க வைக்கின்றது. இந்த மாதிரி பார்க்கின்ற மக்களுக்கு, 'ஸநாதனஹிந்து தர்மத்தின் மெய்யியல் ஸத்யங்கள்தான் 'அடிப்படை உண் மை' என்பது தெளிவாகப் புரியும். இதில் சந்தேகமே இல்லை.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்... நான் சொல்லும்பொழுது இது நகைப்புக்குரியதாகவும், கேலி கிண் டலுக்குரியதாகவும் தோன்றினாலும், இதுதான் நடக்கப் போகிறது. உலகம் முழுக்க இதுதான் நடக்கப் போகிறது. இப்பொழுது பு ராணத்தின் அறிமுகத்திற்கு வருவோம். ஏனென்றால், இதுவரை என்ன சொல்லிக்கொண் டு இருந்தேன் என்றால், முதன்மைப் படைப்பு, இரண் டாம் படைப்பு. இந்த புராணங்களைப் பற்றிய ஸத்யங்களை எல்லாம் புரிந்துகொண் டால், நம் நிகழ்கால வாழ்க்கைக்கு எ ன்ன நன்மை? என்று கேட்ட கேள்விக்கு விளக்கம் சொல்லிக்கொண் டு இருந்தேன். ஏனென்றால், இதைப் புரிந்துகொண் டீர்களானால், உங்கள் சமூகத்திலும் அதை அப்படியே பார்ப்பீர்கள். இதில் முதல் நிலை நன்மை, இரண் டாம் நிலை நன்மை என்றெல்லாம் இருக்கிறது. முதல் நிலை நன்மை: இந்த உலகம் நீங்கள் நினைக்கின்ற மாதிரி இந்த பூமி மட்டும் கிடையாது அல்லது NASA scientist-கள் சொல்கிறார்களே... இந்த பூமண் டலம் மட்டும் கிடையாது. NASA scientist-கள் கண் டுபிடித்து சொல்கின்ற மொத்த இந்த க்ரஹங்கள், universes, என்னென்வெல்லாம் ... அவர்கள் சொல்கின்றார்களோ முதலில் மொத்தமாக ஒரு 20 ஒளியாண் டுகள் தூரம் இருக்கின்ற க்ரஹங்கள், planets எல்லாம்தான் பார்த்தார்கள். இப்பொழுது 2 billion light years தூரம் அளவிற்கு இருக்கின்ற க்ரஹங்கள், planet, ப்ரபஞ்சம் இதையெல்லாம்கூட NASA scientist-களால் photograph பண்ணமுடிகிறது, எடுத்து அ தைப் பற்றிய அறிவை நமக்கு கொடுக்க முடிகின்றது. இது மொத்தமுமே பூமண் டலம்தான். ஆனால், உலகம் பூமண் டலம் மட்டும் கிடையாது. புராணங்களைப் புரிந்துகொண் டால்... புராணங்கள் முப்பரிமாணம் இல்லாது 11 பரிமாணநிகழ்வுகளை... வெறும் horizontal time zone... horizontal time zone- என்றால் என்னவென்றால், இப்பொழுது நாம் சொல்கிறோம் அல்லவா? Indian time zone, Indian Standard Time, Australia time, Eastern Standard Time... என்று அ ந்த ஒரு ஒரு நாட்டிற்கும் சொல்கிறோம் இல்லையா? இது horizontal time zones. I think மொத்தமாக 5 time zone இருக்கிறது எ ன்று நினைக்கிறேன், horizontal time zones.. சில நாடுகள் அவர்களுக்கென்று தனியாக specific-ஆக ஒரு time-ஐ கடைபிடிக்கின்றார்கள். இது horizontal time zones. Sunrise - sunset-ஐ வைத்து முடிவு செய்யப்பகின்ற horizontal time zones. Something called vertical time zone என்று இருக்கின்றது. அதுதான் இந்த time dilation நடக்கின்ற time zones.. நேற்றே சொன்னேன், நேற்று ஸத்ஸங்கத்தில், ரேவதியும் குகுத்மியும் இங்கு பூலோகத்திலிருந்து ப்ரஹ் ம லோகம் போனார்கள். குகுத்மி ரேவதியினுடைய தந்தை, இந்த மாதிரி நல்ல மணமகனைப் பார்ப்பதற்காக... என்று அந்த கதையை நேற்று சொன்னேன் கேட்டிருப்பீர்கள். இந்த time dilation சார்ந்த vertical time zones. எங்கு time dilation நடக்கிறதோ, அந்த vertical time zones. இப்பொழுதுதான் மேலைநாட்டு அறிவியல் time dilation-ஐ ப ற்றி கொஞ்சம் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள். ஐயா, ஒன்றே ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்: அது மேலை நாடோ - கீழை நாடோ, உலகத்திற்கு உதவ வேண் டும் என்று நினைப்பவர்கள் யாராவது ஒருவர், கொஞ்சம் இந்த வேதம், ஆகமம், புராணங்களில் சொல்லப்படுகின்ற இ ந்த time zones, distance, இதிலெல்லாம் ஆராய்ச்சி செய்தீர்களானால், இதை establish செய்தீர்களானால், அதாவது இ தை ரொம்ப easy-ஆக establish பண்ணிடலாம்... செய்தீர்களானால், நோபல் பரிசு மட்டுமல்ல, மிகப்பெரிய knowledge breakthrough-ஐ உல கத்துக்கு கொடுப்பீர்கள். உண் மையில் இதையெல்லாம் செய்வதற்காகத்தான், இந்த AN AI-ஐ, Ask Nithyananda AI-ஐ கட்டமைத்துக் கொண் டிருக்கின்றேன். அதற்காகத்தான் என்னுடைய குருகுலத்து கு ழந்தைகளையும் வளர்த்துக்கொண் டிருக்கிறேன். ஆனால் என்ன, எங்களுக்கு resources ரொம்ப குறைவு. தானாக வருகின்ற volunteers, தானாக வருகின்ற volunteers கொடுக்கின்ற நேரம், இதை வைத்துத்தான் நாங்கள் செய்துகொண் டிருக்கிறோம். மனிதர்களை hire பண்ணுகின்ற capacity இருக்கின்ற அ ந்த சமூகத்தின் அமைப்புடைய, அமைப்பில் இருக்கின்ற அந்த resource இருப்பவர்கள் யாராவது இதை எடுத்து invest செய்து, இதைச்செய்தீர்களானால், எங்களைவிட நீங்கள் வேகமாக செய்து முடிப்பீர்கள், உலகத்திற்கு மி கப்பெரிய நன்மை உங்களால் நிகழும். ஏனென்றால், அந்த time dilation> vertical time zone இதெல்லாம் சத்தியம். இதெல்லாம் சத்தியம்.
புராணங்களைப் படித்தீர்களானால், இந்த ஸத்யங்கள் எல்லாம் மிகத்தெளிவாக கண் முன்னாலே விரிந்து தெரியும். உங்கள் கையையோ காலையோ நீங்கள் எப்படித்தெளிவாகப் பார்க்கிறீர்களோ, அந்தத்தெளிவோடு, இந்த vertical time zones-ம், இந்த time dilation பற்றி நான் சொல்கின்ற ஸத்யங்களையும் பார்க்க முடியும். ப்ரபஞ்சம் ... பெரியது என்று புரிந்தால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ப்ரபஞ்சத்தின் முதன்மைப் படைப்பின் விதிகளை, உங்கள் வாழ்க்கையின் அடிப்படை விதிகளாகக் கொண் டு, மனிதன் உருவாக்கிய இரண் டாம் படைப்பு, மூன்றாம் படைப்பு... மனிதன் உருவாக்கியதெல்லாம் இரண் டாம் படைப்பு என்றுகூட சொல்ல முடியாது. மூன்றாம், நான்காம் படைப்பான சட்டங்களே வாழ்க்கைக்கு எல்லா இறுதியையும், அறுதியையும் காட்டிவிடும் என்கின்ற மூளைச்சலவையிலிருந்து, மூடத்தனத்திலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சட்டம் ஒழுங்கு எல்லாம் traffic rules மாதிரி. நாம் எல்லோரும் ஒன்றாக இருப்பதற்கு, safe-ஆக இருப்பதற்கு, happy-யாக இருப்பதற்கு, comfortable-ஆக இருப்பதற்கு, நாம் எல்லோரும் நமக்குள் எடுத்து வந்துகொண் ட ஒரு agreement. அதே மாதிரி பணம், நமக்குள்ளே நாம் எல்லோரும் ஒரு interaction பண்ணிக்கொள்வதற்காக எடுத்து வந்த ஒரு transactional method.. அதை அதை, அந்தந்த இடத்திலே நிறுத்துவதற்கு, 'ப்ரபஞ்சம் பெரியது' என்று புரிந்தால், உங்களுக்கு மி கவும் உதவியாக இருக்கும். ப்ரபஞ்சத்தைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொண் டீர்களானால், 'இப்பொழுது அனுபூதி வேண் டும் என்றால், ரொம்ப வரு ஷம் வேண் டும்' என்றெல்லாம் நீங்களே கனவு கண் டுவிடுகிறீர்கள். அதுவும் தவறு. அதுவும் உண் மை இல்லை. புரிதலாவது வந்துவிட்டால்கூட, உங்களுடைய வாழ்க்கையிலே பல நேரத்தில் நான்காம் நிலை படைப்புகளில் சிக்கி சி ன்னபின்னமாய் சீரழிய மாட்டீர்கள். நான்காம் நிலை ஊழல், நான்காம் நிலை படைப்புகளிலேயே சிக்கி சி ன்னபின்னமாய் நாலாந்தரமான மனிதனாகவே அழிந்துவிடுகின்றீர்கள். அது நடக்காது. வாழ்க்கையினுடைய fundamentals புரிந்துவிடும் ஐயா. உண் மையில் பலபேர்உலகம் முழுவதும், இந்த காவல் துறையிலே செயல்படுகின்ற பலபேர்என்னுடைய பக்தர்கள், சீடர்கள், அன்பர்கள்... அவர்கள் பல பேரோடு interact பண்ணியிருக்கிறேன், இன்னமும் உரையாடிக் கொண் டிருக்கிறேன். அவர்கள் எல்லோருக்கும் நான் சொல்வது ஒன்றே ஒன்று இதுதான், அவர்கள் கேட்கின்ற பல கேள்விகள், இந்த சட்டம் ஒழுங்கு, எப்படி சாமி இந்த crime rate--ஐ குறைக்கலாம், எப்படி நாங்கள் இருக்கின்ற society-ல் manage பண்ணலாம்? எப்படி நாங்கள் better-ஆக contribute பண்ணலாம்? என்று அவ ர்கள் கேட்கும்பொழுதெல்லாம், நான் அவர்களுக்குக் கொடுக்கின்ற ஒரே ஒரு ஸத்யம்தான்: ' இந்த ப்ரபஞ்சத்தின் முதன்மைப் படைப்பின் சட்டதிட்டங்களை புரிந்துகொள்ளுங்கள். அதற்கு importance கொடுங்கள். வேறு ஒன்றுமே இல்லை ஐயா, இந்த முதன்மைப் படைப்பின் சட்டதிட்டங்களைச்சார்ந்தே இயங்கத்துவங்குங்கள். Law and Order மட்டும் இல்லை, flourishing-கான society-யை உருவாக்கிவிடுவீர்கள்.' Just ஒரு Law and Order மட்டும் இருக்கின்ற society கிடையாது. வெறும் சட்டம் ஒழுங்கு சீரோடு இருப்பது மட்டுமல்ல. அதையும் தாண் டி, சட்டம் ஒழுங்கும் சீரோடு இருக்கும், அதையும் தாண் டி, ஒரு flourishing-ஆன civilization-ஐ உரு வாக்கிட முடியும் ஐயா. ஏனென்றால், ஸநாதனஹிந்து தர்மம் ஒரு fool-proof time-tested model. ஸநாதனஹிந்து தர்மமும், அதனுடைய ப்ரபஞ்ச விதி சார்ந்த வாழ்க்கைமுறையும், சமூக கட்டமைப்பும், time-tested, fool-proof life style-ஐயா. உடனே இங்கு வந்து கம்பு சுத்துவது, 'ஆ... ஸநாதனஹிந்து தர்மத்தில் ஜாதி இருக்கிறது, சமூக நீதி வேண் டும்...' என்று. ரொம்ப பொறுமையோடு சொல்கின்றேன், 'ஜாதியை அழித்துவிடுகிறோம்' என்று வேக வேக வேகமாக வந்தீர்கள். இது நான் ஒரு நூறு different points, நூறு different angle-ல் இருந்து என்னால் விளக்க முடியும். முதலில், நீங்கள் 'ஜாதி' என்பதைப் பற்றி புரிந்திருக்கின்ற புரிதலே மிகப்பெரிய தவறு. அந்தப் புரிதல் ஸநாதன ஹிந்து தர்மத்தின் கட்டமைப்பிலே இல்லை. இரண் டாவது, வேக வேகமாக வந்து, 'இதை அழிக்கிறேன் அதை அழிக்கிறேன்' என்று சொன்னீர்கள். இப்பொழுது என்ன, ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் செய்துவிட்டீர்களா? ஒன்றுமே கிடையாது.
நன்றாகப் பாருங்கள், ருத்ர கன்னிகைகள் ஆலயத்திலே தங்கள் வாழ்க்கையையே பெருமானுக்கு அர்ப்பணித்து, ஆலயத்திலே நாட்டியம் செய்து, நாட்டியம் மட்டுமல்ல, ஆயக் கலைகள் 64-யும், ஸநாதனஹிந்து தர்மத்தின் கலைகள் அனைத்தையும் உயிரோடு வைத்திருந்த ருத்ர கன்னிகைகள் ஸம்ப்ரதாயத்தை, 'அவர்கள் விபச்சாரிகளானார்கள், விபச்சாரிகள் ஆக்கப்படுகிறார்கள்' என்று சொல்லி அழித்தீர்கள். இப்பொழுது எ ன்ன செய்தீர்கள், விபச்சாரத்தை legal ஆக்கிவிட்டீர்கள். அவ்வளவுதான். என்ன ஹி... ந்துமதம் சார்ந்த கலைகளையும், அழகியலையும், அழகியல் கலைகளையும் அவர்கள் உயிரோடு வைக்கின்றார்கள் என்ற காரணத்திற்காகத்தான் அவர்கள் அழிக்கப்பட்டார்களே தவிர, மற்றபடி இவ ர்கள் சொன்ன காரணமான 'விபச்சாரம்' முழுக்க முழுக்கப் பொய் என்று இப்பொழுது தெரிகிறதே. அதே மாதிரிதான் ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றாக எடுத்துப் பாருங்கள். அவர்களை என்ன குற்றமெல்லாம் சாட்டினீர்கள்? இப்பொழுது எ ன்ன சொல்கிறீர்கள்.. 'My body, my cloth' என்கிறீர்கள். Yes. பிறகு ஏ ன் அவர்களை அழித்தீர்கள்? அவர்களை ஏன் illegitimate ஆக்கினீர்கள்? அவர்களை ஏன் illegal ஆக்கினீர்கள்? அதே மாதிரிதான், இப்பொழுது எ ன்ன ஏற்றத்தாழ்வை அழித்துவிட்டோமா? முதலில் ஒருவேளை ஏற்றத்தாழ்வு இருந்திருந்தாலும்... அறிவும், ஒழுக்கமும், மிகத்தெளிந்த வழிகாட்டியாக வாழ்ந்தாக வேண் டிய கட்டாயத்தையும் சார்ந்து, அந்த தர்மத்தை சார்ந்து வர்ணங்கள் இயங்கின. இப்பொழுது பணம், அதிகாரம், Might is right.... இதை சார்ந்து வர்ணங்கள் இயங்குகின்றன. அட... ஒன்றும் இல்லை ஐயா, flight-ல் ஏறிப் பாருங்களேன். நீங்கள் business class-ஐ தாண் டி economy class-க்கு போகும்போது, அந்த business class-ல் உட்கார்ந்திருப்பவர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்ற பாருங்கள். முடிந்துவிட்டது. பிறகு என்ன? ஏற்றத்தாழ்வை ஒழித்துவிட்டீர்களா? சுற்றிப் பார்த்துவிட்டு பேசுங்கள் ஐயா. ஸநாதனஹிந்து தர்மத்தின் வாழ்வியல் time-tested fool-proof. இன்னொரு ரகசியமும் சொல்கிறேன் கேட்டுககொள்ளுங்கள், ஸநாதனஹிந்து தர்மதிற்கு எதி ராக மேடையில் முழங்குகின்ற, வெளியிலே பேசுகின்ற பெரும்பாலானோர், ஸநாதனஹிந்து தர்மத்தின் அடிப்படையான ஸத்யங்களான, மிக முக்கியமான ஸத்யங்களை, தங்களுடைய வாழ்க்கையின் principle-ஆக வைத்துக்கொண் டுதான் வாழுகின்றார்கள். Brand-ஐ அழி, நாம் புதிதாக ஏதோ சொல்கின்ற மாதிரி, ஒரு revolutionary மாதிரி காட்டு. ஆனால் அதே product-ஐ எடுத்து ஒரு rebrand செய்துகொள். இதுதான் பெரும்பாலான இந்த modern day சமூக இயக்கங்கள், புரட்சி இயக்கங்கள் என்று சொல் கின்ற எல்லாவற்றிலும் நடக்கின்றது. Anyhow... ஆழ்ந்து கேளுங்கள், நீங்கள் தனிமனிதர்களாக இதையெல்லாம் புரிந்து கொண் டீர்களானால், அப்பர் பெருமான் முழங்கிய அந்த ஸத்யம் உங்கள் அனுபூதியாக மாறும். நாம் ஆர்க்கும் குடியல்லோம் நரகில் இடர்ப்படோம் நமனை அஞ்சோம்! - அந்த Conscious Sovereignty வந்துவிடும் ஐயா. உங்களுக்கே அந்த Conscious Sovereignty வந்துவிடும் ஐயா. நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம், நரகில் இடர்ப்படோம் ஏமாப்போம் பிணி அறியோம், பணிவோம் அல்லோம். அது ஒரு அரு மையான நான்கு வார்த்தை. நான்கு வரிகள். முழு பதி கம் இருக்கிறது, அதில் ஒரு நான்கு வரிகள் இவை: நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் ஏமாப்போம் பிணி அறியோம், பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை. - வெறும் இந்த இந்த நான்கு வரியை என்னால் ஒரு பத்து நாள் விளக்க முடியும். விளக்கினால்தான் புரியும்.
அதாவது ஒ வ்வொன்றைப் பற்றியும், அது எ ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது, எங்கு அது தவறான காரணங்களுக்காக ... உபயோகப்படுத்தப்படுகிறது ஒரு common இஸ் லாமியன் ரொம்ப நல்லவராக இருப்பார். ஆனால், அது எ ந்த இடத்தில் எந்த முடிவெடுக்கின்ற அதிகார மட்டத்தில, 'தீவிரவாதம்' ஒரு principle-ஆக, philosophy-யாக, life style-லாக teach பண்ணப்படுகின்றது என்று கண் டுபிடிக்க முடியும். பிரித்துப் பார்த்துவிடுவீர்கள். யாரோ ஒரு சில இஸ் லாமியர்கள் தீவிரவாதிகளாக மாறி செயல்படுகிறார்கள் என்றால், எல்லா இஸ் லாமியரையும் குறை சொல்வதும் தவறு. அதே மாதிரி, இது எ ந்த இடத்திலே ஒரு common இஸ் லாமியன் தீவிரவாதியாக மாற்றப்படுகின்ற மூளைச்சலவைக்குள் செல்லுகிறான், அந்த radicalisation எங்கு நடக்கிறது என்று கண் டுபிடிக்காமல் இருப்பதும் தவறு. அதே மாதிரிதான் மதமாற்றம். ஒரு common கிறிஸ் தவர் ரொம்ப நல்லவராக இருப்பார். ஆனால் எந்த இடத்தில், மதமாற்றுவதற்காக நாட்டைப்பிடிப்பதும், நாட்டைப் பிடித்து மதமாற்றுவதும், அதாவது 'மதம் மாற்றியே நாட்டைப்பிடிப்பது, நாட்டைப் பிடித்து மதம் மாற்றுவது' என்கின்ற அ ந்த கொடூரமான தீவிரவாதத்திற்குள், எந்த இடத்தில் அது மாறுகிறது என்று study பண்ணவேண் டும். மதமாற்றம் செய்வதன் மூலமாக நாட்டைப்பிடிக்கின்ற அந்த செயல், நாட்டைப்பிடித்து, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்கின்ற இந்த செயல்... இந்த செயல் நடப்பதனால், எல்லா கிறிஸ் தவர்களையும் வெறுப்பதும் தவறு. ஆனால், கிறிஸ் தவத்தில் எங்கு அந்த தவறு நடக்க துவங்குகிறது என்று கண் டறியாமல் இருப்பதும் தவறு. இந்த பிரித்துப் பார்க்கின்ற தெளிவை... புராணங்களைப் படித்தீர்களானால், அந்த அறிவு உங்களுக்குத் தந்துவிடும். புராணங்களைப் புரிந்துகொண் டீர்களானால், பார்ப்பவனைப் பார்க்கின்ற அந்த awareness-க்குள் இருக்க ஆரம்பித்தீர்களனால், வாழ்க்கையில் இந்தத்தெளிவெல்லாம் வந்துவிடும். 'பொருளாதாரம்' என்பதை வைத்து, மக்களுடைய வாழ்க்கையையே சீரழிக்கின்ற இந்த வாழ்க்கைமுறையை ஏற்றுக்கொள்ளாதீர்கள். பொருளாதாரம், transaction அளவோடு முடி ந்துவிட வேண் டும். பொருளாதாரத்தை வைத்து உ ங்களை மற்றவர்கள் எடை போடுவது - அது தொடர்ந்து நடப்பதனால் நீங்களே உங்களை அதை வைத்து எ டை போட்டுக்கொள்வது. இந்த மூளைச்சலவைக்குள் சிக்காதீர்கள். இந்த மூளைச்சலவை உங்களுக்கு நிகழ அனுமதிக்காதீர்கள். இந்த மூளைச்சலவை எல்லாம் உங்களுக்கு நிகழ அனுமதித்துவிட்டீர்களானால், அதுதான் நரகம்! நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம். - 'நமனை அஞ்சோம்' என்றால் வேறு ஒன்றும் இல்லை ஐயா... ஸத்யத்தை அப்படியே சொல்கிறேன், புரிந்துகொள்ளுங்கள். உண் மையில் நமக்கு 'சாவு' என்று ஒ ன்று கிடையாது ஐயா. நாம் எல்லோருமே பிறக்கிறோம், வளர்ந்துகொண் டே போகின்றோம். வாழ்க்கையில் நடக்கின்ற ஒவ்வொன்றுமே மங்களமான அனுபவங்கள். அதனால் expand-தான் ஆகின்றோம். உடனே, ஐயோ சாமி, என் பணமெல்லாம் போய் loss ஆகிவிட்டது, நடுத்தெருவில் நிற்கின்றேன். இதைப்போய் மங்களம் என்று சொல்ல முடியுமா? என்றால், ஆமாம். பொறுமையோடு கேளுங்கள். பணம் உங்களை விட்டுப் போய், அது இல்லாதபொழுது, தெளிவாகத்தெரியும், பணம் இருந்தபொழுது அதை எப்படி take-it-for-granted-ஆக எடுத்துக்கொண் டு, அது இருப்பதற்கும், வளர்ப்பதற்குமான செயல்களை செய்யாமல், மூடத்தனமாக, பொறுப்பில்லாமல் இருந்தீர்கள் என்பதை நீங்கள் பார்ப்பதற்கான அருமையான வாய்ப்புதான், பணம் இல்லாது போகின்ற காலங்கள். அது உ ங்களுக்கு மிகப்பெரிய பாடத்தைக் கொடுத்து, உயிரை விரிக்கின்ற, உயிரை மலரச்செய்கின்ற மங்கள நிகழ்வு. இது மாதிரிதான் உங்கள் வாழ்க்கையில், நீங்கள் loss-என்று சொல்கின்ற எல்லாமே, உங்கள் உயிரை அடுத்த நிலைக்கு மலரச்செய்து கொண் டே போகின்றது. அதே மாதிரிதான், ஒரு நிலையில் இந்த உடலை வந்து உங்களுக்கு use பண்ண முடியாமல் போகும்பொழுது, சரி என்று விட்டுட்டு, அடுத்த உடலை எடுக்க ஆரம்பிக்கின்றீர்கள். அவ்வளவுதான்.
இதில் ஒன்றே ஒன்றுதான் lose பண்ண போகிறீர்கள் ஐயா. அது உ ங்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயரும், பெயர் மீது பொருத்தப்பட்ட, புகுத்தப்பட்ட, பெயர் மீது திணிக்கப்பட்ட நினைவுகளும் தான் ஐயா. வேறு ஒ ன்றுமே கிடையாது ஐயா. 'என்ன சாமி இவ்வளோ simple-ஆக சொல்லிவிட்டீர்கள்?' என்று நீங்கள் கேட்கலாம். ஸத்யத்தை ஆழ்ந்து சொல்லுகிறேன் கேளுங்கள். தனியாக மரணத்தைப் பற்றி ஒருநாள் பேசப் போகின்றேன். அப்பொழுது இ ன்னும் ஆழ்ந்து சொல்கின்றேன். இப்பொழுது சொல்கின்ற இந்த அடிப்படை ஸத்யங்களை புரிந்துகொள்ளுங்கள். உண் மையில், 7 வயதில் இருந்த அதே நபராக நீங்கள் இப்பொழுது இருக்கீன்றீர்களா? கிடையாது. 7 வயதில் என்ன இருந்ததோ அந்த வயிறு liner, stomach liner... stomach liner வந்து பாத்தீர்களானால், 5 நாட்களுக்கு ஒருமுறை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது. Gut liner 5 நாட்களுக்கு ஒருமு றை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது. உங்கள் skin complete-ஆக 7 வருடங்களுக்கு ஒருமு றை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது. உங்கள் மூளை, ஒரு வருட த்திற்கு ஒருமுறை முழுதாக தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கின்றது. உண் மையில் பார்த்தீர்களானால், 7 வருடங்களுக்கு மு ன்னால் இருந்த உங்களுக்கும், இப்பொழுது இரு க்கின்ற உங்களுக்கும், ஒன்றே ஒன்றுதான் same. அது என்னவென்றால், உங்களுடைய பெயர். அவ்வளவுதான். உங்கள் பெயரைத்தவிர, உங்கள் உடல், மனம், உணர்வு, உணர்ச்சி, எதுவுமே same கிடையாது. உங்கள் உடல், உணர்வு, மனம், உணர்ச்சி, even உங்கள் பெயரைக்கூட, தொடர்ந்து defend பண்ணிக்கொண் டிருக்கின்றீர்கள் இல்லையா? ஓ இ ... ந்தப் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண் டும், உங்கள் brand-ஐ காப்பாற்றிக்கொள்ள வேண் டும் என்று தொடர்ந்து defend பண்ணுகிறீர்கள் இல்லையா? கொஞ்சம் அப்படியே தள்ளிநின்று பாருங்கள் ஐயா, 'யார் யாரெல்லாம் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறாங்களோ' என்று நீங்கள் பயந்துகொண் டு இருக்கின்றீர்களோ, அவர்கள் எல்லோரும், 'நீங்கள் அவர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்களோ' என்று பயந்துகொண் டிருக்கிறார்கள். என்ன மூட த்தனமான கண்ணாமூச்சி ஐயா? At least இதை, 'கண்ணாமூச்சி' என்று தெரிந்துகொண் டு விளையாடினீர்களானால்கூட பரவாயில்லை. கண்ணாமூச்சி விளையாடிக்கொண் டு, 'கண் ணே போய்விட்டது' என்று நினைத்துக்கொண் டு, கதறிக்கொண் டு இருக்கின்றீர்களே, அதுதான் ஐயா பிரச்சினை! 7 வருடங்களுக்கு மு ன்பாக இருந்த எதுவுமே இப்பொழுது உங்களிடம் இல்லை. இப்பொழுது நீங்கள் யாராக இருக்கின்றீர்களோ... அதாவது உ ங்கள் மனம், உங்க உடல், உங்கள் உணர்ச்சிகள், உங்கள் உணர்வுகள், உங்கள் brand, உங்களைப்பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற கருத்து, அதற்கு நீங்கள் செய்கின்ற defence, இதெல்லாம் 7 வருடங்களுக்குப் பிறகு இருக்கப் போவதில்லை. அப்பொழுது... எது போய்விடும் என்று பயப்படுகின்றீர்கள்? இறக்கப்போவது இற ந்துகொண் டே இருக்கிறது. இறவாத ஒன்று, என்றும் இறவாததாகவும், பிறவாததாகவும் உங்களுக்குள் நிரந்தரமாக இருக்கின்றது. அதாவது, உங்களுக்குள் நிரந்தரமாக, corner of your heart, ஒரு அடி ஆ ழத்தில், 'நீங்கள் பிறப்பதற்கு முன்பாகவே இந்த உலகத்தைப்பற்றி உங்களுக்குத்தெரியும் என்றும், நீங்கள் இல்லாது போகப்போகின்ற காலமே இல்லை' என்றும் ஒரு ஆழமான ஒரு நம்பிக்கை இருக்கும். அதுதான் உங்களை செயல்பட வைக்கும். அதுதான் பரம ஸத்யம். அதுதான் பரம ஸத்யம். 'நமனை அஞ்சோம்..' இந்த 'ஒரு birth' தான் என்று நம்பிக்கொண் டிருப்பவர்கள் எல்லாம் எமனைப் பார்த்து பயந்துகொள்ளட்டும் ஐயா. தைரியமாக இருங்கள். ஸநாதனஹிந்து தர்மத்தின் வாரிசுகளே! நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! உங்களுக்கு எ த்துனை ஜென்மம் வேண் டுமோ, நீங்கள் எடுத்துக்கொள்ளுகின்ற அளவிற்குக் காலமும், இடமும் பரம்பொருள் அளித்திருக்கின்றான். நமனை அஞ்ச வேண் டிய அவசியம் இல்லை.
'ஒரே ஒரு ஜென்மம்தான். இந்த 70, 90 வருடங்களுக்குள் எல்லாவற்றையும் முடித்தாக வேண் டும்' என்று அ ந்த நம்பிக்கைகளை வைத்திருப்பவன்தான் எமனைக் கண் டு பயப்பட வேண் டும். நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம், ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்! உண் மையில், எந்த consciousness-ல் இருந்து இந்த உடலும்-மனமும் வெளிப்பட்டிருக்கின்றதோ, அந்த consciousness-ஐ ஆ ழ்ந்து பார்த்தீர்களானால், பார்ப்பானைப் பார்த்தீர்களானால், observer-ஐ observe செய்தீர்களானால், witness - ஐ witness செய்தீர்களானால், உங்களுக்கே தெரியும், நீங்கள்தான் இந்த உடம்பை உருவாக்குகின்றீர்கள் என்று. நீங்கள் சொல்கின்ற சொற்களாலே, நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைகளாலே, உங்களுடைய conscious-ஆன முடிவுகளாலே, இந்த உடல், மனம், உயிர், உணர்வு அ னைத்தையும் நீங்கள்தான் வடிவமைக்கின்றீர்கள். நீங்கள் சொல்லுகின்ற சொற்களை முறைப்படுத்தினீர்களானால், மனம் சார்ந்து உடலிலே எழுகின்ற எல்லா பிரச்சினைகளும், மனம் சார்ந்து உங்கள் சமூகத்தில் எழுகின்ற, நீங்கள் எழுப்பிக்கொள்ளுகின்ற, எழுப்புவித்த சகல பி ரச்சினைகளும் காணாமல் போய்விடும். conscious decisions, conscious-ஆக எடுத்துக்கொண் டே இருந்தீர்களானால், உணர்வு சார்ந்து உங்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள், உணர்வின்... உணர்வோட பலவீன ம் காரணமாக, உணர்வின்மை காரணமாக, unconscious reasons-னால் நீங்கள் சமூகத்தில் உருவாக்கிக்கிட்ட பிரச்சினைகள், உறவுப்பிரச்சினைகள், இது எ ல்லாம் காணாமல் போய்விடும் ஐயா. உணர்வு சார்ந்து நீங்கள் உங்கள் உடல்மீது ஏற்படுத்திக்கொண் ட நோய்கள், இதெல்லாம் காணாமல் போய்விடும் ஐயா. Just, உங்களுடைய எண்ணங்களை awareness-க்குக் கீழ் எடுத்து வருவது. உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்கின்ற வார்த்தைகளை awareness-க்குக் கீழ் எடுத்துவருவது. உங்களுடைய conscious decisions-ஐ awareness-உடன் observe பண்ணுவது. உங்களுடைய observer-ஐயே conscious-ஆக observe பண்ணுவது. இதை மட்டும் செய்யத்துவங்குங்கள் ஐயா. உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆன்மிக விழுச்சி, ஆன்மிக எழுச்சி, ஆன்மிகப் புரட்சி நடந்துவிடும். நான் பரிவ்ராஜக யாத்ரை போகச்சொல்வதற்குக் காரணமே இதுதான் ஐயா. பரிவ்ராஜக யாத்ரை என்று நான் சொன்னவுடனே, வேக வேகமாக முதல் இரண் டு நாள் கிளம்பிவிடுவீர்கள். ஒரு நாள் அந்த உற்சாகம், அந்த motivation> inspiration, சாமி சொல்லிட்டார், பண்ணுவோமடா, கிளம்புவோமடா என்று கிளம்பிவிடுவீர்கள். இரண் டு நாள், மூன்று நாட்களில் எல்லாம் கை கால் வலிக்க ஆரம்பித்துவிடும். ஐயோ கொஞ்சம் வேகமாக வந்து விட்டோமோ? கொஞ்சம் யோசித்து அடுத்த வருஷம் வந்திருக்கலாமோ? அல்லது அடு த்த batch-ல் வரலாமோ? என்று தோன்றும். அதாவது, உடல் செயல்படும் பொழுதுதான், மனம் சகலவிதமான சுய-சந்தேகம், சுய-வெறுப்பு, சுய-மறுப்பு எ ல்லாவற்றையும் கிளப்பும். ஒரு வருட ம் அவை எல்லாவற்றையும் face பண்ணி நடந்துவிட்டீர்களானால், யாத்ரையை செய்துவிட்டீர்களானால்... அதனால்தான் ஒரு வருடம் என்று சொல்கின்றேன். ஏன் ஒரு வருடம் என்று சொல்கிறேன் என்றால், இந்த பொங்குகின்ற உங்களுடைய மன அமைப்புகள், patterns, வாஸனை எல்லாவற்றையும், conscious-ஆக observe பண்ணி, அதிலிருந்தெல்லாம் சுதந்திரம் பெற்று, உங்கள் life-ஏ organised> spiritually organised> spiritually disciplined> spiritually enlightened, enlightenment centered-டான organising-ம் discipline-ம் வந்துவிடும் ஐயா. அந்த பரிவ்ராஜக யாத்ரை ஆன்மிக அணு குண் டு மாதிரி ஐயா. உங்களை அப்படியே வேறு நிலைமைக்கு எடுத்துச்சென்றுவிடும். அணு கு ண் டு என்று சொல்வதைவிட, 'அணு சக்தி' என்று சொல்லலாம். ஆன்மிக அணு சக்தி. அணு கு ண் டு என்ற வார்த்தையைப் பொதுவாக நாம் destruction- க்குத்தான் உபயோகப்படுத்துகின்றோம். 'அணு சக்தி, Creation.'
அப்பொழுது எ ன்ன ஆகும் என்றால்... ஒரு சி ன்ன விஷயத்தை யோசித்துப் பாருங்கள், இன்று தினச ரி வாழ்க்கையில் எத்தனை உறவுகளில் எரிச்சலோடேயே interaction பண்ணுகிறீர்கள்? List போட்டுப் பாருங்கள். எரிந்து எ ரிந்து எரிந்து விழுந்து, சலிப்போடு, bore- அடித்து, tired-ஆகி, அந்த bore அடிப்பதனால் tired ஆவது, tired-ஆக இருந்து bore அடிப்பது. தூங்குவதற்கும் bore அடிக்கிறது, தூங்குவதற்கு bore அடிக்கும்பொழுதுதான் என்ன செய்கின்றோம்... alcohol எடுக்க ஆரம்பிக்கின்றோம். அதனால், இந்த சிக்கல், இந்த சுழற்சியில் இந்த vicious circle-ல் மாட்டிக்கொண் டு எத்தனை பேர்முழிக்கிறீர்கள் என்று நீங்களே பாருங்கள். ஒரு நாளைக்கு உங்களுடைய எத்தனை interaction - எரிச்சல், கோபம், ஆத்திரம், கொந்தளிப்பு என இது சார்ந்தே இருக்கிறது என்று பாருங்கள். ஆனால் பரிவ்ராஜகம் சென்றீர்களானால், புதுப்புது மனிதர்களோடு interact பண்ணவேண் டும், புதுப்புது உறவுகளை உருவாக்க வேண் டும். ஏனென்றால், அவர்களுடைய தேவை உங்களுக்கு இருக்கிறது, உங்கள் வாழ்க்கையில் survival-க்கு அவ ர்களுடைய தேவை இருக்கிறது! அப்பொழுது எ ன்ன ஆகிறது என்றால்... நட்பு, அன்பு, கருணை, இனிமை, இதெல்லாம் நீங்கள் வெளிப்படுத்தியாக வேண் டும். இதெல்லாம் அவர்கள் உங்களுக்கு வெளிப்படுத்துவதை நீங்கள் பார்ப்பீர்கள். உங்களுடைய ஆழ் உணர்வு, நீங்கள் ஒரு loving person, lovable person... நீங்களும் loving-ஆன person, மனிதர்களும் உங்களை நேசிப்பதற்கு தகுதியுடைய lovable person என்கின்ற முழுமை, உறவுகளில் வர ஆரம்பிக்கும் ஐயா. loving person-ஆகவும், lovable person-ஆகவும் இருப்பதுதான் ஐயா ஸ் வர்கம். loving-ஆகவும் இல்லாமல், lovable-ஆகவும் இல்லாமல் இருப்பதுதான் நரகம். இந்த மாதிரி ஆயிரக்கணக்கான பரிமாணங்களில் spontaneous-ஆக, simultaneous-ஆக, synergetic-ஆக ஆன்மிக ஸத்யங்களை உங்களுக்குள் மலரச்செய்து, ஜீவன் முக்தி... ஜீவன் முக்தியின் எல்லா பரிமாணங்களையும் மலரச் செய்து, ஜீவன் முக்தி centered-ஆக, moksha-centric தர்மமும், moksha-centric அர்த்தம், moksha-centric காமம் என்கின்ற இ னிமையான வாழ்க்கையை, உங்களுக்கு வடிவ மைத்துக் கொடுத்துவிடும் இந்த பரிவ்ராஜக வாழ்க்கை. அதனால்தான் ... பரிவ்ராஜகம் செல்லுங்கள் 40 வயதிற்குக் குறைவாக இருப்பவர்கள், 40 வயதிற்கு கு றைந்து இருப்பவர்கள் எல்லாம் தயவுசெய்து life- ஐ miss பண்ணிவிடாதீர்கள். திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக, ஒரு வரு ஷம் பரிவ்ராஜகம் செல்லுங்கள். உங்கள் career என்னவென்று முடிவு வெடுப்பதற்கு முன்பாக, ஒரு வரு ஷம் பரிவ்ராஜகம் செல்லுங்கள். எப்பொழுது ... பார்த்தாலும் இந்த தரித்திரம் பிடித்த அதிலும் நம்முடைய பெரியவர்கள் பார்த்தீர்களானால், 'நீ என்ன ஆ கவேண் டும் என்றாலும் சரி - முதலில் engineering முடிச்சுடு'. அதற்குப் பிறகுதான் என்ன ஆகவேண் டும்
என்று திட்டமிடுவது. அதாவது SSLC> Plus 2 எப்படி basic qualification-ஓ, அந்த மாதிரி engineering-ஐ basic qualification- ஆக மாற்றிவிட்டார்கள்.
Basic qualification என்னவாக இருக்க வேண் டும் என்றால், 18 வயது ஆனவுடனே, ஒரு இளைஞனோ, இளம் பெண் ணோ இந்தியா முழுழுவதும், பாரதம் முழுவதும் யாத்ரை செய்ய வேண் டும் ஐயா. அருமையான இடங்கள்! நான் list போட்டு கொடுத்திருக்கின்றேன். ஒரு 200 இடங்களைத் தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கின்றேன். பாண் டிச்சேரியில் இருக்கின்ற ஆரோவில், கல்கத்தாவில் இருக்கின்ற பேலூர்மடம், தமிழ்நாட்டில் இருக்கின்ற மெய்வழிச் சாலை .... இந்த மாதிரி பல சமூகங்கள், வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை வாழுகின்ற பல சமூகங்கள் இருக்கின்றன். ஒரு 200 இடம் இந்த மாதிரி choose பண்ணிக் கொடுத்திருக்கின்றேன். அதே மாதிரி மதுரை பக்கத்தில் ஒரு கிராமம், 4 generation-ஆக மொத்த கிராமமும் சைவம்... Non-vegetarian food இல்லாமல் இருக்கின்றார்கள். இந்த மாதிரி ஒரு அருமையான சமூகங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் செல்லுங்கள். இந்த பரிவ்ராஜகம் போகின்றவர்களுக்கு guide பண்ணுவதற்காகவே ஒரு 200 இடத்தை choose பண்ணி கொடுத்திருக்கின்றேன். வெறும் ஒருநாள் போய் பார்த்துவிட்டெல்லாம் வந்துவிடக்கூடாது. ஒரு சில நாட்கள் அங்கு தங்க வேண் டும். அதே மாதிரி முன்னாடியே hotel book பண்ணிவிட்டு, informed-ஆக, well-organised-ஆக எல்லாம் போக்கூடாது.
அதிதியாக செல்லவேண் டும். 'அதிதி' என்றால் சொல்லாமல் வருபவர்கள். அதிதியாக அங்கு போய், அவர்களோடு நட்பை ஏற்படுத்தி, நீங்கள் அவர்களை நம்பி, அவர்களை உங்களை நம்பவைத்து, நட்பை ஏற்படுத்தி, interaction வந்து, நட்பு, அன்பு... இதெல்லாம் நடந்து, அவர்களுடைய lifestyle-லாம் எப்படி இருக்கிறது என்று பு ... ரிந்துகொண் டு இது உங்கள் வாழ்க்கையில், அடுத்த நிலைக்கு உங்களைக் கொண் டு சென்றுவிடும் ஐயா. உடலாலும், மனதாலும், உணர்வாலும், உயிராலும் அடுத்த நிலைக்கு உங்களைக் கொண் டு சென்றுவிடும். திரு.செந்தில் அவர்களுடைய comedy ஒரு movie-ல் இருக்கும் பார்த்திருப்பீர்கள். அதாவது, 'காலையில் இந்த கோவிலில் வடை, இந்த கோயிலில் தயிர்சாதம், மறுநாள் இந்த இன்னைக்கு இந்த கோவிலில் புளியோதரை' என்று ஒரு list வைத்திருப்பார். ஒரு டைரி. அவருடன் இருக்கின்ற இன்னொரு actor -கிட்ட சொல்லுவார்... இரண் டு தூ க்கைக் கொடுத்து, இந்தா போய் இந்த கோயில்ல போய் இன்னைக்கு இங்கு வடை கிடைக்கும். இன்னைக்கு இ ங்கு புளியோதரை கிடைக்கும் வாங்கிட்டு வா" என்று வாங்கிட்டு வந்து சாப்பிடுவார்பாருங்கள் - செந்தில் அவர்கள் ரொம்ப jovial-ஆக சொல்வார், 'Knowledge is power, information is power’ என்று. அதில் அவர்வந்து சென்னைக்கு மட்டும்தான் diary வைத்திருப்பார், நான் மொத்த இந்தியாவுக்குமே diary வைத்திருக்கின்றேன்! அந்த diary -ஐ தான் உங்களுக்கெல்லாம் கொடுக்கிறேன். பல மக்களையும் பார்த்து... நான் எப்போதும் செல்வேன் ஐயா, உங்களைச் சுற்றியிருக்கின்ற பொருட்களுடைய எண்ணிக்கை, அதனுடைய விலையை வைத்து, உங்களுடைய richness-ஐ முடிவு ப ண்ண முடியாது. உங்கள் passport-ல் இருக்கின்ற stamps-களின் எண்ணிக்கையை வைத்துத்தான் உங்கள் richness-ஐ முடிவு ப ண்ண முடியும். பள்ளிக் கல்லூரியில் மட்டும் படித்தவன்- படிக்காதவன். பணம் மட்டும் இருப்பவன் - ஏழை. தன்னைச் சுற்றி இருக்கும் பொருட்களின் விலை மற்றும் பொருட்களின் எண்ணிக்கை, இவை சார்ந்து மட்டும் தன்னை செல்வந்தன் என்று நினைப்பவன் - முட்டாள். உலகத்திலிருந்து படி த்தவனே - படித்தவன். பல இட ங்களுக்கும் சென்று பல சமூகங்களையும் கண் டு, பல்வேறு வி தமான வாழ்க்கை முறைகளையும் உள்வாங்கியவனே - செல்வந்தன். பணத்தைத் தாண் டி இந்த உலகத்திலே வாழ்வதற்கான உடல், மனம், உயிர், உணர்வு போன்றவற்றை இனிமையாக வளர்த்தெடுத்திருப்பவனே - மிகப்பெரிய செல்வந்தன், ஐஸ் வர்யவான். பரிவ்ராஜகத்தை அதனால்தான் திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறேன் ஐயா. இந்த 200 இடங்கள் ஏற்கனவே list பண்ணி கொடுத்திருக்கின்றேன். பரிவ்ராஜகம் செல்ல வேண் டும் என்று நினைப்பவர்களுக்கு guide-ஆக இதை கொடுக்கின்றேன். அங்கெல்லாம் சென்று வாழ்க்கையைப் படியுங்கள். வாழ்க்கையை விரித்துக்கொள்ளுங்கள். காலம் கடந்துவிட்டதனால், அடுத்தடுத்த ஸத்ஸங்கங்களைத்தொடருவோம். இந்தியாவிலே, நாளை காலை, அருணாசலேஶ்வரர் ஆலயத்தில் தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்கின்றது. அந்த கொடியேற்ற நேரத்திலே உலகம் முழுவதும் இருக்கும் கைலாஸங்களிலேயும் த்வஜாரோஹணம் நிகழும். எல்லோரும் கலந்துகொள்ளுங்கள். அண்ணாமலையார் ஆலயத்திலே இன்று கணபதி உற்சவம். இப்பொழுது மஹா கணபதிக்கு பூஜையும், உற்சவமும் நிகழுகின்றது. இந்த ப்ரஹ் மோத்ஸவம் இனிமையாக நிகழ வேண் டும் என்பதற்காக மஹா கணபதியை வழிபட்டு, சண் டேஶ்வரரையும் வழிபட்டு உற்சவம் துவங்குகின்றது. இப்பொழுது உல கம் முழுவதிலும் இருக்கும் எல்லா கைலாஸங்களிலும், கணபதிக்கும் சண் டிகேஶ்வரருக்கும் பூஜையும் வழிபாடும் நிகழ்ந்து, இதன்மூலம் உற்சவத்தை நல்லபடியாக நடத்துவதற்கு பெருமானிடம் அருளும் ஆசியும் அனுமதியும் பெற்று உற்சவம் துவங்க இருக்கின்றது. வாருங்கள், மஹா கணபதி வழி பாட்டில் கலந்து கொண் டு, அவர் அருளைப் பெறுவோம். நீங்கள் எல்லோரும் பரமாத்வைதத்தில் நிலை பெற்று, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தம் ஆகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்.
Event Photos
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |






























