2007 தியான சத்சங்கம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

தியான சத்சங்கம் (Tamil Satsangs)

வருடம்  : 2007

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : தியான சத்சங்கம்

சொற்பொழிவின் தலைப்பு : மனம்

நடைபெற்ற இடம் : கைலாஸா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : கைலாஸா

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1 லட்சம்

வீடியோ

2007 தியான சத்சங்கம்


தியான சத்சங்கம்_விவரனை

எழுதப்பட்டதன் நகல் (Transcript) :

"தியான சத் சங்கம் : கதவைத்திற காற்று வரட்டும். அந்தக் காலத்து கிராமபோன் தட்டுகள், கிராமபோன் ரெக்காடுங்க, எடுத்து அத பிக்ஸ் பன்னி அந்த முள்ளெடுத்து அந்த தட்டு மேல வச்சீங்கன்னா ஓடிக்கிட்டே இருக்கும், எங்கையாவது ஒரு இடத்துல அது கீரல் விழுந்துருச்சின்னா அது ஒரு ஒரே லைனயே திரும்பத் திரும்ப சொல்லும். நம்ம அன்பர் ஒருத்தருடைய வீட்டிற்கு போயிருந்தேன். அங்கு பழைய காலத்து க்ராமபோன் ரெக்கார்ட் வைத்திருந்தார். அவர போட்டுக் காமிக்கச் சொல்லிக் கேட்டோம். அந்தக் டிஸ்க் திரும்பத் திரும்ப ஒரே லைனையே சொல்லுது ’வரவு எட்டணா’ ’வரவு எட்டணா’ ’வரவு எட்டணா’ ன்னே சொல்லுது ’செலவு பத்தனாக்கு’ போகவே மாட்டேங்குது. நான் சொன்னேன், ’பரவால்ல ரொம்ப நல்ல டிஸ்க் வரவு மட்டும் வைக்கும் செலவு வைக்கவே மாட்டேங்குது’ன்னு. அவர் சொன்னார், சாமி இது செலவு வச்சி வச்சி அலுத்துக்போயிருச்சு அதனாலதான் இதுக்குமேல செலவு வக்கிறதில்லன்னு சும்மா இருக்கட்டும்னு விட்டுட்டேனு. பழைய க்ராமபோன் ரெக்கார்ட் எப்படி ஒரே வார்த்தையை மீண்டும், மீண்டும் ஒலிக்குமோ அதே மாதிரி நம்முடைய மனம் ஒரே அமைப்பில் தான் மீண்டும் மீண்டும் இயங்கும். உங்களுடைய மனத்தை நீங்களே கவனிச்சிருந்தீங்கன்னா இந்த ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கலாம். ஒரு சின்ன உதாரணம். இதைப்புரிந்து கொண்டீர்களானால் போதும். உங்க மனம் எப்படி ஒரு ரெகார்டான ஒரே சிஸ்டத்தில் இயங்கிக்கிட்டே இருக்கு அப்படின்னு தொிஞ்சுக்கலாம். உதாரணத்திற்கு காலையில் எழுந்திருந்து பல் துலக்கும்பொழுதே ஆபிசைப் பற்றி கவலைப்பட ஆரம்பிச்சிடுவீங்க. மெதுவா டிபன் சாப்பிட்டுவிட்டு ஆபிஸூக்கு கிளம்பும்பொழுது ஆபிசை பற்றி எல்லா டென்ஷனும் மனசில் வந்திடும். இதை செய்யணும். அதை செய்யணும். இதைப்பண்ணணும். அதைப்பண்ணணும். இதைக் கவனிக்கணும். அதைக் கவனிக்கணும். ஆபிஸ் போய் உட்கார்ந்தவுடனே மதியம் வீட்டுக்கு போனவுடனே, பையனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கணும்னு கவலை வந்திடும். ஆபிஸிலிருந்து கிளம்பி வந்து பையனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திட்டிருக்கும் பொழுது, ஐயோ வீட்டில் இந்த காய்கறி இல்லையே அது இல்லையே இது இல்லையே வாங்கிட்டு வரணுமே அப்படிங்கற கவலை வந்திடும். பாடம் சொல்லி முடிச்சிட்டு அதை எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்து வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டே இருந்தீங்கன்னா ஐயோ நாளைக்கு காலைல என்னப் பண்றதுன்னு தொியலையே. மறுநாள் காலையைப் பற்றி கவலை வந்திடும். இந்த மாதிரி மனம் ஒரு விதமான பழக்கத்திற்குள் இருக்கும். அந்தப் பழக்கத்துக்குள்ளே இருந்ததுன்னா அலுவலகம் விடுமுறையாக இருக்கின்ற ஞாயிற்றுக் கிழைகைளில்கூட காலையில் எழுந்திருந்து பல் துலக்க ஆரம்பிச்சீங்கன்னாலே உங்களை அறியாமலே அலுவலகத்தைப் பற்றிய கவலை வந்துடும். திடீர்னு உங்க மனதுக்கு நினைவுக்கு வரும். இல்லை. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. நாம கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லை. ஆபிஸ் இல்லை. அப்படி உங்க மனசுக்கு நீங்களே அப்பா! இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை ஆபிஸ் போக வேண்டிய அவசியமில்லை, ஆபிஸ பத்தி யோசிக்காத நிம்மதியா இருன்னு சொன்னீங்கன்னாக்கூட, அந்த கவலைப்படுகின்ற போது இருக்கின்ற அந்த லோ மூட், அந்த மன உளைச்சல் தன்மை அப்படியே மனசுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். உங்களுடைய மனதுக்கு நீங்களே சொல்லிக்கொண்டாலும்கூட இன்னைக்கு ஆபிஸ் லீவுன்னு தொிஞ்ச தெரிஞ்ச கூட கவலைப்பட்டு பட்டு பழகிப்போன அந்த மன அமைப்பு, அந்தக் கால கட்டம் வரும்போது அதே மாதிரி ஒரு மன உளைச்சலோட தான் இருக்கும். எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி வேலை கிடைத்து கல்யாணம் ஆகி ஐந்து வருடத்திற்குப் பிறகு கூட கனவில் பார்த்தீங்கன்னா திடீர்னு எக்ஸாம நாம அட்டெண்ட் பண்ணாத மாதிரியும், ஏதோ ஒரு எக்ஸாமில் நாம் ஃபெயில் ஆயிட்டா மாதிரியும் கனவு வரும். வேலை கிடைச்சி, கல்யாணம் ஆகி 5, 6 வருஷம் கழிச்சிகூட திடீர்னு ஒருநாள் ராத்திரி, ஏதோ ஒரு எக்ஸாமில் எக்ஸாமுக்கு போகாத மாதிரியும், இல்ல ஏதோ ஒரு எக்ஸாமில் நாம் ஃபெயில் ஆயிட்டா மாதிரியும் ராத்திரில கனவு வரும். வாழ்க்கை மாறி பல ஆண்டுகள் ஆகி இருக்கும். ஆனா மன அமைப்பு மாறுவதில்லை. பல இடத்தில் நீங்க ஆழ்ந்து யோசித்துப் பார்த்தீர்களானால் காலையில் ஏழு மணிக்கு காபி குடிப்பது அப்படீங்கிற பழக்கம் வைத்திருந்தீர்களானால் மணி ஏழடிச்சவுடனே நீங்க கடிகாரத்தைப் பார்க்கவே வேண்டாம். மணி ஏழடிச்சவுடனே உள்ளேருந்து அந்தக் குரல் வந்திடும் காபி-ன்னு. அதை வைத்தே கரெக்டா தொிந்து கொள்ளலாம். டைம் ஆயிறிச்சு! மணி ஆயிருச்சு அப்படீன்னு. மனம் ஒரே ஒரு ரெகார்டட் சிஸ்டத்தில் தான் போகும். மனதுக்கு சுதந்திரமான, ஒரு ஸ்வபாவமான, தன்னுடைய இயற்கையான ஒரு போக்கு இல்லை. நீங்க எதை ரெகார்ட் பண்ணி வைக்கறீங்களோ அது வழியாகவே தான் ஓடிக்கொண்டிருக்கும். மாலை எட்டு மணி ஆனால் படுப்பது என்கிற ஒரு பழக்கத்தை ஏற்படுத்திட்டீங்கன்னா, எட்டு ஆச்சுன்னா போதும் நீங்க கடிகாரமே பார்க்க வேண்டாம். கொட்டாவி மேல கொட்டாவி வந்திட்டேயிருக்கும். உடம்பு தானாகவே அந்த சிஸ்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஆழ்ந்து பார்த்திங்கன்னா மனம் ஒரு தனிப்பட்ட சுதந்திர சுதந்திரமான ஒரு அமைப்போ பொருளோ அல்ல. வெறும் ஒரு ரெகார்டட் சிஸ்டம். இந்த சிஸ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு விழிப்புணர்வோ அல்லது தனி சுதந்திரம் உங்களுக்கு இருக்கு என்று எவ்வாறு சொல்ல முடியும்? இல்லை. உண்மையில் ஒரு ஆழ்ந்த உறக்கத்தில், ஒரு மந்தத்தமான ஒரு நிலையில் தான் நம்முடைய வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கின்றது. நேற்று அழகான ஒரு கேள்வி ஒரு அன்பர் கேட்டிருந்தார். சாமி நம்முடைய வாழ்க்கையில் எது வெல்லும். விதியா? மதியா? மதி தான் வெல்லும். ஆனால் இருந்தால் தான் வெல்லும். மதி தான் வெல்லும். அதில் ஒன்றும் டவுட் இல்ல ஆனால் இருந்தால் தான் தான் வெல்லும். உண்மையிலேயே நமக்கெல்லாம் இருப்பது மதியல்ல. நாம் மதி என்று எதை நினைக்கிறோமோ அது மதி அல்ல. மதி தான் உண்மையில் வெல்லும். எப்ப வெல்லும் எனில் நம்முடைய மன அமைப்பும், நம்முடைய எண்ண ஓட்டமும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும்பொழுது, எப்ப நம்மக் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அப்பொழுதுதான் மதியே வேலை செய்யத் துவங்கும். அதுவரை மதி வேலை செய்யத் துவங்குவதே இல்லை. அதுவரை உங்களுள் இயங்குவது எல்லாம் மதிங்கற பேரால நீங்களே சொல்லிக்கற விதிதான். ஒரு அழகு பார்த்தீங்கன்னா. சில வீட்டில் பெண்கள் பார்த்தீங்கன்னா, வீட்டில் அவங்க தான் அனைத்தையும் நடத்தறாங்கன்றதே தொியாம நடந்திட்டிருப்பாங்க. கணவர் நினைச்சிட்டிருப்பார் கணவருடைய கட்டுப்பாட்டில்தான் எல்லாம் இருக்கு என்று. ஆனால் கணவருக்கே தொியாமல் கணவரையே இயக்கிக் கொண்டிருப்பார்கள். சில பெண்கள் பார்த்தீர்களென்றால் அவர்களுக்கு அந்த அளவு மறைக்கத் தொியாது. அவங்க தான் நடத்தறாங்கமாதிரியே காமிச்சிடுவாங்க. ஆனா சில பெண்கள் ரொம்ப புத்திசாலிகள். கணவருக்கே தொியாம ரொம்ப அழகா கணவரை இயக்கிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி தான் நம்முடைய மனம். நாம சுதந்திரமா இருக்கறதா நம்மிடம் காட்டி ஆனா நம்மையே இயக்கிக் கொண்டிருக்கும். நாம சுதந்திரமா இருக்கறதா காட்டும். ஆனா இயக்கிக் கொண்டிருக்கும். ஆனா நாம சுதந்திரமாக இருக்க மாட்டோம். இது ரொம்ப ஆபத்தான சுழ்நிலை. அடலீஸ்ட் நாம சுதந்திரமாக இல்லை என்பது தொிந்தாலாவது பரவாயில்லை. ஆனால் அதுகூட தொியாமல் நம்முடைய மனத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அமைப்பு நம்முடைய அன்கான்ஷியஸ்க்கு உண்டு. நமக்கேத் தெரியாமல் நாம தூக்கத்தில இருக்கிறோம் என்பது நமக்கேத் தொியாம தூக்கத்தில இருந்திட்டிருப்போம். ஒரு தௌிவிற்கு வந்து முதல்ல தெரிந்துகொள்ள வேண்டியது தூக்கத்தில் இருக்கிறோம். அப்படீன்னு. நேற்று இன்னொரு அன்பர் கேள்வி கேட்டிருந்தார். சாமி நான் தியானம் செய்ய முயற்சிக்கிறேன். ஆனால் தியானம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது மனம் வேகமா அலைகிறதே.? நான் உண்மையிலேயே தியானத்தில் முன்னேறுகிறேனா? என்று கேட்டிருந்தார். நாம் தொிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் எப்ப நீங்க மனம் அலைகிறது என்று கண்டுப்பிடிக்கிறீர்களோ அப்பவே தியானத்தில் முன்னேற ஆரம்பிச்சிட்டீங்க அப்படீன்னு அர்த்தம். அமாவாசை அன்னிக்கு சந்திரனில் இருக்கும் அந்தக் கறுப்பான திட்டுக்கள் தொியுமா? தொியாது. பௌர்ணமி அன்று தான் தொியும். சந்திரனுடைய சுய ஔியினாலே சந்திரனுக்குள் இருக்கும் களங்கம் வௌியில் தொிவதுபோல், நம்முடைய மதி வேலை செய்ய ஆரம்பிக்கும்பொழுது, நம்முடைய விழிப்புணர்வு வேலை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நம்முடைய மனதில் அளவிற்கு மீறி எண்ணங்கள் வருவது நமக்குத் தொிய ஆரம்பிக்கும். அமாவாசை அன்னிக்கு சந்திரனில் இருக்கும் களங்கம் தொியாது. பௌர்ணமி அன்று தான் தொியும்.அதேமாதரி நம்முடைய புத்தி வேலை செய்ய ஆரம்பிக்கும்பொழுது, நம்முடைய விழிப்புணர்வு வேலை செய்ய ஆரம்பிக்கும்பொழுது தான், நம்முடைய மனம் அளவிற்கு மீறி அலைந்து கொண்டிருப்பது தொிய வரும். நீங்க தியானத்தில் உட்கார்ந்து உங்கள் மனம் உங்களுக்குக் கட்டுப்படாமல் அலைகின்றது அப்படின்னு தோணுதுன்னா முதலில் தொிந்து கொள்ளுங்கள் தியானத்தில் முன்னேறத் துவங்கிவிட்டீர்கள்."


தியான சத்சங்கம்_சாஸ்திர பிரமாணம்

" ஆத்மஞானத்தை குருகிருபையே நல்கும், குருவின் உபதேசத்தாலேயே அஞ்ஞானம் அழியும்.

குருரேகோ ஹி ஜாநாதி ஸ்வரூபம் தேவமவ்யயம் | தத்ஜ்ஞாநம் தத்ப்ரஸாதேந நாந்யதா ஶாஸ்த்ர கோடிபி: ||

ஶ்வரூபஜ்ஞாநசூ'ந்யேந க்ரு'தமப்யக்ரு'தம் பவேத் | தபோ ஜபாதி்கம் தேவி ஸகலம் பாலஜல்பவத் ||

மாற்றமற்ற பரம்பொருளைப் பற்றிய உண்மை சொரூபத்தை (ஆத்ம ஞானத்தை) அறிந்தவர் குரு ஒருவரே. இந்த ஞானத்தை குரு கிருபையாலன்றி கோடிக்கணக்கான சாஸ்திரங்களாலும்கூட ஒருவன் பெற முடியாது.

தேவி! ஆத்மஞானம் இன்றிய தவம், மந்த்ர ஜபம் போன்ற அனைத்தும் குழந்தையின் மழலைக்கு நிகரே; பயனற்றவையே.

- குருகீதை (பரம்பொருள் பரமசிவனார் பார்வதி தேவிக்கு உபதேசித்தது)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பரமசிவ பரம்பொருளின் நேரடி செய்திகளை கைலாஸாவிலிருந்து தமது சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துகிறார்.

பகவான் அவர்கள் அனைத்து நிலை ஜீவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் உபதேசம் அருள்கிறார். ஒரு ஜீவனின் உயிர் எந்த நிலையில் இருந்தாலும், அது மிகுந்த உற்சாகத்தோடும் வாழ்க்கையை நோக்கிய மிகுந்த உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும், வேகத்தோடும், இயங்குகின்ற நிலையில் இருந்தாலும், அல்லது தளர்ந்து சோர்ந்து படுக்கையை விட்டே அசையமுடியாத நிலையில் இருந்தாலும், அல்லது மாயை என்ற மன உளைச்சலில் மூழ்கி தன்னை மறந்து வீழ்ந்து கிடந்தாலும், ஒரு ஜீவன் எந்த நிலையில் இருக்குமானாலும் அது அடையப்பட வேண்டியது பரமசிவ பரம்பொருளோடு சாயுஜ்யநிலையே என்பதை அருள்கிறார். பரமசிவப் பரம்பொருள் பிரபஞ்சத்தின் அடிப்படை அறிவியலாக தன் அரூப ரூபத்திலிருந்து அளித்த வேதங்களும், அதை வாழ்க்கையில் சாத்தியமாக்கிக் கொள்ளும் பயன்பாட்டுத் தொழில் நுட்பமாக அருளிய ஆகமங்களையும் அருளி ஒவ்வொரு ஜீவனுக்கும் வழிகாட்டுகிறார். "