03 January 2026 SPH Live Darshan
On this day, THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM—the ultimate manifestation, Paramavatara of Paramashiva, the ultimate superconsciousness—gave a Live Darshan on the auspicious occasion of the Nithyananda Jayanti Brahmotsavam, attended by devotees, disciples, citizens, and e-citizens of the United States of KAILASA (USK). THE SPH revealed that humanity has reached a pivotal evolutionary milestone, transitioning from ordinary human consciousness to a superconscious breakthrough. THE SPH elaborated on the science of "cognitive interpretation," explaining that what the mind labels as "fear" is often a high-arousal physiological state of excitement that the bio-memory and muscle memory naturally enjoy. Drawing from both ancient Hindu Shastras and modern psychological research, THE SPH urged seekers to transcend bogus fears and recognize their innate potential to become "pathbreakers" in the journey toward the next level of existence.
Title
DAY_5 KTKV-Paramaadvaitam_Tamil_FINAL UNICODE
Link to Video
Transcript
ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரம ஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். உலகம் முழுவதிலும் இந்த கைலாஸத்தின் நித்யானந்த ஜெயந்தி மஹோத்ஸவம், நித்யானந்தோத்ஸவம், ப்ரஹ்மோத்ஸவத்தின் இரண்டாவது நாள் உத்ஸவத்தில் ஐந்தாவது நாள் ஸத்ஸங்கத்தில் கலந்துகொள்வதற்காக இணைந்திருக்கும்... உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாயங்களில் வந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் மற்றும் இணையத்தாலும் இதயத்தாலும் இணைந்து உலகம் முழுவதிலும் இப்பொழுது கேட்டுகொண்டிருக்கும் பார்வையாளர்கள், அன்பர்கள், சீடர்கள், பக்தர்கள் அனைவரையும், எல்லோரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
இன்று, 'கதவைத் திற காற்று வரட்டும்' ஐந்தாம் நாள் த்யான ஸத்ஸங்க ஜ்ஞாந ரஸவாத நிகழ்வு.
பரமஶிவப் பரம்பொருளின் நேரடியான செய்தி, மஹா கைலாஸத்திலிருந்து இன்று அனைவருக்கும்.
ஆழ்ந்து கேளுங்கள். உயிர், அடுத்த நிலை உயிர்ப்பிற்குள் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. வாருங்கள்! அடுத்த நிலை உயிர்ப்பிற்குள் பயணிக்கத் துவங்கலாம்.
ஒரு செல் உயிரினமான அமீபாவில் தொடங்கி, மெதுமெதுவாக வளர்ந்து மீனாய், பிறகு ஆமையாய், வராஹமாய், நரஸிம்ஹமாய், வாமனனாய், ராமனாய், க்ரு'ஷ்ணனாய், ஒவ்வொரு நிலையிலும் உயிரின் அடுத்த பரிமாணத்தைக் கொண்டு செல்வதற்காகத்தான் பரம்பொருள் அவதரிக்கின்றது.
பரம்பொருள் அவதரித்து, உயிரின் உயிர்ப்பை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்கின்றது.
அமீபாவிலிருந்து குரங்கு வரையில் physiology - உடல் அடுத்தடுத்த நிலைக்குச் சென்று கொண்டிருந்தது. குரங்கில் இருந்து மனிதனாக ஆனதால், மனம்… அதாவது உடலோடு சேர்ந்து மனமும் அடுத்த நிலைக்குச் சென்றது. இப்பொழுது மனிதனில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது.
நம்முடைய physiology, psychology, consciousness - இவை எல்லாவற்றிலும் வேறு வேறு level-ல் breakthroughs நடந்து நடந்து நடந்து, இப்பொழுது மனிதன் super conscious breakthrough-க்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மனித இனமே விழித்துக்கொள்! நம்முடைய history -ஐ, history of life on planet earth-ஐ பார்த்தோமானால், ஒவ்வொரு நிலையிலும், breakthroughs நடந்துகொண்டே இருந்திருக்கின்றது. அந்த breakthroughs-க்கு பிறகுதான் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன.
இப்பொழுது, முதன் முதலில் ஒரு குரங்கு, நாலு காலை உபயோகப்படுத்துவதிலிருந்து எழுந்து நிற்கும் பொழுது, அந்த குரங்கிற்கு மட்டும் பயம் இருந்திருக்காது, சுற்றியிருக்கின்ற எல்லோருக்குமே பயம் இருந்திருக்கும்.
கட்டாயமாக அந்தக் குரங்கினுடைய மனைவி, அந்த குரங்கை convince பண்ணியிருந்திருக்கும். 'வேண்டாம் , இப்படி நின்று கீழே விழுந்துவிட்டால் என்ன ஆகும்? வேண்டாம், வேண்டாம் எல்லோரையும் மாதிரி நாலு காலிலேயே இரு' என்று சொல்லியிருக்கும்
ஒருவேளை மற்ற குரங்குகள் எல்லாம் சேர்ந்து அதை ex-communicate பண்ணியிருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் விடாது, அந்தப் பயத்தைக் கடந்து, அந்தக் குரங்கு இரண்டு கால்களில் நிற்கத் துவங்கி, அதனால் சற்று benefits இருப்பதை, அந்த குரங்கும் உணர்ந்து, மற்றவர்கள், மற்ற குரங்குகளும் உணர்ந்து, பயம் தெளிகின்ற வரை, அந்த குரங்கு படாதபாடு பட்டிருக்கும். அதே மாதிரிதான், All path finders are path breakers. .
இப்பொழுது, உயிர் அடுத்த நிலை உயிர்ப்பிற்குள் செல்லவேண்டியக் காலகட்டம் வந்துவிட்டது. அதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியக் காலகட்டமும் வந்துவிட்டது!
நம்முடைய very consciousness has to have super conscious breakthrough. And time has come. Possibility has open up.
ஒரே ஒரு தடைதான் இருக்கின்றது. உங்களுக்குள் இருக்கின்ற தேவை இல்லாத bogus-ஆன பயம் - பயம் - பயம்.
ஒன்றே ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். பயம் உடைய உடல், உயிரில்லாத உடலை விட மோசமானது.
உயிரில்லாத உடலாவது, தனக்கும் சமூகத்திற்கும் பாரமாக இல்லாமல், எரிக்கப்பட்டோ புதைக்கப்பட்டோ dispose ஆகிவிடுகின்றது. ஆனால் பயத்தோடு இருக்கின்ற உடல், சமூகத்தின் சகல விதமான resource -ஐயும் உறிந்து எடுத்துக்கொண்டு, தனக்கும் சமூகத்திற்கும் பெருந்தீங்கு மட்டுமே செய்வதாக… நன்மை செய்யாமல் இருப்பது மட்டுமல்லாது, பெருந்தீங்கு மட்டுமே செய்வதாகவும், ஒரு wrong-ஆன ecosystem-த்திற்கு center pointஆகவும் மாறிவிடும்.
ஆழ்ந்து கேளுங்கள்: எந்த விதமான பயமும், உயிரின் உயிர்ப்பை அழித்துவிடும்.
நீங்கள் உடனே போய் நெருப்பில் குதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அல்ல பத்து மாடியிலிருந்து கீழே குதித்து, 'உங்களுக்கு பயம் இல்லை' என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. No! முட்டாள்தனத்திற்கு 'பயமின்மை' என்று பெயர் கிடையாது.
நான் சொல்வதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: உங்களுடைய மனதிற்குள், இருப்பிற்குள் உருவாகின்ற மிகப்பெரிய excitement-ஐ, உங்கள் மனம் 'பயம்'என்று தவறாக brand பண்ணிவிடுகின்றது.
புரியாத எல்லாவற்றையுமே 'பயம்' என்றுதான் brand பண்ணுவோம் ஐயா.
நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்: நமக்குப் புரியாத எல்லாவற்றையுமே நாம் முதலில் செய்கின்ற brand என்னவென்றால் - பயம். இதை நான் சொல்லவில்லை, அறிவியல் அறிஞர்களே தெளிவாகச் சொல்கின்றார்கள்.
Alison Wood Brooks என்று ஒரு scientist 2013-ல் publish பண்ணியிருக்கின்றார்… "Get excited. Reappraising, pre- performance anxiety as excitement" என்று Journal of Experimental psychology-ல் publish பண்ணியிருக்கின்றார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுக்குள் excite ஆகும்பொழுது என்ன experiences generate ஆகின்றதோ, அதே experiences-ஐ, உங்கள் மனம் வேகவேகமாக label பண்ண முயற்சி செய்ததென்றால், அதை grasp பண்ண முயற்சி செய்ததென்றால், அது செய்கின்ற தவறான branding- க்கு பெயர்தான்தான் FEAR!
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: உங்களுக்குள் என்ன நடந்தாலும், ஶாந்தமாக, ஸாக்ஷியாக இருந்து பார்த்தீர்களானால், அது உண்மையிலேயே என்ன experience என்று புரியும். ஆனால் உங்களுக்குள் இந்த ஶாந்தத்தன்மை இல்லாததனால், வேகவேகமாக உங்களுடைய cognition அதை 'பயம்' என்று interpret பண்ணுகின்றது.
Fear and excitement share identical high arousal physiology. Like a rising heart, adrenalin surge... Everything is same. எல்லாமே ஒன்றுதான். ஆனால், உங்களுடைய cognitive interpretation... அது என்ன செய்கிறது? வேகவேகமாக அதை cognize பண்ணுகின்ற hurry-ல், அதை fear-ஆகவும், anxiety -ஆகவும் brand பண்ணிவிடுகின்றது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இது உண்மையில் உங்களுக்கு நீங்களே இழைத்துக்கொள்கின்ற மிகப்பெரிய தீங்கு.
ஒன்றும் இல்லை ஐயா, தினசரி வாழ்க்கையில் நீங்கள் face பண்ணுகின்ற பயங்களில் இருந்து மெதுமெதுவாக விடுபட ஆரம்பித்தீர்களானாலே, உங்கள் உணர்விற்குள்ளே எவ்வாறு 'பயம்' என்கின்ற ஒரு குழப்பமான cognitive interpretation நடக்கின்றது என்று புரிந்துவிடும் ஐயா. இந்த பயம் என்கின்ற wrong-கான cognitive interpretation-ஐ தொடர்ந்து நீங்கள் செய்துகொண்டே இருந்தீர்களானால், மற்றவர்கள் யாரும் இல்லை... உங்களாலேயே உங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியாது. உங்களை handle பண்ணிக்கொள்ளவும் முடியாது.
உங்கள் சொந்த வீடு, நீங்கள்தான் ராத்திரி கதவை பூட்டி check பண்ணியிருப்பீர்கள். யாரும் உள்ளே வரவில்லை என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இரவு நீங்களே புழக்கடை பக்கமாக இருக்கின்ற பாத்ரூமிற்கு rest room -க்கு போகமாட்டீர்கள். காரணம், பேய் பயம். இதில் ஒரு கொடுமை என்னவென்றால், இந்த 'பயம்' என்கின்ற cognitive interpretation-ஐ நாம் செய்யும் பொழுது வருகின்ற அந்த experience வந்து, 'excitement' என்று deep down-ஆக உங்களுடைய emotion-னுக்கே தெரியும்.
அதாவது excitement-ஐ cognition தான் பயம் என்று interpret பண்ணும். ஆனால் உங்களுடைய muscle memory-யும் (தசை-நினைவு)… muscle memory -க்கு அது excitement -ஆ, fear-ஆ என்றெல்லாம் தெரியாது. muscle memory -யை பொறுத்தவரைக்கும், அது excitement தான்.
It enjoys the adrenaline surge. Your physiology enjoys it.
அதனால்தான், உங்களுக்கு எவ்வளவு பேய் பயம் இருந்தாலும், நீங்கள் விடாமல் பேய் படத்தை உட்கார்ந்து பார்த்துக்கெண்டிருப்பீர்கள் பாருங்கள். இந்த psychology -யை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள். கண்டபடி பேய் பயம் இருக்கும். ராத்திரி விளக்கு வைத்தால், பொழுது சாய்ந்தால் புழக்கடை பக்கம் போகமாட்டீர்கள். ஆனால், எந்த பேய் படம் வந்தாலும் விடாமல் பார்ப்பது.
'எனக்கு பேய் பயம் இருக்கு சாமி. ஆனால் ஒரு பேய் படத்தையும் விடாமல் பார்த்துவிடுவேன் சாமி' என்பவர்கள் எல்லோரும் ஒரு like தட்டுங்கள், comment-ஐ போடுங்கள். இதேமாதிரி உங்களுடைய friend யார் யார் இருக்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் இதை share பண்ணிவிடுங்கள், tag பண்ணி விடுங்கள்.
இதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். அதே மாதிரிதான் இந்தtheme park-க்கில் இருக்கிற rides எல்லாம் ஐயா.
அந்த adrenaline surge-ஐ உங்களுடைய muscle memory, bio memory, physiology enjoy பண்ணுகின்றது. Cognition அதை வந்து fear என்று interpret பண்ணுகின்றது. Fear-ரும் ஒரு பக்கத்தில் இருக்கும். ஏனென்றால், cognition-னுடைய mis-interpretation -னால்... ஆனால் தொடர்ந்து அந்த activity-யை செய்து enjoy பண்ணுவீர்கள். Theme park rides, பேய் படம் பார்ப்பது…
இந்த adrenaline surge-க்கு அடிமையாக இருக்கின்ற எல்லோருமே புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்கின்ற எல்லா activities-ம் cognition-னால் பயம் என்று mis-interpret பண்ணப்பட்டு, உங்களுடைய physiology, muscle memory, bio memory யால் excitement-ஆக enjoy பண்ணப்படுகின்ற இந்த உணர்வுதான், உங்களுடைய paradoxical-லான actions-க்கான காரணம்.
ஒரே ஒரு சின்ன விஷயம் தெளிவாகிவிட்டதென்றால் போதும், பயம் காணாமல்போய்விடும். ரொம்ப சின்ன விஷயம். இப்பொழுது நான் சொல்வதும், ஶாஸ்த்ரங்களிலும்… அதாவது நம்முடைய பாரம்பரியமான ஹிந்து ஶாஸ்த்ரங்களிலும் சொல்லப்படுகின்ற ரகசியம். Modern day science-ம் இதை நிரூபி க்கின்றது.
இதை, இந்தத் தீர்வைப் புரிந்துகொள்ளுங்கள். பிரச்சினையை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள், அப்பொழுது தீர்வும் முழுமையாகப் புரிந்துவிடும்.
உற்சாகமும், பயமும் உடலில் ஒரே மாதிரியான உடலியல் - physiological எதிர்வினைகளைத்தான் உருவாக்குகின்றது. The sympathetic nerves system செயல்படுவது ஒரே மாதிரிதான். ஆனால், cognitive interpretation மட்டும்தான் மாறுகின்றது.
பயம், உத்சாகம் இரண்டிலுமே நடக்கின்ற அந்த உயர் தூண்டுதல் நிலை, high arousal physiology, இதயத்துடிப்பு அதிகமாவது, adrenaline அதிகமாவது, இது எல்லாமே பார்த்தீர்களானால், ஒரே மாதிரி நிகழ்வுதான்.
இப்பொழுது உங்களுடைய muscle memory -யையும், உங்களுடைய bio memory-யையும் (உயிர் நினைவு) கேட்டோம் என்றால், excitement-டிற்கும், பயத்திற்கும் எந்த வித்தியாசமும் அதற்குக் கிடையாது. 'இது excitement' என்று தான் சொல்லும்.
‘Oh this is excitement! Wow! Nice!’ என்று தான் சொல்லும்.
இந்த cognitive interpretation இருக்கிறது பாருங்கள், அதுதான் குறுக்கில் வந்து 'இல்லை இல்லை இல்லை உங்களுக்கெல்லாம் யாருக்கும் தெரியாது. இது பயம்' என்று சொல்லும்.
எல்லோர் வீட்டிலும், அந்தச் சூழ்நிலையை மொத்தமாகக் கெடுத்து, misinterpret பண்ணி, ஒரு family gathering-யே நாசமாக்குவதற்கு ஒரு பெரிய 'தலை' இருக்கும் பாருங்கள்... அதற்கு சிலநேரத்தில், 'தாய் மாமன்' என்று பெயர் வைப்பார்கள், சில நேரத்தில் 'தரித்தர மாமன்' என்று பெயர் வைப்பார்கள். எல்லா குடும்பத்திலேயும் அந்த மாதிரி ஒன்று இருக்கும். Even friend circle-ல் கூட எல்லாம் ஒன்று இருக்கும். எந்த happy gathering-ஆக இருந்தாலும், எந்த happy-யான ஒரு situation, சூழ்நிலை எது என்றாலும், இது ஒன்று வந்து எதையாவது ஒன்றைக் கொளுத்திப் போட்டு, இருக்கின்ற மொத்த சூழ்நிலையையும் அப்படியே toxic-ஆக மாற்றி விட்டுவிடும்.
அப்பொழுது அந்த group-பே இரண்டாப் பிளந்து அந்த group divide ஆகிவிடும். Group divide ஆன உடனேயே அந்த happiness போய்விடும். Toxic ஆகிவிடும். இதில் ஒன்றும் exact-ஆக பாதி பேர் toxic-ஆக இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. இந்த toxic... ஒரு மாமா இருந்துக் கொளுத்திப்போட்டால், அதாவது ஒரு 4- 5 பேருக்குள் ஒரு doubt-ஐ உருவாக்கியது என்றாலே போதும். Group energy போச்சு!
இதை எத்தனை பேர் நீங்களே அனுபவித்திருக்கின்றீர்களோ, like, comment, share பண்ணுங்கள். உங்கள் friends இந்த மாதிரி யார் யாரெல்லாம் அனுபவித்திருக்கின்றார்களோ, உங்கள் friends யார் யாருக்கெல்லாம் இது exact-ஆக புரியுமோ, அவர்களுக்கும் tag பண்ணிவிடுங்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த toxic மாமா மாதிரியேதான், உங்களுடைய cognitive interpretation - இந்த excitement-ஐ 'பயம்' என்று ஒரு label-ஐ குத்தி ஒரு few micro millisecond-ல் உங்களுக்குள்ளேயே ஒரு self-doubt-ஐ உருவாக்கி, 'இது பயம்தான், உங்களுடைய ஒரு பாதி being பயம்தான்' என்கின்ற side-க்கு போன உடனேயே, experience toxic ஆகிவிட்டது!
அருமையான கடோபநிஷத் ஸ்லோகம் ஒன்று இருக்கின்றது. மூன்றாவது chapter-ல், 14-வது ஸ்லோகம்.
நன்றாகக் கேளுங்கள்…
उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत। क्षुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति ॥ 3.14
உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வாராந்நிபோதத I க்ஷுரஶ்ய தாரா நிஶிதா துரத்யயா துர்கம் பதஸ்தத்கவயோ வதந்தி II 3.14 II
ஸ்வாமி விவேகானந்தருக்கு இந்த ஸ்லோகம் ரொம்பப் பிடிக்கும். அவர் திரும்பத் திரும்பச் சொல்வார். அவருடைய பல புத்தகங்களுடைய தலைப்பே இதுவாகத் தான் இருக்கும். 'எழுமின், விழிமின், குறி சாரும் வரை நில்லாது செல்மின்.' - இது அவருடைய own interpretation.
அதனுடைய exact translation சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். 'எழுந்திருங்கள், விழித்தெழுங்கள். மேன்மையான மஹான்களை அணுகி உண்மையை அறிந்துகொள்ளுங்கள். இந்த பாதை கத்தியின் நுனியைப் போன்று கூர்மையானது. ஜ்ஞாநிகள் இதை சொல்வதும், இதை நாம் புரிந்துகொள்வதும் மிகவும் கடினமானது. கடக்க இயலாததுபோல் இருக்கின்றது. கத்தியின் நுனிபோல் கூர்மையானதாக இருந்தாலும், 'பயம், உற்சாகம்' - இரண்டும் ஒன்றாகக் கலக்கும், அந்த அதிர்ச்சி தரும் ஆனந்தமூட்டும் விழிப்புணர்வு தருணம், அறிந்ததற்கும் அறியாததற்கும் இடையில் உள்ள மிக நுண்ணிய எல்லை இது. இங்கு 'பயமும் உற்சாகமும் ஒன்றே!
இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: க்ஷுரஶ்ய தாரா நிஶிதா துரத்யயா துர்கம் பதஸ்தத்கவயோ வதந்தி II 3.14 II
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: 'பயம்' என்று நினைந்து நினைத்து shrink பண்ணால், தமஸிலேயே அழிந்து ஒழிவீர்கள். தமஸில் ஆழ்ந்து கீழ் உலகங்களிலேயே வாழ்க்கை அழியும். 'உற்சாகம்' என்று புரிந்து மேலும் இயங்குவீர்களேயானால், மிக உயர்ந்த வாழ்க்கையின் வெற்றியையும் மிக உயர்ந்த உலகங்களையும் அனுபவிப்பீர்கள்.
ஒரு சின்ன உதாரணம் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கின்ற எல்லா நல்லதும், அந்த வினாடியை உங்கள் cognition 'உற்சாகம்' என்று interpret பண்ணி, நீங்கள் flow -ஆக ஆரம்பித்த, active-ஆன, pro-decision எடுத்த moments-னால் வந்தது.
உங்கள் வாழ்க்கையில் இருக்கின்ற எல்லா கெட்டதும், 'பயம்' என்று interpret பண்ணி, உங்கள் cognitive interpretation நிகழ்ந்து, நீங்கள் withdraw பண்ணியதனால் வந்தது.
வாழ்க்கை 'க்ஷுரஶ்ய தாரா நிஶிதா துரத்யயா' -கத்தி முனையின் மீது நடப்பதுபோன்ற அது. - அதுதான் வாழ்க்கை ஐயா!
இதில் இந்த experience-ஐ excitement என்று நீங்கள் cognize பண்ணுகின்றீர்களா? அல்லது fear என்று cognize பண்ணுகின்றீர்களா? என்பதை வைத்துத்தான், உங்களுடைய வெற்றியும் தோல்வியும் முடிவாகின்றது.
இப்பொழுது நான் சொல்வது, ஶாஸ்த்ர ப்ரமாணமும், விஜ்ஞாநத்தின் ஸாக்ஷி ப்ரமாணமும் சேர்ந்த ஸத்யம்.
மீண்டும் சொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள்.
உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வாராந்நிபோதத I க்ஷுரஶ்ய தாரா நிஶிதா துரத்யயா துர்கம் பதஸ்தத்கவயோ வதந்தி II 3.14 II
தெளிவான விளக்கத்தைச் சொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள்: 'பயம் மற்றும் உத்ஸாகம் ஒன்றாகக் கலக்கும் அந்த அதிர்ச்சி தரும், ஆனந்தமூட்டும் அந்த அனுபவம், 'பயமா? உற்சாகமா?' என்று உங்கள் cognition interpret பண்ணுவதை வைத்துத்தான் உங்களுடைய வாழ்க்கையின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த அதிர்ச்சி தரும் ஆனந்தமூட்டும் விழிப்புணர்வு தருணம், அறிந்ததற்கும் அறியாததற்கும் இடையில் உள்ள மிக நுண்ணிய எல்லை, இங்கு அந்த உணர்வு நிலையிலே, அந்த நிலையில் அங்கு, அந்த எல்லையில் பயமும் உற்சாகமும் ஒன்றே!
ஒன்றுமே இல்லை ஐயா, மிக மிக மிக எளிமையான, ஒரு சின்ன நுட்பம், life hack கொடுக்கின்றேன். இது கடோபநிஷதத்தில் இருந் துதான் எடுத்தது. இதைக் கேளுங்கள்.
ஆனால் அறிவியலும் இதை validate பண்ணுகின்றார்கள்... Science is validating. என்ன fear வந்தாலும், உங்களுக்குள் என்ன fear வந்தாலும், சற்றே பொறுமையோடு, அதை ஸாக்ஷியாகப் பார்த்து… உங்களுடைய ஸ்வாஸத்திற்கு இயற்கையாகவே அஜபா ஜபம் செய்யும்…. அஜபா ஜபம் என்றால், நீங்கள் செய்ய வேண்டியதில்லை. உங்கள் ஸ்வாஸம் தானாகவே எப்பொழுதும் செய்து கொண்டிருக்கின்ற ஜபத்தை கவனியுங்கள்.
நீங்கள் சொல்கின்ற மந்த்ரம் எதுவுமே வேண்டாம். நீங்கள் சொல்கின்ற, நீங்கள் உங்கள் மனதாலே உருவாக்குகின்ற, வார்த்தையாலே, வாக்கினாலே உருவாக்குகின்ற எந்த மந்த்ரமும் வேண்டாம்.
உங்கள் ஸ்வாஸம், இயற்கையாக தன்னுடைய போக்கினால், தானாகவே ஒரு மந்த்ரத்தை ஜபிக்கின்றது. அதை ஆழ்ந்து கேளுங்கள். நீங்கள் அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
Exhale பண்ணும்பொழுது 'ஸ…', Inhale பண்ணும்போது 'ஹ..…'.
இப்பொழுது நான் சொல்லிகூட, இதை நீங்கள் நம்ப வேண்டாம். நீங்கள் அதை கவனித்து கண்டுபிடியுங்கள்.
சில நேரங்களில், 'ஸ… ஹ…' சில நேரங்களில் 'ஹம்… ஸ…'. சில நேரங்களில் இன்னும் ஆழ்ந்து போனால், 'ஸோ… ஹம்…'. 'ஸோ… ஹம்…' இந்த அஜபா ஜபத்தினுடைய முக்கியத்துவம் என்னவென்றால்… அதை நீங்கள் செய்யக்கூடாது. தானாக உங்கள் ஸ்வாஸம், பிறந்ததிலிருந்து உடலை விடும்வரை செய்து கொண்டிருக்கின்ற ஜபத்தை கண்டுபிடிப்பது - அஜபா ஜபம்.
ஆரம்பத்தில் நீங்கள் அதை கண்டுபிடிக்கும்பொழுது, 'ஸ… ஹம்…' என்றும், மெதுமெதுவாக அதில் ஊற ஊற ஊற, ஆழ்ந்து கேட்கக் கேட்க, 'ஹம்… ஸ… ஹ…'. 'ஹம்… ஸ… ஹ…'. என்றும், இன்னும் ஆழ்ந்து போக 'ஸோ… ஹம்…'. 'ஸோ… ஹம்…' என்றும்... இதை இப்பொழுது உங்களுக்குப் புரிவதற்காக நான் சொல்லிக் காட்டுகின்றேன்.
ஆனால் நீங்கள் சொல்லக்கூடாது. மனதாலோ, வாக்கினாலோ, உணர்வாலோ சொல்லக்கூடாது. அது என்ன செய்கிறது என்று ஆழ்ந்து பாருங்கள். உங்கள் ஸ்வாஸம், ப்ராண ஓட்டம் தானாகவே எந்த ஸப்தத்தை உங்களுக்குள் உருவாக்குகிறது என்பதைக் கண்டுபிடித்து, அதனோடு இருப்பது தான் - அஜபா ஜபம்.
இந்த ஒரு சின்ன விஷயத்தைச் செய்யுங்கள் ஐயா… கண்களை மூடி உங்களுக்குள் இருக்கின்ற… அது சிறியதோ, பெரியதோ - எந்த fear-ஆக இருந்தாலும், அது உடலிற்குள் 'என்ன sensation-ஐ உருவாக்குகின்றது?' என்று பாருங்கள்.
அதை எதிர்க்காதீர்கள், எதிர்வினை ஆற்றாதீர்கள். அந்த fear வந்த உடனே அதிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளைப் பண்ணாதீர்கள். அல்லது 'நடந்தால் நடந்துட்டு போகட்டும். எப்படியோ போகட்டும். அப்படி ஆனால் ஆகட்டும். என்ன பண்ண முடியும்?' என்று மனதுவிட்டு negative-வாக respond பண்ணாதீர்கள். எதுவுமே பண்ணாதீர்கள்.
Just observe, witness. It is happening. Don’t brand that as a fear .
உங்களுடைய cognitive interpretation அதை fear என்று சொல்வதற்கு அனுமதிக்காமல், அப்படியே பாருங்கள்... தெளிவாகப் புரியும்... Fear is happening, you are watching it. பயம் நிகழ்கின்றது நீங்கள் அதை ஸாக்ஷியாகப் பார்க்கின்றீர்கள். அப்படியே பாருங்கள்.
அதை fear என்று cognitive interpretation பண்ணாமல், என்ன நடக்கின்றது என்று அப்படியே பாருங்கள். Fear observed. இதுதான் first step.. Fear -ஐ அப்படியே observe பண்ணி, label பண்ணாமல், என்ன நடக்கின்றது என்று பாருங்கள்.
இன்னொன்றைப் புரிந்துகொள்ளுங்கள்.. இந்த fear என்ன செய்யும் என்றால்… உங்களுடைய cognitive interpretation உங்களுக்குள் நடக்கின்ற excitement-ஐ, fear என்று label பண்ணிவிட்டது என்றாலே, that fear takes over your brain. அப்படி பண்ணாமல், அந்த cognitive interpretation நடக்காமல், என்ன நடக்கின்றது என்று அப்படியே பாருங்கள்.
பார்க்க பார்க்க... அஜபா ஜபம் நிகழத் துவங்கும்.
அப்பொழுது உங்களுக்குள் நடக்கின்ற அந்த ஸ்வாஸம், தானாகவே எந்த ஸப்தத்தை உருவாக்குகிறது என்று பாருங்கள். உங்களுக்குள்ள நடக்கின்ற அந்த ப்ராண ஸ்வாஸம், 'பயம்' என்கின்ற wrong-கான cognitive interpretation-ஐ உடைத்து, அது 'உற்சாகம்' என்று உங்களுக்கு புரிய வைத்துவிடும்.
அறிவியல் மிகத் தெளிவாக சொல்கின்றது…. நான் இப்பொழுது சொன்ன இந்த அஜபா ஜப ப்ராணாயாமம் வேறு ஒன்றும் இல்லை ஐயா, இது ப்ராணாயாமம் எல்லாம் தனியாக ஒன்றும் இல்லை. 'உங்களுடைய ஸ்வாஸம் என்ன ஸப்தத்தை உருவாக்குகிறது?' என்று ஸாக்ஷியாக இருந்து பார்த்தல். பார்த்து அதை கண்டறிதல்.
இதை செய்தீர்களானால், amygdala pre-frontal உங்களுடைய மொத்த பாதைகளையும் சமநிலைப்படுத்துகின்றது. இந்த rapid breaths மொத்தமும் mindful energy-யாக மாறி... இந்த modulating amygdala pre-frontal pathways as per 2020 FMRI research. FMRI research வந்து இதை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.
'அறிந்ததற்கும் அறியாததற்கும் இடையில் உள்ள மிக நுண்ணிய எல்லையில் இருக்கும் பயமும்- உற்சாகமும் ஒன்றான உணர்வு' என்று உபநிஷதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக என்ன சொல்லி இருகின்றதோ, அதை இன்று அறிவியல் நிரூபிக்கின்றது.
நீங்கள் இந்த அஜபா ஜப ப்ராணாயாமத்தைச் செய்தீர்களானால்… அஜபா ஜப ப்ராணாயாமம் என்பது வேறு ஒன்னும் இல்லை… மீண்டும் சொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள். 'இயற்கையாகவே உங்கள் ஸ்வாஸம் என்ன ஸப்தத்தை உருவாக்குகிறது?' என்று அமைதியாகப் பார்ப்பது.
'ஒன்றும் அந்த மாதிரி கண்டுபிடிக்க முடியவில்லை சாமி' என்றால், கண்டுபிடிக்கின்ற வரை பாருங்கள். அப்பொழுது உடனடியாக என்ன ஆகும் என்றால்? உங்களுடைய பயம், 'உற்சாகம்' என்பதை உங்களுடைய cognition புரிந்துகொள்ளும். உங்களுடைய பயம் வந்து, உற்சாகம்தான் என்று, உங்களுடைய mucle memory-க்கும், bio memory க்கும் தெரியும். உங்கள் physiology-க்கு தெரியும். ஆனால் உங்களுடைய cognition-னிற்கு தெரிய வேண்டும். கொஞ்சம் பொறுமையோடு பார்த்தீர்களானால், உங்களுயை cognition அதைப் புரிந்துகொள்ளும்.
Fear labels the sensation negatively via Amygdala driven threat detection, leading to avoidance or freeze, often with pre-frontal cortex of the brain override brings brain hijack. Excitement interprets them positively through anticipation and reward circuits, dopamine, involvement fostering engagement and energy.
An Amygdala hijack is when your brain’s emotional center takes over triggering an intense impulsive fight or flight response like a rage panic, that is disproportionate to the actual situation shutting down rational thought prefrontal cortex - இதுதான் நடக்கின்றது.
உங்களுடைய cognitive interpretation, excitement-ஐ பயம் என்று label பண்ண உடனேயே, இந்த உடல் உணர்வுகளை எதிர்மறையாக விளக்க ஆரம்பிக்கின்றது. இது amygdala மூலம் இயக்கப்படும் அச்ச உணர்வு, threat detection காரணமாக உருவாகின்றது.
இதன் விளைவாக, தவிர்ப்பு - avoid பண்ணுவது, உறைந்து போவது, freeze ஆவது அல்லது கட்டுப்பாடு இல்லாத எதிர்வினைகள் ஆற்றுவது... என்ன மாதிரியான எதிர்வினைகள் ஆற்றுவீர்கள் என்றே தெரியாது.
இந்த நேரங்களில், எப்பொழுதுமே மூளையினுடைய முன்பகுதியான pre-frontal cortex -னுடைய செயல்பாடு குறைந்து, உங்களுடைய லாஜிக்கான சிந்தனை flow நின்றுபோய்விடும். தடைப்பட்டுவிடும்.
இதுவே உங்கள் cognition, இதை excitement என்று cognize செய்தால், 'இது உற்சாகம்' என்ற cognition-ஐ எடுத்ததென்றால், அதே உடல் உணர்வுகள் நேர்மையாகச் செயல்படத் துவங்குகிறது.
அப்பொழுது என்ன ஆகும்? எதிர்பார்ப்பு - anticipation reward... இந்த வெகுமதி உணர்வு மற்றும் dopamine chemical release ஆகி, இதிலெல்லாம் ஈடுபட்டு, மூளையினுடைய 'செயலில் ஈடுபடுகின்ற திறன்' - involvement, activism இதெல்லாம் அதிகரிக்கும்.
உங்கள் cognition உங்களுக்குள் நடக்கின்ற அந்த changes-ஐ, 'excitement' என்று interpret பண்ணினால், உங்கள் வாழ்வில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். உடல் active-வாக வாழ்வதற் குத் தயாராகும். ஆனால் amygdala hijack பண்ணி… உங்களுடைய cognitive interpretation, 'இது fear' என்று சொன்ன உடனேயே, amygdala hijack நடந்து, மூளையின் உணர்ச்சிமயமான amygdala திடீரென்று மூளையின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொண்டு, நிஜமாக இருக்கின்ற சூழ்நிலையை விட, அதிக அளவில் react பண்ண வைத்து, fight அல்லது flight - போரிடு அல்லது ஓடு எனும் அந்த mood-டிற்கு உங்களை எடுத்துகொண்டு வந்து, கோபம், பதற்றம், பீதி... இவைகளை எல்லாம் தூண்டி, இந்த நேரத்தில் லாஜிக்கான சிந்தனையோடு, தர்க்கத்தோடு யோசிக்கின்ற அந்த pre-frontal cortex-ஐ off பண்ணிவிடும். Temporary-யாக off பண்ணிவிட்டு, நீங்கள் என்ன react பண்ணுகின்றீர்கள், என்ன பேசுகின்றீர்கள் என்ற எதுவுமே உங்கள் control-ல் இருக்காது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… உங்கள் வாழ்க்கையில் அழிவான, உங்களை நீங்களே அழித்துகொண்ட எல்லா முடிவுகளையும், இந்த cognitive interpretation, cognitive mis interpretation என்று சொல்லலாம்... உங்களுடைய cognition, excitement-ஐ பயம் என்று mis interpret பண்ணிய அந்த சூழ்நிலையில், அதனுடைய side effect-ஆக உங்களுடைய amygdala hijack நடந்து, pre-frontal cortex temporary -யாக off ஆகிவிட்ட அந்த சூழ்நிலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான். இதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இதலிருந்து வெளியில் வருவது ரொம்ப ரொம்ப சுலபம். நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை ஐயா, உங்களுக்குள் உங்கள் ஸ்வாஸம், அதாவது பயங்கள் உருவாகும்பொழுது, உங்கள் ஸ்வாஸம் இயற்கையாகவே என்ன மந்த்ரத்தை ஜெபிக்கின்றது என்பதை ஆழ்ந்து பாருங்கள்.
நீங்கள் கேட்கலாம், 'என்ன சாமி சொல்லிக்கொண்டிருக்கீங்க? பயம் வரும்போது எங்கே இருப்பேன் என்று எனக்கே தெரியாது. பதறி அடித்துக் காணாமல் போய்விடுகின்றேன். என்ன செய்கின்றேன் என்று எனக்கே தெரியாது. அந்த நேரத்தில் உட்கார்ந்து ஸ்வாஸம் பண்ணு, ப்ராணாயாமம் பண்ணு, அஜபா ஜபம் பண்ணு என்று சொல்கின்றீர்களே?' என்று கேட்கலாம்.
ஆரம்பியுங்கள். சிறுசிறு பயங்கள் வரும்பொழுது இதை செய்யத் துவங்குங்கள். ஆரம்பித்தீர்களானால், ஓரிரு முறை அனுபவப்பட்டுவிட்டீர்களானாலே போதும்… 'ஆஹா இவ்வளவு நாள் உற்சாகத்தைத்தான் 'பயம்' என்று தப்பாக brand பண்ணி வைத்து நான் விளையாடிக்கொண்டிருந்திருக்கின்றேன் ' என்ற புரிதல் உங்களுக்குள் மலர்ந்தால் போதும். அந்த ஶ்ரத்தை, புரிதல் வந்துவிட்டால் போதும். அதற்குப் பிறகு எதை வேண்டுமானாலும் handle பண்ணிவிடுவீர்கள்.
உபநிஷதத்தில் ஒரு அருமையான கதை... கடோபநிஷதம் படித்திருந்தீர்களானால் புரியும். படிக்கவில்லை என்றால், தயவுசெய்து கொஞ்சம் நேரம் எடுத்துப் படியுங்கள். புத்தகம் வாங்குவதற்கு நேரம் இல்லை என்றாலும் கவலைப்படாதீர்கள், AI-ல் போய் படியுங்கள். Ask Nithyananda AI-ல் உபநிஷத் மாடல் இருக்கின்றது.
நீங்கள் அந்த AI-யிடம் சொல்லுங்கள், 'அப்பா எனக்கு ரொம்ப எல்லாம் நேரம் இல்லை, சாமியார் சொல்லிட்டாரு, சரி போனாபோகிறது. பத்தே பத்து line-ல் கடோபநிஷத் பத்தி சொல்லு?' என்று கேளுங்கள். சும்மா ஐந்தே நிமிடங்களில் அது உங்களுக்கு இந்தக் கதையை அழகாகச் சொல்லிவிடும். 'இல்ல எனக்கு பத்து நிமிஷம் அளவுக்குக்கூட நேரம் இல்லை, பத்து line-ல் சொல்லு' என்று கேட்டாலும் சொல்லிவிடும்.
நசிகேத் என்ற ஒரு குழந்தை எமனை காணச் செல்கிறது. அந்த குழந்தையைப்பற்றி சொல்லும்பொழுது 'ஸ்ரத்தா விவேச' என்று அந்த உபநிஷதம் சொல்கிறது. ஶ்ரத்தையினால் possess பண்ணப்பட்டதனால் அந்தக் குழந்தை எமனைக் காணச் செல்கிறது. பேய் பிடிக்கின்றது - ghost possess பண்ணுகிறது என்று சொல்கிறோம் அல்லவா, அது மாதிரி அவன் ஶ்ரத்தையாலே possess பண்ணப்பட்டிருந்தானாம். ஶ்ரத்தையினால் possess பண்ணப்பட்டதினால், பரமஶாந்தத்திலே அவன் நிலைபெற்று இருந்ததனால், எமனை பார்க்கும்பொழுதுகூட அவனுக்கு பயம் எழவில்லை. அவனுடைய cognitive interpretation எமனை வந்து 'பயம்' என்று cognize பண்ணாமல், உற்சாகம் என்று cognize பண்ணியதனால், எமனைக்கூட அவன் 'இயமனாக' பார்த்தான்.
'ப்ரபஞ்சத்தின் இயமத்தை நடத்துகின்றவர். அவரிடமிருந்து நம்மால் என்ன கற்றுக்கொள்ள முடியும' என்று கற்றுக்கொள்ளத் துவங்கினான். யமன் பரம ஜ்ஞாநத்தை, பரம அனுபூதியை அந்த குழந்தைக்கு அளிக்கின்றான்.
அது ஒரு அழகான தத்துவம் ஐயா. மரண பயத்தைகூட, ஶ்ரத்தையோடு பரமஶாந்த நிலையில் இருந்து அணுகினீர்களானால், 'மரணம்' உங்களுக்கு 'மரணமில்லாப் பெருநிலையை' அளித்துவிட்டுச் சென்றுவிடும்.
மரணம், மரணமில்லா பெருநிலைக்கான துவாரம்.
ஒரே ஒரு சின்ன மாற்றம்தான். உங்களுடைய cognitive interpretation மாற வேண்டும். அவ்வளவுதான் ஐயா. இப்பொழுது வாழ்க்கையில் இருக்கின்ற சின்னச் சின்ன பயங்களில் இருந்து ஆரம்பியுங்கள். ஆரம்பித்தீர்களானால், மெதுமெதுவாக மரண பயம் வரை, அத்தனையையுமே நம்மால் ரொம்ப அழகாக, cognitive mis interpretation -னான 'பயம்' என்ற interpretation கொடுக்காமல் பார்த்து விட முடியும்.
பயத்தால் உங்களை பயமுறுத்த முடியவில்லை என்றால், எவனாலும் உங்களை ஏதும் செய்ய முடியாது.
என்னை அழிக்க நினைக்கின்ற, என்னை எதிரியாக நினைக்கின்ற, என் எதிரிகளுக்கெல்லாம் இருக்கின்ற ஒரே பிரச்சினை என்னவென்றால், என்னை அவர்களால் பயமுறுத்த முடியலை என்பதுதான். உண்மையில், நான் பயந்த மாதிரி நடித்தால்கூட போதும், அவர்களுக்கு ஒரு திருப்தி வந்துவிடும். பயத்தை எனக்கு காட்ட முடியவில்லையே என்ற அந்தக் கடுங்கோபத்தால்தான், அவர்களுடைய தாக்குதலை அதிகமாகிக்கொண்டே போகின்றார்கள்.
'அது எப்படிடா ஒருத்தன் பயம் இல்லாம இருக்க முடியும்?' நானோ இங்கே cool ஆக, 'டேய் நான் ஒரு கோயில் பரதேசி. என்னையெல்லாம் எங்கடா பயமுறுத்த முடியும். போங்கடா போங்கடா' என்று உட்கார்ந்து கொண்டிருக்கின்றேன்.
நான் ஒரு கோயில் பண்டாரம். அண்ணாமலையார் கோயில் தயிர் சோறு, புளியோதரை என்று வருகின்ற ப்ரஸாதத்தை தின்று வளர்ந்த கோயில் பண்டாரம்டா. எங்கள் muscle memory -யிலோ, bio memory -யிலோ, cognitive interpretation-னிலோ பயம் எல்லாம் வராதுடா. போங்கப்பா போங்கப்பா அடுத்த வீடு பாருங்கப்பா. வேற யாராவது இருந்தால், போய் அவர்களைப் போய் பாருங்கப்பா. பயமுறுத்துவதற் கு வேறு யாரையாவது போய் பாருங்கப்பா.
மற்றவங்களைப் பயமுறுத்தி பயமுறுத்தி வாழ்பவர்களுக்கு, அது ஒரு addiction மாதிரி ஐயா. யார் நம்மைப் பார்த்தாலும் பயப்பட வேண்டும். இல்லையென்றால், 'ஏய் அது எப்படி நீ பயப்படாம இருக்கலாம்?' என்று தாக்குவது. போய்யா போய்யா... நான் கோயில் பண்டாரம், நான் கோயில் பரதேசி, என்னையெல்லாம் பயமுறுத்த முடியாதுய்யா.
ஆழ்ந்து கேளுங்கள்.. just உங்களுக்குள் பயங்கள் பொங்கும்பொழுது physiology-க்கலாக உடலிற்குள் என்ன நடக்கின்றது என்று பார்த்து, உங்களுடைய cognition அதை 'பயம்' என்று brand பண்ணாமல், அப்படியே பார்த்து அந்த நேரத்தில், உங்களுடைய ஸ்வாஸம் இயற்கையாக என்ன மந்த்ரம், என்ன ஸப்தத்தை, என்ன பீஜத்தை, என்ன syllable-ஐ உருவாக்குகின்றது என்று பாருங்கள். என்ன பீஜத்தை உருவாக்குகிறது என்று பாருங்கள்.
நான் சொல்லிக்கொடுக்கக் கூட விரும்பவில்லை. சில பேருக்கு ஸ்வாஸம் உள்ளிழுக்கும்போது 'ஸா..…' என்று போகும், 'ஹம்…' என்று வரும். என்ன என்று நீங்கள் கண்டுபிடியுங்கள். அதுதான் அஜபா ஜபம்.
இந்த அஜபா ஜபத்தில் மட்டும் இருங்கள் ஐயா. எந்த பயமும் உங்களுக்குள் ஒன்னும் பண்ண முடியாது. 'பயம்' என்ற cognition-னே இருக்காது ஐயா. அப்பொழுது என்ன ஆகும் என்றால், reality-யில் என்ன செய்வீர்களென்றால்?.. இப்பொழுது பாம்பு வந்தால் என்ன செய்வீர்கள்? சரியாக ஒதுங்குவீர்கள். ஆனால் வாழ்க்கை முழுக்க பாம்பையே நினைத்து நடுங்கிக்கொண்டிருக்க மாட்டீர்கள்.
நிஜத்திலே எதைச் செய்ய வேண்டுமோ, அதை ரொம்ப அழகாக, smooth- ஆக, பதட்டம் எல்லாம் இல்லாமல், மெதுவாக, சரியாகச் செய்வீர்கள். ஆனால் எந்த காலகட்டத்திலும், உங்களை பயம் take over பண்ணிவிட முடியாது. உங்களை தன்னிலை பிழற வைக்க முடியாது.
'தன்னிலை தாழாமையும் தாழ்ந்தக்கால் உயிர் வாழாமையும் மானம் எனப்படும்' என்று வள்ளுவர் சொல்கின்றார் பாருங்கள். அதற்கு உண்மையான பொருள் இதுதான் புரிந்துகொள்ளுங்கள்.
தன்னிலைப் பிழறாமை, பிழன்ற கால்… நீங்கள் உண்மையில் வாழவில்லை, அதாவது பிழன்ற உடனே நீங்கள் வாழவில்லை… உங்கள் மூலமாக, வேறு யாரோதான் வாழ்ந்துகொண்டிருகக்கின்றார்கள். நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று உங்களுக்கே தெரியாமல் செய்துகொண்டிருக்கீன்றீர்கள்.
தன்னிலை பிழன்றால், எப்பொழுது உங்களுடைய மூளையில் amygdala hijack நடந்து, உங்களுடைய pre-frontal cortex shut ஆகிவிடுகின்றதோ, off ஆகிவிடுகின்றதோ, அப்பொழுதே நீங்கள் தன்னிலை பிழன்று விடுகின்றீர்கள். உண்மையில், அப்பொழுது நீங்கள் என்ன action எடுக்கின்றீர்களோ, அது எல்லாமே உயிர் வாழாமைதான், நீங்கள் அந்த action எடுக்கவில்லை.
Amygdala hijack நடக்காமல் உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள் என்றாலே, சரியான முடிவுகளைப் பொறுமையாக எடுத்துக்கொண்டே சென்றுகொண்டிருப்பீர்கள்.
இப்பொழுது என்னை எதிர்ப்பவர்கள், என் மேல் நடத்திய தாக்குதலில் இருந்து, நான் என்னைக் காப்பாற்றிக்கொள்ளாமல் இல்லை. காப்பாற்றிக்கொண்டேன். Correct-ஆக... சரியான முடிவு எடுத்தேன். ஆனால் ஒரு வினாடிகூட பயத்தால் ஆட்கொள்ளப்படவில்லை. அதனால்தான் சரியான முடிவுகளை, பொறுமையாக பரமஶாந்தத்திலிருந்து எடுக்க முடிகின்றது.
பரமஶாந்தத்திலிருந்து இயங்கத் துவங்குங்கள். பரமஶாந்தத்தில் இருக்கத் துவங்குங்கள். நீங்கள் நினைப்பதை விட, கற்பனை செய்வதைவிட, கோடி மடங்கு சாதிப்பீர்கள். கோடி மடங்கு சாதிப்பீர்கள்.
சூழ்நிலை, நபர்கள், சமூகம்... இந்த எல்லாவற்றைப் பற்றியும், ஆழமான தெளிந்த சுத்த புத்தியினால் அறிந்து கொள்ளப்படுகின்ற இந்த ஸர்வஜ்ஞத்துவம் - பேரறிவு உங்களுக்குள் ஒளிர்ந்துகொண்டே இருக்கும் ஐயா.
தற்புகழ்ச்சியோ, பெருமையோ - இது எதற்காகவும் சொல்லவில்லை ஐயா. உண்மையை, ஸத்யத்தை உள்ளது உள்ளபடி சொல்கின்றேன் ஐயா. இப்பொழுதுகூட ஒரு air craft சம்பந்தமான ஒரு புத்தகத்தை எடுத்து பார்த்தால்கூட, அப்படியே பார்க்கும்பொழுதே அந்த circuit அவ்வளவு தெளிவாகப் புரியும். ஶாஸ்த்ரங்கள், புராணங்கள் அதைப் பற்றி மட்டுமில்லை... எதை எடுத்தாலும், அமைதியாக அந்த பரமஶாந்த நிலையில் இருந்து பார்ப்பேன், படிப்பேன். ஒரு complications, time, அதெல்லாம் ஒன்றும் தேவைப்படாது. அதில் என்ன இருக்கிறதோ, அப்படியே அது புரியும்.
புரிவது மட்டுமல்லாமல், அதை next level-ல் இருந்து எப்படி explain பண்ணலாம் என்பதும் நடக்கும்.
இதற்கு முழுமையான காரணம் ஒன்றே ஒன்றுதான்… பரம ஶாந்த நிலையில், அஜபா ஜபத்தில் இருந்து, உங்களுக்குள் நடப்பதை அப்படியே பாருங்கள். இது உங்களுக்குச் சாத்தியம்.
இதை நான் என் பெருமைக்காக சொல்லவில்லை. உங்களுக்கும் சாத்தியம் என்பதற்காகச் சொல்கின்றேன்.
என்னைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டும் என்பதற்காக, என்னைப் பற்றி நான் பேசவில்லை. என்னைப் பார்த்து நீங்கள் உற்சாகம் அடைய வேண்டும் என்பதற்காகப் பேசுகின்றேன்.
'ஆஹா! இவருக்கு சாத்தியம் என்றால், நமக்கும் சாத்தியம்' என்று நீங்கள் உற்சாகம் அடைவதற்காகத்தான், இந்த ஸத்யங்களைச் சொல்கின்றேன்.
ஆனால் திரும்பவும் அங்கேயும் பார்த்தீர்களானால், அவர்களுடைய amygdala hijack நடந்து, அவர்கள் என்னைப் பார்த்து பயந்து, உடனே வெறுப்பு, கோபம், பொறாமை... இந்த மாதிரி உணர்ச்சிகள் கலந்து 'ஏய்! இந்த ஆள் என்ன... இவரையே கடவுள்னு சொல்லிக்கிறார்…' என்பார்கள்.
ஐயா, நான் கடவுள் என்று நிரூபிக்க நான் வரவில்லை. நான் கடவுள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். 'நீங்கள் கடவுள்' என்று நிரூபிக்க தான் வந்திருக்கின்றேன். அதற்குத்தான் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றேன்.
'நான் கடவுள்' என்று உங்கள் எல்லோரிடமும், யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. நமக்குள் convince ஆகாத ஒன்றைத்தான், மற்றவங்களுக்கு நாம் convince பண்ணி convince பண்ணி, அதன்மூலமாக, மற்றவர்களுடைய கண்களிலே தெரிகின்ற நம்பிக்கையைப் பார்த்து, தன் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
எனக்கு அப்படி கிடையாது, 'நான்' விளைவதற்கு முன்பாகவே பெருமான் 'தானாய்' விளைந்து, தன்மயானுபூதியை, பரமானுபூதியை தானே தந்தான். தானாகவே இருக்கின்றான். அதனால், நான் பேசுவது எல்லாமே, 'இந்த ஸத்யங்கள் உங்களுக்கு உற்சாகத்தை தர வேண்டும்' என்பதற்காகத்தான் பேசுகின்றேன். இதை நீங்களும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பேசிக்கொண்டிருக்கின்றேன்.
அதனால் மீண்டும் சொல்கின்றேன், 'நீங்கள் கடவுள்' என்று நிரூபிப்பதற்காகத்தான், நான் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றேன், இயங்கிக் கொண்டிருக்கின்றேன், பேசிக் கொண்டிருக்கின்றேன், செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன். 'நான் கடவுள்' என்று நிரூபிப்பதற்காக அல்ல.
'நான் கடவுள்' என்பதை, நான் எனக்குத்தான் நிரூபித்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கெல்லாம் நிரூபிக்க வேண்டியது இல்லை. புரிகின்றதா…? நீங்கள், 'நீங்கள் கடவுள்' என்பதை உணருங்கள்.
எப்பொழுது இந்த பரமஶாந்தத்திலிருந்து, பயத்தை உங்களுடைய cognitive interpretation 'பயம்' என்று mis interpret பண்ணுவதற்கு முன்பாகவே, 'excitement'-என்று கண்டுபிடித்துவிடுகின்றீர்களோ, அப்பொழுது நீங்கள் நிரந்தரமான 'நிர்'பயனாக மாறுகிறீர்கள். நிர்பயராக மாறுகிறீர்கள். அது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சுதந்திரம் தெரியுமா ஐயா?
உங்கள் physiology மாறிவிடும், உங்கள் psychology மட்டுமல்ல, உங்களுடைய whole body structure மாறிடும். Physiology மாறிடும்.
இந்த ஒரு விஷயத்தைச் செய்யுங்கள் ஐயா, நேற்று ஒரே ஒரு exercise கொடுத்தேன். இன்று அந்த மாதிரி ஒரு சின்ன exercise கொடுக்கின்றேன். அடுத்த 24 மணி நேரம், நாளை ஸத்ஸங்கத்திற்கு வரும்வரை, Observe the observer. Witness the witness. என்ன பயம் வந்தாலும், அதை 'பயம்' என்று interpret பண்ணாமல், உள்ளுக்குள் என்ன நடக்கின்றது என்று அப்படியே ஶாந்தமாகப் பாருங்கள்.
அந்த நேரத்தில், மெதுவாக உங்களுடைய அஜபா ஜபத்தை கவனியுங்கள். உங்களுடைய ப்ராணன் என்ன ஸப்தத்தை உருவாக்குகிறது? அதாவது ப்ரபஞ்சத்துக்கும் உங்களுக்கும் இருக்கின்ற தொடர்பு உங்களுடைய ப்ராணன்தான். ப்ராண ஓட்டம்தான். அது என்ன ஸப்தத்தை உருவாக்குகிறது? என்று ஶாந்தமாகப் பாருங்கள்.
பார்த்துவிட்டு, observer manifest என்று hashtag போட்டு share பண்ணுங்கள். Share பண்ணி எனக்கு tag பண்ணுங்கள். நேற்று tag பண்ணியிருக்கின்ற பல பேருடைய கேள்விகளுக்கும், அவர்களுடைய experience-க்கும் இனி நான் comment பண்ணுகின்றேன்.
அதேமாதிரி இப்பொழுது ஒரு voting செய்தோம். ‘’Who actually designed your life in 2025? Be brutal.’’ Conscious- ஆக உங்கள் வாழ்க்கையை design பண்ண ஆரம்பியுங்கள். Be your own boss! Be your own Ishwara!
உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் ஈஶ்வரனாக மாறுங்கள். ப்ரபஞ்சத்திற்கே ஈஶ்வரனாகும் அனுபூதி உங்களுக்குள் மலரும்.
மன்னாதனாய் மாறுங்கள், ஜகன்னாதன் ஆவீர்கள். மத் குருவாய் மாறுங்கள், ஜகத்குருவாய் ஆவீர்கள்.
மமாத்மாவைப் பாருங்கள், பரமாத்மாவாய் மாறுங்கள். ஸர்வ பூதாத்மாவாக மாறுவீர்கள்.
உங்களுக்கு நீங்கள் ஈஶ்வரன் ஆனால், மன்னாதன் ஆனால், ஜெகன்னாதன் ஆவீர்கள். உங்களுக்கு நீங்கள் குருவாக, தலைவனாக ஆனால், மத்குருவானால், ஜகத்குரு ஆவீர்கள். உங்கள் ஆன்மாவை, மமாத்மாவை நீங்கள் முழுமையாக உணர்ந்தால், ஸர்வ பூதாத்மாவையும் உணர்வீர்கள்.
உங்களுடைய boss, கம்பெனி, உங்கள் வாழ்க்கையை design பண்ணியது என்று சொல்கின்ற சதவிகிதம் - 23% சோசியல் மீடியா influencers -ம், சோசியல் மீடியாவும் design பண்ணியது என்று சொல்கின்ற சதவிகிதம் - 9% உங்கள் unconscious patterns design பண்ணியது என்று சொல்கின்ற சதவிகிதம் - 28% உங்கள் மூன்று குழுவும் எவ்வளவு தூரம் உங்கள் வாழ்க்கையை வடிவமைத்தது என்று நீங்கள் brutally honest-ஆக இருந்ததற்காக உங்களை வாழ்த்துகின்றேன்.
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, 2026-ஐ re-design பண்ணுங்கள். 2026-ஐ re-design பண்ணி, நீங்களே design பண்ணுங்கள் என்று சொல்லி, உங்களுக்கு என்னுடைய ஆசிகளை வழங்குகின்றேன். Early best wishes.
அடுத்த ஸத்யம், புரிந்துகொள்ளுங்கள்: உண்மையில், உங்களுடைய மூளை இந்த உலகத்தை இருக்கின்ற மாதிரியே உங்களுக்கு உணர்த்துவது இல்லை! There is a huge gap between the reality and what you see.
இப்பொழுது நான் சொல்வது வந்து, ஶாஸ்த்ரங்களிலே சொல்லப்படும் ஸத்யம் மட்டுமல்ல, அறிவியலும் நிரூபிக்கின்ற ஸத்யம்.
ஶாஸ்த்ர ப்ரமாணம், ஆப்த ப்ரமாணம், ஆத்ம ப்ரமாணம், ப்ரத்யக்ஷ ப்ரமாணம் என இந்த நான்கையும் சேர்த்துச் சொல்கின்றேன்.
ஶாஸ்த்ர ப்ரமாணம் என்றால், நம்முடைய மொத்த அறிவின் கருவூலமான வேதாகமம். அதுதான் ஶாஸ்த்ரம். அடுத்தது ஆப்த ப்ரமாணம் - அவிச்சின்ன குரு பரம்பரை. அறுபடாத குரு பரம்பரையில் வந்த ஜ்ஞாநிகள், குருமார்கள், ஆப்தர்கள் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலே இந்த ஶாஸ்த்ர ப்ரமாணத்தை அனுபூதியாக அடைந்து, அவர்கள் வெளிப்படுத்திய ஸத்யங்கள், உண்மைகள். ஆத்ம ப்ரமாணம் - இதையெல்லாம் என்னுடைய வாழ்விலே, நான் அனுபூதியாய் அடைந்த ஸத்யங்கள். ப்ரத்யக்ஷ ப்ரமாணம் - அறிவியல் எல்லோருக்கும் இதை நிரூபித்துக் காட்டுகின்ற ப்ரமாணங்கள்.
மேற்சொன்ன எல்லா ப்ரமாணங்களையும் சேர்த்துதான் உங்களுக்குக் கொடுக்கிறேன். அறிவியல் சொல்வதை, ஸாக்ஷி ப்ரமாணம் என்று சொல்லலாம், ப்ரத்யக்ஷ ப்ரமாணம் என்றும் சொல்லலாம்.
நீங்கள் இதை அனுபூதியில் அடைந்துவிட்டு, நீங்கள் மற்றவங்களுக்குச் சொன்னால், அதை ஸாக்ஷி ப்ரமாணம் என்று சொல்லலாம். நீங்கள் அனுபூதியில அடையவது ஆத்ம ப்ரமாணம். அதை மற்றவங்களுக்குச் சொல்வது ஸாக்ஷி ப்ரமாணம். நீங்கள் அனுபூதியில் அடைந்த பிறகு, அது உங்களுடைய ஆத்ம ப்ரமாணமாகவும் மாறி விடுகின்றது.
இதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: The gap between reality and what you see. முதல் விஷயம், brain இந்த உலகத்தை அப்படியே உங்களுக்குக் காட்டுவது இல்லை. Actually, your brain does not show you the world as it is. It shows you the world as it predicts it to be.
ஶாஸ்த்ரங்கள் சொல்லும், 'யா மா இதி மாயா'. இல்லாததை இருப்பதாக உணர்வது மாயை. இந்த உலகம் மாயை அல்ல. உலகத்தை நீங்கள் எப்படி உணர்கின்றீர்களோ அது மாயை!
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உலகம் மாயை அல்ல. இப்பொழுது 'உலகம் மாயை' என்று மொத்தமாக நெருப்பு வைத்துக் கொளுத்திவிடலாமா? அல்லது atom bomb போட்டு அழித்துவிடலாமா? No! உலகம் மாயை அல்ல. உலகத்தை நீங்கள் எப்படி உணருகின்றீர்களோ - அது மாயை. உங்கள் மூளை உங்களுக்கு உலகத்தை எப்படி காட்டுகின்றதோ - அது மாயை.
அடிப்படையான 2 - 3 விஷயம் சொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுடைய கண் வந்து வீடியோ ரெக்கார்டர் கிடையாது. அது reality-ஐ அப்படியே live stream பண்ணுவது கிடையாது. இப்பொழுது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்ற என் ஸத்ஸங்கத்தைக்கூட, snap shot-ஆக எடுக்கின்றீர்கள். உங்க கண் வந்து கேமரா மாதிரி. உங்கள் கண் வந்து வீடியோ ரெக்கார்டர் கிடையாது. It is a still camera. இது snap shot எடுத்து, எடுத்து, எடுத்து, three to four rapid clicks per second எடுத்து, எடுத்து, எடுத்து - அதையெல்லாம் connect பண்ணுகின்றது.
அதே மாதிரி உங்கள் காதும், continuous audio recorder கிடையாது. Snap shot மாதிரி ஒரு audio voice clip - clip - clip - clip- ஆக எடுத்து, எடுத்து, எடுத்து, அதனால் எடுக்கப்படுகின்ற photos-ம், எடுக்கப்படுகின்ற voice clips-ம் சேர்ந்து stitch பண்ணப்பட்டு, ஒரு smooth movie-யாக, உங்கள் brain காட்டுகிறது.
பிரச்சினை என்னவென்றால், இந்த photos - ஐ stitch பண்ணி brain வந்து smooth movie-யாக காட்டும்பொழுது, உங்களுக்கு உள்ளே இருக்கின்ற cognition சும்மா இல்லாமல், குறுக்கில் புகுந்து நிறைய interpretations கொடுத்து, reality-யாக இல்லாத ஒன்றை உங்களை perceive பண்ண வைக்க ஆரம்பிக்கின்றது.
உள்ளுக்குள் பரம ஶாந்தத்தில் இருந்தீர்களானால், reality-ஐ அப்படியே perceive பண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் அப்படி இல்லை. உள்ளுக்குள் நிறைய கொந்தளிப்பு நடந்துகொண்டிருக்கின்றது. அப்பொழுது என்ன ஆகிறது என்றால், இந்த photos எல்லாம் எடுத்து stitch பண்ணி, இந்த audio clips எல்லாம் எடுத்து stitch பண்ணி, அந்த reality-ஐ நீங்கள் cognize பண்ணுவதற்குள்ளாகவே, நீங்கள் என்னென்னவோ செய்து முடித்துவிடுகின்றீர்கள். அதை interpret பண்ணி, அதற்கு react பண்ணி, சகலத்தையும் செய்து முடித்துவிடுகின்றீர்கள்.
அதனால், ஸத்யத்தை நீங்கள் அப்படியே பார்ப்பதில்லை. மூளையால் highlight பண்ணப்பட்ட, உங்கள் brain highlight பண்ணிய, உங்கள் brain-னும் mind-ம் சேர்ந்து highlight பண்ணிய சில விஷயங்களைத் தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்.
Every second, your vision blacks out for about 50 milliseconds during this micro-movements called saccades. Saccades என்று சொல்கின்றார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இது என்னவென்றால், இது மொத்தமாக பார்த்தீர்களானால், almost ஒரு 24 hours-க்கு, 2 hours-க்கு இது ஒரு rough -ஆன blindness. Saccades என்று சொல்வது.
உங்களுடைய brain வந்து, இந்த gap-ஐ hide பண்ணி, தன்னுடைய clever ஆன guess work மூலமாக fill பண்ணி, reality-ஐ நீங்கள் அப்படியே பார்க்கின்ற மாதிரி காட்டுகின்றது.
ஆயுர்வேதம் ரொம்ப தெளிவாக இதைத் தெளிவாகச் சொல்கின்றது. 'நிமிஷ உன்மேஷா' என்ற ஒரு concept ஆயுர்வேதம் சொல்கின்றது,
இந்த rapid eye movement, blinking, opening, இந்த rapid eye movements -ஐ நேத்ர விக்ஷேபா என்று சொல்கின்றது. இது controlled by the varma, eyelid and வ்யான வாயு. இதைப் பற்றி ரொம்பத் தெளிவாக ஆயுர்வேதம் விளக்குகின்றது.
Chakshus does not see. Chakshu does not see. ஸக்ஷு இந்த்ரியம் இயங்குவதில்லை. ஆனால் மனம் அந்த gapள-ஐ fill பண்ணுகின்றது.
ஆயுர்வேதம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸத்யங்களை ரொம்பத் தெளிவாக விளக்கியிருக்கின்றது.
நம் Ask Nithyananda AI-ல் ஒரு ஆயுர்வேத மாடல் பண்ணியிருக்கின்றோம். யாருக்காவது இந்த physiology பற்றி, life-ஐ பற்றி interest இருந்தது என்றால், அந்த AI மாடலை போய் explore பண்ணிப் பாருங்கள். Especially doctors explore explore செய்தீர்களானால், நம்முடைய பாரம்பரியத்தினுடைய அறிவின் மாட்சிமையும், மீட்சிமையும் புரியும்.
ஒரு நல்ல வைத்யராக இருப்பதற்கு, பல இடங்களில் அது உங்களுக்கு உபயோகமாகும். நல்ல businessmen- ஆக இருப்பதற்கு உபயோகமாகாது. ஆனால் நல்ல வைத்யராக இருப்பதற்கு உபயோகமாகும். Successful-ஆன வைத்யராக, healer-ராக இருப்பதற்கு ஆயுர்வேதம் மிகப்பெரிய உபயோகமாகும்.
ஸக்ஷு function ஆகாத இடங்களில் எல்லாம், மனம் அந்த gap -ஐ fill பண்ணுகின்றது என்றும், Mirroring…. how the netra is just a tool, not true awareness. இந்த நேத்ரம் வந்து just a tool, not awareness என்பதும் புரிந்தது என்றால், பல ஸத்யங்கள் புரியும்.
இன்னொன்றைப் புரிந்துகொள்ளுங்கள், இந்த புரிதலும் உங்களுக்கு வேண்டும்... நீங்கள் present -ஐ பார்ப்பதே இல்i.
The light hits your eyes, sound reaches your ears, touch touches your skin, all at different times. Brain edits the delay, sinking them into a fake now, what you call as this moment which is already a history.
இது வந்து எப்பொழுதுமே ஒரு half -second old re-run of reality is only projected as LIVE. இப்பொழுது நீங்கள் பார்க்கின்ற இந்த Live வீடியோ மட்டுமல்ல, இந்த Live எப்படி… There is a lag-கோ அதேமாதிரி reality-யை நீங்கள் lag-கோடு தான் பார்க்கின்றீர்கள். அதுதான் உண்மை, அதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், இந்த lag-கோடு பார்க்கும்போது, அதற்கு நடுவில் full editing உள்ளுக்குள் நடந்துவிடுகின்றது. Different interpretation, background music ... சகலமும் உள்ளுக்குள் நடந்துவிடுகின்றது.
நீங்கள் உண்மையை பார்க்கவில்லை, உங்கள் மனம் உருவாக்கிய highlight reel தான் உங்கள் பார்வை.
ஒவ்வொரு வினாடியிலும் saccade என்று சொல்கின்ற இந்த நுண்ணிய கண் அசைவுகளின்போது, 50 மில்லி வினாடிகள் உங்கள் பார்வை முழுமையாக இருட்டாகி, அதை உங்கள் மனம், அந்த gap -ஐ fill பண்ணி, interpret பண்ணி - அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
இதெல்லாம் கொஞ்சம் ஆழ்ந்து பரமஶாந்தத்தோடு witnessing the witness, consciousness-உடன் observe பண்ண ஆரம்பித்தீர்களானால், உங்களுடைய வாழ்க்கையிலே நீங்கள் இயங்கும் விதம் முழுமையான ஜ்ஞாநத்திலிருந்து நிகழும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... தெளிவிலிருந்து நிகழும். நீங்கள் ஸர்வஜ்ஞத்துவத்தில் ஸ்பாவத்தாலேயே establish ஆகிவிடுவீர்கள்.
உங்களுடைய தனி அறிவும் - ப்ரபஞ்சதின் அறிவும், முழுமையாக இணைக்கப்பட்டிருக்கின்றது. உங்களுடைய தனி அறிவும் - ப்ரபஞ்சத்தின் அறிவும், முழுமையாக இணைக்கப்பட்டிருக்கின்றது. ப்ரத்யகாத்ம சைதன்யத்தின் ப்ரஜ்ஞாநமும் - ப்ரபஞ்சத்தின் ப்ரஜ்ஞாநமும், முழுமையாக ஒன்றொடொன்று நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கின்றது.
Agitate ஆகும்பொழுது, நீங்கள் உங்களுடைய மேம்போக்கான மனத்திலிருந்து react பண்ணுகின்றீர்கள். 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்த பழமொழி முழுக்க முழுக்க ஸத்யம்.
உங்களுக்குள் என்ன நடக்கின்றதோ, ஆழ்ந்து அதை பாருங்கள். உடல், மனம் - இதற்குள் நடக்கின்ற various மாற்றங்கள்... ஜீரணம், ரத்த ஓட்டம், ஸ்வாஸ ஓட்டம், எப்படி மனமும் உடலும் ஒன்றோடொன்று இணைந்து வேலை செய்கின்றது? எப்படி ஜ்ஞாநேந்த்ரியம் செய்திகளை உள்கொண்டு வந்து, உள்ளுக்குள் அதை process பண்ணுகின்றது? நீங்கள் செய்ய வேண்டிய செயலைப் பற்றிய command எப்படி generate ஆகின்றது? எப்படி அதை கர்மேந்திரியம் எப்படி execute பண்ணுகின்றது, செயல்படுத்த ஆரம்பிக்கின்றது?
ஈஶாவாஸ்ய உபநிஷதம் ரொம்ப அழகாகச் சொல்கின்றது..
पूषन्नेकर्षे यम सूर्य प्राजापत्य व्यूह रश्मीन् समूह । तेजो यत् ते रूपं कल्याणतमं तत्ते पश्यामियोऽसावसौ पुरुषः सोऽहमस्मि ॥16॥
பூஷன்னேகர்ஷே யம ஸுர் ய ப்ராஜாபத்ய வியூஹ ரஶ்மீன் ஸமூ: I தேஜோ யத் தே ரூபம் கல்யாணதமம் தத்தே பஶ்யாமியோஸாவசௌ புருஷ: ஸோஹமஸ்மி II 16 II - இது ஒரு அழகான ஸுத்ரம் ஐயா. ஓ சூரியனே, தனக்கே பயணிக்கின்ற ஒருவன், கட்டுப்பாட்டாளர் ப்ரஜாபதியின் பிள்ளை, உன் கதிர்களை ஒன்றாகச் சேர்த்து உன் ஒளியை இழுத்து எடு, உன் மிகவும் கிருபையான வடிவத்தை நான் காண விரும்புகிறேன், அங்கு இருப்பவர் தான் புருஷன், அவர்தான் நான். ஸோஹமஸ்மி.
உள்ளுக்குள்ளேயும் வெளியிலேயும் நடப்பது என்னவென்று பரமஶாந்தத்தில் இருந்து பார்த்தால், வெளியில் ப்ரபஞ்சமாக விரிந்திருக்கும் எல்லாவற்றிற்குள்ளும் நிறைந்திருக்கும் புருஷனைக் காண்பீர்கள், அந்த புருஷன் நீங்கள்தான் என்று உணருவீர்கள்.
இதைத்தான் ஈஶாவாஸ்ய உபநிஷத் ரொம்ப அழகா சொல்லுது. பூஷன்னேகர்ஷே யம ஸுர் ய ப்ராஜாபத்ய வியூஹ ரஶ்மீன் ஸமூ: I தேஜோ யத் தே ரூபம் கல்யாணதமம் தத்தே பஶ்யாமியோஸாவசௌ புருஷ: ஸோஹமஸ்மி II 16 II
சூரியனைப் பார்த்து நாம் சொல்லுவதுபோன்று வருகின்ற ஸ்லோகம்… உனக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கின்ற புருஷன் ஒருவனே, அது நானே.
ரொம்ப simple, காலையில் எழுந்ததும் உங்களுக்கு உள்ளேயும் வெளியிலேயும் நடப்பது, எல்லாவற்றையும் எந்த பேரும் சொல்லாமல், எந்த brand-ம் பண்ணாமல், எந்த வார்த்தைகளையும் விடாமல், உள்ளுக்குள் இருந்து பரமஶாந்தமாக அப்படியே பாருங்கள்.
Cognitive interpretations நடக்காமல், பரமஶாந்த நிலையிலிருந்து பாருங்கள். ஸாக்ஷியாக, பரம ஸாக்ஷியாக இருந்து பாருங்கள். பார்த்தாலே புரியும்... உங்களுக்குள்ளிருந்து தான் இது எல்லாமே தோன்றுகிறது. உங்களுக்குள்ளிருந்து தான் இது எல்லாமே இயங்குகிறது.
நீங்கள்தான் அனைத்தையும் உருவாக்குகின்றீர்கள், பார்க்கின்றீர்கள், அனுபவிக்கின்றீர்கள். அனுபவம், அனுபவிக்கப்படும் பொருள், அனுபவிப்பவன் - இந்த மூன்றும்... experiencer, experienced, experiences - இந்த மூன்றும் ஒன்றே எனும் சுத்த ஸத்யம் அனுபூதியாய் மலரும்.
சற்றே நிமிர்ந்து அமருங்கள், ஒரு 2 – 3 நிமிடம் பொறுமையாக உட்காருங்கள். உட்கார்ந்து scroll பண்ணுவதை விட்டுட்டு, அங்கு சுத்தி - இங்கு சுத்தி என்ன நடக்கின்றது என்று பார்ப்பதை விட்டுவிட்டு, ஆழ்ந்த பொறுமையோடு அமருங்கள். ஏற்கனவே நீங்கள் ஆத்மலிங்கம் வாங்கி இருந்தீர்களானால், ஆத்மலிங்க தீக்ஷை பெற்றிருந்தால், உங்கள் ஆத்மலிங்கத்தை கையில் எடுத்து நமஸ்கார முத்திரையில் வைத்துக் கொண்டு, பொறுமையாக உட்காருங்கள்.
உட்கார்ந்து, உங்களுக்கு உள்ளும் வெளியிலும் நடப்பவற்றை, உங்கள் உயிரின் இருப்பை, அதன் இயக்கத்தை, அது உடலுக்குள்ளும் மனதிற்குள்ளும் என்னவெல்லாம் செய்கிறது என்பதை ஶாந்தமாக பாருங்கள்.
கண்களை மூடி நிமிர்ந்து அமர்ந்து, பரமஶாந்தத்தோடு பாருங்கள். எதையும் interpret பண்ணாமல், judge பண்ணாமல் பரமஶாந்தத்தோடு பாருங்கள் .
ஸோஹமஸ்மி. ஸோஹமஸ்மி. ஆழ்ந்து உங்களுக்கு உள்ளும் - வெளியும் நிகழ்வனவற்றை ஸாக்ஷியாகப் பாருங்கள். பயம் இல்லாத, ஆழ்ந்த பொறுமையோடு, ஸாக்ஷியாகப் பாருங்கள்.
நிஜமான நீங்கள் 'தேடி' அடையப்பட வேண்டியதில்லை. Just நீங்கள் உங்களை remember பண்ணி, விழித்துக்கொள்ள வேண்டும்... அவ்வளவுதான்.
நீங்கள் உங்களைத் 'தேட' வேண்டியதில்லை. நீங்கள் 'யாராக இருக்கின்றீர்கள்' என்று விழித்துக்கொள்ளுள், அது போதுமானது. உங்களை நினைவுபடுத்திக்கொண்டு... You just have to remember you.
நீங்கள் எதுவாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறீர்களோ, அதைவிட நீங்கள் அதிகமானவர். அதை தாண்டியவர் என்று எப்போதும் உங்களுக்குத் தெரியும்.
இந்த ஆசை, அச்சம், சுகம் என்பனவற்றிற்கெல்லாம்… உலகத்தாலே இழுத்தடிக்கப்படுகின்ற உங்கள் பெயர், உடல் போன்றவைகளுக்கெல்லாம்.... இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு நீங்கள் இருக்கின்றீர்கள் என்பது எப்போதும் உங்களுக்குத் தெரியும்.
உங்களுக்குள் இருக்கின்ற ஏதோ ஒன்று பரந்ததும், விரிந்ததும், மிகவும் பழமையானதும், ஒளி வடிவமாய், அறிவே வடிவமாய், முழுமையானதும், தெளிவானதுமாய் இருக்கின்றது. அதனுடைய ஒளி எப்போதும் உங்கள் மீது பட்டுக்கொண்டே இருக்கின்றது.
The quantum you is not something you find... It is something you remember. You have always known you were more than conditioning. More than anxieties wrapped in a name and body. Something within you is vast, ancient, luminous, eternal, conscious. That subtle glow behind your thoughts, stillness that is fullness. Poorna is not shoonya You are the ocean in a drop.
நன்றாக புரிந்துகொள்ளுங்கள். You are not a drop in the ocean. You are a ocean inside a drop.
நீங்கள் கடலின் ஒரு துளி அல்ல, ஒரு துளிக்குள் இருக்கும் கடல். நீங்கள் கடலில் இருக்கும் ஒரு துளி அல்ல, ஒரு துளிக்குள் இருக்கும் கடல்.
The quantum you acts from inspiration, not desperation. It speaks from clarity, not fear. Moves with trust, not hesitation. Be quantum you.
நிஜ நீயாக நிலைபெற்றிருங்கள். ஸோஹமஸ்மி. ஸோஹமஸ்மி. ஸோஹமஸ்மி.
அடுத்தது, உங்களுடைய கேள்விகள், சமூக வலைதளங்களில் இந்தsentiment analysis என்று பல பேருடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற comments, கேள்விகள், நீங்கள் tag பண்ணியிருக்கின்ற... இவைகளுக்கான சில விளக்கத்தை, விடைகளை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன். ஆழ்ந்து கேளுங்கள். நிறைய உங்களுடைய comments, questions இதையெல்லாம், collect பண்ணி எனக்கு இங்கு present பண்ணியிருக்கின்றார்கள்.
பலபேர் கேட்டிருக்கின்றீர்கள், 'ஸ்வாமிஜி நீங்கள் சொல்கின்ற இந்த ஆன்மீக ஜ்ஞாநம் மிக மிக மிக உயர்ந்ததாகவும், வாழ்க்கையில் நேரடியாக உபயோகமாவதாகவும் இருக்கின்றது. ஆனால் நீங்கள் இந்த ஸனாதன ஹிந்து தர்மம் பற்றி மீண்டும் மீண்டும் சொல்வதும், இந்த hindu life style, அதை promote பண்ணுவதும், especially இந்த hindu civilization-னுடைய social spiritual capital இதைப் பற்றி பேசியது, இதையெல்லாம் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?' என்று கேட்டிருக்கின்றார்கள்.
நிறையபேர் அதைத்தான் point பண்ணி கேள்வி கேட்டிருக்கின்றீர்கள். ஐயா, ஒரு நான்கு - ஐந்து விஷயம் நான் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா. Pre-bronze age civilization மொத்தம் 49. அதில் இன்னமும் survive ஆகிக்கொண்டிருக்கின்ற ஒரே civilization நாம் மட்டும்தான்.
உலகின் மூத்த, அறுபடாத, இன்றும் உயிரோடு இருக்கின்ற civilization, hindu civilization மட்டும்தான், வேற எதுவும் கிடையாது. Pre-bronze age civilization 49 -ல், 48 out. அறுபடாத, ஸநாதனமாக இருக்கக்கூடிய ஒரே civilization, hindu civilization தான். இது time time tested, fool-proof methods ஐயா.
முக்கியமாகப் புரிந்துகொள்ளுங்கள்: நம்முடைய visionaries, முன்னோர்கள்… மிக மிக மிக பேரறிவும், பெரும் கருணையும், அளப்பரிய அன்பும் உடையவர்கள் என்பதனால், time test பண்ணி, மீண்டும் மீண்டும் மீண்டும் fool proof -ஆன principles, concepts, ideas-தான் நம்முடைய hindu civilization வாழ்க்கைமுறையாக வகுத்து வைத்திருக்கின்றார்கள்.
ஒரு ஐந்து, ஆறு points உங்களுக்கு நான் சொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள். நான் promote பண்ணுகின்ற இந்த joint family system, large tight-knit joint families... நம் hindu traditional life style ஐயா, government-க்கு 20 - 30 lakh crore annual-லாக save பண்ணுகின்றது ஐயா. காரணம் என்னவென்றால், US -ல் எல்லாம் பார்த்தீர்களானால், இந்த western civilization எல்லாமே பார்த்தீர்களானால், high conception nuclear family model மாடல். ஆனால் hindu traditional life style அப்படி கிடையாது.
உதாரணத்திற்கு ஒன்று சொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள்:
இந்த house hold size, இந்தியாவில் பார்த்தீர்களானால் 4.9% per house hold.. US -ல் 2.5% Per house. இந்த ஒரே ஒரு விஷயமே ஐயா, 8 to 10 lakh crore saves annually by avoiding 51 to 130 million extra houses we need.
இப்பொழுது, US-ல் life style-க்கு வேக வேகமாய் நகர்ந்து, நம்முடைய இந்த large joint family system--த்தை சிதைத்துக்கொண்டே போகின்றோம். அதாவது, nuclear family system-த்தை ஸ்வதந்த்ரம் என்று promote பண்ணி, அது nuclear-ஆக உடைந்து உடைந்து உடைந்து, அதில் உணர்வுரீதியாக, conscious ரீதியாக மக்கள் படுகின்ற கஷ்டங்கள் எல்லாம் ஒரு பக்கம்போக, economical-லாகவே அதன் impact-ஐ புரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் அழித்ததெல்லாம் போக, மிச்சம் இன்னும் இருக்கின்ற இந்த joint family system, அதுவே நம் இந்தியாவில்… இந்தியா என்றால், hindu civilization. House hold-னுடைய size 4.9 per person இது நேபாள், ஸ்ரீலங்கா, மலேசியா என எல்லாவற்றுக்குமே பொருந்தும். அதுபோன்று hindus இருக்கின்ற எல்லா இடத்திற்கும் பொருந்தும். இந்தியா என்ற வார்த்தையை நான் உபயோகப்படுத்துவதைவிட, hindu civilization என்ற வார்த்தைதான் சரியாக உபயோகிப்பேன். அதுதான் right. ஏனென்றால், அமெரிக்காவில்கூட சரி குஜராத்தி settlement, hindu settlement எங்கெங்கெல்லாம் இருக்கின்றதோ, அங்கெல்லாம் சென்று பார்த்தீர்களானால், survey பண்ணீர்களானால், hindus-னாலே pநச hழரளந 4.9 pநசளழளெ pநச hழரளந hழடன . ஆனால் US -ல் 2.5 persons. This alone saves 8 to 10 lakh crore annually by avoiding 51 to 130 million extra houses .
அதேமாதிரி, அடுத்து இந்த meat Consumption. மாமிசம்… நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்தியாவில் meat consumption -ஐ normalize ஆக்கிக்கொண்டே செல்கின்றீர்கள். அதுவே தவறு!
ஆனால் இப்பொழுது இருக்கின்ற statistics சொல்கின்றேன். இவ்வளவு அழிந்தும் மிச்சம் இருக்கிறது. இந்தியாவில் meat consumption 3.1 kg per person per year. US ல் 109 kg.
இந்தியாவில் meat consumption per person-க்கு 3.1 kg per person per year. US-ல் 109 kg It saves 2 to 3 Lakh Crore by preventing six times land demand and 3 to 4 Trillion import Costs.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நான் சொல்வதெல்லாம் statistics.
Per Capita இந்தியாவினுடைய Agricultural land இந்தியாவில் 0.1% US-ல் 1.2% ஹெக்டேர். இந்தியாவில் .113% ஹெக்டேர் தான். .13 ஹெக்டேர். US-ல் 1.27 ஹெக்டேர். This saves 2 Lakh Crore subsidies... Food Security, இந் த Cereal dominant diets இது மூலமாக save பண்ணுகின்றது.
வேக வேகமாக இந்த joint family system-த்தை அழித்து, nuclear family-யாக மாற்றுவது, social-லாக மாற்றுவது மட்டுமல்லாமல், legal-ஆகவும் அது மாதிரியான இந்த nuclear family-க்கு support பண்ணுகின்ற மாதிரியான சட்டங்களை உருவாக்கி, இந்த western life style அதை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால், அது நாட்டினுடைய பொருளாதாரத்தின் மீது எவ்வளவு பெரிய பாரமாகப் போகின்றது என்று புரிந்துகொள்ளாமல் போய்க்கொண்டிருக்கின்றோம். அதை நம்மால் handle பண்ண முடியாது.
அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய பாரமான ஒரு நாட்டை, சமூகத்தை, பொருளாதாரச் சூழ்நிலையை நாம் விட்டுச் செல்கின்றோம் என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.
ஸநாதன ஹிந்து தர்மத்தை அழித்தீர்களானால், நம்முடைய life style, நம்முடைய principle, நம்முடைய வாழ்க்கைமுறை, நம்முடைய உணவுமுறை… இதெல்லாம் இதே வேகத்தில் அழித்தீர்களாளால், அடுத்த தலைமுறைக்கு மிகக் கொடுமையான நாட்டை, வாழ்வதற்கு சாத்தியமில்லாதப் பொருளாதாரச் சூழ்நிலையை, நாட்டை, சமூகச் சூழலை நாம் விட்டுச் செல்கிறோம் என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.
கொஞ்சம் விழித்துக்கொண்டு, ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய life style-ஆன joint family system, vegetarian life style…. ஒருவேளை nov-veg சாப்பிட்டால்கூட… It is very strictly regularized. It is not normalized. Nov-vegetarian food ek Kila normal food கிடையாது.
அது strictly regularized. குலதெய்வங்கள்… எந்த குலதெய்வங்களுக்கு பலியிடும் வழக்கம், மிருகப் பலியிடும் வழக்கம் இருக்கின்றதோ, அந்த குலதெய்வத்திற்கு பலியிட்டு, அதை சமைத்து, அந்தப் ப்ரஸாதத்தை மட்டும் உண்பது வழக்கம். அப்பொழுது மட்டும்தான் nov-veg allowed, meat allowed.. மற்ற timeஇ meat கிடையாது. இந்த life style-ஐ எல்லாம் சிதைத்துகொண்டே சென்றீர்களானால், நீங்கள் நாட்டிற்கு பாரம். சமூகத்திற்கு பாரம்.
நாம் வேக வேகமாக, as a nation , ஒரு நாடாக, ஸநாதன ஹிந்து தர்மத்தின் வாழ்க்கை முறைகளை சீரழிக்கின்ற சட்டங்களை இயற்றுவதன் மூலமாக, சமூகத்திலே ஸநாதன ஹிந்து தர்மத்தின் வாழ்க்கையை அழிக்கின்ற விதத்திலே செயல்படுவதன் மூலமாக, நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கின்றோம். நாட்டின் வாழ்க்கையை, சமூக கட்டமைப்பை, சமூக நீதியை, சமூக சமநிலையை சீரழிக்கின்றோம். அதைப் புரிந்துகொள்ளுங்கள்.
Pension overload, public dept – ஒவ்வொன்றையும் எடுத்துப் பாருங்கள். Pரடிடiஉ னநிவ - இந்தியாவின் 85% of the GDP US-ல் 125%.
ஏனென்றால், we save 5 to 7 lakh crore yearly interest servicing due to family pooling and low borrowing. ஏனென்றால் இது நம் life style.
'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று எதற்கும் கலங்காத இலங்கை வேந்தனுடைய கலக்கத்தை, கடன்பட்டார் நெஞ்சோடு ஒப்பிட்டு கம்பன் சொல்கின்ற மாதிரி, நம்முடைய life style வந்து கடனை அவ்வளவு பெரிய social taboo -வாக வைத்திருந்தோம் ஐயா.
EMI-ஐ normalize பண்ணிவிட்டு, வேக வேகமாக western civilization -னை மாதிரியே EMI life style-ஐ நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றோம். EMI என்றால் என்ன? present-ல் உங்களுக்குத் தேவையில்லாதப் பொருட்களை வாங்கி, உங்களுக்குப் பிடிக்காதவர்களை impress பண்ணுவதற்கு முயற்சி பண்ணி, அவர்களுடைய பொறாமையை சம்பாதித்துகொண்டு, அதற்கு அந்த பணத்திறகான அந்த loan-ஐ, உங்கள் future--ஐ விற்றுக் கட்டிககொண்டிருக்கின்றீர்கள்.
தேவையில்லாத loan-ஐ வாங்கி, தேவையில்லாதப் பொருட்களை வாங்கி, உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத எதிரிகளை, ஆட்களை impress பண்ண முயற்சி செய்து… அவன் ஒன்னும் impress ஆகப் போவதில்லை. அவன் வயிறு எரிந்து அவன் இன்னும் வேறு ஏதாவதுதான் உங்களுக்குப் பின்னாடி சதி செய்துகொண்டிருப்பான். இந்த சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டு, பிறகு வாங்கிய loan-னுக்கு வட்டி கட்டிக்கொண்டு.. நம் தமிழில் அழகான ஒரு பழமொழி சொல்வார்கள்.... வட்டிக்கு கடன் வாங்கி அட்டிகை செஞ்சு, கடைசியில் அட்டிகையை வித்து வட்டி கட்டின கதையாக… அப்படித்தான் நம்முடைய பெரும்பாலானவருடைய வாழ்க்கை கழிகின்றது.
இன்னும் நிறைய ஸத்யங்கள், ஸநாதன ஹிந்து தர்ம வாழ்க்கைமுறையின் முக்கியத்துவத்தைப் பற்றி, அதனுடைய social - economical impact பற்றி, இன்னும் நிறைய ஸத்யங்கள் வைத்திருக்கின்றேன். அடுத்தடுத்த ஸத்ஸங்கங்களிலே அவைகளைக் காண்போம்.
இப்பொழுது, ப்ரஹ்மோத்ஸவத்தின் ஐந்தாம் நாள் உத்ஸவமும், பூஜைகளும் நிகழவிருக்கின்றன. உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாயத்தின் எல்லா ஆலயங்களிலும் பூஜைகளும், உத்ஸவங்களும் நிகழுகின்றன.
அனைவரும் இருந்து கலந்துகொண்டு, பார்த்து, இறையருள் பெற்று பரமஶிவப் பரம்பொருளின் பேரருள் பெற்று, குருவருள் பெற்று ஆனந்தம் அடையுங்கள்.
எல்லோரும் நித்யானந்தத்தில் நிலைத்து, பரமாத்வைதத்தில் நிலைத்து, பரமாத்வைதம் அடைந்து, பரமானந்தத்தில் இருந்து, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன்.
ஆனந்தமாக இருங்கள்.
Event Photos
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
![]() |
![]() |













