02 அக்டோபர் 2006 குருகுலம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

குருகுலம் (Gurukul)

வருடம்  : 2006

நாள் : 02 அக்டோபர் 2006

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : குருகுலம்

வகுப்பின் பெயர் : குருகுலம் துவக்கம்- தீட்சை

பாடத்தின் பெயர் : வித்யார்த்தி ஹோமம் - காயத்ரி தீட்சை

நடைபெற்ற இடம் : ஆதி கைலாஸா - நித்யானந்தபீடம், பெங்களூர் ஆதீனம், பிடதி, பெங்களூர், கர்நாடகம்

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்தபீடம், பெங்களூரு.

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பங்குகொண்டவர் விபரக்குறிப்பு : 26 மாணவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 26 மாணவர்கள் மற்றும் ஆதீனவாசிகள்

நிகழ்வின் விவரனை : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் 2006 ஆம் வருடம் அக்டோபர் 02 நாளன்று ஆதி கைலாஸாவில் நித்யானந்த குருகுலத்தை துவங்கி வைத்தார். விஜயதசமி நன்னாளன்று 26 குழந்தைகளுக்கு வித்யார்த்தி ஹோமம் செய்து காயத்ரி தீட்சை அளித்தார்.

பகவான் அவர்கள் திருவண்ணாமலையில் தமக்கு எத்தகைய ஞான சூழல் கிட்டியதோ, அதே சூழலியல் எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க இந்த நித்யானந்த குருகுலத்தை துவக்கி வைத்தார்.

நித்யானந்தா குருகுலம்-அறிமுக உரை

குருகுலம்


Gurukul-Inaguration - 1.jpg Gurukul-Inaguration - 2.jpg Gurukul-Inaguration - 8.jpg Gurukul-Inaguration - 4.jpg Gurukul-Inaguration - 5.jpg Gurukul-Inaguration - 6.jpg Gurukul-Inaguration - 7.jpg Gurukul-Inaguration - 8.jpg



குருகுலம், வித்யாலயா_சாஸ்திர பிரமாணம்

குரு - சிஷ்ய உறவே உன்னதத்திலும் உன்னதமானது. வேத பாரம்பரியத்தில் குருவானவர் சீடர்கள் மீது வைத்திருக்கும் கருணையால் சீடர்களின் அறியாமையை அகற்றுகிறார். சீடரானவர் குருவை தம் கடவுளாக வழிப்படுகிறார்.

மஹாபாரத போர்களத்தில் தன்னிலை இழந்து தடுமாறும் சீடனான அர்ஜூனனுக்கு பகவான் ஶீ கிருஷ்ணர் குருவாய் வழிகாட்டி உபதேசம் செய்த ஸ்லோகங்களே பகவத்கீதையாக வழிப்படப்படுகிறது. அது உன்னதமான குரு சிஷ்ய உறவை வெளிப்படுத்துகிறது.

பகவான் சொல்கிறார்... தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்|

ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே || 10.10

யார் என்னோடு எப்போதும் அன்பால் இணைந்து இருக்கிறார்களோ, அவர்களுக்கு ஞானத்தை அளிக்கிறேன். அதன்மூலம் அவர்கள் என்னை வந்தடைகிறார்கள்.

தேஷாமேவாநுகம்பார்தமஹமஜ்ஞாநஜம் தம: |

நாஶயாம் யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா || 10.11

அவர்களிடம் நான் வைத்திருக்கும் கருணையினால், அவர்களுடைய அறியாமையிலிருந்து தோன்றிய இருளை மெய்யுணர்வு என்ற ஞான ஒளியால் அழித்துவிடுவேன்.

நமது பாரம்பரியத்தில் குருவானவர் சீடருக்கு போர்களத்திலும், மிகவும் இக்கட்டாண சூழ்நிலைகளிலும் பரம சத்தியங்களையே உபதேசம் செய்கிறார். அனைத்திற்கும் தீர்வாக பரம ஞானத்தையே அருள்கின்றார்.

அர்ஜூனர், தம் அன்பின் வெளிப்பாடாக இவ்வாறு சொல்கிறார்...

அர்ஜூந உவாச பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந் |

புருஷம் ஶாஶ்வதம் திவ்யமாதி தேவமஜம் விபும் || 10.12

நீரே மேலான ஸத்யம், மேலான புகலிடம், மேலான புனிதம், ஆதியானவர், நிலையானவர், மேலான மஹிமைகள் கொண்ட கடவுள்.

- பகவத்கீதை ( விபூதி யோகம் -10.11, 10.12, 10.13)

இத்தகைய அன்பான குரு சிஷ்ய உறவுமுறை சனாதன தர்மத்தில்தான் சாத்தியம். சனாதன இந்து தர்மத்தில் மட்டுமே உள்ள குருகுலமுறையில் ஞானகுருவின் நேரடி சாந்நித்யத்தில் மாணவர்கள் தங்கியிருந்து கல்வியை பயில்வார்கள். சிறுவயதிலிருந்து குருவுடன் தங்கியிருந்து, அவரின் நேரடி வழிகாட்டுதலின்படி 64 வித்யைகளிலும் தேர்ச்சி பெறுவார்கள். இந்த ஞானத்தின் அறிவியலானது குருவின் உயிர்ப்பதிவிலிருந்து (Bio Memory) மாணவர்களுக்கு தீட்சை மூலம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. கல்வி என்பது அனுபவமாக கற்றுணர்வதே. இதுவே இந்து பாரம்பரிய முறையான குருகுல கல்வி முறையாகும். தங்களை வழிநடத்துங்கள் என்று வேண்டும் குழந்தைகளுக்கு ஞான ஒளியை தந்து குருவே நேரடியாக வழிகாட்டுகிறார்.

அஸதோ மா ஸத்கமய | தமஸோ மா ஜ்யோதிர்கமய | ம்ருத்யோர்மா அம்ருதம் கமய | ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||

அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு எங்களை வழிநடத்தி செல்லுங்கள். அஞ்ஞான இருளிலிருந்து தூய்மையான ஞான ஒளியை நோக்கி எங்களை எடுத்துச் செல்லுங்கள். மரணத்திலிருந்து நிரந்தர வாழ்வான அமரத்துவத்திற்கு எங்களை எடுத்துச் செல்லுங்கள். எங்கும் அமைதி நிலவட்டும், அமைதி நிலவட்டும், அமைதி நிலவட்டும்.

- ப்ருஹதாரண்யக உபநிடதம் (1.3.28)

குருவின் அருளால் குருகுல குழந்தைகள் தெய்வீக சக்திகளை வெளிப்படுத்தும் ஆன்மிக மேதைகளாகவும், சாதனையாளர்களாகவும், உலகத் தலைவர்களாகவும் வெளிவருகிறார்கள்.

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் இந்த இந்து குருகுலமுறையை புனரமைக்கின்றார். நித்யானந்த குருகுலம் மற்றும் வித்யாலயங்கள் மூலமாக இந்து பாரம்பரிய கல்விமுறையை புனரமைக்கின்றார்.

தெய்வீக வழியாட்டியாக தாமே நேரடியாக வழிநடத்துகின்றார். நித்யானந்த குருகுல குழந்தைகள் தங்களுடைய குருவிடமிருந்து பெற்ற தீட்சையின் சக்தியால் மூன்றாம் கண் விழிப்படைந்து தெய்வீக சக்திகளை வெளிப்படுத்துகிறார்கள். இதன்மூலம் மனிதகுலத்தில் உயர் உயிர் விழிப்புணர்வை நிகழ்த்துகிறார். பூமியில் உயர் சக்திகளை வெளிப்படுத்தி வாழும் வாழ்க்கையை குருகுலங்கள் மற்றும் வித்யாலயங்கள் மூலமும் சாத்தியமாக்குகின்றார்.