2012 தியான சத்சங்கம்
தியான சத்சங்கம் (Tamil Satsangs)
வருடம் : 2012
நாட்கள் : ஒரு நாள்
நிகழ்வு : தியான சத்சங்கம்
சொற்பொழிவின் தலைப்பு : நிர்விகல்ப நிலையை தரும் தியான நுட்பம்
நடைபெற்ற இடம் : கைலாஸா
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : கைலாஸா
நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்
பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1 லட்சம்
வீடியோ
2012 தியான சத்சங்கம்
தியான சத்சங்கம்_விவரனை
எழுதப்பட்டதன் நகல் (Transcript) :
"மனம் தான் வாழ்க்கையின் எல்லா நன்மைக்கும் தீமைக்கும் காரணம். நீங்க உங்களுக்கு நன்மை நடக்கிறதா கநநட பீல் பண்றதுக்கும் தீமை நடக்கிறதா கநநட பீல் பண்றதுக்கும் இரண்டுக்குமே காரணம் என்னதான் மனம்.
மனம் அப்படிங்கறது தான் நன்மைக்கும் தீமைக்கும் காரணம் தீதும் நன்றும் பிறர் தர வாரா. பிறர் தர வாரா. நான் சொல்ற ஒவ்வொரு கருத்தையும் சத்தியத்தையும் ஆழ்ந்து உள்வாங்குங்கள், அப்பொழுது மட்டும் தான் அந்த இறுதி சத்தியம் முழுமையாக மலரும் உங்களுக்குள்ள. தீதும் நன்றும் பிறர் தர வாரா. மற்றவர்கள் கொடுப்பதனால் நல்லதும் கெட்டதும் வருவதில்லை. நம் மனம் சார்ந்து தான் அது வருகின்றது. ஐயா, நீங்க உலகத்தை உணர்வதே மனம் சார்ந்து தானே? எப்படி நாக்கை சார்ந்து தான் ருசி அனுபவிக்க படுகிறதோ மனத்தைச் சார்ந்து தான் உலகமே வாழப்படுகிறது.
உண்மையில் உங்கள் மனம் தான் உங்கள் உலகமே! வேறு ஒன்னும் கிடையாது உங்கள் மனம் தான் உங்கள் உலகம். மனம் சார்ந்து மனத்தை உபயோகம் பன்னி தான் உலகத்தையே நாம் பெர்ஸிவ் பன்றோம். எப்படி ஸ்பூன்ல சாப்பிடும் பொழுது ஸ்பூன் யூஸ் பண்ணி தானே சாப்பாடு வாய்க்குள் செல்கிறது. அதுபோல மனத்தை உபயோகம் பண்ணி தான் உலகத்தையே நாம் அனுபவிக்கிறோம். அந்த மனம் பக்குவமாய் விடுமானால் எதுவும் நம்மை தாக்க முடியாத ஒரு மிகப்பெரிய கோட்டைக்குள் நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும்.
மனம் என்றால் என்ன? தேடிப் தேடிப் பாருங்களேன். மனம் என்றால் என்ன? சில நேரத்தில் வேக வேகமாக இயங்குது, சில நேரத்துல டல் ஆஹ் இருக்கு. சில நேரத்துல டைஹார்ட ஆ இருக்கு. சில நேரத்துல போர் ஆ இருக்கு, சில நேரத்துல டிப்ரெஸ்ஸட் ஆ இருக்கு, சில நேரத்துல படு உத்சாகத்துல குதிக்குது.
மனம் என்றால் என்ன? இருக்கின்ற இருப்பான இயற்கையை நேரடியாக எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாததனால் நமக்கு ஏற்றார் போல் வசதிக்கு ஏற்றார் போல் சொகுசு தன்மையை ஏற்படுத்திக் கொள்ள நாம் உருவாக்கியத் திரை தான் மனம். ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள், காரில் செல்லும் பொழுது ரோடில் இருக்கின்ற மேடு பள்ளங்கள் உங்களை நேரடியாகத் தாக்காமல் இருப்பதற்காக ஷாக் அபிசார்பேர் னு வைப்பாங்க. பார்த்திருக்கிறீர்களா? எல்லா கார்லையும் ஷாக் அபிசார்பேர் இருக்கும். அந்த மேடு பள்ளத்தில் விழுந்த எழறது எல்லாம் உங்களை நேரடியாக தாக்காம இருக்க. இல்லைன்னா எல்லாம் பழுத்துரம் ஷாக் அபிசார்பேர் இல்லைனா. எப்படி இந்த ஷாக் அபிசார்பேர் உங்களுக்கும் ரோடுக்கும் இடையில இருக்கோ அதே மாதிரி உங்களுக்கும் இந்த இருக்கின்ற இயற்கையான வாழ்க்கைக்கும் இடையில் நீங்க ஏற்படுத்திக்கொள்கின்ற ஷாக் அபிசார்பேர் தான் இந்த மனம். நேரடியாக இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கு நீங்கள் தயாராக இல்லை. பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இயற்கையோடு இரண்டற மண்ணாய் கலந்தோம். இந்த இயற்கையான சைக்கிளை நீங்க ஏத்துக்க தயாரா இல்ல. நீங்க என்ன பண்றீங்க ’’ஆ! எல்லாரும் பொறந்த மாதிரி நான் கிடையாது நான் கொஞ்சம் ஸ்பெஷல், எல்லாரும் வளர்ந்த மாதிரி நான் கிடையாது நான் கொஞ்சம் ஸ்பெஷல், எல்லாரையும் மாதிரி நான் செத்துப் போவது இல்லை நான் கொஞ்சம் ஸ்பெஷல்’’ எங்கேயாவது நாம ஸ்பெஷல்னு யோசிக்க ஆரம்பிச்சவுடனே இயற்கையின் போக்கு நமக்கு முழுமையாக இனிக்கவில்லை. ஏதோ ஒன்று அதிகமாக தேவைப்படுகிறது. அப்போ நமக்கு எது தேவையோ அது கிடைச்சா மாதிரி நம்மை நாமே திருப்தி பண்ணிகிட்டாகனும். கிடைக்காதுன்னு தெரியிற இடத்துல கற்பனை பன்னிகிட்டு அதை வைத்துக்கொண்டு வாழ்ந்தாகனும், ஒருவேளை கிடைத்துவிடுமோ என்ற ஏக்கம் இருந்தா அதைநோக்கி ஓடியாகனும். இந்த மாதிரி பல்வேறு இருப்பை இருக்கின்ற இயற்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் இயங்க வேண்டிய தேவை நமக்கு வந்ததனால் நாம் உருவாக்கிக் கொள்கின்ற மெக்கானிசம் தான் மனம். ஓன்னு இருப்பதை அதிகமாக்கிப் பார்ப்பதற்கு இல்ல, இருக்கிறத குறைத்து பாக்குறதுக்கு. நான் சொல்வேன் உங்களுடைய மனம் வந்து ரெண்டு விதமான வேலையை தான் மெயினா செய்யும். நீங்க யாரோ அதைவிட ஜாஸ்தியா மற்றவர்களுக்கு காண்பிப்பது. அது அகங்காரம் எப்பவுமே என்ன பன்னுவோம், கிராஜுவேஷனா இருந்தா போஸ்ட் கிராஜுவேட் என்றுதான் சொல்லுவோம். கேட்டா அது மேல ஒரு அண்டர் லைன் போட்டு இருக்கு பாரு. ஒரு லைன் போட்ட என்ன அர்த்தம் இன்னும் முடிக்கல. நான் கூட தான் எம்பிபிஎஸ் பிஎச்டி ன்னு என்னென்வோ போட்டு ஒரு லைன் போட்டுக்கலாம் மேல. முடிக்கல. இருக்கிறத விட ஜாஸ்தியாகவே காட்டுகின்ற அகங்காரம், அதே மாதிரி உங்க மனசுல பாத்தீங்கன்னா உங்கள பத்தி நீங்க வச்சிருக்குற கருத்து, உங்களுடைய நிஜமான தகுதியை விட கம்மியாவே உங்கள நினைச்சிருப்பீங்க அதுதான் மமகாரம். உங்கள் தகுதியை விட அதிகமாக வௌியிலேயே காட்டும் அகங்காரம் உங்கள் தகுதியை விட குறைவாகவே உங்களை மதிப்பிட்டு கொள்ளும் உள்ளுக்குள்ளேயே மதிப்பிட்டு கொள்ளும் மமகாரம். வாழ்க்கையே இவளவு தான் அய்யா. இந்த அகங்காரத்திற்கும் மமகாரத்திற்கும் இடையில நடக்கின்ற சண்டை தான் வாழ்க்கை. இருப்பதை அதிகமாகவோ குறைவாகவோ மேனிபுலேட் பன்னி விளையாடிக்கொண்டே இருப்பதற்கு நீங்க வச்சிருக்கிற மெக்கானிசம் தான் மனம்.அதாவது நிகழ்வை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் தன்மையில்லாத் தனம். ஆசிரமத்துல குருகுலத்துக் குழந்தை ஒரு குழந்தை, ஆறு வயது இருக்கும் கீழே விழுந்து கை உடைஞ்சு போயிருச்சு, எந்திரிச்சு வந்து என்கிட்ட சொல்லுது, அவங்க அப்பா அம்மா பயந்து போய்ட்டாங்க, அவங்க கலங்கிட்டாங்க. ஆனா அந்த குழந்தை கிட்ட நான் கேட்கிறேன்.. ’கன்னு வலிக்குதாடா? அப்படின்னு’ ’’இல்ல சாமி, நீங்க தான் சொல்லி கொடுத்தீர்கள், வலி எங்கிருந்து வருதுன்னு பாத்துட்டு இருக்கேன்’’ ஆறு வயது குழந்தை.! வலி எங்கிருந்து உற்பத்தியாகுதுன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன். கை உடைந்து தொங்குது. ஆஸ்பிடலுக்கு தூக்கிட்டு போனா அவங்க சர்ஜரி பண்ணி, எல்லாம் பண்ணி முடிச்சிட்டாங்க. ரிலாக்டா படுத்துட்டு சிரிச்சிட்டு இருக்கிறான். என்னடா வலிக்குதடா? என்று கேட்டால்.. ’டாக்டர் வலிக்கும் வலிக்கும் என்று சொன்னார் நான் நம்பவில்லை.’’ அப்புறம் ஹாஸ்பிட்டல் எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தப்பிறகு கேட்கிறேன்.. ’என்னடா எப்படி இருக்குதுன்னு? ""நான் அங்க என்ன நடக்குன்னு பார்துகிட்டே இருந்தேனா வலியே இல்லை!"" காலையில் நான் ஒரு சத்சங்கத்தில் சொல்லி இருக்கேன்.. ’வலி வந்ததுன்னா எங்க இருந்து வருதுன்னு ஆழ்ந்து பாருங்கப்பா வலி என்று அந்த பெயரைச் சொல்லாமல், அந்த உணர்வுக்கு வலின்னு டைடில் கொடுக்காம அத பாரு காணாமல் போயிடும்’ என்று காணாமல் போயிடுச்சு சாமி. எனக்கே பெருமையா இருந்தது. இந்த குழந்தைகள் வளர்ந்து உருவாகும் பொழுது பார்த்தீர்களானால் வளரும் போதே அந்த ஞானத்தின் மலர்ச்சியிலேயே வளருவார்கள். 10 வயசு 12 வயது குழந்தைகள் எல்லாம் பார்த்தீர்ளானால், மல்லக்கம்பம் அந்த கம்பத்தில் ஏறி அதுமேல சக்கராசனம் பண்றாங்க. என்ன சின்ன வயசுல ரகுபதி யோகி படு டார்ச்சர் பண்ணுவார், என்னுடைய யோகா குரு பயங்கர டார்ச்சர் பண்ணுவார். கையில ஒரு கையை வந்து பின்னாடி கட்டிவிடுவார். ஒரு கயிறு வச்சி . நான் ஒரே கையில தூண் மேலே ஏறியாகனும், தூண் மேல தென்னை மரத்து மேல நாகலிங்க மரத்துமேல ஏறி ஆகணும். சில டைம்ல ஒரு காலை மட்டும் தான் யூஸ் பண்ண அலோவ் பண்ணுவாரு. நான் அப்பொழுதெல்லாம் நினைப்பேன், என்னடா இப்படி உயிர வாங்குகின்றாரே என்று! ஆனா இப்போ தெரியுது, அவர் அப்பொழுது தயார் செய்ததனால்தான் இப்போ அனாவசியமா சாப்பாடே இல்லாம நிம்மதியா வாழ்ந்து கொண்டிருக்கிறேன் பாருங்க.
நீங்களே பாக்கறீங்கள, நாலு நாலாக உங்களோடு அமர்ந்து பேசிட்டு இருக்கேன். ஒரு ஒரு வாரத்துக்கு முன்னாடி நம்ம சேலத்து ராஜகோபால் டாக்டர் சொன்னாரு, ஓடும்பொழுது செலவாவதை விட ஜாஸ்தியாக கலோரி பேசும்போது செலவாகுதுன்னு. நான் எவ்ளோ நேரம் இப்போ ஒரு அரை மணி நேரம் ஓடினால், உடம்புல செலவாகின்ற கலோரி மாதிரி, டபுள் பங்கு பேசுனா செலவாகுது என்கிறார். அப்ப பிராக்டிகலா நான் வந்து 15 மணி நேரம் பேசிட்டு உங்களோட. 15 மணிநேரம் நடுவுல கேப் , இந்த மெடிடேஷன் பன்ற டைம்லாம் விட்டோம்னா..கூட ஒரு 5 மணி நேரத்தை எடுத்துடலாம்.. பத்து மணி நேரம் பேசிட்டு இருக்கேன் 20 மணி நேரம் ஓடறதுக்கு சமம். 20 மணிநேரம் சாப்பாடு இல்லாம வெறும் 3 கப்பு ஜுசை குடிச்சிட்டு ஓடிட்டு இருக்கேன். புரிகிறதா என்ன சொல்றேன்னு.. சாப்பாடு இல்லாம 20 மணி நேரம் நீங்க பாக்கறீங்கல்ல, 3 கப் ஜூஸ். காலைல ஒரு கப் மதியான ஒரு கப், சாய்ந்திரம் ஒரு கப் .மூனு கப் ஜூஸ் வைத்துதான் 20 மணிநேரம் ஓடிட்டு இருக்கேன்.
எங்கிருந்து வந்தது அந்த பலம் சக்தி? அவர் கொடுத்த நன்கொடை. அப்ப நான் அவர திட்டு திட்டுன்னு திட்டுவேன். ஸ்கூல் பசங்க ஸ்கூலுக்கு போனவுடனே இந்த கெட்ட வார்த்தையைத்தான் முதல்ல கத்துப்பாங்க பாத்தீங்களா பார்த்திருக்கின்றீர்களா? ஸ்கூல்ல வந்து இதத்தான் முதல்ல கத்துகுடுப்பாங்க. சீனியர் பசங்க. அதெல்லாம் கத்துட்டு வந்து இவரைத் திட்டுவேன். ஆனா என்னுடைய தாயாரும் தந்தையும் உறுதியா இருந்தாங்க.. நான் என்ன திட்டினாலும் அவர் தான் என்ன வளத்தாகனும் அப்படீங்கிறதுல உறுதியா இருந்தாங்க. அவரும் நான் என்ன திட்டினாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் இற்றைன் பண்ணாரு. இதுவே தான் என் வாழ்க்கையே, என் லைப் - ஏ இப்படித் தான். ஒருநாள் இல்லனா இன்னொரு நாள் இன்னொரு இடத்துல உக்காந்து கிளாஸ் எடுத்துட்டே இருக்க போறேன் இப்படி தான் நடத்திட்டு இருக்கு. ஆனா இதுவரைக்கும் கடந்த பத்தாண்டுகளில் உடம்பு சரியில்லேன்னு ஒரே ஒரு நிகழ்ச்சி கூட கான்செல் பன்னது கிடையாது. கை உடைந்தப்ப கூட சரி, நான் நினைச்சதுண்டு, ஐயொ நம்மை எப்படி அவங்கல்லாம் வளர்த்தார்ளோ அந்த மாதிரி நாம ஒரு சில நூறு குழந்தைகளையாவது வளர்த்து ஜீவன் முக்தர்கள் ஆக வாழ விடவும். சன்யாசியாக்கனும்னு நான் நினைக்கல. இப்ப சன்யாசம், சம்சாரம் என்பது அவங்கவுங்க பிராரப்தம், நான் சன்யாசியாக்கனும்னு கூட விரும்பல. ஆனா ஜீவன் முக்தர்களாக்கி வாழ விடவேண்டும். அதற்காகத்தான் இந்த குருகுலத்தையே ஆரம்பித்தேன். இந்த குழந்தைகள் பன்றதைப் பார்த்தால், அவர்களுடைய டகைநளவலடந லைப் ஸ்டைல் ல பார்த்தோம்னா அப்பா..! கொஞ்சம் யோசிச்சு பாருங்க ஒரு கை உடைந்தால், அந்த நேரத்துல சாமியோட டீச்சிங் உங்களால அப்ளை பண்ண முடியுமா? ஏ! அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், பிராக்ட்டிகள் ஆ இப்ப என்ன பண்ணனுமோ பாருடா.. அப்ப சாமியோட டீச்சிங்ஸ் என்ன இமபிராகிடிகள் ஆ? நல்லா புரிஞ்சுக்கோங்க நிஜமாக நடக்கின்ற இயற்கையின் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாததனால் அதை மானிப்புலட் பன்றதுக்காக, மாற்றுவதற்கு நாம் செய்யும் முயற்சி தான் மனம்.
உண்மையில் மனம் என்னன்னா.. தொடர்ந்து நமக்குள்ளே இடைவிடாமல் ஓடிக் கொண்டே இருக்கின்ற எண்ண ஓட்டங்கள் தான் மனம். இப்ப நீங்கள் நடந்து கொண்டே இருக்கீங்க. நடக்க வேணாம்னு நினைச்சீங்கன்னா என்ன பண்ணுவீங்க? உட்கார்ந்து விடுவீர்கள். பேசிட்டே இருக்கீங்க. பேச வேண்டாம் என்று நினைச்சா என்ன பண்ணுவீங்க? மௌனம் ஆயிடுவீங்க. அதே மாதிரி தான். மனசு சிந்தனை பண்ணிகிட்டே இருக்கீங்க. வேணாம்னு நெனச்சா அப்போ நிறுத்திட முடியனுமில்லை? நிறுத்த முடியலையா? ஏன் நிறுத்த முடியல அப்ப என்ன உங்க மனசுல வேற யாராவது புகுந்து யோசிச்சிட்டு இருக்காங்களா? சொல்லுங்க! எப்படி நிறுத்த முடியாமல் போகும்? உங்க மனசு தான? வேற யாராவது யோசிக்கிறாங்களா? அப்பா இன்னொரு ஆள் உள்ள புகுந்து யோசிக்கிறாங்கன்னா தேய்ஞ்சுர் அப்போ!. ஒரு ஆளையே சமாளிக்க முடியல! சொல்லுங்க ஏன் நிறுத்த முடியல? நிறுத்த முடியாததற்கு காரணம் வேறொன்றுமில்லை சரியான தேய்க்கினியூ ஓட ட்ரை பண்ணாதது, அவ்வளவுதான். நிறுத்த முடியாது என்று கிடையாது. எப்படி உட்காருவது என்று உங்களுக்கு தெரியும். சின்ன வயலேந்து கத்துகிட்டீங்க.. நடந்து கிட்டே இருக்கீங்க. கால் வலிக்குது அப்படின்னா என்ன எப்படி உட்கார்றதுன்னு அம்மா கத்துக்கொடுத்துட்டாங்க. பேசிகிட்டே இருக்கீங்க வாய் வலிகுதுன்னா என்ன, ஆனா சில பேருக்கு வாய் வலிக்காம பேசிகிட்டே இருப்பாங்க. வாய் வலிக்காம பேசிகிட்டே இருக்கிறது தப்பில்ல.. மத்தவங்களுக்கு உபயோகரமாகிற மாதிரி விஷயமாக இருந்தால் குருவாக்கி விடலாம். இதுங்க அப்படி இல்ல, லபலபா மாமிங்க. அது ஒரு டெச்ணிகள் டேர்ம் சின்ன வயசுல நான் திருவண்ணாமலைல பிறந்து வளர்ந்த அந்தத் தெருவுல ஒரு அம்மா இருந்தது, அந்தம்மாக்கு லபலபா மாமின்னு பேரு.. என்னன்னா யாரையாவது ஒருத்தரைப் பார்த்தால் அதுபாட்டுக்கு பேசிகிட்டே இருக்கும். அவங்களுக்குப் புரியுதா இல்லையான்னு கவலையேப்படாது. அதனால ஊரெல்லாம் சேர்ந்து அந்தம்மாக்கு லபலபா மாமின்னு பேர் வச்சிட்டாங்க. லபலலபலபன்ன அடிச்சிக்கும். நம்மள்ள பெரும்பாலானவர்கள் பார்த்தீங்கன்னா லபலப மாமி மாதிரி தான் இருப்போம். நல்லா ஆழ்ந்து பாருங்க.. நீங்க பேசும் பொழுது அவருக்கு உண்மையிலேயே புரிஞ்சிதான்னு யோசிக்கரோமா? இல்ல இன்னொருத்தர் பேசும் பொழுது புரிஞ்சிக்கனும் அப்படீங்கிறதுக்காக கேட்கறீங்களா? அவர் பேசும் பொழுதே உங்கள் ஹான்செர் ரா ரெடி பன்றீங்க அவ்வளவுதான். நீ முடிடா மகனே நான் வர்ரேன் இரு.. அதுவரைக்கும் நான் இப்ப என் கன்னை லோட் பன்னிட்டு இருக்கிறேன். அதுவரைக்கும் நீ வேண்ணா பேசிக்கோ.. தொடர்ந்து பேசிட்டு இருக்கும் பொழுது வாய் வலிச்சா வாய எப்படி மூட்றதுன்னு சின்ன வயசுல கத்துகிட்டோம். தொடர்ந்து யோசிச்சு மனசு வலிச்சா அத எப்படி நிறுத்துறதுன்னு சின்ன வயசுல கத்துக்கல அவ்வளவுதான். நடந்து கால் வலிச்சா உட்கார கத்துகிட்டோம், பேசி வாய் வலிச்சா வாய்மூட கத்துகிட்டோம். சிந்திச்சி சிந்திச்சி மனசு வலிச்சா, டிப்ரெஸ்ஸின் அப்படிங்கிறதே வேற ஒன்னும் இல்லீங்கையா மனசோட வலி தான். எதை எதையோ போட்டு குழப்பிகிட்டு, எதை எதையோ பேசிகிட்டு எதை எதையோ சிந்தனை பன்னிகிட்டு வாழ்க்கை எதிர் காலத்தைப் பற்றி இல்லாத கற்பனை பயங்கள் எல்லாம் சேர்த்துகிட்டு.. இப்ப சும்மா இருந்தா என்ன பண்ணலாம் பணம் சம்பாதிக்க வழி யோசிக்கலாம், இல்ல ஒரு வீடு கட்டலாம் என்று யோசிக்கலாம், கார் வாங்கலாம்னு யோசிக்கலாம் இதெல்லாம் பரவாயில்லை, ஆனால் சும்மா தான இருக்கிறோம் கட்டின வீட்ட இடிக்கலாமே! அப்படித்தான் பண்ணிட்டு இருக்கோம்.. இல்ல நீங்க அப்படித்தான் பன்னிட்டிருக்கீங்க.. நல்லா யோசிங்க. நல்லா பாத்தீங்கன்னா சும்மா இந்தா உடனே என்ன பண்றீங்க? எதிர்காலத்தை பற்றிய பயத்தை உருவாக்க யோசனைகள் பண்றது.. அதுக்கு என்ன அர்த்தம்? கட்டின வீட்டை இடிக்கிறதுதானே? சும்மா தான் இருக்கேன் கை கால் நல்லாத்தான் இருக்கு இந்த வீடு சும்மாதான் இருக்கு இடிச்சிக்கலாமே ! சும்மா இருக்கிறேன் என்று வீடு கட்டினீர்களானால் நல்லது, சும்மாதானே இருக்கிறேன் அப்படீன்னு வீட்டை இடிச்சீங்கன்னா.. அதே மாதிரி தான் பண்றீங்க பாருங்க. இப்ப சும்மா இருக்கீங்க எதிர்காலத்தை கிரியேட்டிவா வாழறதுக்கு யோசிச்சீங்கன்னரா நல்லது. ஆனால் இப்படி ஆகிவிடுமோ!? என் வீட்டுக்கார் என்ன விட்டு போய்டுவாரோ? இல்ல இந்த ஆள் சாகாமலே இருந்து விடுவாரோ? வாழ்க்கை இப்படியே போயிட்டு இருக்குமா? பணத்தை யாராவது திருடிட்டு போயிட்டாங்கன்னா என்ன பண்றது? பிசினஸ் தீடீர்னு கீழ விழுந்துட்டா என்ன பண்றது? எதிர் வீட்டுக்காரர் வேற என் பிசினஸ்லையே நுழையறேன்றான்... அவன் மகா கில்லாடி. இந்த மாதிரி தொடர்ந்து இல்லாத கவலைகளை உருவாக்கி பார்க்கும் போது நீங்க என்ன பண்றீங்க? சும்மாதான இருக்கிறோம். எதிர்காலம் என்கின்ற வீட்டை இடித்து பார்த்தால் என்ன? அதை தான் உண்மையில் செய்றீங்க.. நல்லா தெரிஞ்சிகோங்க.. சிந்தையை வலிக்கும் சிந்தனைகள் செய்து வலி வந்த பிறகும், சிந்திப்பதை நிறுத்தத் தெரியாமல் தடுமாறுவது தான் டிப்ரஷன். ரொம்ப வேலை செஞ்சா கை வலிக்குது, வேலையை நிறுத்திட்டு கைய சும்மா வைக்க கத்துக்கிறீங்க.. அப்ப ரொம்ப சிந்திச்சி மனசு வலிக்கும் போது அத நிறுத்த கத்துக்கவே இல்லைன்னா என்ன பண்ண போறீங்க லைப் - ல?
ஒரு உதாரணம் புரிஞ்சுக்கோங்க, உங்க கையில ஒரு 100 kilo வெயிட்டைக் குடுத்துட்டு, இப்படியே பண்ணிட்டு இருக்கீங்க.. வலி வந்தாலும் அத எப்படி நிறுத்துறதுன்னு தெரியல என்ன ஆகும் உங்க கதி? (சிரிப்பு) இரண்டு நாள்ல அந்த இரண்டு கை என்ன ஆகும்? தனியாக கழட்டி போட்டுட வேண்டியதுதான். இப்ப உங்க மனசு அப்படிதான் ஆயிகிட்டு இருக்கு புரியலையா? நான் சொல்றத கேட்டு வேகவேகமா சிரிக்கிறீங்க.. உங்கள் சிந்தனைகள் படாதபாடுபட்டு என்னென்ன படுத்துது? ஆனால் நிறுத்தறதுக்கு வழி தெரியாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க? யாராவது வந்து ஏம்பா இப்படி பண்ணிட்டு இருக்குற? வலிக்கலியா? அட நீ வேற என் மூஞ்ச பாத்தா தெரியில? வலிக்கிதாவா? உயிரே போகுது. அப்ப நிறுத்தேம்பா.. எப்படி நிறுத்துவதுன்னு தெரியல சார். அப்படித்தான் பண்ணிட்டு இருக்கீங்க உங்க அனைெ mind அப்படித்தான் இருக்கு பாருங்க. ஏம்பா இவ்வளவு டிப்ரெஸ்ஸின் ஆ இருக்கிற? என்னென்னவோ கவலை, குற்ற உணர்ச்சி, பயம், துக்கம், வேதனை வெறுப்பு சாமி. ஏண்டா அதையேப் பண்ணிடிட்டு இருக்கீங்க.. பொறுமையா இரேன்பா! நிறுத்தத் தெரியல சாமி, அதையேத்தான நீங்களும் சொல்றீங்க. கையில வெயிட்டை குடுத்து வேக வேகமா பண்ணிட்டு இருக்கவன்.. நிறுத்த முடியலன்னு சொன்ன மாதிரிதான், இல்ல அதுதான் உங்களுக்கும், அந்த வெயிட்டுதான் குற்றவுணர்ச்சி, பயம், தேவை இல்லாத கவலை, தேவையில்லாத வலி இதெல்லாம்தான் வெயிட். ஒரு நாலஞ்சு மூட்டையை கைல கட்டிட்டு இப்படியே பண்ணிட்டு இருக்கிறது. அதை தான் பண்ணிட்டு இருக்கீங்க. ஏன் பண்றீங்க? யாருக்கும் தெரியாது. அட டிப்ரெஸ்ஸின் ஆ தான் இருக்குதில்லபா, நரம்பு தான் நரம்பு தளர்ச்சி ஆயிடுதுல்ல. சில நேரத்துல யோசிச்சு யோசிச்சு யோசிச்சு உங்க நரம்பே தளர்ந்து போகுதுல்ல. சும்மா அடிச்சு புழிஞ்சி காய வெச்ச மாதிரி ஆயிட்றீங்களல்ல? ஆனால் அப்புறமும் என்ன பன்றீங்க? நாளைக்கு என் வீட்டுக்காரர் டூ வீலெர் ல வரும் போது யுஉஉனைநவெ ஆயிருச்சுனனர் என்ன பண்றது? அவர் டூ வீலெர் வித்து கழரச பௌர் வீலெர் வாங்கி நாலு மாசம் ஆச்சு. அந்த கழரச றாநநடநச பௌர் வீலெர் ளையும் வௌியே போறது இல்ல வீட்டுக்குள்ளையே தான் உக்காந்துட்டு இருக்காரு. நல்லா யோசிச்சி பாத்தீங்கன்னா, ஒரு சின்ன ஒரு எஷெர்கிஸெ பண்ணி பாருங்க. ஒரு நாள் காலைல எந்திரிச்சு உட்காந்துக்கோங்க.. ஒரு ரிலாக்ஸ்டா ஒரு ஈசி சேரில் உட்கார்ந்து ஈசி சேரில் உட்கார்ந்து, ஒரு சின்ன டேப் ரெக்கார்டர் பக்கத்துல வச்சிகிட்டு யாரும் இல்லாமல் தனி ரூம்ல உக்காந்துகோங்க, யாராவது உங்களப் பாத்தாங்கன்னா உங்கள பைத்தியம்னு நினைச்சுக்குவாங்க. ஏற்கனவே நினைச்சிருந்தா காங்பிர்ம் அ ஆயிடும். வேண்டாம். தனி ரூம்ல உக்காந்துகோங்க. இது நீங்களே உங்களுக்கு பண்ணி பார்க்க வேண்டியவை ஒரு எக்ஸ்ப்ரிமண்ட். என்னல்லாம் தோணுதோ அப்படியே பேசிகிட்டே இருங்க.. எடிட் பண்ணாதீங்க.. உங்க பிரைவேட் அனாலிசிஸ். தனிப்பட்ட விதத்துல உங்கள நீங்க அனலைஸ் பண்ணிக்கிறீங்க அவ்வளவுதான்.
டீடழழன வநளவ blood test பன்றா மாதிரி. இது மைண்ட் டெஸ்ட். இப்ப ஆறு மாசத்துக்கு ஒருமுறை இல்ல ஒரு வருஷத்துக்கு ஒருமுறை அந்த மாதிரி பிளட் டெஸ்ட் பண்ணி பாருங்க.
என்னெல்லாம் தோணுதோ பேசிட்டே இருங்க நீங்க பாட்டுக்கு, ஒரு மணி நேர ரெகார்ட் பண்ணிக்கோங்க எடிட் பண்ணாதீங்க, நல்ல எண்ணம் கெட்ட எண்ணம் என்றெல்லாம் நினைக்காதீங்க என்ன தோன்றினாலும் பேசுங்க ரெக்கார்ட் பண்ணிக்கோங்க. அதுக்கு அப்புறமா நீங்களே உட்கார்ந்து அந்த ஒரு மணி நேரம் பேசினத உட்கார்ந்து அப்படியே கேளுங்க. கேட்டு எத்தனை எண்ணம் பயம் சார்ந்தது வந்திருக்கு அந்த ஒரு மணி நேரத்தில், எத்தனை எண்ணம் குற்ற உணர்ச்சி சார்ந்து வந்திருக்கு அந்த ஒரு மணி நேரத்துல. எத்தனை எண்ணம் உங்கள டிப்ரெஸ் பண்ற மாதிரி எண்ணம் வந்திருக்கு அந்த ஒரு மணி நேரத்தில. அது வந்த உடனே சப்ரெஸ் பண்ணியிருப்பீங்க. இத ஏண்டா நினைக்கனும், எவ்வளவோ நல்ல விஷயம் இருக்கு அதை நினைப்பதை விட்டுவிட்டு இத ஏண்டா நினைக்கனும்? அப்படீன்னு என்ன பண்ணிருப்பீங்கள். அப்படீன்னா என்ன டிப்ரெஸ்ஸிவ் வான எண்ணம். எத்தனை எண்ணங்கள் இந்த மாதிரி வந்திருக்கு. அப்படீன்னு ஒன்னு ஒன்னா ஒன்னொன்னா அனலைஸ் பண்ணுங்க. இந்த அனலைஸ் பன்றதுக்கு ஒரு 2 மணிநேரம் ஆகும். பாத்தீங்கன்னா யவடநயளவ atleast இந்த கையில ஒரு 500 கிலோ இந்த கைல ஒரு 500 கிலோ வச்சு நீங்க இப்படி பண்ணிகிட்டே இருக்கிறீங்க. இவ்வளவு ஓடிக்கிட்டே இருக்கு அப்ப நிறுத்தலாம் இல்ல? புரியிதுங்களா என்ன சொல்றேன்னு? நிறுத்தலாமில்ல? இல்ல இந்த மாதிரி யாருக்காவது ஓடிட்டே இல்ல என்று இருக்கீங்களா சொல்லுங்களேன், யாராவது ’இல்லை எனக்குள்ள எண்ணமே ஓட்றதில்லை சாமி, அப்படியே நான் நிதர்சனமா நிம்மதியா நிர்விகல்பமா இருக்கின்றேன்’ வாங்க பக்கத்துல உட்கார்ந்துகோங்க. உங்களுக்குதான் சீட்டு. கிடையாது. அப்ப தேவையில்லாத குற்ற உணர்ச்சிகள் உள்ள ஓடிட்டே இருக்கு இல்லையா? தேவையில்லாத பயங்கள் ஓடிட்டே இருக்கு நீங்க உட்கார்ந்து எழுதிப்பாத்தீங்கன்னா தான் உங்களுக்கு தெரியுங்கைய்யா, ஒரு மணி நேரத்தில அட்லீஸ்ட் ஒரு 50 குற்றவுணர்ச்சி வந்துபோகும். என்ன ஒரு 100 பயம் வந்து போகும், ஒரு 200 கவலை வந்து போகும். நிம்மதியா நல்ல விஷயமா கிரியேட்டிவா உருவாக்குற எண்ணமா ரெண்டு அல்லது மூணு வந்தாலே அதிகம். அப்ப உங்க லைப் அ என்ன பண்ணிட்டு இருக்கீங்க? உங்க அப்பா உங்களுக்கு 3 வீடு கட்டி வச்சுட்டி போறாரு.. அவர் செத்த பிறகு அப்பா சும்மா இருக்ககூடாதுன்னு சொல்லிருக்காரு, நான் சும்மாதான் இருக்கேன் இந்த வீட்டை இப்ப இடிச்சா என்ன? இரண்டாவது என்ன பன்றது.. இன்னைக்கும் சும்மாதான இருக்கிறேன் இந்த கம்பனிய இடிச்சா என்ன? கம்பனிய இடிக்கறது மூனாவது நாள் என்ன பன்றது? இந்த பங்களா நல்லாதான் இருக்கு இந்த பங்களாவை கட்டிவச்சிட்டு போயிருக்காங்க, நாம சும்மா தான இருக்கோம். பங்களாவ இடிச்சா என்ன? அவர் சும்மா இருக்க கூடாதுன்னு எதுக்கு சொன்னாரு? க்ரியேட்டிவா உருவாக்குங்கன்னு.. ஆனால் நீங்க என்ன பன்றீங்க சும்மா இருக்கக்கூடாதுன்னு இடிச்சிட்டு இருக்கீங்க. சிந்தனைப் பண்ணாம சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக, எதிர்மறையாகவும் bayam மாகவும் குற்ற உணர்ச்சியாகவும், ஆசை அச்சமாகவும் யோசிச்சிட்டே இருந்தீங்கன்னா.. அப்ப நீங்க என்ன பன்றீங்க, சும்மா இருப்பதற்கு பதிலாக உங்கள் எதிர் காலத்தை இடிச்சித் தள்ளிகிட்டு இருக்கீங்க. கேட்டா என்னால இந்த மிஷினை நிறுத்த முடியவில்லை என்கிறீர்கள். ஜேசிபி பண்ணிட்டு உக்காந்துட்டேன் நிறுத்துவதற்குத் தெரியவில்லை. அது அப்படியே போகுது, கண்ணு முன்னாடி வர்றத எல்லாம் இடிச்சிகிட்டே இருக்கிறேன். இந்த டிப்ரெஸ்ஸின் என்கிற சைக்கிள் -ல மட்டும் நீங்கள் மாட்டிகிட்டீங்கன்னா உங்கள மட்டும் இல்ல எல்லாரையும் அழித்து விடுவீர்கள். ஜாக்கிரதை எல்லாரையும் அழிச்சிடுவீங்க. பல நேரத்தில் நான் பாத்திருக்கேன் டிப்ரஷன் சைக்கிளில் மாட்டீனாங்கன்னா அவர்களைப் பார்தது நானே பயப்படுவேன். ஏன்னா இவங்களுக்கு என்ன அட்வைஸ் பண்ணாலும் நல்லபடியா எடுத்துக்க தெரியாது. அதுல ஒரு குதர்கத்தைக் கண்டுபிடிச்சு என்ன பண்ணுவாங்க தன்னை தானே அழித்துக்கொள்ளும் தற்கொலையில் இருந்து அவங்களையும் வௌில வரமாட்டாங்க, நம்மையும் பிடித்து உள்ளே இழுப்பார்கள். ஆத்துல முழுகிறவனுக்கு கையை கொடுத்து மேலே தூக்கலாம்னு கையைக் கொடுத்தால் அவனுங்க என்ன பண்ணுவானுங்க, நம்மள பிடிச்சி உள்ள இழுப்பாங்க. அந்த டிப்ரெஸ்ஸின் கும்பளெல்லாம் ஒன்னா உக்காந்துச்சுன்னா என்ன பண்ணும்? க்ரியேட்டிவா எதையும் பண்ணத் தெரியாது. அதனால தான் இந்த டிப்ரெஸ்ஸின் மெண்டல் செட்டப் இருக்கிறவர்களுக்கு அட்வைஸ் பன்றதையே நிறுத்திட்டேன். எப்படியோ போ... நரி இடம் போனா என்ன, வலம் போனா என்ன நம்ம மேல பாயாம இருந்தா சரி! அவ்வளவுதான்.
உங்கள் வாழ்க்கையிலும் பாருங்கள் டிப்ரெஸ்ஸிவ் ஆன மெண்டல் செட்டப் அதாவது எதிர்காலம் பற்றி எதிர்மறையாகவே தொடர்ந்து சிந்தித்தல். உங்கள் பெட்ரூம்ல எழுதி வைத்துக்கொள்ளுங்கள், எதிர்காலத்தை பற்றி எதிர்மறையாக சிந்திக்கும்பொழுது சும்மா தானா இருக்கிறோம் என்று வீட்டையெல்லாம் இடிச்சிட்டிருக்க வேலையை பண்ணிட்டிருக்கீங்க. இந்த உதாரணம் கரெக்டா புரியும் பாருங்க.. உங்களுக்கு.. சும்மா தான இருக்கிறேன் என்பதற்க்காக 10 பசுமாட எடுத்து கழுத்தை வெட்றது. சும்மாதான் இருக்கிறோம் என்பதற்காக.. தமிழில் ஒரு பழமொழி இருக்குத் தெரியுமா.. வேலையைத்தான் அம்பட்டன் என்ன அடுத்து என்ன? இல்ல இல்ல ஆ! அதான் கரெக்ட்..பொண்டாட்டித் தல ஒரு நாள் தான கிடைக்கும் இரண்டாவது நாள் என்ன பண்ணுவான்? இரண்டாவது நான் என்ன பண்ணானாம் அந்தப் பக்கம் ஓடிகிட்டு இருந்த பூனையை புடிச்சி சிரச்சானாம், மூனாவது நாள் அதுவும் கிடைக்காததனால என்ன பண்ணானாம் கிடைத்ததெல்லாம் சிரைக்க ஆரம்பிச்சானாம். அதெ மாதிரி தான் நம்ம மனசு. ஆழமாகத் தெரிந்து கொள்ளுங்கள். வேலை அத மனசு கிடைத்ததை எல்லாம் அழிக்க ஆரம்பித்து விடும் அதனால தெரிஞ்சுக்கோங்க வாழ்க்கையிலேயே உணவு உண்ண எப்படி கற்றுக் கொள்கிறீர்களோ? அந்த மாதிரி அடிப்படையாக கற்றுக்கொள்ள வேண்டியது மனதிற்கு ஓய்வு கொடுக்கும் கலை. தேவைப்படும்பொழுது உபயோகம் பண்ணிட்டு தேவையில்லாதப்ப ஆப் பண்ணி வைக்க முடியனும். இப்ப அந்த மனதை ஆப் பண்ணி வைக்கிற கலையைத்தான் நிர்விகல்ப சமாதின்னு சாமி சொல்றேன். விகல்பம் என்றால் எண்ண ஓட்டம் நிர்விகல்பம் என்றால் எண்ணம் இல்லாத, மனதிற்கு ஓய்வு கொடுக்கும் கலை. மனதிற்கு ஓய்வு கொடுக்கின்ற கலை. அதுதான் தீட்சை. நிர்விகல்ப சமாதி என்று சொல்றேன். அந்த நிர்விகல்ப சமாதிகுள்ள நீங்க போறதுக்கான கலை தான் தீட்சைன்னு சொல்றேன். நல்லா புரிஞ்சிகோங்க மனம் என்பது தொடர்ந்து உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் இயங்குமானால் எதிர்காலத்தை சீரழிக்கும், எத்துனை வலி வேதனைகள் வந்த பிறகும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் தற்கொலையாக மாரும்.. இப்ப இந்த இரண்டு கையிலேயும் வெயிட்டைக் குடுத்துட்டு பண்ணிகிட்டே இருக்கீங்க, நிறத்த முடியல அப்ப என்ன ஆவீங்க நீங்க கடைசில இதனால. தற்கொலைதான் போய் முடியும். இப்படியே பண்ணிட்டிருந்தீங்கன்னா பத்து நாள் ஆச்சுன்னா என்ன ஆகும் மயக்கம் வந்து கீழ விழுவீங்க. அதானே வழி? அதே மாதிரி தான் உங்க மனமும். பல நேரத்தில் ஓவரா ஓடிஓடி ஓடிஓடி சிந்திச்சி, சிந்திச்சி, சிந்திச்சி அந்த கவலை சம்ஸ்காரங்களை அடுக்கி அடுக்கி அடுக்கீங்கையா அதாவது வியாபாரம் மொத்தமும் காணாமப் போயிருமோனு தொடர்ந்து கவலைப்பட்டுக்கிட்டே இருந்தீங்கனா , வியாபாரம் நல்லா வளர்ந்து வரும் ஆனா உங்க கவலைப்படுற பழக்கம் போகாது. திடீர்னு ஒரு நாள் 10 லட்ச ரூபாய் வருமானம் வருவதற்கு பதிலாக 8 லட்சம் வந்துச்சுனா போதும் போச்சு! என்ன ஆவீங்க ? ஐயோ இது இப்படியே போச்சுனா இன்னைக்கு 8 லட்சம், நாளைக்கு 6 லட்சம் நாளன்னைக்கு நாலு லட்சம் அதுக்கு மறுநாள் 2 லட்சம், அப்புறம் 0 அப்புறம் இருக்கிறதெல்லாம் போய் ஒரு வருடத்துக்கு அப்புறம் நான் ஓட்டாண்டி ஆயிருவான ஆகி விடுவேனா? நல்லா புரிஞ்சுக்கோங்க, நீங்க கற்பனையா உருவாக்கி வைத்திருக்கிற பயத்தினுடைய தாக்கம் எதிர் காலத்தின் மீது படும் பொழுது எதிர்காலத்தை இடித்துத் தள்ளுகிறீர்கள்.
எத்தனை பேர் இந்த மாதிரி ஒரு சின்ன விஷயத்துக்கே உடைஞ்சு போய் அப்புறம் என்ன ஆகும்? இந்த கை தானா வேலை செய்து செய்து மயக்கம் வந்து விழற மாதிரி அப்படியே டிப்ரஷன் ல விழுந்து விடுவீர்கள். எத்தனை பேர் இத அனுபவிச்சிருக்கீங்க? ஒன்னும் பண்ண முடியாத டிப்ரஷன் ல விழுந்து ? காரணம் என்ன னு புரியுதா? மத்தவங்கள்ளாம் இந்த டிப்ரஷன் விழுந்தது கூட தெரியாமல் இருக்கீங்க அதனால் தான் கை தூக்கல. தெரிஞ்சுக்கோங்க. இதுல இரண்டே கேட்டகிரி தான்.. எமதர்மன் கேட்டானா? 100 ஆம்பளைங்க அன்னைக்கு வந்திருந்தாங்களாம் செத்து போயி... பொண்டாட்டிக்கு பயந்து வாழ்ந்தவன் எல்லாம் ஒரு பக்கம் நில்லு, மத்தவன் எல்லாம் ஒரு பக்கம் நில்லு என்றாராம், 99 பேர் ஒருபக்கம் நின்னாங்களாம், பொண்டாட்டிக்கு பயந்து வாழ்ந்த சைடு ல இன்னொருத்தன் மட்டும் தனியா இருந்தானாம்.. இவர் கேட்டார் என்ன ரொம்ப தைரியசாலியான்னு? இல்ல இல்ல கும்பளா இருக்கிற இடத்துல நிக்க வேணாம்னு என் பொண்டாட்டி சொல்லி அனுப்பினாள். அப்படித்தான்.. இப்ப கை தூக்கினவங்கல்லாம் டிப்ரஷன்-ல விழுந்து இருக்கீங்க. தூக்காதவங்க எல்லாம் டிப்ரஷன்-ல விழுந்தது தெரியாம இருக்கீங்க அவ்வளவுதான். மனம் என்கின்ற மேனிபுலட்டிவ் மெக்கானிசம் தொடர்ந்து இயங்குவதனால் ஏற்படுகின்ற ஓய்வில்லாத இயங்குவதனால் ஏற்படுகின்ற வலிதான் டிப்ரஷன். அதிலிருந்துதான் வாழ்க்கையினுடைய எல்லா துக்கங்களும் துவங்குகின்றன. நல்லா தெரிஞ்சிகோங்க. டிப்ரஷன்-ல மட்டும் தயவு செய்து எந்த முடிவு எடுக்காதீர்கள்..
டிப்ரஷன் -ல நீங்க எடுக்கிற முடிவு எல்லாமே பேய் நேரடியாக உங்களுக்கு சொல்லிக் கொடுத்து நீங்கள் எடுக்கிற முடிவுகள். யாராவது பிரம்மச்சாரிகளோ, பிரம்மச்சாரிணிகளோ ஆசிரமத்தை விட்டு போகனும் என்று கேட்டால் சொல்லுவேன்... அப்பா நல்லா உன் வாழ்க்கையை நீ இந்த போறது, வந்து டிப்ரஷன்ல பண்ணாத. டிப்ரஷன்ல போகாத. டிப்ரஷன் கவனி நான் எதிலையும் தலையிட மாட்டேன். என்ன வேணா பண்ணு ஆனா இருக்கிற நேரத்துல முடிவெடுத்து எதையும் பண்ணாத. டிப்ரஷன் இருக்கிற நேரத்துல உனக்கு சத்தியமா நல்லது எது கெட்டது எது என்று தெரியாது. உனக்கு நல்லது மாதிரியே தெரியும், ஆனா மாதிரி நல்லது கிடையாது. எவ்ளோ பெரிய நல்ல முடிவு நீங்க நினைச்சீங்கன்னாலும் தயவுசெய்து டிப்ரஷன் இருக்கும் போது எடுக்காதீங்க. டிப்ரஷன் நேரத்துல நீங்க எடுக்கிற எந்த முடிவாக இருந்தாலும் மேலும் மேலும் மாளாத பெரும் துக்கத்தில் எடுத்து சென்று உங்களை சாய்க்குமே தவிர அதில் இருந்து மீண்டு வரவே முடியாது. எந்த பெரிய முடிவுகளையும், வாழ்க்கையில் எடுக்கின்ற எந்த பெரிய முடிவு பல பெரிய முடிவுகள் நீங்க எடுத்துட்டு இருப்பீங்க, கல்யாணம் பண்ணிக்கலாமா வேணாமா? இல்ல யாரை கல்யாணம் பண்ணிக்கலாம்? எங்க வீடு கட்டலாம்? எந்த வேலைக்கு போகலாம்? எந்த ஊர்ல செட்டில் ஆகலாம்? குழந்தை பெற்றுக்கொள்ளலாமா? வேண்டாமா? குழந்தையை எந்த ஸ்கூலில் சேர்க்கலாம். எப்படி வளர்க்கலாம்? பல பெரிய முடிவுகளை எடுத்துகிட்டே இருப்பீங்க.எந்த முடிவையும் எக்காரணம் கொண்டும் டிப்ரஷன்ல எடுக்காதீங்க.
அதே மாதிரி டிப்ரஷன்ல யாரைப் பற்றியும் எந்த கருத்தையும் முடிவாக்காதீர்கள். டிப்ரஷன்ல இருக்கும்பொழுது அப்பாவையோ அண்ணனையோ தம்பியையோ மனைவியையோ கணவனயோ யாரையாவது வில்லனாக்கிப் பார்க்கனும் என்றே மனசுக்கு தோணும், எல்லாத்துக்கும் இந்த தரித்திரம் புடிச்சவன்தான் காரணம், எல்லாத்துக்கும் இவளை கல்யாணம் பண்ணதுதான் காரணம். நமக்குத் தோணும் சில நேரத்துல. இவ ஊட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சா.. வந்துதுறா சனியன். இவன் எதிர் வீட்டுக்காரனா வந்தான், அன்னைலர்ந்து வந்ததுரா எதிர் சனி. அதாவது யாரையாவது ஒருவரை வில்லனாக்கி பார்ப்பதற்கு தான் உங்களுடைய மனதோட டிப்ரஷன் முயற்சி செய்யும். தன்மையை திரும்பித் தேடும் தன்மை வரும்போது மன உளைச்சல் காணாது போகும். இது வந்து சட்டம் அதனால மன உளைச்சல் என்ன பண்ணும் தன்னை காப்பாற்றிக்கொள்ள முன்னிலை படர்க்கையின் மீதே உங்கள் முழுக்கவனத்தையும் வைத்திருக்கும். இவன் ரௌடி, இவன் திருடன், இவன் பொறம்போக்கு, இவன் மொள்ள மாரி, இவன் முடிச்சவிக்கி, எல்லார் மீதும் கைகாட்டும் மனம் ஆனால் தன்மையை சந்தேகிக்கப்படவே அனுமதிக்காது. இந்தப் பிரச்சினையில நான் ஏதாவது பங்களிச்சிருக்கேனா அத மாத்திக்க முடியுமா? அப்படீன்னு தன்மையைத் தேடும் தன்மையை மட்டும் அழித்து முன்னிலை படர்க்கை முன்பாகவே வைத்திருக்கும். அதுதான் மன அழுத்தம், அதுதான் டிப்ரஷன். திருவண்ணாமலைக்குப் பக்கத்துல பூண்டி என்று ஒரு கிராமம் இருக்கு. கலசப்பாக்கம் என்று ஒரு சின்ன ஊர். அங்க ஒரு சுவாமிகள் இருந்தாங்க, பெரிய மகான் பூண்டி சுவாமிகள் என்று பெயர். கலசப்பாக்கம் ஆத்து சுவாமிகள் என்று சொல்வார்கள். சாமி உடம்பால அவரைப் பார்த்ததில்லை. ஆனால் பெரிய மகான் என்பதனால் சிறிய வயசுல தரிசனத்துல காட்சி கொடுத்திருக்கின்றார். நான் பிறப்பதற்கு முன் என்னுடைய தாயார் அவரை, அந்த சாமியை பார்க்கப் போயிருக்கிறார்கள். அவர் வந்து முருகனுடைய அவதாரமாக வழிபடப்படுகின்றார். இன்னும் அவருடைய ஜீவ சமாதி இருக்கு. முடிஞ்சவங்கல்லாம் போய் பாருங்க.. மிகப் பெரிய ஞானிகளில் ஒருவர். கடந்த நூற்றாண்டிலே இந்தியா பார்த்த மிகப்பெரிய ஞானிகளில் ஒருவர். பெரிய ஆசிரமம் எல்லாம் கிடையாது ரொம்ப சின்ன இடம்தான். ஆனால் பெரிய பரமஹம்ஸர். அந்த நிர்விகல்ப சமாதில உட்கார்ந்திருந்தார்னா.. இந்த வழியா எறும்பு துளைச்சிகிட்டு போய், அந்த வழியா வௌில வருமாம். அவர் பாட்டுக்கு உட்கார்ந்திருப்பார். எறும்பு இந்த வழியா காலுக்குள்ள போயிட்டு அந்த வழியா வௌில வரும். பூண்டி மஹான் என்று பெயர். ஆத்து சுவாமிகள் என்று பெயர். பெரிய மஹான். இங்க பக்கத்துல ஒரு அரை மணி நேர தூரம் தான்.. முடிஞ்சவங்களெல்லாம் naalaikku போய் பார்த்துட்டு போங்க. பக்கம் தான். சாமி இந்தியா முழுக்க நடந்து யாத்திரை பண்ணியிருக்கேன், ஒரு நான்கு இந்து சமாதிகள் தான் அந்த ஞானிகள் அப்படியே இன்னும் உயிரோடு உட்காந்திருக்காங்க.. நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள், பிருந்தாவனம் ராகவேந்திர சுவாமிகள், பூண்டி கலசப்பாக்கம் ஆத்து சுவாமிகள், சீரடி சாய்பாபா, திருவண்ணாமலை இரமண மகரிஷி. அந்த ஞானிகளுடைய உடம்பு அப்படியே அவங்களுடைய சாநித்தியம் அப்படியே இருக்கு. போய் பேசினா பதில் சொல்வார்கள் நீங்கள் கேக்குறதுக்கு விடை அளிப்பார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த சாந்நித்யம்,
பெரிய மஹான் முருகனுடைய அவதாரமாக வழிபடப்படுபவர். உட்கார்ந்த இடத்தில் அசையாமல் அறுபது ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். ரெக்கார்ட் படி பார்த்தால் ஏறத்தாழ ஒரு முன்னூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். என்னுடைய தாத்தா பார்த்திருக்கிறார், பாட்டன் பார்த்திருக்கிறார் என்று சொல்கிறார் இல்லையா? அதுப்படி பார்த்தால் 300 வருடம் வாழ்ந்திருக்கிறார் மொத்தமாக. அந்த இடத்தில் 60 வருஷம் வாழ்ந்திருக்கிறார். கலசப்பாக்கம் என்கின்ற ஊர்ல. பெரிய மகான். என்னுடைய தாயார் நான் பிறப்பதற்கு முன்னாடி போய் இருக்காங்க, தரிசனம் பன்றதுக்காக.. என்னுடைய பாட்டனாரும் போயிருக்காங்க விழுந்து நமஸ்காரம் பண்ணி இருக்காங்க.. எந்திருச்ச உடனே அரிசி கொஞ்சம் கையில கொடுத்து. ’’எங்க அப்பனே வந்து பிறப்பான்’’ என்று சொல்லி இருக்காரு. அவங்களுக்கு ஒன்னும் புரியல.. வாங்கி அரிசியை வாய்ல போட்டு வந்திட்ருக்காங்க.. ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிட்டுருக்காரு.. இவங்களுக்கு ஒண்ணுமே புரியல திருதிருன்னு நின்னுட்டு இருந்திருக்காங்க.., பாட்டனார் கேட்டிருக்காரு, ’சாமி சொன்னது என்ன அர்த்தம்?’ அவர் இருக்கிற இடத்துல இருந்து பார்த்தா அண்ணாமலை மலை தெரியும். ’அப்பன் அப்பன் பிறப்பான் போ போ’ பெரிய சித்தர் மலையைக் காட்டி ஆசீர்வாதம் பண்ணியிருக்காரு. நிர்விகல்ப சமாதியிலேயே இருந்து இருந்து இருந்து பொங்குகின்ற ஆனந்தம் உடலைப் பற்றிக் கூட கவலைப்படாமல் அந்த உணர்வுல வாழ்ந்திருக்காரு. நீங்க ஒன்னும் உடம்பை பற்றி கவலைப்படாமல் இருங்கன்னுல்லாம் சொல்லவில்லை. அதிகமாக கவலைப்பட்டு வாழ்க்கையை அழச்சிக்காதீங்கன்னுதான் சொல்றேன். ஆழ்ந்து பார்த்தீர்களானால், இந்த வாழ்க்கை உங்களுடைய வாழ்க்கை போகின்ற போக்கைப் பார்த்தீர்களானால், டிப்ரஷன்ல எடுக்கின்ற முடிவுகளாலேயே, மேலும் மேலும் மேலும் முன்னிலையையும், படர்க்கையையுமே சார்ந்து வாழ்கிறீர்கள். நான் இந்த வீட்ட விட்டு சன்யாசம் போகனும் என்று கேட்டப்போ, என்னுடையப் பாட்டானார் என்கிட்ட சொன்னாரு ’அப்பவே பூண்டி சாமி சொல்லுச்சி, நான் முழுசா நம்பல.. ’ அப்படீன்னு. அதாவது அந்த நிர்விகல்ப நிலையில உடம்பை பற்றிக்கூட கவலையில்லாம் இருக்கிறாங்க அப்படீங்கறதுக்கு உதாரணம் சொல்வதற்காகப் பூண்டி சுவாமிகளைப் பற்றிச் சொன்னேன். தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்குமானால் மனம் தன் தௌிவை இழந்து விடுகிறது. நீங்களே யோசிச்சு பாருங்க.. தொடர்ந்து ஓடிக்கொண்டே இருதீங்கன்னா உடல் என்ன ஆகுது, தன் ஸ்திரத்தன்மையை இழந்து நடுங்க ஆரம்பிச்சுரும் பார்த்திருக்கீங்களா? யாராவது இந்த ஓட்டப் பந்தயத்திற்காக ஓடுகிறவர்கள், எஷெர்கிஸெ பன்றவங்க யாராவது இங்க இருந்தீங்கன்னா.. தெரியும். ஒரு மணி நேரம் இரண்டு நேரம் பிறகு என்ன ஆகும்? காலெ்லாம் நடுங்க ஆரம்பிச்சுரும். அதேமாதிரிதான் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்ததுன்னா மனம் என்ன பண்ணும் தௌிவை இழந்து நடுங்க ஆரம்பிச்சுரும்."
தியான சத்சங்கம்_சாஸ்திர பிரமாணம்
" ஆத்மஞானத்தை குருகிருபையே நல்கும், குருவின் உபதேசத்தாலேயே அஞ்ஞானம் அழியும்.
குருரேகோ ஹி ஜாநாதி ஸ்வரூபம் தேவமவ்யயம் | தத்ஜ்ஞாநம் தத்ப்ரஸாதேந நாந்யதா ஶாஸ்த்ர கோடிபி: ||
ஶ்வரூபஜ்ஞாநசூ'ந்யேந க்ரு'தமப்யக்ரு'தம் பவேத் | தபோ ஜபாதி்கம் தேவி ஸகலம் பாலஜல்பவத் ||
மாற்றமற்ற பரம்பொருளைப் பற்றிய உண்மை சொரூபத்தை (ஆத்ம ஞானத்தை) அறிந்தவர் குரு ஒருவரே. இந்த ஞானத்தை குரு கிருபையாலன்றி கோடிக்கணக்கான சாஸ்திரங்களாலும்கூட ஒருவன் பெற முடியாது.
தேவி! ஆத்மஞானம் இன்றிய தவம், மந்த்ர ஜபம் போன்ற அனைத்தும் குழந்தையின் மழலைக்கு நிகரே; பயனற்றவையே.
- குருகீதை (பரம்பொருள் பரமசிவனார் பார்வதி தேவிக்கு உபதேசித்தது)
இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பரமசிவ பரம்பொருளின் நேரடி செய்திகளை கைலாஸாவிலிருந்து தமது சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துகிறார்.
பகவான் அவர்கள் அனைத்து நிலை ஜீவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் உபதேசம் அருள்கிறார். ஒரு ஜீவனின் உயிர் எந்த நிலையில் இருந்தாலும், அது மிகுந்த உற்சாகத்தோடும் வாழ்க்கையை நோக்கிய மிகுந்த உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும், வேகத்தோடும், இயங்குகின்ற நிலையில் இருந்தாலும், அல்லது தளர்ந்து சோர்ந்து படுக்கையை விட்டே அசையமுடியாத நிலையில் இருந்தாலும், அல்லது மாயை என்ற மன உளைச்சலில் மூழ்கி தன்னை மறந்து வீழ்ந்து கிடந்தாலும், ஒரு ஜீவன் எந்த நிலையில் இருக்குமானாலும் அது அடையப்பட வேண்டியது பரமசிவ பரம்பொருளோடு சாயுஜ்யநிலையே என்பதை அருள்கிறார். பரமசிவப் பரம்பொருள் பிரபஞ்சத்தின் அடிப்படை அறிவியலாக தன் அரூப ரூபத்திலிருந்து அளித்த வேதங்களும், அதை வாழ்க்கையில் சாத்தியமாக்கிக் கொள்ளும் பயன்பாட்டுத் தொழில் நுட்பமாக அருளிய ஆகமங்களையும் அருளி ஒவ்வொரு ஜீவனுக்கும் வழிகாட்டுகிறார். "