20 ஏப்ரல் 2006 திருக்கோயில் திருப்பணிகள்
கோயில் திருப்பணி(Temple Tasks)
வருடம் : 2006
நாள் : 20 ஏப்ரல் 2006
நாட்கள் : 1 நாட்கள்
கைலாஸா - ஞான சூழலியல் : ஆதி கைலாஸா - நித்யானந்தபீடம், பெங்களூரு ஆதீனம், பிடதி, கர்நாடகா, இந்தியா.
நடைபெற்ற இடம் : ஆதி கைலாஸா - நித்யானந்தபீடம், பெங்களூரு ஆதீனம், பிடதி, கர்நாடகா, இந்தியா.
நிகழ்வுகள் : நித்யானந்தேஸ்வர பரமசிவ தேவாலயம் - பூமி பூஜை விழா
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : ஆதி கைலாஸா - நித்யானந்தபீடம், பெங்களூரு ஆதீனம், பிடதி, கர்நாடகா, இந்தியா.
நிகழ்வினை நடத்தியவர் : சனாதன இந்து தர்மத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்
பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : லட்சக்கணக்கான பக்தர்கள்
நிகழ்வின் விவரனை :
சனாதன இந்து தர்மத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஆதி கைலாஸாவில் எழுந்தருளி நித்யானந்தேஸ்வர பரமசிவ தேவாலாயத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள்.
"
நித்யானந்தேஸ்வர பரமசிவ தேவாலயம்-பூமி பூஜை விழா
கோயில்_சாஸ்திர பிரமாணம்
" வேத பாரம்பரியம் மற்றும் இந்துக்களின் வாழ்க்கை முறையின் இதயமாக இருப்பது கோவில்கள். கோவில் என்பது தெய்வ சக்தி அழகாக விக்ரஹங்களின் மூலம் தன்னை வெளிப்படுத்தும் சக்தி ஸ்தலங்களாகும். வேத பாரம்பரியத்தில் எல்லா மனித குடியேற்றமும் கோவில்களைச் சுற்றியே அமைந்திருந்தது. அதனால்தான் இந்து மதம் கொண்டாட்டங்கள் நிறைந்ததாக, திருவிழாக்கள் நிறைந்ததாக அமையப்பெற்றுள்ளது.
வேத காலத்தில் கோவில்கள் கலாச்சாரம், கல்வி, சக்தி அறிவியல் ஆகியவற்றை பயிலும் பல்கலைக்கழகமாக இருந்தது. பக்தியால் மலர்ந்த ஜீவன் முக்த சமுதாயம் வளர்ச்சி அடையும் இடமாக இருந்தது.
தெய்வ திருமேனிகள் ஒவ்வொன்றும் பித்யேக சக்திகளை ஈர்க்கும் சிறப்புகளை பெற்றிருந்தது. அதற்கான சடங்குகளும், பூஜை முறைகளும், திருவிழாக்களும் அப்பிரத்யேக சக்திகளை உலக நன்மைக்காக தெய்வ விக்ரஹங்கள் வழியாக வெளிப்படுத்துவதற்காக நிகழ்த்தப்படுகின்றன.
கோவில்களில் உள்ள விக்ரஹங்களில் பிராணப் பிரதிஷ்டை செய்து பிரபஞ்ச சக்தியை வெளிப்படுத்த செய்வதன் நோக்கம் - அங்கு அந்த தெய்வ சக்தி சூழலில் வாழும் அனைவரும் அமைதியும், குணமளிக்கும் சக்தியும், பெற வேண்டும் என்பதற்கே. அவர்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேறி தனிநபருக்கும், அந்த சமுதாயத்திற்கும் நல்ல ஞானம் கிடைக்க வேண்டும் என்பதற்கே.
இந்த அபரிமிமான பிரபஞ்ச சக்தியை கால காலத்திற்கும் அந்த தெய்வ திருமேனிகள் வெளிப்படுத்த வேண்டுமானால், ஞானியால் பிராணப்பிரதிஷ்டை நிகழ்த்தப்பட வேண்டும். ஞான புருஷரால் பிராணப்பிரதிஷ்டை செய்யப்படும் விக்ரஹம் தனித்து இயங்கும் ஆற்றலை, புத்திசாலித்தனத்தை பெறுகிறது. பூஜாரிகளால் செய்யப்பட்ட பிரதிஷ்டை என்பது மந்திரங்களால் உருவேற்றப்பட்ட சக்தியாகும்.
ஶீ ஸதாசிவ உவாச
யோ யதேவப்ரதிக்ரு'திம் ப்ரதிஷ்டாபயதி ப்ரியே |
ஸ தல்லோக்கமவாப்னோதி போகானபி ததுத்பவான் ||
ஶீ சதாசிவம் சொல்கிறார்... ஓ பிரிய தேவி! யார் திடப் பொருளான விக்ரஹங்களுக்குள் சக்தியை செலுத்தும் அறிவியலான பிராணப்பிரதிஷ்டையை செய்கிறார்களோ, அவர் அந்த விக்ரஹத்தினுடைய அதே நிலையையும் அனுபவத்தையும் ஆனந்தத்தையும் அடைகிறார்.
- மஹாநிர்வாண தந்திரம் ( த்ரயோதஸ உல்லாசா)
இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் கைலாஸாவின் நித்யானந்தேஸ்வர பரமசிவ தேவாலயங்களை உலகம் முழுவதும் நிர்மாணித்து வருகிறார். கோவில்களின் தாத்பரியம் உண்மை வடிவில் கைலாஸாவின் இந்து ஆலயங்களில் பின்பற்றப்படுகிறது. பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹங்கள் வாழும் அர்ச்சாவதாரமாகின்றன. இந்த விக்ரஹங்ளோடு தங்களை உணர்வு பூர்வமாக இணைத்துக் கொள்ளும் பக்தர்களுக்குள் ஒருமைத்தன்மையை, சுத்தாத்வைத அனுபவத்தை விக்ரஹங்கள் அருள்கின்றன.
கோவில்கள் - பிரபஞ்ச சக்தியை ஈர்த்து அளிக்கும் செயற்கைக்கோள் நிலையமாக செயல்படுகின்றது. இதன் தெய்வீக சக்தி உடலளவிலும், மனதளவிலும், உணர்வளவிலும் குணப்படுத்தும். இத்தகைய தெய்வீக சக்தியோடு தன்னை இணைத்துக் கொண்டு வாழ்வில் வளம் பெற மனித குலத்திற்கு பூமியெங்கும் அதிகமான கோவில்கள் தேவைப்படுகிறது. இந்த கோவில்கள் பூமியில் தொடர்ந்து நேர்மறையான சக்தியை வெளிப்படுத்தி உலகின் அமைதிக்கு பெறும் பங்களிக்கின்றது.
இத்தகைய ஆன்மிக பலன்களை உயிர்கள் பெறுவதற்காக பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் ஆகம அறிவியல் மற்றும் சாஸ்திரங்களின் அடிப்படையிலேயே கைலாஸாவின் ஆலயங்களை - பிரபஞ்ச சக்தி மையங்களை நிர்மாணிக்கின்றார். இதன்மூலம் கோடிக்கணக்கான பக்தர்கள் பயனடைகின்றார்கள். "