08 பிப்ரவரி 2003 உலக அமைதிக்கான பங்களிப்பு

From Nithyanandapedia
Revision as of 11:50, 14 January 2021 by Ma.divya (talk | contribs) (Created page with "==<big>உலக அமைதிக்கான பங்களிப்பு( Contribution for World Peace)</big>== '''வருடம் ''' : 2003 '''நாள் :'''0...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

உலக அமைதிக்கான பங்களிப்பு( Contribution for World Peace)

வருடம்  : 2003

நாள் :08 பிப்ரவரி 2003

நாட்கள் : தினந்தோறும் நடைபெறும் தியான சிகிச்சை

நிகழ்வு : தியான சிகிச்சை

நிகழ்வின் விபரம் : இலவச தியான சிகிச்சை

பங்கேற்பாளர்களின் விபரம் : பொது மக்கள்

நடைபெற்ற இடம் : ஶீ சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோ, பெங்களூரு

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்தபீடம், பெங்களூரு

நிகழ்வினை நடத்தியவர் : சனாதன இந்து தர்மத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : ஆயிரக்கணக்கான பொது மக்கள்

நிகழ்வின் விவரனை :

தானத்தில் சிறந்த தானம் ஞான தானம். பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் பெங்களூர் ஶீ சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோ, 48, மில்லர்ஸ் டேங் பண்டு ரோடு எனும் இடத்தில் அரும் பெரும் சேவைகளை தினந்தோறும் செய்து வருகிறார் என்பதையும், அத்தகைய சேவைகளை மேலும் விரிவு செய்திட பிடதியில் ஆஸ்ரமம் அமைத்து வருவதுப்பற்றியும் இந்த பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது. காலையில் துவங்கி மதியம் 1 மணி வரை - மீண்டும் 4 மணி முதல் இரவு 10 வரையிலும் தியான சிகிச்சை அளிக்கப்படுவதைப்பற்றியும் இந்த செய்தியில் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது.


இலவச தியான சிகிச்சை


உலக அமைதி-சாஸ்திர பிரமாணம்

உலக அமைதி என்பது ஒவ்வொரு தனிமனிதரும் தன்னைப்பற்றி உணரும் உணர்வு, மற்றவர்களைப்பற்றி உணரும் உணர்வு, உலகைப்பற்றி உணரும் உணர்வுகளில் உன்னதம் நிகழும்பொழுதே சாத்தியம்.

உள்ளுக்குள் எவ்வாறு பார்க்கின்றோமோ, அவ்வாறே புரிந்து கொள்கின்றோம். அதனால் தான் நமது இந்து மதத்தில் இந்த 'பார்த்தல்' என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது... அதில் உன்னதம் நிகழ அனைத்து வகையிலும் வழிகாட்டப்படுகிறது.

ஸமம் ஸர்வேஷூ பூதேஷூ திஷ்டந்தம் பரமேஸ்வரம் |

விநஶ்யத்ஸ்வவிநஶ்யந்தம் ய: பஶ்யதி ஸ பஶ்யதி ||

யார் ஒருவர், எல்லா உடல்களிலும் அந்த மேலான பரம்பொருளே தனி ஆத்மாவாக இருக்கிறது என்பதை பார்க்கிறாரோ, அந்தத் தனி ஆத்மாவிற்கும், அந்த மேலான பரம்பொருளுக்கும் எப்பொழுதுமே அழிவில்லை என்று புரிந்து கொள்கிறாரோ, அவர்தான் உண்மையிலேயே பார்க்கிறார்.

- பகவத்கீதை ( க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம் -13.27)

அனைத்தும் பரம்பொருளாக காணும் உள்முகப் பார்வையே இந்து மதத்தில் குருவால் ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ளுலக ஞானமாக அருளப்படுகிறது. உள்ளுலக அமைதியே இந்து மதத்தின் அடிப்படை போதனையாகும். உள்ளுலக அமைதியாலேயே உலக அமைதி நிகழும்.

ஓம் ஸஹனாவவது |

ஸஹனெளபுனக்து |

ஶஹவீர்யங்கரவாவஹை |

தேஜஸ்வினாவதீதமஸ்து மாவித்விஷாவஹை: ||

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

ஓம். நாம் இருவரும் (குரு மற்றும் சீடன்) ஒன்றாக பாதுகாக்கப்படுவோம். நாம் இருவரும் இந்த ஞானத்தால் வளர்க்கப்பட்டு வளப்படுத்தப்படுவோம். நாம் இருவரும் உயர்ந்த ஆன்ம பலம், சக்தி மற்றும் உத்சாகத்துடன் பணிபுரிவோம். கல்வியும் கற்றலும் நம் இருவருக்கும் உயர் ஞானத்தின் ஒளியை அளித்து கூர்மையாக்கட்டும். நாம் இருவரும் நமக்குள் எந்த குறையுணர்வும் எதிர்ப்புத்தன்மையும் அற்று இருப்போம். ஓம் நமது உள்ளத்தில் அமைதி நிலவட்டும். இந்த இயற்கையில் அமைதி நிலவட்டும். இந்த தெய்வீக சக்தி வெளிப்பாடுகளில் அமைதி நிலவட்டும்.

- க்ருஷ்ண யஜூர் வேதம், தைத்ரிய உபநிடதம் 2.2.2

குறையுணர்வுகளை நிறைவு செய்து, சக்திகளை வெளிப்படுத்தி அனைத்திலும் அமைதியை நிகழ்த்தும் குருவின் பங்களிப்பே உலக அமைதிக்கான முதன்மையான பங்களிப்பாகும்

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் உலகம் முழுவதும் அமைதி நிலவ இந்த ஞானப்பார்வையை அனைவருக்கும் அறிவியலாக கற்றுத் தருகிறார்.

வாழ்க்கையை உச்சமான நேர்மறைத்தன்மையில் வாழ கற்றுத்தரும் தியான முகாம்கள், தியான சொற்பொழிவுகள், யாகங்கள், பூஜைகள் ஆகியவற்றை அளிக்கின்றார். உயர் உயிர் விழிப்புணர்வை வாழும் சாத்தியத்தை அனைவருக்கும் அளிக்கின்றார்.

தொடர்ந்து உலக அமைதிக்காக தன்னலமற்ற சேவை புரியும் பகவானின் செயல்களை பாராட்டி பல உலகத்தலைவர்கள் தங்கள் தலைநகரத்தில் பகவானின் சாந்நித்யம் நிகழ வரவேற்பு அளிக்கின்றனர். பகவானின் சங்கத்திற்கு தொடர் அங்கீகாரம் அளித்து ஊக்கம் அளிக்கின்றனர்.