28 ஜனவரி 2018 உலகளாவிய இந்து சமுதாயங்கள்

From Nithyanandapedia
Revision as of 08:07, 13 January 2021 by Ma.divya (talk | contribs) (Created page with "==<big>உலகளாவிய இந்து சமுதாயங்கள் (Hindu Diaspora)</big>== '''வருடம் ''' : 2018 '''நாள் :''' 28 ஜன...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

உலகளாவிய இந்து சமுதாயங்கள் (Hindu Diaspora)

வருடம்  : 2018

நாள் : 28 ஜனவரி 2018

கைலாஸா - ஞான சூழலியல் : நித்யானந்த சங்கம் - மலேசியா

நடைபெற்ற இடம் : மலேசியா பத்துமலை முருகன் கோயில் அருகில் - பிளையோவர் கீழ்

நிகழ்வுகள் : தைப்பூசம்-தைப்பூச திருவிழாவில் அன்னதானம்

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : Persatuan Penganut Nithyananda Sanga Malaysia

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 10000

நிகழ்வின் விவரனை : மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் கொண்டாடப்பட்ட தைப்பூசம் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு மலேசியாவில் உள்ள கைலாஸாவின் ஒருங்கிணைப்பாளர்களால், பக்தர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது.


உலகளாவிய இந்து சமுதாயங்கள்


உலகளாவிய இந்து சமுதாயங்கள்- சாஸ்திர பிரமாணம்

எப்போதும் உலக நன்மைக்காக செயல்பட்டுக் கொண்டே இருங்கள், பங்களிப்பு செய்து கொண்டே இருங்கள் என்று நம் சனாதன இந்து தர்மம் வழிகாட்டுகிறது.

ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷூ லோகேஷூ கிஞ்சந |

நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி || 3.22

ஓ பார்த்தனே, மூன்று உலகங்களிலும் நான் செய்வதற்கு என்று காரியம் எதுவும் இல்லை. எனக்கு விருப்பங்களும் இல்லை; செயல் மூலம் அடையப்பட வேண்டிய பலன்களும் இல்லை; இருந்தும், நான் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

- பகவத்கீதை ( அத்தியாயம் 3 - கர்ம யோகம்)

அடையப்படுவதற்கு மூன்று உலகங்களிலும் எதுவும் இல்லை என்றாலும், செய்வதற்கு என்று காரியம் எதுவும் இல்லை என்றாலும் - ஞானகுருநாதர் உலக மக்களின் நன்மைக்காக தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கிறார்.

யத்யதாசரதி ஶ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:

ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே || 3.21

ஒரு உயர்ந்த மனிதர் ஒரு செயலைச் செய்யும் போது, மற்றவர்கள் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர் வகுத்த அந்த பாதையில் செல்கிறார்கள்.

- பகவத்கீதை ( அத்தியாயம் 3 - கர்ம யோகம்)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் வழியை பின்பற்றி உலகம் முழுவதும் உள்ள கைலாஸாவில் பக்தர்கள் உலக நன்மைக்காக பல சேவைகளை செய்து வருகிறார்கள்.

பகவான் வகுத்த தந்த பாதையில் செயல்படும் பக்தர்கள் தங்கள் செயல்மூலம் அடையப்படும் பலன்களை பகவானின் திருப்பாதங்களில் சமர்ப்பணம் செய்து செய்வனே கர்மயோகப் பாதையில் பயணிக்கின்றனர்.