12 டிசம்பர் 2007 குருமுடி யாத்திரை

From Nithyanandapedia
Revision as of 16:02, 6 January 2021 by Ma.atmapriya (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

நிகழ்வு

வருடம் :2007

நாள் :12 டிசம்பர் 2007

எந்துனை நாட்கள் யாத்திரை திட்டமிடப்பட்டது : 21 நாட்கள் விரதம்

நிகழ்வு : யாத்திரை

பங்கேற்பாளர்களின் விபரம் : தீட்சை பெற்ற சீடர்கள்

பயணித்த தூரம் : பக்தர்கள் தங்களது இல்லங்களில் இருந்து யாத்திரையை துவக்கினார்கள்.

யாத்திரை துவங்கிய இடம் : பக்தர்கள் தங்களது இல்லங்களில் இருந்து யாத்திரையை துவக்கினார்கள்.

நிகழ்வின் பெயர் : குருமுடி யாத்திரை

நடைபெற்ற இடம் : தேவிபட்டினம், திருச்செந்தூர் முருகன் கோயில், ராமேஸ்வரம், தமிழ்நாடு

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : ஆதி கைலாஸா - நித்யானந்தபீடம், பிடதி, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா

நிகழ்வினை நடத்தியவர் : ஆதி கைலாஸா - நித்யானந்தபீடம், பிடதி, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 2000

நிகழ்வின் விவரனை : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் தீட்சை பெற்ற சீடர்கள் குருமுடி கட்டி விரதமிருந்து, யாத்திரையாக வந்து காணிக்கை செலுத்துகின்றனர்.


12 டிசம்பர் 2007- படங்கள்



யாத்திரை: தவத்தின் தாத்பரியம் :

பரம்பொருள் பரமசிவன் ஈஸ்வர கீதையில் அருளிய உயரிய தவத்தின் 8 அங்கங்களும் யாத்திரையில் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது...

'பரியும கிஞ்சைப் பழிதீர் பிரம

சரியந் தவந்திரு சந்தோட முண்மை

யுரியபொ றைதூய்மை யுண்டென்றி ருக்கை

யரியவி ரதத்துக் கங்கங்க ளாமால்...' - ஈசுவர கீதை (கூர்ம புராணம்) (சிவப்பிரகாசம் எனும் தமிழநுவாதம், அத்தியாயம் 11, யோகம் - கலிவிருத்தம் - 296 பாடல், ஶீ தத்துவராய சுவாமிகளின் பொழிப்புரை)

விரும்பத்தக்க அகிம்சையும், குற்றமற்ற பிரமசரியமும், தவமும், உண்டாகின்ற சந்தோஷமும், சத்தியமும், உரியதாயுள்ள பொறை ( க்ஷமை - திதிக்ஷ)யும், சரீரமனோசெளசமும் (தூய்மையும்), ஆஸ்த்திக்யமும் (நிலையானதுண்டு எனும் உறுதி) ஆகிய இவை அருமையான தவத்திற்கு எட்டு அங்கங்களாகும்.

பரம்பொருள் பரமசிவன் ஈசுவர கீதையில் உரைத்தவாறே தவத்தின் எட்டு அங்கங்களும் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் சீடர்களால் முழு சிரத்தையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

தவத்தின் மகோன்னதத்தை, பலனை அக்னி பகவான் உரைக்கின்றார்...

'தபஸோ ஹி பரம் நாஸ்தி தபஸா வின்ததே மஹத்

தபஸா க்ஷீயதே பாபம் மொததே சஹ தைவதை

தபஸா பிராப்யதே ஸ்வர்கஸ் தபஸா பிராப்யதே யஷ

தபஸா ஸ்வர்வமாப்போதி தபஸா வின்ததே பரம்'

பொருள்: தவத்தைவிடவும் பெரியது ஏதும் இல்லை. தவத்தினால் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. தவத்தினால் பாவங்கள், கர்மங்கள் நிறைவு பெறுகின்றன. தவத்தினால் ஒருவர் கடவுளோடு ஒருங்கிணைகிறார். தவத்தினால் நற்பெயர், புகழ் மற்றும் அருள் பெறப்படுகின்றது. தவத்தினால் அனைத்தும் அடையப்படுகின்றது. தவத்தினால் உயர்ந்த பிரம்மநிலை வெளிப்படுத்தப்படுகின்றது.

அக்னி பகவான் தவத்தைப்பற்றி அளித்திருக்கும் தவத்தின் அனைத்து நற்பயன்களையும் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் யாத்திரை மேற்கொண்ட அனைவரும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட ஆசி வழங்குகின்றார். "