09 நவம்பர் 2003 பக்தி பாடல்கள்
பக்தி பாடல்கள் (Devotional Songs)
வருடம் : 2003
நாள் :09 நவம்பர் 2003
நாட்கள் : ஒரு நாள்
நிகழ்வு : பக்தி பாடல்கள்.-சங்கீர்த்தன்
பங்கேற்பாளர்களின் விபரம் : தீட்சை பெற்ற சீடர்கள்
நிகழ்வின் பெயர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆனந்த கீர்த்தனம்
நடைபெற்ற இடம் : திருவண்ணாமலை
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்த பீடம், திருவண்ணாமலை
நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்.
பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1,00,000 - லட்சக்கணக்கான மக்கள்
நிகழ்வின் விவரனை : திருவண்ணாமலையில் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்நிகழ்வில் பகவான் அவர்கள் பக்தர்களுக்காக சங்கீர்த்தனம் செய்தார்.
பக்தி பாடல்கள்.-சங்கீர்த்தன்
சங்கீர்த்தனம்_சாஸ்திர பிரமாணம்
"
இறைவனை உள்ளம் உருகப் பாடி கைத்தொழுவது நம் கர்மவினைகளை உருக்கி கரைத்துவிடும்.
நம் மகான்கள் இறைவனை புகழ்ந்து பாடி கொண்டாடுவதை தங்கள் வாழ்க்கையாக கொண்டார்கள், வாழ்க்கைமுறையாக மனித குலத்திற்கு போதித்தார்கள்.
அப்பர் சுவாமிகள் அண்ணாமலையாரை ஆடிப்பாடி கைத்தொழுங்கள் என்று தமது ஐந்தாம் திருமுறையில் அருளியுள்ளார்...
பாடல் எண் : 5
தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்
ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.
பொழிப்புரை :
தேடிச்சென்று பெரிய பெருமான் திருவடிகளை வணங்குங்கள், அவனது பாதக் கமலங்களை பற்றுங்கள். அங்ஙனம் செய்ய அவரே நாடிவந்து ஆட்கொள்வார். ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நமது உள்ளத்துள் உள்ள வினைகள் ஓடிப்போகும் என்று எடுத்துரைக்கிறார்.
அப்பர் பெருமான் இறைவனை பாடல், நடனம் வழியாக வணங்கும் அறிவியலை வாழ்க்கைமுறையாக இந்த மனிதகுல நன்மைக்காக உரைக்கிறார்.
நால்வருள் ஒருவரான மாணிக்கவாசக பெருமான் அவர்கள் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவையில் வாழ்வை கவ்விய காரிருளை போக்கும் வாழ்க்கை முறையாக சங்கீர்தனத்தை அருள்கிறார்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள் தோழிகள்.
பாடல் 8
கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.
பொருள்:
தோழியை எழுப்ப வந்த பெண்கள், “அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.
இறைவனை அன்பால் பக்தி செய்ய நமது முன்னோர்கள் இவ்வாறான மிகச்சிறந்த வழிகளை வகுத்தளித்துள்ளார்கள்.
பகவான் ஶீ கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்யும்போது...
அந்யே த்வேவமஜாநந்த: ஶ்ருத்வாந்யேப்ய உபாஸதே|
தேsபி சாதிதரந்த்யேவ ம்ரு'த்யும் ஶ்ருதிபராயணா:|| 13.25
வேறு சிலர், போதிய ஆன்மிக புத்திசாலித்தனம் இல்லையென்றாலும், மற்றவர்கள் சொல்லக்கேட்டு, ஒப்புயர்வற்ற இறைவனை வழிப்படத் தொடங்குகிறார்கள. ஒப்புயர்வற்ற இறைவனைப் பற்றி கேட்பதாலேயே சிலர் பிறப்பு, இறப்பு என்னும் வழியை கடக்கிறார்கள்.
- பகவத்கீதை ( க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம் -13.25)
ஞான மார்க்கத்தால் இறைவனை உணர இயலாதவர்கள், இறைவனின் ஒப்புயர்வற்ற மகிமைகளை கேட்பதனாலும், பாடுவதனாலும் உயர் உயிர் விழிப்பு பெறுகிறார்கள். அத்தகைய சாத்தியம் இந்து மதத்தில் அளிக்கப்படுகிறது.
இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் இந்துமதத்தின் தனிப்பெரும் பங்களிப்பான சங்கீர்த்தனம் செய்வதை தமது கைலாஸாவின் வாழ்க்கை முறையின் பாகமாக வகித்துள்ளார். தமது நித்யானந்த கீர்த்தனாலயா வழியாக ஆயிரக்கணக்கான பக்திப்பாடல்களை வெளியிட்டு மனித குலத்தில் பக்தியை மலர செய்துள்ளார்.
பகவான் தாமே பல பாடல்களை இயற்றி பாடியிருக்கிறார். இந்த பாடல்கள் அனைத்தும் பகவான் எந்த நிலையிலிருந்து பாடினாரோ அதே சுத்தாத்வைத நிலைக்கு பக்தர்களையும் கொண்டு செல்கிறது.
"