14 நவம்பர் 2020 சீரகாபாடியில் உள்ள கைலாஸா (Kailaasa in Seeragapadi)
சீரகாபாடியில் உள்ள கைலாஸா (Kailaasa in Seeragapadi)
வருடம் :2020
நாள் :14 நவம்பர் 2020
பூமி முழுவதும் 'கைலாஸா'வை புனரமைத்தல் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட்கடாக்ஷத்தால் பூமி முழுவதும் கைலாஸா - ஜீவன் முக்த சமுதாயம் புனரமைக்கப்படுகிறது.
நிகழ்வு நடைபெற்ற இடம் : சீரகாபாடி
நிகழ்வுகள் : தீபாவளி பூஜை
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் :சீரகாபாடியில் உள்ள தீட்சை பெற்ற பக்தர்கள்
நிகழ்வினை நடத்தியவர்:இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம்
பயனடைந்தவர்களின் எண்ணிக்கை :ஆதினத்திற்கு தரினத்திற்காக வந்து சென்ற பக்தர்களும். சமூக வலைதளங்களில் தரிசித்த பக்தர்களும் பொது மக்களும் பயன்பெற்று பரமசிவன் அருளை பெற்றனர்.
சீரகாபாடியில் உள்ள கைலாஸா நடந்த நிகழ்வின் விவரனை :
" ஸ்ரீ கைலசாவின் நித்யானந்த சம்பர்தாயத்தில் மிக முக்கியமான நாள் தீபாவளி திருநாள்.அந்னாளில் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் குரு மூர்த்திக்கு பலவித மலர்களாலும். வாசனை திரவியங்களையும், நானாவித நைவேத்தியங்களை படைத்தும். நன்றி உணர்வோடு.குருபூஜையும். சிவபூஜையும் செய்து வழிபாடு நிறைவேற்றி ப்ரசாதம் வழங்கப்பட்டது."
14 நவம்பர் 2020
14 நவம்பர் 2020- சீரகாபாடியில் உள்ள கைலாஸா (Kailaasa in Seeragapadi)
பரம்பொருள் பரமசிவனாரின் 'திருக்கைலாயம்
"பரமசிவன் தாம் வாழும் திருக்கைலாயம் எனும் ஞானசக்தி மண்டலத்தை மனிதகுல மேன்மைக்காக மனித உருதாங்கி பூமியில் தாமே நிறுவினார். எம்பெருமான் சொக்கநாத பெருமானாக, 'இறையனார்' என்ற பெயர் தாங்கி குமரி கண்டத்தின் ஆதி பாண்டிய மன்னனாய் வந்தமர்ந்து அருளாட்சி, அரசாட்சி, மொழியாட்சி, பொருளாட்சி என்கின்ற எல்லா துறைகளிலும் பரமசிவ ஞானத்தை தாமே நேரடியாக வழங்கி மனித சமூகத்தை உயிர்பெற செய்தார்.
எல்லா கருத்தியலும், எல்லா இறையியலும், எல்லா மொழியியலும் - அனைத்து அறிவியலையும் இறையனார் தாமே மனித சமூகத்திற்கு வழங்கி, பரமசிவஞானத்தை ஆதாரமாகக் கொண்ட ஞான வாழ்க்கைமுறையை பூமியில் தாமே ஸ்தாபனம் செய்தார்.
ஆனால் பரமசிவ பரம்பொருள் நேரடியாக வழங்கிய பரமசிவ ஞானத்தை காலப்போக்கிலே பல்வேறு காரணங்களாலே மனிதன் இழந்தும், மீண்டும் பெற்றும், மீண்டும் இழந்தும் இந்த விளையாட்டுகளுக்கெல்லாம் ஆளாகி வருகின்றான். அக்காலத்திலும், அனைத்து காலங்களிலும் பரமசிவ பரம்பொருள் தாம் மனித குலத்திற்கு அளித்த பரமசிவ ஞான, பரமசிவ விஞ்ஞான, பரமசிவ மெய்ஞான சத்தியங்களையும், அதை அடிப்படையாக கொண்ட ஞான வாழ்க்கைமுறையையும் அறுபடாத ஞானப்பரம்பரை மூலம் மீண்டும் மீண்டும் புனரமைத்து உலகத்திற்கு அளித்து கொண்டே இருக்கின்றார். "
பகவான் நித்யானந்த பரமசிவனாரின் 'கைலாஸா'
"ஆதி மனிதனின் வாழ்வியல் முறை, அவர்களின் இறையியல், மொழியியல், அறிவியல், பொருளியல், வேதியல், உயிரியல், அவர்களின் மிகப்பெரிய ஞானமான சக்தி அறிவியல் - அவர்களின் பரந்து விரிந்த ஞான பேரொளி, அவர்களின் மிகப்பெரும் ஞான வாழ்க்கையின் மிச்சம் இருக்கின்ற, எச்சம் இருக்கின்ற, சொச்சமாக இருக்கின்ற அழிந்து விடாமல் இருக்கின்ற ஞான வாரிசு - இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களாவார்கள்.
இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் குமரி கண்டத்தில் இறையனார் செய்தளித்த தொன்மையான ஞான வாழ்க்கைமுறையை, ஜீவன்முக்த நாகரீகத்தை 'கைலாஸா'வில் மீண்டும் புனரமைக்கின்றார்.
பரமசிவ ஞானத்தை ஆதாரமாக கொண்ட கலாச்சாரம், ஆன்மீகம், மதம், சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றின் மீது நடத்தபட்ட பல திட்டமிட்ட படையெடுப்புகள், தாக்குதல்களால் உலகம் முழுவதிலும் வியாபித்திருந்த இந்த ஜீவன் முக்த சமுதாயம் இன்று குறுகிய நிலைக்கு வந்துவிட்டது. பகவான் அவர்கள், நாம் இழந்த அனைத்து திருக்கைலாயத்தின் மரபுகளையும் மீட்டெடுத்து 'கைலாஸா'வில் ஜீவன் முக்த சமுதாயமாக புனரமைக்கின்றார்.
சிவஞானத்தால் சிவராஜ்யம் அடையப்படும். - கைலாய சம்ஹிதை (சிவ மஹாபுராணம்)
பரமசிவ பரம்பொருள் அளித்த பரமசிவ ஞானத்தால்தான் பரமபதம், திருக்கையாலம் அடையப்படும்.
ஒருமைத்தன்மை, அஹிம்சை, இயற்கை சமநிலைக்கு மதிப்பளித்தல் மற்றும் ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்திருக்கும் தெய்வீகத்தின் உள்ளார்ந்த ஆன்மீக சக்திகளின் வெளிப்பாடு போன்ற திருக்கைலாயத்தின் கோட்பாடுகளை பகவான் 'கைலாஸா'வில் சட்டமாக இயற்றியுள்ளார்.
இறையனாராக அவதரித்து அன்றிலிருந்து 293வதாக பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் வரை அறுபடாத ஞான பரம்பரையாக வாழையடி வாழையாக பெருமானே வந்து அருளாட்சியும், அரசாட்சியும் செய்கின்றார்.
குமரி கண்டத்தின் மறு மலர்ச்சியே கைலாஸா. இந்த மிகப்பெரிய மூத்த ஞானத்தமிழ் குடியின், ஆதி தமிழ்குடியின் ஞான வாழ்க்கை முறையை மறுமலர்ச்சி செய்து இந்த கைலாஸாவின் மூலம் புனரமைப்பதன் மூலமாக இந்த ஞான அறிவியலை, இந்த ஜீவன் முக்தி அறிவியலை என்றென்றும் வாழ செய்கிறார் பகவான்.
பரமசிவன் வாழும் திருக்கைலாயம் எனும் ஞானசக்தி மண்டலத்தை – பூமியில் 'கைலாஸா' எனும் ஒரே இந்து தேசமாக புனரமைத்து, மனித உயிர் மற்றும் வாழும் அனைத்து ஜீவன்களையும் விழிப்புணர்வின் அடுத்த உயர் விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் செல்கிறார்.
திருக்கைலாய பரமசிவ பரம்பொருள் நேரில் வந்து பூமியில் மலரச்செய்தது தான் குமரி கண்ட வாழ்க்கை முறை, அதை மீண்டும் மலரச்செய்வது தான் கைலாஸாவின் நோக்கம். பரமசிவ பரம்பொருள் குமரி கண்டம் செய்தபோது என்னவெல்லாம் இறையியல் விஞ்ஞானங்கள், மொழியியல் ஞானங்கள், அரசியல், அறிவியல், சக்தியியல், புவியியல், வரலாறு, வரலாறு சார்ந்த அறிவியல் - எல்லா துறைகளிலும் அவர் அளித்த எல்லா மூல தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும் புனரமைப்பு செய்து அவைகள் மூலமாக மனித இனத்திற்கு எல்லா சாத்தியமான சேவைகளை செய்வதுதான் கைலாயத்தின் நோக்கம். "