04 செப்டம்பர் 2009 பத்திரிகை செய்தி
வெளியீடு
தினச்சுடர்
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - இப்போது நாம் வாழும் வாழ்வே மாயை எனப் புரிய வைக்கும் விழிப்புணர்வை பற்றி விளக்கும் கட்டுரை.
நாள் :04 செப்டம்பர் 2009
தலைப்பு : கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: மாயா – ஒரு விஞ்ஞான விளக்கம்
"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவை திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவை திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.
அவ்வகையில் தினச்சுடர் 04-09-2009 ஆம் நாளிதழில் ‘மாயா – ஒரு விஞ்ஞான விளக்கம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. நமது மூளைக்கு 'நிஐம் - கனவு - கற்பனை' ஆகிய மூன்றுக்கும் பிரித்துப் பார்க்க தெரியாது. ஆனால் விழிப்புணர்வின் மூலம் நம்மால் பிரித்தறிய முடியும்.
விழிப்புணர்வு இன்னும் அதிகமானால் இப்போது நீங்கள் வாழும் வாழ்வே மாயை எனப் புரியும். ஞானிகள் மனிதனை விட பல ஆயிரம் மடங்கு விழிப்புணர்வு அதிகம் பெற்றவர்கள். ஞானிகள் கருணையினால் மனிதகுல சேவைக்காக வருகிறார்கள் என்றும் ஞானிகள் எழுப்பினாலும் நாம் எழ விரும்ப வேண்டுமே என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார்."
04 செப்டம்பர் 2009
04 செப்டம்பர் 2009 -பத்திரிகை செய்தி