24 டிசம்பர் - 03 ஜனவரி 2015 பாத யாத்திரை

From Nithyanandapedia
Revision as of 11:14, 31 December 2020 by Ma.Akshaya (talk | contribs) (Created page with "==<big>பாத யாத்திரை</big>== மகாசிவராத்திரி === நிகழ்வு === '''வருடம் ''' :2015 '''நாள்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

பாத யாத்திரை

மகாசிவராத்திரி


நிகழ்வு

வருடம் :2015

நாள் :24 டிசம்பர் - 03 ஜனவரி 2015

எந்துனை நாட்கள் யாத்திரை திட்டமிடப்பட்டது : 10 நாட்கள்

நிகழ்வு : யாத்திரை

பங்கேற்பாளர்களின் விபரம் : பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் தீட்சை பெற்ற பக்தர்கள், சீடர்கள் இந்த பாத யாத்திரையில் பங்கேற்றார்கள்.

பயணித்த தூரம் : 285 கிலோ மீட்டர் தூரம் நடந்து பயணம் செய்யப்பட்டது

யாத்திரை துவங்கிய இடம் : திருவண்ணாமலை, தமிழ்நாடு, இந்தியா

நிகழ்வின் பெயர் : பாத யாத்திரை

நடைபெற்ற இடம் :திருவண்ணாமலை

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்த பீடம், திருவண்ணாமலை

நிகழ்வினை நடத்தியவர் : பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியால் நடைபெற்றது.

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 10000

பாத யாத்திரை தவத்தின் தாத்பரியம்ர் :

பாத யாத்திரை 'பரமசிவத்துவத்தை' உணர்வதற்கான உயரிய யோகம், உயரிய தவம்.இது உடலாலும், மனத்தாலும், உயிராலும் செய்யப்படும் தவம். பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் தீட்சை பெற்ற சீடர்கள் ஒவ்வொரு பிரம்மோற்சவத்தின்போது பாத யாத்திரை மேற்கொள்கின்றனர். பாத யாத்திரையினை மேற்கொண்டு மேலான நலன்களை பெறுகின்றனர்.

பரம்பொருள் பரமசிவன் ஈஸ்வர கீதையில் அருளிய உயரிய தவத்தின் 8 அங்கங்களும் பாதயாத்திரையில் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது...

'பரியும கிஞ்சைப் பழிதீர் பிரம சரியந் தவந்திரு சந்தோட முண்மை யுரியபொ றைதூய்மை யுண்டென்றி ருக்கை யரியவி ரதத்துக் கங்கங்க ளாமால்...' - ஈசுவர கீதை (கூர்ம புராணம்) (சிவப்பிரகாசம் எனும் தமிழநுவாதம், அத்தியாயம் 11, யோகம் - கலிவிருத்தம் - 296 பாடல், ஶீ தத்துவராய சுவாமிகளின் பொழிப்புரை)

விரும்பத்தக்க அகிம்சையும், குற்றமற்ற பிரமசரியமும், தவமும், உண்டாகின்ற சந்தோஷமும், சத்தியமும், உரியதாயுள்ள பொறை ( க்ஷமை - திதிக்ஷ)யும், சரீரமனோசெளசமும் (தூய்மையும்), ஆஸ்த்திக்யமும் (நிலையானதுண்டு எனும் உறுதி) ஆகிய இவை அருமையான தவத்திற்கு எட்டு அங்கங்களாகும்.

பரம்பொருள் பரமசிவன் ஈசுவர கீதையில் உரைத்தவாறே தவத்தின் எட்டு அங்கங்களும் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் சீடர்களால் முழு சிரத்தையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

தவத்தின் மகோன்னதத்தை, பலனை அக்னி பகவான் உரைக்கின்றார்... 'தபஸோ ஹி பரம் நாஸ்தி தபஸா வின்ததே மஹத் தபஸா க்ஷீயதே பாபம் மொததே சஹ தைவதை தபஸா பிராப்யதே ஸ்வர்கஸ் தபஸா பிராப்யதே யஷ தபஸா ஸ்வர்வமாப்போதி தபஸா வின்ததே பரம்'

பொருள்: தவத்தைவிடவும் பெரியது ஏதும் இல்லை. தவத்தினால் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. தவத்தினால் பாவங்கள், கர்மங்கள் நிறைவு பெறுகின்றன. தவத்தினால் ஒருவர் கடவுளோடு ஒருங்கிணைகிறார். தவத்தினால் நற்பெயர், புகழ் மற்றும் அருள் பெறப்படுகின்றது. தவத்தினால் அனைத்தும் அடையப்படுகின்றது. தவத்தினால் உயர்ந்த பிரம்மநிலை வெளிப்படுத்தப்படுகின்றது.

அக்னி பகவான் தவத்தைப்பற்றி அளித்திருக்கும் தவத்தின் அனைத்து நற்பயன்களையும் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் யாத்திரை மேற்கொண்ட அனைவரும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட ஆசி வழங்குகின்றார். "

பாத யாத்திரையின் போது கடைப்பிடிக்கப்படும் அனுஷ்டானங்கள் :

"கடைப்பிடிக்கப்பட்ட கிரியைகள் காலை பிரம்ம முஹூர்த்த வேளையில் துயிலெழுதல், வேம்பு சாறு பருகுதல் தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறது.

பஞ்ச கிரியை முடித்துக் கொண்டு நித்ய யோகா, குரு பூஜை மற்றும் சிவ பூஜை, பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் சத்சங்கம் கேட்டு அவருடைய அருளாசி பெற்று நாளை துவங்குறது.

குருவின் பாதுகையை சிரசில் ஏந்தி ஒருவர் முன்நடக்க, மற்றவர்கள் பகவானிடம் பெற்ற மஹாவாக்கிய மந்திரத்தை அஜபா ஜெபமாக உச்சரித்துக் கொண்டோ அல்லது சப்தமாக உச்சாடனம் செய்தவாறோ நடத்தல். உலகாயுத சம்பந்தமான விஷயங்கள் எதையும் சிந்தனை செய்யாமல், தங்கள் முன் ரதத்தில் சென்று தரிசனம் அளிக்கும் பரமசிவ பரம்பொருளின் திருமேனியை பார்த்தவாறு ஆடிப்பாடி ஆனந்த கீர்த்தனைகள், பஜனைகள் செய்த வண்ணம் யாத்திரை செய்யப்படுகிறது. வரும் வழியெங்கும் பொதுமக்களுக்கு விபூதி பிரசாதமும், பகவான் அருளாசி வழங்கும் படமும், தியான சிகிட்சையும், ஆரத்தியும், பிரசாதமும் வழங்கப்படுகிறது. மாலையில் உணவு எடுத்துக் கொண்டு, சிறிது நேரம் கழித்து கடுக்காய் தூளும், விளக்கு எண்ணெய் எடுத்துக் கொள்ளப்படுகிறது. "

பாத யாத்திரை: பயண விபரக்குறிப்பு :

"முதல் நாள் யாத்திரை:

யாத்திரை துவங்கிய இடம்: நித்யானந்த பீடம், கிரிவலப்பாதை

யாத்திரை முடிந்த இடம்: நித்யானந்த பீடம், கிரிவலப்பாதை

பயணித்த தூரம்: 14 கிலோ மீட்டர் (குருமுடி கட்டி ஆதீனத்திலிருந்து துவங்கி கிரிவலம் செய்து மீண்டும் ஆதீனம் வந்தடைதல்)

இரண்டாம் நாள் யாத்திரை:

யாத்திரை துவங்கிய இடம்: நித்யானந்த பீடம், கிரிவலப்பாதை

யாத்திரை முடிந்த இடம்: செங்கம்

பயணித்த தூரம்: 31கிலோ மீட்டர்

மூன்றாம் நாள் யாத்திரை:

யாத்திரை துவங்கிய இடம்: செங்கம்

யாத்திரை முடிந்த இடம்: சென்னூர்

பயணித்த தூரம்: 35 கிலோ மீட்டர்

நான்காம் நாள் யாத்திரை:

யாத்திரை துவங்கிய இடம்: செங்கம்

யாத்திரை முடிந்த இடம்: திருப்பத்தூர்

பயணித்த தூரம்: 32 கிலோ மீட்டர்

ஐந்தாம் நாள் யாத்திரை:

யாத்திரை துவங்கிய இடம்: திருப்பத்தூர்

யாத்திரை முடிந்த இடம்: கிருஷ்ணகிரி

பயணித்த தூரம்: 33 கிலோ மீட்டர்

ஆறாம் நாள் யாத்திரை:

யாத்திரை துவங்கிய இடம்: கிருஷ்ணகிரி

யாத்திரை முடிந்த இடம்: சூளகிரி

பயணித்த தூரம்: 28 கிலோ மீட்டர்

ஏழாம் நாள் யாத்திரை:

யாத்திரை துவங்கிய இடம்: சூளகிரி

யாத்திரை முடிந்த இடம்: ஓசூர்

பயணித்த தூரம்: 28 கிலோ மீட்டர்

எட்டாம் நாள் யாத்திரை:

யாத்திரை துவங்கிய இடம்: ஓசூர்

யாத்திரை முடிந்த இடம்: சந்தபுரா (கர்நாடகா)

பயணித்த தூரம்: 16 கிலோ மீட்டர்

ஒன்பதாம் நாள் யாத்திரை:

யாத்திரை துவங்கிய இடம்: சந்தபுரா (கர்நாடகா)

யாத்திரை முடிந்த இடம்: ராஜராஜேஸ்வரி நகர், பெங்களூரு

பயணித்த தூரம்: 33 கிலோ மீட்டர்

பத்தாம் நாள் யாத்திரை:

யாத்திரை துவங்கிய இடம்: ராஜராஜேஸ்வரி நகர், பெங்களூரு

யாத்திரை முடிந்த இடம்: ஆதி கைலாயம், பிடதி

பயணித்த தூரம்: 35 கிலோமீட்டர்

அனைத்து ஆதீனவாசிகளும், சன்யாசிகளும் முகப்பு வாசலில் நின்று பூரண கும்பத்துடன் வரவேற்பு அளித்து, நேராக ஶீ நித்யானந்தேஸ்வரி பராசக்தி சமேத ஶீ நித்யானந்தேஸ்வர பரமசிவ ஆலயத்திற்கு அழைத்து சென்று குருமுடி காணிக்கை செலுத்திய பிறகு, அனைவரின் பிரார்த்தனையும் பூரணம் பெற்றதாக அறிவித்தார்கள். பகவானை நினைத்து பகுதியில் உருகி கரைந்து நிற்கும் பாத யாத்திரை செய்த பக்தர்களுக்கு பகவானின் அருளாணைப்படி அனைவரின் பாதங்களையும் பாலால் அபிஷேகம் செய்து, சந்தனம் - குங்குமம் - மலர்களை சமர்ப்பணம் செய்து, அவர்களின் பாதங்களை வணங்கி, ஆரத்தி காண்பித்து அனைவருக்குள்ளும் பரமசிவனை கண்டு ஆனந்தித்து அவர்களுக்கு பிரசாதம் வழங்கி இளைப்பாற செய்வர். அங்கம் பழுக்க பக்தி செய்யும் பாத யாத்திரை பாரம்பரியம் பகவானின் வழிகாட்டுதலால் உயிர்ப்போடு கடைப்பிடிக்கப்படுகிறது.


24 டிசம்பர் 2015

24 டிசம்பர் 2015 - முதல் நாள் யாத்திரை




25 டிசம்பர் 2015

25 டிசம்பர் 2015 - இரண்டாம் நாள் யாத்திரை




26 டிசம்பர் 2015

26 டிசம்பர் 2015 - மூன்றாம் நாள் யாத்திரை




27 டிசம்பர் 2015

27 டிசம்பர் 2015 - நான்காம் நாள் யாத்திரை



28 டிசம்பர் 2015

28 டிசம்பர் 2015 - ஐந்தாம் நாள் யாத்திரை




29 டிசம்பர் 2015

29 டிசம்பர் 2015 - ஆறாம் நாள் யாத்திரை




30 டிசம்பர் 2015

30 டிசம்பர் 2015 - ஏழாம் நாள் யாத்திரை




31 டிசம்பர் 2015

31 டிசம்பர் 2015 - எட்டாம் நாள் யாத்திரை




01 ஜனவரி 2016

01 ஜனவரி 2016 - ஒன்பதாம் நாள் யாத்திரை




02 ஜனவரி 2016

02 ஜனவரி 2016 - பத்தாம் நாள் யாத்திரை