20 செப்டம்பர் 2006 பத்திரிகை செய்தி
வெளியீடு
குமுதம்
தொடர் கட்டுரை
வெளியாகும் நாட்கள் :வார இதழ்
வெளியீடு நிகழும் இடங்கள், நாடுகள் :இந்தியா, மலேசியா, சிங்கப்பூர்
பிரதிகள் : 5 லட்சம் பிரதிகள்
நாள் : 20 செப்டம்பர் 2006
தொடரின் தலைப்பு : மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்
தொடர் எண் : 65
பிரசுரமாகியுள்ள கட்டுரையின் தலைப்பு : யார் அந்தக் கடவுள்?
கட்டுரையின் வகைப்பாடு : ஆன்மிக தொடர்
கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கம் :
"பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் வழங்கிய அருளுரைகள் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டிலிருந்து பிரசுரமாகும் தமிழ் வார பத்திரிகைகளுள் நம்பர் 1 வார இதழாக இருக்கின்ற 'குமுதம்' வார இதழில் 'ஆன்மிகத் தொடராக' பிரசுரம் செய்யப்பட்டது.
மார்ச் 2003 முதல் மார்ச் 2010 வரை தொடர்ந்து 8 வருடங்கள் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் தமிழர்களின் வாழ்க்கை மேம்படுவதற்காகவும், தமிழினத்தின் ஞான கலாச்சாரம், ஜீவன் முக்த விஞ்ஞானம், இயற்பியல், உயிரியல், வேதியல், பொறியியல், சக்தியியல், அறவியல் என எல்லா துறை சார்ந்த ஞானமும், இறையியலும், மொழியியலும் உயிரோடும்- உயிர்ப்போடும் இருக்க வேண்டும் என்பதற்காக தாமே 'குமுதம்' வார இதழில் கட்டுரைகளை எழுதி வந்தார்.
2003 ஆம் வருடம் 'கதவைத்திற காற்று வரட்டும்' எனும் உற்சாக தொடராக துவங்கி, அடுத்த தொடரை 'மனதைத்திற மகிழ்ச்சி பொங்கட்டும்' என்னும் பெயரிலும், அதற்கு அடுத்தபடியாக 'ஆன்மாவைத்திற ஆனந்தம் பெருகட்டும்' என்னும் பெயர்களில் தொடர்களை வழங்கி ஆதி தமிழ்குடியின் ஆதி சைவ வாழ்க்கைமுறையையும், இறையியலும், மொழியியலும் இணைந்து புனரமைத்தார்.
சைவமும், தமிழும் வாழ்ந்து, செழித்து ஒன்றை ஒன்று உயிர்ப்பித்து, ஒன்றுக்கு ஒன்று உயிர் தந்து, ஒன்றும் ஒன்றாய் செழிப்பதனால் மக்கள் அனைவருக்கும் இந்த எல்லா நன்மைகளையும் அளிப்பதற்காகவே தொடர்ந்து 8 வருடங்கள் தாமே ஆன்மிகத் தொடர் எழுதி தமிழ் எழுத்துலகில் மறுமலர்ச்சி செய்தார்.
உலக நன்மைக்காக இந்தக் கட்டுரைகளை தொடரின் பெயரிலேயே தொகுத்து 'கதவைத்திற காற்று வரட்டும்', ' மனதைத்திற மகிழ்ச்சி பொங்கட்டும்', ' ஆன்மாவைத்திற ஆனந்தம் பெருகட்டும்' என்னும் புத்தகங்களாக வெளியீடு செய்ய ஆசிர்வதித்தார். நித்யானந்தா பதிப்பகம் இந்த அரிய ஈஸ்வர பணியை செய்வனே செய்து முடித்தது.
இத்தியான ஞான கருத்துக்கள் லட்சக்கணக்கான பொதுமக்களுக்குச் சென்று சேர உதவியாக இருந்த குமுதம் நிறுவனத்திற்கும், அதை நிறுவிய அமரர் திரு எஸ்.ஏ.பி அண்ணாமலை செட்டியார் அவர்களுக்கும் இந்த புத்தகங்கள் அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் இத்தொடர் தொடர்ந்து உற்சாகமாக வெளிவரக் காரணமாக இருந்த திருமதி. கோதை ஆச்சி அவர்களுக்கும், டாக்டர் எஸ்.ஏ.பி ஜவகர் பழனியப்பன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகளும், ஆசிகளும், புண்ணியமும் உரித்தாகும்.
'கதவைத்திற...காற்று வரட்டும்' முதல் பாகத்தின் முதல் பிரதி மேதகு குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களிடம் ராஸ்ட்ரபதி பவனில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. "
கட்டுரையின் விவரனை :
"""மனிதனை உலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து மீட்டு பேரின்பம் நோக்கி அழைத்துச் செல்லும் 'வாழும் கலை கல்விதான் ஆன்மிகம்'. இத்தொடர் மூலம் வாழும் கல்வியின் முதல் படிக்கட்டான உற்சாக வாழ்வின் அடிப்படை சத்யங்களை தெரிந்து கொண்டவர்கள் - தெரிந்து கொண்டதோடு நிறுத்தாமல் புரிந்து கொள்ள ஆரம்பியுங்கள். படித்தவற்றை நடைமுறைப்படுத்தினால்...ஒவ்வொரு கட்டுரையும் ஆன்ம சுகம் தரும், புது அகம் படைக்கும், புது மனிதனாய் மாற்றும். சோதித்துப் பாருங்கள், புது பிறப்பெடுப்பீர்கள்.
20 செப்டம்பர் 2006 அன்று 'யார் அந்தக் கடவுள்?' என்ற தலைப்பில் வெளிவந்த மனதைத்திற மகிழ்ச்சி பொங்கட்டும் தொடரில் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பக்தர்களின் ஆன்ம தேடலுக்கு பதில் அளித்துள்ளார்.
"" இப்போது நீங்கள் வாழும் வாழ்வு உங்களின் விருப்பம்.இது உங்களின் சுயமுடிவுக்கு கிடைத்த பரிசு.வாழ்வு இனிதாயில்லை என்றால் உங்களின் முடிவெடுக்கும் திறனிலும் தரத்திலும் தகராறு இருக்கிறது என்று அர்த்தம் என்பன பற்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விரிவாக உரைத்துள்ளார் ."""
20 செப்டம்பர் 2006
20 செப்டம்பர் 2006 -பத்திரிகை செய்தி