டிசம்பர் 2017 பத்திரிகை செய்தி
வெளியீடு
காவலர் பொதுமக்கள் நல்லுறவு
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: 07 டிசம்பர் 2017 அன்று பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு சாதகமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு.
நாள் :டிசம்பர் 2017
தலைப்பு : சர்ச்சைக்குரிய நித்யானந்தர் வீடியோ – கற்பழிக்கப்பட்டதாக பொய் புகார் சுமத்தியவரால் மார்ஃபிங்க் செய்யப்பட்டுள்ளது : வல்லுனர்கள் அளித்துள்ள புதிய ஆதாரங்களை வழக்கில் சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"காவலர் பொதுமக்கள் நல்லுறவு என்ற மாத இதழில் 07 டிசம்பர் 2017 அன்று பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செய்தியாக வெளியிடபட்டுள்ளது.
பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக லெனின் கருப்பன் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஒரு நடிகையுடன் இருப்பது போன்ற ஓரு பரபரப்பான வீடியோவை உருவாக்கி இருந்தார். இதனால் 2010 ஆம் வருடம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு எதிரான பொய்யான வழக்கு ஒன்றை உருவாக்கி ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் ஆரத்தி ராவ் என்பவர் தான் கற்பழிக்கப்பட்டதாக பொய் கற்பழிப்பு புகாரும் அளித்திருந்தார். ஆனால் விசாரனையின்பொழுது கர்நாடக சி.ஐ.டி போலீசார் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் நிரபராதி என்று நிரூபிக்கக்கூடிய சந்தேகத்திற்கு இடமில்லாத வலுவான ஆதாரங்களை மறைத்து விட்டது என்றும் அந்த ஆவணங்கள் இல்லாமல் விசாரனை நடைபெறுவது பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் கனம் உச்ச நீதிமன்றம் 07 டிசம்பர் 2017 அன்று அளித்த தனது தீர்ப்பில் விசாரனை அதிகாரிகளை வன்மையாக கண்டித்துள்ளது.
சந்தேகத்திற்கு இடமில்லாத ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தையும் நீதிமன்ற ஆவணங்களோடு வழக்கில் சேர்த்து பரிசீலிக்க கனம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தாரிடமிருந்து மறைக்கப்பட்ட ஆதாரங்கள் பின்வருமாறு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது :
1. 2004 ஆம் ஆண்டு முதல் 2009 வரை கற்பழிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாக கூறப்படும் ஆரத்தி ராவ் என்பவருக்கு குணப்படுத்த முடியாத சாதாரண தொடுதலில் கூட பரவகூடிய நான்கு பாலியல் தொற்றுநோய்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
2. ஆனால் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் மருத்துவ அறிக்கை அவருக்கு எந்த விதமான பால்வினை நோயும் எப்பொழுதும் இருந்ததில்லை என்றும் அவருடைய உடல் எந்த விதமான உடலுறவிலும் ஈடுபட இயலாத தன்மையுடையது என்று கூறுகிறது.
3. மேலும் 2009 ம் ஆண்டு மத்தியில் ஆரத்தி ராவ் தன் மின்னஞ்சலில் ‘தனக்கும் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கும் எந்த ஒரு விதமான உடலுறவு தொடர்பும் எப்பொழுதும் இருந்ததில்லை’ என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
4. மேலும் கற்பழிப்பு நடந்ததாக அவர் கூறும் நாள் மற்றும் இடங்கள் அனைத்தும் பொருந்தாமல் முரண்பாடுகளோடு இருக்கின்றன.
5. பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுடன் தான் இருக்கும் வீடியோ போலியானது மற்றும் Morphing செய்யப்பட்டது என்று கூறும் ரஞ்சிதாவின் முக்கிய சாட்சி அறிக்கை வெளியிடப்பட்டது."
டிசம்பர் 2017
டிசம்பர் 2017 -பத்திரிகை செய்தி