May 30 2015

From Nithyanandapedia
Revision as of 22:01, 21 August 2020 by Rajan (talk | contribs)
Jump to navigation Jump to search

Title

Nithyananda Times - 30th May, 2015

Description

The Daily Video Magazine of the Nithyananda Sangha

Link to Video:

Title

"வேண்டும் யாவும் தருவாய்" | Vendum Yavum Tharuvaai

Link to Video:

Transcript in Tamil

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

பாண்டிச்சேரியில் இருந்து ஒன்று திரண்டு இருக்கும் அன்பர்களையும் பக்தர்களையும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்திருக்கும் அன்பர்களையும் பக்தர்களையும் வணங்கி வரவேற்கிறேன்.

நித்யானந்த தொலைக்காட்சியின் மூலம் ஆரா டிவி மற்றும் தொலைக்காட்சிகளின் மூலமாக உலகம் முழுவதும் அமர்ந்து, இப்பொழுது இந்த சத்சங்கத்தை கண்டு கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் வணங்கி வரவேற்கிறேன்.

‘‘வேண்டுவது யாவும் தருவாய்’’ இன்றைய தங்கத்தின் தலைப்பு வேண்டுவது யாவும் தருவாய்’’

மனிதன் அடிப்படையில் ஒரு மிகப்பெரிய சாத்தியம்! ஆழ்ந்த உள்வாங்குங்கள். மனிதன் அடிப்படையில் ஒரு மிகப்பபெரிய சாத்தியம்! நாம் நமக்கே எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறோமா.. அது உண்மையில நாம் எதுவோ அதை விட மிக மிகக் குறைவானது.

நாம் எது என்று நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறோமோ, அந்த அறிமுகத்தை யார் வேன்னா, கொடுத்திருக்கலாம் நம்முடைய தாய் தந்தையர் கொடுத்திருக்கலாம், நம்முடைய ஆசிரியர்கள் கொடுத்திருக்கலாம், நம்முடைய குருமார்கள் கொடுத்திருக்கலாம், யார் வேண்டுமானாலும் கொடுத்திருக்கலாம், சிறுவயதில் நாம் யார் என்று நமக்கு நாமே செய்யப்பட்ட அறிமுகம்!

இன்னொரு விதத்தில் சொல்லனும்னா நாம் ஏற்றுக்கொண்ட அறிமுகம் ஏன்னா பல்வேறு அறிமுகங்கள் அளிக்கப்படும் அதில் நாம் ஏற்றுக்கொண்ட அறிமுகம்.

எதை நாம் நாம் என்று நம்புகிறோம் அது உண்மையான நாம் யாரோ அதைவிட மிக மிக மிகக் குறைந்தது.

விருட்சத்திற்கு பதிலாக விதையாக அறிமுகப்படுத்தப்பட்டோம்! விதையின் சாத்தியக்கூறு ஒரு விதை விருக்ஷமாவது மட்டுமல்லாது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கக் கூடிய விதைகளை தரக்கூடிய சாத்தியம் உடையது என்கின்ற சத்தியம் நமக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை.

ஆழ்ந்து கேளுங்கள்... நம்முடைய சாத்தியங்கள், நம்முடைய நிஜமான அறிமுகம் நமக்கு அளிக்கப்படாததனால் நாம் வாழ்க்கையில் இழந்தவை பல விஷயங்கள்.

ஒரு சின்ன உதாரணம் சில நாட்களுக்கு முன்பாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன், திபெத்தினுடைய ஒரு குறிப்பிட்ட பகுதியில் புத்த மதத் துறவிகள் இயற்கையாகவே முன்னூறு ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அங்கு சென்ற சில மேலை நாட்டு விஞ்ஞானிகள் இதை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

அங்க இருக்கிற கல்லறைகளில் இருக்கிற சில கல்வெட்டுக்கள் 280 ஆவது வயதில் அகால மரணமடைந்தார்! இந்தத் துறவி 280 வயதில் அகால மரணமடைந்தார் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு புரியல 280வயது சொல்றீங்க?

ஆழ்ந்து ஆராயும் பொழுது, சிறுவயதிலிருந்தே மனிதனின் வயது 300 என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது! அந்த அறிமுகத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் அதை ஆழமாக உறுதியாக அவர்கள் நம்பினார்கள.் அதனால் அவர்களுடைய உடற்கூறு, அவர்களுடைய அரளஉடந அநஅழசல டீழை அநஅழசல அவர்களுடைய அரளஉடந அநஅழசல டீழை அநஅழசல அந்த வாழ்க்கைக்கு டியூன் ஆயிருச்சு. இயற்கையாகவே முன்னூறு ஆண்டுகள் வாழ்வதற்கு தயாராகிவிட்டது.

அடுத்த செய்தி சோகமான செய்தி, சாதாரண மனிதர்கள் அங்கு குடியேற துவங்கி, சாதாரண மனிதர்கள் 80 ஆண்டுகளில் 100 ஆண்டுகளில் மரணம் அடையத் துவங்கி அதைப் பார்த்த இந்த தலைமுறை புத்தத் துறவிகளும் அதேபோல் என்பது நூறு ஆண்டுகளில் மரணம் அடைய துவங்கிவிட்டார்கள்.

கொடுமை! இது வெறும் ஒரு 60 ஆண்டுகளில் நடந்த மாற்றம!் இந்த கண்டுபிடிப்புக்கு பிறகு சாதாரண மனிதர்கள் அந்த குடியேறத் தொடங்கினார்கள் இவர்கள் மரணம் அடைவதை பார்த்து மெதுமெதுவாக இந்த புத்த துறவிகளும், அவர்கள் மனமும் கூட மனிதனின் வாழக்கை 80ல் இருந்து 100 ஆண்டுகள் வரை என்று நம்பர் துவங்கி, அவர்கள் உடலும், அவர்கள் மனமும் சாதாரண மனிதனைபோல் இயங்கத் துவங்கியது அதனால் சாதாரண மனிதனைப்போல் மரணமடைந்தார்கள்.

நாம் நம்மை எதுவென்று நம்புகிறோமோ, நாம் நம்மைப் பற்றிய எந்த அறிமுகத்தை ஏற்றுக் கொள்கிறோமோ அது நம் வாழ்க்கையின் அடிப்படை!

எதை நாம் என்று நாம் கருதுகிறோமோ அதுதான் நம் வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்து!

வேறு எந்த சொத்தும் வரலாம் போகலாம், வேறு எந்த சொத்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம் வாழ்க்கையில் திருப்தியும் முழுமையும் வரலாம் வராமலும் போகலாம்.

ஆனால் நாம் நம்மைப் பற்றி வைத்திருக்கும் கருத்து சரியானதாக தௌிவானதாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையின் முழுமை நமக்குள் மலரும்!

நாம நம்மை பற்றி வைத்திருக்கின்ற கருத்து நாம் எது என்று நமக்குள் ஆழமாக நாமே நம்மை நம்புகிறோமோ, அந்தக் கருத்துதான் வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம்! ஒரு நல்ல செய்தி என்னன்னா அந்தக் கருத்து நீங்கள் உருவாக்கியது. மிக நல்ல செய்தி என்ன ஒரு முறை தவறு செய்து இருந்தாலும் இப்பொழுது அதை திருத்தி மீண்டும் வேறாக மாற்றி உருவாக்கிக் கொள்ள முடியும்!

நாம் நம்மைப் பற்றி வைத்திருக்கும் கருத்து கொதிக்கிற தண்ணில உருளைக்கிழங்கு போட்டால், மென்மையாகிவிடும், முட்டையைப் போட்டால் ஹாடா.. கடினமாகிவிடும்!

அதேக் கொதிக்கின்ற தண்ணிலதான் உருளைக்கிழங்கை போட்டால் மென்மையாகும் முட்டையைப் போட்டால் கடினமாகிவிடும்!

வௌியில் இருக்கிற சுழல் நம்மை உருவாக்குவதில்லை!

அதே கொதிநீர் தான் அதே சுடு தான் உருளைக்கிழங்கு ஒரு வித விதமாக

நாம் உள்ளுக்குள் என்னவாக இருக்கிறோமோ அதை சார்ந்து தான் நம் வாழ்க்கை முடிவு செய்யப்படுகிறது!

நம் வாழ்க்கையும் வெற்றியும் தோல்வியும் நன்றும் தீதும் வௌியில் நடக்கின்ற சுழல்களால் முடிவிற்கு வருவதில்லை. வௌியில் நடக்கும் சுழல் சார்ந்து நிர்ணயிக்கப்படுவதில்லை!

நாம் நம்மைப்பற்றி வைத்திருக்கும் கருத்தை சார்ந்துதான் நிகழ்கிறது! நாம் நம்மைப்பற்றி வைத்திருக்கும் சிந்தையை சார்ந்துதான் நிகழ்கிறது!

நாம் நம்மைப் பற்றி வைத்திருக்கும் சிந்தனை, நாம் நம்மைப்பற்றி வைத்திருக்கும் கருத்து, நாம் எது என்று நம்மையே நாம் நம்புகிறோம்?

உருளைக்கிழங்கு மாறி இருந்தன ஒரு சாதாரண சிறிய விஷயம் கூட நம்மை பலவீனமாக்கி உடைந்து ஒன்றுமில்லாத, நிற்க இயலாத சக்தியில்லாத விழுந்து போகின்ற நிலைக்குத் தள்ள முடியும்.

ஆனால் நமக்குள் நாம் வைத்திருக்கும் கருத்து தௌிவானதாகவும் நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கின்ற கருத்து தௌிவானதாகவும் உறுதியானதாகவும் இருக்குமானால் உலகமே திரண்டு ஓரணியில் நின்று எதிர்த்தாலும் உங்களை யாரும் வெற்றி கொள்ள முடியாது! எதிர்த்தவர்கள் தோல்வியைத் தழுவியே தீர வேண்டும்!

ஒரு பத்திரிக்கையாளர் என்கிட்ட கேட்டாரு.. சாமி ஒரு மனிதனுடைய மிக ஒரு மனிதன் வாழ்க்கையில் அவனுக்கு செய்யக்கூடிய மிகப் பெரிய கொடுமை என்னன்னா கேரக்டர் அசாசினேஷன் அதுதான் மிகப்பெரிய கொடுமை.. பணம் இழத்தல் அல்லது ஒரு சட்ட சிக்கல்கள் அதெல்லாம்.. ஏதும் கிடையாது.

உங்களை உங்களுக்குள், உங்களை பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்தை தொடமுடியாத வரை உங்களுக்கு யாரும் துக்கத்தைத் தர முடியாது.

உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து தௌிவாக இருக்குமானால் உங்கள் அறிவும், உணர்வும் நேர்மையோடு நிற்குமானால், யாராலும் உங்கள் முகத்தில் இருக்கும் ஆனந்தப் புன்னகை அழிக்க இயலாது!

உங்களுக்க இருக்கும் தௌிவையும் நிதானத்தையும் ஒழிக்க இயலாது உங்களை மன ரீதியாகவும் உள ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் இயலாது.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கின்ற கருத்து உங்கள் வாழ்க்கையின் அடித்தளம்!

முதல் சொத்து!

எல்லாருமே நினைக்கிறோம் பேங்கில் இருக்கிற பணம் சொத்து, இல்ல சுத்தி இருக்கிற நபர்களின் பலம் நிறைய சொத்து, இல்லை நம்முடைய வீடு, நகை, கார் போன்றவைகள் பெரிய சொத்து என்று

உண்மையில் நாம் நமக்குள் திரும்பிப்பார்க்கும்பொழுது, தனியா உட்கார்ந்து இருக்கும்போது, நீங்கள் குளிக்கும் பொழுது, இல்ல உங்க பெட்ரூம்ல நீங்க தனியாக இருக்கும்பொழு, நீங்க பல்தேச்சு இருக்கும்பொழுது, நீங்க தனியா இருக்கும்போது உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கிற கருத்து!

நீங்கள் உங்களோடு இருக்கும்போது உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கிற கருத்துதான், நீங்கள் உங்களை எப்படி சிந்திக்கிறீர்கள்? நீங்கள் உங்களை எப்படி உணர்கிறீர்கள?் நீங்கள் உங்களை ஏதுவாக நினைக்கிறீர்கள்? அந்தக் கருத்துதான் உங்களின் முதல் சொத்து!

பல்லாயிரக்கணக்கான உதாரணங்கள் சொல்லலாம், பெரிய பணக்கார தந்தைக்குப் பிறந்து, நடுத்தெருவில் ஏழையாக அனாதையாக சாபவர்கள் பலபேர்.

அனாதையாக நடுத்தெருவில் குப்பைத்தொட்டியில் கிடந்து வளர்ந்து, மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவியவர் பலபேர்!

உண்மையில் நீங்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கும் கருத்து அதுதான் வாழ்க்கையின் முதல் சொத்து!

எதையெதையோ சீரமைப்பதற்காக வாழ்க்கையில நிறைய செலவு செய்கின்றோம்.. வீட்டு சுவத்துல பெயின்ட் அடிக்கிறதுதாக்கா, இல்ல வீட்டை எல்லாம் கிளீன் பண்ணி சீரமைக்கிறதுக்காக, இல்ல தலையில மேலே கருப்பு வௌ்ளை வேற வேற கலர் எல்லாம் புசி நம்ம உடம்ப பொலிவாக்கறதுக்காக, மேலே கருப்பு இங்க வௌ்ளை எல்லாம் தடவி மழையில போனீங்கன்னா தீடீர்னு கலர் மாறிடும், அங்க வௌ்ளை, இங்க கருப்பாகவும் இருக்கும்! இதுக்கெல்லாம் நேரத்தை செலவு பண்றோம்!

தயவுசெய்து இந்த ஒரே ஒரு செயலை ஒரே ஒரு செயலை செய்யுங்கள் ஒரு முறையாவது உங்களுக்கு அருகில், நீங்களே அமர்ந்து வேறு ஒருவரும் இல்லாது தனியாய் அமர்ந்து உண்மையிலேயே உங்களைப் பற்றி நீங்கள் என்னதான் கருத்து வைத்திருக்கிறீர்கள்? அது ஒரு கருத்தாக இருக்காமகூட இருக்கலாம்... ‘‘நான் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன், நான் தொட்டா ஜெயிக்காமல் விடமாட்டேன், நான் சோம்பேறி பா என்ன தொட்டாலும் பாதியிலேயே விட்டுடறேன் பா, இல்ல நான் என்ன தொட்டாலும் அது உருப்படவே மாட்டேங்குது, ஒரு காலத்துல நான் என்ன தொட்டாலும் ஜெயிச்சுட்டே இருக்கும் இப்ப என்னனு தெரியல என்ன தொட்டாலும் உருப்பட மாட்டேங்குது..’’ இதுபோன்ற பல கருத்துக்கள் இருக்கலாம் ஒரு கருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் என்னென்ன கருத்துக்களை வைத்திருக்கிறீர்கள் என்று எழுதி நீங்களே அதை பாருங்கள்! அதுதான் உண்மையான கண்ணாடி கொண்டு பார்த்தல்.

வெறும் கண்ணாடி முன்னாடி நின்னு முகத்தை சீரமைப்பதை மட்டுமே பார்க்கின்ற நாம் அகத்தை சீரமமைப்பதைப் பற்றி யோசிக்க மறந்து விடுகின்றோம்!.

நாம் நம்மைப் பற்றி தௌிவான, உறுதியான கருத்தை உருவாக்கி வைத்தோமானால் அது வாழ்வின் துக்கமே இல்லாத, வாழ்வில் துயரம் இல்லாத, தௌிவும் நேர்மையும் ஸ்திரமும் ஞானமும் யாராலும் அழிக்க முடியாத, யாராலும் அசைக்க முடியாத உறுதியையும் நம் வாழ்க்கையில் அளிக்கும்.

இதுதான் வாழ்க்கையின் உடைய பாதுகாப்பு அரண். !

வேற எந்த இன்ஷூரன்ஸ் இன்சுரன்ஸ் கிடையாது வேற எந்த இன்ஷூரன்ஸ் லைப் இன்சுரன்ஸ் கிடையாது டெத் இன்சுரன்ஸ்.

செத்த பிறகு நீங்கள் சாகரதுக்காக காத்திருந்தவங்களுக்கு பணம் போகும்.

அது உண்மையான லைப் இன்சுரன்ஸ், வாழும்பொழுது நீங்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கும் தௌிவான கருத்தும், அதனால் ஏற்படுகின்ற தௌிவும், அதனால் ஏற்படுகின்ற வாழ்க்கையைப் பற்றிய முழுமை, அதனால் ஏற்படுகின்ற வாழ்க்கையை பற்றிய ஆழமான திருப்தி.

மகாவீரர் ஒரு இடத்தில் சொல்றாரு நீங்க புமிக்கு வரும் பொழுதே உங்களுக்கு தேவையான உணவும் அனுப்பப்பட்டு விடுகின்றது, அந்த உணவை வேக வேகமா சாப்பிட்டீங்கன்னா அது முடிஞ்ச உடனே 40 வயசு 45 வயசுலயோ செத்துப் போயிருவீங்க. அதை கம்மியா பொறுமையா பொறுமையா பொறுமையா சாப்பிட்டீங்கன்னா அது முடிகிற வரைக்கும் நூறு வயசோ 150 வயசோ வாழ்வீங்க! இது ஒரு அருமையான சத்தியம் நீங்க புமிக்கு வரும்பொழுது உங்களுடைய மொத்த உணவு வந்தது அதனை வேகவேக வேகமா காலையில மத்தியானம் நடுவுல ஒரு சாயந்தரம், காலையில் ப்ரேக்பாஸ்ட், பிரேக்ஃபாஸ்ட்க்கும் லஞ்ச்க்கும் நடுவுல ஒரு பிரஞ்சு.. லஞ்சுக்கும் டின்னர்கும் நடுவுல ஒரு ஈவினிங் ஸ்நாக்.

டின்னர், டின்னர் முடிச்சிட்டு பெட்டுக்கு போன பின்னாடி ஒரு கப் ஸ்நாக்ஸ்ன்னு வேகவேகமாக முடிச்சிங்கன்னா.. இது முடிஞ்ச உடனே வேற வழியில்ல பேக் பட்டின்னு போயாகனும், சரிப்ப உன் கோட்டா முடிஞ்சிது பேக் பன்னிட்டு வந்துடு.. 40 வயசுலுகூட கிளம்பிடுவோம்!

அப்படி இல்லாம் பொருமையாக ஒரு நாளைக்கு இருவேளை, ஒரு நாளைக்கு ஒருவேளை உண்பவன் யோகி இருவேளை உண்பவன் போகி மூன்றுவேளை உண்பவன் ரோகி நான்குவேளை உண்பவன் போ......கி

எப்பொழுது உணவு உட்கொள்ளுதல் குறையுதோ நாம் உணவை முடிக்கின்றவரை நீண்ட ஆயுளோடு 100- 120 ஆண்டுகள் வாழமுடியும்.

ஆழமாக புரிஞ்சிகோங்க.. நீங்க புமிக்கு வரும்பொழுது உங்களுக்கு தேவையான மொத்த உணவும் அனுப்பப்பட்டு விடுகிறது என்று மகாவீரர் சொல்றகிறார். அவர் சொல்கின்ற கருத்து ஒரு நோக்கத்தில்.. என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்லுகின்றேன் நீங்க புமிக்கு வரும்பொழுது நீங்க அனுபவிக்க வேண்டிய சக்திகள் எல்லாமும் உலகத்திற்கு அனுப்பப்பப்பட்டுவிடுகிறது.

ஆதை வௌிப்படுத்தி அனுபவிக்க துவங்கினாள் அனுபவித்து முடிக்கும்வரை நீண்டகாலம் நீங்கள் வாழ்ந்து கொண்டே இருக்கலாம். ஆனால் வௌிப்படுத்த தவறினால் அவைகளை வௌிப்படுத்தும் நுட்பத்தை கண்டுகொள்ளாமல் அவைகளை உட்கார்ந்து பார்க்காமல் நிற்காது தவறினால் வாழ்க்கையை வீணடித்தவர்கள் என்று அதிருப்தியோடும் குறைஉணர்வோடும் மீண்டும் அழைக்கப்படுவீர்கள்!

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்.. மகாவீரர் சொன்னது சாப்பிடாமல் சாப்பாட்கைக் குறைத்தால் ரொம்ப நாள் இருக்கலாம், உபயோகப்படுத்தாமல் இருந்தால் ரொம் நாள் இருக்கலாம். ஆனால் நான் சொன்னதை உபயோகப்படுத்தவில்லை என்னறால் வீணாப் போயிறுவோம்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

உங்கள் எல்லோருக்குள்ளும் மிகப்பெரிய சக்தியும், மிகப்பெரிய சாத்தியங்களும் வைத்து அனுப்பப்பட்டிருக்கிறது. மனித உடம்பில் இருப்பதனாலேயே இந்த சக்தியும் சாத்தியம் உங்களுக்குள் வைத்து அனுப்பப்பட்டிருக்கிறது!

யாரோ ஒருவர் ரமண மகரிஷிகிட்ட போய் கேட்கிறார்ங்கள.. ‘‘ஞானமடைவதற்கு எனக்கு என்ன தகுதி வேணும்?’’ என்று அவர் சொல்றாரு.. நீ மூச்சு இழுத்து விடறியாப்பான்னு கேட்கறாரு.

நல்லா இப்ப விட்டுட்டு தான இருக்கிறேன்.. அந்த தகுதி போதும் போப்பா என்கிறார்.

வேறு ஒரு தகுதியும் தேவையில்லை.

மனிதன் என்பதனாலேயே மிகப்பெரிய அமானுஷ்யமான சக்திகளை வௌிப்படுத்தும் சாத்தியக்கூறோடுதான் நீங்கள் பிறக்கிறீர்கள்! நீங்கள் மலக்கிறீர்கள்!

இப்ப சத்சங்கத்தைத் துவங்குவதற்கு முன்னாடி, கொஞ்ச நேரம் முன்பாக நம்முடைய குருகுலத்து குழந்தைகள் இங்க அமர்ந்திருக்கின்ற குழந்தைகள் மூன்றாவது கண் விழிப்படைந்ததனால், அவர்களுக்குள் மலர்ந்திருக்கின்ற அந்த சக்தியை கண்களை கட்டியவாறே படித்தல் மற்றும் பார்த்தல் போன்ற சக்தியை உங்களுக்கு நிகழ்த்திக் காட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்..

அது கண்கட்டு வித்தை அல்ல! அது ஏதோ மாய மந்திரமோ, மேஜிக் தந்திரமோ கண்கட்டு வித்தையோ அல்ல இந்த ஜாதுகர் ஆனந்த் பண்றா மாதிரி இல்ல, வேற இந்த மேஜிக் பண்ற மாய கலைஞர்கள் பண்றா மாதிரி கண்கட்டு வித்தை அல்ல.

இந்த பெரிய பெரிய மேஜிக் பன்றவங்களுடைய, மேஜிக் கலை நிபுணர்கள் அவர்களுடைய வீட்ல ஃபேமிலி நபர்களை பார்த்து பேசீனீங்கன்னா தெரியும் ஒரு பெரிய மேஜிக் கலைஞருடைய இந்த மாதிரி கண்கட்டுவித்தை பன்றவர், அவருடைய மகன் என்னை ஒருதரம் வந்து பார்த்தார்.

ஆவர் இந்த கண்ணை கட்டிகிட்டு வித்தைகள் செய்றதுலய ரொம்ப பெரிய வல்லவர். அவர்கிட்ட நான் வீட்ல அப்பா இந்த மாதிரி பண்ணுவாரா அப்படீன்னு?

இல்ல சாமி வீட்டில் நியுஸ் பேப்பர் படிக்பே பெரிய பூதக்கண்ணாடி எடுத்துதான் படிப்பாரு! ஏன்னா அது எல்லாமே உங்கள் நீங்கள் கண்டுபிடிக்க முடியாதது போல் நடத்தப்படுகின்ற வித்தை.

இது இங்கே இல்ல இந்த குழந்தைங்க இங்க இல்ல, தனியா ரூம்ல இருந்தாலும், ஆசிரமத்தில் இருந்தாலும், குருகுலத்துல இருந்தாலும், எப்போ இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் அவர்களால கண்கட்டி படிக்க முடியும்!

இது கலை அல்ல சக்தி கலை வேற சக்தி வேற

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ஒரு மனிதனுக்குள் இருக்கும் குண்டலினி சக்தி விழிப்படைந்து, உடலில் இருக்கின்ற வேறுவேறு சக்தி மையங்கள் சக்கரங்களுக்குள் மலரும்பொழுது பல்வேறு விதமான சாத்தியங்களும் சத்தியங்களும் சக்திகளும் மலர்வது இயற்கை!

அந்த குழந்தைகளுக்குள்ள, குருகுலத்து குழந்தைகளுக்குள்ள இந்த குண்டலினி சக்தி விழிப்படைந்தால் மலர்ந்த சக்தி தான் அது! இது கண்கட்டு வித்தையோ மாயமந்திர ஜாலமே வேற எதுவும் கிடையாது.

இது உங்கள் எல்லோருக்கும் கூட சாத்தியம் நம் எல்லோருக்கும் சாத்தியம்

குழந்தைகளுக்கு ரொம்ப ஈசீயா எளிமையா சாத்தியம் காரணம் என்னன்னா?

இன்னும் அவங்க அவங்களப் பத்தி ஒரு தவறான அறிமுகத்தை நம்பத் துவங்கவில்லை. அவர்களுக்கு அவர்களைப் பற்றி சரியான அறிமுகம் இப்போதே அளிக்கப்படுகிறது.

அவர்களுடைய சக்திகள் மலர்வதற்கான சுழலும் வாய்ப்பும் நமது குருகுலத்தில் உருவாக்கப்படுகிறது அவர்களைப் பற்றி அவர்களுக்கு சரியான அறிமுகம் அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனும் சிறுவயதில் தன்னைப் பற்றிய சரியான அறிமுகத்தை பெற்றுக் கொள்வது தான் மிகப்பெரிய சொத்து!

தனக்குள் இதுபோன்ற பல சக்திகளும் சாத்தியங்களும் பொதிந்திருக்கின்றன என்பதை தெரிந்து, ஒன்னுமே இல்லைங்கையா.. இந்த ஒரு சின்ன சக்தியை விழிப்பதன் மூலமா, அந்த குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கிற தன்னம்பிக்கை வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு எதையும் சாதிக்க முடியும் என்று ஏற்பட்டிருக்கிற தைரியம்.

இதுவரைக்கும் என்னுடைய குருகுலத்து குழந்தைங்க கிட்ட இருந்து நோ, இது சாத்தியமில்லை, இது நடக்காது என்ற வார்த்தையை நான் கேட்டதே இல்லை!

திடீர்னு ஒருநாள் சொன்னேன் பா.. நீங்க எல்லாம் பத்து வயசு வரும்பொழுது பத்தாவது எக்ஸாம் எழுத ஆரம்பிக்கணும் அப்படீன்னு.. வெறும் ஒரே ஆண்டுக்குள் 50 சதவிகிதம் குழந்தைகள் பத்தாவது வயதில் பத்தாவது பரிட்சை எழுதத் துவங்கிவிட்டார். எழுதி வெற்றியும் பெற்றுவிட்டார்கள் ஒரே ஒரு ஆண்டுதான்.

நமக்குள் பல்வேறு சாத்தியமும் சக்தியும் இருக்கிறது. பிரச்சனையே என்னன்னா இத கேட்கும்போதே நாமெல்லாம டயாடா ஆயிடறோம். ஏதோ வந்துட்டொம்ம் சொல்றீங்க சரி சொல்லுங்க கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கா மாதிரி இருக்கு... நான் கொஞ்சம் நேரம் தூங்கிக்கிறேன்.. நான் எந்திரிக்கும்போது புள்ள வீட்டுக்கு கூட்டிட்டுபோயிடு.

அப்படின்னு பக்கத்தில இருக்கிறவங்க கிட்ட சொல்லிட்டு...

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் நம் எல்லோருக்கும் இது சாத்தியம் என்று சொல்லும்போதே நமக்கெல்லாம் ஒரு போர் அடிக்கிற மாதிரி டயர்டா சரி என்னவோ சொல்றீங்க நானும் கேட்கிறேன்..

அதுதான் மிகப்பெரிய வருமை!

இப்ப யாராவது உங்கள பார்த்து ஒரு அவதூரான ஒரு வார்த்தையை சொன்னா வேகமாக அதுக்கு எப்படி ரெஸ்பான்ட் பண்றோம் பாருங்க! ஒரு மிருகத்து பேரைச் சொன்னாலோ இல்லை ஒரு அவதூறானா வார்த்தை சொன்னாலும், வேகமா ஏய்! அப்படீன்னு எவ்வளவு வேகமாக அதுக்கு ரியாக்ஷன் கொடுக்கிறோம்!

ஆனா ‘நீங்க கடவுள்’ உங்களுக்குள்ள மிகப்பெரிய சக்தி இருக்கு ஒரு மிகப்பெரிய சாத்தியம் இருக்கு நான் சொன்னன்னா.. ஏதாவது இருக்கா?

யாராவது ஒருத்தர் ஒரு அவதூறு வார்த்தை சொன்னா.. அறிவிலின்னோ.. அறிவில்லாதவன்னோ திருடன்னோ, கொள்ளைக்காரன்னோ, கொலைகாரன்னோ, காமுகன் அப்படீன்னோ.. இல்ல ஒரு மிருகத்தின் பேரைச்சொல்லியொ நம்மளைச் சொன்னா எவ்வளவு வேகமாக ரெஸ்பான் வருதுன்னு பாருங்க.

ஏனென்றால் வலிக்குத் தயாராக இருக்கினற் நாம், சத்தியத்தின் வௌிப்பாட்டிற்கு தயாராக இல்லை! ஒரு வலிக்கும் வேதனைக்கும் வேகமாக செயல்படுவதற்கு தயாராக இருக்கின்றன நாம், ஒரு ஆன்மீக சத்தியத்திற்கும் இறுதி உண்மைக்கும் அறுதி சத்தியத்திற்கும் வேகமாக செயல்பட தயாராக இல்லை!

எதையாவது ஒன்னுத்த வேகமா நம்முடைய முதல் ரெஸ்பான்ஸ் வேகமா இருந்தாலே அதை சரி பண்றதுக்காக வேலை செய்யனும்!

யாராவது ஒருத்தர் உங்களுடைய குடும்பத்தார் தாயையோ தந்தையையோ அம்மாவையும் மனைவியையோ, தங்கையையோ அவதூறாகச் சொன்னாங்கன்னா முதல் ரெஸ்பான்ஸ் கோபம். இரண்டாவது ரெஸ்பான்ஸ எடு அறுவால, இதுபோன்ற விஷயங்களுக்கு வேகமாக செயல்பட தயாராக இருக்கின்ற நாம், துரதிஷ்டவசமாக மிகவும் துரதிஷ்டவசமாக நம்முடைய சாத்தியக்கூறும், சத்தியமும், சக்தியும் நமக்கு சொல்லப்படும்பொழுது, நம்முடைய வாழ்க்கை சார்ந்த உண்மைகள் நமக்கு சொல்லப்படும்பொழுது, வாழ்க்கையைச் சார்ந்த சத்தியங்கள் நமக்கு வழங்கப்படும்பொழுது, இறுதி உண்மைகளும் அறுதி சத்தியங்களும் நம்முன் வைக்கப்படும்பொழுது எந்தவிதமான எதிர்வினையோ காட்டாது, ரியாக்ஷனே இல்லாமல் அப்படியே இருக்கோம்.

காரணம் என்ன?

நமக்குள் இதைப்பற்றி சாத்தியம் என்கின்ற ஒரு சிறுதுளி எண்ணம்கூட இல்லை! மனித இனத்துக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய கொடுமை! மிகப்பெரிய கொடுமை! உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சாத்தியங்கள் இல்லை என்று உங்களுக்கு சொல்லப்பட்ட நாத்திக அறிமுகம்.

உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய சாத்தியங்கள் உங்களுக்கு இல்லை என்று சொல்லப்பட்ட நாத்திக அறிமுகம்தான் மனிதனுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய கொடுமை!

கடவுள் அப்படீங்கிறது என்னங்கய்யா? நம்முடைய சாத்தியம் நாம விதைன்னா, விதை விருக்ஷமா மாறினா கடவுள்!

நீங்கள் உங்களுடைய எல்லா சாத்தியத்தையும் வௌிப்படுத்தினால் உங்கள் சக்திகளை வௌிப்படுத்தினால் நீங்கள் கடவுள் அவ்வளவுதான்!

விதையாக இருக்கும் பொழுது மனிதன் மரமாய் மலர்ந்தால் கடவுள்!

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் அல்ல கடவுளை மறுத்தவன் முட்டாள்!

கடவுளை எதிர்த்தவன் காட்டுமிராண்டி! கடவுளைப் பரப்பாதவன் குற்றவாளி! கடவுள் மறுப்பைச் சொன்னவன் காட்டுமிராண்டி! கடவுள் மறுப்பைச் சொன்னவன் மூடன்! கடவுள் மறுப்பைச் சொன்னவன் வாழ்க்கையின் சாத்தியத்தை அழித்த கிரிமினல்கள்!

கடவுளை மறுத்ததன் மூலமாக உங்கள் மறுக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய மறுக்கப்பட்டிருக்கிறது!

குண்டலினி சக்தி உயிர்பெற்றெழுந்து உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் மலரச் செய்யும் சக்திகள், மலரவைக்கும் சக்திகள் வௌிப்படுத்தும் கடவுள் தன்மை! ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் குண்டலினி சக்தி உங்கள் எல்லோருக்குள்ளும் பொங்கியெழுந்து செயல்படும்பொழுது வௌிப்படும் சக்திகள் ஆற்றல்கள் சாத்தியங்கள் போன்றவைகள்தான் கடவுள்தன்மை!

கடவுள்தன்மையில் சாத்தியம் மறுக்கப்படும்பொழுது உங்களின் சாத்தியம் மறுக்கப்படுகிறது. கடவுள்தன்மையின் சாத்தியம் எதிர்க்கப்படும் பொழுது உங்களின் சாத்தியம் எதிர்க்கப்படுகிறது!

கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி அல்ல கடவுளை மறுத்தவன்தான் மக்களை காட்டுமிராண்டிகளாகவே வைக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் முட்டாள்!

நம்முடைய சாத்தியங்கள் மறுக்கப்படும்போது நம்மை காட்டுமிராண்டிகளாகவே வைத்து கொண்டிருப்பதற்கான முயற்சிதான் அது!

வேன்னா இன்னொரு அழகாக வார்த்தையை யுஸ் பன்னலாம் நாட்டுமிராண்டிகளாக வைப்பதற்காக... உண்மையில் காட்டுமிராண்டிகள் மிகவும் நல்லவர்கள் உயர்ந்தவர்கள்! அதனால் நாட்டுமிராண்டின்னு ஒரு வார்த்தை உபயோகப்படுத்தலாம்!

நம்முடைய சாத்தியக்கூறு ஆழமா புரிஞ்சுக்கோங்க.. எப்பொழுது நம் சாத்தியக்கூறான சக்திகளை நமக்குள் மலர வைக்க துவங்குகிறோமோ, அப்போதே நம் வாழ்க்கையின் ஆழமும் அகலமும் நீளமும் அதிகரிக்கிறது!

ஆழம்னா வாழ்க்கையை வாழ்ந்தத் திருப்தி, அகலம்னா நாம எத்தனை பேர இன்ஸ்பயர் பண்றோம் உற்சாகமாக்கறோம், எத்தனை பேர் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தறோம், நீளம்னா எத்தனை வருஷம் வாழறோம்?

நம் சக்திகளை வௌிப்படுத்தும்பொழுது, ஆழமும்-அகலமும்-நீளமும் மேம்படுகிறது.

சக்திகளை வௌிப்படுத்தாதபொழுது இந்த மூன்றுமே இந்த மூன்றுமே வெறுமையில் இயலாமையில் நிகழாமையில் நின்றுகொண்டிருக்கிறது.

நமக்குள் இருக்கும் குண்டலினி சக்தி விழிப்படைந்தால் நாமே கடவுள்!

நம்முடைய எல்லா சாத்தியங்களும் மலருகின்றது, வௌிப்படுகின்றது, விழிப்படைகின்றது.

மனிதன் புனிதனாகிறான்..

வாழ்க்கைக்குள் முழுமைத் தன்மை மலர்கிறது.

நம் எல்லோருக்குள்ளும் நாம் வேண்டுவது எல்லாவற்றையும் அடைகின்ற, அதை நமக்கு நாமே தந்துக்கொள்ளுகின்ற சக்தி முழுமையாக இருக்கிறது.

‘வேண்டுவது யாவும் தருவாய்’ என வேறு ஒருவரை நோக்கி நீங்கள் வேண்டிய அவசியமில்லை வேண்டுவதுயாவும் தருவதற்கான சக்தி வேண்டுகின்ற அவனிடமே இருக்கின்றது!

வேண்டுவது வௌியில் இருந்து வருகிறது என்று நினைப்பவன் பக்தன்! உள்ளிருந்தே வருகிறது என்கின்ற உண்மையை உணர்ந்தவன் ஞானி! வேண்டினாலும் கிடைக்காது என்று நினைப்பவன் ஏமாளி! வேண்டினாலும் கிடைக்காது என்று மற்றவர்களுக்குச் சொல்பவன் கோமாளி!


ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் நம் மனதிற்கும் உணர்விற்கும் எத்துயர் ஆயினும், எந்த தூக்கம் ஆயினும், எந்தச் சுழல் ஆயினும், எந்நிலை ஆயினும், தன்னிலை தவறாது இருக்கும் சக்தி மாத்திரமல்ல,வேண்டுவது யாவையும் உருவாக்கும் சக்தியும் உண்டு!

உண்மைலங்கையா வேண்டுவது யாது என்று உங்களுக்கு நீங்களே தௌிவில்லாமல் தௌிவே இல்லாமல், காலையில ஓன்னு வேணும்னு நினைக்கிறீங்க, மதியம் ஓன்னு வேணும்னு நினைக்கிறீங்க, சாய்காலம் ஒன்று ஓன்னு வேணும்னு நினைக்கிறீங்க, இந்த மாதிரி நீங்களே அலைந்து கொண்டிருப்பதால்தான், நீங்கள் வேண்டுவது உங்கள் வாழ்க்கைகுள் மலர்வதில்லை!

இதுதான் என் வாழ்க்கையின் முதல் தேவை, இதுதான் அடுத்த தேவை, இதுதான் அதற்கடுத்த தேவை - என்று எப்பொழுது உங்களுக்கு உங்கள் வாழ்வைப் பற்றி, உங்களுக்கு உங்கள் வாழ்வைப் பற்றி, உங்கள் வாழ்வின் தேவைகளைப் பற்றி தௌிவு ஏற்படுகிறதோ, அப்பொழுது வேண்டுவதை அடையும் சக்தி உங்களுக்குள் இருந்தே வௌிப்படத் துவங்குகிறது!

ரமணமகரிஷி ரொம்ப அழகா சொல்வாரு ஒரு யானையின் துதிக்கையில் மரத்தை கொடுத்தீங்கன்னா அந்த துதிக்கையை சும்மா அசைச்சிக்கிட்டு, வழியில போற வரவங்க தொந்தரவு பண்றதும் நின்னனு போயிரும், அந்த மரத்தை எடுத்துட்டு போறது மூலமா ஒரு வேலையையும் செய்யும்.அ

அதுமாதிரிதான் நம்ம மனம்ங்கையா! தேவையானது என்ன அப்படிங்கற ஒரு விஷயத்தை தௌிவாக உங்கள் மனத்தினடம் ஒப்படைத்தால், அதை உருவாக்குவதற்கான எண்ணப்போக்கை உருவாக்கினீர்களானால், இதை உருவாக்கினீர்கள் ஆனால் வேண்டுவது யாவையும் தருவதற்கு உங்களுக்குள்ளேயே உங்கள் ஆத்ம சக்தி காத்திருக்கிறது!

உங்கள் ஆனந்த சக்தி காத்திருக்கிறது. விவேகானந்தர் ரொம்ப அழகா சொல்வாரு நீங்க எத்தனை ஆழமாக பிரார்த்தனை செய்தாலும் எத்தனை உறுதியாக தவம் செய்தாலும் வௌியில் இருந்து யாரோ உங்கள் பிரார்த்தனையையும் தவத்தையும் நிறைவேற்றுகிறார்கள் என்று நினைக்காதீர்கள்!.

உள்ளுக்குள்ளே பொங்குகின்ற குண்டலினி சக்திதான் நீங்கள் வேண்டுவதை நிறைவேற்றுகிறது! வௌியிலிருந்து நிறைவேறுதுன்னு நினைச்சாலும் தப்பில்லை. அதுவும் ஒரு நிலை பக்தன்.

வௌியிலிருந்து கடவுளுள் கொடுக்கறார்னு நினைக்கறது பக்தனுடைய நிலை! இல்ல உள்ளுக்குள் இருந்தே அதை நிறைவேற்றப்படுகிறது என்று உணர்வது ஞானியின் நிலை.

உங்கள் மனதிற்குள் குழப்பங்களையும், கொந்தளிப்புகளையும், வேதனைகளையும். ருன துக்கங்களையும் வலியாக மாறிப்போன ரண துக்கங்களையும் ஆற்றவும் கரைதேற்றவும், நிறைந்த மனதிலிருந்து ஏற்படுத்தப்படும் சங்கல்பங்கள் எண்ணங்கள் நிஜமாகின்றன, சத்தியம் ஆகின்றன.

இது சாத்தியம் என்கிற சத்தியத்தை அனுபவப்புர்வமாக உங்களுக்கு மலரச் செய்கின்ற அறிவியல்தான் கல்பதரு!

ஆழ்ந்து புரிஞ்சிகோங்க.. கல்பதரு வரம் பெறும் நிகழ்ச்சி அல்ல... வரங்களை உங்களுக்குள் உருவாக்கிக்கொள்ளும் அறிவியலைத் தரும் நிகழ்ச்சி!

உங்கள் எல்லோருக்கும் வேண்டுவது யாவும் தருகின்ற பெரும் சக்தி நிறைந்து இருக்கின்றது வேண்டுவன யாவும் தரும் பெரும் சக்தி விழிப்பிக்கப் படவேண்டும் அளவுதான்!

உங்க வாழ்க்கையில எல்லாக் குழப்பங்களுக்குமே நீங்க உங்கள பத்தி வச்சிருக்கிற கருத்து தௌிவா இல்லாம, மத்தவங்க கிட்ட நீங்க காட்றீங்களே உங்க பர்சனாலிடி அதுவும் தௌிவா இல்லாம, நீங்க உலகத்தைப் பற்றி வச்சிருக்கிற கருத்து தௌிவாக இல்லாம,

இதுல ஏற்பட்ற குழப்பம்.

அதாவது நீங்கள் நினைக்கிறீர்களோ அது ஒன்னா இருக்கு.. உலகத்துக்கு நீங்கள் என்னவாக காட்டிறீங்களோ அது ஒன்னா இருக்கு.. அவங்க உங்கள எப்படி புரிஞ்சிக்கிறாங்களோ.. அது இன்னொன்னா இருக்கு.. நீங்க உலகத்த எப்படி புரிஞ்சுகிறீங்களோ அது கம்பிளீட்டா இன்னொன்னா இருக்கு..

இது எப்படின்னா ஒரு மனிதன் நாலு மனைவியோடு வாழ்வதற்கு சமம்!

நல்லாத்தானே இருக்கும் அப்படின்னு நினைச்சீங்கன்னா.. வாழறவங்களோட பேசிப்பாருங்க.. நல்லாத்தானே இருக்கும்னு யாராவது நினைச்சீங்கன்னா வாழறவங்களோட பேசிப் பாருங்க. வேற ஒன்றும் சொல்லல நானு!

நீங்க உங்கள பத்தி வச்சிருக்கிற கருத்து... நீங்க உங்கள மத்தவங்களுக்கு எப்படி காட்றீங்களோ அந்தக் கருத்து... மத்தவங்க எப்படி புரிஞ்சுக்கங்களோ அந்த கருத்து... நீங்க உலகத்தை பற்றி எப்படி புரிஞ்சு வச்சிருக்கிறீங்களோ இந்த கருத்து... இந்த நாலுக்கும் நடுவுல நடக்கிற போர்தான் உங்க வாழ்க்கை.. அவ்வளவுதாங்கயைா.. வேற ஒண்ணுமே இல்ல!

இந்த நாளுக்கு நடுவுல நடக்கிற போர்! அதுதான் உங்க வாழ்க்கை.

உள்ளுக்குள்ள உங்கள பத்தி ஒரு மாதிரி நினைக்கிறீங்களா ஆனா வௌில் இன்னொரு மாதிரி வௌியில காட்டுறீங்க..

ரொம்ப எளிமையான வாழ்க்கை என தெரியுமாங்கையா உண்மையை அப்படியே சொல்றது..

என நீங்க என்ன சொன்னீங்க நினைவில் வச்சிருக்கவேண்டிய அவசியம் இல்லை.

ஒருதரம் பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க அதையே திரும்பத் திரும்ப நினைவில் வச்சிருந்து திரும்ப திரும் சொல்றது பெரிய வேலையா இருக்கும்..

எங்கிட்ட பலபேர் வந்து பேசுவாங்க அவங்கள பத்தி மத்தவங்க பத்திலாம் என்னென்வோ சொல்லுவாங்க நான் ஒண்ணுமே பண்ண மாட்டேன் தரளவ கேட்டுட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அதைப்பற்றி திரும்ப சொல்ல சொல்வேன் அவ்வளவுதான்!

வேற ஒன்னும் பெருசா எல்லாம் பண்ண வேண்டாம் ஒரு பத்து நிமிஷம் பேசிட்டிருந்துட்டு, திரும்ப அவர் சொன்னதையே சொல்லிக் கேட்டீங்கன்னா போதும்.

உண்மையை அப்படியோ சொல்றது வாழ்க்கையில ரொம்ப எளிமையான வாழ்க்கைமுறை!

காரணம் என்னன்னா யோசிச்சு மனசுல வச்சிருந்து மறக்காம திரும்ப சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருந்தது அப்படியே சொல்லலனா, யோசிக்காமல் மனசுல வைக்காம.. உள்ளதை உள்ளபடி பேச முடியும்.

வாழ்க்கையின் இந்த நான்கிற்கும் நடுவிலே நடக்கின்ற நாடகம் இந்த ரணகளம், இந்த யுத்தம், இந்த துக்கம், இது கரைந்து உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தி மலர்ந்து வாழ்க்கையில் என்ன வேணும்னு நீங்க நினை்சிங்கன்னாலும் அதை நிஜமாக்கும் சக்தி உங்களுக்கு சாத்தியம்.

இந்த மொத்த சத்சங்கத்தின் மூலமாகவும் நான் உங்களுக்கு சொல்ல விரும்பற ஒரேஒரு கருத்து, நீங்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கிற அறிமுகம் தவறானது.

நீங்க மத்தவங்கள பத்தி நீங்க உங்கள பத்தி மக்களுக்கு சொல்றீங்க அத நான் சொல்லல, நீங்க யாருன்னு நீங்க நம்பறீங்களா அதைச் சொல்றேன். அந்த கருத்து முழுமையானது அல்ல! அதை மேம்படுத்துங்கள்.

இரண்டாவது உங்களுக்குள் இருக்கும் குறைஉணர்வுகள், துக்கங்கள், வலிகள், வேதனைகள் இதையெல்லாம் தவிர்த்து முழுமையாக்கி, உங்கள் மனதை ஒன்றாக்குங்கள்.

ஒன்றான மனதிற்குள் குவிந்த மனதிற்குள் அமைதியான மனதிற்குள் நிம்மதியான மனதிற்குள் ஆனந்தமான மனதிற்குள் எண்ணப்படும் எண்ணம் வேண்டப்படும் வேண்டுதல் நிஜமாக மாறுகிறது. சத்தியமாக மலர்கிறது.

வாழ்க்கை முழுமையாக மாறுகிறது.

ஒவ்வொரு மனிதனுமே குண்டலினி சக்தியின் அற்புதங்களை, சாத்தியங்களை அனுபவிக்கும்பொழுதுதான் வாழ்க்கையில் முழுமைத்தன்மையை உணர்கிறான்.

நம்ம உடம்பு மாட்டு வண்டியாவும் ஓட்டி காலத்தைக் கழிச்சிறலாம்ங்கையா.. இந்த உடம்ப டிராக்டராவும் ஓட்டலாம், ப்ளைட்டாவும் ஓட்டலாம், ஜெட்டாவும் ஓட்டலாம். எப்படி வேண்ணா ஓட்ட முடியும் அது நம்முடைய அறிவைப் பொறுத்து!. நம்முடைய அறிவு சார்ந்தது.

இது மாட்டுவண்டி தான் உங்களுக்குக் கத்துகுடுக்கிறவங்க ஒரு குரூப் இருக்காங்க, இல்லப்பா இது டிராக்டர் அளவுக்கு ஓட்ட முடியும் சொல்றவங்க சயின்டிஸ்ட்ங்க.

இல்லை இதை விமானமாக உபயோகப்படுத்த முடியும் அப்படீன்றவங்கதான் ஆன்மீக குருமார்கள்.

இத ஒண்ணும் பண்ண முடியாது இது மாட்டுவண்டிகூட கிடையாது தள்ளுவண்டிதான் அப்படி என்றால் நாத்திகர்கள்!

இப்ப நீங்கதான் முடிவு பண்ணணும! எதைக் கேட்கவேண்டும்? எதைக் கடைபிடிக்க வேண்டும்? எதை செயல்படுத்த வேண்டும்? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும்.

உங்கள் உள்ளுக்குள் இருக்கும் மனதை பண்படுத்தினால், மலரச் செய்தால், வேண்டுவது யாவும் கிடைக்கும் வேண்டுவது யாவும் மலரும்.

இதையெல்லாம் தாண்டி எதையுமே வேண்டாத நிலையும் மலரும்! எதையுமே வேண்டாத நிலையான ஜீவன்முக்தியும் மலரும்.

எத்தனைதான் வார்த்தைகளால் விவரித்தாலும் சத்தியம் இது ஒன்றுதான் ...

உங்கள் எல்லோருக்குள்ளும் மிகப்பெரிய சாத்தியம் இருக்கின்றது இந்த அறிவியலை கற்றுக்கொண்டு அந்த சாத்தியத்தை, மிகப்பெரிய சக்தியை மலரச் செய்கின்ற வௌிப்படுத்த செய்கின்ற அறிவியல்-ஜீவன்முக்த விஞ்ஞானம,் ஜீவன் முக்தியை மலரச் செய்யும் இந்த விஞ்ஞானத்தை, புரணத்துவ விஞ்ஞானம,் இந்த விஞ்ஞானத்தை வாழ்க்கையில் மலரச்செய்து வேண்டுவது யாவும் பெற்றுக்கொள்ளுங்கள்.

இந்த சக்தியை வௌிப்படுத்த துவங்கினால்தான் வாழ்க்கையின் ஆழம், வாழ்ந்த திருப்தி, அகலம் நம்மை சுற்றி இருப்பவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம், நீளம் வாழ்கின்ற வருடங்களின் எண்ணிக்கை இவை அனைத்தும் அதிகரிக்கும்.

உள்ள இருக்கிற சக்தியை மலரவைக்கவில்லைன்னா வாழ்க்கையை வாழ்ந்தும் உபயோகமில்லை உபயோகமில்லை வாழ்வதற்கும் அனுமதிக்கப்பட மாட்டீார்கள்.

ஏன்னா சக்தியை வௌிப்படுத்தாவிட்டால் புமிக்கு பாரம் நீங்கள்! வெறும் ஒரு மிருகமாகவே வாழ்க்கை கழிந்து விடுகிறது.

சாத்தியங்கள் உங்களுக்குச் சொல்லப்படா விட்டால் வெறும் மிருகமாகவே வாழ்க்கை தீர்ந்துவிடுகிறது. மிருகமாகவே வாழ்க்கையை கழிப்பது எந்தவிதத்திலும் உங்களை முழுமையாக்காது. முழுமையாக்காத வாழ்க்கையை வாழ்வதற்கு நீங்கள் அனுமதிக்கப்படுவதில்லை!

நான் ஒன்னும் அமானுஷ்யமான சக்திகளை உடனடியாக வௌிப்படுத்துங்க அப்படீன்றதகூட முதல் செய்தியா சொல்ல வரலைங்கையா.. உங்கள் வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு துறையிலும்.. உடல் நலத் துறையில் இருக்கின்ற துக்கங்களை சரிசெய்து உடல்நலத்தை கொண்டு வாருங்கள்... உறவுகளோடு இருக்கிற மேடு பள்ளங்கள் எல்லாம் சரிசெய்து உறவுகளைச் சமமாக்குங்கள்.. போதுமான அளவு வாழ்வதற்கான செல்வத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வழியை மலர்த்துங்கள்.. எத்துனை வேலை செய்தாலும், சிந்தனை செய்தாலும், உழைத்தாலும் சோர்வும், வாழ்க்கையின் மீது ஏற்படுகின்ற மனச் சோர்வு ஏற்படாமல் உற்சாகத்தோடு வாழ்வதற்கு தெரிந்துகொள்ளுங்கள்.

வாழ்க்கையைத் தௌிவாகப் பார்த்து நிம்மதியோடும் ஆனந்தத்தோடும் நித்யானந்தத்தோடும் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

இதுவே பெரிய மிராக்கில், பெரிய சக்தி பெரிய சித்திங்கையா, இதை தாண்டி இதை செய்யத் துவங்கினாலே குருகுலத்து குழந்தைகள் அடைந்திருக்கிற, சக்திகளும் சித்திகளும் அவர்களுக்கு மட்டுமல்ல உங்கள் எல்லோருக்கும் சாத்தியம்!

இப்பதான் வாரணாசில 21 நாள் அக-விழிப்புணர்வு இன்னர் அவேக்கனிங்க தியான முகாம் நடந்தது! பல நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் வயதானவர்கள் பெரியவர்கள், குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள், பல பெரியவர்களும் மூன்றாவது கண் விழிப்படைந்ததனால் கண்களைக் கட்டி அவர்களும் படிக்கத் துவங்கிவிட்டார்கள்.

இது குழந்தைகளுக்கு மட்டுமானது என்று நினைக்காதீர்கள் உங்களுக்கும் சாத்தியம்!

இது கண்கட்டி வித்தை அல்ல, மேஜிக்கோ பிராடோ இல்ல ஏதோ கண்கட்டு வித்தையோ அல்ல. குண்டலினி சக்தி விழிப்படைந்தால் உங்கள் எல்லோருக்குள்ளும் இது சாத்தியம். இது சாத்தியம் இது சத்தியம்! ஆழ்ந்து இதை வாழுங்கள் ஆழ்ந்து இதை செயல்படுத்துங்கள்!

நாளைக்கு நாளைக்கு நாளைக்கு போஸ்ட்போன்ட் பண்ணிகிட்டே போனீங்கன்னா தள்ளிபோட்டுட்டே போனீங்கன்னா நாளை இல்லாமல் இன்றே மரணம் வரும்பொழுதுதான் விழிச்சிகிட்டு ‘ஐயோ..போஸ்ட்போனட் பண்ணியே வாழ்க்கையை வீணாக்கிட்டமோன்னு’ நினைப்பீங்க!.

நாளை நாளை நாளை என்று தள்ளிப் போடாமல் இன்றே என்று முடிவெடுத்து வாழ்க்கையை மலர்த்திக்கொள்ளும் இந்த ஜீவன்முக்த விஞ்ஞானத்தை கற்றுக்கொண்டு முழுமைத் தன்மையை அடைந்து, உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை வௌிப்படுத்துங்கள், விழிப்படைய செய்யுங்கள்.

இந்த அறிவியலை உங்களுக்கு தருகின்ற நிகழ்ச்சிதான் கல்பதரு தியான முகாம்!

வேண்டுவது யாவும் தருவதற்கு வேறொருவரும் வேண்டாம் வேண்டுவது யாவும் தருவதற்கே வேண்டியவனுக்கே சக்தி இருக்கின்றது. வேண்டுவது யாவும் தருவதற்கே வேண்டியவனுக்கே சக்தி இருக்கின்றது.

வேண்டியவன் சக்தியை வௌிப்படுத்தினாலே வேண்டுவது யாவும் வௌிப்படும். வேண்டுவது யாவையும், வேண்டியவன் சக்தியிலிருந்தே வௌிப்படுத்தி அதை அடைந்து வாழ்க்கையில் ஆனந்தத்தோடு இருங்கள்!

நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கிறேன்!

நன்றி ஆனந்தமாக இருங்கள்!



நுனெ--------------------------------------------------------------------


மார்ச் 3 -2019 ஜீவன்முக்தி குழந்தை பிறந்த தினம்! இறைவன்.. தான் இதுவரை சொன்னது, சொல்வது, சொல்லப்போவது, சொல்லாமல் விடுபடப்போவது என அனைத்தையும் ஒரே புத்தகத்தில் விதைத்து உலகிற்கு அருளிய தினம்!

சரியாக 10 வருடங்களுக்கு முன் (3-3-2009) அன்று ஜீவன் முக்தி எனும் அரிய பொக்கிஷத்தை உலகிற்கு வழங்கியத் திருநாள்! இரண்டு மாதங்களில் பிரசிவித்த இந்தக் குழந்தை உலகிற்கு முக்தியை அளிக்கும் ஒரே நோக்கத்துடன் அவரால் பிரசிவிக்கப்பட்டது! எந்தப் பக்கத்தைத் திறந்தாலும், அப்பொழுது உங்கள் மனதில் உள்ள குழப்பத்தைத் தீர்க்கும்த் தரும் அதிசயம் நிறைந்த புத்தகம் இது!

ஒருசில புத்தகத்தில் ஒரிருவரிகள் தீர்வாக இருக்கும்! ஜீவன் முக்தியில் மட்டுமே ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்கு தீர்வைத் தரும்! தௌிவைத் தரும்! வாழ்வை மலர்த்தும்!

ஒருசில சேவையை செய்யும்பொழுது ஒரு மனத்திருப்தி இருக்கும்! ஆனால் ஜீவன்முக்திபோன்று ஒரு புத்தகத்தைப் படைக்கும் சேவையில் பாகமாக இருந்த நாட்களை நினைக்கும்பொழுதே அளவிலாத ஆன்ம திருப்தி பொங்கிப் பெருகுகின்றது! உன் இந்த பெரும்பணியில் பாகமாக வைத்திருந்ததற்கே கோடி் நன்றிகள் சொன்னாலும் குறைவுதான்!

இன்று முடிந்தவரை ஜீவன் முக்தியை படியுங்கள், வாழுங்கள், வழிபடுங்கள், வழி-படுங்கள், பகிருங்கள், மற்றவர்களும் பகிர உத்வேகப்படுத்துங்கள்! அனைவருக்கும் ஜீவன் முக்தி ஜெயந்தி தின வாழ்த்துக்கள்!

ஜீவன்முக்தி வௌியிட்ட திருநாள் விழாக் காட்சிகள்!.. மலரும் நினைவுகளாய்..

Photos