November 23 2015

From Nithyanandapedia
Revision as of 21:56, 21 August 2020 by Rajan (talk | contribs)
Jump to navigation Jump to search

Title:

THE SUPREME PONTIFF OF HINDUISM HDH BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM

Link to Video:

Transcript in Tamil

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன் இதுவரை நடந்த சைவ சத்சங்கத்தின் சாரம் பிரம்மாண்டத்தை உருவாக்கிய பரம்பொருளே.. உயரினங்கள் எல்லாம் தன் இருப்பு நிலையான பரம்பொருள் நிலையை, ஜீவன் - சிவனாகும் ஜீவன் முக்த நிலையை அடைந்து - உயிர்புற்று இருப்பதற்கான வழியாக அருளிய வாழ்வியல் ஆதிசைவம். அதன் மிக முக்கியமான நான்கு அங்கங்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் அதில் வாழ்க்கை முறையான சரியை பற்றிய ஆராய்வு, அது சார்ந்து எழுந்த தர்க்க விதர்க்க குதர்க்க கேள்விகளுக்கு விடைகளை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சுந்தரமூர்த்திப் பெருமானுடைய வாழ்வின் சாரமான சில நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். ஒவ்வொரு சிவனடியாரும், ஒரு முக்கியமான கருத்தை சத்தியத்தை தன் வாழ்க்கையில் அனுபவமாக நிஜமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையிலே பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் எதை அவர்கள் உயிராக வாழ்ந்தார்களோ, எதை அவர்கள் உயிர் நாடியாக வாழ்ந்தார்களோ, எது அவர்கள் சிந்தனையில் எப்போதும் சிறந்து இனித்து, அவர்கள் வாழ்வாக.. வாக்காக.. செய்தியாக வௌிப்பட்டதோ அந்த சத்தியம் அவர் நம் எல்லோருக்கும் அளித்த நன்கொடை.

ஞானசம்பந்தருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள் சுந்தரமூர்த்திப் பெருமானுடைய வாழ்க்கையில் நடக்கவில்லைன்னு கிடையாது. ஞானசம்பந்தருடைய வாழ்க்கையில் நடந்த அதிசயங்கள் பல, அது போன்று சுந்தரமூர்த்திப் பெருமானுடைய வாழ்க்கையில் நடந்திருக்கிறது. சுந்தரமூர்த்திப் பெருமானுடைய வாழ்க்கையில் நடந்த அதிசயங்கள் பல திருநாவுக்கரருடைய வாழ்க்கையில் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது அவர் வாழ்க்கையிலும் இதுபோல் நடந்திருக்கிறது. ஆனால் ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒரு செய்தியைத் தாங்கி நம் எல்லோருக்கும் வந்து சேர்ந்திருக்கிறது.

மாணிக்கவாசகப் பெருமானுடைய வாழ்க்கையில்.. எத்துனையோ மதப்போர்கள் நடந்திருக்கின்றன. சுந்தரமூர்த்திப் பெருமானை தடுத்தாட்கொண்டதுபோலவே, மாணிக்க வாசகரையும் குருந்த மரத்தடியில் இருந்து குருவாக பெருமானே தடுத்தாட்கொண்டிருக்கிறார். ஆனால் சுந்தரமூர்த்திப்பெருமானுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் செய்தி வேறு, மாணிக்கவாசக பெருமானுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் செய்தி வேறு.

சுந்தரமூர்த்திப் பெருமானுடைய வாழ்க்கையின் செய்தி என்னவென்றால், பக்தியின் சக்தி.. மாணிக்கவாசகப் பெருமானுடைய வாழக்கையின் செய்தி என்னவென்றால், குருவிடம் சரணாகதி

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான செய்தி வௌிப்படும், அந்த செய்தியை ஆழ்ந்து உள்வாங்கி நம் வாழ்வியல் அனுபூதியாக மாற்றிக்கொண்டால், சைவம் நம் வாழ்க்கையாய் செம்மையாய் மாறிவிடும்.

ஞானசம்பந்தப் பெருமானுடைய வாழ்க்கையின் செய்தி,.. சுந்தரமூர்த்திப் பெருமான் அவதரித்த காலத்திலே, ஞானசம்பந்தரும் அப்பரும் அவதரித்த காலத்தில் இருந்த அளவிற்கு சைவத்திற்கு எதிர்ப்பு இல்லை. ஞானசம்பந்தரும் அப்பரும் வந்து அந்த பர சமய கோடரி என்று சொல்வார்கள். சைவம் அல்லாத மூடக்கருத்துக்கள், தத்துவங்கள் அரைகுறையாய் இருந்த மதங்கள் எல்லாவற்றையும் வயலிலே களை பிடுங்குவதுபோல் பிடுங்கி எறிந்து, அகண்ட தமிழ்நாட்டை முழுமையாக சுத்தம் செய்து சைவம் தழைத்தோங்கச் செய்திருந்தார்கள்.

சுந்தரமூர்த்திப் பெருமான் வரும்பொழுது எதிர்ப்புகள் இல்லை. அதனால்தான் சுந்தரமூர்த்திப்பெருமான் வாழ்க்கையிலே இந்த வாது செய்து வென்று அரசர்களை மாற்றி இதுபோன்ற லீலைகள் குறைவு. காரணம் என்னவென்றால், எல்லோருமே சைவர்களாக வாழ்ந்திருந்தார்கள், சுந்தரமூர்த்திப் பெருமான் அதற்காக ஞானசம்பந்தரையும், அப்பர் பெருமானையும் நன்றியோடு பாடல்களில் குறிப்பிடுகின்றார். சம்பந்தப் பெருமானின் வேலை பெரிய வேலை, சம்பந்தப்பெருமானுடைய.. திருஞானசம்பந்தப் பெருமானுடைய வாழ்க்கை, அவர் செய்த செயல்கள், வெறும் செயல்கள்.. வெறும் 16 ஆண்டுகளுக்குள் அவர் செய்து முடித்த அவர் அருளிச் செய்த.. செய்து முடித்த செயல்கள், அருளிச் செய்த நூல்கள்..

சுந்தரமூர்த்தி நாயனாருடைய வாழ்க்கை அதன் செய்தி, பக்தியின் சக்தி. அவருடைய எல்லாச் செயல்களிலும் பார்த்தீர்களானால் அவருடைய பக்தியின் சக்தி மேம்பட்டு இருந்து, அது செய்த திருவிளையாடலைப் பார்த்தோம். சுந்தரமூர்த்திப்பெருமானுடைய வாழ்க்கையின் எல்லா நிகழ்ச்சிகளையும் நான் விளக்கவில்லை. ஏனென்றால் அவருடைய வாழ்க்கையின் செய்தியின் சாரமான பக்தியின் சக்தியை விளக்குகின்ற நிகழ்ச்சிகளை புரிந்துகொண்டீர்களானால் போதுமானது, அதை உங்கள் அனுபவமாக மாற்றிக்கொண்டால் போதுமானது.

சுந்தரமூர்த்தி நாயனாருடைய வாழ்க்கையை, வாழ்க்கையின் சாரத்தை, அவர் வாழ்க்கையின் செய்தியை பக்தியின் சக்தி என்று சொன்னோமானால், ஞானசம்பந்தப் பெருமான் வாழ்க்கையை பக்தியின் வெற்றி என்று சொல்லலாம். ஞானசம்பந்தப் பெருமானுடைய வாழ்க்கையின் சாரம் பக்தியின் வெற்றி. சென்றவிடமெல்லாம் ஜெயம். சென்றவிடமெல்லாம் வெற்றி. இந்து மதத்தை மீண்டும் புனரமைத்த மிகப்பெரிய ஜகத்குரு ஞானசம்பந்தப்பெருமான்.

நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்.. இந்து மதத்தை மீண்டும் புனரமைத்த மிகப்பெரிய ஜகத்குரு ஞானசம்பந்தப்பெருமான். ஞானசம்பந்தப் பெருமானடைய வாழ்க்கை, ஞானசம்பந்தப் பெருந்தகைதான்.. இதுவரை நமக்கு கிடைத்திருக்கின்ற ஆவணங்களின் படி, இப்பொழுது நாம் வாழுகின்ற இந்து மதத்தை முறையாக வகுத்து, நிறுவனங்கள் ஸ்தாபனங்கள் என்று நிறுவி அதை உயர்ப்பித்து, யுசஉாவைநஉவரசந என்று சொல்கின்ற வடிவமைத்த திருப்பணியை செய்தவர் ஞானசம்பந்தப்பெருமான். அதனால்தான் அவருக்குப் பின்னால்வந்த ஆதி சங்கரர் ஞானசம்பந்தரிடமிருந்து இந்த வடிவமைப்பை அப்படியே எடுத்து இந்தியா முழுவதும் பரப்பி, இந்து மத புனர்நிர்மானத்தை நிகழ்த்தினார். அதனால்தான் மிகுந்த பக்தியோடு தன்னுடைய சௌந்தர்ய லஹரியில் 72வது பாட்டில் திராவிட சிசு என்று ஞானசம்பந்தபெருமானை நினைந்து, வணங்கி, துதித்து தன் நன்றிக்கடனை செலுத்துகின்றார்.

ஞானசம்பந்தருடைய வாழ்க்கையை விவரிப்பதற்கு முன்பாக, அவருடைய வாழ்க்கையை மிகக் கேவலமாக விமர்சித்து, இந்துமத விரோதி ஒருவன், இந்துசக்தி விரோதி ஒருவன் கருத்துச் சுதந்திரம் என்கின்ற பெயராலே ஒரு மூட புத்தகத்தை எழுதி.. இந்த மாதிரிப் புத்தகங்கள் பெரிய பிரச்சினை என்னவென்றால், அதை எதிர்த்தால் அதன் மூலமாகவே அது பெரிய ியிரடயச ஆகிவிடும் என்பதற்காகவே எழுதப்படுவது. கேட்டால் கருத்து சுதந்திரம் என்று சொல்வது. சரி நாங்களும் எங்களின் கருத்து சுதந்திரத்தை உபயோகப்படுத்தி இவருக்கு, அந்தப் புத்தகத்தை எழுதிய மூடனுக்கு சில நல்ல வார்த்தைகளை பரிசளித்து, சில நல்ல பதில்களை தந்து, விளக்கங்களைக் கொடுத்து அந்த விளக்கத்தின் மூலமாகவே ஞானசம்பந்தப் பெருமானின் வியத்தகு விஸ்வரூபத்தைக் காட்டி, ஞானசம்பந்தப் பெருமான் ஒரு சின்ன உதாரணம் சொல்லவேண்டுமென்றால்.. திருவிளையாடல் புராணம் எழுதின்ற பரஞ்சோதி முனிவர் 64 திருவிளையாடல்கள் எழுதுகின்றார். அது எல்லாமே பெருமான நேரடியாக திருமேனி தாங்கி செய்தது. அதில் சிலது மாத்திரம்தான் பெருமான் நேரடியாக திருமேனி தாங்காது ஞானசம்பந்தர் வடிவாகச் செய்தது, அதையும் இறைவனின் திருவிளையாடல் புராணத்திலே சேர்த்து எழுதி வைக்கின்றார். சைவம் பெருமானின் அவதாரம் என்று ஏற்றுக்கொண்ட ஒரே ஞானபுருஷர் திருஞானசம்பந்தப்பெருமான். சைவத்திலே மற்ற எல்லோருமே அடியார்கள்தான். சைவமே அவதாரபுருஷர் என்று ஏற்றுக்கொண்ட முழுமுதற்பெருமான் ஞானசம்பந்தப் பெருந்தகை.

ஞானசம்பந்தருடைய வாழ்க்கையை உலகத்தோடு பகிர்ந்துகொள்வதற்கு முன்பாக, உங்கள் எல்லாரோடும் பகிர்ந்துகொள்வதற்கு முன்பாக ஆயிரக்கணக்கான அன்பர்கள் தினந்தோறும் ஆசிரமத்திற்கு தொலைக்காட்சி ஸ்கீர்னில் கொடுக்கப்படும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு, சுவாமிகளிடம் நேரடியாக கேள்வி கேட்க வேண்டும் என்று, எங்கள் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டுமென்று, தொலைபேசி அழைப்புக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இன்று சில நிமிடங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்து யார் தொடர்புகொண்டாலும் அவர்களின் சைவம் சார்ந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கின்றேன். (------------------------------------------------------------------ (ளுறயஅதைை.. வயடமள டமைந யனஎநசவளைநஅநவெ -யளமபைெ வாநஅ வழ அயமந உயடட யனெ யெழெரெஉநபைெ ரெஅடிநசள வழ உயடட)


நித்யானந்தம்.. கேள்வி : செந்தில் - கரூர். சுவாமி.. நான் ஒரு சிவபக்தன், சிவன் சொத்து குலநாசம் என்று சொல்கிறார்கள், கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள், கடவுளை வழிபடுகிறவர்கள் முட்டாள்கள் என்று சொல்கிறார்கள், ஆனால் கடவுள் சொத்தை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள், அப்பொழுது சிவன் சொத்து குலநாசம் என்று சொல்கிற பொழுது அவர்களுக்கு எந்த தண்டனையும் சாமி குடுத்த மாதிரி தெரியவில்லையே.. அவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்.. இது சிவனை வழிபடும் எங்களுக்கு பெரும் வேதனையாக இருக்கிறது.. ? பதில்: சுவாமிஜி: என்னங்க ஜி சொல்றீங்க.. என்னங்க ஜி சொல்றீங்க.. 2ஜி போடும்பொழுதே 2பு-ன்னு புரியலையாங்க

கேள்வி: அதாவது எத்துனை ஜி போட்டாலும், அவங்க எல்லா வந்து

சுவாமிஜி: ஐயா ஒரு விஷயத்தை ஆழந்து புரிந்துகொள்ளுங்கள்.. நல்லா இருக்கிறது.. கெட்டு போறது.. இந்த இரண்டு வார்த்தைகளுக்கும், அவங்க நல்லா இருக்காங்க.. கெட்டு போயிட்டாங்க.. இந்த வார்த்தைகளுக்கு நீங்கள் வைத்திருக்கின்ற கருத்து அளவுகோல் இதுவேண்டுமானால் மாறுபடலாம். இது வந்து பலபேர் என்னிடம் கேட்கும் கேள்வி.. வாழ்க்கையில் எவ்வளவோ கெட்டது செய்து, கோவில் சொத்தை எல்லாம் அழித்து, ஆலயங்களை ஒழித்து.. ஐயா கோவில் சொத்தை திருடியது மட்டும் இல்லைங்க ஐயா.. திருவள்ளுவரையே.. சைவத்திடமிருந்து திருடினார்கள் பாவிகள். திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்த மிகப்பெரிய ஒரு சைவம் சமயம் சார்ந்த சான்றோன். வள்ளுவப் பெருந்தகை மாதிரி ஒரு பெரிய சான்றோரை, அவர் திருநீறை அழித்து ருத்ராக்ஷத்தை அறுத்து, அவருக்கு ஒரு ரேவரசயட ஐனநவெவைலஇ சைவத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாதமாதிரியான ஒரு படத்தை ீழிரடயச செய்து, திருவள்ளுவரையே சைவத்திடமிருந்து திருடியவர்கள் இந்த நாத்திக கும்பல். இந்து விரோத கும்பல்.

ஆழந்து புரிந்துகொள்ளுங்கள் ஒரு கெட்டது செய்பவர்கள், கெடுதி செய்பவர்கள்.. நன்றாக இருக்கிறார்கள், நல்லது செய்பவர்கள் துக்கப்படுகிறார்கள் என்று மட்டும் நினைக்காதீர்கள். இறைவன் வகுத்த விதி, அவன் வகுத்த வைத்த தர்மம் மாறுவதே இல்லை. தீயது செய்பவர்கள் தீமையை அனுபவிக்கின்றார்களா இல்லையா என்று உங்களுக்குத் தெரியாமல் வேண்டுமானால் இருக்கலாம், செய்தவர்களுக்கு அந்த துக்கம் சென்றடைந்தே தீரும்.

சில பேர் நினைக்கலாம் தப்பு செய்துவிட்டு ரொம்பநாள் வாழறாங்களே சாமி..

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்.. வாழ்க்கையே ஒருவேளை நரகமாக இருந்தால்.. உங்களுக்கு எப்படி தெரியும், ரொம்பநாள் வாழ்ந்தால் நல்லா இருக்காங்கன்னு எப்படி தெரியும், ஒருவேளை ஒருவர் வாழ விரும்பாமல் வாழ்க்கையே நரகமாக இருக்கிறது, சீக்கிரம் செத்துப்போய் விடவேண்டும் என்று நினைக்கின்றார், அனால் மரணம் வரமாட்டேன் என்கிறது.. அதுகூட நரகம்தான். அதுவும்கூட துக்கம்தான்.

அதனால் சிவன் சொத்தை கொள்ளை அடித்தவர்கள், பொதுச் சொத்தை கொள்ளை அடித்தவர்கள் நல்லாத்தானே இருக்காங்க.. என்று மட்டும் தயவுசெய்து நினைக்காதீர்கள். யார் நல்லா இருக்காங்கள்.. யால் நான்றாக இல்லை என்பது அவர்களுக்குத்தான் தெரியுமே தவிற, உங்களுக்கு முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை. வௌியில் இருந்து பார்க்க ஒருவர் நன்றாக இருக்கிறார்என்று தப்புக்கணக்குப் போட்டு, நீங்கள் அவர்கள் செய்த தவறையே செய்யலாம், அவங்க வழியையே கடைபிடிக்கலாம் என்று தப்புக் கணக்கை மட்டும் போடாதீர்கள். இதுதான் கரூரில் இருந்து அழைத்த செந்திலுக்கு நான் சொல்ல வந்தது.

கேள்வி: சென்னை - சக்திவேல்.. வணக்கம் சாமி, நான் சென்னை - சக்திவேல்.. சாமி சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

பதில்: நன்றாக வழிபடலாம் ஐயா, சிவலிங்கம் என்பது இறைவனுடைய வடிவம், வடிவம் கடந்த தன்மையான அருவம் இரண்டும் கடந்தது. நன்றாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.. சில சம்பிரதாயத்தில் இறைவனை வடிவத்தோடு வழிபடுவார்கள், சில சம்பிரதாயங்களில் அருவமாக.. வடிவமில்லாதவராக வழிபடுவார்கள். சைவத்தில் மாத்திரம் ஒரு சிறப்பு அருவுரு வடிவமில்லா வடிவம். சிவலிங்கத்தை வடிவம் என்றும் சொல்ல முடியாது, வடிவமில்லாத வடிவமாக, வடிவம் வடிவமின்மை என்றை இரண்டும் கடந்தது பரம்பொருள் என்ற சத்தியத்தை சொல்லுகின்ற வடிவம்தான் சிவலிங்கம்.

இறைவன் அடிமுடிகாணாத அருட்பெரும்ஜோதியாக தோன்றியருளிய வடிவம்தான் சிவலிங்கம். நிச்சயமாக அதை வீட்டில் வைத்து வழிபடலாம், அலுவலகங்களிலும் வைத்திருக்கலாம், உங்களுடைய வேலை செய்யும் இடம், வீடு எல்லா இடங்களிலும் இறைவனுடைய வடிவமான சிவலிங்கத்தை வைத்திருக்கலாம், வழிபடலாம். வைத்திருப்பதனால்.. நன்றாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.. இறைசக்தியினுடைய சாந்நித்யம் அங்கிருக்கும். அதாவது சிவ லிங்கத்தினுடைய வடிவம், அணுசக்தி மையத்தின் வடிவத்தை பார்த்தீர்களானால் மிகப்பெரிய ஒற்றுமை இருக்கும். உள்ளே பொங்குகின்ற சக்தியை உள்ளேயே இருக்க வைக்கும் வடிவம். பொங்கிப் பொங்கிப் பொங்கிப் பெருகி பொங்குவதற்கான வடிவம் அந்த சிவலிங்கம். அருவமும் உருவமும் கடந்து சிவலிங்கம், நீங்கள் எங்கு வைத்து வழிபட்டாலும், மங்களத்தன்மையை சிவத்தன்மையை அளிக்கின்ற வல்லமை வாய்ந்தது. அதை வழிபடுங்கள், இறைசக்தி உங்களுக்கு எப்போதும் துணை இருக்கும். வாழ்க்கைப் பாலமாகவும் இருக்கும்.

கேள்வி: வேலூர் - பிரபாகர்

நித்யானந்தம் சுவாமி: நான் தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்து வருகின்றேன் சாமி, சாமி எல்லாமே சைவத்தில் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கின்றேன்.. அதற்கு சாமிதான் எனக்கு வழிகாட்ட வேண்டும்.. அதற்கு என் வழி சுவாமிஜி?

பதில்: முதல் விஷயம், எல்லாவற்றையும் தாண்டி சைவத்தை பின்பற்ற வேண்டும், வாழவேண்டும் என்று நினைத்தீர்கள் இல்லையா? அந்த நினைப்பே அவன் கொடுத்ததுதான். அவன் அருளாலே மட்டும்தான் அவன் தாழ் வணங்க முடியும். ஐயா இந்த சின்ன சின்ன கவுன்சிலர், தாசில்தார் டுழஉயட டநஎநட - ல இருக்கிற அதிகாரி எல்லாம் நீங்கள் நினைத்தாலே சென்று பார்த்துவிடலாம், ஆனால் பிரதமரையோ, ஜனாதிபதியையோ, ஒரு நாட்டினுடைய அதிபரையோ நீங்கள் நினைத்தால் மட்டும் பார்க்க முடியாது. அவர்களும் நினைத்தால்தான் பார்க்க முடியும். அதுமாதிரி சிறு சிறு தெய்வங்களை நீங்கள் நினைத்தாலே வழிபட்டு விட முடியும், வணங்கிட முடியும். பெருந்தெய்வமாகிய பரம்பொருளாகிய பரமேசனை, சதாசிவனை அவன் அருள் உங்கள் மீது விழுந்தால் மட்டும்தான் அவனை வணங்க முடியும். சைவத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தவுடனேயே தெரிந்துகொள்ளுங்கள்.. அவன் அருள் உங்கள் மீது அமைந்துவிட்டது. அவன் அருள் உங்கள் மீது பொழியத்துவங்கிவிட்டது. இதை எப்படி தொடர்ந்து வாழ்வது என்று தௌிவாக தெரிந்துகொள்ளுங்கள்.. இந்த ஒரே ஒரு கருத்தை, அதாவது நான் அவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் போன்றே, அவனும் என்னை ஏற்று காத்து, இரட்சித்து என் வாழ்க்கையை அவனும் முழுமையாகப் பாதுகாத்து, என்னை அவன் நிலையில் வாழ்வதற்கான பாதையில் கொண்டு செல்கின்றான் என்று நாம் அவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் போல அவர் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை. நம்பிக்கையின் முழுமைத்தன்மை. இது ஒன்றே ஒன்றைத் தொடர்ந்து சிந்தித்து உங்கள் வாழ்க்கையின் பாகமாக மாற்றுங்கள். சைவத்தை வாழ்வீர்கள். சைவத்தை வாழ்வீர்களாக என்று வாழ்த்தி ஆசீர்வதிக்கின்றேன்.

ஒரு விஷயத்தை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சிறு தெய்வங்களை மட்டும்தான் நீங்கள் நினைத்தாலே வணங்கிவிட முடியும், பெருந்தெய்வமான பேரருட்தெய்வமான பரம்பொருளான சிவனை, நீங்கள் நினைத்தால் மட்டும் போதாது, அவர் நினைத்தால் மட்டும்தான், அவனருளால் மட்டும்தான் அவன் தாளை வணங்க முடியும். சிவபெருமானை புரிந்துகொள்ளுகின்ற அளவிற்கு உங்கள் மூளையின் முதிர்ச்சியையும், அவர்மீது ஆழ்ந்த ஈடுபாடும், அன்பும், பக்தியும் கொள்கின்ற அளவிற்கு உங்கள் இதயத்தின் மலர்ச்சியும் நடந்தால் மட்டும்தான் அவரோடு உங்களை பக்தியால் இணைத்துக்கொள்வது சாத்தியம்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ஐயா.. உங்களுக்கு மனசுக்குள்ள என்ன வெறுமை இருக்கிறதோ, அதுமாதிரியான தெய்வத்திடம் மட்டும்தான் செல்வீர்கள். உங்களுக்கு மனத்திற்குள் ஒரு வரட்டு ஹீரோயிசம் மாதிரி மாறவேண்டும்.. இந்த எல்லா கிராமத்திலும் இருப்பார்கள் பாருங்கள், வருத்தபடாத வாலிபர் சங்கம் மாதிர, ஒரு நாலு பசங்க.. ஒன்னும் பண்ண மாட்டார்கள்.. வாராவதிமேல உட்கார்ந்துகொண்டு, ஸ்டைலா.. துண்டு பீடி பிடித்துக்கொண்டு, போற வர்ற பிள்ளைகளை கிண்டல் பண்ணிகிட்டு, அவர்களைப் பொறுத்தவரைக்கும், அவர்களுடைய ஹீரோ யாராக இருப்பார், ஏதாவது ஒரு சினிமா நடிகராக இருப்பார். அதற்கு ஒரு கட்அவுட்டை வைத்து அதற்கு ஒரு பாலை ஊற்றி, ஏனென்னறால் அவர்களுடைய மனம் அங்குதான் செல்லும்.

அதே மாதிரி நீங்கள் ஏழ்மை ஏழ்மை ஏழ்மை என்று நினைத்தீர்களானால் பணம் தருகின்ற குபேரனைத்தான் வணங்குவீர்கள். பணம் கொடுக்கின்ற சாமி ஆதுதான்பா என்று வணங்கவீர்கள். உங்களிடம் எது இல்லையோ, எது இல்லை என்று உங்கள் வாழ்க்கையை உணர்கின்றீர்களோ, அது சார்ந்த தெய்வத்திடம்தான் உங்கள் மனம் செல்லும். ஞானம் இல்லை - ஜீவன் முக்தி இல்லை என்று உணர்வதற்கே ஒரு பெரிய முதிர்ச்சி வேண்டும். அந்த முதிர்ச்சி வந்தால்தான் ஞானம் இல்லை - ஜீவன் முக்தி இல்லை அதனால்தான் என் வாழ்க்கையில் துக்கம் இருக்கின்றதுன்ற அந்த அடிப்படை சத்தியத்தை உணர்ந்துகொள்ளும் முதிர்ச்சி, அதை பெருமான் ஒருவன் பரம்பொருள் ஈசனே அளிக்க முடியும் என்று தெரிந்துகொள்கின்ற தௌிர்ச்சி, இது நடந்தால்தான் பெருமான்பால் பக்தியும், ஈர்ப்பும் ஏற்படும். அதனால் சிவன்மீது அடிப்படையான சிந்தனை ரீதியாக ஏற்படுகின்ற ஈர்ப்பே.. அவன், அவன் திருக்கண்ணை உங்களை நோக்கி திருப்பிவிட்டான் என்பதற்கான அர்த்தம்.

அவன் அருளால் அன்றி அவன் தாள் வணங்க இயலாது. அவரே முடிவுசெய்தால் மட்டும்தான், அவர் தாளை வணங்க முடியும். அவரே முடிவுசெய்தால் மட்டும்தான் அவரை சிந்திக்கவும்கூட முடியும். அவரை சிந்திக்க அனுமதித்தார் என்றாலே,.. என்றாலே தெரிந்துகொள்ளுங்கள் அவர் சிந்தை உங்கள் மீது விழுந்துவிட்டது. அரசர்களும், யோகிகளும், ஞானிகளும், சமூகத்தின் உச்ச நிலையை அடைந்த புரிதல் உடைய நபர்களுக்கு மாத்திரமே ஈர்ப்பும் பக்தியும் ஏற்படும் தெய்வம் இறைவன் ஈசன்.

வாழ்க்கையில் நீங்கள் பண வருமையையோ, புகழ் வருமையையோ, கல்வி வருமையையோ, வீடு இல்லை என்கின்ற சிறு சிறு வருமைகளிலே சிக்கியிருந்தால் சிவன் என்கின்ற சத்தியத்தின் மீது மனம் இலயிக்காது.

ஓ! பணம் குடுக்குற குபேரனை வணங்கலாம்!.. காசு கொட்ற லட்சுமி அம்மாவை கும்பிடலாம் அந்தந்த நிலையில் உங்களுக்கு என்ன வேண்டுமோ.. பாதுகாப்பு வேண்டுமா.. கையில் கத்தியோடு நிற்கின்ற முனியாண்டியைக் கும்பிடலாம். அந்தந்த நிலையில் உங்களுக்கு என்னவேண்டுமே அதையதைத்தான் செய்வீர்கள். அந்தந்த தெய்வங்களோடு மட்டும்தான் மனம் ஒன்றும். ஆனால், எப்பொழுது "ஆ! இதெல்லாம் இருந்தாலும் ஜீவன் முக்தி வேண்டும்" அது இல்லாமல் வரும்பொழுது, தேடுதல் துவங்கும்பொழுதுதான் தெய்வங்கள் எல்லாம் வழிபடும் மகாதேவனை நோக்கி மனம் செல்லும். அப்பொழுது மட்டும்தான் சைவம் வாழ்வியலாய் மாறும்.

உமா - திருப்பூர் எனக்கு கர்மயோகம், பக்தியோகம், ஞான யோகம் இது மூன்றிற்கும் விளக்கம் தாருங்கள் ஐயா..

பதில்: ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் அம்மா, பக்தி யோகம் என்பது உங்கள் இதயம் கரைந்து, இதயம் மலர்ந்து ஈசனோ ஒன்று படுதல் பக்தியோகம். உங்கள் சிந்தனை தூய்மையாகி சிவோஹம் என்கின்ற அனுபூதியை நோக்கிச் செல்வது ஞானயோகம். உங்கள் உடலும், சுவாச ஓட்டமும் ஒன்றாக இணைந்து ஒருங்குபட்டு சிவனை, சிவோஹம் என்கின்ற அனுபூதியை வௌிப்படுத்துவதற்குத் தயாராவது, குண்டலினி சக்தியை உயிர்ப்பித்து சிவ நிலையை அடைவதற்கு உடலையும் - மனதையும் தயார்ப்படுத்துவது இராஜயோகம். இறைவனின் இருப்பான சிவோஹம் என்கின்ற நிலையை அடைந்து அதை உலகத்தில் இருக்கின்ற எல்லோருக்கும் பரப்புவதற்காக, சிவனுக்கும் சிவனடியாருக்கும் சேவை செய்வது கர்மயோகம்.

இதயம் கரைந்து இறைவனைத் தேடுவது பக்தியோகம்.. சிந்தனை தூய்மையாகி சிவோஹத்தில் நிலைபெறுவது ஞானயோகம் குண்டலினியை உயிர்ப்பித்து இறைசக்தியை உடலுக்குள்-மனதிற்குள் வௌிப்படுத்துவது இராஜ யோகம்.. சிவோஹம் எனும் அனுபூதியை உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் பரப்பி, இந்த அனுபூதியை எல்லோரும் வாழ்ந்திட சிவனடியார்க்கும், சிவனுக்கும் உடலாலே சேவை செய்வது கர்மயோகம். இந்த நான்கும் முழுமையாக நம் வாழ்விலே வௌிப்படுவதுதான் சைவம்.

பெருமான் இந்த நான்கையும்தான் சரியை-கிரியை-ஞானம்-யோகம் என்று நான்கு நிலைகளாக, நான்கு பாகங்களாக, நான்கு அங்கங்களாக ஆகமத்தில் விளக்கியிருக்கிறார்.

நீங்கள் முதலில் ஆரம்பிக்கவேண்டியது, உணர்வால் கரைந்து இறைவன் மீது ஏற்படுத்திக்கொள்ளும் பக்தி. வேற ஏதாவது கேட்க முடியுமான்னு நினைக்கிறீங்களாம்மா? ஐயா அந்த சுந்தரருடைய சத்சங்கத்தின் சாரத்தை ஒருமுறை சொல்லமுடியுமா ஐயா? அடுத்த ஒரு சில நாளில் அந்த சத்சங்கத்தினை ரி-டெலிகாஸ்ட் பன்ன சொல்றேம்மா, ஏன்னா அந்த சத்சங்த்தினுடைய ஒவ்வொருவார்த்தையும் அந்த சத்சங்கத்தின் சாரம். அதனால் அத நான் தனியா அந்த சத்சங்கத்தின் சாரம்னு ஒருவார்த்தை எடுத்து சொல்ல முடியாது மொத்தத்தையும் எடுத்து சொல்ல வேண்டி இருக்கும். ஏதாவது ஒருநாள் ரீ-டெலிகாஸ்ட் பண்ண சொல்றேன் அதப்பாருங்கம்மா. நல்ல து நன்றி. அழைத்ததற்கு நன்றி.

நித்யானந்தம்: சாமி நித்யானந்தம்: ஐயா நான் திருப்பூரிலிருந்து ஒரு பக்தர் சாமி நான் சமயதீக்ஷை எடுத்துள்ளேன்.. ருத்ராஷத்தைப் பற்றி ஒரு புத்தகத்தில் தவறாக எழுத்தியிருக்கிறார்கள், மேலும்.. குடும்பத்தில் உள்ளவர்கள் ருத்ராக்ஷம் அணியக்கூடாதே என்றும், எப்படி எல்லா நேரத்திலும் அணிந்திருப்பது சாத்தியம்? என்றும் என்னை சிலபேர் கேட்கிறார்கள்.. இதற்கு தகுந்த விளக்கம் தாருங்கள் சுவாமிஜி?

ஐயா.. அவர்களிடம் இந்த ஒரு கேள்வியை மட்டும் கேளுங்கள்.. எல்லா நேரத்திலும் கடவுள் நம் இதயத்தில் இருக்கிறாரா? இல்லை சில நேரத்தில் அவரை எடுத்து வௌியில் வைத்துவிட்டு செல்ல முடியுமா? எல்லா நேரத்திலும் அவர் நம் இதயத்தில் இருக்கிறார் ஐயா, அதனால் ருத்ராக்ஷத்தை எல்லா நேரத்திலும் அணியலாம் என்று ஆகமத்தில் சிவன் சொல்கிறார். ஒன்று செய்யுங்கள் ஐயா.. அதாவது உண்மையிலே சந்தேகம் இருந்து கேட்பவர்களுக்கு பதில் சொல்லலாம், ஆனால் குதர்க்கமாக அவர்கள் கருத்துதான் சரி என்று உங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு பதில்சொல்ல முடியாது. நீங்கள் தொடர்ந்து ருத்ராக்ஷம் அணிந்துகொண்டு தைரியமாக குடும்பத்தோடு சைவத்தை வாழுங்கள். ஏனென்றால் சைவத்திற்கு இல்லறம் எதிர்ப்பு கிடையாது. இல்லறத்திற்கும் சைவத்திற்கும் முரண்பாடு கிடையாது. சிவன் வந்து இல்லறத்தை வாழ்வியலாக அங்கீகரிக்கிறார். அதை வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்கிறார். அதனால் இல்லறத்தில் இருப்பவர்கள் ருத்ராக்ஷம் அணிந்து, 24மணி நேரமும் எப்போதும் அணிந்து திருநீறு பூசி வாழ்க்கையை வாழலாம். சைவத்தை வாழலாம். தவறில்லை.

நீங்கள் தைரியமாக வாழுங்கள்.. உங்களை கேள்வி கேட்டவர்கள் எல்லாம், உங்கள் வாழ்க்கையில் ஆனந்தத்தைப் பார்த்துவிட்டு உங்களுக்கேத் தெரியமால் இங்கு வந்து சமய தீக்ஷை வாங்கிக்கொள்வார். திடீரென்று அவர்கள் ருத்ராக்ஷம் அணிந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இதுதான் நடக்கும் கவலைப் படாதீர்கள். இப்படித்தான் வாழ்க்கை இயங்குவது சகஜம். கவலைப்படாதீர்கள். கேட்பவர்களைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். கேட்டால் விளக்குங்கள்.. விளங்கமுடியாதவர்கள் என்றால் விளக்க வேண்டிய அவசியமில்லை விட்டுவிடுங்கள். கேட்டால் விளக்குங்கள்.. விளங்கிக்கொண்டால் நல்லது. விளங்கிக்கொள்ள விருப்பமில்லாதவர்களை விலக்கி வையுங்கள்.



நித்யானந்தம்: பார்த்திபன் - தமிழ்நாடு.. எனக்கு கடவுள் நம்பிக்கை, இல்லாமலும் இருக்கிறது.. இருக்கவும் இருக்கிறது. அதை என்னால் வௌிப்படுத்த முடியவில்லை. எப்படி அதைக் கடவுளை நாம் உணர்வது?

சுவாமிஜி: முதல்விஷயம் - கடவுள் என்கிறவர் வந்து, உங்களுடைய வாழ்க்கையின் ஆதாரம். அதாவது உங்களுடைய வாழ்க்கையில் எல்லாமே உங்களுக்குப் புரிந்துவிடுகிறதா? அதைச் சொல்லுங்களேன்..

பக்தர்: புரியறது இல்லைங்கையா..

உங்கள் வாழ்க்கையில் புரியாத, தெரியாத பல்வேறு வாழ்க்கையைப் பற்றிய சுட்சுமங்களும், சத்தியங்களும் இருக்கிறது. அந்த சத்தியங்கள் எல்லாம் சேர்ந்த மொத்த வடிவம், அந்த அறிவுத்தொகுப்புதான் கடவுள். அது உங்களுக்குள் மலரத்துவங்கினால், இப்போது இருப்பதைவிட வாழ்க்கை மிக உயர்ந்த நன்னிலையை அடையும். அதற்கான வழிதான் கடவுள்.

முதல்படி வருகின்ற டிசம்பர் 31, ஜனவரி 1,2,3 இந்த நான்கு நாட்களும் சமய தீட்சையும் விஷேச தீட்சையும் இருக்கிறது. அனமதி இலவசம். இந்த நிகழ்ச்சிவ ந்து இலவசமான நிகழ்ச்சி. இந்த நான்கு நாட்களும் தங்க இடமும் உணவும் அளித்து இலவசமான தியான முகாம். டிசம்பர் 31, ஜனவரி 1,2,3 இந்த நான்கு நாட்களும் இந்த நிகழ்ச்சி இருக்கு.

பக்தர்: எங்க ஐயா? சுவாமிஜி : பெங்களுரு ஆதினத்துல, தியானபீடத்துல நடக்குது வந்து இந்த நான்கு நாட்களும் இந்த நிகழ்ச்சியில கலந்துகொண்டீர்களானால் கடவுள் என்றால் என்ன? கடவுள் நிலயை எப்படி அடைவது என்று அனுபவப்பூர்வமாக அதன் வழி என்ன? அதன் முறை என்ன என்ற எல்லாவற்றையும் சந்தேகத்தை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், அனுபவமாக அதை உள்வாங்கிக்கொண்டு செல்லலாம். இதுதான் நீங்க செய்ய வேண்டிய முதல்படி. நீங்க கடவுளை எப்படி செய்வதுன்னு கேட்கறீங்க. அதற்கான முதல்படி டிசம்பர் 31ம் தேதி காலைல பெங்களுரு ஆதீனம் நித்யானந்த தியானபீடம் பிடதிக்கு வந்துருங்க. அதற்குப்பிறகு அனுபவமாக அதை உங்களுக்குக் கொடுத்து 3ம் தேதிக்குள் திருப்பி அனுப்புவது என்னுடையப் பொறுப்பு. வந்து தீட்சை எடுத்துக்கோங்கையா அது உங்களுடைய அனுபவமாக மாறிவிடும்.

நல்லது.

நித்யானந்தம் சாமி சாமி உங்கள பாக்கமுடியும்னு சாமி, தினம் தினம் டிவில பார்த்து இன்னிக்குதான் உங்க குரல் கேட்டேன் (ஆழுகை).

சுவாமிஜி : எந்த ஊர்ல இருந்து பேசறீங்க மா? பக்தர்: நாங்க திருவண்ணாமலைல இருந்து பேசறோம் சாமி. சுவாமிஜி: சொல்லுங்கம்மா, பக்தர்: 4வது தெருவுல இருந்து பேசறேன் சாமி.. உங்கள பாக்க முடியல சாமி 4 வருஷமா. (அழுகை) சுவாமிஜி: பாக்கரதுல என்ன தடை, திருவண்ணாமலைல இருக்கிறவங்க என்ன பாக்காம இருக்க முடியாதேம்மா.. ஜன்னல் வழியா. பக்தர்: எனக்கு ரொம்ப வருமை அதிகமா இருக்கு சாமி.. எங்களால வந்து பாக்ககூட முடியாம ரொம்ப வருமையா இருக்கறோம் சாமி, வீட்டுக்காருக்கு வேலையில்லாம 4 வருஷமா ரொம்ப எல்லாப்பொருளும் வித்தாச்சு சாமி, சுவாமிஜி: நல்லது மா.. அம்மா வீட்டுக்காரர்க்கு உடல் சார்ந்து ஏதாவது பிரச்சினை இருக்கா.? பக்தர்: எதுவும் இல்ல சாமி. சுவாமிஜி : நல்லது. இப்ப சாமி ஆசீர்வதாம் பன்றேன் கவலைப்படாதீங்க.. அடுத்த 11 நாட்களுக்குள் அவருக்கு வேலை அமையும் உங்களுக்கு வருமை தீரும் உங்களால் வரமுடியும். தைரியமாக இருங்க.. இந்த வார்த்த உங்கள் வாழ்க்கையில் நிஜமாவதைப் பார்ப்பீர்கள். பக்தர்: சத்தியமா நம்பறேன் சாமி நான் உங்கள. சுவாமிஜி: தைரியமா இருங்க.. வருமயும் தீரும், துக்கமும் ஒழியும், நீங்கள் வந்தே தீருவீர்கள். பெருமான வாழும் நகரத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு பெருமான் மீது கொண்ட பக்தி சக்தியாய் வௌிப்பட்டு உங்கள் துக்கத்தை தீர்க்கும். வாழ்க்கையில் மேம்பாடு அடைவீர்கள். வருவீர்கள். தைரியமா இருங்க. ஆனந்தமா இருங்க.

அடுத்த கேள்வி.. நித்யானந்தம்.. பக்தர் : (ஆடியோ சரியில்லை) சுவாமிஜி: அப்படியா நல்லதும்மா..

சுவாமிஜி: நித்யானந்தம்.. பக்தர்: நித்யானந்த சுவாமி மீனாட்சின்னு மதுரையிலிருந்து பேசறேன்.. சுவாமிஜி : சொல்லுங்கமா என்ன சொல்லனும்னு சொல்லுங்கம்மா (சிரிப்புடன்) பக்தர்: (ஆடியோ சரியில்லை) சுவாமிஜி: அம்மா கொஞ்சம் சத்தமா பேசுங்கம்மா.. டிவி சவுண்டை குறைச்சிட்டு பேசுங்கம்மா.. பக்தர் : எனக்கு வந்து 2 இது கேக்கணும் சாமி, அதாவது ப்ரசன்ட் மொமன்ட் 1 மொமன்ட்டுக்குள்ள போகவே முடியமாட்டேங்குது. சுாமி சுவாமிஜி : அம்மா.. இந்த ப்ரசன்ட் மொமன்ட் 1 மொமன்ட்டுக்குள்ள போறதுக்கான நேரடியான தியான நுட்பம் உங்களுடைய எண்ணங்கள் எங்கிருந்து வருகிறதோ அந்த எண்ணங்களின் மூலத்தை ஆழ்ந்து கவனிச்சீங்கன்னா நிகழ்காலத்திற்குள் தானாகவே இறங்கிவிடுவீர்கள். கரைந்துவிடுவீர்கள். எதிர்காலத்திற்குள் நீங்கள் ஏங்கிக்கொண்டிருப்பது ஆசை, கடந்த காலத்திற்குள் கரைந்துகொண்டிருப்பது அச்சம், நிகழ்காலத்திற்குள் நிகழ்ந்துகொண்டிருப்பது தியானம். நீங்க அந்த எங்கிருந்து அந்த எண்ணம் தோன்றுகிறது என்ற எண்ணத்தை ஆழ்ந்து கவனியுங்கள். நிகழ்காலத்திற்குள் நிகழத் துவங்கிவிடுவீர்கள். அதனால் நிகழ்காலத்திற்குள் நிகழுங்கள். அதுக்கான ஒரே வழி எங்கிருந்து எண்ணம் பொங்குகிறது என்று ஆழ்ந்து கவனியுங்கள். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் உக்காந்து பாருங்க. நல்லது ஆனந்தமாக இருங்க.

நித்யானந்தம்: பக்தர்: வணக்கம் சுவாமிஜி சுவாமிஜி: சொல்லுங்கையா என்ன சொல்லனும் சொல்லங்க.. பக்தர்: என் பெயர் அருள்குமார், சாமி நான் நெஸ்கவே ஹார்லிக்ஸ் டீலர் வியாபாரம் பன்னிட்டு இருக்கேன். சுவாமிஜி: நல்லது பக்தர்: வியாபாரத்தல ஒரு பெரிய லாபம் தெரியல, பைனான்ஸ் லெவல்ல ஒரு பெரிய பிரச்சினை இருந்துட்டுதான் இருக்கு. அது என்ன பன்றதுன்னே தெரியல ? சுவாமிஜி: ஐயா நீங்க.. உங்களுடைய வாழ்க்கைய அப்படியே திரும்பிப் பார்த்து நீங்களே உங்களுடைய மிகப்பெரிய குறைகள் பிரச்சினைகள்னு என்ன நினைக்கிறீங்ன்னு சொல்லுங்களேன்? பக்தர் : எனக்கு என்னப் பிரச்சினைன்னா - உடல் ரீதியா சில பிரச்சினைகள்லாம் இருக்கு சாமி. சுவாமிஜி: மன ரீதியா? பக்தர் : மன ரீதியால்லாம் ஒன்னும் இல்ல சாமி. சுவாமிஜி: உடல் ரீதியாவும் மன ரீதியாவும் ஒன்னும் இல்லைன்னு நினைச்சா அப்ப ஏன் வெற்றி வர மறுக்கின்றது? நீங்க இப்ப சொல்றீங்க, பொருளாதார வளமும் பிஸினசில் வெற்றியும் வர மறுக்கின்றது என்று, ஒரு அடிப்படை உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். வெற்றியும் தோல்வியும் ’தீதும்-நன்றும் பிறர் தர வாரா’ அந்தத் தீதானாலும் நன்றானாலும் இரண்டிற்கும் நாம்தான் பொறுப்பு. ஒரு வியாபாரம் நடக்கனும்னாலும், பொருள்வளம் வரனும்னாளும் நாம்தான் பொறுப்பு. அது வரல அப்படீன்னா நம்முடைய உடல்-நம்முடைய மனம் இது இரண்டில் ஏதோ சங்கடங்கள் இருக்கு. சிந்திக்கவும் உழைக்கவும், தொடர்ந்து மனச்சோர்வு இலாது, வுசைநனநௌளஇ டிழசநனழஅ மனத்தளர்ச்சியோ மனச்சோர்வும் இல்லாது உழைக்கின்ற தன்மையும் இல்லாதிருப்பதை நீங்கள் ஆழ்ந்து பார்த்தீங்கன்னா கண்டுபிடிச்சிடலாம்.

பக்தர்: சரிங்க சாமி

சுவாமிஜி: வெறும் மந்திரத்தால் சில தீர்வுகளை நாம் கண்டால்கூட அதைத் தக்கவைத்துக்கொள்ள மனம் திறமாய் இருந்தால் மட்டும்தான் அது உபயோகம். மனம் திறமாய் இல்லாது மந்திரம் மாத்திரம் கொடுத்தாலும் தக்கவைத்துக்கொள்ளாமல் போய்விடும். ஊங்கள் மனதைத் திறமாக்குகின்ற செயல்கள்ல இறங்குங்க. உங்களுக்கு அருமையான ஒரு வாய்ப்பு டிசம்பர் மாதம் 31ம் தேதி ஜனவரி 1-2-3 இந்த நான்கு நாட்களும் பெங்களுரு ஆதீனத்துல நித்யானந்த தியானபீடத்துல விஷேச தீட்சை நிகழ்கிறது. வாங்க.. அனுமதி இலவசம் வாங்க. உங்களுடைய மனதைப்பற்றியும் அதனால் ஏற்படுகின்ற பக்க விளைவுகள் எதிர்விளைவுகளைப் பற்றியும் உங்கள் செல்வ வளத்திற்கும் மனதிற்கும் இருக்கின்ற தொடர்பைப் பற்றியும் இந்த அறிவியல் உங்களுக்குத் தௌிவா இந்த தீட்சையின் மூலமாகப் புரியத் துவங்கும்.

நித்ய தன யோகான்னு நவம்பர் 29ம் தேதி இன்னொரு நிகழ்ச்சி இருக்கு. பணத்திற்கும் மனத்திற்கும் இடையிலே இருக்கின்ற இரகசியங்கள் புரியத்துவங்கும். இந்த நிகழ்ச்சில ஏதாவது ஒன்னுத்துல வந்து கலந்துக்கோங்க இந்த ஞானத்தௌிவு உங்களுக்குள் மலரத்துவங்கும். அப்ப இயற்கையிலேயே உங்களால் வியாபார ரீதியில பொருளாதார வெற்றியும் அடைய முடியும், வியாபாரத்தில் திருப்தியும் கிடைக்கும், இந்த இரண்டையும் அடைகின்ற அறிவியல் உங்களுக்கு இந்த விஷேச தீட்சையில் நிச்சயம் கிடைக்கும் வாருங்கள்! நல்லது அனந்தமாக இருங்கள்!

தொலைபேசி அழைப்புக்களை தீர்த்து முடிப்பதென்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. தொடர்ந்து சத்சங்கங்களில் காண்போம். நாம் அடுத்த வகுப்பிற்குள் நுழைவோம். கண்டோருக்கும் கண்டுதொலைக்காட்சியல் தொடர்பு கொண்டோருக்கும் உங்கள் எல்லோருக்கும் நன்றி சத்சங்கம் தொடரும். நல்லது அனந்தமாக இருங்கள்.