14 ஜூலை 2006 பத்திரிகை செய்தி
வெளியீடு
மாலை மலர்
நிகழ்வு
நிகழ்வின் சாரம்: உலக அமைதிக்காகவும், சேலம் மற்றும் தமிழகத்தில் குற்ற எண்ணிக்கையை குறைக்கவும், மனிதர்களின் மனநிலையை மாற்றி ஒழுங்குபடுத்தவும் தியானபீடம் சார்பாக சேலம் மாநகரில் நடத்தப்படும் மஹாசப்தயாகம்
நாள்: 14 ஜூலை 2006
தலைப்பு: சேலத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது: தியானபீடம் சார்பில் யாகம் - குபேர பூஜை - பரமஹம்ஸ நித்யானந்த சுவாமிகள் பங்கேற்கிறார்கள்
"மஹாசப்தயாகம் சேலத்தில் 3 நாட்கள் நடக்கிறது தியானபீடம் சார்பில் யாகம் - குபேர பூஜை - பரமஹம்ஸ நித்யானந்த சுவாமிகள் கலந்து கொள்கிறார்கள்.
நடைபெறும் நாள்: 16, 17, 18 - ஜூலை 2006 இடம்: சேலம், அம்மாப்பேட்டை, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல்
16 ஜூலை, 2006: மாலை 3 மணி: ஆனந்தா இறக்கம், காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலம் துவங்கி முக்கிய தெருக்களின் வழியாக சென்று விழா நடைபெறும் அம்மாபேட்டை மாநகராட்சியில் அடைதல்
7.30 - 8 .30 மாலை: கணபதி ஹோமம் 8.30 - 9. 30 மாலை: ஆனந்த உரை
17 ஜூலை, 2006:
காலை 9 - 11: ஸ்கந்த ஹோமம் 11.30 - 1.30: சூரிய ஹோமம் மாலை 4 - 6: விஷ்ணு ஹோமம் 6 - 7: 108 குரு ஹோமம்
18, ஜூலை, 2006:
காலை 9-11: தேவி ஹோமம் 11.30 - 1.30: ஆனந்தீஸ்வரர் ஹோமம் மாலை 4 - 6. 30: சத்குரு ஹோமம் 7 - 8: குபேர பூஜை 9 மணிக்கு: தமிழ்நாடு தியானபீட பூஜை
7 சக்கர தெய்வங்களுக்கான 7 சிறப்பு யாக குண்டங்களும், குபேர பூஜைக்காக 21 யாக குண்டங்களும், குரு ஹோமத்திற்காக 108 யாக குண்டங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மக்களின் உடல் நோய்கள், மன நோய்கள் நீங்கவும், வாழ்வில் ஊக்கமும் உற்சாகமும் பொங்கும் ஆனந்த வாழ்வை அடையும் வகையில் இந்த மஹா சப்தயாகத்தை நிகழ்த்துகிறார் எனும் செய்திகளை தியானபீடத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
14 ஜூலை 2006
14 ஜூலை 2006 - பத்திரிகை செய்தி