21 ஏப்ரல் 2007 பத்திரிகை செய்தி
வெளியீடு
தினமணி
நிகழ்வு
நிகழ்வின் சாரம் :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்
நாள் :21 ஏப்ரல் 2007
தலைப்பு : தவிப்பின் உச்சி சென்றால்...
"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.
21 ஏப்ரல் 2007 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ' தவிப்பின் உச்சி சென்றால்' எனும் தலைப்பில் உள்ளம் தவிக்கும் காலங்களை தியான காலமாக்கும் வழிமுறைகளை தந்து, வெற்றியடைவதற்கான மார்க்கத்தை அறிவித்து, ஆன்ம பலம் தரும் அறிவுத் தெளிவை பெற்று ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்."
21 ஏப்ரல் 2007
21 ஏப்ரல் 2007 -பத்திரிகை செய்தி