September 06 2017

From Nithyanandapedia
Revision as of 04:04, 20 October 2020 by Ma.Radha (talk | contribs) (→‎Photos)
Jump to navigation Jump to search

Title:

மனிதவாழ்வின் அறிவியல்

Link to Video

Video Audio




Transcript in Tamil

சத்சங்க தலைப்பு : மனித வாழ்வின் அறிவியல் :

இன்றைய பௌர்ணமி சத்சங்கத்திற்காக வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன்.

வாழ்க்கையின் நோக்கமும், போக்கும் எதற்காக இந்த உடல் மனம் எனும் இயந்திரங்கள் நமக்கு வடிவமைக்கப்பட்டு அளிக்கப்பட்டிருக்கின்றதோ அதனுடைய ஏக்கமும், தேவையும், அதன் சாத்தியக்கூறுகளும் ஆழ்ந்து கேளுங்கள். இந்த உடலும் மனமும் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிற இயந்திரங்கள். அதனுடைய ஏக்கங்கள் என்னென்ன? தேவைகள் என்னென்ன? சாத்தியக்கூறுகள் என்னென்ன?

ஒரு ஐ-போன்6 உங்களுக்கு யாராவது அன்பளிப்பாக கொடுத்தால் அதை வெறும் நம்பரை மட்டும் அழுத்தி உங்களுக்குத் தேவைப்படறவங்களோட பேசறதுக்கு மட்டும் பயன்படுத்தவும் செய்யலாம். இல்லை அதில ஃபேஸ்புக்லருந்து, ட்விட்டாலருந்து, வலைத்தளங்களில் பயன்படுத்தவும் செய்யலாம். கூகுள்-லருந்து எல்லா மற்ற மற்ற செயலிகளை (ஆப்ஸ்) எல்லாத்தையும் பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்தவும் செய்யலாம்.

எப்படி ஒரு ஐ - ஃபோன் 6 அதனுடைய சாத்தியக்கூறுகளை தொிந்து கொண்டு உபயோகப்படுத்தும்பொழுது உங்கள் வாழ்க்கை பல விதத்திலும் அதனால் மேம்படுகிறதோ, அதே போல உங்கள் உடல் மனம் மிகுந்த சக்தி வாய்ந்த சாத்தியக்கூறுகள் வாய்ந்த சாத்தியக்கூறுகளும் சக்திகளும் வாய்ந்த ஒரு இயங்கு மென்பொருள்.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் இதுவரை புரிந்து கொண்டதைவிட, எதிர்பார்த்ததை விட, கற்பனை செய்ததைவிட, இயக்கிப் பார்த்ததைவிட அதிக அளவு சாத்தியக்கூறுகளும் சக்திகளும் உடையது உங்கள் உடலும் மனமும். அதை எப்படி வௌிப்படுத்தி நடைமுறையில் சாத்தியமாக்கி வாழ்வது என்பதுதான் ஆன்மீகம். மொத்த ஆன்மீகமும் இவ்வளவுதான்.

நீங்கள் கற்பனை செய்து பார்த்ததைவிட, நினைத்துப் பார்த்ததைவிட, வாழ்ந்து பார்த்ததைவிட, சோதித்துப் பார்த்ததைவிட, விளையாடிப் பார்த்ததைவிட அதிக அளவு சாத்தியக்கூறுகளும் சக்திகளும் உடையது உங்களுடைய உடல், மனம் எனும் இயங்கு மென்பொருள். அந்த உடலையும் மனத்தையும் பல்வேறு சாத்தியக்கூறுகளையும் சக்திகளையும் உள்ளடக்கி வைத்துத்தான் இறைவன் நமக்கு நன்கொடையாய் அளித்திருக்கின்றான். அந்த சாத்தியக்கூறுகளையும் சக்திகளையும் வௌிப்படுத்தி அதை வாழ்க்கையின் சாத்தியமாக்கி அதை தினசரி வாழ்க்கையின் பாகமாக்கி வாழ்வது அதுதான் ஆன்மீகம்.

இன்றைக்கு உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற இரண்டு விஷயங்கள் : ஓன்று : புரணத்துவ தியானம் இரண்டு : இப்பொழுது அளிக்கப்படப்போகின்ற சமயதீக்ஷை. கல்பதரு தரிசனம். இதன் மூலமக உங்களுக்குள் இருக்கின்ற பல்வேறு சக்திகளையும், சாத்தியக்கூறுகளையும் மலர வைக்கப் போகின்றேன். நல்லா ஆழ்ந்து தொிஞ்சிக்கங்க... புனை கண்ணை மூடினால் புலோகம் இருண்டு விடாது. நாலு போ் ஒன்றாய்ச் சோ்ந்து சத்தம் போட்டு சக்திகள் சாத்தியமில்லை என்று சொன்னால் அது சாத்தியமில்லாது போய்விடாது.

எத்துணை சத்தம் போட்டு அவர்கள் கத்தினாலும் சத்தியங்கள் சத்தியங்களே சாத்தியங்கள் சாத்தியங்களே! காலைல சக்தி வௌிப்பாட்டை இந்த நிகழ்ச்சியின் போது பார்த்திருப்பீர்கள். மூன்றாவது கண் சக்தி வௌிப்பாடு. மற்ற சக்தியின் வௌிப்பாடு. இவையெல்லாம் சத்தியம். இதுல மேஜிக்கோ ப்ராடுலன்ஸ்ஸோ எதுவும் கிடையாது. இவையெல்லாம் சத்தியம். அது ஒரு நற்செய்தி.

அதைவிட பொிய நற்செய்தி இது உங்களுக்கும் சாத்தியம். அவர்களுக்கு மட்டுமல்ல.., உங்களுக்கும் சாத்தியம். இது ஒரு பொிய அறிவியலுங்கய்யா. வாழ்க்கையை மனித வாழ்க்கையை எப்படி ஒரு கம்பெனி புதுசா ஒரு காரை ரிலீஸ் பண்ணா அதை யுஸ் பண்றதுக்கான ’ஓனர்ஸ் மேனுவல்’ ‘உரிமையாளர் கையேடை’ ரிலீஸ் பண்றாங்களோ அதேமாதிரி இந்த புமிக்கு மனிதனை அனுப்பி வைத்த சதாசிவன் நமக்கு கொடுத்த உரிமையாளர் கையேடு தான் இந்த ஆகமம்.

மனித வாழ்க்கையை நமக்கு அளித்து, அதை மிகச்சிறந்த வழியில் மிக உயர்ந்த வழியில் எவ்வாறு வாழ்வதுன்னு பெருமான் நமக்கு அளித்த அறிவியல் தான் ஆகமம். இது ஒரு பொிய அறிவியல். தௌிவும், தைரியமும், ஞானமும், வீரமும், தன்னுடைய வாழ்க்கையின் உச்சத்தை தொடவேண்டு என்ற தேடுதலும் உடையவர்களுக்கே இந்த அறிவியல் உபயோகமாகும்.

இந்தத் தேடுதல்கள் நமக்குள் மலரும்பொழுதுதான் நம்ம வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்தைப் பார்க்கத் துவங்குகிறோம். ஐயா விதை வெடிக்கும்பொழுது நிச்சயமா கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும். ஆனால் விதை வெடித்தால்தான் விருக்ஷம் வௌியில வரும். அதே மாதிரி எப்போ நாமும் நாம வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையைத் தாண்டித் தேடத்துவங்குகிறோமோ அந்தத் தேடுதல் ஆரம்பிக்கும்பொழுது பல தேவையில்லாத பழையவை கழிதலும் கழிதலும் புதிய தௌிவு மலர்தலும் துவங்கும். அப்ப தான் வாழ்க்கையை துவக்குகிறீர்கள். வாழ்க்கை மலரத்துவங்கும்.

அதாவது வாழ்க்கையில வெறும் நிகழ்ச்சிகளை மாற்றிக் கொள்வது மாத்திரம் நிகழ்ச்சிகளை மாற்றக் கற்றுக்கொள்வது மாத்திரம் வளர்ச்சியல்ல. தினந்தோறும் வேலை செய்யறோம். போன மாசம் பத்தாயிரம் சம்பாதிச்சோம். இந்த மாசம் ஒரு இலட்சம் சம்பாதிக்கறோம்னா அதுமட்டுமே வளர்ச்சியல்ல. அது ஒரு விதமான வௌியுலக வளர்ச்சி. போனமாதம் எந்த அளவிற்கு நம்முடைய உணர்வு பலமாகவும், தௌிவாகவும், ஆனந்தமாகவும், வாழ்க்கையோடும் இணைந்தும் இருந்ததோ அதைவிட இந்த மாதம் அதிகமாயிருந்தா அதுதான் முதிர்ச்சி. முதிர்ச்சி அடைய அடைய மேம்படும் சக்திகள் வௌிப்படும்.

வௌி உலக வாழ்ககையின் சுழல்களை மாற்றுவது மட்டுமே வாழ்க்கையின் நோக்கம் அல்ல. நேற்று வரைக்கும் சைக்கிள்ள போயிட்டிருந்தோம். இன்று டூவீலர்ல போறோம். நாளைக்கு கார்ல போகணும் அது மட்டுமே வாழ்க்கை அல்ல. வாழ்க்கையை உள்ளிருந்து எதிர்கொள்ளுகின்ற முதிர்ச்சி. எப்படி எதனாலும் துக்கமும் துயரமும் தடையும் அஞ்ஞானமும் குழப்பமும் நமக்குள் வராது வாழ்க்கையை, சரியான போக்கிலேயே பார்த்துக் கொண்டு செல்லுதல்.

செந்தமிழாலே சிந்தை கூட்டி ஆகமத்தை ஆனந்தமாய் திருமூலர் சொல்லி வைக்கும்பொழுது சொல்லிவைத்த அருமையான ஒரு மந்திரம். ’பொன்னை மறைத்தது பொன் அணி புஷணம். பொன்னில் மறைந்தது பொன் அணி புஷணம்’ ’தன்னை மறைத்தது தன்-கரணங்களே. தன்னில் மறைந்தது தன்-கரணங்களே’

ஆழ்ந்து கேளுங்கள்.

வௌி உலகச் சுழல் உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்தைக் குறைத்து, உங்கள் மீதே உங்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தி வாழ்க்கை மீது அவநம்பிக்கை ஏற்படுத்தி உங்கள கலக்கத்திலும், குழப்பத்திலும் தள்ளுகிற டிப்ரஷன்ல வைக்கிற அந்த சுழல்தான் தன்னை மறைத்தது தன் கரணங்களே. கரணங்கள்னா அந்தக்கரணங்கள். மனம். புத்தி. சித்தம்.

நம்முடைய மனமே நம்மை புகைமூட்டத்தில் மயங்கியவனைப்போல மயக்கி வைப்பது. காரணமில்லாத உணர்ச்சிக் கொந்தளிப்புகள், உணர்வுச் சலனங்கள் இதன் மூலமாக தன்னையே தன் கரணங்கள் மறைக்கின்றது. கரணங்கள்னா, அந்தக்கரணங்கள். மனம் சித்தம் புத்தி அகங்காரம் இவையெல்லாம் தான் அந்தக்கரணங்கள்னு சொல்வோம். திருமூலப்பெருமான் ரொம்ப அழகா சொல்றாரு. ஒரு நகையைப் பார்க்கும்பொழுது கலையைப் பார்த்து அந்த வேலைப்பாட்டைப் பார்த்து இரசிப்பவன் அந்த வினாடி பொன் என்பதை மறந்துவிடுகின்றான். பொன்னாய் அதைப்பார்த்து திருடினால் எவ்வளவு கிடைக்கும் என்று நினைப்பவன் அந்த விநாடி அதன் கலை அழகான நகையை மறந்துவிடுகின்றான். ’பொன்னை மறைத்தது பொன் அணி புஷணம். பொன்னில் மறைந்தது பொன் அணி புஷணம்’. பொன்னாய்ப் பார்த்தால் நகையாய், ஆபரணமாய் தொியாது. ஆபரணமாய்ப் பார்த்தால் பொன்னாய் தொியாது. இந்த விநாடி பொன்னாய்ப் தொிந்தால் அடுத்த விநாடி தான் ஆபரணமாய்த் தொியும். அடுத்த விநாடி ஆபரணமாய்த் தொிந்தால் அதற்கு அடுத்த விநாடி தான் பொன்னாய் தொியும். பொன்னாய் தொியும் அதே விநாடி ஆபரணமாய்த் தொியாது. ஆபரணமாய்த் தொியும் அதே விநாடி பொன்னாய் தொியாது.

பொன் மறைந்தால்தான் பொன்னணி புஷணம் தொியும். புஷணம் மறைந்தால் தான் பொன் தொியும். அதே போல தன்னைத் தன் கரணங்கள் மறைக்கின்றது. தன்-கரணங்களை நாம் மறைத்தால் நாம் ப்ரகாசமாய் ஸ்வயம் ப்ரகாசமாய் இருப்போம். கரணங்கள் மறைத்துவிடும். ரொம்ப அருமையான இன்னொரு பாடல். மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார் முதல் புதம் பரத்தில் மறைந்தது பார் முதல் புதம்

இரண்டுமே திருமூலரின் வாக்கியங்கள் தான். இரண்டுமே ஒரே பொருள் உடையவைதான். மரத்தால் ஒரு யானை செய்து வைத்திருந்தால் மரம்னு நினைத்தால் யானை தொியாது. யானைன்னு நினைத்தால் மரம் தொியாது. அதே மாதிரி தான் இந்த உலகம்.

பரம்பொருள் தான் இந்த பார் முதலாகிய பஞ்சபுதங்கள். பஞ்ச புதங்களாய்ப் பார்த்தால் பரம்பொருள் தொியாது. பரம்பொருளாய்ப் பார்த்தால் பஞ்சபுதங்கள் தொியாது பஞ்ச புதங்களாய்ப் பார்ப்பதுதான் மயக்கம். தனக்குள்ள தன்னைப்பற்றி நம்மைப்பற்றி நாமே வைத்திருக்கும் தைரியம், நம்மைப்பற்றி நமக்கிருக்கிற தௌிவு, வௌில நடக்கற நிகழ்ச்சிகளால தடுமாறிச்சுன்னா அதுதான் தன்னை மறைத்தது தன் கரணங்களே. நீங்கள்தான் சதாசிவன். இதை நான் சொல்லலை. சதாசிவனே சொல்றாரு. ஆகமத்துல. ‘யார் நானும் அவனும் ஒன்று என்றுத் தொிகிறானோ அவன் தான் என்னுடைய மிகச்சிறந்த பக்தன்’ என்று சொல்றாரு. பிரச்னையே என்னன்னா? என்ன சாமி சொல்றீங்க? என் பையன்கூட நான் சொல்றதைக் கேட்க மாட்டேங்கறான். என்னையப்போய் சதாசிவன்னு சொல்றீங்களே. என் பையனை விடுங்க. நானே சில நேரத்தில நான் சொல்றதை கேட்கமாட்டேங்கறேன். நல்லாப் புரிஞ்சுக்கங்க. உங்களுடைய வௌியில் நடக்கின்ற செயல்களாலே செயல்பாடுகளாலே அதற்கு உங்களுடைய எதிர்வினைகள் இவைகளைச் சார்ந்து உங்களை நீங்கள் எடைபோட்டால் அதுதான் தன்னை மறைத்தது தன் கரணங்கள். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். மேகம் சுழ்ந்ததனால் சுரியன் அழிந்து விட்டது என்று நினைப்பவன் முட்டாள். ஆம். சில நேரத்தில உங்களுக்கு குழப்பங்கள் இருக்கு. டிப்ரஷன் இருக்கு. உண்மைதான். அதனால் அது உங்களுடைய குணமாக மாறிவிடாது. அது உங்களுடைய தன்மையாக மாறிவிடாது.

ஆழ்ந்து புரிஞ்சுக்கோங்க. சில நேரத்தில் சுழல் காரணமாக உங்களுக்குள் நீங்களே உங்களைப்பற்றி வைத்திருக்கின்ற நம்பிக்கையை, கருத்தை இழப்பது உங்களுக்கு நீங்களே இழைத்துக் கொள்ளுகின்ற அநீதி. வேற யாரும் உங்களுக்கு அநீதி இழைக்கவில்லை. நாம் தான் நமக்கு அநீதி இழைத்துக் கொள்கிறோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா. நம்மைப் பற்றி நம்மை விடவும் நம்மை உருவாக்கிய சதாசிவனுக்குத் தொியும் என்று நாம் நம்புவதுதான் சரணாகதி பலபோ் என் கிட்டே வந்து சொல்றதுண்டு. சாமி! நான் இறைவன்ட்டே என்னை சரணாகதி பண்ணிட்டேன். அப்புறம் ஏன் சாமி எனக்கு இவ்வளவு துக்கம் வருது? இத மாதிரி ஒரு ஃப்ராடு ஸ்டேட்மெண்ட்டை நான் பார்த்ததேயில்லை. சரணாகதின்னா என்னன்னு புரிஞ்சுக்கங்க. ‘‘பெருமானே! என்னைவிடவும் என்னைப்பற்றி உங்களுக்கு நன்றாய்த் தொியும். அதனால் என்னை நான் யார் என்று நினைக்கின்றேனோ அதைவிட நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்களோ அதைத்தான் நம்பப்போகிறேன்’’ அப்படிங்கற தௌிவுதான் இறைவனுக்கு சரணாகதி. பெருமான் தௌிவா சொல்றாரு. நீ நானே. நீ நானே.

இரமண மகரிஷி ரொம்ப அழகா சொல்றாரு : சாதகத்தில் துவிதம். சாத்தியத்தில் அத்துவிதம் என்பதும் பொய். ஏனெனில் தேடும்பொழுதும் தேடி உற்றபொழுதும் தசமன் தானே. அதாவது நாமெல்லாம் நினைப்போம். நீங்க சொல்றீங்க கரெக்ட் தான் சாமி. நீங்களே சொல்லிட்டீங்கன்னா கரெக்டாத்தான் இருக்கும். நாமதான் சதாசிவன். ஒருவேளை அந்த அனுபவம் வந்தபிறகு நான் சதாசிவன். அதுவரைக்கும் என் பொண்டாட்டிக்கு பயந்து ஆபிஸர்க்கு பயந்துட்டு பையனுக்கு பயந்துட்டு சில நேரத்தில என்னைப் பற்றியே என்னைப்பார்த்து பயந்துகிட்டு, நாம பல நேரத்தில நம்பளைப் பார்த்தே பயப்படறோம். இவ்வளவு பொிய வேலையை எடுக்கறமே இதைத்தொடர்ந்து செய்வோமா நாம? பத்து நாள் கழிச்சு படுத்துப்பமே. பாதிலவிட்டா போட்ட பணம் வீணாப்போயிருமே? நம்மளைப் பற்றியே நமக்கு பயம் இருக்கும்.

எவ்வளவு போ் நம்மளைப் பற்றியே பயமிருக்குன்னு கண்டுபிடிச்சிருக்கீங்க சொல்லுங்க? உண்மை அதுதான். கைத்தூக்காதவங்கல்லாம் கைத்தூக்க பயம் அவ்வளவுதான். இப்போதைக்கு இதுதான் சாமி உண்மை. ஒருவேளை பெருமான் என்னிக்காவது ஞானம் கொடுத்தார்னா அன்னைக்கு நானும் சதாசிவனும் ஒண்ணுன்றது உண்மை. இதுகூட பொய்ன்னு இரமண மகரிஷி சொல்றார். ரொம்பத் தௌிவா சொல்றாரு.

ஒரு கதை. ரொம்ப அழகான கதை.

பத்து முட்டாள்கள் ஒரு ஆத்தைக் கடக்கறாங்க. அதுக்கு முன்னாடி அவங்களுக்கெல்லாம் பயம். ஆத்தைக்கடக்கையில யாராவது அடிச்சிக்கிட்டுப் போயிட்டா என்னப் பண்றது. உடனே ஒருத்தன் ஐடியா கொடுக்கறான். இங்கேயே உட்கார்ந்திருப்போம் யாராவது பொிய ஞானிகள் வந்தாங்கன்னா அவங்க கிட்டே அறிவுரை கேட்டுட்டுப் போலாம். ஏதோ ஒரு புத்திசாலி. கொஞ்சம் புத்திசாலி. அந்த பக்கமா ஒரு பொிய ஞானி வந்தார். பெருமானே நாங்க ஆத்தைக்கடக்கணும். நாங்க யாரும் ஆத்தில அடிச்சிகிட்டுபோயிடாம இருக்க அறிவுரை சொல்லுங்க. அவர் சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு. மொத்தத் தண்ணியே முட்டிக்கால் அளவு தான் போகுது. பத்துத் தடிமாடுகளை ஆறு எப்படிடா அடிச்சிகிட்டுப் போகும். நீங்க பத்துப்போ் இறங்கினா அணைபோடட்டா மாதிரியில்லையா ஆயிரும். ஆறு தானே நின்னுப்போகும். ஆனா இவங்க சொன்னாக் கேட்கறா மாதிரி தொியலை. சரிப்பா. பத்துப்போ் ஒருத்தரை ஒருத்தர் கையை இறுக்கமா பிடிச்சிக்கிட்டு ஒண்ணா நடங்க. உடனே அவங்க இன்னொரு கேள்வி கேட்டாங்க. சரி பத்து போ் நாங்க இறங்கி அந்தப் பக்கம் நடந்திடுவோம். பத்துப்போ் அந்தக் கரையைக் கடந்தி்ட்டோமான்னு எப்படி சாமி நாங்க கண்டுபிடிப்போம். அதுக்கெதாவது வழி சொல்லிட்டுப் போங்க. அவர் சொல்றாரு. அதுக்கென்ன. அந்தப் பக்கம் கரையேறினவுடனே எண்ணிப்பாருங்க. பத்துப்போ் இருப்பீங்க முடிஞ்சுப்போச்சு. இறங்கினது பத்து. ஏறினது பத்து. அப்ப யாரும் ஆத்தில அடிச்சிட்டுப்போல. அவ்வளவுதான். சொல்லிட்டுப் போயிட்டாரு.

ஆனா இது மஹா புத்திசாலிகள். பத்துப்பேரும் இறங்கினார்கள். முட்டியளவு தண்ணிதான் இருந்தது. அந்தக் கரைக்கு ஏறிவிட்டார்கள். ஏறினவுடனே ஒருத்தன் சந்தேகத்தைக் கிளப்பினான். இப்ப நாம எண்ணிப் பார்த்துடணுமப்பா. பத்துப்போ் கரையேறிட்டமான்னு. யாராவது அடிச்சிட்டு போயிருந்தா யாருக்குத் தொியும்? சரி. எண்ணிப்பார்ப்போம். பத்துப்போ் நின்னார்கள். ஒருத்தன் எண்ணினான் 1 2 3 4 5 6 7 8 9 பத்தாவது ஆளைக் காணோமே. தன்னை எண்ணலை. உடனே அவன் ஐய்யயோ ஐய்யயோன்னு கத்த ஆரம்பிச்சான். மத்தவங்கல்லாம் என்னடா ஆச்சு? 9 தான் வந்தது. உடனே இன்னொருத்தான்.. ஏ நீ முட்டாள்.. சும்மா இருடா, நான் எண்றேன்.

நீ வாய்ப்பாடு ஒழுங்கா சொல்லலை. ஓரோண் ஒண்ணு. இரண்டோன் இரண்டு. மூன்றோன் மூணு. நாலோண் நாலு. ஆப்படியே சொல்லி கடைசில அவனும். ஐயோ ஒன்பதோண் ஒன்பது. ஐயயோ ! இவங்களுக்கெல்லாம் ஒரு சின்ன லீடர் ஒருத்தன் இருப்பான். எப்பயுமே இருப்பாங்க. அவன் வந்து இல்லையில்லை நான் வந்து எண்ணிப் பார்க்கறேன். அவனும் இதேதான். ஓண்ணு ஒண்ணு ஒண்ணு, இரண்டு இரண்டு இரண்டு. மூணு மூணு மூணு, நாலு நாலு நாலு அஞ்சு அஞ்சு அஞ்சு, அவனும் ஒன்பதுல வந்து ஐயயோ ஒன்பது. பத்தெங்கப் போச்சு? எல்லாம் உட்கார்ந்து அழ ஆரம்பிச்சிட்டாங்க. ஐயோ யார் போனான்னு தொியலையே. ஒருத்தன் ஆத்தோட போயிட்டானே! அழுகைச் சத்தம் ஓவராப் கேட்டு அந்த வழியா போயிட்டிருந்த அதே சந்யாசி திரும்ப அந்தக் கரையில வந்து நின்னாரு. என்னப்பா ஏன் அழறீங்க? சாமி வேற ஒண்ணுமில்லை. நீங்க சொன்னபடியே நாங்கெல்லாரும் கையெல்லாம் பிடிச்சிகிட்டு ஒண்ணாத்தான் நடந்து வந்தோம். இந்தக் கரை ஏறியபிறகு எண்ணிப் பார்த்தா ஒன்பதுதான் இருக்கறோம்.

ஞானிக்கு தௌிவா புரிஞ்சிருக்சு. ஐயோ! எண்றவன் தன்னைச் சோ்த்து எண்ண மாட்டேங்கறானே? இது எத்தனை சொன்னாலும் புரியாது. பத்துப் பேரை நிக்க வைச்சு அவர் எண்ணினாராம். எண்ணினதும் பத்தாவது நம்பர் சொன்னவுடனேயே அவங்க எல்லாரும் ஆஹா! ஆத்தோடப் போனவனை ஞானி கண்டுபிடிச்சு தூக்கிட்டு வந்து கொடுத்திட்டாரு. அப்படின்னு கொண்டாட துவங்கினார்களாம். நல்லாப் புரிஞ்சுக்கோங்க. தேடும் பொழுதும். தேடிக் கண்டுபிடிச்சபிறகும் தசமன் அவன்தான். தேடும்பொழுது நாங்க ஒன்பது போ் தான் இருந்தோம். தேடிக்கண்டுபிடிச்சப் பிறகு பத்தாவதா வந்தோம்னு சொல்ல முடியுமா? தேடும் பொழுதும், கண்டுபிடித்த பிறகும் பத்தாவது ஆன தசமன் தான்தான்.

நாம வாழ்க்கையின் இறுதியைத் தேடும்பொழுதும், அனுபூதியை அடைந்துவிட்ட பிறகும் நாம் தான் சதாசிவன், நாம் தான் சதாசிவம். இல்லையில்லை. கண்டுபிடிச்சப்புறம் தான் நாம சதாசிவம். தேடும்பொழுது நாம இல்லை. கிடையாது. தேடினபொழுது அந்தப் பத்தாவது ஆள் யாரு. தேடும் பொழுதும் தேடினவன் தான் தசமன். தேடும்பொழுதும் தேடுபவராகிய நீங்கள் தான் சதாசிவம்.

ஒரே ஒரு சின்ன விஷயம் தான்.

அந்த தன்னை மறைத்துக் கொண்டிருக்கிற கரணங்களை விலக்கி தன்னுடைய சதாசிவத்துவத்தை தானே இரசித்தல் ருசித்தல். தானே அதை வாழ்தல். வாழ்க்கையோட மிகப்பொிய பிரச்சினைங்கய்யா. யாரையாவது பார்த்து ஒரு நாலு கெட்ட வார்த்தையால திட்டினீங்கன்னா அதை அவர் எவ்வளவு பர்சனலா எடுத்திகிட்டுக் கோவப்படுவாரு பாருங்க. தறுதலைப்பய. உருப்படுவியா? ஏதாவது ஒரு 4 கெட்ட வார்த்தை திட்டினீங்கன்னா ஏய் என்னை பார்த்தா அப்படி சொன்னே என்னை நாய்னு சொல்லிட்டியா? கத்தி நிரூபிப்பாரு. குலைச்சு நிரூபிப்பாரு. என்னைப் பார்த்தா குரங்குன்னு சொன்ன? குதிக்கறதுலேயே நிரூபி்ப்பாரு. ஒரு கெட்ட வார்த்தை சொன்னவுடனேயே அதை தன்னுள் ரொம்ப இணைத்துக்கொண்டு எவ்வளவு வேகமா கொந்தளிக்கிறாரு, அதே நபரைப் பார்த்து நீதாம் பா சதாசிவம். ஏதாவது ரியாக்ஷன் இருக்கான்னு பாருங்க? உள்ள என்ன சேனலுக்கு செட்டப் பாக்ஸை ட்யுன் பண்ணியிருக்கோமோ அந்தச் சேனல்தானே தொியும். நம்மை நாமே மிகக்குறைந்த நிலையில் வைத்து தன் கரணங்களால் தன்னையே மறைத்துக் கிடப்பதனால் குறைநிலை கருத்துக்கள் யாராவது நம்மை நோக்கி சுட்டும்போது நாம் தான் என்று உடனடியாக அதை நாம் பிடித்துக்கொள்கிறோம். ஆனால் நிறைநிலை சத்தியங்கள் சொல்லப்படும்பொழுது ஏதோ சொல்றாரு. ‘‘காலைலருந்து உட்கார வெச்சிருந்தாங்க. ராத்திரி தாம்பா அங்க சாமி வந்தாரு. வந்து நான் தான் சதாசிவன்னு சொல்றாரு. இதுக்கா காலைலேருந்து உட்கார வெச்சிருந்தாங்க? எனக்கு தூக்க கலக்கமாயிருந்திச்சு. சரின்னு வந்திட்டேன்’’

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். ஒரு கெட்ட வார்த்தையினால் ஒரு வசை வார்த்தையினால் ஒரு கீழான வார்த்தையினால் கீழான கருத்தினால் உங்களை வையும்பொழுது எந்த அளவுக்கு நீங்கள் அதோடு உங்களை இணைத்துக்கொண்டு, அதோடு உங்களை உணர்த்திக் கொள்கிறீர்களோ ஒன்றாக்கிக் கொள்கிறீர்களோ சத்தியம் சொல்லப்படும்பொழுது அதை செய்யாமல் இருப்பதுதான் மிகப்பொிய மாயை. ஓண்ணுமில்லை ஒருத்தரைப்பார்த்து தரித்திரமே, தூங்காம நிமிர்ந்து உட்காரேன். பேசும்பொழுது தூங்கறியேன்னு அப்படின்னு நான் சொல்லிட்டேன்னா ஊர்ல போய் ஒரு வாரம் சொல்லிட்டிருப்பாரு. பெங்களுர் போனேன் அந்த சாமி என்னை தரித்திரம்னு சொல்லிருச்சு. ஆனா அதே ஊரில போய் என்னை சதாசிவன்னு சொல்லியனுப்பினாருன்னு சொல்லுவாரா? கேளுங்க.

நான் இங்கேருந்து பெங்களுரு போனேன், அந்த சாமி என்னை தரித்திரம்னு சொல்லி அனுப்பிருச்சி. காலைலேருந்து உட்கார்ந்திருந்ததனால டயர்டா இருந்துது. ஒருரெண்டு நிமிஷம்தாம்பா தலையை தொங்கப் போட்டேன். ஒரு ஞானி பொறுமை இருக்க வேணாம். தூங்காதேன்னு சொல்லியிருக்கலாமில்லை. தரித்திரம்னு சொல்லிட்டாருப்பா. தொியற அத்தனைப் போ்ட்டயும் புலம்பிருவோம். ஆனா இப்பப்போய் ‘என்ன சதாசிவன்னு சொன்னாருப்பா!’ அப்படின்னு சொல்லுவோமா? காரணம் நாம் ஏற்கெனவே எந்தப் புண்ணில் இருக்கின்றோமோ அந்தக் கருத்துக்கள் தான் உரைக்கின்றது. அதுதான் கொடுமைங்கய்யா. நம்மை யாராவது வலிக்க வைப்பார்களா என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றோம். நமக்கு யாராவது சத்தியத்தை சொல்வார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை.

அதனால்தான் இப்ப நான் சொல்றேன் ஐயா, தேடிக்கிடைச்ச பிறகு மட்டுமல்ல தேடும்பொழுதும் பிறகும் நீங்கள் தான் சதாசிவன். 1 2 3 4 5 6 7 8 9 ன்னு எண்ணி நிறுத்தும்பொழுதும் 10 ன்னு தன்னைக் கண்டுபிடிக்கும்பொழுதும், ரெண்டு நேரத்திலும் தான் தான் தசமன். நீங்க சொல்லுவிங்க இல்லையில்லை. எண்ணும் வரை ஒன்பது தான் இருந்தோம் ஞானி வந்துதான் பத்தாவது ஆள் காட்டிக்குடுத்தாருன்னு சொல்ல முடியுமா? கிடையது. தேடும்பொழுதும் தேடி உற்ற பொழுதும் தசமன் தானே! செய்ய வேண்டியது எல்லாமே உங்களைத் திட்டினால் எந்த அளவுக்கு உரைக்குமோ அந்த அளவுக்கு இந்த சத்தியத்தை உரைக்க வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். தரித்திரமே ஏன் தூங்கற? நிமிர்ந்து உட்கார மாட்டியா? என்று ஒரு வார்த்தை சொல்லிட்டா ஊருக்கு போய் அதை எத்தனை நாள் ஊரெல்லாம் பரப்பிட்டிருப்போம். டமாரமடிச்சு.

அதைவிட ஆழமாக நீங்கள் தேடும் பொழுதும் தேடி கண்டுபிடித்த பிறகும் இரண்டு காலத்திலும் நீங்கள் தான் சதாசிவம். நீங்கள் தான் இறுதிப்பரம்பொருள். அதைத்தவிர உங்களைப்பற்றி நீங்க என்னக் கருத்து வெச்சிருந்தாலும் அது புகைமூட்டம். தன் கரணங்கள் தன்னை மறைக்கின்றன. அந்த புகைமூட்டத்தை கரைப்பதற்கான வழிதான் இன்னிக்கு நீங்க கத்துக்கிட்ட கம்ப்ளீஷன் தியானம். உங்களுக்கு அளிக்கப்பட்ட அந்தப் பூரணத்துவ தியானம் சதாசிவன் நேரடியாக ஆகமங்களிலே அன்னை ஆதிசக்தி பார்வதிக்கு அருளிய தியான முறைகளிலே ஒன்று. உங்களை தன் கரணங்கள் எப்படி தன்னை மறைக்கின்றன, அவற்றிலிருந்து நாம் நம் கரணங்களை மறைத்து வெகுண்டெழுவது

இரண்டு நண்பர்கள். குடிகாரர்கள். ஒருத்தன் சொன்னானாம் எனக்கொரு பொிய பிரச்சினைப்பா. இராத்திரி குடிச்சிட்டு வீட்டுக்குப் போனா ஒரே தகராறு. நான் வந்து ஒரு சின்ன சத்தம் கூட வராம நானே ஒரு மாத்து சாவி திருட்டுத்தனமா வெச்சிருக்கேன். அதைப்போட்டுத்தான் மெதுவா திறப்பேன். ஒரு சின்ன சத்தம் வராம அந்த ஷூவை கழட்டி ஓரமா வெப்பேன். சின்ன சத்தம்கூட வராம அப்படியே மெதுவா பதுங்கி பதுங்கி பதுங்கி கிச்சன் பக்கமா போய் ஒரு சின்ன சத்தம் கூட வராம கரகரன்னு ரெண்டு உருண்டையை உருட்டி வாயில போட்டுகிட்டு ஒரு சத்தம் வராம அப்படியே போய் பெட்ல ஒரு ஓரமா இல்ல தலகாணியை கீழே எடுத்துப் போட்டு பெட்டுக்கு கீழே ஒரு ஓரமா படுப்பேன். ஏன் லேட்டு? ஆரம்பிச்சாள்னா இராட்சசி ரெண்டு நாளைக்கு நிம்மதியிருக்காதப்பா. இந்தப் பிரச்சினைக்கு எப்படித்தான் தீர்வு கண்டுபிடிக்கறதுன்னே தொியலை.

அந்த ப்ரெண்டு சொல்றான் ஒண்ணுமே கவலைபடாதப்பா.. என் வீட்டில சீனே வேற. இறங்கினவுடனே டூவீலர் ஹாரனை அடிப்பேன். கதவை டமால்னு எட்டி உதைப்பேன். ஷூவை கழட்டி தூக்கி எறிவேன். சோறெங்கேடி? அப்படின்னு தட்ட எறிவேன். இருக்கறதை சாப்பிட்டிட்டு நேர போய் பெட்ல யாருமில்லையா என்னடி பண்றீங்கங்க. இவ்வளோ நடந்தாலும் தூங்கறா மாதிரியே சைலண்டா படுத்திட்டு நடிப்பா. ரெண்டு சீனையும் பாருங்க. தன்னை மறைக்கும் தன் கரணங்கள். தன்னில் மறைக்கும் தன் கரணங்கள். தான் வெகுண்டால் தன் கரணங்கள் மறைந்துவிடும். தான் ஒடுங்கினால் தன் கரணங்கள் மறைக்கும். வீட்டில போய் பொங்குங்கன்னு சொல்லலை. அதுக்குப் பிறகு பக்க விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை. அது ப்ளுவேல்ஸ் விளையாடறா மாதிரி. அந்த பக்கவிளைவுகளுக்கு நான் பொறுப்பில்லையப்பா.

உங்களுடைய கரணங்கள் உங்களை மறைப்பதை அனுமதிக்காது நீங்கள் பொங்குங்கள். வௌியுலகத்தின் எந்த சுழலும் உங்கள் உள்ளுலகத்தின் உறுதியை மாற்றாத நிலையோடு நில்லுங்கள். மனிதன் திரும்பத்திரும்ப வெறும் வௌியுலகத்து சுழலை மாற்றுவதாலேயே வென்றுவிட முடியும் என்று நினைக்கறான் முடியாது. வெறும் போராட்டங்களாலும், வௌியுலகத்தின் ஆர்ப்பட்டங்களாலும் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. தனி மனிதனின் ப்ரச்னைகளுக்கும் சமூகத்தின் ப்ரச்னைகளுக்கும் உள்ளுலக தீர்வே அறுதியானது, இறுதியானது உறுதியானது. நிரந்தரமானது. உள்ளுலகில் ஒருமைத்தன்மை.

நல்லாப் புரிஞ்சிக்கங்க. கடவுள் ஒருவன் அல்ல. ஒருமைத்தன்மை. அதுதான் நமது சனாதன இந்து தர்மத்தின் மிக முக்கியமான பங்களிப்பு. கடவுள் ஒருவன் அல்ல. ஒருமைத்தன்மை. அந்த ஒருமைத்தன்மைதான் சதாசிவன். அந்த ஒருமைத்தன்மையை உணர்வதுதான் உங்க வாழ்க்கையில இருக்கிற சாதாரண பிரச்சினையான தலைவலியாயிருந்தாலும் சரி, மிகப்பொிய பிரச்சினைகளான மரண பயமாயிருந்தாலும் சரி. இது எல்லாத்துக்கும் தீர்வு இந்த ஒருமைத்தன்மையை உணர்வது. சதாசிவனோடு பரம்பொருளோடு இறைவனோடு நமக்கிருக்கும் ஒருமைத்தன்மையை உணர்வது. பிரபஞ்ச சக்தியோடு பராசக்தியோடு நமக்கிருக்கும் ஒருமைத்தன்மையை உணர்வது.

ஏழு வயசில இருந்த உடம்பு மனசு எதுவுமே 14 வயசில உங்களுக்கு இருக்கறதில்லை. 14 வயசில இருந்த உடம்பு மனசு எதுவுமே உங்க 21 வயசில இருக்கறதில்லை 21 வயசில இருந்த உடம்பு மனசு எதுவுமே 40 வயசில இருக்கறதில்லை. ஆனால் எல்லாத்தையும் நீங்க கனெக்ட் பண்ணி, ஒரு ஒருமைத்தன்மையை நீங்கள் உணர்கிறீர்கள் பாருங்க. அதுதான் ’தான்’ அதுதான் தான். தன் கரணங்கள் தன்னை மறைக்காது. தான் தன் கரணங்களை மறைத்திருக்கும் சதாசிவமான வாழ்க்கைதான் வாழ்க்கையின் சாரம். இது உங்களுக்குள்ளே மலர்றதுக்கான ரெண்டு விஷயம். ஓண்ணு. இந்த புரணத்துவ தியானம். தினந்தோறும் இரவு உறங்கும் முன்பு ஒரு 21 நிமிடமாவது அமர்ந்து உங்க வாழ்க்கையில் உங்களுக்குள்ளே சுத்திட்டிருக்கற இந்த என்னென்ன உணர்ச்சிகள் தன் கரணங்கள் தன்னை மறைக்குதுன்னு பாருங்க. என்னென்ன இன்கம்ப்ளீஷன்ஸ் உங்களை நிம்மதியா வாழவிடாமல் இயங்க விடாமல் தடுக்குதுன்னு பாருங்க. அந்த குறைவுணர்வுகள் எல்லாத்தையும் ஆழ்ந்து வாழ்ந்து பார்த்து புரணத்துவம் பண்றது. புரணத்துவம் ஆக்குங்கள்.. அந்த குறைவுணர்வுகளுக்கு உங்க மேல பவர் இல்லாம பார்த்துக்கோங்க. இன்கம்ப்ளீஷன் அதிகமாக அதிகமாக நரம்பு வெடிக்கும். நொ்வஸ் ப்ரேக்டவுன் நடக்கறது. இந்த நொ்வஸ் ப்ரேக்டவுனை அலவ் பண்ணாதீங்க. சில நேரத்துல உங்களுக்கே தொியும். கற்பனை காரணத்தாலேயே சோகத்தில ஆழ்ந்திடுவீங்க. சும்மா ப்ரச்னை வரப்போகுதுன்ற கற்பனை காரணத்தாலேயே சோகத்தில போயிடறது.

இன்னொன்ணு என்னப்ரச்னைன்னா. இன்னைக்கு எல்லாமே நல்லாப்போயிட்டிருக்கு. நாளைக்கு என்ன ஆகுமோ தொியலையே. நான் பார்த்திட்டேன் சாமி. இன்னைக்கு நாள் நல்லாப் போச்சுன்னா நாளைக்கு நாள் நாசமா போயிடும் சாமி. எத்தனை போ் இந்த மாதிரி ஒரு ஆழமான நம்பிக்கை வைச்சிருக்கீங்க? கை தூக்குங்க. இன்னைக்கெல்லாம: நல்லா பேர்ச்சுன்னா நாளைக்கு நாசமா போச்சு. அது கிடையாது. அப்படி இருக்கணும்னு அவசியம் கிடையாது. அதுமாதிரி இருந்தாகணும்ங்கற எண்ண ஓட்டம்தான் பிரச்சினை. மனஓட்டம் தான் பிரச்சினை. ஆழ்ந்து தொிந்து கொள்ளுங்கள். தினந்தோறும் இந்த கம்ப்ளீஷன் தியானத்தைப் பண்றது மூலமா உங்களுடைய கரணங்கள் உங்களை மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் இப்ப உங்களுக்கு அளிக்கப்படுகின்ற சமய தீக்ஷை மந்திரத்தை ருசித்து ரசித்து தியானிப்பதன் மூலமாக உங்கள் குண்டலினி சக்தி மிக உயர்ந்த நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த மந்திரம் சதாசிவன் உங்களுக்கு கொடுக்கிற பாஸ்வோ்ட். திடீர்னு நான் உங்களுக்கு என்னுடைய பர்சனல் நம்பரைக் கொடுத்து தேவைப்படும்போதெல்லாம் கால் பண்ணுங்க் அப்படின்னா, ‘ஆ! தினம் இவரைக் கூப்பிடச்சொல்றாரே அப்படின்னு நினைப்பீங்களா?’ பெருமான் உங்களுக்கு கொடுக்கிற அவருடைய பர்சனல் செல்போன் நம்பர் தான் இந்த மந்திரம். என்ன வேண்டுமானாலும் இதன் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் எண்ணங்கள் உணர்வுகளை சமர்ப்பியுங்கள். நிச்சயமாக ஆன்சர் பண்ணுவாரு அதுக்கு நான் பொறுப்பு. அவர்கிட்டே பர்மிஷன் வாங்கிட்டு தான் உங்களுக்கு செல்போன் நம்பரே கொடுக்கறேன். கட்டாயம் அட்டெண்ட் பண்வாரன்னு அவர் கமிட்மெண்ட் குடுத்திருக்கறதனால தான் உங்களுக்கு கொடுக்கறேன்.

பெருமானுடைய சாந்நித்யத்தோடு உங்களை இணைத்துக்கொள்வதுதான் சக்திதொடர்பை உருவாக்கிக் கொள்வதற்கான, குண்டலினி தொடர்பை உருவாக்கிக்கொள்வதற்கான அருமையான நுட்பம்தான் இப்ப உங்களுக்கு அளிக்கப்படப்போகின்ற சமய தீக்ஷை மந்திரம். இந்த இரண்டே இரண்டு, தினந்தோறும் இரவு உறங்கும்முன் புரணத்துவ தியானம் முடிந்தபொழுதெல்லாம் எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் ஒரு வேலையாக செய்யாமல், செல்ஃபோன்ல .ஃபேஸ் புக்கையும், வாட்ஸ் அப்பையும் நோண்டிகிட்டேயிருக்கறதை வேலையாவா செய்யறீங்க, 24 மணி நேரமும் அதே தான் அதுபோல இந்த மந்திரத்தை இரசிக்க துவங்கிவிட்டீர்களானால், ருசிக்கத்துவங்கிவிட்டால் அது வேலையாகத் தொியாது. எவ்வளவு நேரம் செல்ஃபோன்ல ஃபேஸ்புக்கையும் வாட்ஸ் அப்பையும் நோண்டிட்டிருக்கீங்கன்னு உங்களுக்கே தொியாது.

ஒருத்தர் வந்து சொன்னாரு சாமி ஒரு நாள் செல்போன்ல வாட்ஸ்அப் நோண்டிக்கிட்டே போய் பக்கத்து வீட்டு சோபால உட்கார்ந்திட்டேன் சாமி. அந்தம்மா சேனல்ல டிவி சீரியல் பார்த்துகிட்டே வந்து காபி வெச்சிட்டுப் போயிருச்சு. நல்லவேளை சோபாவோட வந்தீங்க எழுந்து. இந்தக்கொடுமையெல்லாம் எங்கப்போய் சொல்றது. நீங்கள் இரசிக்கின்ற ஒரு செயலுக்கு நீ்ங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்று கணக்குப் பார்ப்பதில்லை. அதுபோல இந்த மந்திரத்தை இரசிக்கவும், ருசிக்கவும் துவங்குங்கள். எவ்வளவு நேரம் நீங்கள் அதை தியானிக்கிறீாகள் என்று கணக்கிடவும் மாட்டீர்கள். கவலைப்படவும் மாட்டீர்கள். மொத்தமா இந்த ஒரு நாள் கல்பதரு தியான முகாம் கல்பதரு யோகம் நிகழ்ச்சி மூலமாக நான் உங்களுக்கு சொல்லணும்னு நினைக்கறது இரண்டேயிரண்டு சத்தியங்கள்.

தினந்தோறும் இரவு உறங்கும்முன் 21 நிமிடம் இந்தப் புரணத்துவ தியானம் நாள் முழுவதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்களுக்கு இப்பொழுது அளிக்கப்படப்போகின்ற சமய தீக்ஷை சிவதீக்ஷை மந்திரத்தை இரசித்து ருசித்துக் கொண்டேயிருங்கள். உங்களுடைய மூன்றாவது கண் மலரும். குண்டலினி சக்தி விழிப்படையும். வாழ்க்கை பெரு நன்மை அடையும். உடல் நலம், மனநலம் உடல், வளம் பொருளாதார நலம், சதாசிவனின் சக்திகள் இது எல்லாம் உங்களுக்குள் மலரத்துவங்கும். இவை எல்லாவற்றிற்கும் நான் ஆத்மப் ப்ரமாண சாட்சி. என்னுடைய வாழ்க்கையில் பார்த்திருக்கின்றேன். நிங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்!.



Photos