என் குரு நித்யானந்தர் 01 சாக்ஷி பிரமாணம்
சாக்ஷி பிரமாணம் (Sakshi Pramana)
வருடம் : 2009
தலைப்பு :சாக்ஷி பிரமாணம்
பெயர் : அக்ஷை ஸ்ரீராம்
இடம் : சென்னை, தமிழ்நாடு, இந்தியா
படிப்பு மற்றும் பணி : மென்பொருள் பொறியாளர்
சாக்ஷி பிரமாணம்:
இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர்கள் தங்கள் குருவால் வாழ்வில் பெற்ற உன்னதங்களை, பகவான் தங்கள் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை பக்தியுணர்வோடும், நன்றியுணர்வோடும் பகிர்ந்துள்ளனர்"
பக்தரின் அனுபவம் : அக்ஷை ஸ்ரீராம் சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் பொறியாளர். அவர் 'என் குரு நித்யானந்தர்' என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை பற்றி தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஸ்வாமிஜி அள்ள அள்ள குறையாத ஒரு சக்தி ஊற்றாக விளங்குகின்றார் என்றும் ஸ்வாமிஜியை குருவாக அடைந்ததனால் தன் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தாலும்கூட ஸ்வாமிஜி பார்த்துக் கொள்வார் என்கின்ற தைரியம் இருப்பதால் வாழ்க்கை எப்போதும் ஆனந்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரை சரியான வகையில் புரிந்து கொண்டு தமிழக மக்கள் அனைவரும் நன்மையடைய வேண்டும் என்பதே பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களுடைய பக்தர்களின் விருப்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சாக்ஷி பிரமாணம்
பகவானைப்பற்றி பக்தர்களின் பதிவு : என் குரு நித்யானந்தர்
சாஸ்திர பிரமாணம்
சாஸ்திர பிரமாணம்:
குருவின் மகத்துவத்தை சிவ மஹாபுராணம் இவ்வாறு போற்றுகிறது...
குருவே சிவன். சிவனே குரு. - உபமன்யு முனிவர் பகவான் கிருஷ்ணருக்கு செய்த உபதேசம். ( ஆதார நூல்: அத்தியாயம்: குரு தீக்ஷா விதி , சிவ மஹாபுராணம்)
பக்தர்களுக்காக பரமசிவன் தோன்றி அருள்பாலிக்கும் கருணையை அருணாச்சல புராணம் இவ்வாறு போற்றுகிறது...
அன்பர்கருதிற்கடுமை யாகியெதிர்வந்தே துன்பமகல்விக்குமது தூயதொழிலானான்
அடியார்கள் நினைத்தால் சீக்கிரத்தில் தானே அவர்களுக்கு எதிராகத் தோன்றித் துன்பம் நீக்குவதே தமக்கு பரிசுத்தமாகிய தொழிலாகக் கொண்டவன் பரமசிவன். - பாவந்தீர்த்த சருக்கம், பன்னிரெண்டாவது அத்தியாயம், அருணாச்சலப் புராணம்
ஆத்ம பிரமாணம்:
இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் குருவாய் எழுந்தருளி தம்மிடத்தில் சரண்புகுந்தவர்களை தம்மைபோலவே பரமசிவ நிலையடையும் பொருட்டு ஞான உபதேசஞ் செய்து வரமருள்கின்றார். தம் சீடர்களையும், பக்தர்களையும் காத்தருளுகின்றார்.